பத்து முழுநிறைவானவை (பாரமி)
பத்து முழுநிறைவானவை (பாரமி)
(அவற்றிற்கு உவமானங்கள்)
ஹெல்முத் ஹெக்கர்
Paramita: The Ten Perfections
A commentary on Similes in the Pali Canon, by Helmuth Hecker
(A symbol for each perfection)
பத்து முழுநிறைவானவை: பாலி (ஆங்கிலம்) தமிழ்
Dana (generous action) தயாள குணம்
Sila (virtue) ஒழுக்கம்
Nekkhamma (renunciation) துறத்தல்
Pañña (wisdom, discernment) நுண்ணறிவு
Viriya (energy, effort) வன்மை
Khanti (patience) பொறுமை
Sacca (truthfulness) வாய்மை
Adhitthana (determination, resolution) சங்கற்பம்
Metta (goodwill, loving-kindness) அன்பு
Upekkha (equanimity) சமத்துவம்
பத்து முழுநிறைவானவைக்கு உவமானங்கள்:
The Similies for the ten perfections:
1. Dana (generous action) தயாள குணம்
தண்ணீர் நிறைந்த பானையைத் தலைகீழாகக் கவிழ்க்கும் போது நீர் முழுதும் கொட்டி விடுகிறது. கொட்டிவிட்ட தண்ணீர் பானைக்குத் திரும்பப் போவதில்லை. அது போலவே முழுமையான தயாள குணமென்பது இருப்பதனைத்தையும் கொடுத்துவிட்டாலும் எந்தப் பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் இருப்பதுதான்.
Just as a water pot turned upside down lets
all the liquid run out and takes none of it back,
so the perfection of generosity consists of not
having the slightest expectation of return of
what has been given away, even if one
sacrifices absolutely everything.
2. Sila (virtue) ஒழுக்கம்
யாக் ( இமய மலையில் வாழும் ஒரு வகை எருமை) தன் அடர்த்தியான முடி கொண்ட வால் புதரில் சிக்கிக் கொண்டால் வெடுக்கென்று அதைப் பிடுங்கிக் கொள்ளாமல் பொறுமையாகத் தன் வாலை விடுவித்துக் கொள்ளவே முயற்சிக்கும். அது போலவே ஒழுக்கத்தை முழுமையாக்குவதென்பது உலக விஷயங்களில் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தொடர்பினை அறிந்து செயல்படுவதாகும். நமக்கு வேண்டியது கிடைக்காவிட்டாலும் கூட அதை வன்முறையால் எடுத்துக் கொள்ளக் கூடாது.
Just as a yak whose bushy tail is caught
somewhere doesn't tear it off violently
but tries to loosen it carefully,
so the perfection of virtue consists in
being always careful about interconnections
with the world and in going without rather
than getting one's rights by force.
3. Nekkhamma (renunciation) துறத்தல்
சிறையில் உள்ளவன் வேறு எதையும் விரும்பாமல் சிறையை விட்டு வெளிச் செல்வதிலேயே குறியாக இருப்பான். அது போலவே நிலையாமையென்ற சிறைக்குள் அடைபட்டிருக்கும் நாம் அதை விட்டு வெளியேற வேண்டும் என்று விழைவதே துறத்தலின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.
Just as one imprisoned in jail does not desire
anything more intensely than to get out of
there, so the perfection of renunciation consists
in the longing to get out of the prison of
impermanence and of having only the one
wish; to get rid of it.
4. Pañña (wisdom, discernment) நுண்ணறிவு
உணவுக்காகப் பிச்சா பாத்திரம் ஏந்திச் செல்லும் ஒரு துறவி ஏழை, பணக்காரர் என்ற வேறு பாடின்றி எந்த வீட்டையும் புறக்கணிக்காமல் எல்லா வீடுகளுக்கும் செல்வார். அது போலவே நுண்ணறிவை முழுமையாக்க விரும்புவோர், அவர்களைவிட அறிவுடையோர் அனைவரிடமும் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பார்கள். வயதில் இளையவராக இருந்தாலும் தங்களைவிட நுண்ணறிவு உள்ளவராக இருந்தால் அவர்களிடமும் கற்கத் தயங்க மாட்டார்கள்.
Just as a monk on alms round neglects no
house but goes without exception
to all families, so the perfection of wisdom
consists in leaving nothing out,
and of being prepared to learn from
all wise people and from those more advanced,
however young they may be.
