துறவிக்கு ஒரு கேள்வி 4
துறவிக்கு ஒரு கேள்வி
Question for the monk
அஜான் சோணா
Ajahn Sona
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
31. காதலும் மைத்திரியும் Top
உபேக்கை (நிதானம்) இல்லாத அன்பு பாராபட்சம் காட்ட வழி வகுக்கும்.
ஒருவர் மீது இருக்கும் எல்லையற்ற அன்பின் காரணமாக இல்லாமல், அவரது சில குறிப்பிட்ட இயல்புகளின் காரணமாக அவர்களை உங்களுக்குப் பிடிக்கத் தொடங்குகிறது. மைத்திரிக்கும், (நட்புணர்வு, எல்லை இல்லா அன்பு, பாலியில் மெத்தா) காதலுக்கும் வேறுபாடுகள் உள்ளன. காதலில் உபேக்கை இல்லை. அதனாலேயே காதலில் அழுத்தம் (stress) இருக்கிறது. நாம் காதலிக்கும் ஒருவர் மிகவும் அத்தியாவசியமானவராகி விடுவதால் அவர் மீது நாம் பற்றுக் கொண்டு விடுகிறோம். காதலுக்கும் அன்புக்கும் உள்ள வேறுபாட்டினை எப்படி விவரிப்பது?
காதல் எப்போதும் துயரத்திலேயே முடிவுறும்.
அன்பு ஒரு போதும் துக்கத்தில் முடியாது. மற்ற உயிரினங்கள் மீது எல்லை இல்லா அன்பு செலுத்துவதன் காரணமாக ஒருபோதும் நாம் சோகத்தில் ஆழ்ந்திருக்கப் போவதில்லை. ஒருபோதும் அது ஏமாற்றத்தில் முடியாது. மாறாகக் காதல் எப்போதும் ஏமாற்றத்திலேயே முடியும்.
நீங்கள் இவ்வாறு நினைக்கலாம்: "என்ன? ஏன் இவர் எப்போதும் காதல் ஏமாற்றத்தில் முடியும் என்று வலியுறுத்துகிறார்?"
ஏனென்றால் நாம் காதலிப்போர் எப்போதேனும் ஒரு நாள் மரணத்தைத் தழுவத்தான் போகிறார்கள். அல்லது முதலில் நீங்கள் மரணம் அடைய நேரிடலாம். நீங்கள் மனம் மாறிவிடலாம். அல்லது அவர்கள் மனம் மாறிவிடலாம் (உங்கள் மீது உள்ள காதல் அவர்களுக்கோ அல்லது அவர்கள் மீது உள்ள காதல் உங்களுக்கோ குறைந்து விடலாம்). பின் நீங்கள் சோகத்தில் தானே தவிப்பீர்கள்? (சிரிப்பு).
எனவே காதல் ஒரு பிரச்சனையான மனோநிலை. எல்லையற்ற அன்பில் பிரச்சனை இல்லை. உபேக்கைதான் அன்பையும், நட்புணர்வையும் சமநிலையில் வைத்திருக்கிறது.
Romantic Love and Loving Kindness
Loving kindness without equanimity leads to partiality.
You begin to have affection for a person because of particularities about them not because of unconditional good will. There is a difference between loving kindness and romantic love. Romantic love has lack of equanimity in it. And that is why people get stressed in that case. The object becomes extraordinarily important to them they get attached to them. How can you define the difference between romantic love and metta i.e loving kindness or friendliness, spiritual good will. Romantic love always ends in tragedy. Loving kindness never ends in tragedy. You never ever are sad as a result of radiating good will to beings. You never have a disappointing ending. Romantic love unconditionally has always a disappointing end to it.
You think: 'What! Why always? Why always? That is not a negative.'
When you love somebody well, eventually they are going to die. Or you are going to die. Or they are going to change. Or you are going to change. And then you will be sad, won't you. (laughter). So it is a more problematic emotion. Loving kindness is not. So equanimity keeps necessary balance for loving kindness, friendliness
32. ஒரு தியான முகாமில் கொடுக்கப் பட்ட அறிவுரை: Top
சுற்றிச் சுற்றி செல்லும் ஒரு சிக்கலான வழியில் (maze) நாம் இருக்கிறோம். அந்தச் சிக்கலான வழியிலிருந்து எப்படி வழி கண்டு பிடித்து வெளியே வருவது? கிரேக்க மரபில் ஒரு பழங்கதை (myth) உண்டு. அதில் ஒரு கிரேக்க வீரன் இப்படிப்பட்ட சிக்கலான இடத்திற்குள் நுழைய வேண்டிய சூழ்நிலை. சுற்றிச் சுற்றி வரும் பல பாதைகள் கொண்ட சிக்கலான குகை என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குகையின் மத்தியில் ஒரு கொடூரமான ஜந்து (creature) இருக்கிறது. அந்த ஜந்து ஒரு பகுதி மிருகமாகவும், மறுபகுதி மனித உருவமும் கொண்டுள்ளது. அது அவ்வப்போது அந்தக் குகைக்கு வெளியே வந்து பெரும் சேதத்தை விளைவித்து விட்டு மறுபடியும் குகைக்குள்ளேயே சென்று விடும். அதனால் அந்தக் கிரேக்க வீரன் குகைக்குள் சென்று சரியான வழி கண்டு அந்த மிருகத்தைச் சந்தித்து அதை வெற்றிகொள்ள வேண்டும். அதே சமயம் அந்தச் சிக்கலான இடத்திலிருந்து மீண்டுவரும் வழியையும் இழந்துவிடக் கூடாது. இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க நுண்ணறிவு கொண்ட அந்த வீரன் ஒரு வழி கண்டு பிடித்தான். தனது மணிக்கட்டில் ஒரு நூலைச் சுற்றிக் கொண்டு அந்தக் குகையில் நுழைந்தான். அந்த குகைக்குள் நடக்க நடக்க அந்த நூலை எடுத்து விட்டுக் கொண்டே நடந்தான். அந்தக் கொடிய ஜந்துவை வென்ற பின் அவன் திரும்ப வெளியே வரும்போது அந்த நூலைத் தொடர்ந்து வந்தாலே போதும் அல்லவா?
அந்தச் சேதம் உண்டாக்கும் மிருகம் நமது மனத்திற்கு ஒப்பாகும். நமது மனமும் அவ்வப்போது பெரும் சேதம் விளைவிக்கிறது அல்லவா? அந்த நூல் நற்கடைப்பிடிக்கு ஒப்பாகும். நாம் கண்களை மூடிக் கொண்டு முக்கால் மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தியானத்தில் அமர்கிறோம். எந்த வெளித் தூண்டுதலும் இல்லை. அந்தக் குகைக்குள் அடி எடுத்து வைக்கிறோம். அந்தக் குகைக்குள் செல்லும் சில பாதைகள் திடீரென்று முடிந்து விடுகின்றன. இது நம்மைக் குழப்பதில் ஆழ்த்துகிறது. முன்னேற வழியில்லை. தொலைந்துபோய் விட்டோமோ? இது போன்ற சிக்கலான இடத்தில் பாதைகள் ஒழுங்காக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பல திருப்பங்கள். சில வழிகள் உங்களைக் குழப்பி விடும், சுற்றிச் சுற்றி மீண்டும் போக வைக்கும். வந்த வழியே திரும்பிச் சென்று வேறு பிரிவில் நுழைய வேண்டியிருக்கும். ஆக, அந்த நூல் ஒரு முக்கிய இயல்பான நற்கடைப்பிடி அல்லது நற் கவனத்தைக் குறிக்கிறது. இது ஒரு விதமான ஞாபக சக்தி. நாம் தொலைந்து போகாமல் இருக்கச் செய்யும் காரியத்தைத் தொடர்ந்து நினைவில் வைத்திருக்கிறது. நற்கடைப்பிடி இல்லாவிட்டால் நாம் தொலைந்துபோய் விடுவோம்.
இப்படிப்பட்ட குகைக்குள் நுழைந்து ஒரு கொடூரமான மிருகத்தைச் சந்திப்பதென்பதே ஒரு வீரச்செயல் தான். இப்படி ஒரு தியான முகாமுக்கு வந்து உங்கள் மனத்தை நேருக்குநேர் சந்திந்து அதைக் கட்டுப்படுத்த விரும்புவது ஒரு வீரச்செயல்தான். இதற்குத் தைரியமும், துணிச்சலுல், வீரமும் தேவை. ஆனால் இப்படி ஒரு மிருகம் இருக்கிறது, அவ்வப்போது வெளியே வந்து பெரும் சேதம் விளைவிக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். எனவே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று நாம் தீர்மானித்துக் கொண்டுள்ளோம். அதுவே உள் நோக்கி நாம் செல்லும் பயணம்.
'மேஸ்' (maze) என்ற ஆங்கில வார்த்தையோடு சேர்ந்தார்ப் போல மற்றொரு வார்த்தையும் உண்டு. மிகவும் சுவாரஸ்யமான வார்த்தை. அதன் எதிர்மறைச்சொல் என்ன தெரியுமா? அது தான் 'அமேஸ்' (amaze). 'மேஸ்' என்பதைக் குழப்பம் எனலாம். 'அமேஸ்' என்றால் வியப்பு. வியப்படைவது. சிக்கலான இடத்திலிருந்து வெளியேறுவது. குழப்பம் நீங்கி விட்டது. தெளிவுக்கு வரும்போது வியப்பாக இருக்கிறது, அல்லவா? பிரச்சனையைத் தீர்க்கும் வழி கண்டு பிடிப்பது வியப்பான விஷயம். ஆக இதை நோக்கித்தான் நாம் செல்கிறோம். பெருவியப்பை நோக்கிச் செல்கிறோம்.
