ஞானம் பெற்றதன் அறிகுறிகள்
பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
Signs of Enlightenment
Adapted from a Dhamma talk by Ajahn Sona
English version follows the Tamil translation.
நாம் ஞானம் பெற்றுவிட்டோமா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
இதனை விளக்கும் ஒரு சூத்திரம் உள்ளது. அதில் புத்தர் இவ்வாறு கூறுகிறார், 'நான் எப்போதும் உங்களோடு இருக்க மாட்டேன். இவர் ஞானம் அடைந்துவிட்டார் அவர் ஞானம் அடைந்துவிட்டார் என்று கூற நான் இருக்க மாட்டேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உள்ளத்தில் பார்க்க வேண்டும். இதுவே நாம் ஞானம் அடைந்தோமா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் வழி.'
முதல் காலக்கட்டம்
நான் ஐந்து ஒழுக்கங்களை முழுமையாகக் கடைப்பிடிக்கிறேனா? ஞானம் அடைவதன் முதல் காலக்கட்டத்தில் நீங்கள் கொலைசெய்வதை, களவாடுவதை, தவறான பாலியல் உறவு கொள்வதை, பொய் பேசுவதை, போதை தரும் பொருட்களை உட்கொள்ளுவதை விட்டிருப்பீர்கள். இவற்றை இயல்பாகவே செய்திருப்பீர்கள். இவற்றைச் செய்யாமல் இருக்க முயற்சி எதுவும் தேவையில்லை. உங்கள் உள்ளம் திறந்திருக்கிறது.
மற்ற உயிர்கள் மீது உங்களுக்கு மதிப்பு இருக்கிறது. உங்கள் உள்ளம் நுண்ணிய உணர்வுள்ளதாகவும், கருணை நிறைந்ததாகவும் இருக்கிறது. உங்களுக்கு ஒரு கொசுவைக்கூட கொல்லத் தோன்றாது. கொசுவும் வன்முறை என்றால் நடுங்கும் என்பதை உணர்ந்துள்ளீர்கள். உயிர்களைக் கொல்ல உங்கள் நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை. அது மிகக் கொடுமையான செயல். அந்தச் சுமையை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இல்லை. இந்த மூடத்தனத்தை உங்களால் பொறுத்துக் கொள்ளவும் முடியாது.
பொருட்களை திருடுவதை விட்டு விட்டிருப்பீர்கள். அவை வெறும் பொருட்களே. திருடும் அளவுக்குச் செல்வதற்கு உங்கள் நிலைமை அவ்வளவு மோசமானதா என்ன? நீங்கள் எதைத் திருடப் போகிறீர்கள்?
தவறான பாலியல் உறவு: மேலும் நீங்கள் காமத்தில் மூழ்கிப் போகாததால், காம வெறி உங்களை ஆட்டிப் படைக்காததால், நீங்கள் இந்த ஒழுக்கத்தை மீறப் போவதில்லை. மற்றவர் உறவை முறிப்பதில்லை. உறவுகளில் இன்னமும் ஆசை இருந்தால் வேறு ஆயிரம் வழிகள் இருக்கும் போது மற்றவரின் உறவைப் பாதிக்க வேண்டியதில்லை. மற்றவர் உறவைப் பாதிப்பதில் எவ்வளவு தீங்கு உள்ளது என்பதையும், அது மிகவும் புண்படுத்தும் செயல் என்பதையும் உணர்கின்றீர்கள்.
நீங்கள் அத்தகைய மென்மையான உணர்வைக் கொண்டுள்ளீர்கள். அது இயல்பே. உங்களையே நீங்கள் உள் நோக்கிப் பார்க்க வேண்டும். நான் இந்த ஐந்து ஒழுக்கங்களுக்கேற்ப வாழ்கின்றேனா? இல்லையென்றால் நான் இன்னும் ஞானம் பெறவில்லை.
மேலும் மூன்று கிலேசங்கள் முதல் காலக்கட்டத்தில் விழுந்து விடுகின்றன.
1. 'நான்' என்ற ஒன்று இருப்பதென்பது ஒரு திடநம்பிக்கை. 'நான்' என்ற தன்மை முக்காலத்திலும் இருக்கும். இந்தத் தொடர்ந்து மாற்றமில்லா 'நான்' இருப்பதாக உள்ள நம்பிக்கை வீழ்ந்துவிடுகிறது.
