புத்தரின் வார்த்தைகள் 1-31

புத்தரின் வார்த்தைகள்

புனித பௌத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை

ஆங்கிலத்தில் வணக்கத்துக்குரிய எஸ். தம்மிக்கா

தமிழில் திரு தி. சுகுணன், எம். ஏ.

THE WORDS OF THE BUDDHA

Daily Readings from the Buddhist Scriptures

By Bhante S. Dhammika

சனவரி 1-31

January 1-31

1. உங்களுக்குத் திருப்தியளிக்கக் கூடிய வகையில் போதிக்கும் ஆசிரியர் இல்லையென்றால், திண்ணமான இவ்வறத்தை எடுத்துக் கடைபிடியுங்கள்! ஏனெனில், இவ்வறம் உறுதியானது. இதனைச் சரியான முறையில் கடைப்பிடித்தால் இது உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு நலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

If you have no satisfactory teacher, then take this sure Dhamma and practice it. For Dhamma is sure, and when rightly undertaken it will be to your welfare and happiness for a long time. M.I,401

2. "இவ்வுலகமே நீரால் நிறைந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்பொழுது ஒருவன் துளையுள்ள ஒரு நுகத்தடியைத் தண்ணீரில் போடுகிறான். காற்றடிப்பதால் அந்நுகத்தடி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லாத் திசைகளிலும் அலைக்கழிக்கப்படுகிறது. இச்சூழ்நிலையில் நூறாண்டுகளுக்கு ஒரு முறை நீரின் மேற்பரப்புக்கு வருகின்ற ஒரு குருட்டு ஆமை, தன் தலையை அந்த நுகத்தடியிலிருக்கும் துவாரத்தின் வழியாக நுழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா?"

"அப்படி நடப்பதென்பது மிக அபூர்வமான காரியம் அண்ணலே!"

"அதைப்போலவே ஒருவன் மனிதராகப் பிறப்பதென்பதும் அபூர்வமான காரியம் தான். அதைப்போலவே முழுமையான அறிவு பெற்ற ஒரு ததாகதர், ஓர் அறிஞர், ஒரு புத்தர் உலகத்தில் பிறப்பார் என்பதும் அபூர்வமான காரியமே. அதைப்போலவே ஓர் அறம், ஓர் ஒழுக்கம், ஒரு ததாகதரால் போதிக்கபட்ட கட்டுப்பாடு மிக்க போதனை போதிக்கப்படுவதென்பதும் அபூர்வமான காரியமேயாகும். ஆனால், இப்பொழுது நீங்கள் மனிதராகவும் பிறந்திருக்கிறீர்கள்; ஒரு ததாகதர் பிறப்பெடுத்து ஒரு நல்லறத்தையும் போதித்திருக்கின்றார். ஆகையால், நீங்கள் கடினமாக உழைத்து அந்த நான்கு பேருண்மைகளை அறிந்து கொள்ள முயலுங்கள்."

"Imagine that the whole earth was covered with water, and that a man were to throw a yoke with a hole in it into the water. Blown by the wind, that yoke would drift north, south, east and west. Now suppose that once in a hundred years a blind turtle were to rise to the surface. What would be the chances of that turtle putting his head through the hole in the yoke as he rose to the surface once in a hundred years?"

"It would be very unlikely, Lord."

"Well, it is just as unlikely that one will be born as a human being. It is just as unlikely that a Tathagata, a Noble One, a fully enlightened Buddha should appear in the world. And it is just as unlikely that the Dhamma and discipline of the Tathagata should be proclaimed. But now you have been born as a human being, a Tathagata has appeared and the Dhamma has been proclaimed. Therefore, strive to realize the Four Noble Truths." S.V,456

3. மரணமற்ற தன்மைக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன!

அதைக் கேட்க முடிந்தவர் நம்பிக்கையுடன் வரட்டும்.

The doors of the Immortal are open.

Let those who can hear respond with faith. M.I,169

4. ஆசிரியரின் போதனைகளில் நம்பிக்கையுள்ள, அப்போதனைகளை இசைவுடன் ஏற்று நடக்கும் மாணவனின் எண்ணம் இதுவே: 'ஆசிரியர் தான் தலைவர், நான் மாணவன், அவருக்குத் தெரியும், எனக்குத் தெரியாது.'

