மூச்சோடு மூச்சாக

மூச்சோடு மூச்சாக

தணிசாரோ பிக்கு

Breath by Breath

Thanissaro Bhikkhu

English version follows Tamil translation

நீங்கள் தியானம் செய்யும் போது இரண்டு செயல்களில் கவனமாக இருக்க வேண்டும்: அதாவது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதன் மீதும், அதனால் ஏற்படும் விளைவுகள் மீதும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக இப்போது நீங்கள் மூச்சின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். அதே சமயம் அதனால் உண்டாகும் விளைவுகளையும் கவனித்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆரம்பத்தில் அப்படி ஒன்றும் அதிக விளைவுகள் நிகழ்ந்ததாகத் தெரியாது எனினும் நீங்கள் பொறுமையுடன் அதைத் தொடர்வது தான் முக்கியமானது. ஏனெனில் இந்த உலகில் மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து சிறந்த பலன் தரும் செயல்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று மன அமைதி. நீங்கள் பொறுமையற்றவராக இருந்தால் அது மன அமைதிக்குத் தடையாக இருக்கும். பொறுமையாக இருப்பதென்றால் நீங்கள் சோம்பேறித்தனமாக இருப்பதாகவோ, தியானத்தின் மீது அக்கறையில்லாமல் இருப்பதாகவோ எண்ணக் கூடாது. ஒரே பயிற்சியைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கின்றீர்கள். அவ்வளவுதான்.

அஜான் ஃபுவாங் ஒருமுறை சொன்னார்: தியானம் ஒரு சிறு விஷயம். ஆனால் தொடர்ந்து செய்வதால் அது மிக முக்கியமானதாகி விடுகிறது. மனத்தின் அறி நிலையைச் சரியான அளவில் வைத்திருக்க வேண்டும். அதாவது மிகப் பாரமாகவும் அல்லாமல் மிக இலகுவாகவும் அல்லாமல் இருக்க வேண்டும். மிகவும் அழுத்தம் தந்தால் அது ஒரு கோழிக் குஞ்சைக் கையில் அழுத்திப் பிடித்திருப்பது போல. அழுத்தம் தாங்காமல் அது இறந்து விடும். அதே சமயம் அதை மிகவும் இலகுவாகப் பிடித்திருந்தால் அது நம் பிடியிலிருந்து நழுவிப் பறந்து போய்விடும். எனவே எந்த அளவு அழுத்தம் மூச்சின் மீது வைத்திருந்தால் நம் கவனம் தொடர்ந்து அதன் மீது இருக்கும் என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

மூச்சிலிருந்து தோன்றும் மகிழ்ச்சியான உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அதற்குக் காரணம், ஒரு குறுகிய இடத்தில் அதை அடக்கி வைத்திருந்தால் அந்த மகிழ்வும் இன்பமற்றுப் போய்விடும், பாரமாகி, இறுகி, கட்டுப்பட்டுப் போய்விடும். எனவே உங்கள் அறி நிலையை, பிரகாசிக்கும் ஒளிக்கதிர்களைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு இடத்தில் அது மையப் பட்டிருந்தாலும் அந்த இடத்திலிருந்து அதன் ஒளி எல்லாப் பக்கமும் பரவுகிறது.

இப்போது ஒவ்வொரு ஒளிக்கதிரையும் தொடர்ந்து நாம் செல்ல வேண்டியதில்லை. அவற்றுக்குப் பின்னால் தொடர்ந்து ஓட வேண்டியதில்லை. நீங்கள் இங்கேயே இருப்பதாக எண்ணி, உங்கள் அறி நிலையும் இங்கிருந்தே பரவுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் முடிந்த அளவு வசதியுடன் இருப்பதற்கான வழிகளைச் செய்து கொள்ளுங்கள். அதோடு விட்டு விடுங்கள். பல நேரங்களில் நாம், நமது மனம் இங்கு போக வேண்டும் அல்லது அங்கு போக வேண்டும் என்றோ இந்த நிலையை அல்லது அந்த நிலையை அடைய வேண்டும் என்றோ விரும்புகிறோம். ஆனால் அப்படி அழுத்தம் தந்தோமென்றால் சூழ்நிலை மேலும் மோசமாகவே ஆகும்.