2. சாங்கியமும், சடங்குகளும் ஞானத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை விட்டு விடுகிறோம். தலையில் நீர் தெளிப்பதாலோ, பூசாரிக்குக் காசு கொடுப்பதாலோ, புனித ஆற்றில் குளிப்பதாலோ, புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வதாலோ, ஆயிரம் தடவை சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குவதாலோ ஞானம் கிடைக்கப் போவதில்லை. இது போன்ற செயல்களால் ஞானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விட்டு விடுகிறோம்.
3. புத்தரின் அடிப்படைப் போதனைகளில் எந்த ஐயமும் இருப்பதில்லை. அதாவது துக்கம் உள்ளது, அதற்குக் காரணம் பற்று அல்லது அறியாமையே. அதற்கு ஒரு முடிவு உள்ளது. துக்கத்தின் முடிவிற்கு எடுத்துச் செல்லும் ஒரு மார்க்கம் உள்ளது. இதுவே புத்தரின் அடிப்படைப் போதனை. இவற்றில் எந்த ஐயமும் இல்லை.
இந்த மூன்று கிலேசங்களும் ஒரே சமயத்தில் விழுகின்றன. இதுவே ஞானம் அடைந்ததின் முதல் காலக்கட்டத்தைக் குறிப்பவை. ஏன் மூன்றும் ஒரே சமயத்தில் விழுகின்றன? ஏனென்றால் நீங்களே ஒன்றை அறிந்து விட்டீர்கள். நீங்கள் விடுதலை பெற்றதை நீங்களே அறிந்துகொண்டீர்கள். இந்தக் கட்டுப்படுத்தும் சங்கிலிகளான கிலேசங்களிடமிருந்து தப்பித்து விட்டீர்கள். ஏனென்றால் 'நான்' என்ற கருத்தின் உண்மையை உணர்ந்து கொண்டீர்கள். உங்கள் ஆணவம் பற்றிய உங்களது அசைக்க முடியா நம்பிக்கை தளர்ந்து விட்டது. 'நான்' என்ற கருத்தைச் சுற்றியுள்ள கபட நாடகத்தைக் கண்டு கொண்டீர்கள். அது ஒரு கற்பனைக் கட்டடம் என்பதை உணர்ந்து விட்டீர்கள். 'நான்' என்பது உண்மை என்று நினைத்தது ஒரு கற்பனைக் கருத்து. அதைக் கற்பனை செய்வது நிறுத்தப் பட்டு விட்டது. அதனால் விடுதலை உண்டாயிற்று. அதே சமயம் ஞானம் என்பது தலையின் மீது நீரைத் தெளிப்பதாலோ அல்லது அதுபோன்ற சடங்குகளாலோ நடக்கப் போவதில்லை என்பதும் தெளிவாயிற்று. இந்த 'நான்' என்ற கருத்தை விட்டு விடுவதைத் தவிர வேறு வழியில்லை. நான் என்பது அறியாமை யின் காரணமாக உண்டாயிற்று. அந்த மாயக் கருத்தை ஊடுருவிப் பார்த்து விட்டீர்கள். இதைத்தான் புத்தர் போதித்தார். எனவே அவர் போதனைகளில் இனி எந்தச் சந்தேகமும் இல்லை. நீங்களே கற்பனையாகக் கட்டிய 'நான்' மீது சுமத்தப்படும் பாரங்களை இறக்கி விட்டால் மட்டுமே நாம் விடுதலை பெறமுடியும். இந்த சிறை நாமே அமைத்துக் கொண்டது. ஒவ்வொரு நாளும் அந்தச் சிறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்கிறோம். பின், 'என்னை விடுதலை செய்யுங்கள்! என்னை விடுதலை செய்யுங்கள்!' என்று உரக்கக் கூச்சலிடுகிறோம். புத்தர் உங்களிடமே திறவுகோல் இருப்பதாகக் கூறுகிறார். 'அட! கதவு தாளிடப்படக்கூட இல்லையே! திறந்து வெளியே வா,' என்கிறார் புத்தர். ஆனால் நம்மால் முடியவில்லை. ஏன்? ஏன் நாம் கோபம் கொள்ளவேண்டும்? யாரோ எதையெதையோ சொன்னதால் கோபம் கொள்கிறோம். 'யார் உனக்கு இப்படிச் செய்தது?' என்று கேட்டால், 'அவள் செய்தாள்' என்கிறோம். இல்லை. நீங்களே உங்களுக்குச் செய்து கொண்டது தான் இது. நமது கற்பனையின் காரணமாகத் தான் நாம் பிரச்சனைகளை உருவாக்குகிறோம். இது நானே எனக்காகச் செய்து கொண்டது.
கேள்வி: நான் என்ற என்ணம் விடுபட்டு விட்டது என்று எப்படித் தெரிந்து கொள்வது? அதுவும் மாயக்கருத்தாக இருக்கலாமே?