ஆசிரியரின் போதனைகளில் நம்பிக்கை வைத்து அதில் இசைவுடன் வாழும் மாணவனுக்கு ஆசிரியரின் போதனை வளர்ச்சியைக் கொடுக்கிறது; பலத்தையளிக்கிறது. அவன் நினைப்பது: "மனித முயற்சியால் வெற்றி கொள்ளக் கூடியதை வெற்றி கொள்ளும் வரை போராடமுடியுமென்றால், என் தசை, தோல், எலும்பு, தசை நாண் ஆகியவை காய்ந்து அறுந்து போனாலும் மகிழ்ச்சியோடு முயற்சிப்பேன்!"

ஆசிரியரின் போதனைகளை நம்பி அதில் இசைவுடன் வாழும் மாணவன், இரண்டு விளைவுகளில் ஒன்றை எதிர்பார்க்கலாம். ஒன்று, இன்றே இங்கேயே ஆழ்ந்த அறிவு பெறுவது (அதாவது புத்த நிலை, நிர்வாண நிலை பெறுவது), அல்லது மறு பிறப்பிற்கான ஏதேனும் அடிப்படை இருந்தால், இவ்வுலகில் திரும்பி வராத நிலை எய்துவது (மேல் உலகம் ஒன்றில் மறு பிறப்பெடுப்பது).

For a disciple who has faith in the Teacher’s instruction and who lives in harmony with it, his thinking is: ‘The Teacher is the Lord, I am the disciple. The Lord knows, I do not.’ For a disciple who has faith in the Teacher's instruction and who lives in harmony with it, the Teacher's instruction is nourishing and strength-giving. The thinking is: ‘Gladly would I have my skin, bone and sinews wither and my flesh dry up, if only I can struggle until I win that which can be won by human effort.’ And for a disciple who has faith in the Teacher’s instruction and who lives in harmony with it, one of two results can be expected; profound knowledge here and now, or if there is any basis for rebirth remaining, the state of Non-Returning. M.I,480

5.

ஒழுக்கத்துடன் கூடிய நடத்தையைப் பற்றி அண்ணல் போதிக்கும் முறையே தனிச்சிறப்பானது.

ஒருவன் நேர்மையானவனாக, நன்றியுள்ளவனாக, ஏமாற்றாத, வீன்பேச்சு இல்லாமல், சாடையாக அல்லது சிறுமைப்படுத்தி பேசாமல், எப்பொழுதும் இலாபத்தோடு இலாபம் சேர்க்காதவனாக, புலன் கதவுகளை பாதுகாத்து, உணவு முறையில் மிதமிஞ்சாதவனாக, அமைதியை நிலை நாட்டுபவனாக, (சீலங்களை) பின்பற்றுபவனாக, சுறுசுறுப்பானவனாக, முயற்சியில் கடுமையான உழைப்புடையவனாக, தியானம் செய்பவனாக, விழிப்புடையவனாக, சரியான உரையாடல்களுடன் (பேச்சுகளுடன்) கவனமாக நடந்து, தடுமாறாமல், உறுதியாக, நியாயமானவனாக, பொருள் புலனால் ஏற்படும் மகிழ்ச்சிகளில் மிகுந்த ஆசை வைக்காது, விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

இவை தான் ஒரு மனிதனின் சரியான ஒழுக்கம் நிறைந்த நடத்தையைப் பற்றி விஞ்ச முடியாத போதனைகளாகும். இதில் அண்ணல் எல்லாவற்றையும் முழுமையாக உள்ளடக்கி இருக்கிறார். மேலும் இதில் அடங்க வேண்டியது எதுவுமே இல்லை. ஒழுக்க நெறியில் இப்படிப்பட்ட விசயங்களில் நம் அண்ணலைத் தவிர வேறெந்தத் துறவியும், பிராமணனும் நம் பேரறிவு பெற்ற அறிஞருக்கு நிகராக எதுவும் கூறிவிடவில்லை.

Unsurpassed is the Lord's way of teaching the Dhamma concerning one's proper conduct in virtue. One should be honest and faithful, without deception, chatter, hinting or belittling, not always ready to add gain to gain, but with the sense-doors guarded, moderate in food, a maker of peace, observant, active and strenuous in effort, a meditator, mindful, with proper conversation, steady-going, resolute and sensible, not hankering after sense pleasures, but mindful and prudent. This is the unsurpassed teaching concerning a person's proper ethical conduct. This the Lord fully comprehends and beyond it nothing lies to be further comprehended. And in such matters there is no other recluse or Brahmin who is greater or more enlightened than the Lord concerning ethical conduct. D.III,106-78*

6. "இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று அண்ணல் கேட்டார். "கண்ணாடியின் பயன் என்ன?"

