ஸல்லேக சுத்தம்: மன மாசுகள் நீக்குவது பற்றிய போதனை
(சுருக்கம், ஒரு பகுதி மட்டுமே)
MN8 Sallekha Sutta: The Discourse on Effacement
ஸல்லேக என்றால் மன ஒடுக்கம். அதாவது மன மாசுகளை நீக்குதல்.
Sallekha means ‘effacement’, i.e. removal of mental impurity
1. Others will be harmful; we shall not be harmful here.
மற்றவர்கள் தீங்கு செய்யலாம்; நாம் இங்கு தீங்கு செய்வதில்லை.
2. Others will kill living beings; we shall not kill here.
மற்றவர்கள் உயிர்க் கொலை செய்யலாம்; நாம் இங்கு உயிர்களைக் கொல்வதில்லை.
3. Others will steal; we shall not steal here.
மற்றவர்கள் திருடலாம்; நாம் இங்கு திருடுவதில்லை.
4. Others will not be celibate; we shall be celibate here.
மற்றவர்கள் பிரம்மசாரிய வாழ்வைப் பின்பற்றாமல் இருக்கலாம்; நாம் இங்கு பிரம்மசாரிய வாழ்வைப் பின்பற்றுவோம். (விகாரையில் அல்லது துறவிகளாக இருப்பவர்கள் மட்டும்.)
5. Others will lie; we shall not lie here.
மற்றவர்கள் பொய் பேச முற்படலாம்; நாம் இங்கு பொய் பேசுவதில்லை.
6. Others will speak divisively; we shall not speak divisively here.
மற்றவர்கள் பிளவுபடுத்திப் பேசலாம்; நாம் இங்கு பிளவுபடுத்திப் பேசுவதில்லை.
7. Others will speak harshly; we shall not speak harshly here.
மற்றவர்கள் கடுஞ்சொல் கூறலாம்; நாம் இங்கு கடுமையாகப் பேசுவதில்லை.
8. Others will indulge in useless speech; we shall abstain from useless speech here.
மற்றவர்கள் வீண் பேச்சு பேசலாம்; நாம் இங்கு வீண் பேச்சு பேசுவதில்லை.
9. Others will be covetous; we shall not be covetous here.
மற்றவர்கள் பேராசைக்காரராக இருக்கலாம்; நாம் இங்கு பேராசைக்கு இடம் கொடுப்பதில்லை.
10. Others will have thoughts of ill will; we shall not have ill will here.
மற்றவர்கள் தவறான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கலாம்; நாம் இங்கு தவறான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதில்லை.
11. Others will have wrong views; we shall have right view here.
மற்றவர்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கலாம்; நாம் இங்கு தூய கருத்துக்களையே கொண்டிருப்போம்.
12. Others will have wrong intention; we shall have right intention here.
மற்றவர்கள் தவறான நோக்கம் கொண்டிருக்கலாம்; நாம் இங்கு நல்ல நோக்கமே கொண்டிருப்போம்.
13. Others will use wrong speech; we shall use right speech here.
மற்றவர்கள் தவறான வார்த்தைகளைப் பேசலாம்; நாம் இங்கு சரியான வார்த்தைகளையே பேசுவோம்.
14. Others will commit wrong actions; we shall act rightly here.
மற்றவர்கள் தவறான நடத்தையுள்ளவராக இருக்கலாம்; நாம் இங்கு நன்னடத்தையே மேற்கொள்வோம்.
15. Others will have wrong livelihood; we shall have right livelihood here.
மற்றவர்கள் தவறான வழியில் சீவனோபாயம் செய்திருக்கலாம்; நாம் இங்கு நேரான வழியிலேயே சீவனோபாயத்தை மேற்கொள்வோம்.
16. Others will make wrong effort; we shall make right effort here.
மற்றவர்கள் தவறான முயற்சிகளைக் கொண்டிருக்கலாம்; நாம் இங்கு நன்முயற்சியையே மேற்கொள்வோம்.
17. Others will have wrong mindfulness; we shall have right mindfulness here.
மற்றவர்கள் தவறான கடைப்பிடியைக் (கவனம்) கொண்டிருக்கலாம்; நாம் இங்கு நற்கடைப்பிடியையே மேற்கொள்வோம்.
18. Others will have wrong concentration; we shall have right concentration here.
மற்றவர்கள் தவறான மனவொருமைப்பாட்டைக் கொண்டிருக்கலாம்; நாம் இங்கு நல்லொருக்கத்தையே கொண்டிருப்போம்.
19. Others will have wrong knowledge; we shall have right knowledge here.
மற்றவர்கள் தவறான புலமையைப் பெற்றிருக்கலாம்; நாம் இங்கு சரியான புலமையையே வளர்த்துக் கொள்வோம்.
20. Others will have wrong liberation; we shall have right liberation here.
மற்றவர்கள் தவறான விடுதலையைப் பெற்றிருக்கலாம்; நாம் இங்கு சரியான விடுதலையையே (வீடு பேறு) அடைந்திருப்போம்.
21. Others will be dull and sluggish; we shall not be dull and sluggish here.
மற்றவர்கள் பொலிவற்றும், சுறுசுறுப்பின்றியும் இருப்பார்கள்; நாம் இங்கு பொலிவோடும் சுறுசுறுப்போடும் இருப்போம்.
22. Others will be restless; we shall not be restless here.
மற்றவர்கள் பதட்டத்தோடு அமைதியற்றவர்களாய் இருப்பார்கள்; நாம் இங்கு பதட்டமின்றி அமைதியாக இருப்போம்.
23. Others will be doubters; we shall be free from doubt here.
மற்றவர்கள் சந்தேக மனப்பாங்கு கொண்டவர்களாக இருப்பார்கள்; நாம் இங்கு சங்தேகமற்றவர்களாக இருப்போம்.
