சபிய சூத்திரம் Sabhiya Sutta

சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home

Sn 3.6

சபிய சூத்திரம் - சபியரின் கேள்விகள்

Sabhiya Sutta - Sabhiya’s Questions

Translated from the Pali by: Laurence Khantipalo Mills

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: லாரண்ஸ் காந்திபாலோ மில்ஸ்

* * *

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்.

ஒருமுறை பகவர் ராஜகிரகத்தில், மூங்கில் காட்டில், அணில்களுக்கு உணவூட்டப்படும் இடத்தில் எழுந்தருளியிருந்தார். அச்சமயத்தில் ஒரு தேவர், அவருடைய முன் ஜன்மத்து உறவினரான சபிய என்ற நாடோடியிடம் (ஓர் இடத்தில் வாழாதவர்) ஒரு கேள்வியைத் தந்து, "சபிய, எதேனும் துறவியோ, பிராமணரோ இந்தக் கேள்விக்குப் பதில் கூறமுடிந்தால் நீ அவர்களோடு புனித வாழ்வை மேற்கொள்," என்று கூறினார்.

தேவரிடம் கேள்வியைப் பெற்றுக் கொண்ட சபிய என்ற அந்நாடோடி பல மதிக்கப்பட்ட துறவிகளிடமும், பிராமணர்களிடமும் அந்தக் கேள்வியைக் கேட்டார். அவர்களுள் பல சீடர்களைக் கொண்ட கீர்த்தியும் புகழும் வாய்ந்த, மக்களால் அக்கரை சேர்ந்து விட்டதாக நம்பப்பட்ட ஆசிரியர்களும் அடங்குவர். புராண கஸ்ஸப்பர், மக்காளி கோசாளர், அஜீத கேசகம்பளர், பகுதா கச்சானர், சஞ்ஜய பேலத்புத்திரர் மற்றும் நிகந்த நாதபுத்திரர் போன்றவர்களிடமும் இந்தக் கேள்வி கேட்கப் பட்டும் அவர்களால் அதற்குப் பதில் கூற முடியவில்லை. மேலும் அவர்கள் அதீத கோபத்தையும், மனச்சஞ்சலத்தையும் காட்டினார்கள். பின் அவர்கள் சபியரிடம் எதிர்க் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

சபியருக்கு அப்போது இந்த எண்ணம் தோன்றியது, "இந்த ஆசிரியர்களால் பதில் கூறமுடியவில்லை. பதிலுக்கு என்னிடம் சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்கின்றனர். நான் மீண்டும் கீழான (இல்லற) வாழ்விற்குத் திரும்பிப் புலன் ஆசைகளையாவது அனுபவிப்பது நல்லது."

பின் அவர் நினைத்தார், "துறவி கோதமர் உள்ளார். அவரும் பல சீடர்களைக் கொண்ட ஆசிரியர். கீர்த்தியுடையவர். புகழ்பெற்றவர். மக்களால் அக்கரை சேர்ந்து விட்டதாக நம்பப் படுபவர். அவரிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது?"

ஆனால் மற்றொரு எண்ணமும் அவருக்குத் தோன்றியது, "மதிப்புள்ள துறவிகளும் பிராமணர்களுமான புராண கஸ்ஸப்பர், மக்காளி கோசாளர், அஜீத கேசகம்பளர், பகுதா கச்சானர், சஞ்ஜய பேலத்புத்திரர் மற்றும் நிகந்த நாதபுத்திரர் போன்றவர்களை நான் இந்தக் கேள்வியைக் கேட்டும் அவர்களால் பதில் கூற முடியவில்லை. அவர்கள் வயதானவர்கள், வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள், மூத்தவர்கள், புகழ்பெற்றவர்கள், நீண்ட நாள் துறவு பூண்டவர்கள். ஆனாலும் அவர்களால் பதில் கூற முடியவில்லை. துறவி கோதமர் இளையவர், சமீபத்தில் தான் துறவு பூண்டவர். அவரால் எப்படி என் கேள்விக்குப் பதில் கூற முடியும்?"

பின் அவர் நினைத்தார், "ஒரு துறவி இளவயதானதால் அவருக்கு மதிப்புத் தராமலோ அவரைக் குறை கூறவோ கூடாது. துறவி கோதமர் இளைய வயதானவராக இருந்தாலும், அவர் சித்தி சக்திகளும், ஆற்றலும் கொண்டுள்ளவர். அவரிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது?"