" பிரதிபலிப்பதற்காக, ஐயா" பதிலளித்தார் இராகுலர்.

"அதுபோல உடலால், சொல்லால், மனத்தால் செய்ய வேண்டிய ஒரு செயலைக் கவனமாகச் பிரதிபலித்த (சிந்தித்த) பின்பே செய்ய வேண்டும்."

. “What do you think about this?” said the Lord. “What is the purpose of a mirror?” “It is for the purpose of reflection, sir”, replied Rahula. “Even so, an action to be done by body, speech or mind should only be done after careful reflection.” M.I,415

7. புனித மலைகள், காடுகள், சோலைகள்,

புனித மரங்கள், தலங்களுக் கெல்லாம்

அச்சம் நிறைந்ததால் மக்கள் செல்வர்.

ஆனால் அவை பாதுகாப்பான சரணாலய மன்று.

சிறந்த சரணாலயமுமல்ல.

அங்கு செல்வதால் ஒருவர்,

எல்லாத் துக்கத்திலிருந்தும் விடுதலை பெறார்.

புத்த, தம்ம, சங்கமென்னும் முத்திரை மணியில்

சரண மடைந்தோர் அறிவால் அறிவர்

நான்கு பேருண்மை:

துக்கம், அதன் காரணம், அதை வெற்றி கொள்ளும் நிலை,

அவ்வழி நடத்தும் அஷ்டாங்க மார்க்கம்.

பாது காப்பான சரணாலயமிது.

சிறந்த சரணாலயமிதில் சரணடைந் தாலே

துக்கமெலாம் விலகித் தூய்மை யடைவோம்.

To sacred hills, woods and groves,

To sacred trees and shrines

Do people go, gripped by fear.

But they are not safe refuges,

Not the best refuge.

Not by going there

Is one freed from all suffering.

But whoever takes refuge

In the Buddha, the Dhamma and the Sangha

Will understand with wisdom

The Four Noble Truths:

Suffering, its cause, its overcoming,

And the Noble Eightfold Path

Leading to its overcoming.

And this is a safe refuge,

It is the best refuge.

Having taken refuge here,

One is freed from all suffering.

Dhp.188-92

8. சூரியனும் சந்திரனும் தோன்றாத வரை, பேரொளியோ சுடரொளியோ இல்லை. ஒரே இருளாயும், பார்க்க முடியாத நிலையே இருந்தது. பகலோ இரவோ இல்லை. திங்களோ, இருவாரமோ, பருவகாலங்களோ வேறுபாடில்லாமல் இருந்தன. ஆனால் சூரியனும் சந்திரனும் வந்தவுடன் மிகச் சிறப்பான ஒளியுடன் கூடிய பிரகாசம் தோன்றியது. சுடரொளி தோன்றியது. இருள் ஒழிந்தது. பார்வையற்ற நிலை ஒழிந்தது. இரவு, பகல், மாதம், அரைமாதம், பருவகாலங்கள் - அவற்றிடையே வேறுபாடும் தெரிந்தது.

அதைப்போலவே, ததாகதர், நற்பண்பு சார்ந்த உயர் குடிமகன், முழுமையான பேரரறிவு பெற்ற புத்த பெருமான் தோன்றாதவரை அந்தச் சிறந்த ஒளி பிரகாசிக்கவே இல்லை; அந்தச் சிறந்த சுடரொளி இல்லவே இல்லை; இருளும் குருட்டுத் தன்மையுமே நிலவின. நான்கு பேருண்மைகள் பற்றி பிரகடனங்கள் இல்லை; போதனைகள் இல்லை; விரிவுரைகள் இல்லை. பகுப்பாய்வு இல்லை; எந்த விளக்கமுமே இல்லை. ஆனால், ததாகதர் நற்பண்பு சார்ந்த உயர் குடிமகன், முழுமையான அறிவு பெற்ற புத்த பெருமான் என்று தோன்றினாரோ அன்றே மாபெரும் ஒளி ஒளிரத் தொடங்கியது. பெருஞ் சுடரொளி ஒளித்தது; இருளும் குருட்டுத் தன்மையும் ஒழிந்தன. நான்கு பேருண்மைகள் பற்றி ஒரு பொதுப் பிரகடனம், பொது அறிவிப்பு வந்தது. ஒரு போதனை, ஒரு விரிவுரை, ஒரு பகுத்தாராய்வு வந்தது. அந்நான்கு பேருண்மைகளுக்கு ஓர் ஒளி மிகுந்த விளக்கமே அளிக்கப்பட்டது.