பயிற்சியை எதற்காகச் செய்கிறோம் என்பதைத் தொடர்ந்து நினைவு படுத்திக் கொள்ளுங்கள். கிரேக்க வீரன் நூலைப் பயன்படுத்தி வழி தொலையாதது போல நீங்களும் உங்கள் பயிற்சியில், பாதையில் தொலையாமல் இருக்க வேண்டும். அந்தக் குகைக்குள் பல முறை சென்று வெளியே வருவதால் குகை நமக்கு மேலும் மேலும் தெரிந்த இடமாகி விடுகிறது. பின் எங்கும் போகாத, சுற்றிச் சுற்றிப் போகும் பாதைகள் நம்மை ஏமாற்றுவதில்லை.
Advice given to a group of meditators in a retreat:
Finding your self in a maze. In the Greek myths one of the Greek heroes is in a situation where he has to enter a maze. There is a creature half man half beast in the centre of this maze. It comes out once in a while wreaking havoc and one of those Greek heroes has to enter the maze, find his way through and confront this creature. He has to not get lost at the same time. So what he did was he tied a tread to his wrist and as he walked through the maze the thread followed him and he could easily find his way out.
(The creature that wreaks havoc is a simile for our mind that likewise wreaks havoc at times. )That thread is the simile for mindfulness. We sit with our eyes closed for 45m to an hour with no outward stimulation. We make steps into the maze. Maze has blank endings. It confuses us. You run into truncated paths that don't go anywhere etc. When we go into the maze it is not necessarily orderly and we are going to run into all kinds of paths that don't go anywhere, turn you around, wander, lose it. So that thread is the critical factor called mindfulness. It is a type of memory which retains the theme in order to allow you to find your way as you make this journey. The very idea of going into a maze especially with some kind of mysterious being at the centre of it, is heroic. In a sense coming to a retreat and facing the mind is quite heroic. It takes some courage. But you know this creature at the centre of the maze does come out and wreak havoc every now and then. It is a resolution that one must go in and deal with it. That is the procession inward.
There is another word that goes along with maze. A very interesting word. Do you know the opposite of being in a maze is? To be mazed is to be confused. The opposite is amazed. To be amazed. Lifted out of a maze, lifted out of confusion. To be taken into clarity is amazing. To find a way to solve the problem is amazing. So that is where we are moving towards. Amazement.
Continually insist that you do not lose the thread of your practice. This has worked its way into the English language. "Following the thread of the conversation," is right from that. Following the thread of the subject of meditation. Not to get lost. We get more adept at going in and out of the maze and the maze becomes more and more well known to us. We are not deceived anymore by dead ends and little circles that go nowhere.
33. உங்களையே தெரிந்து கொள்ளுங்கள் Top
'மேஸ்' (maze) என்ற ஆங்கில வார்த்தைக்குப் பொருள் சுற்றிச் சுற்றி வரும் பல பாதைகள் கொண்ட குகை போன்ற இடம். இங்கு தொலைந்து போவது சுலபம். இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நடந்து செல்வது போலத்தான் மனமும் வேலை செய்கிறது. நமது எண்ணச் செயற்றொடர்களும் சில பாதைகளைப் பல முறை தொடர்ந்து சென்றிருக்கின்றன. சாதாரண மனிதன் நற்கடைப்பிடி இல்லாததால் இப்படிப்பட்ட எண்ணப் போக்கில் இருப்பதைக் கவனிப்பதே இல்லை. எங்கும் போகாத பாதையில் அல்லது தீய விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் பாதையில் மறுபடியும் போகின்றோம் என்பதை அறிவதும் இல்லை. இது திறமையில்லாத செயல் என்பதை ஏற்றுக் கொள்வது கூட இல்லை. எரிச்சல், கோபம், சோகம், ஊக்கமின்மை, விசனம், குழப்பம், அமைதியின்மை போன்ற இடங்களுக்கு இட்டுச் செல்லும் பாதை. இவற்றுக்கு இட்டுச் செல்லும் எண்ணப் போக்குகளில் சுலபமாக நுழைந்து சிக்கிக் கொள்கிறோம். மனக்கவனமின்மைதான் இதற்குக் காரணம். இதனாலேயே நற்கடைப்பிடி ஒரு மிக அவசியமான திறமையாகிறது. ஒரு சந்திப்பில் பல பிரிவுகள் இருக்கின்றன. எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பதில் கவனம் இருக்க வேண்டும்.
ஏற்கனவே சென்ற தவறான பாதை நம்மை மீண்டும் அழைக்கிறது. ஒரு விற்பனையாளர் அவர் பொருளை நம்மை வாங்க வைக்க அழைப்பது போல. இனிமேல் அந்தத் தேவையற்ற பொருளை நாம் வாங்கப் போவதில்லை என்று நம்மையே தயார் படுத்திக் கொள்ள வேண்டும். விற்பனையாளர் பொருளின் அதிசய குணங்களைப் பற்றிப் பேசுவதைக் கேட்டால் அப்பொருள் நமக்குத் தேவை என்று நம்பத் தோன்றுகிறது. அப்படித்தான் மனமும் நம்மிடம் வாதாடுகிறது: அது உண்மை, அவன் ஏன் உண்மையிலே எரிச்சலூட்டுகிறான், ஏன் இந்தச் சூழ்நிலை சோகமானது, ஏன் உங்களால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்று மனம் நமிடம் ஒரு விற்பனையாளரைப்போலத் தன் நிலையை விளம்பரப் படுத்திக் கொண்டே இருக்கிறது. ஏன் உங்களுக்கு நேரப் போவதில்லை (சிக்கலிலிருந்து விடுபடும் அனுபவம்). இது போன்ற மனத்தின் வாக்கு வாதங்களை நம்ப வேண்டாம் என்று புத்தர் கூறினார். இனிமேல் இந்த விவாதங்களை ஏற்க வேண்டாம். இதுவே ஆன்மீகப்பயணம். தெளிவாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு நம்பிக்கை வேண்டும். போதனைகளில் நம்பிக்கை. சிறிதேனும் பலன் பெற்றிருந்தால் இதில் ஏதோ நன்மை இருக்கிறது என்று உணர்ந்திருப்பீர்கள். ஒரு பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றீர்கள். உங்களுக்குச் சில சந்தேகங்களும், தயக்கமும் இருக்கும். அதே சமயம் முன்கூட்டியே எல்லாம் தெரிந்து கொள்ளவும் முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பாதையில் பல பிரிவுகள் இருக்கப் போகின்றன. உங்களால் முடிந்த அளவு சிந்தித்துப் பார்த்து மேலும் போக வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது போன்ற முடிவெடுப்பதிலிருந்து தப்பிக்க முடியாது. ஆரம்பத்திலேயே முழு அறிவும் இருக்கப் போவதில்லை. முடிவில் தான் அறிவு தெளிவாக இருக்கப் போகிறது. அதுவரை இந்தப் பந்தய விளையாட்டில் தோன்றும் உகந்த வழிகளில் ஏதேனும் ஒன்றை, உங்கள் இயற்கை அறிவையும், (intuition) சிந்தனையையும் பயன்படுத்தித் தெரிவு செய்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இந்த 'மேஸ்' - சிக்கலான இடத்தைக் – கடந்து சென்றிருந்தால் நமக்குத் தன்னம்பிக்கை இருக்கும். 'கவலைப் படாதே. காரியத்தில் தயங்காமல் செயற்படு.' இப்படிச் சிக்கலான பாதையைக் கடந்த பின் அறிவுரை கூறுவது சுலபம். ஆனால் அந்தச் சிக்கலான பாதையில் சென்று கொண்டிருப்பவருக்கோ இது ஒரு பெரும் அனுபவமாகவே இருக்கும். உறுதியின்மை, சந்தேகம். வழியைப் பற்றிச் சந்தேகம், போதனைகளைப் பற்றிச் சந்தேகம். ஆசிரியர் பற்றிச் சந்தேகம். இவை எல்லாம் மனத்தின் வித்தைகளே.
இலட்சக்கணக்கானோர், இந்தச் சிக்கலான பாதையைக் கடந்து பாதுகாப்பாக வெளியே வந்திருக்கின்றனர். நமக்கும் அது தெரியும். கேள்விப் பட்டிருக்கின்றோம். ஆனாலும் மனத்தில் ஒரு குரல் சந்தேகிக்க வைக்கிறது. மற்றவர் செய்திருக்கலாம். ஆனால் என்னால் முடியுமா? செய்து முடிக்கும் திறமை என்னிடம் இல்லையோ? காலதாமதமாகி விட்டதோ? வரலாற்றில் முன்னொரு சமயத்தில் மற்றவர் இதைச் சாதித்திருக்கலாம். ஆனால் இக்காலத்தில் இது முடியுமா? இவை எல்லாம் மனம் தன்னையே குழப்பிக் கொள்ளச் செய்யும் எண்ணங்கள். இவை எல்லாம் ஒதுக்கப்பட வேண்டியவை. பயனற்றவை.