அனுபவமற்ற முட்டாள் பசுவைப் பற்றிய கதை ஒன்று உண்டு. தான் இருக்கும் மலைச்சாரலில் புல்லும் நீரும் இருந்தும், அடுத்த மலைச்சாரலில் உள்ள புல்லையும் நீரையும் பார்த்த அந்தப் பசு, 'அந்த புல் எப்படி இருக்கும்? அந்த நீர் எப்படி இருக்கும்?' என்பதை, 'அங்கு சென்று பார்க்க வேண்டும்,' என்று முடிவு செய்கிறது. ஆனால் அதற்கு அனுபவம் இல்லாததாலும், அது முட்டாள் பசு என்பதாலும் அடுத்த மலைச்சரிவை எப்படி அடைவதென்பது அதற்குத் தெரியவில்லை. இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கில் அது சிக்கிக் கொள்கிறது. பின் வந்த வழியே திரும்பவும் முடியாமல் போக நினைத்த இடத்தை அடையவும் முடியாமல் தத்தளிக்கிறது.

எனவே இருக்கும் இடத்திலேயே இருப்பது தான் நுட்பமான அறிவார்ந்த செயல். வளர்ச்சி அடையும் நேரத்தில் வளர்ச்சி அடைவோம். பயிற்சி நம்மை எங்கெல்லாம், எப்போதெல்லாம் அழைத்துச் செல்லும் என்பதை நம்மால் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது. நாம் பயிற்சி பற்றி முன்கூட்டியே நினைப்பதெல்லாம் நமது அறியாமையிலிருந்து பிறந்தவையே. காரணிகளை மட்டும் நாம் செய்ய வேண்டும். அதற்கான விளைவுகள் தாமாகவே வரும். சரியான காரணிகளை உண்டு செய்தால் நல்ல விளைவுகள் தோன்றும். அதில் சந்தேகம் இல்லை. பிரச்சனை என்னவென்றால் நமது பொறுமையின்மையினால் விளைவுகள் சீக்கிரமாக வரவேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். குறிப்பாக முன்னொரு சமயம் விளைவுகள் விரைவாக வந்திருந்தால் அதுபோலவே மீண்டும் வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

ஆனால் நாம் இங்கு காரண காரியத் தொடர்பினைக் கற்க வந்திருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனை அறிந்து கொள்ள ஒரு வழி: காரணிகளை உண்டு செய்துவிட்டு என்ன விளைவுகள் வரும் என்பதைக் கவனிக்க வேண்டும். இதனால் மனம் அமைதி பெற சிறிது நேரம் ஆகலாம் என்பதைத் தெரிந்து கொண்டால், நீங்கள் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்வீர்கள். மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைத்திருக்க மறந்து விடாதீர்கள். மூச்சுடன் நல்ல உறவை வைத்துக் கொள்ளுங்கள். தியானப் பொருளை உங்கள் விரோதியென நினைக்க வேண்டாம். அல்லது வெற்றி கொள்ளத் தக்கதாக நினைக்கவேண்டாம். அதனுடன் வசதியாக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் நட்புணர்வோடு இருக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். இங்கும் அங்கும் சிற்சில மாற்றங்களைச் செய்து, நிகழ்காலத்தைப் போதிய இன்ப உணர்ச்சி தருவதாக உருவாக்கிக் கொள்ளுங்கள். பெரும் ஆனந்தமும், பிரகாசிக்கும் வெளிச்சங்களும் உண்டாக வேண்டும் என்பதில்லை. அவை எல்லாம் பின்னர் நிகழலாம். இன்பத்தைப் பொருத்தவரை அது குறைவாக இருந்தாலும், காலப்போக்கில் அது வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கும். நீங்கள் அதற்கு அழுத்தம் தருவதால் அது வளர்வதில்லை. அதற்குப் போதிய இடம் கொடுப்பதால் தான் அது வளர்ச்சி அடைகிறது.

