நற்செயல்

அட்டாங்க மார்க்கம் முகப்பு

நற்செயல் (சம்மாகம்மந்த)

Right Action (Samma Kammanta)

English

இந்தப் பிரிவு உடல் செய்கை சம்பந்தப் பட்டது. இது மூன்று பகுதிகளைக் கொண்டது.

1. உயிர்க்கொலை செய்வதைத் தவிர்த்தல்.

அதாவது மற்ற உயிரினங்களைக் கொல்லாது இருத்தல். உயிரினங்கள் என்பது மனிதர்கள் மட்டுமல்லாமல், மிருகங்களையும், புலன்களால் உணரக்கூடிய எல்லா உயிரினங்களையும் சேர்த்ததாகும். வேட்டையாடுவது, மீன்பிடிப்பது போன்றவற்றைத் தவிர்த்தல்.

2. கொடுக்காத எப்பொருளையும் எடுக்காது இருத்தல்.

அதாவது திருடுதல், ஏமாற்றுதல், பிறரைச் சுரண்டி வாழ்தல், சட்ட விரோதமாகவும், வஞ்சகமாகவும் செல்வம் சேர்த்தல் போன்றவற்றைத் தவிர்த்தல்.

3. தவறான பாலியல் உறவுகளைத் தவிர்த்தல்.

விபசாரம், கற்பழித்தல் போன்ற தவறான பாலியல் செயல்களைச் செய்யாதிருத்தல். துறவு பூண்டவர்கள் பாலியல் உறவுகளை முழுமையாகத் தவிர்த்தல்.

நற்செயல் மற்றும் நல்வாய்மை ஆகிய பிரிவுகள் எதிர்மறையான கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், சற்றுப் பிரதிபலித்த பின்னர் ஒன்றைச் செய்யாது தவிர்க்கும்போது அதனால் பெரும் சக்தி வாய்ந்த மனப் போக்குகள் உண்டாவதைக் காணலாம். உதாரணமாக:

1. எந்த உயிரையும் கொல்லாதிருத்தல்.

கருணையோடு வாழ்வதாக உறுதி கொள்கிறோம். மற்ற உயிர்களின் வாழ்க்கைக்கு மதிப்பளிக்கின்றோம்.

2. திருடுவதைத் தவிர்த்தல்:

இதற்கு நேர்மறையானது நேர்மையோடு வாழ்வதாக உறுதியெடுப்பதாகும். மற்றவரின் பொருள்கள் மீது அவர்களுக்குள்ள உரிமைக்கு மதிப்பளிக்கின்றோம்.

3. தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்.

வாய்மையோடு வாழ்வதாக உறுதி எடுக்கின்றோம்.