பாதை பாதுகாப்பானதே. பைத்தியம் பிடித்துக் கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பானதே. சலிப்படையாமல் இருப்பது பாதுகாப்பானதே. சோகப்படாமல் இருப்பது பாதுகாப்பானதே. இதனால் நாம் சேதப்பட மாட்டோம். பழைய திறனற்ற வழிமுறைகளை விட்டு விட்டுத் தீமையற்ற நிலைகளுக்குச் செல்வது பாதுகாப்பானதே.
பயணத்தைத் தொடங்காமல் இருப்பது - இருக்கும் நிலையில் இருந்து கொண்டு, வீட்டிலேயே தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்துக் கொண்டிருப்பது - அபாயகரமானது. தியானிப்பது, தியானம் செய்யாமல் இருப்பது அபாயகரமானது என்பதைத் தெரிந்து கொள்வதற்கே. இருக்கும் இடம் அபாயகரமானது. நேரமும், வாழ்வும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. தெரிவுகள் செய்வதைத் தவிர வேறு தெரிவே இல்லை. பாதையில் சென்று பயிற்சி செய்ய வேண்டும் என்ற தெரிவு பாதுகாப்பான தெரிவு. இவை நம்மை நல்ல நிலைக்கும் பாதுகாப்பான இடத்திற்கும் எடுத்துச் செல்லும்.
Know thyself
The maze image is so like how the mind works. We have gone down certain roads so many times with thought processes. The ordinary person does not notice when we are slipping into it. That is because of lack of mindfulness, lack of awareness. Perhaps lack of information that there is anything wrong with going in that, down that track again. The track of irritability, anger or depression or sadness, regret, confusion, restlessness etc. These circuits are well worn and so easy to slip down. That is why mindfulness is important. You got to catch yourself at that intersection just before you go down that track.
It (i.e. the usual negative thought processes) is so beckoning. The salesman nature of it is so convincing. You got to prepare yourself not to buy anymore. Even though the argument is so persuasive. The arguments of the mind: why it is real, why it is really is very irritating. Why it really is sad, why you really can't do it. Why it couldn't happen to you. These are the utterly persuasive arguments of the mind which the Buddha is saying you got to call it. You are not to believe it anymore. That is the spiritual voyage. Make a clear determination.
You need confidence, Confidence in the teaching. If you have had some benefits in this, some glimpses and so forth that should give you the sense that if there is something to it there might be more to it. You may have doubts and hesitancies but at the same time you know that in this voyage you are not going to know everything ahead of time. There is going to be forks in the trail and you have to go on your best reasoned conviction. There is no way out of that. You can' have knowledge at the start. You only have knowledge at the end. In the meantime there are gambles and choices based on your best intuitions and reasoning and then trying them.
Of course if one has been through the maze one is confident. 'Don't worry about it. Just do it. 'It is easy enough to say from the other side. But when you are walking through that all these tunnels and so forth it's quite an experience. Uncertainty comes up. Doubt, Doubt about the Path, Doubt about the teachings. Doubt about the teacher. These are part of the minds bag of tricks.
Millions of beings have gone through this maze and come out the other side. We know that. We heard that. But there is this voice that makes us doubt. Maybe others have but what about me? Maybe I can't. Maybe it is too late. Maybe that was earlier in history but not now. These are the kind of things that the mind pulls out and confuses itself with. Those are to be ignored, unprofitable.
The Path is safe, not to get mad is safe, not to get bored is safe, not to get sad is safe. We come to no harm. To abandon old habits that lead you into unwholesome states is safe.
Not to go on this journey- to play it safe, stay home and watch TV is dangerous. To meditate is to realize that not meditating is dangerous. To stay where you are is dangerous. Time and life is ticking by. You have no choice but to make choices. These are safe choices. These are moving towards well being, safety.
34. மேன்மையை நோக்கிச் செல்லும் மனிதர்கள் Top
நீங்கள் மிகவும் தன்னடக்கமுள்ளவராக இருக்க வேண்டிய தில்லை. மேன்மையை நொக்கிச் செல்லும் மனிதர் நீங்கள். 'யார், நானா? இந்த எளியவனான நானா மகத்தானவனாகப் போகிறேன்? கேட்பதற்குச் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.' என்று நீங்கள் நினைக்கக் கூடாது. ஒரு சினிமா நட்சத்திரத்தின் பிரசித்தத்தைப் போல நீங்கள் புகழ் பெறுவீர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் மனத்தின் மகிமையை உணரப் போகின்றீர்கள். விரிந்த மனம் உடையவராக மாறப் போகின்றீர்கள். மனம் விரிவடைய, விரிவடைய அது முக்கியமான வாய்மைகளைச் சந்திக்கிறது. எல்லா வகையான வாய்மைகளையும் அது சந்திப்பதில்லை. முக்கியமான வாய்மைகளை மட்டுமே அது சந்திக்கிறது.
இப்படி மேன்மையானவராகும் ஒருவருக்குத் தோன்றும் ஒரு எண்ணம்: 'இந்த அறம் உலகிடமிருந்து சிறிதே எதிர்பார்ப்போருக் காகத்தான், அதிகம் எதிர்பார்ப்பவருக்கு அல்ல. முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற பேராசை உள்ளவருக்கு அல்ல.' எதை அடையப் பேராசை? இரண்டு விஷயங்களில்: 1. பணம் 2. புகழ். புகழ் என்பது பதவி, அதிகாரம் என்ற வடிவில் வரலாம். சிலருக்கு இரண்டின் மீதும் கண் இருக்கும். சிலருக்குப் பணம் மட்டுமே தேவை. சிலருக்கு அதிகாரத்தின் மீதே கண்.
பணம் உங்களுக்கு முக்கியம் இல்லையென்றால், அதனால் வாங்கக்கூடிய பொருட்கள் மீதும் உங்களுக்கு அதிக அக்கறை இல்லாவிட்டால், புகழும் அதிகாரமும் உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றா விட்டால், அது போன்ற நோக்கங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் தராவிட்டால் நீங்கள் மேன்மையான நிலையை நோக்கிச் செல்கின்றீர்கள். இது முதலில் பெரிய காரியமாகத் தெரியாது.
அதிகாரம் ஒரு சுமை. யாருக்குத்தான் சுமை தேவைப்படுகிறது? பணம் என்றால் பல சாத்தியங்கள், இல்லையா? இரண்டு சாத்தியங்களுக்குப் பதிலாக பணம் இருப்பதால் பத்து சாத்தியங்கள் உள்ளன. அதிக பணம் என்றால் அதிக சாத்தியங்கள். ஆனால் நினைத்துப் பார்த்தீர்களென்றால் அதிக சாத்தியங்கள் இருப்பதும் ஒரு சுமையைத் தாங்கி இருப்பது போலத்தான். இப்போது எல்லா சாத்தியங்களைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது. இவற்றைப் பற்றி மனத்தில் ஓடும் எண்ணங்கள் மன அமைதியைக் குலைக்கின்றன. பிரதிபலித்துப் பார்த்தால் விடுதலையும், அமைதியும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதால் வரப்போவதில்லை. உண்மையில் குறைவான சாத்தியங்களே உங்களை அமைதிக்கு எடுத்துச் செல்லும்.
கிரேக்க சிந்தனையாளர் சாக்ரட்டீஸ் (Socrates) கூறிய முக்கியமான கூற்று: 'மனிதருள் குறைவாக விரும்பியதால் நான் கடவுளுக்கு அருகில் இருக்கின்றேன்.' அவருக்கும் இதே எண்ணம் தோன்றியது. மனிதருள் மிகக் குறைவாக ஆசைப்பட்டவர் என்று தன்னை நினைத்தார். உலகிடமிருந்து மிகவும் குறைவாகவே எதிர்பார்த்தார். அதனால் தெய்வங்களுக்கு அருகில் இருப்பதாக அறிந்தார். உலக சாத்தியங்களில் ஆசை குறையக் குறைய நாம் வேறொன்றை அதிகம் பெறுகிறோம். அதுவே தெய்வீகத் தன்மை. ஆழமான சுதந்திர நிலையை நாம் அடைகிறோம்.
மனம் நம்மை ஏமாற்றப் பார்க்கிறது. இன்னும் ஒரு சாத்தியம் வேண்டும், இன்னும் ஒரு சாத்தியம் வேண்டும் என்று கேட்கிறது இறுதியில், இந்தச் சாத்தியங்கள் எல்லாம் நம்மைச் சோர்வடையச் செய்கின்றன. அவற்றோடு ஏதேனும் ஒரு பிரச்சனையையும் காண்கிறோம். இது திருவிழாவுக்குச் சென்று பல பரிசுகளை வெல்வதுபோல. ஆனால் எல்லாம் மட்டமான பரிசுகள். தரமற்ற பொருட்கள்.
இப்படி இவற்றோடு சோர்வடைவது ஒரு இயற்கையான செயற்றொடர். உலகிடமிருந்து குறைந்தே எதிர்பார்ப்போர் மாபெரும் விடுதலையையும், ஆனந்தத்தையும், பாரமின்மையையும், மகிழ்வையும், வியப்பும் அடைகின்றனர்.
இது ஒரு ஆன்மீக அறிவுப் பரீட்சை. இந்தக் கேள்விக்கான பதிலில் பல சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் அறிவாளியாக இருந்தால் பல சாத்தியங்கள் இருப்பதில் விடுதலை இல்லை; பல சாத்தியங்களை விட்டு விடுவதிலேயே விடுதலை இருக்கிறது என்பதை உணர்வீர்கள்.
