அவனியில் புது முறை அறநெறி
FILM : MANIMEGALAI
SINGERS : TRICHI LOGANATHAN, N.L.GHANA SARASWATHI
MUSIC : G.RAMANATHAN
LYRICS : A.MARUTHAKASI
YEAR : 1959
புத்தம் சரணம் கச்சாமி (ஆண்கள்)
புத்தம் சரணம் கச்சாமி (பெண்கள்)
தர்மம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
அவனியில் புது முறை அறநெறியே கண்ட
ஐயன் நாமம் போற்றி
அவனியில் புது முறை அறநெறியே கண்ட
ஐயன் நாமம் போற்றி
ஐம்புலன் வென்றவன் சாந்தியைக் கண்டவன்,
ஐம்புலன் வென்றவன் சாந்தியைக் கண்டவன்,
அன்பின் வடிவான தேவன்
அன்பின் வடிவான தேவன்
அவனியில் புது முறை அறநெறியே கண்ட
ஐயன் நாமம் போற்றி
ஆட்சி பீடம் துறந்த அன்னலின் நாமம் போற்றி (பெண்)
காட்சிக்கு எளியனான தயாளன் பொற்பாதம் போற்றி (ஆண்)
நாட்டுக்கு நன்மை செய்த நாயகன் தொண்டு போற்றி (பெண்)
தன்னல மிலாமனிதத் தன்மை படைத்தவன் கருணை போற்றி
துன்பத்தின் காரணம் அதற்கு நிவாரணம்,
துன்பத்தின் காரணம் அதற்கு நிவாரணம்
கண்டவன் அருளாளன் தபசீலன்
கண்டவன் அருளாளன் தபசீலன்
அவன் கழலடி மறவாமல் பணிவோமே
கழலடி மறவாமல் பணிவோமே
அவனியில் புது முறை அறநெறியே கண்ட
ஐயன் நாமம் போற்றி
அவனியில் புது முறை அறநெறியே கண்ட
ஐயன் நாமம் போற்றி
* * * * *
அவனி – பூமி, Earth;
தன்னல மிலா – தன்னலம் + இல்லாத
கழலடி – கழல் + அடி
கழல் - பாதம், Foot
YouTube பதிவுக்கு நன்றி: திரு. Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI