தருமம் Dhamma

Dhamma

தருமம்

17

What is Dhamma? Nothing isn’t.

தருமம் என்றால் என்ன? ஏதும் இல்லாதது என்பது இல்லை.

18

How does the Dhamma teach the proper way of life? It shows us how to live. It has many ways of showing it - on rocks or trees or just in front of you. It is a teaching but not in words. So still the mind, the heart, and learn to watch. You’ll find the whole Dhamma revealing itself here and now. At what other time and place are you going to look?

வாழ்க்கைக்கான சரியான வழிமுறையைத் தருமம் எப்படிக் கற்றுக் கொடுக்கிறது? வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று அது நமக்குக் காட்டுகிறது. பல வழிகளில் காண்பிக்கிறது - பாறைகளில் அல்லது மரங்களில் அல்லது உங்கள் முன்னால். அது எழுதப் படாத ஒரு போதனை. அதனால் எண்ணங்களையும் உள்ளத்தையும் அமைதிப் படுத்திக் கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். தானாகவே இங்கேயே இப்போதே முழு தருமமும் உங்கள் முன்னால் தெளிவாகும். வேறு எப்போது, எங்கு தேடப்போகிறீர்கள்?

19

First you understand the Dhamma with your thoughts. If you begin to understand it, you will practice it. And if you practice it, you will begin to see it, you are the Dhamma and you have the joy of the Buddha.

முதலில் தருமத்தை உங்கள் எண்ணங்களால் புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் போதே அதன் வழி நடக்க ஆரம்பிப்பீர்கள். வழி நடக்க ஆரம்பிக்கும் போது தருமத்தைப் பார்க்கவும், நீங்கள் தான் தருமம் என்பதையும், புத்தரின் மகிழ்ச்சி உங்களுள் பொங்குவதையும் அறிவீர்கள்.

20

The Dhamma has to be found by looking into your own heart and seeing that which is true and that which is not, that which is balanced and that which is not balanced.

தருமத்தை உங்கள் உள்ளத்தினுள் ஊடுருவிப் பார்த்துக் கண்டுப்பிடிக்க வேண்டும். எது உண்மை எது உண்மையல்ல என்பதையும் எது சமநிலையில் உள்ளது எது சமநிலை யற்றது என்பதையும் கவனிக்க வேண்டும்.

21

There is only one real magic, the magic of Dhamma. Any other magic is like the illusion of a card trick. It distracts us from the real game: our relation to human life, to birth, to death and to freedom.

தருமம் என்கிற வித்தை ஒன்று மட்டும் தான் உண்மையான வித்தை. மற்ற வித்தைகளெல்லாம் சீட்டு விளையாட்டின் தந்திரங்கள் போலத்தான். உண்மையான விளையாட்டிலிருந்து நமது கவனத்தை அவை திசை திருப்புகின்றன. மனித வாழ்வின் மேல் உள்ள நமது உறவு, பிறப்பு, இறப்பு மற்றும் சுதந்திரம் தான் உண்மையான விளையாட்டு.

22

Whatever you do, make it Dhamma. If you don’t feel good, look inside. If you know it’s wrong and still do it, that’s defilement.

நீங்கள் எதைச் செய்தாலும் அதைத் தருமத்தின் அடிச்சுவட்டில் செய்யுங்கள். ஒரு செயலைச் செய்யும் போது அது சரி என்று தோன்றவில்லையென்றால் மனதினுள் நோக்குங்கள். தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்தீர்களென்றால் அது தூய்மையைக் கெடுப்பதாகும்.

23

It’s hard to find those who listen to Dhamma, who remember Dhamma and practice it, who reach Dhamma and see it.

தருமத்தைக் கேட்பவரும், நினைவு கொள்பவரும், அதன்வழி நடப்பவரும், அதைச் சேர்ந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவரும் மிகச்சிலரே.

24

It’s all Dhamma if we have mindfulness. When we see the animals that run away from danger, we see that they are just like us. They flee from suffering and run towards happiness. They also have fear. They fear for their lives just as we do. When we see according to truth, we see that all animals and human beings are no different. We are all mutual companions of birth, old age, sickness, and death.

மன விழிப்போடு இருந்தால் எல்லாமே தருமமாக தெரியும். அபாயத்திலிருந்து தப்பி ஓடும் மிருகங்களைப் பார்க்கும் போது அவைகளும் நம்மைப்போலத்தானென்று தெரிந்து கொள்கிறோம். மிருகங்களும் துக்கத்தைத் தவிர்த்தும் மகிழ்வை நோக்கியும் ஓடுகின்றன. அவைகளுக்கும் அச்சம் இருக்கிறது. நம்மைப்போலத்தான் அவைகளும் தங்கள் உயிருக்காக அஞ்சுகின்றன. உண்மையில் மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. நாம் எல்லாம் பிறப்பின், முதுமையின், நோய்வாய்ப்படுவதின், இறப்பின் அன்னியோன்னியக் கூட்டாளிகள் தான்.

25

Regardless of time and place, the whole practice of Dhamma comes to completion at the place where there is nothing. It’s the place of surrender, of emptiness, of laying down the burden. This is the finish.