சற்றுக் காத்திருந்து பாருங்கள். நான் என்ற கருத்து இருந்தால் அதற்கான அறிகுறிகள் தெரியும்.
கேள்வி: எப்படிப்பட்ட அறிகுறிகள்?
கோபம் உண்டாகலாம். முதல் காலக்கட்டத்தில் 'நான்' என்ற எண்ணம் தவறானது என்பது தெளிவாகியது. ஆனால் அதை அவ்வப்போது மறந்துவிடக் கூடும். பழைய பழக்கங்கள் சுலபமாக முடிவடைந்து விடுவதில்லை. ஆகவே முதல் காலக்கட்டத்தை அடைந்த பின்பும் கோபம் இன்னும் இருக்கும். ஆசை இன்னும் இருக்கும். ஆசைப்படலாம். இல்லற வாழ்க்கையில் இருக்கலாம். வேறு யாரும் தொந்தரவு செய்யாவிட்டாலும் உங்களுக்குக் கோபம் தோன்றலாம். தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு பழைய பிரச்சனை - யாரிடமோ சண்டை போட்டது நினைவுக்கு வரலாம். அதனால் மனத்தில் கோபம் எழலாம். ஆனால் கோபமோ ஆசையோ ஐந்து ஒழுக்கங்களை மீறும் அளவிற்கு எழுவதில்லை. உங்களைக் கொலை செய்யத் தூண்டும் அளவிற்கு எடுத்துச் செல்வதில்லை. அப்படிச் செய்வதற்கு உங்களால் முடியாது. திருட மாட்டீர்கள். பாலியல் உறவுகளில் எல்லையைக் கடக்கும் அளவு ஆசை எழாது. ஆனால் வெறுப்பும் ஆசையும் இன்னமும் இருக்கின்றன. முக்கியமாக நான் என்று நிலையாக ஒன்றிருப்பதாக நீங்கள் நம்புவதில்லை. அது மனத்தின் கற்பனைக் கோட்டை என்பதை அறிந்துள்ளீர்கள். ஆனால் திரும்பத் திரும்பச் செய்யும் பழக்கங்களின் வன்மை இன்னமும் உங்களை ஆட்கொண்டிருக்கும்.
இரண்டாம் காலக்கட்டம்
இரண்டாம் காலக்கட்டத்தில் தான் கோபமும் ஆசையும் பெரும் அளவிற்கு குறைகின்றன. இந்தக் காலக்கட்டத்திலும் அவை முற்றாக வேறோடு பிடுங்கப் படுவதில்லை. பெருமளவுக்கு அவற்றின் பலம் குறைகிறது. இரண்டாம் காலக்கட்டத்தில் இவ்விரண்டு கிலேசங்கள் மட்டுமே பாதிக்கப் படுகின்றன. மொத்தம் பத்து கிலேசங்கள் உள்ளன. முதற்படியில் மூன்றை அறுத்து விட்டீர்கள். இரண்டாவது படியில் இரண்டின் வலு குறைக்கப் பட்டுள்ளது - அவை பேராசையும் கோபமும். அப்படியென்றால் ஆசையோ கோபமோ நேரடியாக முகத்துக்கு எதிரே காட்டப்பட்டாலொழியத் தோன்றாது. ஒரு அறையில் அமர்ந்திருக்கும் போது கோபமோ காமமோ தோன்றாது. முகத்துக்கு எதிரே காட்டப் பட்டால் மெல்லிய அளவில் தோன்றலாம். ஆக நீங்கள் இவற்றிடமிருந்து விடுதலை பெறவில்லையென்றாலும் மற்றவரைக் காட்டிலும் பெருமளவு விடுவிக்கப் பட்டிருக்கின்றீர்கள். பெரும்பாலான மக்கள் தியான முகாம்களில் தியானிக்கும் போது இத்தகைய சூழ்நிலைகளைச் சந்திக்கின்றனர். ஒன்றும் இல்லாத அறையில் உட்கார்ந்திருக்கும் போதும் மன அரங்கில் நாடகங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். இரண்டாம்படி எட்டியவர்களுக்கு இவ்வகையான நாடகங்களெல்லாம் மனத்தில் தோன்றுவதில்லை. தியான முகாம்களில் அமைதியாக இருப்பார்கள் ஆனால் யாராவது உங்கள் முன் வந்து உங்கள் முகத்தில் அறைந்தால், 'ஆ! ஏன் அப்படிச் செய்தாய்!' என்று சற்று எரிச்சலுடன் கேட்போம். அல்லது யாராவது உங்களுக்குப் பிடித்த உணவை உங்கள் முன் வைத்தால் அதை உண்ணச் சற்று ஆசை உண்டாகலாம். சற்றே மட்டும்.
