அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko
அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்


தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
தணிசாரோ பிக்கு
Compiled and Translated by
Thanissaro BhikkhuMind What You Eat 
உண்பதில் கவனம் வேண்டும்§ "We human beings have long tongues, you know. You sit around and suddenly your tongue flicks out to sea: You want to eat seafood. Then it flicks around the world: You want to eat foreign cuisine. You have to train your tongue and shrink it down to size."

    மனிதராகிய நமக்கு நாவு நீளம், தெரியுமா? நீங்கள்   ஓர் இடத்தில் உட்கார்ந்திருக்கையில் திடீரென்று உங்கள் நாக்கு கடற்கரை வரை நீண்டு விடுகிறது: மீன் சாப்பிடவேண்டும் என்று தோன்றுகிறது. பின் உலகமெல்லாம் நீள்கிறது: வெளிநாட்டு உணவு சாப்பிடத் தோன்றுகிறது. எனவே நீங்கள் நாக்கைப் பயில்வித்து அதைச் சரியான அளவுக்குச் சுருக்கிக் கொள்ள வேண்டும்.

§ "When you eat, keep your mind on your breath, and contemplate why you're eating. If you're eating simply for the taste of the food, then what you eat can harm you."

    "உண்ணும் போது, மனத்தை மூச்சின் மேல் கவனம் செலுத்தச் செய்ய வேண்டும். எதற்காக உண்கிறோம் என்று பிரதிபளிக்க வேண்டும். உணவின்  சுவைக்காக மட்டுமே சாப்பிடுவோமானால், நாம் சாப்பிடும் உணவு நமக்குத் தீமையை விளைவிக்கலாம்."

§ After his trip to America, one of his students asked him if he had had a chance to eat pizza while he was there. He mentioned that he had, and that it was very good. This surprised one of his students who had gone along on the trip. "You ate only two bites," he said. "We thought you didn't like it."
"Two bites were enough to fill me up," he answered. "Why would you want me to eat more?"

    அமெரிக்கா சென்று திரும்பிய, அஜான் ஃபுவாங்கை அவரது மாணவர் ஒருவர் அங்கு பீஸ்ஸா (pizza) சாப்பிடும் வாய்ப்புக் கிடைத்ததா என்று கேட்டார். அதற்கு அவர் தான் பீஸ்ஸா சாப்பிட்டதாகவும், அது சுவையாக இருந்ததாகவும் கூறினார். இதைக் கேட்ட அவருடன் அமெரிக்கா சென்று வந்த மற்றொரு மாணவருக்கு ஆச்சரியம். "நீங்கள் இரண்டு வாய் மட்டும் தான் உண்டீர்கள். உங்களுக்கு அது பிடிக்கவில்லை என்று நான் நினைத்தேன்," என்றார்.

    "இரண்டு வாய் என் வயிற்றை நிரப்பி விட்டது. அதன் பின் நான் மேலும் சாப்பிட வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்?," என்றார் அஜான் ஃபுவாங்.

§ Once a woman who had been studying with him for only a short while decided to prepare some food to donate to him. Wanting to make sure it would be something he liked, she asked him straight out, "What kind of food do you like, Than Phaw?"
His answer: "Food that's within reach."

    ஒரு முறை அஜான் ஃபுவாங்கிடம் கொஞ்ச நாட்களுக்கு முன் பயிற்சி பெற வந்திருந்த ஒரு பெண் தன் கையால் உணவு சமைத்து அவருக்குப் படைக்க விரும்பினார். சமைக்கும் உணவு அவருக்குப் பிடித்த உணவாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் அவரிடம் நேரடியாக "ஐயா,  உங்களுக்கு எப்படிப்பட்ட உணவு பிடிக்கும்?" என்று கேட்டார்.

    அவர் பதில், "கைக்கு எட்டக்கூடிய உணவு."

§ It was a Friday evening, and a group of Ajaan Fuang's students were riding in the back of a pickup truck on their way from Bangkok to Wat Dhammasathit. Another student had sent a bushel of oranges along with them to donate to the monks at the wat, and after a while on the road one of the students decided that the oranges looked awfully good. So he came up with the following argument: "We're Than Phaw's children, right? And he wouldn't want us to go hungry, right? So anyone who doesn't have an orange isn't a child of Than Phaw."
Some of the group were observing the eight precepts, which forbid eating food after noon, so they were able to slip through the net. Everyone else, though, helped him or herself to the oranges, even though a few of them felt bad about eating food intended for the monks.
When they arrived at the wat, they told Ajaan Fuang what had happened, and he immediately lit into them, saying that anyone who takes food intended for monks and eats it before it has been given to the monks is going to be reborn as a hungry ghost in the next life.
This scared one woman in the group, who immediately responded, "But I only ate one section!"
Ajaan Fuang replied, "Well, if you're going to be a hungry ghost, you might as well eat enough to fill yourself up while you can."

    அது வெள்ளிக்கிழமை மாலை நேரம். அஜான்  ஃபுவாங்கின் மாணவர்கள் ஒரு டெம்போ போன்ற வண்டியின் பின்னால் அமர்ந்து பாங்காக் நகரிலிருந்து வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வேறொரு மாணவர் ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களைத் துறவிகளுக்காகக் கொடுத்தனுப்பியிருந்தார். சிறிது நேரம் சென்ற பின் அந்த ஆரஞ்சுப் பழங்களின் மீது கண் வைத்திருந்த ஒருவருக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.  எனவே அவர் இவ்வாறு கூறினார்: "நாம் எல்லாம் ஐயாவின் மக்கள், தானே? அவர் நாம் பசியோடு இருப்பதை விரும்ப மாட்டார், அல்லவா? எனவே ஆரஞ்சு பழத்தைச் சாப்பிடாதவர்கள் அவரது பிள்ளைகள் இல்லை."

