கர்மா Karma

Kamma

கர்மா

Definition: "Intention, I tell you, is kamma. Intending, one does kamma by way of body, speech, & intellect."

விளக்கம்: "உடலாலும், பேச்சாலும், அறிவோடும் நோக்கத்தோடு செய்வதுதான் கர்மா."

53

When those who do not understand the Dhamma act improperly, they look all around to make sure no one is watching. But our kamma is always watching. We never really get away with anything.

தருமத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் தவறான செயலைச் செய்யும் முன் யாரேனும் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். ஆனால் நமது கர்மா நம்மைக் கவனித்துகொண்டே இருக்கிறது. நாம் எது செய்தாலும் அதன் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது.

54

Good actions bring good results; bad actions bring bad results. Don’t expect the gods to do things for you, or the angels and guardian deities to protect you, or the auspicious days to help you. These things aren’t true. Don’t believe in them. If you believe in them, you will suffer. You will always be waiting for the right day, the right month, the right year, the angels, or the guardian deities. You’ll only suffer that way. Look into your own actions and speech, into your own kamma. Doing good, you inherit goodness, doing bad you inherit badness.

நல்ல செயல்கள் நல்ல விளைவுகளைத் தரும்; தீய செயல்கள் மோசமான விளைவுகளைத் தரும். கடவுள் உங்களுக்காகச் செயல் புரிவாரென்றோ, தேவதைகளோ, காவல் தெய்வங்களோ உங்களைப் பாதுகாப்பார்கள் என்றோ நல்ல நேரம் உங்களுக்குத் துணை நிற்கும் என்றோ நினைக்காதீர்கள். இவையெல்லாம் உண்மை இல்லை. இதை நம்பினால் நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள். அப்படி நம்பினால் எப்போதுமே சரியான நாளுக்காவோ, மாதத்திற்காகவோ, ஆண்டுக்காகவோ தேவதைகளுக் காகவோ, தேவதூதருக்காகவோ காத்திருப்பீர்கள். அவ்வாறு செய்வதால் துக்கம் தான் அனுபவிப்பீர்கள். உங்கள் செயல்களையும், பேச்சையும் கர்மச் செயல்களையும் கவனியுங்கள். நல்லது செய்தால் நன்மை பெறுவீர்கள். கெட்டது செய்தால் தீமை அடைவீர்கள்.

55

Through right practice, you allow your old kamma to wear itself out. Knowing how things arise and pass away, you can just be aware and let them run their course. It is like having two trees: if you fertilize and water one and do not take care of the other, there is no question which one will grow and which one will die.

நல்ல பயிற்சியினால் பழைய கர்மாவைப் படிப்படியாகக் குறைத்து விடலாம். செயல்கள் எப்படித் தோன்றி மறைகின்றன என்று தெளிவான பின் அவைகளை அறிந்து அவைகளின் இயல்பான வழியில் செல்ல விடுங்கள். இது இரண்டு மரங்களை வளர்ப்பதுபோல: ஒரு மரத்திற்கு உரம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சி, மற்ற மரத்தைக் கவனிக்கவில்லை யென்றால், எந்த மரம் வளரும் எந்த மரம் சாகும் என்பதில் சந்தேகமே இலலைத்தானே?

56

Some of you have come from thousands of miles away, from Europe and America and other far-off places, to listen to the Dhamma here at Nong Pah Pong Monastery. To think that you’ve come from so far and gone through so much trouble to get here. Then we have these people who live just outside the walls of the monastery but who have yet to enter through its gate. It makes you appreciate good kamma more, doesn’t it?

உங்களில் சிலர் ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் தொலை தூரத்துக்கப்பால் உள்ள பிற இடங்களிலிருந்தும் தரும போதனைகளைக் கேட்க இந்த "நோங் பா போங்" விகாரைக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் தொலைதூரத்திலிருந்து எந்தச் சிரமத்தையும் பாராட்டாமல் வந்திருக்கிறீர்கள். அதே சமயம் இந்த விகாரைச் சுவருக்கு வெளியே வாழும் மக்கள் இது வரை உள்ளே வந்ததே இல்லை. உங்கள் நல்ல கர்மாவைப் பாராட்டத் தோன்றுகிறது. இல்லையா?

57

When you do something bad, there is nowhere you can go to hide. Even if others don’t see you, you must see yourself. Even if you go into a deep hole, you’ll still find yourself there. There’s no way you can commit bad actions and get away with it. In the same way, why shouldn’t you see your own purity? You see it all - the peace, the agitation, the liberation, the bondage; you see all these for yourself.

நீங்கள் தவறான செயலைச் செய்யும் போது, ஓடி மறைவதற்கு எங்குமே போக முடியாது. மற்றவர் அந்தச் செயலைக் காணவில்லையென்றாலும் நீங்கள் அதைப் பார்த்துத்தான் ஆக வேண்டும். ஆழமான குழிக்குச் சென்றாலும் உங்களை அங்கேயும் காணுவீர்கள். தவறான செயலைச் செய்து அதன் விளைவுகளிருந்து தப்பிக்க வழியே இல்லை. அதே போல உங்கள் தூய்மையையும் நீங்கள் ஏன் பார்க்கக் கூடாது? எல்லாமே தெரிகிறது - அமைதியும், கிளர்ச்சியும், விடுதலையும், அடிமைத்தனமும்(பற்றும்); இவை எல்லாம் நீங்களே பார்க்க முடிகிறது.