People on the way to greatness
You shouldn't be too modest. You are on the way to greatness. You shouldn't think, 'What me? Little me on the way to greatness? That is interesting.' May not be a celebrity, you are on the way to. But greatness of mind. Grandeur of mind. Largeness of mind. As the mind becomes larger and comes in contact with important truth, not just any old truth but really important truths.
One of the thoughts that comes to a person on the way to greatness: 'This teaching is for one who wants little from the world, not for one who is highly ambitious about accumulating a bunch of stuff.' Two types of things: 1. Money and 2. Reputation. Reputation can be in the form of power. Some like both. Others just want just the money. Others just the power.
If money doesn't mean much to you, the things that you can buy with money don't mean very much to you and if looking for praise and power don't mean very much to you and these goals aren't satisfactory they don't amount to much then you are well on your way to grandeur. It may not seem like much. Power is like a burden. Why would anybody want. Money is possibilities. Isn't it. That is what it is. Instead of 2 possibilities you have ten possibilities. You have more money you have more possibilities. But if you have thought about it you realize whole bunch of possibilities is more like a burden. Now you have to think of all the possibilities. Problem is the more possibilities you have swirling around your head the less peace you have. You realize that freedom does not come from having a whole bunch of possibilities, it really comes from wanting little.
A striking saying from Socrates: 'Wanting least among humans, I am closest to Gods.' The very thought occurred to him as well. He thought he was among the humans who wanted least. Very very little from the world and this made him very close to divine. As we loose interest in worldly possibilities we gain something Divine possibility. We gain a profound sense of freedom. The trick the mind plays. One more possibility. One more possibility. We become weary of these possibilities. There is always something wrong with them. It is like going to the fairgrounds and winning those prizes and they turn out to cheap plastic things after all. This is part of the natural process. We become disenchanted with these multiple possibilities. The things that one buys. That is wanting little from the worlds produces a great freedom, joy, lightness, happiness, amazement.
It is a spiritual IQ test. It seems the answer would be a whole bunch of worldly possibilities. If you are really smart you see it is not in a whole bunch of possibilities is not where freedom lies. Letting go of a whole bunch of possibilities is where freedom lies.
35. மனத்தின் தனிமை Top
"இந்த அறம் தனிமை விரும்பிகளுக்குத்தான். கூட்டத்தை விரும்புவோருக்கல்ல."
'இந்த அறம் தனிமைக்கு மிதமிஞ்சி ஆசைப் படுவோருக்குத்தான்; கூட்டத்தைக் கண்டு அஞ்சுபவர்களுக்கல்ல' என்று சொல்லவில்லை. தனிமையில்லாமல் வாழ முடியாது என்பதில்லை. இரண்டு வகையான தனிமைகள் உள்ளன. ஒன்று உடலின் தனிமை, மற்றது மனத்தின் தனிமை. இந்த இரண்டில் மனத்தின் தனிமையே மிகவும் மேன்மையானது. உடலின் தனிமைக்குத் தக்க சுற்றுச் சூழலை அமைத்துக் கொள்வதற்கு நாம் உதவி புரியலாம். இந்த விகாரையில் புலன் ஆசைகளின் தூண்டுதல் குறைவாக இருப்பது போன்ற சூழல் உடலின் தனிமைக்கு உதவுகிறது. தனிமையென்றால் தனியாக இருக்கும் உணர்ச்சி, மனத்தளவில் தனிமையாக இருப்பது. கூட்டத்தை விரும்பும் பேராவல் இல்லாமல் இருப்பது. மனிதத் தன்மையில் கூட்டத்தைச் சார்ந்திருக்கும் இயல்பு இயற்கையாகவே உள்ளது. ஆனால் தனிமையை விரும்புவது, நமது அதிகரிக்கும் நுண்ணறிவையும், மனத்தின் ஆரோக்கியத்தையும் காட்டுகிறது. இது நன்மைக்கே. பெரும்பாலானோரைத் தனியாக இருக்க விட்டால் அவர்கள் கூட்டத்தோடு இணையவே விரும்புவார்கள். அவர்கள் தனியாக இருப்பதில்லை. அவர்கள் மனத்தில் பல குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தனியாகச் சென்று அமைதியாக உட்காருவதால், அவர்கள் தனிமையில் இருப்பதாக எண்ணிவிடக் கூடாது. அவர்கள் மனத்தளவில் பெரும் கூட்டத்துடனேயே இருக்கின்றனர்.
பிரஞ்சு மொழியில் சற்று புத்தி பேதலித்துள்ளவரைப் பற்றிப் பேசும் போது, 'அவன் தனியாக இல்லை,' என்பார்களாம். இரயில் நிலையத்தில் தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பவரைப்போல, 'அவன் தனியாக இல்லை.'
மனத்தில் தனியாக இருப்பதென்றால் அமைதி நிலவ வேண்டும். அங்கு வசனம் ஏதும் இருக்கக்கூடாது. அமைதி மட்டுமே இருக்க வேண்டும். தனியாக இருக்கும் போது பேசுவதற்கு அருகில் யாரும் இல்லை. ஆனால் தனியாகத் தியானத்தில் அமர்ந்திருக்கும் போது பேச்சு இருக்கின்றது இல்லையா? மனம் பிதற்றிக் கொண்டே இருக்கிறது. யாரிடம் பேசுகிறது? தன்னிடமே பேசிக்கொண்டும் தன்னையே கேட்டுக் கொண்டும் இருக்கிறது. தனி ஆவர்த்தனம்! ஆகத் தனிமையின் மீது உள்ள விருப்பம் என்பது பேச்சற்ற அமைதி கிடைப்பதின் மீது உள்ள விருப்பம். தனக்குத் தானே மனம் பேசிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை குறைகிறது. இது ஒரு அருமையான ஆனந்தமூட்டும் அனுபவம்.
முடிவில்லாத மனத்தின் பேச்சு குறைந்து நல்ல அமைதி நிலவுகிறது. அமைதி இருக்கும் போது அங்கு தனிமையும் இருக்கும். தனிமை என்ற வார்த்தையின் வேர்ச்சொல் - தனி. அப்படியென்றால் ஒற்றை, ஒன்று. இறுதியாக நாம் தனித்து இருக்கின்றோம். அதை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கின்றோம் - தனித்தலை நோக்கி. இது தான் 'தனிமையை விரும்புவதும், கூட்டத்தை விரும்பாததும்' என்பதன் பொருள். மற்றவர் நம்மைச் சுற்றி இருக்க வேண்டும் என்ற மிதமிஞ்சிய ஆசை இந்தத் தனிமை உண்டாகக் கூடிய சாத்தியத்தைக் குலைத்து விடுகிறது. இதனால் மற்றவருக்கு நாம் பயப்படுகிறோம் என்று பொருளல்ல. பெரும்பாலோருக்குச் சமூகத்தில் மற்றவருடன் பழகுவதில் பிரச்சனையே இல்லை. ஆனால் எப்போதும், அடிக்கடியும் கூட்டத்தோடு இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கைவிட வேண்டும்.
Solitude of the mind
"This Dhamma is for one who loves seclusion not For one who craves company"
Notice that it is not, "This Dhamma is for one who craves seclusion, not for one who fears company." It is not that you can't live without seclusion. There is seclusion of the body and seclusion of the mind. Of the two, seclusion of the mind is far superior. Seclusion of the body helps (Low sensory environment like in this monastery). Seclusion is the sense of being alone, alone in your mind, rather than this desperation of needing company. It is built into humans to depend on company. But it is a very healthy thing to come to enjoy solitude as a mark of increasing wisdom and health of the mind and vision. Most people if you put them alone they crave company. They are not alone. Their mind is full of voices. Just because we go alone or sit down without talking does not mean that we are in seclusion. We are in company.
In French apparently, a way of talking about someone who is a little crazy is to say, 'He is not alone.' Someone in a subway station talking to themselves. 'He is not alone.'
To be alone in the mind is to have silence. There is no longer a dialogue going on. Silence. When you are alone there is nobody to talk to. But when you are alone sitting in meditation there is talk going on, isn't it? There is the chatter in the mind. Who is it talking to? It is talking and answering itself. A ‘one man’ band. So the love of seclusion is moving towards the love of silence of speech. Reduction of the need to endlessly talk inside the mind. When the inner voice is silent, it is noble silence. This is said to be a wonderful blissful experience.
The endless active inner chattering voice winds down into silence. When you have silence you have solitude as well. Solitude being based on its root solo - one. You are finally one. That is really where we want to go - to oneness. It is uncomfortable being more than one. That is the idea of the love of seclusion and the non craving of company. The craving for stimulation from other people disturbs that possibility to enter into seclusion. Again it is not a fear of other people. Most people here are quite sociable, able to deal with other people but it is the abandoning, the desperate habitual want to associate with other people.
36. ஊக்கம் Top
"இந்த அறம் ஊக்கமுள்ளவருக்குத்தான், சோம்பலானவர்க்கு அல்ல."