மூன்றாம் காலக்கட்டம்
மூன்றாம் காலக்கட்டத்தில் இவை இரண்டும் முழுமையாக அறுக்கப்படுகின்றன. தூண்டிவிட்டாலும் உங்களுக்குக் கோபம் உண்டாவதில்லை. முகத்துக்கு முன்னால் ஆசை காட்டினாலும் நீங்கள் விருப்பம் கொள்வதில்லை. அந்த இரண்டு கிலேசங்கள் துண்டிக்கப்பட்டு விட்டன. இன்னும் ஐந்து கிலேசங்களே மிஞ்சியிருப்பவை. ஆக புத்தர் மிக அக்கறையோடும், தெளிவாகவும் பல போதனைகளில் திரும்பத் திரும்ப ஞானம் என்றால் என்னவென்று விளக்கியிருக்கின்றார். தெளிவில்லாதது ஒன்றும் இல்லை. ஞானம் என்பது மனத்தினால் செய்யக்கூடிய அதிசய இருத்தி, சித்தி சக்திகள் பற்றியது இல்லை. அது உங்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றியது - நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்கள். இந்த நோக்கம் மற்ற எல்லாவற்றுக்கும் மேலானது. துக்கத்தை முடிப்பதற்கான நேர் வழியைத் தேடுகின்றீர்கள். மனிதருக்கு வேறு என்ன வேண்டும்? புத்தர் எவ்வளவு நுண்ணறிவுள்ளவர் என்பது அவர் சொன்ன வார்த்தைகளால் புரியும். அவர் சொன்னது, 'வாழ்க்கையில் ஒன்று மட்டுமே மிக முக்கியமானது. அது தான் உங்கள் துக்கத்தை முடிக்கவேண்டும் என்பது.' இதுவே மிக முக்கிய நோக்கம். இந்தத் துக்கம் என்ற பாரத்தைக் குறைக்க வேண்டும்.
கேள்வி: பயம் என்பது எங்கு வருகிறது.
பயம் என்பது வெறுப்பு சம்பந்தப் பட்டது. வெறுப்பின் ஒரு முகமே பயம்.
நான்காம் காலக்கட்டம்
மீதமுள்ள ஐந்து கிலேசங்களில் அகம்பாவமும் ஒன்று. நாம் 'நான்' என்ற கருத்தை விட்டு விட்டாலும் சற்று அகம்பாவம் மிஞ்சி இருப்பது விசித்தரமாக உள்ளது. இங்கு நாம் குறிப்பிடுவது, 'நான் பேரழகுள்ள சினிமா சூப்பர் ஸ்டார்' அல்லது 'எனது வகுப்பில் கணிதத்தில் முதன்மை இடம் எனக்குத்தான்,' என்பது போன்ற தற்பெருமை இல்லை. மிக மென்மையான தற்பெருமை. ஆணவத்தின் வாசம். ஆணவம் என்கிற சாணம் எல்லாம் போய்விட்டது ஆனாலும் அதன் வாசனை சற்று மிஞ்சியிருக்கிறது.
ஞானம் பெரும் நான்கு நிலைகளுக்கு ஒரு உவமானம் தரப்படுகிறது.
