Virtue
நற்பண்பு


144

Be careful about observing our precepts. Virtue is a sense of shame. What we have doubts about; we should not do or say. This is virtue. Purity is being beyond all doubts.

நல்லொழுக்கப் போதனைகளைக் கடைப்பிடிப்பதில் கவனமாக இருங்கள். நற்பண்பு என்பது அவமான உணர்ச்சியெனலாம்.நமக்கு சந்தேகமுள்ள எதையும் செய்யாமலோ அதைப் பற்றி எதுவும் சொல்லாமலோ இருப்பதே சரி. அதுவே நற்பண்பு. எத்தகைய ஐயத்திற்கும் அப்பாற்பட்ட நிலையே தூய்மையான நிலையாகும்.

145

There are two levels of practice. The first level forms the foundation, which is the development of virtue, the precepts, in order to bring happiness and harmony among people. The second level is the practice of Dhamma with the sole goal of liberating the heart. This liberation is the source of wisdom and compassion and is the true reason for the Buddha’s teaching. Understanding these two levels is the basis of true practice.

இரண்டு நிலைகளில் நாம் பயிற்சி பெறலாம். முதல் நிலை, நற்பண்பு மற்றும் நல்லொழுக்க உபதேசங்களை வளர்த்துக் கொண்டு மக்களிடையே மகிழ்ச்சியும் ஒற்றுமையும் உண்டாக்கும் அடித்தளமாகும். இரண்டாவது உள்ளத்துக்கு விடுதலை அளிக்கும் ஒரே நோக்கத்தோடு தரும வழியில் பயிற்சி பெறுவது. இந்த விடுதலைதான் நுண்ணறிவுக்கும் கருணைக்கும் ஆதாரம். புத்தரின் போதனைகளுக்கும் இவையே உண்மையான காரணம். இந்த இரண்டு நிலைகளையும் புரிந்து கொள்வதுதான் உண்மையான பயிற்சியின் அடிப்படையாகும்.

146

Virtue and morality are the mother and father of the Dhamma growing within us. They provide it with the proper nourishment and guidance.

நற்பண்பும் ஒழுக்கமும் நமக்குள் வளரும் தருமத்தின் தாயும், தந்தையும் ஆகும். அவை சரியான ஊட்டம் தந்து வழிகாட்டியாகவும் திகழ்கின்றன.

147

Virtue is the basis for a harmonious world in which people can live truly as humans and not as animals. Developing virtue is at the heart of our practice. Keep the precepts. Cultivate compassion and respect for all life. Be mindful in your actions and speech. Use virtue to make your life simple and pure. With virtue as a basis for everything you do, your mind will become kind, clear, and quiet. Meditation will grow easily in this environment.

நற்பண்பே முரண்பாடற்ற உலகிற்கு அடிப்படை. அத்தகைய உலகில் மனிதர்கள் உண்மையில் விலங்குகளைப்போல வாழாமல் மனிதத் தன்மையுடன் வாழ முடியும். நற்பண்பை வளர்த்துக் கொள்வதுதான் நமது பயிற்சியின் முக்கியப் பகுதியாகும். நல்லொழுக்கப் போதனைகளைக் கடைப்பிடியுங்கள். எல்லா உயிர்களிடத்தும் கருணையோடும் கண்ணியத்தோடும் நடந்து கொள்ளுங்கள். உங்கள் செயலிலும் பேச்சிலும் கவனம் செலுத்துங்கள். நற்பண்பைப் பயன்படுத்தி உங்கள் வாழ்வை எளிமையாகவும், தூய்மையாகவும் வைத்திருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் நற்பண்பின் அடிப்படையில் அமைந்தால் உங்கள் மனம் கருணையுடனும், தெளிவுடனும், அமைதியாகவும் இருக்கும். இத்தகைய சூழலில் தியானம் எளிதாக வளரும்.

148

Look after your virtue as a gardener takes care of his plants. Do not be attached to big or small, important or unimportant. Some people want shortcuts. They say, "Forget concentration, we’ll go straight to insight; forget virtue, we’ll start with concentration." We have so many excuses for our attachments.

தோட்டக்காரன் தன் செடிகளைப் பாதுகாப்பதைப்போல உங்கள் நற்பண்பை நீங்கள் பாதுகாக்க வேண்டும். பெரியதோ சிறியதோ, முக்கியமானதோ முக்கியமற்றதோ எதனுடனும் உங்களைப் பிணைத்துக் கொள்ளாதீர்கள். ஒரு சிலர் குறுக்கு வழியை விரும்புகிறார்கள். அவர்கள், "ஒரு முகப்படுத்துவதை மறந்து விடுங்கள், நாம் நேராக நுண்ணறிவுத் திறனுக்குச் செல்வோம்; நற்பண்பை மறந்து விடுங்கள், நாம் ஒரு முகப்படுத்துவதிலிருந்து ஆரம்பிப்போம்." என்றெல்லாம் கூறுவார்கள். நமது பிணைப்புகளுக்கு எவ்வளவோ காரணங்கள் வைத்திருக்கிறோம்.

149

Right effort and virtue are not a question of what you do outwardly but of constant inner awareness and restraint. Thus, charity, if given with good intention, can bring happiness to oneself and to others. But virtue must be the root of this charity for it to be pure.