இது கடுமையான வேலை, இல்லையா? நோக்கமின்றி அலைந்து திரியாமல், சலிப்புத் தட்டாமல், சோர்ந்து போகாமல், ஏன் மிகவும் ஆவேசப் படாமல் இருப்பது மிகவும் கடுமையான வேலைதான். இவற்றைத் தடுப்பதற்குச் சாந்தமான சக்தி ஒன்று தேவை. இந்தச் சாந்தமான சக்தியே புத்தரின் போதனைகளில் அடிக்கடி வலியுறுத்தப் படுகிறது. வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் நாம் திறமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றால் வெறும் முயற்சி மட்டும் இருந்தால் போதாது, அது ஒழுங்கு படுத்தப்பட்ட முயற்சியாக இருக்க வேண்டும். நமக்குத் தேவையான விளைவுகள் கிடைப்பதற்குத் தக்க அளவான முயற்சியாக இருக்க வேண்டும். பாதி நேரம், நாம் தேவைக்கு அதிகமான முயற்சியை மேற்கொள்ளாமல் இருக்கவும், மீதி நேரம் தேவைக்குக் குறைவான முயற்சியைச் செய்யாமல் இருக்கவும் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு எல்லைகளுக்கும் நடுநிலையில் இருப்பதே சரியான முயற்சி. தேவையான விளைவுகள் கிடைப்பதற்கான தகுந்த முயற்சி. நாம் நம்மையே மிகக் கடுமையாகச் 'சோம்பேறி! மடையா!' என்று திட்டிக் கொண்டே தேவைக்கு அதிகமாக முயற்சிக்கவும் கூடாது. அதனால் கிளர்ச்சிதான் உண்டாகும். அதே சமயம் மிகவும் சோம்பேறித்தனமாக மந்த கதியில் செயற்படுவதும் கூடாது. எல்லாச் சமயமும் ஒரு விழிப்பு, கவனம் இருந்து கொண்டே இருப்பதற்கு, மனத்தில் ஊக்கம் தேவை.
ஆரம்பத்தில் அது மிகவும் கஷ்டமான முயற்சியாகத் தோன்றும். ஆனால் எந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ளும் போதும் அல்லது எந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளும் போதும், ஆரம்பத்தில் கடுமையான முயற்சி தேவைப் படுவதாகவே தோன்றும். ஆனால் போகப்போக நமது செயல்திறன் சீர்பெறும் போது அந்த அளவு முயற்சி தேவைப் படுவதில்லை. திறமையில் முன்னேற்றம் காண்கிறோம். நமது சக்திகளைச் சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்கிறோம்.
ஆரம்பத்தில் 25 நிமிடம் தியானத்தில் உட்கார்ந்தாலே கடுஞ்சோர்வு உண்டாகி விடுகிறது. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் நமது செயல்திறன் முன்னேறும் போது பயிற்சியே நமக்கு மேலும் உற்சாகத்தை ஊட்டுகிறது. மாறாகப் பயிற்சி செய்யாவிட்டால் நாம் சோர்வடைந்து விடுதையும் காண்கிறோம். எனவே சக்தி ஊட்டும் பயிற்சி இது. இப்படி எண்ணுவதும் நல்லது. 'ஆ! எனக்கு இப்போது உற்சாகம் தேவை. கவலைகள், மன அழுத்தங்கள், எரிச்சல் கொள்வது போன்ற கெட்ட பழக்க வழக்கங்களால் குறைந்து விட்ட எனது உற்சாகத்தை, சக்தியை நான் பயிற்சியில் அமர்ந்து அதிகரித்துக் கொள்ளப் போகிறேன், உற்சாகத்தைக் குறைக்கும் செயல்களை விட்டுவிட்டு எனது சக்தியை மீண்டும் மீட்டெடுக்கப் போகிறேன்!' எந்த மனப்போக்குடன் நாம் பயிற்சியில் உட்காருகிறோம் என்பது மிக முக்கியம். சக்தியைப் பயன்படுத்தி (முயற்சி செய்து) சக்தியை உண்டாக்குகிறோம். முரண்பாடாகத் தோன்றினாலும் இது ஒரு உண்மை.
சக்தியை எப்படிப் பெறுவது? சக்தியை எப்படிக் கிளர்ச்சியுறச் செய்வது? எது சத்தியைக் கிளர்ச்சியுறச் செய்கிறது?
இதற்கெல்லாம் ஆதாரமான மிகச் சிறந்த வழி உற்சாகமாக இருப்பதே ஆகும்.
விசித்திரமாக தோன்றுகிறதல்லவா? முயற்சி செய்வதால் உற்சாகம் பிறக்கிறது. துவங்கிய உடன் சக்தி அதிகரிக்கிறது. உற்சாகத்தை விளைவித்தால் அதுவே சக்தியை உருவாக்கிக் கொள்கிறது.
இதை நீங்கள் உங்கள் வாழ்வில் அனுபவித் திருப்பீர்கள்: ஏதாவது ஒரு காரியத்தை நீங்கள் செய்யவேண்டுமென்றால் முதலில் அதைத் துவங்க வேண்டும். துவங்கிய பின் ஒன்றன் பின் ஒன்றாக அந்தக் காரியத்தைச் செய்வதில் நாம் முழு மூச்சோடு இறங்கி விடுகிறோம். பின் நாம் நினைப்பது, 'ஆ, இது நாம் நினைத்த அளவு கஷ்டமான காரியம் இல்லை.' இப்படி உற்சாகத்தை அதிகரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். துவங்கியபின் மேலும்மேலும் உற்சாகம் வரும் என்பதை நம்புங்கள். இவை எல்லாம் நமது வாழ்க்கை அனுபவங்களில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் தான். ஆனால் கற்றதை மறந்துவிடுகிறோம். அவற்றை மறக்க வேண்டாம். நினைவில் வைத்திருங்கள்.
Energy
"This Dhamma is for one who is energetic not for one who is lazy."
This is tremendous work, isn't it. Requires energy to keep from drifting off, drifting down, from being bored, from being depressed or being agitated even. There is a calming energy required. This is a factor that occurs most often in the Buddha's teachings. What makes you skillful in certain areas of life is not just effort but this kind of modulated effort where you apply just the right amount of effort to get the results that you need. Half the time we have to learn not to overdo it. The other half of the time we have to learn not to under do it. Somewhere right in the middle of that is right effort. The economy of motion, the economy of effort that brings the result we want. So we don't overexert accusing ourselves of being lazy, stupid and so forth. Put forth excess energy and cause ourselves to be agitated. On the other hand we don't just abandon it, don't just drift, nod off and so forth. We realize there is a kind of wakefulness, attentiveness that needs to be present all the time which requires a delivering of mental calories to the machine.
It seems it is more of an effort in the beginning. As with all crafts, as with all skills at the beginning it seems monumental efforts are needed. As we refine our technique there is less demand on effort when we become more skillful in how we deliver the effort, how we deliver the energy.
Initially even sitting for 25 min may be exhausting. But at some point your technique improves and the practice starts giving you back energy. Or you find that you can't neglect your practice because you then start to dwindle in energy. So it is an energy generating phenomenon. It is quite useful to think like that too. 'Ah, now I am going to sit down and charge my batteries. I really need to recharge. I have been draining my batteries worrying...subtle level of stress and concern and habitual grinding the tech and things like that. Now I am sitting down and let go of all that and allow the energy to come back to me.' The intention that you sit down with is quite important. You make energy and get energy. That is a paradox.
How do you get energy? How do you stirrup energy? What is it that stirs up energy?
One of the best ways is to get energetic.
It is very strange, isn't it? By making effort you get energy. By starting, energy feeds on itself. You put it in motion and it starts to increase on itself. The generating of effort produces energy.
I am sure you have experienced that in your l ife: When you need to get going the only way to manage it, is to start. Then once you start one thing leads to another and then you are into it. And then you think 'Hey, it wasn't so bad after all.' Learning to rouse energy and trusting that it feeds on itself. Once you start it up, it will come back to you. I am sure all of you know that from ordinary experience in life but we just forget. So far away. Don't forget that. Remember that.
37. அறிவும் மெய்ஞ்ஞானமும் Top
அறிவுக்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
மெய்ஞ்ஞானம் என்பது, எது முக்கியம் என்பதை உணர்ந்திருக்கும் நுண்ணறிவு. ஆனால் அறிவு எந்தக் கேள்விக்கும் விடையளிக்கும். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணும். மெய்ஞ்ஞானத்திற்கு எது தீர்வு காண வேண்டிய உண்மையான பிரச்சனை என்பது தெரியும். அதற்கு, மனம் பலதரப்பட்ட முக்கியமற்ற பிரச்சனைகளைப் பற்றியும் எண்ணமிடுகிறது என்பது தெரியும். 'இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதித்தால், எனது வேலையில் இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு இருக்குமானால், வேலையில் பதவி உயர்வு கிடைக்குமானால், என் வாழ்க்கைத் துணையை (ஆணோ பெண்ணோ) இந்த ஒருவிஷயத்தில் மட்டும் என்னைப் புரிந்து கொள்ளச் செய்து விட்டால்…...' இவை எல்லாம் இரண்டாம் பட்ச விஷயங்கள். மெய்ஞ்ஞானம் தான் இவை எல்லாம் தற்காலிக நிலைமைகள் என்றும், திரும்பத் திரும்ப வந்து போகும் பிரச்சனைகள் என்பதையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. இவை உங்கள் உண்மையான பிரச்சனைகளைத் தீர்க்காது.