As long as the sun and the moon have not come to be, there is no shining forth of great light, no great radiance. Only darkness and blindness prevail. There is no day or night; no months, fortnights or seasons are distinguishable. But when the sun and the moon have come to be, then there is a shining forth of great light, of great radiance. Darkness and blindness are no more. Days, nights, months, fortnights and seasons are distinguishable.

In the same way, as long as the Tathagata, the Noble One, the fully enlightened Buddha, has not come to be, there is no shining forth of great light, no great radiance. Only darkness and blindness prevail. There is no proclaiming, no teaching, no explaining, no setting forth, no opening up, no analysis of or illuminating of the Four Noble Truths. But when the Tathagata, the Noble One, the fully enlightened Buddha has come to be, there is a shining forth of great light, of great radiance; darkness and blindness are no more. There is a proclaiming, a teaching, an explaining, a setting forth, an opening up, an analysis, an illuminating of the Four Noble Truths. S.V,442

9. அந்த நற்பண்பு சார்ந்த எட்டு வழிகளை நான் உங்களுக்குப் போதிக்கிறேன்; உங்களுக்காக அதை நான் பகுத்து அறிவிக்கிறேன். கவனமாகக் கேளுங்கள்! நான் உங்களுக்காக மொழிகிறேன். நற்பண்பு சார்ந்த எட்டு வழிகளென்றால் என்ன? அது முழுமையான பார்வை. முழுமையான எண்ணம். முழுமையான சொல். முழுமையான செயல். முழுமையான வாழ்க்கை முறை. முழுமையான முயற்சி. முழுமையான மனக்கட்டுப்பாடு. முழுமையான மனத்தை ஒருநிலைப் படுத்தல்.

நற் பார்வை என்றால் என்ன? துக்கத்தைப் பற்றிய அறிவு, துக்கத்திற்கான காரணம், துக்கத்தை வெற்றி கொள்ளும் நிலை, துக்கத்தை வெற்றி கொள்ளும் வழிமுறை.

முழுமையான எண்ணம் என்றால் என்ன? தியாகம் செய்யும் எண்ணம், அன்பு பற்றிய எண்ணம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம்.

நல்வார்த்தை என்றால் என்ன? அதுதான் பொய்ம்மையைத் தவிர்ப்பது, தேவையற்ற பேச்சை, கடுமையான வார்த்தைகளை, சோம்பேறித் தனத்துடன் அமர்ந்து கொண்டு வேண்டாத பேச்சுகள் பேசுவது போன்றவற்றைத் தவிர்ப்பது.

நற்செயல் என்றால் என்ன? அதுதான் கொலையைத் தவிர்ப்பது, களவைத் தவிர்ப்பது, முறையற்ற உடலுறவைத் தவிர்ப்பது.

நல்வாழ்க்கை என்றால் என்ன? இதன் தொடர்பாக ஒரு நற்பண்பு சார்ந்த மாணவன்/சீடன் தவறான வாழ்க்கை முறைகளை விடுத்து ஒழுக்கஞ் சார்ந்த வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பது.

நல்முயற்சி என்றால் என்ன? நல்முயற்சி என்றால் முயன்று, தீவிரமாக முயன்று மனத்தில் இதுவரை தோன்றாத தீய சக்திகள் நிறைந்த எண்ணங்களைத் தவிர்த்து, ஏற்கனவே உதித்துள்ள தீய எண்ணங்களை ஒழித்து, இதுவரை உதிக்காத திறமையுள்ள நல்ல நிலைகளை உருவாக்கி, இறுதியாக தீவிரமாக முயன்று, மனத்தைத் தொடர்ந்து ஒன்றுபடுத்தி ஏற்கனவே உதித்த திறமையுள்ள நல்ல நிலைகளை மேலும் வளர்க்க, முன்னேற்ற முயன்று முடித்தலே நல் முயற்சியாகும்.