பின் சபிய என்ற நாடோடி ராஜகிரகம் நோக்கிப் புறப்பட்டார். பல இடங்களில் அலைந்த பின் ராசகிரக, மூங்கில் காட்டிற்கு, அணில்களுக்கு உணவூட்டப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் புத்தரை பணிவுடன் அணுகி அவரிடம் நலம் விசாரித்து வணக்கம் கூறிய பின்னர் அவர் அருகில் அமர்ந்தார். பின் புத்தரிடம் பா வடிவில் அவர் கேட்டதாவது:

Thus have I heard:

At one time the Radiant One dwelt at Rājagaha in the Bamboo Grove, the Squirrels’ Feeding-ground. Now at that time a deva gave a question to Sabhiya the Wanderer, who had been his relative in a past life, saying, “Sabhiya, if any ascetic or brahmin can answer this question, you should live the Holy Life with them.”

When Sabhiya the Wanderer had learned that question from the deva, he approached various respected ascetics and brahmins and asked them the question. These included teachers with large followings and many devotees, well-known and famous, well-regarded by many people as having crossed over, such as Pūraṇa Kassapa, Makkhali Gosālo, Ajita Kesakambala, Pakudha Kaccāna, Sañcaya Belaṭṭhaputta, and Nigaṇṭha Nāṭaputta. But when they were asked this question, they were not able to answer, and they showed unreasonable anger and annoyance. Then they asked Sabhiya questions in return.

Then it occurred to Sabhiya, “These teachers are not able to answer my question, and instead they ask me about something else. Perhaps I should return to the lesser life and enjoy sensual pleasures.”

Then he thought, “There is also this Ascetic Gotama, who is a teacher with a large following and many devotees, well-known and famous, well-regarded by many people as having crossed over. Why don’t I go and ask him this question?”

But then it occurred to him, “The respected ascetics and brahmins who I asked previously—Pūraṇa Kassapa, Makkhali Gosālo, Ajita Kesakambala, Pakudha Kaccāna, Sañcaya Belaṭṭhaputta, and Nigaṇṭha Nāṭaputta—were not able to answer me, and they are old, elderly, great figures, come to the last stage of life, seniors, long gone forth. How could this Ascetic Gotama answer my question, since he is young, and only recently gone forth?”

Then he thought, “An ascetic should not be despised or held in contempt just because they are young. The Ascetic Gotama is young, but he is of great psychic power and might. Why don’t I go to him and ask this question?”

The Wanderer Sabhiya then set out for Rājagaha. Wandering by stages he arrived at Rājagaha and went to the Bamboo Grove, the Squirrel’s Feeding Place. He approached the Buddha, exchanged courteous and amiable greetings with him, and sat down to one side. Then he addressed the Buddha with the following verses.

Sabhiya

I have come filled with doubts,

Wishing to ask a question;

When I ask them, please put them to rest,

By explaining each and every matter to me.

சபியர்

நான் சந்தேகங்கள் நிறைந்தவனாய் உள்ளேன்.

உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்; அவற்றைக் கேட்ட பின்

நீங்கள் அவற்றை விளக்கி என் சந்தேகங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

ஒவ்வொரு செய்தியையும் விளக்கிக் கூறுங்கள்.

Buddha

Sabhiya, you have come from afar,

Wishing to ask a question;

When you ask them, I will put them to rest,

By explaining each and every matter to you.

புத்தர்

சபியரே, நீர் என்னிடம் கேள்வி கேட்க நீண்ட தூரத்திலிருந்து வந்துள்ளீர்.

அவற்றைக் கேட்ட பின்

ஒவ்வொரு சந்தேகத்தையும் விளக்கிக் கூறி

அவற்றை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறேன்.

Ask me, Sabhiya, your question,

Whatever you wish,

I will put to rest

Each and every question.

கேளுங்கள், சபியரே, நீங்கள் கேட்க

விரும்பியதைக் கேளுங்கள்,

ஒவ்வொரு கேள்வியையும் விளக்கி

ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.

Then it occurred to Sabhiya the Wanderer: “How amazing! How incredible! With those other ascetics and brahmins I couldn’t get so much as an opportunity, while this Ascetic Gotama makes the opportunity himself!” Pleased and joyful, uplifted with rapture and happiness, he asked the Buddha this question.