உங்கள் மனம் இரண்டு செய்முறைகளில் இயங்குவதைக் காணலாம். ஒன்று தயாரிக்கும் (producing) செய்முறை. மற்றது நுகரும் (consuming) செய்முறை. நுகரும் செய்முறை மிகவும் அதிகாரத்துடனும், அவசரத்துடனும் செயற்படும் செய்முறை. அது உடனே இன்பம்பெற வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கும். தயாரிக்கும் செய்முறையோ சற்றுச் சோம்பல் இயல்பு கொண்டது. சிறிது முயற்சி செய்தவுடன் அது நுகர்வதற்கு விரும்பி அந்தப் பக்கம் சாய்ந்து விடுகிறது. ஆனால் தியானம் செய்யும் போது நாம் எப்படித் தயாரிக்கும் செய்முறையோடு ஒட்டிக் கொள்வது என்று கற்றுக் கொள்ள வேண்டும். பின் அவ்வப்போது சற்றேனும் இன்பமாக இருக்கின்றதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். மிகுந்த ஆனந்தம் இல்லை யென்றாலும், சற்று மகிழ்வாக இருக்கிறது என்று உணர்ந்தால் போதும். தயாரிக்கும் செய்முறை மறுபக்கம் செல்ல விட்டுவிடக் கூடாது. தேவைப்பட்டால் அதைத் தடுக்கத் தயாரிக்கும் செய்முறையோடு முழு நேரமும் தங்கி விட்டாலும் சரியே.

தொடர்பயிற்சிதான் இறுதியில் பயனுள்ள விளைவுகளைத் தரப் போகிறது. இது ஒரு விதை விதைப்பதைப்போல. அதற்கு ஐந்து நிமிடம் சூரிய வெளிச்சத்தையும், கொஞ்சம் நீரையும் வார்த்து விட்டுப் பின் அதை மறந்து விட்டால் அது வளரப் போவதில்லை. சூரிய வெளிச்சமும் நீரும் அடிக்கடி அதன் வளர்ச்சிக்குத் தேவைப் படுகிறது. திரும்பத் திரும்பத் தேவைபடுகிறது. இது ஒரு புண்ணின் மீது களிம்பு (ointment) தடவுவதைப்போல. களிம்பைத் தடவிய உடனே அதை வழித்தெடுத்து விட்டால் அதனால் பயனேதுமில்லை. தடவியபின் அதைப் புண்ணின் மீதே விட்டுவிட வேண்டும். அப்போதுதான் மருந்து தோலினுள் காலப்போக்கில் ஊடுருவிப் புண்ணை ஆறச் செய்யும்.

எனவே மனத்தை மூச்சின் மீது தொடர்ந்து நிலைக்க வைத்து அதன் வேலையைச் செய்ய விடுங்கள். மனம் மூச்சின் மீது தனது வேலையைச் செய்யட்டும் அது போலவே மூச்சும் மனத்தின் மீது தனது வேலையைச் செய்யட்டும். மெல்ல மெல்ல ஒரு சுகமான நிலை உண்டாகிறது, இன்ப உணர்ச்சியும் வளர்கிறது. இந்த நிலை அதிகமானாலும், நாம் தயாரிக்கும் செய்முறையைக் கைவிடக் கூடாது. தாமாகவே உடலை இவை பேணுகின்றன. நாம் சோம்பேறி நுகர்வோராக மாற வேண்டியதில்லை. உடல் முழுவதும் அந்தச் சுகம் பரவினாலும் நாம் தயாரிக்கும் செய்முறையைத் தொடர்வதனால் அது தீர்ந்துவிடப் போவதில்லை. இவ்வாறு தான் தியானம் மனத்தில் ஒரு நல்ல திருப்பத்தை உண்டு செய்கிறது.

"Breath by Breath" by Thanissaro Bhikkhu

Transcribed from an audio recording

As you meditate you have to be alert to two things: What you are doing and the results of what you are doing. Like right now you are focusing on the breath and what results you are getting. In the beginning it does not seem like much. But the important point is that you are patient. Because there are a lot of things in this world that grow gradually. And one of them is peace of mind. If you are impatient it gets right in the way of your peace of mind. It doesn't mean that you are lazy or lackadaisical in your meditation. Simply that you keep at it and keep at it and keep at it.