முழுமையான நிறைந்த மனம் என்றால் என்ன? முழுமையான நிறைந்த மனம் என்றால், உடலில் உடலை, உணர்வில் உணர்வை, எண்ணத்தில் எண்ணத்தை, மனஞ்சார்ந்த நிலையை மனஞ்சார்ந்த நிலையில் எண்ணி, ஆர்வத்துடன், மனக்கவனத்துடன், உலகத்தில் உள்ள கவர்ச்சிகளாலும் வெறுப்புகளாலும் பாதிக்கப்படாமல் இருப்பதே நிறைந்த மனமாகும்.

மனத்தை முழுமையாக ஒருமுகப்படுத்தல் என்றால் என்ன? மனத்தை முழுமையாக ஒருமுக/நிலைப்படுத்தல் என்றால் நான்கு ஜான (மனத்தை ஒருமுகப் படுத்தப்படும் போது உள்ள ஆழ்ந்த அமைதி நிலைகள்) முறைகளைப் பேணி வளர்ப்பதேயாகும்.

I will teach you the Noble Eightfold Path; I will analyze it for you. Listen carefully and I will speak. And what is the Noble Eightfold Path? It is Perfect View, Perfect Thought, Perfect Speech, Perfect Action, Perfect Livelihood, Perfect Effort, Perfect Mindfulness and Perfect Concentration.

And What is Perfect View? It is the knowledge of suffering, the cause of suffering, the overcoming of suffering and the way to the overcoming of suffering. And what is Perfect Thought? It is the thought of giving up, the thought of love, and the thought of helpfulness. And what is Perfect Speech? It is the avoiding of lying, slanderous, harsh speech and of idle chatter. And what is Perfect Action? It is the avoiding of killing, stealing and sexual misconduct. And what is Perfect Livelihood? Concerning this, a noble disciple, by giving up wrong means of livelihood, adopts a perfect livelihood. And what is Perfect Effort? Concerning this, one puts forth the desire, makes an effort, strives, applies the mind and directs it to prevent the arising of evil unskilled states not yet arisen, to destroy evil unskilled states that have already risen, to arouse skillful states that have not yet arisen, and finally, puts forth the desire, makes an effort, strives, applies the mind and directs it towards the continuation, the unification, the growth, the development and the fulfillment of skillful states of mind. And what is Perfect Mindfulness? Concerning this, one abides contemplating body in body, feeling in feeling, mind in mind and mental states in mental states, ardent, clearly conscious so as to control the attraction and repulsion in the world. And what is Perfect Concentration? Concerning this one cultivates the four jhanas.

S.V,8

10. வானத்தில் எறியப்பட்ட ஒரு மண்கட்டி மறுபடியும் தரையில் விழுவது நிச்சயம். அதைப் போலவே புத்த பெருமானின் பொன்மொழிகள் உச்ச நிலையுடையவை; என்றும் நிச்சயமானவை; நம்பத் தகுந்தவை.

இருளும் இரவும் மறையும் போது சூரியன் உதிப்பான் என்பது உறுதி. அதைப் போலவே புத்த பெருமானின் உச்ச நிலையான பொன்மொழிகள் என்றும் உறுதியானவை; நம்பிக்கைக்குரியவை.

குகையிலிருந்து வெளியே வரும்போது சிங்கம் கர்ஜிக்கும் என்பது உறுதியானது. அதைப் போலவே புத்த பெருமானின் உயர்ந்த பொன்மொழிகள் என்றும் உறுதியானவை; நம்பிக்கைக்குரியவை.

. It is certain that a clod of earth

Thrown into the sky will fall to the ground.

So too, the words of the supreme Buddha

Are always certain and sure.

It is certain that the sun will rise

When the darkness of night fades away.

So too, the words of the supreme Buddha

Are always certain and sure.

It is certain that the lion will roar

As it emerges from its den.

So too, the words of the supreme Buddha

Are always certain and sure.

Ja.I,19*

11. 'இந்தக் கோட்பாடுகள் நல்ல வழியில் நடத்திச் செல்லவில்லை; பேராசையை ஒழிக்கவில்லை; அமைதி, எழுச்சியைக் கொடுக்கவில்லை; நிர்வாண நிலைக்கு அழைத்துச் செல்லவில்லை!' என்று நீங்கள் கூறினால், அவை அறமில்லை யென்று நீங்கள் உறுதியாக நம்பலாம். அவை போதனைகளல்ல; அவை ஆசிரியரின் வார்த்தைகளுமல்ல.

