சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 3.5
மாக சூத்திரம் - தானம் செய்வது பற்றி மாகருக்குத் தந்த போதனை
Māgha Sutta - To Māgha on Giving
Translated from the Pali by: Laurence Khantipalo Mills
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: லாரண்ஸ் காந்திபாலோ மில்ஸ்
* * *
இவ்வாறு நான் கேள்வியுற்றேன்:
ஒருமுறை பகவர் ராஜகிருகத்தில் பிணந்தின்னிக் கழுகு முகட்டு மலையில் எழுந்தருளியிருந்தார். அப்போது இளைய பிராமணரான மாகர் பகவரைச் சந்தித்து வணங்கி வாழ்த்துப் பரிமாற்றஞ் செய்து கொண்டார். பின் ஒருபுறமாக உட்கார்ந்து புத்தரிடம் அவர்:
"கோதமரே, நான் நன்கொடை வழங்குபவன், யாரேனும் உதவி கேட்டால் மகிழ்வோடும், தாராளமாகவும் நன்கொடை தருவேன். சரியான முறையில் பெற்ற, சேர்த்த செல்வத்தை, அறவழி பெற்ற செல்வத்தை ஒருவருக்கு, இருவருக்கு, பத்து, இருபது ஏன் நூறு பேருக்கும் அதைவிட அதிகமானோருக்கும் தருவதுண்டு - ஆக அண்ணல் கோதமரே இவ்வாறு நான் செய்யும் தானம் எனக்குப் புண்ணியம் சேர்க்குமா?"
"கண்டிப்பாக, பிராமணரே, இவ்வாறு செய்யும் தானம் உங்களுக்குப் புண்ணியம் சேர்க்கும். உதவி கேட்போருக்கு மகிழ்வோடும், தாராளமாகவும் நன்கொடை தருவோர், சரியான முறையில் பெற்ற, சேர்த்த செல்வத்தை, அறவழி பெற்ற செல்வத்தை ஒருவருக்கு, இருவருக்கு, பத்து, இருபது, நூறு பேருக்கும் அதைவிட அதிகமானோருக்கும் தருவது - அவ்வாறு செய்யும் தானம் பெரும் புண்ணியம் சேர்க்கும்."
பின் இளைய பிராமணரான மாகர் பகவரிடம் செய்யுள் வடிவில் இவ்வாறு கூறினார்:
Thus have I heard:
At one time the Radiant one dwelt at Rājagaha on the Vulture Peak Mountain. Then the young brahmin Māgha went to the Radiant One and exchanged greetings with him. When this courteous and amiable talk was finished, he sat down to one side and spoke thus to the Radiant One:
“Master Gotama, I am certainly a donor, one who is generous and glad to comply with others’ requests. From wealth sought rightly, obtained rightly, acquired in accordance with Dharma, I give to one, two, ten, twenty, a hundred or even more—so do I, Master Gotama giving and bestowing in this way accrue much merit?”
“Certainly young brahmin, giving and bestowing in this way you accrue much merit. If anyone is a donor, one who is generous and glad to comply with others’ requests from wealth sought rightly, obtained rightly, acquired in accordance with dharma and given to one, two, ten, twenty, a hundred or even to more, that one accrues much merit.”
Then the brahmin youth Māgha addressed these verses to the Radiant One:
Māgha
I ask the world-knower Gotama
who wanders homeless clad in kāsāya cloth:
One glad to comply with others’ requests,
a generous giver, one living at home,
a seeker of merit, desirer of merit,
who to other as sacrifice gives food and drink —
how would such offerings be purified by this?
மாகர்
காவி உடை அணிந்து, வீடு துறந்து அலையும்
உலகம் அறிந்த கோதமரைக் கேட்கிறேன்:
மற்றவர் வேண்டுகோளுக்கு மகிழ்ச்சியோடு இணங்கும்
தயாள குணமுடைய இல்லறத்தார்,
புண்ணியம் தேடுவோர், புண்ணியம் சேர்க்க விரும்புவோர்,
காணிக்கையாக மற்றவருக்கு உணவும் பானமும் தருவோர் -
அப்படித் தரப்படும் காணிக்கைகள் எவ்வாறு தூய்மைப்படும்?
Buddha
One glad to comply with others’ requests,
a generous giver, one living at home,
a seeker of merit, desirer of merit,
who to others as sacrifice gives food and drink
achieves his results through those worthy of gifts.
புத்தர்
மற்றவர் வேண்டுகோளுக்கு மகிழ்ச்சியோடு இணங்கும்
தயாள குணமுடைய இல்லறத்தார்,
புண்ணியம் தேடுவோர், புண்ணியம் சேர்க்க விரும்புவோர்,
காணிக்கையாக மற்றவருக்கு உணவும் பானமும் தருவோர் -
காணிக்கை பெறத் தகுதியானவர்களால் தமது நோக்கத்தை அடைவார்.