சபிய என்ற நாடோடிக்கு இந்த எண்ணம் தோன்றியது: "அருமை! அருமை! அந்த மற்ற துறவிகளிடமும், பிராமணர்களிடமும் கேட்க வாய்ப்புக் கிடைப்பதே அரிதாக இருந்தது. ஆனால் துறவி கோதமரோ எனக்கு வாய்ப்பை அமைத்துத் தருகிறார்!" சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் புத்தரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

Sabhiya

Attaining what is one called a “bhikkhu”?

How is one “gentle”? And how “tamed”?

Why is one called “awakened”?

Please answer me this question, Lord.

சபியர்:

எதை அடைவதால் ஒருவர் "பிக்கு" என அழைக்கப் படுகிறார்?

ஒருவர் எப்படி "சாந்த"மாவது? ஒருவர் எப்படி தன்னைத் தானே "வசப்படுத்துவது"?

ஒருவர் ஏன் "விழிப்புற்றவர்" எனக் கூறப்படுகிறார்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தரவும், அண்ணலே.

Buddha

By the path they walked themselves,

Nirvāṇa is realized and doubt is left behind;

Existence and non-existence have been abandoned,

Complete, having ended rebirth: they are a “bhikkhu”.

Mindful and equanimous everywhere,

They do not harm anyone in the world;

An ascetic crossed over, without distress,

And with no vanity: they are “gentle”.

With faculties developed

For the whole world, inside and out;

They have understood this world and the next,

And complete their time fulfilled: they are “tamed”.

Having thoroughly investigated the ages

Of transmigration through both deaths and births,

Free of passion and defilements, pure,

Arrived at the end of rebirth:

such is called “awakened”.

புத்தர்

மார்க்கத்தில் அவர்களே தனித்து நடந்து,

நிப்பாண நிலையை அறிந்த பின், சந்தேகங்கள் அனைத்தும் களையப்பட்டு விடுகின்றன;

தோற்றமும், தோற்றமின்மையும் கைவிடப் படுகின்றன,

முழுமையானவர், மறுபிறப்பை முடித்தவர்: அவர் தான் "பிக்கு".

எப்போதும் கடைப்பிடியுடனும் (கவனம்) சமநிலையிலும்,

உலகில் யாருக்கும் தீமை செய்யாமலும்;

(பிறவி ஓட்டம் என்ற ஆற்றின்) அக்கரை சென்றடைந்தவர், துயரப்படாதவர்

தற்பெருமை இல்லாதவர்: அவர் தான் "சாந்தமானவர்".

சிந்தனா சக்திகளை உலகத்தில் வளர்த்து

உள்ளும் வெளியிலும்; (உள் உலகத்திலும், வெளி உலகத்திலும்)

இந்த உலகையும் அடுத்த உலகையும் புரிந்து கொண்டவர்கள்,

செய்ய வேண்டியதைச் செய்து விட்டவர்கள்: அவர்களே "அடங்கியவர்கள்".

காலங்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர்

பிறப்பு, இறப்பு என்ற தொடர்ச்சியை அறிந்து (சம்சாரச் சுழலை),

அவாவும் மாசுகளும் நீக்கப்பட்டு, தூய்மையாக,

மறுபிறப்பை முடித்தவர்: அவரே "விழிப்புற்றவர்".

Then Sabhiya the Wanderer rejoiced, thankful for the Buddha’s answer. Pleased and joyful, uplifted with rapture and happiness, he asked the Buddha a further question.

சபிய என்ற நாடோடி புத்தரின் பதிலைக் கேட்டு மகிழ்ந்தார். சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் புத்தரிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

Sabhiya

Attaining what is one called a “brahmin”?

How is one an “ascetic”? And how “washed”?

Why is one called “dragon”?

Please answer me this question, Lord.

சபியர்:

எதை அடைவதால் ஒருவர் "பிராமணர்" என அழைக்கப் படுகிறார்?

ஒருவர் எப்படி "சமணர்" ஆவது"? ஒருவர் எப்படிச் "சுத்தமானவர்" ஆவது?

ஒருவர் ஏன் "நாகர்" எனக் கூறப் படுகிறார்? [1]

இந்தக் கேள்விகளுக்குத் தயை கூர்ந்து பதில் தரவும், அண்ணலே.

Buddha

Having shaken off all bad deeds,

Stainless, well-stilled, and steadfast;

Gone beyond transmigration, consummate,

Unattached: such is called a “brahmin”.