    வந்தவர்களில் சிலர் எட்டு சீலங்களை (ஒழுக்கங்களை) அன்றைக்கு நேர்ந்திருந்ததால், அதன் காரணமாக மதியத்திற்குப் பின் உணவருந்தக் கூடாது என்ற தடை இருந்ததால், முதலாமவர் போட்ட வலையிலிருந்து தப்பித்துக் கொண்டனர். மற்றவர் எல்லோரும், ஆண்களும், பெண்களும் ஆரஞ்சுப் பழங்களை எடுத்து உண்டனர். பின் அவர்களுள் ஒரு சிலருக்குத் துறவிகளுக்குக் கொடுக்கப்பட்ட உணவை தாங்கள் அருந்தியதில் மன வருத்தம் உண்டானது.

    விகாரைக்கு வந்த பின் அவர்கள் அஜான்  ஃபுவாங்கிடம் நடந்ததைச் சொன்னார்கள். அவர் உடனே அவர்களைக் கடுமையாக விமர்சித்து,  துறவிகளுக்குக் கொடுக்கப்பட்ட உணவை அவர்களுக்கு அளிப்பதற்கு முன்னர் யாரெல்லாம்  உண்டார்களோ அவர்கள் அடங்காப் பசி கொண்ட பூதமாக மறுபிறப்பெடுப்பார்கள் என்றார்.

    இதைக்கேட்டுப் பயம் கொண்ட ஒரு பெண் உடனே, "ஆனால் நான் ஒரு சுளை மட்டுமே உண்டேன்," என்றாள்.

    அஜான் ஃபுவாங் இவ்வாறு பதிலளித்தார்: "சரி, அடுத்தபிறப்பில் அடங்காப் பசி கொண்ட பூதமாக பிறக்கப் போவதென்றால் வாய்ப்புக் கிடைக்கும் போது வயிறு முட்டச் சாப்பிட்டு விட வேண்டியதுதான்."

§ During the Rains Retreat in 1977 a couple from the town of Rayong came out to the wat almost every evening to practice meditation. The strange thing about them was that whatever happened in the course of their meditation would tend to happen to both of them at the same time.
On one occasion they both found that they couldn't eat, because they were overcome by a sense of the filthiness of food. This lasted for three or four days without their getting weak or hungry, so they began to wonder what stage they had reached in their meditation.
When they mentioned this to Ajaan Fuang on their next visit to the wat, he had them sit in meditation, and then told them. "Okay, contemplate food to see what it's made of. Elements, right? And what's your body made of? The very same elements. The elements in your body need the elements in food in order to keep going. So why get all worked up about the filthiness of food? Your body is even filthier. When the Buddha teaches us to contemplate the filthiness of food, it's so that we can get over our delusions about it — not so that we won't be able to eat."
That ended their inability to eat food.

    1977 ஆம் ஆண்டு மழைக்காலச் சங்கமத்தின் போது (மழைக்காலத்தில் துறவிகள் ஒரே இடத்தில் தங்கி இருப்பது புத்தர் காலத்திலேயே துவங்கிய பழக்கம்) ரயாங் நகரிலிருந்து ஒரு தம்பதியர் தினந்தோரும் மாலையில் தியானம் பயில்வதற்காக விகாரைக்கு வந்தனர். என்ன விசித்திரம் என்றால் தியானத்தின் போது என்ன நடந்தாலும் அந்த அனுபவம் அவ்விருவருக்கும் ஒரே சமயத்தில் நடக்கும்.

    ஒரு சமயம் இருவராலும் உணவை உட்கொள்ள முடியவில்லை. ஏனெனில் இருவருக்குமே உணவு அசுத்தமானதாகத் தோன்றியது. இது மூன்று, நான்கு நாட்களுக்குத் தொடர்ந்தும் அவர்கள் உடல் நிலையைப் பாதிக்கவில்லை. அவர்களுக்குப் பசியும் எடுக்கவில்லை, அவர்கள் பலவீனமாகவும்  உணரவில்லை. இதனால் தங்கள் தியானத்தில் எதேனும் ஒரு மேலான நிலையை அடைந்து விட்டிருக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்தது.

    அடுத்த முறை விகாரைக்கு வந்த போது இந்த அனுபவத்தை அஜான் ஃபுவாங்கிடம் கூறினார்கள்  அவர் அவர்களைத் தியானத்தில் அமரச் செய்து இவ்வாறு கூறினார்: "சரி, உணவைப் பிரதிபளித்துப்  பாருங்கள். அது எதனால் உண்டானது? பூதங்களால் அல்லவா? (பூமி -கெட்டித்தன்மை, நீர் - திரவத்தன்மை, காற்று, வெப்பம் என்ற பூதங்கள்)  உங்கள் உடல் எதனாலானது? அதே பூதங்களால் தானே. உயிர் வாழ உடலில் உள்ள பூதங்களுக்கு உணவில் உள்ள பூதங்கள் தேவைப்படுகிறது. எனவே உணவை அசுத்தமானதென்று நினைத்து ஏன் சஞ்சலப்பட வேண்டும்? உங்கள் உடல் அதைவிட அழுக்குக் கொண்டது. புத்தர் உணவின் அசுத்தங்களைப் பிரதிபளிக்கச் சொல்கிறாரென்றால் நாம் அதன் மீது கொண்டுள்ள மோகத்தை நீக்கத்தான் - உணவை உண்ணாமல் இருப்பதற்காக இல்லை."

    அத்தம்பதியருக்கு சாப்பிடமுடியாமல் இருந்த பிரச்சனை அத்தோடு தீர்ந்தது.

*    *    *    *    *    *