Māgha
One glad to comply with others’ requests,
a generous giver, one living at home,
a seeker of merit, desirer of merit,
who to others as sacrifice gives good and drink—
Sir, who are the gift-worthy,
please speak about that.
மாகர்
மற்றவர் வேண்டுகோளுக்கு மகிழ்ச்சியோடு இணங்கும்
தயாள குணமுடைய இல்லறத்தார்,
புண்ணியம் தேடுவோர், புண்ணியம் சேர்க்க விரும்புவோர்,
காணிக்கையாக மற்றவருக்கு உணவும் பானமும் தருவோர் -
அத்தகைய காணிக்கைகளைப் பெறத் தகுதியானவர் யார் ஐயா?
அதைப் பற்றிக் கூறுங்கள்.
Buddha
Those truly who fare unattached in the world,
own nothing, perfected, they’re self-controlled,
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
புத்தர்
உண்மையிலேயே பற்றற்று உலகில் வாழ்பவர்,
எதற்கும் சொந்தம் கொண்டாடாதவர், முழுமையானவர், தன்னடக்கத்துடன் நடந்து கொள்பவர்:
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
Who all the fetters and bonds have cut off,
tamed are they, freed, with no troubles or hopes,
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
சுமைகளையெல்லாம் இறக்கியவர்,
அடங்கியவர், விடுவிக்கப்பட்டவர், பிரச்சனையும் எதிர்பார்ப்பும் இல்லாதவர்:
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
Who from all fetters are released,
tamed and freed, with no troubles or hopes,
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
கட்டுகளிலிருந்து விடுபட்டவர்,
அடங்கியவர், விடுவிக்கப்பட்டவர், பிரச்சனையும், எதிர்பார்ப்பும் இல்லாதவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
Passion and hatred, delusion—let go,
exhausted the inflows, lived the God Life,
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
அவாவும், வெறுப்பும், அறியாமையும் - விட்டவர்,
புறபாதிப்புகள் இல்லாதவராக, மேன்மையான வாழ்க்கை வாழ்ந்தவர், [1]
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
In who lurks neither deceit nor conceit,
greed-free, unselfish, trouble-free too,
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
வஞ்சனையும், அகம்பாவமும் இல்லாதவர்,
பேராசை இல்லாதவர், சுயநலமில்லாதவர், பிரச்சனை இல்லாதவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
Those free of greed, unselfish, without desire,
with inflows exhausted, the Good Life completed,
to them would a brahmin on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
அவா அற்றவர், சுயநலமில்லாதவர், ஆசை இல்லாதவர்,
புறபாதிப்புகள் இல்லாதவர், புனித வாழ்வில் செய்யவேண்டியதைச் செய்து முடித்தவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
They who to cravings have not succumbed,
the flood overcrossed they unselfishly fare,
to them would a brahmin on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
வேட்கைக்கு இடம் கொடாதவர்,
வெள்ளத்தைத் தாண்டியபின் சுயநலமில்லாமல் வாழ்பவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
But those with no cravings at all in the world
for being this, being that, now or afterwards,
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
இத்தகைய வாழ்வு வேண்டும், அத்தகைய வாழ்வு வேண்டும்,
இப்போதோ அல்லது வருங்காலத்திலோ என்ற உலக விருப்பங்கள் இல்லாதவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
They who fare homeless, sense-pleasures let go,
themselves well-restrained, as shuttle flies straight,
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
வீடு துறந்தவர், புலன் இன்பங்களை விட்டவர்,
தன்னடக்கம் உள்ளவர், நெசவுநாடா நேராகச் செல்வதுபோல நேர்மையுள்ளவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
Those passion-free, their faculties restrained,
as the Moon from the grip of Rāhu released,
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
ஆசை இல்லாதவர், இந்திரியங்களை அடக்கியவர்,
ராகு (என்ற அசுரனின்) பிடியிலிருந்து விடுபட்ட நிலவைப்போல,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
Those who are calm, passion gone, anger-free,
who here have given up all places to go,
to them would a brahmin on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
அமைதியுடனும், அவா விட்டவராகவும், கோபமற்றவராகவும்,
இங்கும் அங்கும் போக வேண்டும் என்ற எண்ணங்களில்லாதவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
Who’ve birth and death abandoned—nothing left
and all unsettling doubts have overcome,
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
பிறப்பையும், இறப்பையும் கைவிட்டவர் - கைவிட வேறு ஏதும் இல்லாதவர்,
எல்லா ஐயங்களையும் தீர்த்துக் கொண்டவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
With themselves as an island they fare in the world,
own nothing and everywhere utterly freed
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
தாமே தமக்கு ஒரு தீவாக உலகில் வாழ்பவர், [2]
எதற்கும் சொந்தம் கொண்டாடாமல் முழுமையான சுதந்திரத்துடன் இருப்பவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
Those who Know here as really it is—
“This is the last, no more being to come”—
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
இதன் கருத்தைத் தெளிவாக உணர்ந்தவர்கள் -
"இதுவே கடைசி (பிறப்பு), இனிமேல் தோன்றப் போவதில்லை" -
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
The mindful in holy words learned, who in jhāna delight,
won to Awakening, the refuge of many,
to them would a brahmin, on merit intent,
sacrifice at the right time and oblations bestow.