புத்தர்

தீய செயல்கள் அனைத்தையும் கைவிட்ட பின்,

கறையில்லாமல், நல் அமைதியுடன், உறுதியுடன்;

பிறப்பு, இறப்பு என்ற தொடர்ச்சிக்கு அப்பாற் சென்று,

பூரணமானவராக, பற்றில்லாதவராக இருப்பவர் எவரோ,

அவர் தான் "பிராமணர்".

Settled, with good and bad abandoned,

Dustless, knowing this world and the next;

Transcending birth and death,

True to themselves: such is called an “ascetic”.

அமைதியுடன், இன்பம், துன்பம் ஆகியவற்றைக் கைவிட்டு, தூய்மையாக,

இந்த உலகையும் அடுத்த உலகையும் புரிந்து கொண்டவர்கள்,

பிறப்பு இறப்பு என்ற தொடர்ச்சிக்கு அப்பாற் சென்று,

வாய்மையோடு செயல்படுபவர் எவரோ அவர் தான் "சமணர்".

Having washed off all bad deeds,

For the whole world, inside and out;

They have no wish for the human

Or divine existences: that is called “washed”.

தீச்செயல்களை விட்டுவிட்ட பின்,

உள் உலகத்திலும், வெளி உலகத்திலும்,

மனிதனாகவோ, தேவராகவோ பிறக்க

விருப்பமில்லாதவர் எவரோ, அவர் தான் "சுத்தமானவர்".

Doing no harm at all in the world,

Not tied to any fetters;

Unattached everywhere, and free,

True to themselves: such is called a “dragon”.

உலகில் தீங்கு செய்யாமல் இருந்து,

சுமை ஏதும் தாங்காதவர்;

எதன்மீதும் பற்றில்லாமல், சுதந்திரமாக,

வாய்மையோடு செயல்படுபவர் எவரோ, அவர் தான் "நாகர்".

Then Sabhiya the Wanderer rejoiced, thankful for the Buddha’s answer. Pleased and joyful, uplifted with rapture and happiness, he asked the Buddha a further question.

சபிய என்ற நாடோடி புத்தரின் பதில் மொழியைக் கேட்டு மகிழ்ந்தார். சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் புத்தரிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

Sabhiya

Who do the Buddhas say is the “victor on the field”?

How is one “skilled”? And what is a “wise man”?

Why is one called a “sage”?

Please answer me this question, Lord.

சபியர்:

"உலகங்களை வென்றவர்" எனப் புத்தர்கள் கூறுவது யாரை?

ஒருவர் எப்படித் "திறமையானவர்" ஆவது"? "பண்டிதர்" யார்?

ஒருவர் ஏன் "முனிவர்" எனக் கூறப்படுகிறார்?

இந்த கேள்விகளூக்குப் பதில் தரவும், அண்ணலே.

Buddha

Having thoroughly investigated the fields,

Heavenly, human, even the Brahmā-fields,

One is freed from the root binding one to all fields,

True to themselves: such is called “victor on the field”.

புத்தர்:

பிறவி எடுக்கும் உலகங்களைப் பகுப்பாய்வு செய்த பின்,

தேவர், மக்கள், பிரம்மர் உலகங்கள் உட்பட்ட,

இந்தப் பிறவிகளுடன் பற்றுக் கொள்வதிலிருந்து விடுபடுகிறவர்,

வாய்மையோடு செயல்படுபவர்: அவர் தான் "உலகங்களை வென்றவர்".

Having thoroughly investigated the storehouses,

Heavenly, human, even the Brahmā-stores,

One is freed from the root binding one to all storehouses,

True to themselves: such is called “skilled”.

பொக்கிஷங்களைளைப் பகுப்பாய்வு செய்த பின்,

தேவர், மக்கள், பிரம்மர்களுடைய பொக்கிஷங்கள் உட்பட்ட

பொக்கிஷங்களுடன் பற்றுக் கொள்வதிலிருந்து விடுபடுகிறவர்,

வாய்மையோடு செயல்படுபவர்: அவர் தான் "திறமையானவர்".

Having investigated the sense fields

Both inside and out, one is of pure wisdom;

Transcending black and white,

True to themselves: such is called “wise”.