ஒரு வெள்ளைப் படுக்கை விரிப்பு கொல்லைப்புரத்தில் பன்றித் தொழுவத்தில் கிடக்கிறது. பன்றிகள் அதை மிதித்து நசுக்கி அசுத்தமும் செய்கின்றன. ஒருவர் அந்த விரிப்பைத் தேடுகிறார். எங்கு போனது அது? வெளியே காய்ந்து கொண்டிருந்த விரிப்பைப் பன்றித் தொழுவம் வழியாகக் கொண்டு வந்தது நினைவுக்கு வருகிறது. அங்கு சென்று தேடும் போது அது தரையில் அழுக்கடைந்து கிடப்பது தெரிகிறது. அடடா! பன்றிச் சாணமும், மண்ணும், சேறும் படிந்து விரிப்பு மிகவும் அழுக்கான நிலையில் காணப்படுகிறதே! அதை எடுத்து முதலில் உதறுகிறார். அதில் ஒட்டி இருக்கும் பெரும் சாணத் துண்டுகளெல்லாம் விழுந்து விடுகின்றன. இப்போது இருப்பது கறை படிந்த நாற்றம் கொண்ட விரிப்பு. பின் அதை எடுத்துப் போய்த் தண்ணீரில் அலசுகிறார். அழுக்கு நீக்கும் சோப்புப் போட்டு நீரில் பல முறை அலசியபின் கறைகளெல்லாம் விடுபட்டு முன் போல வெள்ளை நிறத்தில் தோன்றுகிறது. ஆனால் அழுக்கெல்லாம் நீங்கி விட்டாலும் விரிப்பிலிருந்து அந்தச் சாண வாசனை முழுமமையாக நீங்கவில்லை. பின் அதை மடித்து நறுமண மரப்பட்டைகள் கொண்ட பெட்டியில் மூன்று நாட்கள் வைக்கிறார். பின் அதை எடுத்து முகர்ந்து பார்த்தால் சாண நாற்றம் கொஞ்சமும் இல்லை. ஞானம் பெரும் கடைசிப் படியில் அது முழுவதும் கழுவப் பட்டிருக்கிறது. மூன்றாவது படியான அணாகாமி காலக்கட்டத்தில் அதில் அழுக்கில்லையென்றாலும் சற்று சாண வாசனை படிந்திருந்தது. அந்த வாசனை தான் அகம்பாவம். அச்சமயத்தில் கிலேசங்களின் கடுமை அவ்வளவுதான். கடுமை குறைந்த கிலேசம். அப்போது 'நான் ஞானம் பெற்றுவிட்டேன்,' என்பது போன்ற எண்ணங்கள் தோன்றலாம். ஞானம் பெற்றிருந்தால் 'நான்' என்ற கருத்து விடுபட்டிருக்கும். பின் யார் ஞானம் பெற்றது? நான் ஞானம் பெற்றுவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அந்தச் சிறிய, 'நான் ஞானம் பெற்றுவிட்டேன்,' என்ற உணர்ச்சி தான் மிஞ்சியிருக்கும் அகம்பாவம். இன்னமும் சிறிதளவு ஆணவ எண்ணங்கள் தோன்றுகின்றன. சாதாரண மனிதன் அழுக்குண்ட விரிப்பைப் போல. ஒட்டிக் கிடக்கும் சாணம் தான் நமது அறியாமை. முதல் படியில் அதை உதறி விரிப்பை இலேசாக்குகிறோம். இன்னமும் சற்று நாற்றம் இருந்தாலும் விரிப்பு கண்டு பிடிக்கப் பட்டு விட்டது. அதைச் சுத்தப்படுத்தும் செய்முறையும் தொடங்கப் பட்டு விட்டது. இது மாற்ற முடியாத செயல். இனி பின்வாங்கி போகமுடியாத செயல் தொடங்கப் பட்டு விட்டது. புத்தரின் போதனை முதல் நிலையை அடைந்தோர் பின் வாங்க மாட்டார்கள் என்பதே. பின் வாங்கவும் முடியாது. இனி ஞானம் பெறுவது உறுதி. அதிக பட்சம் ஏழு வாழ்நாட்களில் முழு ஞானம் பெறுவது உறுதி. கதவை மூடமுடியாத படி ஒரு காலை உள்ளே நுழைத்து விட்டோம். காலை உள்ளே வைப்பது என்பது முதல் நிலையை அடைந்து விட்டதைக் குறிக்கும். இந்த நிலையைப் பற்றிப் புத்தர் கூறுகிறார், 'துறவிகளே, இந்தப் பூமியில் உள்ள அழுக்கையும் எனது நகத்துக்கடியில் உள்ள சிறு அழுக்கையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எங்கு அதிக அழுக்கு உள்ளது?' துறவிகள், 'பூமியில் உள்ள அழுக்குத் தான் அதிகம், அய்யா,' என்று பதிலளிக்கின்றனர். 'ஆம் துறவிகளே. நீங்கள் சொன்னது சரியே. அதுபோலவே சோதாபண்ணா (முதல்) நிலையை அடைந்தோருக்குக் குறைந்த துக்கமே மிஞ்சியிருக்கிறது,' என்கிறார். விரலுக்கு அடியில் உள்ள அழுக்கு மட்டுமே மிஞ்சியிருக்கிறது. சம்சார சக்கரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் சாதாரண மனிதனோ பூமியில் உள்ள அழுக்குக்கு நிகரான துக்கத்தைக் கொண்டிருக்கின்றான். முதல் நிலையை அடைந்தோர் சம்சார சக்கரத்தின் முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
கேள்வி: கடைசி ஐந்து கிலேசங்கள் எவை?