கேட்ட தன்மத்தை மனத்தில் பொதிந்து, தியான நிலைகளில் ஆனந்தப் படுவோர்,
ஞானம் பெற்றவர், பலருக்குப் புகலிடம் தருபவர்,
அப்படிப்பட்டவருக்குப் புண்ணியம் தேடும் ஒரு பிராமணன்
சரியான நேரத்தில் காணிக்கை செலுத்தவும், உபசரிக்கவும் வேண்டும்.
Māgha
My question truly was not in vain
for the Radiant has spoken of gift-worthy ones.
This indeed you Know as it really is,
for certainly this Dharma’s Known to you.
மாகர்:
ஐயா, நான் கேட்ட கேள்வி வீண்போகவில்லை.
காணிக்கை செலுத்தற்கு உரியோர் யார் என்பதைப்பற்றிப் பகவர் கூறியுள்ளீர்.
அவர்கள் எப்படிபட்ட பண்புகளுடையவர் என்பதை உள்ளது உள்ளபடி கூறியுள்ளீர்கள்
இந்த வாய்மையை நீங்களே கண்டுள்ளீர்கள்.
One glad to comply with others’ requests,
a generous giver, one living at home,
a seeker of merit, desirer of merit,
who to others as sacrifice gives food and drink,
tell me, O Radiant, the success of such sacrifice.
மற்றவர் வேண்டுகோளுக்கு மகிழ்ச்சியோடு இணங்கும்
தயாள குணமுடைய இல்லறத்தார்,
புண்ணியம் தேடுவோர், புண்ணியம் சேர்க்க விரும்புவோர்,
காணிக்கையாக மற்றவருக்கு உணவும் பானமும் தருவோர் -
அதனைத் தருவதால் எவ்வாறு
அவர்களுக்கு நற்பலன் கிடைக்கும்?
Buddha
Do you sacrifice! But during this sacrificial act,
make your mind happy all of the time;
for the sacrificiant, this sacrifice is the base,
established in this one is rid of all faults.
புத்தர்:
காணிக்கை செலுத்துவீராக!
ஆனால் காணிக்கை செலுத்தும் போது உள்ளத்தை
மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும், திருப்தியோடும் வைத்திருங்கள்.
இவ்வாறு முழுமன நிறைவுடன் தானம் செய்வோரின் வாழ்வில் குறைகள் இருக்காது.
One with passions gone would other faults restrain,
developing boundless mettā-mind, in this,
continuously diligent by day and by night,
suffusing all directions boundlessly.
மனத்தில் பேராசைகளைப் பொங்க விடாமல் வெறுப்பைக் களைந்து
அல்லும் பகலுமாகத் தொடர்ந்து கவனித்தவாறும், விழிப்புடனும்
எல்லையற்ற நட்புணர்வை மனத்தில் தேக்கி வளர்த்து வந்தால் அ
ந்த அன்பு எல்லாத் திசைகளிலும் பல்கிப் பெருகும்.
Māgha
Who can be cleansed, released and Awakened?
With what does the self to the Brahma-world go?
O Sage, when asked reply to me—one who doesn’t know—
for the Radiant I’ve seen with my eyes as Brahmā today
and it’s true that you’re the same as Brahmā for us.
In the Brahma-world,
how does one arise, O Refulgent One?
மாகர்
ஐயா, யார் தூய்மையடைந்து, விடுவிக்கப்பட்டு, விழிப்புற முடியும்?
பிரம்ம-உலகிற்கு (சொர்க்கத்திற்கு) நாமாக எப்படிச் செல்வது?
ஓ ஞானத்தில் சிறந்தவரே எனது கேள்விக்குப் பதில் கூறுங்கள். - எனக்குத் தெரியவில்லை -
நான் இன்று பிரம்மனை உங்கள் வடிவில் பார்த்தேன். பகவரைப் பார்த்தது பிரம்மனைப்
பார்த்தது போலவே - இது உண்மை! பிரம்ம-உலகில் ஒருவர் எப்படித் தோன்றுவது, பகவரே?