புலன்களையும் புலன் பொருட்களையும் பகுப்பாய்வு செய்த பின், [2]

உள்ளும் வெளியிலும், ஒருவர் தெளிந்த அறிவுடன்,

நன்மை தீமை ஆகியவற்றிற்கு அப்பாற் சென்று,

வாய்மையோடு செயல்படுபவர்: அவர் தான் "பண்டிதர்".

Knowing good and bad principles,

Inside and out in all the world;

Worthy of worship by gods and humans,

Gone beyond the tie and the net, they are a sage.

நன்மையான விதிகளையும், தீயவிதிகளையும் தெரிந்து,

உள் உலகத்திலும், வெளி உலகத்திலும்;

தேவர்களும் மனிதரும் போற்றக் கூடிய,

ஒரு கட்டும் இல்லாமல், எந்த வலையிலும் சிக்காமல் இருப்பவரே, "முனிவர்".

Then Sabhiya the Wanderer rejoiced, thankful for the Buddha’s answer. Pleased and joyful, uplifted with rapture and happiness, he asked the Buddha a further question.

சபிய என்ற நாடோடி புத்தரின் பதிலைக் கேட்டு மகிழ்ந்தார். சந்தோஷத்துடனும், மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் புத்தரிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

Sabhiya

Attaining what is one called “knowledgable”?

How is one “informed”? And how “energetic”?

Why is one called “thoroughbred”?

Please answer me this question, Lord.

சபியர்:

எதை அடைவதால் ஒருவர் "அறிவுடையவர்" எனப்படுகிறார்?

ஒருவர் எப்படி "அறிந்தவர்" ஆவது"?

ஒருவர் எப்படி "ஊக்கமுடையவர்" ஆவது?

ஒருவர் ஏன் "மேன்மையானவர்" எனக் கூறப்படுகிறார்? [3]

இந்த கேள்விகளுக்குப் பதில் தரவும், அண்ணலே.

Buddha

Having thoroughly investigated the knowledges,

Whether those of ascetics or of brahmins,

One is free of desire for all feelings,

Gone beyond all feelings, they are “knowledgable”.

புத்தர்

புலமை, கல்வி, கேள்விகளால் பெற்ற அறிவுகளையெல்லாம்

அது துறவிகள் வழியாகவோ பிராமணர் வழியாகவோ, எவ்வழியாக வந்ததாக இருப்பினும்

முழுமையாக ஆராய்ந்தவர், எல்லா நுகர்ச்சிகளின் மீதுள்ள (இன்பமான, துன்பமான, இரண்டும் அல்லாத)

ஆசைகளிடமிருந்து விடுபடுகிறவர், அனைத்து நுகர்ச்சிகளுக்கும் அப்பால் சென்றவர், அவர் தான் "அறிவுடையவர்".

Understanding the proliferation

Of mental and physical phenomena,

Inside and out, the root of disease;

One is freed from the root binding one to all diseases,

True to themselves: such is called “informed”.

மனம் மற்றும் பொருள் (அருவுரு, நாம ரூப)) சம்பந்தப்பட்ட ஏராளமாகத்

தோன்றும் செய்திகளைப் புரிந்தவர், உள்ளும் வெளியிலும்,

இவையே நோய்க்கான வேர் என அறிந்து நோய்களிடமிருந்து விடுபடுகிறவர்,

வாய்மையோடு செயல்படுபவர்: அவர் தான் "அறிந்தவர்".

Abstaining from all bad deeds,

The energetic one escapes the suffering of hell;

Energetic, resolute,

True to themselves: such is called “hero”.

தீய செயல்களைத் தவிர்த்தவர்,

ஊக்கமுடையர், நரக வேதனையிலிருந்து தப்பிக்கின்றவர்,

சுறுசுறுப்பாகவும், திடமாகவும்

வாய்மையோடும் செயல்படுபவர்: அவர் தான் "வீரர்".

One who has cut the bonds,

Inside and out, the root of attachment;

One is freed from the root binding one to all attachments,

True to themselves: such is called “informed”.

சுமையை இறக்கியவர், உள்ளும் வெளியிலும்,

இவையே பற்றுக்கான வேர் என்பதை அறிந்து

பற்றுக்கான வேரிலிருந்து விடுபடுகிறவர்,

வாய்மையோடு செயல்படுபவர்: அவர் தான் "மேன்மையானவர்".

Then Sabhiya the Wanderer rejoiced, thankful for the Buddha’s answer. Pleased and joyful, uplifted with rapture and happiness, he asked the Buddha a further question.