ஆனால், 'இந்தக் கோட்பாடுகள், போதனைகள், நல்ல வழியில் நடத்திச் செல்கின்றன, அமைதியைப் போதிக்கின்றன, மன நிம்மதியைக் கொடுக்கின்றன, மேலான அறிவைக் கொடுக்கின்றன. எழுச்சியை ஊட்டுகின்றன, நிர்வாண நிலைக்கு அழைத்துச் செல்கின்றன' என்று நீங்கள் கூறினால், அவையே உண்மையான அறம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். அவையே ஒழுக்க நெறிகள்; அவையே ஆசிரியரின் போதனைகள்.

The doctrines of which you can say: ‘These doctrines do not conduce to good, to turning away, to fading, to calming, to higher knowledge, or to Nirvana’ - you can be certain that they are not Dhamma, not discipline, not the word of the Teacher. But the doctrines of which you can say: ‘These doctrines do conduce to good, to turning away, to fading, to calming, to higher knowledge, or to Nirvana’ - you can be certain that they are Dhamma, they are discipline, they are the word of the Teacher. A.IV,143

12. எப்படி இந்த மாபெருங் கடல் ஒரே சுவையான உப்புச் சுவையை உடையதாக இருக்கிறதோ, அதே போல் இந்த அறமும் ஒரே சுவையை உடையதாக இருக்கிறது. அச்சுவை தான் விடுதலை என்னும் சுவை.

Just as the great ocean has one taste, the taste of salt, even so, this Dhamma has one taste too, the taste of freedom. Ud.56

13. ஒவ்வோர் உயிர்வாழ்வனவும், எனக்குத் தெரிந்ததைப்போல், தமக்குக் கிடைக்கும் வெகுமதிப் பொருட்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதின் பயனைத் தெரிந்துக்கொண்டால், பகிர்ந்துக்கொள்ளாமல் அப்பொருளை அனுபவிக்கமாட்டார்கள். கஞ்சத்தனத்தின் தடமின்றி, வதையின்றி மகிழ்ச்சியுடனிருப்பார்கள். அது அவர்களுடைய கடைசி ஒரு கவள உணவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள எவரேனுமிருந்தால், அதைப் பகிர்ந்து சாப்பிட்டால் மட்டுமே அதன் பயனையும் சுவையையும் அடைய முடியும்.

If beings knew as I know the results of sharing gifts, they would not enjoy their use without sharing them with others, nor would the taint of stinginess obsess the heart and stay there. Even if it were their last and final bit of food, they would not enjoy its use without sharing it, if there were anyone to receive it. It.18

14. "ஐயா, ஒரு தீய செயல் செய்யப்படுவதற்கு என்ன காரணம்? எதற்காக அது செய்யப்படுகிறது?" என்று மாகாலி அண்ணலைப் பார்த்துக் கேட்டான்.

"பேராசை, பகைமை, ஏமாற்றம், சரியான கவன மின்மை, தவறான வழியில் செல்லும் எண்ணங்களுக்கு இடம் கொடுத்தல் - இவையே தீச்செயல்களைச் செய்வதற்கான காரணங்கள்; காரண கர்த்தாக்கள்!"

"அழகான நற்செயலைச் செய்வதற்கான காரணம் எவை? எதற்காக அது செய்யப்படுகிறது?"

"பெருந்தன்மை, அன்பு, அறிவு, கவனம், சரியான வழியிலே அழைத்துச் செல்லும் எண்ணங்கள் இவையே அழகான நற்செயல்களைச் செய்வதற்கான காரணங்கள், காரணகர்த்தாக்கள்."

Mahali asked the Lord: “Sir, what is reason, what is the cause of doing, of committing an evil deed?”

“Greed, hatred, delusion, not paying proper attention and wrongly directed thoughts - these are the reasons, these are the causes of doing, of committing an evil deed.”

“Then what, Sir, is the reason, what is the cause of doing, of performing a beautiful deed?”

“Generosity, love, wisdom, paying attention and rightly directed thought. These are the reasons, these are the causes of doing, of performing a beautiful deed.”