உங்கள் உண்மையான பிரச்சனைகளுக்குப் பின் என்ன தான் தீர்வு? அது தான் மெய்ஞ்ஞானம் என்பது. அதற்கு உண்மையான பிரச்சனை என்னவென்று தெரியும். உண்மையான பிரச்சனை பற்று, பிணைப்பு, அறியாமை என்பவையே. இதற்குச் சரியான தீர்வு பற்றறுத்தல். அறியாமையின் முடிவு. 'இந்த அறம் மெய்ஞ்ஞானம் கொண்டவர்களுக்குத் தான்,' என்று சொல்வதன் பொருள் இதுதான்.
சாதாரண மனிதர்கள் தேடும் இடத்தில், தீர்வு இருக்கப் போவதில்லை. அவர்கள் எப்போதும் பிரச்சனையின் அறிகுறிகளையே சமாளிக்கப் பார்க்கின்றனர். பிரச்சனையின் துவக்கத்துக்குப் போவதில்லை. மெய்ஞ்ஞானம் துவக்கத்திற்கே போய் விடுகிறது. உங்கள் சக்திகளை வேர்களைக் களையப் பயன்படுத்துகிறது. கிளைகளை வெட்டுவதற்கும், அறிகுறிகளைச் சமாளிக்கவும் சக்தியை வீணாக்குவதில்லை.
What is the difference between intelligence and wisdom?
Wisdom is this qualitative sense of what is important. Whereas intelligence can address any question and can solve any problem. Wisdom knows which problem. We are realizing that our minds go to all kinds of secondary problems. Secondary things - if I can just get a bit more money, if I can just get more security in my job, if I can just get promoted, if I can just get my partner to understand one thing about me.. if.. if.. if. These are all secondary matters. Wisdom has to come back again and again and tell us, 'you know, those are all transient conditions, they come and they go. They won't solve your problems ultimately.'
What is the solution to the problem ultimately? And that is what wisdom is. It knows what the real problem is and what the real solution is. The real problem is attachment, craving, lack of understanding. And the real solution is the cessation of this attachment, this craving. The cessation of this non-knowing - ignorance. That is what wisdom is in this context - This dhamma is for the wise person. The solution is not where the ordinary person looks. They are always dealing with the symptoms. They are not looking at the real source of things. Wisdom is to go the source. Very source of things and to commit your energies to that rather than those secondary symptoms.
38. நிலா Top
நிலா பிராகாசமாகத் தோன்றுகிறது. கிலேசங்கள் - மாசுகள் - இல்லாத மனத்திற்கு இது ஒரு உவமானம். ஐந்து கிலேசங்களும் புகையும், புழுதியும் மேகக்கூட்டங்களையும் போல. அவை நிலவை மறைக்கின்றன. மனத்தில் மாசுக்கள் இல்லாத போது, வருத்தம் இல்லாதபோது, திறமையற்ற செயல்களின் விளைவுகள் இல்லாத போது, புகையும், புழுதியும் முகிற்கூட்டமும் இல்லாத போது சந்திரன் எப்படிப் பிரகாசிக்கிறதோ அதே போல மனமும் பிரகாசிக்கிறது. இந்த மனத்தின் பிரகாசிக்கும் இயல்பை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். புத்தர் இதுவே நமது இயற்கையான மன நிலை என்கிறார். இயற்கையாக மனம் பிரகாசிக்கும் தன்மை உடையது. திறமையற்ற நடத்தையால் தொந்தரவு செய்யப்படாத மனம், அவற்றால் உருவம் மாறாத மனம் பிராகாசிக்கும். சுமையில்லாமல், விடுபட்டு மகிழ்ந்திருக்கும்.
சிறு குழந்தைகளைப் பாருங்கள். அவர்களுக்கு வார்த்தைகளைப் பேசத் தெரிவதற்கு முன்னரே, சீலங்கள் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொள்வதற்கு முன்னரே, நகைச்சுவை என்றால் என்ன என்பதெல்லாம் தெரியும் முன்னரே அவர்கள் சிரித்துக் கொண்டும், முகத் தெளிவுடனும், பிரகாசமாகவும் இருக்கின்றனர். அது எப்படிச் சாத்தியமாகும்? சிந்திக்கத் தெரியாத வயதில், கருத்துக்கள், வார்த்தைகள் எதுவும் தெரியாத போதும் கூட எப்படிக் கள்ளம் கபடமில்லாமல் சிரிக்கின்றனர்? இல்லை, ஒரு நாள் முழுதும் கடின உழைப்புச் செய்தார்களா என்ன? தொட்டிலில் நாள் முழுவதும் கிடப்பது மட்டுமே அவர்கள் வேலை. உலகத்திற்குப் பயனுள்ளதாக ஒன்றும் செய்யவில்லை. அடுத்த உணவு எப்போது, எப்படிக் கிடைக்கும் என்று தெரியாது. எதுவும் தெரியாது. ஆனாலும் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறதே? ஏன்? காரணம் அவர்கள் மனம் அதன் இயற்கை நிலையிலேயே மாறுபடாமல் இருக்கிறது.
மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் ஏதும் தேவை இல்லை. ஒரு நாள் வேலையும் செய்யத் தேவையில்லை. பணம் சேர்த்திருக்க வேண்டியதுமில்லை. எதற்கும் வருத்தப் படுவதில்லை. அம்மா கொடுத்த தட்டைக் கீழே தட்டி விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. போட்டிருக்கும் துணியை ஈரப்படுத்தி அம்மாவுக்கு (அல்லது அப்பாவுக்கு) அதை மாற்ற வேண்டிய வேலை கொடுத்தாலும் அதனால் தொந்தரவு படுவதில்லை.
அதுபோலவே கெடுக்கப்படாத மனமும் பலவிதமான சாதனைகள் புரியவேண்டியதில்லை, எதையும் செய்ய வேண்டுமென்பதில்லை. மனம் இயற்கையாகவே பிரகாசிக்கும் இயல்புகொண்டது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதை மறைக்காமல் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
திறமையற்ற செயல் செய்வதைக் கட்டுப் படுத்த வேண்டும். அதற்குமேல் பெரும் முயற்சி எதுவும் செய்ய வேண்டியதில்லை. இந்த அடித்தலத்திலிருந்து இயற்கையாகவே அமைதி பிறக்கும்.
ஒரு சிலர் வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிக்கும் மனிதர்களைக் கண்டு அவர்களுக்கு உதவவில்லையே என்று கவலைப் படுவார்கள். வளர்ச்சியடையாத நாடுகளுக்குச் சென்று பணிபுரிவது, தெருவில் பிச்சைகாரர்களுக்கு உணவளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடா விட்டால் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்று நினைப்பார்கள். இவற்றை எல்லாம் செய்யாவிட்டாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு உரிமை உண்டு. உங்களால் முடியும் போது இந்த உதவிகளையெல்லாம் செய்யலாம். மனம் இலேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் போது இத்தகைய காரியங்களில் ஈடுபடுவது எளிது. இப்படி உதவி செய்வது உங்களுக்கும் பிடிக்கும். மேன்மையான கருணையோடு செய்யப்படும் செயல்கள் இவை. தானாகச் செய்கின்றீர்கள். மகிழ்ச்சியுடன் செய்கின்றீர்கள். எதையும் எதிர்பாராது செய்கின்றீர்கள். மேலும் குற்ற உணர்வோடும், போட்டி போட்டுக் கொண்டும் செய்யவில்லை.
மேலும் எல்லா நேரமும் நீங்கள் இந்தத் தருமச் செயல்களைச் செய்வதில்லை. ஏனென்றால் நீங்கள் செய்ய வேண்டிய மற்ற செயல்கள் பல இருக்கின்றன. மேலும் நமது மகிழ்ச்சி இவற்றைச் செய்வதால் தான் வருகிறது என்பது இல்லை. இதுபோல உதவுபவர் உலகில் பலரும் உள்ளனர். அவர்கள் அமைதியாகப் புன்னகையோடு சிரித்தவாறு உள்ளனர். மனம் இதை நம்பி இருப்பதில்லை.
நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், நன்மை தானாக வரும். நற் பேச்சும், நன்நடத்தை, நற்செயல், நல்லெண்ணம் அனைத்தும் தானாக வரும். திறமையற்ற எதையும் நாம் செய்யாத வரை மனத்தின் இயற்கையான பிரகாசிக்கும் இயல்பு வெளிப்படும்.
வாய்மையைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு எப்போதும் கிடைக்காது. ஏழைகளும் உதவி தேவைப் படுபவரும் எங்கும் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு எப்போதும் கிடைக்கப் போகிறது. ஆனால் பிரதிபலிக்க, தியானிக்க, சிந்திக்க வாய்ப்பு எப்போதும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. எனவே பயிற்சி செய்யும் வாய்ப்பு மிக அரிது. வாய்ப்புக் கிடைக்கும்போது பற்றிக் கொள்ளுங்கள். அது மிக முக்கியம்.
The Moon
Look at the moon shining. That is the simile for the mind when it is free of the hindrances. The 5 hindrances are like smoke and dust and clouds. Obscuring the moon and the mind. When it is free from the hindrances, free from remorse and disturbances that unskilful behaviour caused, it emerges like the moon free from all these things - free from smoke and mist and dust clouds. And it shines. That quality of the mind shining is something to be treasured. The Buddha pointed out that is the original nature or its basic nature is to shine. The mind when unharassed or not distorted by learned unskillful behaviour is just naturally very shiny light free happy.