As Ajahn Fuang once said meditation is a little thing that becomes big because you do it continuously. Just keep the mind with the breath. Try to make the focus of the mind just right, in other words not to heavy not too light. If it is too heavy it is like holding a chick in your hand you squeeze it so hard that it dies. If it is too light you are holding the chick so loosely that it flies away. So try to figure out exactly how much pressure you have to put on the breath in order to keep your awareness there.

One of the reasons we talk about allowing whatever pleasant sensations come from the breath to spread to the body, is that if you hold them in a tight area after a while even the pleasure gets unpleasant, gets heavy, constricted, confined. So think of your awareness as being like a radiant light. It is focused on one spot in the body and everything spreads away from that one spot.

And for the time being you don't have to go tracing out every single light beam that comes out of your awareness. You don't have to go running after it. Just think that you are right here and your awareness is radiating out of right here. Just try to make the point of - right here as comfortable as possible. Then leave it at that. All too often we want the mind to go here or go there or go to this stage or that stage The more we try to push it the worse it gets.

There is the story they tell of the foolish and inexperienced cow who has grass and water on the hill side. But she sees grass and water on another hillside and she wonders, 'Whats that grass like, what is that water like. Lets go and check it out.' But because she is foolish and inexperienced she doesn't know how to get from this hillside to the other. She gets down to the ravine and then she gets stuck. And she can't get back to the place she originally was much less get to the other hillside.

So the trick here is to stay where you are. When it is going to develop it is going to develop on its own. You can't map out the way the practice is going to go. Because all of the preconceived notions about the practice come out of ignorance. You simply have to do the causes. The effects will happen on their own. When the causes are properly done the effects will come. There is no doubt about that. The problem is our impatience that wants them to come fast. Specially if they have come fast in the past before, you want them to come fast again.

But remember we are here to learn about causality. One of the ways you learn about causality is to simply put in the causal factors and see what comes out as a result. And if what you are learning is that the mind needs some time to calm down, you learned an important lesson. Just make sure that you keep at the breath. Try to get on good terms with the breath. Don't regard the meditation object as your enemy. Or something to be conquered. Think about it as something you want to live comfortably with. You want to be friends with. To keep chipping away, chipping away, chipping away. And make adjustments here and there so that the present moment is pleasant enough. It may not be rapturous or have any bells and whistles or lights flashing. Maybe it is saving us bells and whistles or lights for later on. The thing about pleasure is that if you allow it to stay just pleasant enough after a while it begins to grow and grow and grow. Not because you pushed it but you have given it space.

So you notice the mind tends to be in two modes. There is the producing mode and there is the consuming mode. The consuming mode is the really demanding one, it demands pleasure right now. The producer tends to be a little bit lazy so it likes to put in some effort and then get over to the consuming. But as you meditate you have to learn how to stick with the producer. And check every now and then and make sure that things are at-least pleasant. May not be overwhelming but at least you feel good. You feel ok. That is to make sure the producer isn't going overboard. And otherwise just stay with the producing continuously.

And it is the continuity that is going to make all the difference. It is like planting a seed. If you give it five minutes of sunlight and a little bit of water and otherwise abandon it, it wouldn't grow. The sunlight and the water have to be regular. They have to keep coming back and back and back. Just like putting a cream on a rash. You just don't put the cream and then wipe it off. You put it on and then leave it there. And it is the cream interacting with the skin over time that is going to cure the rash.

So keep the mind with the breath continuously and then let it do its work. The mind does its work on the breath and the breath does its work on the mind. And bit by bit by bit the sense of ease, the sense of pleasure grows. And even when it grows large and intense you cannot abandon the producing mode. These will nourish the body on its own without you having to turn into the lazy consumer. Just think if you are spreading spreading but you are here producing producing producing you don't run out. That is how the meditation will begin to make a difference in the mind.