ரூப ஜானம் மற்றும் அரூப ஜானம் ஆகிய இரண்டு தியானங்கள் மீது பற்று, அறியாமை, அகம்பாவம் மற்றும் அமைதியின்றியிருத்தல். இங்கு அமைதியின்றியிருத்தல் என்று நாம் கூறுவது மிக மெல்லிய மனத்தின் அசைவைத்தான். அருகன் அல்லது சித்தன் நிலை (பாலியில் அரஹந்தர் - முழு ஞானம் பெற்றோர்) அடைந்தவருக்கு எந்த அசைவும் இல்லை. அவராகவே ஒன்றை விரும்பி நினைத்தாலொழிய அவர் எதையும் நினைப்பதில்லை. நாமோ உட்கார்ந்தால் மனத்தில் காற்றைப் போல அசைவு இருக்கும். நிற்பதே இல்லை. சிலருக்கு சூறாவளியைப் போலக் காற்றடிக்கும். சாதாரணமானவர்களுக்குப் புயல் காற்று வீசுவது போல மனத்தில் அசைவு இருக்கும். மூன்றாம் படி அடைந்தோருக்கு மெல்லிய தென்றல் காற்று மட்டுமே வீசும். மிகச் சிறிய அசைவு. ஆனால் சாதாரண மனிதருக்கு உள்ள அசைவைப் போல இல்லை. அந்தச் சிறு அளவு அமைதியின்றி இருக்கும் கிலேசம் இருக்கிறது. கிலேசம் என்றால் பிரச்சனை உருவாகக்கூடிய சாத்தியக் கூறு இருக்கின்றது என்று பொருள். எந்நேரமும் பிரச்சனை இருக்கிறது என்றில்லை. கோபம் கொள்ளலாம். ஒரு மாதத்திற்கு கோபம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கோபம் உண்டாகக் கூடிய சாத்தியக் கூறு உண்டு. கோபம் உண்டான பின் அதை மனத் தடங்கள் என்கிறோம். சாத்தியக் கூறு மட்டுமே இருக்கும் போது அதை கிலேசம் என்கிறோம். ஆக உங்களுக்கு ஆழ்ந்த தியான நிலைகள் மீது இன்னமும் பற்று உள்ளது. சற்று மனத்தில் அசைவுக்கான சாத்தியக் கூறு உள்ளது. சற்று அறியாமையும் உள்ளது. சித்தர் ஆகாததால் சற்று அறியாமை இருக்கும். ஒரு சில விஷயங்கள் உங்களுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. இல்லாவிட்டால் இந்த மனத்தில் அசைவோ, அகம்பாவமோ, தியானத்தின் மீது பற்றோ இருக்காது. அதனால் சித்தர்கள் தியானம் செய்ய மாட்டார்கள் என்றில்லை. அவர்களும் தியானம் செய்வார்கள். ஏன் புத்தரும் (புத்த நிலை அடைந்த பின்) தியானம் செய்தார். மாதக் கணக்கில் தியானம் செய்யச் சென்று விடுவார். அவர் ஏன் தியானம் செய்கிறார்? ஏனென்றால் அது மனத்திற்கு ஓய்வு தருகிறது. எந்நேரமும் காட்சிகளைப் பார்ப்பது, ஒலிகளைக் கேட்பது, நுகர்வது, சுவைப்பது, தொட்டுணர்வது - இவை எல்லாம் சோர்வு உண்டாக்கும் செய்கைகள். சித்தர்கள் இயற்கையாக ஆழ்ந்த தியான நிலைகளில் இருப்பார்கள். ஆனால் அவற்றோடு பற்றுக் கொள்ள மாட்டார்கள். யாராவது வந்து போதனைகளைக் கற்பிக்கக் கேட்டுக் கொண்டால் அவர்கள், 'அட தியானிக்கும் போது வந்து தொந்தரவு செய்கிறானே,' என்று நினைக்க மாட்டார்கள். சித்த நிலை அடைந்த பின் தியானம் செய்யத் தேவையில்லை என்று நினைக்க வேண்டாம். சித்தர்களும் தியானிப்பார்கள்.
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
* * * * * *
Transcribed from an audio tape available at birken.ca
How do you know if you are enlightened?
There is a sutta to explain this. The Buddha says, 'I will not always be with you. I won't be able to tell you whether you are enlightened or that person is enlightened. You need a check to look into you. You look into yourself. This is a check for enlightenment. '
Am I immaculate in the five precepts? In the first stage of enlightenment you give up killing, stealing, sexual misconduct, lying, taking intoxicants. These fall away naturally. You are not trying. Your heart is open.
You appreciate the lives of other beings. Your heart is sensitive, you are compassionate. Even a mosquito - you don't want to kill it. You recognize it trembles before violence. You cannot waste your time with lives. At least, it is too tedious, you don't want the burden. You cannot bear this foolishness.