Buddha
The sacrificiant who achieves triple success in sacrifice,
achieves their results through such gift-worthy ones;
so perfected in sacrifice
and complying with others’ requests,
that one arises, I say, within the Brahma-world.
புத்தர்
தகுதியானவருக்குத் தானம் கொடுத்து முடிப்பதனால்
காணிக்கை செலுத்துபவர் மூன்று பண்புகளை வளர்த்து வெற்றிகொள்கிறார் [3]
இவ்வாறு கொடுத்து முடித்த காணிக்கை தருவதில் திறமைசாலி, மற்றவர் வேண்டுகோளைப் பூர்த்தி செய்பவர்,
பிரம்ம-உலகில் தோன்றுவார் என்கிறேன்.
When this was said the young brahmin Māgha said to the Radiant One: “Magnificent, Master Gotama! The Dharma has been clarified by Master Gotama in many ways, as though he was righting what was overthrown, revealing what was hidden, showing the way to one who was lost, or holding a lamp in the dark so that those with eyes can see forms. I go for Refuge to Master Gotama, to the Dharma and to the Saṅgha. May Master Gotama remember me as a layman who from today has Gone for Refuge for life.
கௌதமர் இதைச் சொன்னவுடன் இளைய பிராமணரான மாகர் புத்தரிடம் சொன்னார்: "அருமை ஐயா கௌதமரே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரும் - பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கியுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். இன்றிலிருந்து என் வாழ்நாள் முடியும் வரை கௌதமர் என்னை அவரிடம் அடைக்கலம் சென்ற இல்லற சீடராக நினைவில் கொள்வாராக."
* * *
விளக்கம்:
[1] " exhausted the inflows "
Just like a lake with spring-water welling up from within, having no inflow from the east, west, north, or south, and with the skies supplying abundant showers time & again, so that the cool fount of water welling up from within the lake would permeate & pervade, suffuse & fill it with cool waters, there being no part of the lake unpervaded by the cool waters;
http://www.accesstoinsight.org/lib/study/khandha.html
“Of one knowing thus and seeing thus, his mind [citta] is liberated from the inflows or intoxicants of sensuality, his mind is liberated from the inflows or intoxicants of being, his mind is liberated from the inflows or intoxicants of ignorance.” http://www.accesstoinsight.org/tipitaka/an/an04/an04.010.niza.html
[2] Dhammapada 236, 238 தம்மபதம்
ஆகவே உன்னைத் தீவு போல் (அரண்) செய்து கொள். ஊக்கமும் அறிவும் உடையவனாக இரு.
உன்னுடைய மாசுகள் நீங்கி, நீ தீமை அற்றவனாய், ஒளியுடன் விளங்குகிற உயர்ந்த உலகத்திற்குச் செல்வாய்.
Make an island for yourself! Work quickly! Be wise! With impurities all blown away, unblemished, you'll reach the divine realm of the noble ones.
ஆகவே உன்னைத் தீவு போன்று (அரண்) செய்து கொள். ஊக்கமும் அறிவும் உடையவனாக இரு. உன்னுடைய மாசுகள் நீங்கி, நீ தீமை அற்றவனாகிவிட்டால், பிறக்கவும் இறக்கவும் மாட்டாய்.
Make an island for yourself! Work quickly! Be wise! With impurities all blown away, unblemished, you won't again undergo birth and aging.
[3]
The amount of merit gained varies according to three factors: the quality of the donor's motive, the spiritual purity of the recipient, and the kind and size of the gift. Since we have to experience the results of our actions, and good deeds lead to good results and bad deeds to bad results, it is sensible to try to create as much good kamma as possible. In the practice of giving, this would mean keeping one's mind pure in the act of giving, selecting the worthiest recipients available, and choosing the most appropriate and generous gifts one can afford. Source http://www.accesstoinsight.org/lib/authors/various/wheel367.html
தானம் செய்வதினால் கிடைக்கும் புண்ணியம் மூன்று பண்புகளைப் பொறுத்திருக்கின்றது.
1. கொடுப்பவரின் உள்ளத்தின் நிலை. அதாவது அவர் நோக்கம். 2. பெறுபவரின் ஆன்மீகத் தூய்மை. 3. கொடுக்கப்படும் காணிக்கையின் பெருமிதம்.
நல்வினை நல்ல பலனையும் தீவினை துன்பத்திற்கும் எடுத்துச் செல்லுமாதலால் முடிந்த அளவு புண்ணியம் சேர்க்க வேண்டும். கொடுப்பதைப் பொறுத்தவரை மனம் தூய்மையாக இருக்க வேண்டும், பெறுபவர் மேன்மையானவராக இருக்க வேண்டும், நம்மால் முடிந்த அளவு தாரளமான காணிக்கையாக இருக்க வேண்டும்.
* * *
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
© Details from English Source With gratitude to https://suttacentral.net for English source.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.