You look at little children. Many of them, before they can formulate words before they can know what morality is before they know any of these things before they know what humour is, sometimes you see them chuckling away, smiling, eyes are shining, very happy. Why would they be happy if they don't know what, if they have no capacity to reason, if they have no ideas or words. Why would they be happy? They haven't done a good day's work. Lying in the crib all day long, not contributing to the world. Haven't the faintest idea when or where their next meal is coming from. Nothing. Just lying there but seem to be happy for some reason. Why? The reason is, that is the intrinsic nature of the mind, right there.
Doesn't need a reason. Doesn't have to have put in a good days work or have saved money or anything like that. By its nature when it is undisturbed the child is also not remorseful. It doesn't worry even though it may have knocked the bottle out of the crib one more time, made some work for mum (or dad) in terms of diapers. It is not disturbed by that.
So the mind in its nature when it is unmolested it doesn't need to have all kinds of accomplishments, it doesn't need to be doing anything. It is intrinsically shiny like that. All we have to do is not obscure it. That's all.
Restrain yourself from unwholesome things. Beyond that there is no need to make effort, quite naturally serenity will develop out of that base.
Some people will feel guilty if they are not out there helping people in the third world or feeding people in the street etc. As if they don't deserve to be happy if they are not doing that. You deserve to be happy even if you are not doing that. You can do that any time you feel like and you might. When you are light and happy it is very easy to do things like that. Not for any other reason than you feel like it. Enjoy it. That would be the highest type of charitable acts in the world. You do it spontaneously, cheerfully, joyfully and you don't expect anything back for it. And you don't do it out of guilt or drivenness.
And you don't do it all the time because there are lots of things to do. And happiness couldn't depend on those activities. There are many saintly people out there who are feeding the poor. They are sitting smiling to themselves quietly. The mind is not dependent on that. You don't have to rack up brownie points for anything like that.
If you are happy goodness will appear, right speech will appear, right action will appear, good thoughts will appear. We don't do anything that will injure the intrinsic shiny nature of the mind, cover the basic illumination of the mind and then we step back out of the way and let it shine.
Opportunity to understand the truth of things is is not always there. The poor are always there. You can avail yourself for that any time. But the opportunity to reflect, to meditate, to contemplate is not always there. Very precious.
39. மங்களம் Top
மங்கள் சூத்திரத்தை இங்கே படிக்கலாம்:
இன்றிரவு எது மங்களம் என்பது பற்றிய புத்தரின் போதனையை ஓதினோம். சில சமயங்களில் சில கருத்துக்கள் ஒன்றுக் கொன்று முரண்பட்டதாகத் தோன்றலாம். வாழ்க்கையில் நல்ல மனைவியும், குழந்தைகளும், கணவரும், உறவினருக்கு உதவுவதும், நல்ல வேலையில் இருப்பதும், நல்ல படிப்பும், நல்ல இடத்தில் வாழ்வதும் ஆசீர்வாதங்கள் என்றார் புத்தர். அதே சமயம் எளிமையாக வாழ்வதும், துறவு வாழ்க்கையும் வாழ்ந்து, நிப்பான நிலையை அடைவது ஆசீர்வாதம் என்றும் கூறுகிறார். இவை எல்லாவற்றையும் எப்படிச் செய்வது என்று நீங்கள் நினைக்கலாம். துறவியாகவும் இருந்து மனைவி மக்களையும் கவனிக்க முடியுமா? கேட்க நன்றாக இருந்தாலும், வேவ்வேறு திசைகளில் செல்லும் பாதைகள் அல்லாவா இவை? ஆனால் இந்தப் போதனையில் அவற்றிற்கான ஒரு ஒழுங்கு இருப்பதைக் கவனிக்கலாம். படிப்படியாக அவை நிறைவு பெறுவதையும் கவனிக்கலாம்.
முதலில் பெரும்பாலோரின் வாழ்க்கையில் உள்ள ஆசீர்வாதங்களைக் குறிப்பிடுகிறார். அதாவது குடும்ப வாழ்க்கையை ஒரு ஆசீர்வாதம் என்கிறார். பின் படிப்படியாக மேலான ஆசீர்வாதங்களை - எளிமை, துறவு இறுதியில் நிப்பாண நிலை போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். ஆகப் படிப்படியாக மேம்பட்ட மங்களங்களைக் குறிப்பிடுகிறார். இவை முரண்பட்டவையே அன்று. முற்போக்கான ஆசீர்வாதங்களே.
ஆக முதல் ஆசீர்வாதம் உங்கள் உற்சாகத்தைக் குறைக்கும் மக்கள் உங்களைச் சுற்றி இல்லாமலிருப்பது தான். இப்படிப் பட்டவரை நாம் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறோம் அல்லவா? நம் உற்சாகத்தைக் குறைக்கும், சலிப்பூட்டும், தவறான பாதையில் இட்டுச் செல்லும், தவறான கூட்டத்தோடு பழகும் நபரை நாம் சந்தித்திருக்கிறோம். இப்படிப் பட்டவரிடமிருந்து விடுதலை கிடைப்பதே பெரும் ஆசீர்வாதம். 'ஆகா, அத்தகைய சூழ்நிலையில் இப்போது நாம் இல்லாதது பெரும் பாக்கியம்,' என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். இல்லையா? இது போன்றவரிடம் உள்ள பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் போது மனம் பிரகாசிக்கிறது. அதே சமயம் மெய்ஞ்ஞானம் கொண்டவருடன் பழகுவது மிகவும் உற்சாகமூட்டப்படுவதும் ஒரு ஆசீர்வாதம் தான்.
குடும்ப வாழ்க்கையை ஒரு ஆசீர்வாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு ஆசீர்வாதமாக்கி விடுங்கள். ஒரு மனைவியோ, கணவனோ இருப்பது ஒரு ஆசீர்வாதம். அப்படி ஒரு துணை இருப்பதன் அனுகூலங்களை நினைத்துப் பாருங்கள். மற்றவரை கவனித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு. பெரும் பாரம் இல்லை. அப்படி நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல அனுபவமாக எடுத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியடையுங்கள். இவ்வாறு நினைத்துக் கொள்வது மனத்தை இலேசாக்கும். தெளிவாக்கும்.
மெய்ஞ்ஞனாம் உடையோரிடம் கேள்விகள் கேட்கத் தயங்க வேண்டாம். அதற்காக ஒரு விகாரைக்குச் செல்ல வேண்டும் என்றோ, புனித யாத்திரை செல்ல வேண்டும் என்பதோ தேவையில்லை.
அறத்தைச் சரியான நேரத்தில் கேட்க வேண்டும். அறத்தை விவரிக்கும் புத்தங்கங்களைப் படிக்க வேண்டும். இதற்காக நேரம் ஒதுக்குங்கள்.
அஜான் பாஸண்ணோ ஒருமுறை கூறினார். ஒரு நல்ல தம்மத்தைப் பற்றிய புத்தகம் எப்படிப்பட்டதாக இருக்குமென்றால் அதைப் படித்து முடிக்கவே முடியாததாக இருக்கும் என்றார். ஏனென்றால் அதைப் படிக்கும் போது அதில் படித்த ஒரு யோசனையை உடனே புத்தகத்தை ஒதுக்கி வைத்து விட்டு நடைமுறையில் பயில்வதற்குச் சென்று விடுவோம். யோசனை நல்லதாக நமக்குத் தோன்றுகிறது. அதை உடனே பயில வேண்டும் என்ற விருப்பம் நம்முள் தோன்றுகிறது. அத்தகைய புத்தகமே, சிறந்த அறம் பற்றிய புத்தகமாகும்.
படிப்படியாக மேலான மங்களங்களுக்குச் செல்கின்றன. இறுதியில் இவற்றை எல்லாம் முடித்தவர்கள் எவற்றாலும் தோற்கடிக்கப் படுவதில்லை. மேலும் எங்கு சென்றாலும் நன்மையையே சந்திக்கின்றனர். அதுவே அதிமேலான மங்களம். இது நிப்பாண நிலையைக் குறிக்கும்.
சம்சாரச் சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் நாம் இவற்றையெல்லாம் முடிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையின் மங்களம், குழந்தைகளின் மங்களம். துணையின் மங்களம், சுற்றத்தாருக்கு உதவுவது, நண்பர்களுக்கு உதவுவது. இவை எல்லாம் ஆசீர்வாதங்கள் தான். ஆனால் அனைத்து வேலைகளும் இன்னும் முடிக்கப்படவில்லை. மேலும் செய்ய வேண்டிய பல காரியங்கள் உள்ளன.
அறத்தைப் பிரதிபலிக்க வேண்டும், பின் மேலும் மேலான நிலை - துறவறம், பற்றுகளிலிருந்து விடுபடுதல், இறுதியில் ஞானம். எப்போதாவது ஒரு கணத்தில் நடைபெறும். ஆனால் அதுவரை நாம் உள்ள சூழ்நிலையை மங்களகரமானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை ஒதுக்கிவிட வேண்டாம், பாராட்ட வேண்டும். இவை தான் மேலும் மேன்மையான தியானத்தாலும் பெறக்கூடிய மனநிலைகளுக்கு அடித்தலமாக உள்ளன.