Let alone stealing stuff. It is just stuff. You got to be really desperate to steal. What are you going to steal?
Sexual misconduct: Again because you are not lost in lust, obsessive lust, you are not going to transgress this. If somebody is in a relationship you don't go into that. There is a million other possibilities if you still have these interest in relationships. You relaize how much harm it does to another person if you violate their relationships. Very injurious.
So you just have this sensitivity about it. This is natural. Look into yourself. Am I in accord with these precepts. If not I am not enlightened.
The three fetters that fall away in the first stage of enlightenment.
1. The conviction that there is a real me. A 'me' that endures through time. A real identity.Self identity. A belief in an enduring self falls away.
2. Attachments to rites and rituals falls away as a means to enlightenment. You will not get salvation by sprinkling water on your head or paying a priest or confessing or bathing in a river or going to a holy place or doing a thousand prostrations or any of these rites. Cannot attain salvation by those means.
3. And you will have no doubt regarding the essential teachings of the Buddha. i.e. there is suffering, cause of suffering is attachement or ignorance, there is an end to it and there is a way to an end. That is the essential teaching of the Buddha. You no longer have any doubts about them.
All of these fetters fall away at once. This is the mark of the first stage of enlightenment. These three fetters fall away. Why all three at the same time? Because you have seen something for yourself. You have seen you have freed yourself. Freed yourself from your oppressive hindrances and everything because you saw through the nature of self. You are no longer totally convinced about your ego self. This melodrama around me. You saw it is an imaginary construct. You see that your self, whatever you imagined that as reality, you stopped imagining that and you go free. At the same time you understand that salvation does not occur because of water poured over my head or anything like that. You can't get it any other way other than letting go of this (self). You are seeing through this delusion of self, the 'self' delusion. And you now have no doubts of the teaching of the Buddha because that is what he says. That is the only place that is going to set you free, freeing yourself from the burdens that you impose upon your self, your own constructs. Your prison is made by you. You go in there every night and lock yourself and then say, 'Let me out of here!. Let me out of here!!' The Buddha is saying that you have got the keys. The door s not even locked for God's sake!. Just walk out of it. But I can't, I can't. Why can't we? Why do we have to be angry? Well somebody said this or that or they said, 'Who did that to you? She did.' You did it to your self. I am doing this to me by my own imagination and creations. I am doing this to me.
Q: How do I know if I just lost my sense of self? I may be deluded.
Just Wait for a while. Wait for signs of it to come up.
Q: Like what?
Like getting angry. However remember that in the first stage of enlightenment what has become clear to you is the unreality of self. But you do forget. Old patterns die hard. So you still have anger, you still have desire in the first stage of enlightenment. You still can desire. You can remain in the household life. You get angry even if no one is bothering you. Sometimes you are just meditating and you remember an old quarrel. However the anger and the greed never rise to the amount that you transgress the precepts. It will never push you to kill. You just don't have it in you. It will never push you to steal. You don't have it in you. The desire is never strong enough to make you transgress a sexual boundary or lie. But anger and greed are still there. Basically you do not believe anymore that the self is a real thing. It is imaginary. You have seen that it is a construct of my mind. However it has a lot of habit power.
Only in the second stage are anger and greed significantly diminished. They are still not totally uprooted. They are weakened considerably. In the second stage they are the only two fetters that are affected. There are ten fetters all together. You have knocked of three in the first stage of enlightenment. In the second stage of enlightenment you have only weakened two more - greed and anger. What it means is that you do not experience greed or anger except under direct provocation. So you don't just sit there in a room and get angry or lustful. Unless there is something waved in front of your face. Then it can come up in a fairly mild way. So you are not free but you are a lot freer than most people. Most people when they sit in a meditation retreat will go through all these scenarios. There is nothing. It is an empty room. And you are creating all this drama. In the second stage of enlightenment you will not be creating this drama. You will fundamentally be peaceful in a meditation retreat but if somebody walks up and slaps you in the face then you say 'What did you do that?' You get irritated. Or somebody comes out with your favourite food. Look what I have got for you. Little bit of interest. Mild..
In the third stage those are cut completely. Even under provocation you are not angry. They wave temptations in front of you but you don't respond. Those fetters are cut. Now you only have five left (laugter). Still have five more to go. So enlightenment is very carefully and classically defined by the Buddha in the text again and again and again. There is nothing vague about it. It has nothing to do with psychic powers or amazing feats of mind. It is to do with what you really want and that is - you want to be happy. And that will outweigh anything else. It will be so direct. It will be direct human heart experience of profound well being and happiness. You realize what else would anybody really want and you realize how wise the Buddha is in saying that, 'There is only one important thing in this life: To get rid of your suffering.' That is the only important thing and by far the most important thing. Just lighten up this suffering.