சபிய என்ற நாடோடி புத்தரின் பதிலைக் கேட்டு மகிழ்ந்தார். சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் புத்தரிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

Sabhiya

Attaining what is one called “scholar”?

How is one “noble”?

And how “well conducted”?

Why is one called “wanderer”?

Please answer me this question, Lord.

சபியர்:

எதை அடைவதால் ஒருவர் "அறிஞர்" எனப்படுகிறார்?

ஒருவர் எப்படி "ஆரியர்" ஆவது"?

ஒருவர் எப்படி "நன்னடத்தை" உடையவராவது"?

ஒருவர் ஏன் "நாடோடி" எனக் கூறப்படுகிறார்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தரவும், அண்ணலே.

Buddha

Having learned all phenomena

in the world with direct knowledge,

Whatever is blameworthy or blameless;

One who is a winner, doubtless, free,

Untroubled in every respect, is a “scholar”.

புத்தர்

நேர்முக அறிவினால் உலகிலுள்ள

அனைத்து உணரத்தக்க காட்சிகளையும் அறிந்தவர்,

எது நிந்திக்கத் தக்கது, எது நிந்திக்கத் தகாதது என்பதை அறிந்தவர்;

வெற்றி பெற்றவர், சந்தேகம் இல்லாதவர், சுதந்திரமானவர்,

எதற்காகவும் கலக்கம் அடையாதவர், அவரே "அறிஞர்".

Having cut off corruptions and attachments,

Knowing, one does not go to another womb.

Dispelling the three defiled perceptions, Saññaṃ tividhaṃ panujja paṅkaṃ,

He comes back for no age,

that is who they call “noble”.

கறைகளையும், பற்றுகளையும் விட்டொழித்து,

தான் மீண்டும் கருவில் தோன்ற மாட்டோம் என்பதைத் தெரிந்தவர்,

மூன்று தவறான குறிப்புகளையும் நீக்கியவர், [4] மீண்டும் பிறவித் துன்பம் அனுபவிப்பதில்லை.

அவரைத்தான் "ஆரியர்" என்கின்றனர்.

One who is accomplished in good conduct,

Always skilful in understanding principles;

Not attached anywhere, with mind freed,

And bearing no grudges, is “well conducted”.

நன்னடத்தையில் தேர்ந்தவர், விதிமுறைகளைத் திறமையுடன் அறிந்து;

எதன் மேலும் பற்றில்லாமல், விடுவிக்கப்பட்ட மனத்துடன்,

எவர் மீதும் வருத்தம் கொள்ளாமலிருப்பவரே

"நன்னடத்தை" யுள்ளவர்.

Whatever deeds are to result in suffering,

Above, below, across, or in-between;

Having gone forth one lives to fully understand

Illusions, conceit, as well as greed and hatred;

Terminating mental and physical phenomena,

That, they say, is an accomplished wanderer.

துக்கத்திற்கு எடுத்துச் செல்லும் எச்செயலும்,

மேல், கீழ், மறுகரையில் அல்லது நடுவில் - எங்கிருந்தாலும் சரி;

வீடு துறந்தவர் முழுமையாகப் புரிந்து கொண்டு மாயம், அகம்பாவம், அவா மற்றும் வெறுப்பை

மனத்தாலும் உடலாலும் களைந்து விட்டவர், அவரைத்தான் "நாடோடி" என்கின்றனர்.

Then Sabhiya the Wanderer rejoiced, thankful for the Buddha’s answer. Pleased and joyful, uplifted with rapture and happiness, he stood up from his seat, arranged his robe over one shoulder, and, raising his folded palms to the Buddha, spoke these suitable verses of praise in his presence.

சபிய என்ற நாடோடி புத்தரின் பதிலைக் கேட்டு மகிழ்ந்தார். சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்தோடும் தன் இருப்பிடத்திலிருந்து எழுந்து அவர் மேலாடையை ஒரு தோலின் மீது சரி செய்து வணங்கிய கைகளுடன் புத்தரைப் போற்றுவதற்காக இவ்வரிகளைக் கூறினார்:

Sabhiya

One of vast wisdom, you have dispelled the dark flood,

The three and sixty doctrines of the ascetics,

Which are false refuges,

Dependent on perceptions and conventions.