Blessings
Tonight we recited the great discourse on blessings. Sometimes it may appear a little self contradictory. Seems like it is a great blessing in life to have wives and children and spouses and children, husbands, helping your relatives, to have a good job, good education and live in the right place and this kind of thing. And then the Buddha says it is a great blessing to live austerely. A renunciant kind of life and attain nibbana. You wonder how you can do all those things? Can you be a monk and take care of your spouse and children? Sounds like great things to do but seems like going in different directions. But if you notice the structure of things it does go in a progressive way.
Basic blessings up through the type of lives that most people live i.e. the family type of life and then it goes up and up until eventually you come to renunciation and austerity and finally the realization of nibbana. So it is graded kind of thing there. They are not in contradiction to each other. They are progressive blessings.
So the very first blessing is not to be surrounded by really draining kind of people. That is a wonderful blessing. if you have been.. sometimes in your life surrounded by people who are foolish, draining, pulling your energies away, giving you bad direction, pointing in the wrong way bad associates, running with the wrong crowd - to be free of that, anybody who does get out of that situation they just think, 'it is a real blessing not to be in that'. We can fall in with the wrong crowd. And it is a real blessing to be out of that. That is the negative form. Be away from the fools. The mind shines from the relief it brings. And then on the positive side to be in the company of the wise is really very curing and inspiring and a great blessing.
Think of the family life as a blessing. Make it a blessing. It is a blessing to have a spouse, a partner to find the blessing in that. Reflect on what aspect of it is blessed. Take care of people. Not a onerous burden. Think of it that way. It can be a blessing. Make it a positive experience. So you can enjoy that. All of that will set you up for an increasing lightness, clarity of mind. And then don't hesitate to ask questions of the wise. Not necessary to go to a monastery or go on a pilgrimage. Listening to the Dhamma at the right time. Can be also reading. Set sometime aside to answer the questions on Dhamma. One way is to consult books.
Ajahn Passano once said the best kind of Dhamma books are the ones that you can't finish. Why? Because you want to rush off and practice. You are reading along and you can't keep reading. I got to try that. You put it down. That is the ideal Dhamma book.
The blessings go in a graded way. Finally it says, those who have fulfilled all of these are everywhere invincible they find well being every where. That is the blessing supreme. That is referring to the attainment of full enlightenment.
Unless you have fulfilled all of these somewhere in your samsaric journey you will not quite be finished. The blessings of a household life, the blessings of children, spouse, of doing good for your neighbours and your friends are certainly blessings. But you haven't fulfilled all of them yet. There are further things to do.
There is the inquiry into Dhamma and it goes higher and higher.. renunciation, things fall away until we come to the final stage. That inevitably must take place at some point. But in the mean time we count our blessings. Not to set them aside. appreciate them. Because they do lay the foundation for the higher states of mind that you can cultivate through meditation as well.
40. சீலத்தை நிலைநாட்டல் Top
இதனைப் புத்தர் அடிக்கடி கூறுவார்: 'சீலத்தைத் தூய்மையாக்கிய ஒருவர், அமர்ந்து தியானம் செய்து மனத்தை ஒருமுகப்படுத்தியபின் அறத்தைத் தெளிவாக்கிக் கொள்கிறார்.' அருமை! நொடியில் மூன்று செய்திகள்.
சீலத்தைத் தூய்மையாக்க எவ்வளவு காலம் எடுக்கும்? அதனைக் கெடுக்க எடுக்கும் அதே நேரம் தான் ஆகுமா? அதற்கு நீண்ட காலம் எடுக்குமே? ஆனால் ஒரு கை சொடுக்குப்போடும் நேரம் தான் ஆகுமாம். ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் எடுக்க வேண்டியதில்லை. ஒன்றைச் செய்யப் போவதில்லை என்ற தீர்மானம் எடுக்க வேண்டும். தெளிவாக நாம் திறமையற்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுக்கிறோம். அந்த முடிவை எடுத்த பின் அதனை ஒரு காலக் கட்டத்துக்குக் கடைப் பிடிக்கலாம். ஒரு நிமிடம் என்று முடிவெடுத்தால் அடுத்த ஒரு நிமிடத்துக்கு நீங்கள் சீலத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டிருப்பீர்கள். வெறுப்பு, பேராசையை அடுத்த நிமிடத்திற்கு விட்டு விடுகின்றீர்கள். யாருக்கும் தீங்கு செய்யப் போவதில்லை. நமது தகுதிக்குத் தகுந்தார்ப்போல எடுத்துக் கொள்கிறோம். அதை மீறி எடுக்காவிட்டால் (திருடா விட்டால்) தூய்மையைக் கடைப்பிடித்து விட்டோம். அவ்வளவுதான்.
சரியான நடத்தைக்கு உறுதி எடுத்துக் கொண்டு விட்டோம். அடுத்த பத்து நிமிடங்களுக்கு நாம் சமாளித்து விடலாம். அந்தப் பத்து நிமிடங்களில் மனம் அமைதி பெறும் வாய்ப்பு உண்டாகி விடுகிறது. ஏனென்றால் அந்தப் பத்து நிமிடத்தில் நாம் சீலத்தை நிலைநாட்டி விட்டோம்.
தியானம் செய்ய உட்காருமுன் இதைச் செய்யலாம். நான் இப்போது சீலத்தை நிலை நாட்டியிருக்கிறேன். என்னிடம் பகை உணர்வு இல்லை. எந்த உயிரையும் நான் கொல்லப் போவதில்லை, வதை செய்யப் போவதில்லை. கொடுக்காத எதையும் எடுக்கப் போவதில்லை. ஒரு போதும் மனத்தின் அமைதி கெடுமாறு எல்லை மீறி நடந்து கொள்ள மாட்டேன். அடுத்த சில நிமிடங்களுக்கு நான் குறை கூறப் படாத நிலையில் இருப்பேன். இவற்றுக்கு உறுதி செய்து கொள்ளுங்கள். மனம் இதில் ஆனந்தம் பெறட்டும். இதுதான் அமைதிக்கும் நிதானத்திற்கும் எளிதாகச் செல்லும் பாதை.
இதற்கு மாறாக, தியானம் செய்ய உட்காருமுன்,' அட இதோ மறுபடியும் 600 ஆவது முறையாக உட்காருகிறேன். இம்முறை என்னவாகுமோ?' என்று பழைய அனுபவங்களை நினைத்துக் கொண்டு உட்காரக் கூடாது. பழைய அனுபவம் நல்ல அனுபவமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த அனுபவத்தை இந்த முறை உட்காரும் போது மனத்தில் கொண்டுவர வேண்டாம். இது தான் முதல் முறை உட்காருவதாக நினைத்துக் கொள்ளுங்கள். மனத்தைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். சீலத்தைத் தூய்மையாக்கிக் கொண்டால் புத்தரின் போதனைப்படி ஒரு அளவு மன அமைதி உண்டாக வேண்டும். மனம் பாரமில்லாமலும், ஆனந்தத்துடனும் இருக்க வேண்டும். ஒரு குழந்தையைப்போல. ஒரு குழந்தை அனுபவமுள்ள தியானி அல்ல. பின் ஏன் என்னால் அந்தக் குழந்தையைப்போல மகிழ்ச்சியாக இருக்க முடியாது? பௌத்த திரிபிடகத்தை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆழமான கோட்பாடுகளைப் புரிந்திருக்க வேண்டியதில்லை. ஒரு குழந்தை எந்தக் காரணமும் இல்லாமல் புன்னகைக்கிறது, சிரிக்கிறதே! எந்தத் தீங்கும் செய்யாது இருக்கும் போது மனத்தின் இயல்பும் அதுபோலவே இருக்கும்.
Establishing virtue
This is one of the things that the Buddha says all the time. The person purified their virtue, sits down and meditates, attains concentration and then realizes the Dhamma. very nice. Three quick things. Just like that.
How long would it take to purify your virtue? Is it the same length of time it took to smudge it or make a mess of it? That would be a long time. But apparently it only takes a finger snap. Just that. It is not something you have to do. It is something you decide not to do. Purifying your virtue is you clearly decide not to act on unwholesome emotions. You can make that decision and maintain it a period of time. Just do it for a minute. For the next minute you are pure. You have given up ill will, greed for the time being and you are determined not to inflict any harm on other beings. Not to get more than you deserve and then you are pure. That is all there is to it. I have committed myself to correct behaviour I can probably manage it for the next ten minutes. For ten minutes I have the possibility of allowing the mind to be at ease having established virtue.
Before you sit down for meditation you can do that. I am now established in virtue. I have no ill will. I am not going to kill anything or harm any creature. not going to steal anything. There is nothing I will do that will make me cross boundaries that disturbs the mind. For the next while I am in a state of blamelessness. Commit myself to that. Allow the mind to delight in that. That is allowing an effortless flow into peace and serenity.
However If you sit down thinking, 'here we go again.. this is the 600th time.. wonder what will happen this time,' or referring to the past then you might be conditioning the experience you are about to have. So sit down as if it is the first time. Purify the mind and confidently assume that if I purify my virtue and according to the Buddha some state of tranquility should appear. States of lightness and joy should appear. Just like for a baby. The baby is not an experienced meditator. So why shouldn't I be able to do that without knowing all of the intricacies of dependent origination or having read the entire Buddhist Tripitaka or something like that. It does not require that. Child gurgles and smiles and chuckles for no particular reason. That is the nature of the mind when you are harmless.