நல்வாழ்க்கை (சம்மா ஆஜீவ)
Right Livelihood (Samma Ajiva)
புத்தர் தமது சீடர்களிடம், மற்ற உயிர்களுக்குத் தீங்கு பயக்கும் எந்தத் தொழிலையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் தங்கள் உள்ளத்தைச் சீர்கேடடையச் செய்யும் எந்த வேலையையும் தவிர்க்க வேண்டும் என்றும் போதித்தார். மாறாகச் சீடர்கள் தங்கள் வாழ்க்கையை நேர்மையான, தீமை பயக்காத அமைதியான வழியில் நடத்த வேண்டும் என்று போதித்தார்.
குறிப்பாகக் கீழ்க்காணும் இந்த ஐந்து தொழில்களைச் செய்வதை அனைவரும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்:
1. இறைச்சியைக் கொண்டு தொழில் செய்தல் அதவது கசாப்புக்கடை நடத்துவது.
2. நச்சுப் பொருட்களை வைத்துத் தொழில் செய்தல்
3. ஆயுத வியாபாரம் செய்தல்
4. மனித அடிமை வியாபாரம் செய்வது, விபச்சாரத் செயல்பாடுகளில் ஈடுபடுவது
5. மது போன்ற போதைதரும் பொருட்களில் வணிகம் செய்வது.
மேலும் புத்தர் தனது சீடர்கள் வஞ்சகத்தோடும், கபடத்தோடும், வற்புறுத்தியும், சூழ்ச்சி செய்தும் அல்லது பிற நேர்மையற்ற வழிகளிலும் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளக் கூடாது என்கிறார்.
இதுவரை நாம் ஆராய்ந்த நல் வாய்மை, நற்செயல் மற்றும் நல் வாழ்க்கை ஆகிய மூன்று பிரிவுகளும் புறவாழ்க்கை சம்பந்தப் பட்டது. அட்டாங்க மார்க்கத்தின் அடுத்த மூன்று பிரிவுகளும், மனப்பயிற்சி சம்பந்தப் பட்டதாகும்.