சபியர்:

பெரும் மெய்ஞ்ஞானம் உடையவர் நீங்கள் (ஆபத்தான) கொடும் வெள்ளத்தைக் கடந்தவர்,

மனக் குறிப்புகளையும் உலக வழக்கங்களையும்

சார்ந்துள்ள போலிப் புகலிடங்களான மூன்றும், அறுபதுமான

பல துறவிகளின் கோட்பாடுகளை வென்றவர்.

You’ve made an end, crossed over suffering,

I hold you as an arahant,

Fully awakened, with corruptions ended;

Brilliant, thoughtful, with expansive wisdom,

You have brought me across, finisher of suffering.

துக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளவர், துக்கத்தின் மறுகரைக்குச் சென்றவர்,

உங்களை நான் ஒரு அருகர் என்று அழைக்கின்றேன்,

முழுமையாக விழிப்புற்றவர், மாசுகளை முடித்தவர்;

அருமையானவர், பிரதிபலிப்பவர், பரந்த ஞானமுடையவர்,

என்னைக் கரை சேர்த்து விட்டீர்கள், துக்கத்தை முடிப்பவரே.

Understanding my anxiety,

You carried me over my doubts. Homage to you!

Sage accomplished in the ways of silence,

You are gentle, not callous, Kinsman of the Sun.

சூரிய வம்சத்தவரே! எனது கவலைகளைப் புரிந்து கொண்டு

எனது சந்தேகங்களை முடித்து வைத்தவரே,

உங்களை நான் போற்றுகிறேன்!

அமைதியான வழிகளில் திறமையுள்ள முனிவர் நீங்கள், சாந்தமானவர், இரக்கமற்றவரல்ல.

The anxieties I had before,

You have answered them, seer;

For sure you are a sage, fully awakened,

You have no hindrances.

முன் இருந்த எனது கவலைகளுக்குப்

பதில் கொடுத்த தீர்க்கதரிசியே; நீங்கள் கண்டிப்பாக ஒரு முனிவர் தான்,

முழுமையாக விழிப்புற்றவர்,

உங்களுக்கு மனத்தடங்கல் ஏதும் இல்லை.

All of your griefs

Are demolished and destroyed;

You are cooled, tamed,

Firm and strong in truth.

உங்கள் துயரமெல்லாம்

அழித்துத் தகர்க்கப்பட்டு விட்டன.

குளுமையானவர், அடக்கமானவர்,

உறுதியுடையவர், வாய்மையில் வலிமையானவர்.

Dragon of dragons, great hero,

While you are speaking,

The gods all rejoice,

Both Nāradas and Pabbatas. [5]

நாகர்க்கு நாகர், ஒரு மாவீரர்,

நீங்கள் பேசும் போது, தேவர்களும்,

நாரதர்களும், பப்பத்தர்களும்,

மகிழ்ச்சியடைவர். [5]

Homage to you, thoroughbred among men!

Homage to you, best of men!

In all the world with its gods,

There is no-one like you.

உங்களைப் போற்றுகிறேன், மனிதருள் முழுமையானவரே!

உங்களைப் போற்றுகிறேன், மனிதருள் சிறந்தவரே!

கடவுளரும் உள்ள இந்த உலகில்,

உங்களைப் போன்றவர் எவரும் இல்லை.

You are the Buddha, you are the Teacher,

You are the sage who overcame Māra;

You have cut all underlying tendencies,

Crossed over, you bring this generation across.

நீங்களே புத்தர், நீங்களே ஆசான்,

மாரனை வென்ற முனிவரும் நீங்களே, உள்மனத்துள் உள்ள வேட்கைகளை வெட்டியெறிந்தவர்,

அக்கரை சேர்ந்தவர்,

இந்தத் தலைமுறையினரையும் அக்கரை சேர்ப்பவர்.

You have transcended all attachments,

And destroyed your corruptions;

You are a lion, without grasping,

With fears and terrors abandoned.

எல்லாப் பற்றுகளையும் விட்டவர்,

எல்லா மாசுகளையும் துண்டித்தவர்,

நீங்கள் ஒரு சிங்கம், பற்றில்லாமல்,

பயத்தையும், பீதியையும் கைவிட்டவர்.

As a drop of dew

Does not smear a lotus,

Neither good nor bad smears you.

Stretch out your feet, my hero,

Sabhiya bows to his teacher!