எக்காலத்திலும், எவ்விடத்திலும் தருமம் என்பது ‘ஏதுமற்ற’ இடத்தில் தான் முடிவுக்கு வருகிறது. சரணடைய, காலிசெய்ய, பாரத்தை இறக்க வேண்டிய இடம் இதுவே. இதுவே முடிவடையும் இடம்.

26

The Dhamma is not far away. It’s right with us. The Dhamma isn’t about angels in the sky or anything like that. It’s simply about us, about what we are doing right now. Observe yourself. Sometimes there is happiness, sometimes suffering, sometimes comfort, sometimes pain …this is the Dhamma. Do you see it? To know this Dhamma, you have to read your experiences.

தருமம் வெகு தூரத்தில் இல்லை. நம்மிடமே இருக்கிறது. தருமம் என்பது வானத்தில் இருக்கும் தேவதூதர் போன்றவரைப் பற்றிய செய்தி அல்ல. நம்மைப் பற்றி நாம் தற்போது செய்வதைப் பற்றித்தான். சில சமயம் மகிழ்ச்சி இருக்கும், சில சமயம் துக்கம்இருக்கும், சில சமயம் ஆறுதல் இருக்கும் சில சமயம் வேதனை இருக்கும் - இதுதான் தருமம். தெரிகிறதா உங்களுக்கு? இந்தத் தருமத்தை அறிந்து கொள்ள உங்கள் அனுபவங் களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

27

The Buddha wanted us to contact the Dhamma, but people only contact the words, the books and the scriptures. That is contacting that which is "about" Dhamma, and not contacting the "real" Dhamma as taught by our Great Teacher. How can people say that they are practicing well and properly if they only do that? They are a long way off.

புத்தர் நம்மைத் தருமத்துடன் தொடர்பு கொள்ளச் சொன்னார். ஆனால் மக்கள் வார்த்தைகளுடனும், புத்தகங்களுடனும், வேதாகம நூட்களுடனும் தான் தொடர்பு கொள்கிறார்கள். அதாவது தருமத்தைப் பற்றியவையுடன் தான் தொடர்பு கொள்கின்றனர். நம் மகத்தான ஆசிரியர் கற்றுத் தந்த உண்மையான தருமத்துடன் அல்ல. இப்படி மட்டுமே இருக்கும் போது எப்படி மக்கள் தரும வழியில் சரியாக நடப்பதாகக் கூறமுடியும்? அவர்கள் தொலை தூரத்தில் இருக்கிறார்கள்.

28

When you listen to the Dhamma you must open up your heart and compose yourself in the center. Don’t try to accumulate what you hear or make a painstaking effort to retain what you hear from memory. Just let the Dhamma flow into your heart as it reveals itself, and keep yourself continuously open to its flow in the present moment. What is ready to be retained will be so, and it will happen of its own accord, not through any determined effort on your part.

தருமத்தைக்கேட்கும் போது உள்ளத்தைத் திறந்து, அமைதியை மையப் படுத்திக் கொள்ளுங்கள். கேட்பதைச் சேகரிக்கவும் நினைவில் நிறுத்திக் கொள்ளவும் சிரமப் படாதீர்கள். தருமம் தெளிவாகிக் கொண்டிருக்கும் போது அதை உள்ளத்துள் ஓட விடுங்கள். தொடர்ந்து நிகழும் தற்போதைய தருமத்தின் ஓட்டத்தை ஏற்க எப்போதும் மனதைத் திறந்தே வைத்திருங்கள். மனதில் பதியத்தக்கவை உங்கள் முனைப்பான முயற்சி ஏதுமின்றியே தானாகப் பதிந்து விடும்.

29

Similarly when you expound the Dhamma, you must not force yourself. It should happen on its own and should flow spontaneously from the present moment and circumstances. People have different levels of receptive ability, and when you’re there at that same level, it just happens, the Dhamma flows. The Buddha had the ability to know people’s temperaments and receptive abilities. He used this very same method of spontaneous teaching. It’s not that he possessed any special superhuman power to teach, but rather that he was sensitive to the spiritual needs of the people who came to him, and so he taught them accordingly.

அதேபோலத் தருமத்தை விரிவாக விளக்கும் போது கட்டாயப்படுத்திக் கூறாதீர்கள். அது தானாகத் தற்காலச் சூழ்நிலைகளிலிருந்து நிகழ வேண்டும். கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை ஒருவருக்கொருவர் மாறுபட்டிருக்கும். சம நிலையில் இருக்கும் போது தருமத்தின் ஓட்டம் இயல்பாக நடைபெறும். மக்களின் புரிந்து கொள்ளும் தன்மையையும், மனப்பாங்கையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் புத்தரிடம் இருந்தது. இந்த இயல்பாக் கற்பிக்கும் முறையைத்தான் அவர் பயன்படுத்தினார். அவரிடம் மனிதத் தன்மையை மீறிக் கற்றுக்கொடுக்கும் சிறப்பு ஆற்றல் ஏதும் இருக்க வில்லை. தன்னிடம் வரும் மக்களின் ஆன்மீகத் தேவைகளை அவர் துல்லியமாக உணர்ந்திருந்ததால் அதற்கேற்பக் கற்றுக் கொடுத்தார்.