சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 2.9
கிம்சீல சூத்திரம்: எத்தகைய ஒழுக்கம் தேவை?
Kimsila Sutta: With What Virtue?
Translated from the Pali by: Thanissaro Bhikkhu
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு
Translator's note: This discourse mentions the metaphorical notion of "heartwood" (sara) three times. Although sara as a metaphor is often translated as "essence," this misses some of the metaphor's implications. When x is said to have y as its heartwood, that means that the proper development of x yields y, and that y is the most valuable part of x — just as a tree, as it matures, develops heartwood, and the heartwood is the most valuable part of the tree.
* * *
"With what virtue,
what behavior,
nurturing what actions,
would a person become rightly based
and attain the ultimate goal?"
" எத்தகைய ஒழுக்கத்தோடு,
எனென்ன பண்புகளோடு,
எப்படிப்பட்ட நடத்தையைப் பேணுவதால்
ஒருவர் சரியான முறையில் இருந்து
மேலான நோக்கத்தை அடைய முடியும்?
"One should be respectful
of one's superiors[1]
& not envious;
should have a sense of the time
for seeing teachers[2];
should value the opportunity
when a talk on Dhamma's in progress;
should listen intently
to well-spoken words;
should go at the proper time,
humbly, casting off stubbornness,
to one's teacher's presence;
should both recollect & follow
the Dhamma, its meaning,
restraint, & the holy life.
ஒருவர் தன்னைவிட மேன்மையானவரை [1]
மதிக்க வேண்டும்
பொறாமைப்படக் கூடாது;
எந்த நேரத்தில் ஆசானைப் பார்ப்பதென்ற
அறிவு நுட்பம் இருக்க வேண்டும்; [2]
ஒரு தம்ம போதனை நிகழும் போது
அதன் முக்கியத்துவத்தை
உணர வேண்டும்;
தெளிவாகப் போதிக்கப் படுவதை
உன்னிப்பாகக் கேட்க வேண்டும்;
சரியான நேரத்தில் தாழ்மையுடன், பிடிவாதத்தை விட்டுவிட்டு
ஆசிரியரிடம் செல்ல வேண்டும்;
போதனைகளை, அதன் பொருளை,
அடக்கத்தை, புனித வாழ்வை
நினைவுக்குக் கொண்டுவந்து
அதன்படி ஒழுக வேண்டும்.
Delighting in Dhamma,
savoring Dhamma,
established in Dhamma,
with a sense of how
to investigate Dhamma,
one should not speak in ways
destructive of Dhamma,[3]
should guide oneself
with true, well-spoken words.
அறத்தில் மகிழ்ந்து,
அறத்தைச் சுவைத்து,
அறத்தில் நிலைத்து,
அறத்தை எப்படி ஆராய்வதென்று அறிந்து
நுட்பத்தோடு பேச வேண்டும்.
அறத்தைக் தாழ்த்தும் வகையில்
ஒருவர் பேசக் கூடாது, [3]
நேர்மையாக நன்கு கூறப்பட்ட வார்த்தைகளால்
தனது வாழ்க்கைக்கு
வழியமைத்துக் கொள்ள வேண்டும்.
Shedding
laughter, chattering,
lamentation, hatred,
deception, deviousness,
greed, pride,
confrontation, roughness,
astringency, infatuation,
one should go about free
of intoxication,
steadfast within.
சிரிப்பு, விதண்டைப் பேச்சு,
புலம்பல், வெறுப்பு,
ஏமாற்றுதல், தவறான வழிகாட்டுதல்,
பொறாமை, அகம்பாவம்,
எதிர்ப்பு, முரண்படுதல்,
கசப்பு, மோகமயக்கம் ஆகியவற்றைத் தவிர்த்து
போதை இல்லாமல் உறுதியோடு
சுதந்திரமாக வந்து போக வேண்டும்.
Understanding's the heartwood
of well-spoken words;
concentration, the heartwood
of learning & understanding.
நன்றாக பேசப்பட்ட வார்த்தைகளின்
சாரத்தை அறிந்து கொள்ள வேண்டும்;
கற்றதும், அறிந்ததும்: அதன் சாரம் தான்
ஒருக்கம் (ஒருமுகப்படுதல்).
When a person is hasty & heedless
his discernment & learning
don't grow.
While those who delight
in the doctrines taught by the noble ones,
are unexcelled
in word, action, & mind.
They, established in
calm,
composure, &
concentration,
have reached
what discernment & learning
have as their heartwood."[4]
ஒருவர் அவசரப்பட்டாலோ, விவேகமற்று நடந்து கொண்டாலோ,
அவர் விவேகமும், கற்றதும்
வளர்வதில்லை.
மேன்மையானோர் கற்பித்த போதனைகளைக்
கேட்டு மகிழ்வோர்
பேச்சிலும், நடத்தையிலும், மனத்திலும்
சிறந்து விளங்குகின்றனர்.
அவர்கள் அமைதியில்,
சாந்தத்தில்
ஒருக்கத்தில் நிலை பெற்று
விவேகமானவரும், கற்றவரும்
அடைந்த (மரவைரம் போன்ற) உறுதியான நிலையை [4]
அடைகின்றனர்.
* * *
Notes
விளக்கம்
1. According to the Commentary, one's superiors include those who have more wisdom than oneself, more skill in concentration and other aspects of the path than oneself, and those senior to oneself.
உரைகளின் படி நம்மைவிட மேன்மையானவர் யார் என்றால்:
(நம்மைவிட) மேலான மெய்ஞ்ஞானம் உடையவர், மேன்மையான ஒருக்கம் உடையவர், மற்றும் முன்னதாகவே துறவறம் பூண்டவர்.
2. The Commentary says that the right time to see a teacher is when one is overcome with passion, aversion, and delusion, and cannot find a way out on one's own. This echoes a passage in AN 6.26, in which Ven. Maha Kaccana says that the right time to visit a "monk worthy of esteem" is when one needs help in overcoming any of the five hindrances or when one doesn't yet have an appropriate theme to focus on to put an end to the mind's fermentations.
உரைகளின் படி ஆசிரியரைப் பார்க்க வேண்டிய சரியான தருணம்: அவாவும், வெறுப்பும் அறியாமையும் மிகுதியாக இருந்து அவற்றை சொந்த முயற்சியில் விளங்கிக் கொள்ள முடியா விட்டால், ஆசிரியரைப் பார்ப்பதற்கு அதுவே சரியான நேரம்.
3. The Commentary equates "words destructive of the Dhamma" with "animal talk." See the discussion under Pacittiya 85 in The Buddhist Monastic Code.
"தம்மத்தைக் குறை கூறும் பேச்சு" மிருகத்தின் பேச்சுக்கு ஒப்பாகும் என்று உரைகள் கூறுகின்றன.
4. The heartwood of learning & discernment is release.
கற்பதனாலும், விவேகத்தினாலும் உண்டாகும் மரவைரம் போன்ற உறுதியான நிலை வீடு பேறாகும்.
* * *
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
©1994 Thanissaro Bhikkhu. See details English Source
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.