சரியான முயற்சியும், நற்பண்பும் நாம் வெளிப்படையாக என்ன செய்கிறோம் என்பதைப் பொருத்ததல்ல; எப்போதும் நம் உள்ளத்தின் அறிவார்ந்த நிலையைத் தெரிந்து கொள்வதும், கட்டுப் பாட்டோடு இருப்பதும்தான். எனவே தருமம் வழங்கும்போது நல்ல எண்ணத்தோடு கொடுத்தால் அது நமக்கும் மற்றவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். இந்தத் தாராள மனப்பான்மை தூய்மையாக இருக்க வேண்டுமானால் அது நற்பண்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

150

The Buddha taught us to refrain from what is bad, to do good, and to purify the heart. Our practice, then, is to get rid of what is worthless and keep what is valuable. Do you still have anything bad or unskillful in your heart? Of course! So why not clean house? But true practice is not only getting rid of what is bad and cultivating the good. This is only part of it. In the end we must go beyond both good and bad. Finally there is a freedom that includes all and a desirelessness from which love and wisdom naturally flow.

புத்தர் நமக்குத் தீய செயல்களைத் தவிர்க்கவும், நல்லதைச் செய்யவும், உள்ளத்தைத் தூய்மைப் படுத்தவும் கற்றுத் தந்தார். எனவே நமது பயிற்சி பயனற்றவைகளை ஒதுக்கவும் பயனுள்ளவைகளைப் பாதுகாக்கவும் உதவ வேண்டும். உங்கள் உள்ளத்தில் இன்னும் தீங்கானவை அல்லது திறமையற்றவை எதேனும் உள்ளதா? ஆம், உள்ளது; அது உண்மைதான்! எனவே வீட்டை ஏன் நாம் சுத்தம் செய்யக் கூடாது? ஆனால் உண்மையான பயிற்சி தீமையைத் தவிர்ப்பதற்கு மட்டுமல்ல, நல்லவைகளை வளர்ப்பதற்கும் உதவ வேண்டும். இது அதன் ஒரு பகுதியே. இறுதியில் நாம் நல்லதையும், கெட்டதையும் தாண்டி அப்பால் போக வேண்டும். முடிவில் ஆசையற்ற நிலையில் அன்பும், நற்பண்பும் தானாகப் பொங்கும் ஒரு சுதந்திரத்தைக் காண்போம்.

151

We must start right here where we are, directly and simply. When the first two steps, virtue and right view, have been completed, then the third step of uprooting defilement will naturally occur without deliberation. When light is produced, we no longer worry about getting rid of the darkness, nor do we wonder where the darkness has gone. We just know that there is light.

நாம் இங்கேயே, இருக்கும் இடத்திலேயே நேரடியாகவும் தெளிவாகவும் தொடங்க வேண்டும். முதல் இரண்டு படிகளான நற்பண்பையும் சரியான நோக்கையும் முடித்த பிறகு, மூன்றாவது படியான தூய்மையைக் கெடுக்கும் செய்திகளை அகற்றுவது தானாக ஆழ்ந்த சிந்தனை இல்லாமலே நடைபெறும். வெளிச்சம் உண்டாக்கியபின் இருளைப் போக்கக் கவலைப்படவேண்டியதில்லை. இருட்டு எங்கே போனது என்று ஆச்சரியப்படவும் வேண்டியதில்லை. வெளிச்சம் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டாலே போதும்.

152

Following the precepts has three levels. The first is to undertake them as training rules given to us by our teachers. The second arises when we undertake and abide in them by ourselves. But for those at the highest level, the Noble Ones, it is not necessary to speak of precepts, of right and wrong. This true virtue comes from wisdom that knows the Four Noble Truths in the heart and acts from this understanding.

நல்லொழுக்க உபதேசங்களைத் தொடர்வதில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதற் கட்டத்தில் அவை நமது ஆசிரியர்களால் நமக்கு தரும் பயிற்சி விதிகள் என்பதால் அதன் படி நடக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில் நாமே உறுதி எடுத்துக்கொண்டு அதன் வழி நடக்க வேண்டும். மிக உயர்ந்த கட்டத்திலிருப்பவர்களுக்கு, மேன்மையான வர்களுக்கு, நல்லொழுக்க உபதேசங்களைப்பற்றியோ, இது சரி அல்லது தவறு என்று கூறுவதோ தேவையற்றதாகும். இந்த உண்மையான நற்பண்பு நான்கு மேலான உண்மைகளைப் புரிந்தவர்களுக்கு இருக்கும் நுண்ணறிவினாலும் அதன்படி நடந்து கொள்வதாலும் வருகிறது.

153

Some monks disrobe to go to the front where bullets fly past them every day. They prefer it like that. They really want to go. Danger surrounds them on all sides and yet they’re prepared to go. Why don’t they see the danger? They’re prepared to die by the gun but nobody wants to die developing virtue. This is really amazing, isn’t it?

சில துறவிகள் துறவறத்தைக் கைவிட்டுப் போர்முனைக்குச் செல்கிறார்கள் (அது வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த சமயம்). துப்பாக்கிக் குண்டுகள் தினந்தோறும் அவர்களை உரசிப் பறந்து செல்கின்றன. அந்தச் சூழலையே அவர்கள் விரும்புகிறார்கள். போர்முனைக்குச் செல்வதையே அவர்கள் விரும்புகிறார்கள். ஆபாயம் சூழ்ந்துள்ள நிலையிலும் அவர்கள் அங்கு போகத் தயாராகிறார்கள். அங்குள்ள அபாயத்தை அவர்கள் ஏன் பார்ப்பதில்லை? துப்பாக்கியால் சாவதற்குத் தயாராக இருக்கிறார்கள்; ஆனால் நற்பண்பை வளர்த்துக் கொண்டு சாக யாருக்கும் விருப்பம் இல்லை. உண்மையில் இது திகைப்பாக இருக்கிறது, இல்லையா?