Q: Where does fear come in that?
It is aversion. It is a form of aversion.
Conceit is one of the five remaining fetters. Strangely we got rid of self view but we still have slight sense of conceit. Conceit is not the same as 'I am a handsome movie star. I am best in my math class.' Not that kind of conceit. It is very mild, the smell of ego. The actual manure of ego is gone, but there is still a smell of it.
The simile is a bed sheet that has been dropped. A white sheet has been dropped in the yard, in the corral where the pigs are and it has been trampled by the pigs and crapped on and everything. And one looks for the bed sheet. Where is it? I brought it in from the drying line and then I walked across the pig corral and and I go out there and find it. It is covered in crap. Oh my god. I pick this thing up and the first thing I do is I shake all the major crap off of it. And now I just got this stinky sheet stained with this stuff. Then I take it in and I wash it wash it in water and soap and I get the major stuff out of it. But even though it has got the physical stuff off of it now, it has a slight smell of manure. Now I fold it up and put it in a cedar box with some natural bark and I leave it in there for about 3 days. After that I open it up, I take it out and there is not even the smell of manure. That last stage of enlightenment it has been thoroughly washed . The third stage, the Anagami stage is not dirty any more it is a clean sheet but it still has that slight whiff of smell. That smell is called conceit. That's the intensity of the fetter. It is a very very mild fetter. One of the thoughts is, 'I am enlightened.' Funny little conceit. I am enlightened. Enlightened means that you no longer have a self. So who is enlightened? I feel that I am enlightened. That little feeling that, 'I am enlightened,' is conceit. Conceit is a heavy word in the English language. It is a trace of residual reflex of egoistical thinking. So the ordinary person, the thoroughly worldling, is the sheet covered with crap with manure, full of delusions. Shake it all off and lighten it up is the first stage. You are still a little smelly but the sheet has been discovered and the process has begun. And it is irreversible. The teaching of the Buddha is that once the first stage has been attained, it is irreversible. You cannot lose it. It is inevitable that you will attain full attainment. You have a maximum of seven life times. Once you get the foot in the door i.e get to the first stage of enlightenment the Buddha says, 'See monks, see how much dirt there is in this great earth and you see under my finger nails there is little dirt there. Which is greater, O monks the amount in the earth or under my fingernails?' The monks are very smart (laughter), 'The amount in the earth is more.' 'Indeed monks, you are right. This little bit here is the amount of suffering left for the sotapana, stream-enterer,' first stage of enlightenment. That is how much is left compared to the amount of dirt on the earth. One who is still in the samsara, totally ignorant in the round of suffering has much suffering as dirt in the earth. You (the Sotapana) are headed for the exit.
Q: what are the final five fetters?
Attachment to meditations - rupa jhana, arupa jhana, ignorance, conceit and restlessness. The restlessness we are talking about here is the mildest movement of the mind at all. The arahant has no movement of the mind, unless one wishes to think this - one does not think. You know when we sit down out mind is still moving like the wind blowing. It just never stops. In a pathological condition, it is a hurricane. In ordinary conditions, it is gale, it is a gust, it is a breeze. By the third stage of enlightenment, It an occasional waft of breeze. A very small movement - we call it restlessness but it is not what ordinary people call restlessness. That fetter is there. It is just a potential, it is not there all the time. Fetters are a deep chain or rope that has roots. The hindrance is when it is active. When we say the five hindrances, thats when it is active. when you are actually angry. The fetter is its latent possibility. You could get angry. You may not get angry for a month but because you have a fetter you still have the potential for getting angry. When it is active it is called a hindrance when it is latent it is called a fetter. So you are attached to blissful states of meditation, you have a slight tendency of the mind to move, still very lightly you have ignorance. You must be ignorant because you are not an arahant. You still have something that is not fully transparent to you. Otherwise you wouldn't have restlessness, conceit or even a mild attachment to refined meditations. It does not mean arahants do not meditate anymore. They meditate. The Budhha meditated. He'd go off for months and do a retreat . Why is he meditating? Because it is restful to the mind. Being active, sights, sounds, smells, taste, touch - these interactions take physical battery power. The arahant natural tendency is to stay in meditation and the mind is still in jhana but they are not attached. So if somebody comes along and says can I have a teaching they don't think 'Damn! You are interfering with my meditation.' They don't think that. They are not attached to that. But that is where they tend to prefer to stay, remain in their time.. Don't imagine that you get over this need to meditate or you don't meditate anymore. They meditate.
* * * * * *