தம்மபதம் - மனம்

3. சித்த வர்க்கம் - மனம்

Cittavagga - The Mind

33 - 37

அடக்கியாள்வதற்கும் காப்பதற்கும் அருமையானதும், சலித்துக்கொண்டே இருக்கிறதும் உறுதியற்றதுமான மனத்தை அறிவாளிகள், வளைந்த அம்புகளை வேடன் நீட்டி வைப்பது போலச் செம்மைப் படுத்துகிறார்கள்.

Quivering, wavering, hard to guard, to hold in check: the mind. The sage makes it straight — like a fletcher, the shaft of an arrow.

நீரில் வாழ்கிற மீனைப் பிடித்துத் தரைமேல் போட்டால் அது எப்படித் துடிக்கிறதோ அதுபோல, மனமானது (தீயவனாகிய) மாரனுடைய உலகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளத் துடிக்கிறது.

Like a fish pulled from its home in the water and thrown on land: this mind flips and flaps about to escape Mara's sway.

அடக்கியாள்வதற்கு அருமையானதும், தன் போக்குப்படியே சஞ்சரிக்கிறதுமான மனத்தை அடக்குவது நல்லது; அடக்கியாளப்படுகிற மனமானது சந்தோஷத்தைத் தருகிறது.

Hard to hold down, nimble, alighting wherever it likes: the mind. Its taming is good. The mind well-tamed brings ease

அடக்கியாளக் கடினமானதும் நிலைத்து நிற்காமல் எப்போதும் அலைந்து கொண்டே இருக்கிறதுமான மனத்தை, அறிவாளிகள் காவல் புரிவாராக; காக்கப்பட்ட மனம் சந்தோஷத்தைத் தருகிறது.

So hard to see,so very, very subtle, alighting wherever it likes: the mind.

The wise should guard it. The mind protected brings ease.

வெகுதூரம் சஞ்சரிக்கிறதும், தன்னந் தனியே அலைகிறதும், உடம்பு இல்லாமலே (இருதயமாகிய) குகையில் இருப்பதுமாகிய மனத்தை அடக்கியாள்கிவர், மாரனுடைய தளையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்.

Wandering far, going alone, bodiless, lying in a cave: the mind. Those who restrain it: from Mara's bonds they'll be freed.

38

உறுதியற்ற மனத்தையுடையவரும், உண்மையான தர்மத்தை அறியாதவரும், நிலைபெற்ற கொள்கை இல்லாதவருமான எவரும் முழு ஞானத்தை அடைய மாட்டார்.

For a person of unsteady mind, not knowing true Dhamma, serenity set adrift:

discernment doesn't grow full.

39

காமங்களினால் பற்றப்படாமலும் பகைமையில்லாமலும் உள்ள மனத்தோடு,

நன்மை தீமைகளை விட்ட விழிப்புள்ள ஒருவருக்கு அச்சம் என்பதே இல்லை.

For a person of unsoddened mind, unassaulted awareness, abandoning merit and

evil, wakeful, there is no danger no fear.

40

இந்த உடம்பு மட்குடம் போன்றது (அழியுந் தன்மையது) என்பதையறிந்து, அரண் செய்யப்பட்ட நகரம் போல உறுதியோடு கூடிய மனத்துடனிருந்து, அறிவாகிய ஆயுதங்களால் ஒருவர் மாரனை எதிர்ப்பாராக. பற்றற்ற மனத்துடன் வெற்றியை நிலை நிறுத்துவாராக.

Knowing this body is like a clay jar, securing this mind like a fort, attack Mara with the spear of discernment, then guard what's won without settling there, without laying claim.

41

வெகு விரைவிலே, அந்தோ! இந்த உடம்பு உணர்ச்சியற்று தரையில் விழுந்து மரக்கட்டை போன்று ஒதுக்கித் தள்ளப்படும்.

All too soon, this body will lie on the ground cast off, bereft of consciousness, like a useless scrap of wood.

42 - 43

வைரங்கொண்டவன் தன்னால் வெறுக்கப்பட்டவனுக்குத் தீமை செய்வதைவிட அதிகமாக, அல்லது பகைவனுக்குப் பகைவன் தீமை செய்வதை விட அதிகமாக, அடக்கியாளப்படாத மனமானது பெருந்தீங்கைச் செய்கிறது.

Whatever an enemy might do to an enemy, or a foe to a foe, the ill-directed mind can do to you even worse.

கட்டுப்படுத்தி நல்வழியில் நிறுத்தப்பட்ட மனமானது, தாயும் தந்தையும், வேறு சுற்றத்தாரும் செய்யாத நன்மைகளை விட அதிகமான நன்மைகளைச் செய்கிறது.

Whatever a mother, father or other kinsman might do for you, the well-directed mind can do for you even better.