பனித்துளி தாமரையை மாசு செய்யாதது போல,

நல்லதும், தீயதும் உங்களைப் பாதிப்பதில்லை.

உங்கள் காலை நீட்டுங்கள், எனது தலைவனே!

சபியன் தன் ஆசானை வணங்குகிறேன்!

பின் சபியர் புத்தர் பாதங்களில் விழுந்து வணங்கி இவ்வாறு கூறினார்: "அருமை ஐயா கௌதமரே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரும் - பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கி யுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். உங்கள் முன்னிலையில் சங்கத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி கேட்கிறேன், பாந்தே (ஐயா)."

"சபியரே, மற்ற சமயப் பிரிவைச் சேர்ந்தவர் சங்கத்தில் சேர்வதற்கும், இந்த தம்மத்தையும் வினய விதிகளையும் கடைபிடிக்க அனுமதி கேட்கும் போது அவர் நான்கு மாதங்கள் சோதனை நிலையில் இருக்கவேண்டும். நான்கு மாதங்களுக்குப் பின்னர் சங்கத் துறவிகள் திருப்தியடைந்தால் அவரைப் பிக்குவாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நான் ஒருசிலரைப் பொருத்தவரை மாற்று முடிவையும் எடுப்பதுண்டு."

"போற்றுதற்குரிய, ஐயா, அப்படியானால் நான் நான்கு மாதங்கள் சோதனை நிலையில் இருப்பேன். நான்கு மாதங்களுக்கு பின் துறவிகள் திருப்தி அடைந்தால் என்னை பிக்குவாக அனுமதிக்கட்டும்."

பின் சபியர் புத்தர் முன்னிலையில் சங்கத்தில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரும் ஒரு அருகர் ஆனார்.

And then Sabhiya the wanderer, fell at the Buddha’s feet and said to him: “Amazing, venerable sir, incredible, venerable sir! It is as if someone were to turn upright what had been overturned, to reveal what was hidden, to show the way to one who was lost, or to light a lamp in the darkness, so that those with eyes could see. In the same way the Buddha has made the Dhamma clear in many ways. I go to the Buddha for refuge, to the Dhamma, and to the monastic Saṅgha. Bhante, I ask for the going forth and ordination in the Lord’s presence.”

“Sabhiya, anyone who was previously a follower of another sect and who asks for going forth and ordination in this Dhamma and Vinaya should stay on probation for four months. When four months have passed, the monastics, if they are satisfied, may give the going forth and ordination into the status of a bhikkhu. However, I also consider individual cases differently.”

“Venerable sir, in that case I will remain on probation for four months, and after four months if the monastics are satisfied they may give me the going forth and ordination into the status of a bhikkhu.”

Then Sabhiya the Wanderer received the going forth and ordination in the Buddha’s presence. … And he became one of the arahants.

* * *

விளக்கம்:

[1] நாகர் - nāka. Celestials; தேவர்.

[2] வாயில் ஆறும் ஆயுங்காலை

வாயில் ஆறும் – இந்திரியம் ஐந்தும், மனமும் ஆகிய வாயில்கள் ஆறும்;

ஆயுங்காலை - ஆராயுமிடத்து

வாயில்கள் ஆறாவன : மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் என்பனவாம். இவ்வாறினாலும் உணரப்படும் பொருள்களும் அறுவகையாதலின், மெய் முதலியவற்றை அகவாயிலென்றும், மெய்யாலறியப்படும் பொருள், வாயாலறியப்படும் பொருள் முதலியவற்றைப் புறவாயிலென்றும் கூறப்படுவதால், "ஆயுங்காலை" யென்றார்.

மணிமேகலை 30-86 உரை

[3] குதிரைகளுள் மேன்மையான வேகமாகச் செல்லும் (பந்தய) குதிரையைப்போல thoroughbred or high-bred

[4] மூன்று தவறான குறிப்புகள்: வேட்கை, அகம்பாவம், கருத்துக்கள் (craving, conceit, and views) ஆகிய மூன்றின் காரணமாகத் தவறான மனக்குறிப்புக் கொள்வது.

[5] Nāradas and Pabbatas நாரதர்களும் பப்பத்தர்களும்

தேவர்களுள் இரு வகையினர்: அறிவுடையவர்களென்று போற்றப் படுபவர்கள்

Two classes among Devas considered to be wise.

* * *

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

© Details from English Source With gratitude to https://suttacentral.net for English source.

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.