இந்த மனத்தைப் பற்றி...
அஜான் சா
About This Mind...
Ajahn Chah
இந்த மனத்தைப் பற்றி.. உண்மையில் அதில் தவறேதும் இல்லை. அது இயல்பாகவே தூய்மையானது. அதனுள் அது ஏற்கனவே அமைதியாக இருக்கிறது. மனோபாவங்களைத் தொடர்கிறபடியால் தான் இப்போது அது அமைதியற்றிருக்கிறது. உண்மையான மனம் சிக்கலற்றது, அதுவே இயற்கை (இயற்கையின் ஓர் அம்சம்). மனோபாவங்களால் ஏமாற்றப்பட்டு அது அமைதியாகவோ அல்லது கிளர்ச்சியடைந்தோ காணப்படுகிறது. பயிற்சி அளிக்கப்படாத மனம் மூடத்தனமான மனம். புலன் பதிவுகள் வந்து அதனை மகிழ்ச்சிக்குள்ளாக்கி, துன்புறுத்தி, ஆனந்தம் கொள்ளச் செய்து, துயரடைய வைத்து ஏமாற்றி விடுகின்றன, ஆனால் மனத்தின் உண்மையான இயல்பு இவை ஏதும் இல்லை. அந்த ஆனந்தமோ துக்கமோ மனம் ஆகாது, அவை மனத்தில் தோன்றி நம்மை ஏமாற்றும் மனோபவங்கள் மட்டுமே. பயிலப்படாத மனம் இவற்றைத் தொடர்ந்து ஓடித் தன்னையே மறந்து தொலைந்துவிடுகிறது. பின் நாம் தான் கிளர்ச்சியடைந்ததாகவும், ஆறுதலோடு இருப்பதாகவும், வேறு விதமாக இருப்பதாகவும் நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால் உண்மையில் நமது மனமானது அசைவில்லாமலும், அமைதியோடுமே உள்ளது... ஆம். உண்மையிலேயே மனம் அமைதியானது! ஒரு இலை காற்றடிக்காதவரை அசைவில்லாமல் இருப்பதைப் போல. காற்றடித்ததும் இலை அசைகிறது. காற்றின் காரணமாகத்தான் அசைவு தோன்றுகிறது - அந்த "அசைவு" புலன் பதிவுகளின் (புலன்களால் ஏற்படும் மனப் பதிவுகள்) காரணமாகத்தான், மனம் அவற்றைத் தொடர்கிறது. அவற்றைத் தொடராவிட்டால் அது "அசையாது". புலன் பதிவுகளின் உண்மையான இயல்பை முழுமையாக அறிந்தால், நாம் அசைய மாட்டோம்.
நமது பயிற்சி அந்த மூலாதார மனத்தைப் பார்க்க முயல்வதுதான். எனவே அந்தப் புலன் பதிவுகளைக் காண மனத்திற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதை அமைதியாக்க வேண்டும். நாம் கடினமாகப் பயிற்சி செய்வதெல்லாம் இந்தக் குறிக்கோளை எட்டுவதற்கே.
* * * * * *
About this mind... In truth there is nothing really wrong with it. It is intrinsically pure. Within itself it's already peaceful. That the mind is not peaceful these days is because it follows moods. The real mind doesn't have anything to it, it is simply (an aspect of) Nature. It becomes peaceful or agitated because moods deceive it. The untrained mind is stupid. Sense impressions come and trick it into happiness, suffering, gladness and sorrow, but the mind's true nature is none of those things. That gladness or sadness is not the mind, but only a mood coming to deceive us. The untrained mind gets lost and follows these things, it forgets itself. Then we think that it is we who are upset or at ease or whatever.
But really this mind of ours is already unmoving and peaceful... really peaceful! Just like a leaf which is still as long as no wind blows. If a wind comes up the leaf flutters. The fluttering is due to the wind — the "fluttering" is due to those sense impressions; the mind follows them. If it doesn't follow them, it doesn't "flutter." If we know fully the true nature of sense impressions we will be unmoved.
Our practice is simply to see the Original Mind. So we must train the mind to know those sense impressions, and not get lost in them. To make it peaceful. Just this is the aim of all this difficult practice we put ourselves through.
* * * * * *
© Copyright
Provenance: ©1991 The Sangha. Third impression, 1991. Transcribed from the print edition in 1994 by W.D. Savage & Jane Yudelman under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"A Taste of Freedom", by Ajahn Chah. Access to Insight, 7 June 2010, http://www.accesstoinsight.org/lib/thai/chah/atasteof.html . Retrieved July 2013
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/