24. Others will be angry; we shall not be angry here.
மற்றவர்கள் கோபம்கொள்பவராக இருப்பார்கள்; நாம் இங்கு கோபமின்றி அமைதியாக வாழ்வோம்.
25. Others will be vengeful; we shall not be vengeful here.
மற்றவர்கள் பழி தீர்க்கும் எண்ணம் கொண்டவராய் இருப்பார்கள்; நாம் இங்கு பழிதீர்க்க வைராக்கியம் கொள்வதில்லை.
26. Others will denigrate; we shall not denigrate here.
மற்றவர்கள் பிறரை இகழ்ந்து பேசுவார்கள்; நாம் இங்கு எவரையும் இகழ்ந்து பேசுவதில்லை.
27. Others will be domineering; we shall not be domineering here.
மற்றவர்கள் அகந்தை கொண்டு அதிகாரம் செய்வார்கள்; நாம் இங்கு அகந்தை கொள்வதுமில்லை, அதனால் அதிகாரம் செய்வதுமில்லை.
28. Others will be envious; we shall not be envious here.
மற்றவர்கள் பிறரது நல்வாழ்வைப் பார்த்துப் பொறாமை கொள்வார்கள்; நாம் இங்கு யாரிடமும், எதற்காகவும் பொறாமை கொள்வதில்லை.
29. Others will be jealous; we shall not be jealous here.
மற்றவர்கள் பிறர்மேல் ஐயப்படுவார்கள்; நாம் இங்கு யார்மீதும் ஐயப்படுவதில்லை.
30. Others will be fraudulent; we shall not be fraudulent here.
மற்றவர்கள் நேர்மையற்றவராக இருக்கலாம்; நாம் இங்கு நேர்மையாளர்களாகவே வாழ்வோம்.
31. Others will be hypocritical; we shall not be hypocritical here.
மற்றவர்கள் கபடதாரிகளாக இருக்கலாம்; நாம் இங்கு கபடதாரிகளாக இருப்பதில்லை.
32. Others will be obstinate; we shall not be obstinate here.
மற்றவர்கள் பிடிவாதம் பிடிப்பவராக இருக்கலாம்; நாம் இங்கு பிடிவாதம் பிடிப்பதில்லை.
33. Others will be arrogant; we shall not be arrogant here.
மற்றவர்கள் செருக்குள்ளவராக (கருவமுடையவராக) இருக்கலாம்; நாம் இங்கு செருக்குக் கொள்வதில்லை.
34. Others will be difficult to admonish; we shall be easy to admonish here.
மற்றவருக்கு அறிவுரை கூறுவது கடினமாக இருக்கலாம்; நாம் இங்கு விருப்போடு அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறோம்.
35. Others will have bad friends; we shall have noble friends here.
மற்றவர்கள் உதவாக்கரை நண்பர்களைப் பெற்றிருக்கலாம்; நாம் இங்கு உதாரகுணமுள்ள நண்பர்களைக் கொண்டிருப்போம்.
36. Others will be negligent; we shall be heedful here.
மற்றவர்கள் கவனக்குறைவாக, அக்கறையற்று நடந்து கொள்ளலாம்; நாம் இங்கு விவேகத்துடன் கவனமாக நடந்து கொள்வோம்.
37. Others will have no faith; we shall have faith here.
மற்றவர்கள் விசுவாசமற்றவர்களாக இருக்கலாம்; நாம் இங்கு அனைவரிடமும் விசுவாசமுள்ளவர்களாக இருப்போம்.
38. Others will be shameless; we shall have a sense of shame here.
மற்றவர்கள் மானமற்றவராக நடந்து கொள்ளலாம்; நாம் இங்கு மானமுள்ளவராக நடந்து கொள்வோம்.
39. Others will lack conscience; we shall have a conscience here.
மற்றவர்கள் மனசாட்சியற்றவர்களாக நடந்து கொள்ளலாம் ; நாம் இங்கு மனசாட்சியுள்ளவராகவே இருப்போம்.
40. Others will have little knowledge; we shall have great knowledge here.
மற்றவர்கள் சொற்ப அறிவு பெற்றவர்களாக இருக்கலாம்; நாம் இங்கு மேன்மையான அறிவுடையவராக இருப்போம்.
41. Others will be lazy; we shall be energetic here.
மற்றவர்கள் சோம்பித் திரிபவராக இருக்கலாம்; நாம் இங்கு சுறுசுறுப்பாகவே இருப்போம்.
42. Others will lack mindfulness; we shall be established in mindfulness here.
மற்றவர்கள் கவனமற்றோராக இருக்கலாம்; நாம் இங்கு கவனமுள்ளவராகவே இருப்போம்.
43. Others will lack wisdom; we shall possess wisdom here.
மற்றவர்கள் மெய்யறிவற்றவர்களாக இருக்கலாம்; நாம் இங்கு மெய்யறிவு பெற்றவராகவே வாழ்வோம்.
44. Others will adhere to their own views, hold on to them tenaciously, and relinquish them with difficulty;
we shall not adhere to our own views or hold on to them tenaciously, but shall relinquish them easily.
மற்றவர்கள் தங்கள் கருத்துக்களோடு ஒட்டிக் கொண்டவராகவும், அவற்றோடு பற்றுக் கொண்டு அவற்றை எளிதில் விடமுடியாதவராகவும் இருக்கலாம்;
நாம் இங்கு நமது கருத்துக்களோடு விடாப்பிடியாக ஒட்டிக்கொள்ளாமலும் அவற்றோடு பற்றுக் கொள்ளாமலும் அவற்றை எளிதில் துறந்து விடக்கூடியவராகவே இருப்போம்.
* * *