தம்மபதம் - உலகங்கள்

13. உலக வர்க்கம - உலகங்கள்

Loka vagga - WORLDS

167

இழிவான காரியத்தைச் செய்யாதே. அசட்டையாயிராதே. தவறான கொள்கையைக் கொள்ளாதே. உலக வளர்ச்சியை (மீண்டும் மீண்டும் பிறப்பதை) வளர்த்துக் கொள்ளாதே

Don't associate with lowly qualities. Don't consort with heedlessness. Don't associate with wrong views.

Don't busy yourself with the world.

168-169

அசட்டையாயில்லாமல் விழிப்பாக இரு. தர்மத்தை முழுவதும் கைக்கொண்டு ஒழுகு.

தர்மப்படி நடக்கிறவர்கள் அவ்வுலகத்திலும் இவ்வுலகத்திலும் சுகம் அடைகிறார்கள்.

Get up! Don't be heedless. Live the Dhamma well. One who lives the Dhamma sleeps with ease in this world and the next.

தர்மத்தை நல்வழியில் செலுத்தி நட; தீய வழியில் செலுத்தி நடக்காதே. தர்ம வழியில் ஒழுகு பவர், இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் சுகம் அடைகிறார்கள்.

Live the Dhamma well. Don't live it badly. One who lives the Dhamma sleeps with ease in this world and the next.

170

இவ்வுலக வாழ்க்கையை, நீர்க்குமிழி போன்றும், கானல் நீரைப் போன்றும் கண்கிறவர் யார

அவரை, யமராஜன் காணமாட்டான்.

See it as a bubble, see it as a mirage: one who regards the world this way the King of Death doesn't see.

171

அரசருடைய அலங்கரிக்கப்பட்ட தேரைப் போன்று இருக்கிற இந்த உலகத்தைப் (உடம்பை) பாருங்கள். மூடர்கள் இதில் பற்றுக்கொண்டு அமிழ்ந்து விடுகிறார்கள். ஆனால், அறிஞர்கள் இதில் பற்றுக் கொள்வதில்லை.

Come look at this world all decked out like a royal chariot, where fools plunge in, while those who know don't cling.

172-173

முன்பு அசட்டையாக இருந்து, பிறகு விழிப்படைந்து முயற்சியோடிருப்பவர், மேகத்தில் மறையுண்டிருந்த வெண்ணிலா, அதை விட்டு வெளிப்பட்டதைப் போன்று, பிரகாசிக்கிறார்.

Who once was heedless, but later is not, brightens the world like the moon set free from a cloud.

தீய செயல்களை நல்ல செயல்களினாலே மறைத்து விட்ட ஒருவர், மேகத்திலிருந்து வெளிப் பட்ட வெண்ணிலாவைப் போல விளங்குகிறார்.

His evil-done deed is replaced with skillfulness: he brightens the world like the moon set free from a cloud.

174

இவ்வுலகம் இருள் அடைந்தது, இதன் உண்மை இயல்பைக் காண்கிறவர் மிகச் சிலரே.

வலையில் அகப்பட்ட பறவை அதிலிருந்து தப்பித்துக் கொள்வது போல, சிலர் மட்டும் இதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

Blinded this world — how few here see clearly! Just as birds who've escaped from a net are few, few are the people who make it to heaven.

175

அன்னப்பறவைகள் வானத்தில் பறக்கின்றன. இத்தி (சித்தி) அடைந்தவர் ஆகாயத்தில் பறக் கிறார்கள். தீயவனான மாரனை அவனுடைய படையோடு வென்ற தீரர்கள் உலகத்தைக் கடந்து நிர்வாண மோக்ஷத்தை அடைகிறார்கள்.

Swans fly the path of the sun; those with the power fly through space; the enlightened flee from the world, having defeated the armies of Mara.

176

ஒப்பற்ற தர்மத்தை இகழ்ந்து ஒதுக்கிவிட்டு, பொய்யையே பேசிக்கொண்டு, பரலோகத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கிற பாவத்தைப் போன்று வேறு பாவச் செயல் கிடையாது.

The person who tells a lie, who transgresses in this one thing, transcending concern for the world beyond:

there's no evil he might not do.

177

கருமிகள் தேவலோகத்தை அடைகிறது இல்லை. மூடர்கள் தானதர்மத்தைப் புகழ்வதில்லை,

ஆனால், தீரர் களான அறிவாளிகள் தானதர்மங்களைப் புகழ்ந்து செய்கிற படியினாலே

இவ்வுலகத்திலும் அவுலகத்திலும் சுகம் பெறுகிறார்கள்.

No misers go to the world of the devas. Those who don't praise giving are fools. The enlightened express their approval for giving and so find ease in the world beyond.

178

ஸோதாபத்திபலம் அடைந்தவர்கள், அரச பதவியை விட, உலகங்களை ஆளும் சக்கரவர்த்தி பதவியைவிட, சுவர்க்க பதவியைவிட, மேலான பதவியை அடைகிறார்கள்.

Sole dominion over the earth, going to heaven, lordship over all worlds: the fruit of stream-entry excels them.