5. Viriya (energy, effort) வன்மை
நிற்கும் நிலை, உட்காரும் நிலை, படுத்திருக்கும் நிலை, நடக்கும் நிலை ஆகிய நான்கு உடல் நிலைகளிலும் எப்படி ஒரு சிங்கம் கம்பீரமான தோற்றமுடையதாக இருக்கிறதோ அது போலவே வன்மை என்ற பண்பினை முழுமையாக்குவ தென்பது எல்லாச் சூழ்நிலைகளிலும் திறனற்ற நடத்தையை எதிர்த்துப் போரிட்டு வெற்றி காண்பதே ஆகும்.
Just as a lion marshals his strength evenly in
all four postures, so the perfection of energy
consists in maintaining the battle
against one's own drives in every situation
and of proving oneself stronger than they.
6. Khanti (patience) பொறுமை
எப்படி இந்த மாபெரும் பூமி, எத்தகைய அருவருக்கத் தக்கவற்றையெல்லாம் பொறுமையாக ஏற்றுக்கொள்கிறதோ அதே போல நம்மை யார் எத்தகைய அவதூறு பேசினாலும், அவமதித்தாலும் அவற்றை எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டு போக விடுவதே பொறுமையின் முழுமை.
Just as the great earth bears even the most
disgusting things, so the perfection of patience
consists in accepting slander and every
dishonor without resistance,
and letting them pass.
7. Sacca (truthfulness) வாய்மை
பல நூற்றாண்டு காலங்கள் கடந்தோடி விட்டாலும், கிரகங்கள் தங்களுக்கென நிறுவப்பட்ட சுற்றுப் பாதையிலிருந்து சற்றும் விலகாமல் எப்படிச் சுழல்கின்றனவோ அதே போல எத்தகைய சூழ்நிலையிலும் பொய் பேசாமலும், மரண அச்சுறுத்தல் வந்தாலும், அஞ்சாமலும், மனம் தளராமலும் வாய்மையை விட்டுச் சற்றும் பிறழாமலும் இருப்பதுவே வாய்மையின் முழுமை.
Just as a planet in spite of the turning of the
year never strays from its predetermined
orbit, so the perfection of truthfulness
consists in not lying under any circumstances
and not moving even an inch, because of any
kind of advantage, from the truth, even though
one may be threatened with death.
8. Adhitthana (determination, resolution) சங்கற்பம்
ஏத்தகைய சூறாவளிக் காற்றடித்தாலும் ஒரு மலை எப்படி நகராமல், அசையாமல் அதே இடத்தில் நிலைத்து நிற்கிறதோ அதே போல நமது சங்கற்பங்கள் நிறைவேறும் வரை அசைக்க முடியாத உறுதியோடு எவற்றாலும் திசை திரும்பாமல் இருப்பது தான் சங்கற்பம் என்ற பண்பின் முழுமை.
Just as a mountain stands immobile and firm
even in strong winds and is impossible to
throw over in a storm, so the perfection of
determination consists in remaining unshakable
in one's wholesome resolutions and not
be distracted by anything.
9. Metta (goodwill, loving-kindness) அன்பு
மழை எப்படி நேர்மையானவர் மீதும் நேர்மையற்றவர் மீதும் வேறுபாடின்றிப் பொழிந்து அவர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகின்றதோ அதே போல நண்பர்களிடத்தும், விரோதிகளிடத்தும் எவ்வித வேறுபாடுமின்றி நேசம் காட்டுவதே அன்பின் முழுமையாகும்.
Just as rain refreshes both just and unjust
persons without discrimination,
so the perfection of love consists in including
friends and foes alike
and not making distinctions in loving.
10. Upekkha: (Equanimity) பேதமற்ற மனநிலை
இந்த மாபெரும் பூமி தன் மீது தூய்மையான வற்றையோ தூய்மையற்றவற்றையோ எதைக் கொட்டினாலும் ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொள்வதைப் போல, பேதமற்ற மனநிலையின் முழுமை என்பது நன்மையோ அல்லது தீமையோ எது நிகழ்ந்தாலும், அளவற்ற எதிர்ப்போ, எல்லையற்ற மகிழ்ச்சியோ காட்டாமல் எப்போதும் சீரான அமைதியுடன் இருப்பது தான்.
Just as the great earth remains unmoved,
whether one throws pure or impure things
onto it, so the perfection of equanimity
consists in withstanding either bad luck
or the greatest fortunes
without repulsion or attraction, but always evenly tranquil.
* * * * * *