A.V,86

15. ஒருவனைப் பெரும் நன்மைக்கு அழைத்துச் செல்லும் அறவழி எது? இதன் தொடர்பாக ஒரு பண்புள்ள மாணவர் இவ்வாறு நினைக்கின்றார்: 'இங்கே நான் இருக்கிறேன். வாழ விரும்புபவன், இறக்க விரும்பாதவன், மகிழ்ச்சியை மட்டுமே விரும்புபவன், வேதனையை விரும்பாதவன், என்னை எவரேனும் கொல்ல வந்தால் அதை விரும்பாதவன்; அதே போல நான் யாரையாவது கொலை செய்ய விரும்பினால் அதை அவர் விரும்பமாட்டார். எனக்கு இனிமையற்ற ஒன்று மற்றவர்க்கும் இனிமையற்றதாகத்தானே இருக்கும்? ஆகையால், அதனை நான் எப்படி மற்றவர் மீது சுமத்த முடியும்?'. இப்படிப்பட்ட பிரதிபலிப்பால் ஒருவர் கொலை செய்வதிலிருந்து விலகுகிறார், மற்றவரையும் கொலை செய்யாதிருக்க ஊக்குவிக்கிறார், கொலை செய்யாதிருப்பதைப் பாராட்டுகிறார், புகழ்கிறார்.

மறுபடியும் அந்நற்பண்பு வாய்ந்த மாணவர் இப்படிப் பிரதிபலிக்கிறார். 'என்னுடைய பொருட்களை யாரேனும் திருட முயன்றால் அதை நான் விரும்பமாட்டேன். அதே போல மற்றவர் பொருளை நான் திருட முயன்றாலும் அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆகையால், எனக்கு இனிமையற்ற ஒன்று, மற்றவர்க்கும் இனிமையற்றதாகத்தானே இருக்கும்? எனவே அதனை நான் எப்படி மற்றவர் மீது சுமத்த முடியும்?' இதன் காரணமாகத் திருடுவதைத் தடுக்கிறார். திருடாமையைக் கடைப்பிடிக்க மற்றவரை ஊக்குவிக்கிறார். திருடாமையைப் புகழ்கிறார்.

மறுபடியும் அந்நற்பண்பு சார்ந்த மாணவர் கீழ்கண்டவாறு நினைக்கிறார். 'மற்றவர் என் மனைவியுடன் உடலுறவு கொள்ள நினைத்தால் அதை நான் விரும்பமாட்டேன். அதேபோல் மற்றவர் மனைவியுடன் நான் உடலுறவு கொள்ள நினைத்தால் அதை அவர் விரும்பமாட்டார். ஆகையால், எனக்குத் தீமையான ஒன்று மற்றவர்க்கும் தீமையானதாகத் தானே இருக்கும். அப்படி இருக்கும் போது அதை எப்படி நான் மற்றவருக்குச் சுமையாக்க முடியும்?' அதை உணர்ந்த ஒருவர் தவறான உடலுறவைத் தவிர்க்கிறார்; சோரம் போகாதிருக்க ஒருவரை ஊக்குவிக்கிறார், அப்படிப் பட்ட நடத்தையைத் தவிர்ப்பதைப் பாராட்டுகிறார்; புகழ்கிறார்.

மறுபடியும் அந்நற்பண்பு சார்ந்த மாணவர் இப்படிப் பிரதிபலிக்கிறார். 'எனக்குக் கிடைக்கும் இலாபத்தை ஒருவர் பொய்பேசிக் கெடுக்க முயன்றால், அதை நான் விரும்பமாட்டேன். அதைப் போலவே, மற்றவருக்குக் கிடைக்கும் இலாபத்தை நான் பொய்கூறிக் கெடுக்க முயன்றால் அவரும் விரும்பமாட்டார். எனக்கு எவையெவை மகிழ்ச்சியை விளைவிக்காதோ, அவை மற்றவருக்கும் மகிழ்ச்சியை விளைவிக்காது' இதை உணர்ந்த ஒருவர் பொய்யைத் தவிர்க்கிறார்; பொய் பேசாதிருக்க ஒருவரை ஊக்குவிக்கிறார்; அப்படிப் பொய் பேசாதிருப்பதை பாராட்டுகிறார், புகழ்கிறார்.

மேலும், அந்நற்பண்பு சார்ந்த மாணவர் தொடர்கிறார் 'ஒருவர் என் நண்பர்களிடம் என் புகழைக் கெடுத்துக் குழப்பத்தை உண்டாக்கிக் கடுமையாகப் பேசி, பொருளற்ற அற்பமான வார்த்தைகளால் என் நட்பைக் கெடுத்தால் நான் விரும்பமாட்டேன். அதேபோல் நான் மற்றவருக்கு இதைச் செய்தால் அவர்களும் விரும்பமாட்டார்கள். எனக்கு மகிழ்ச்சி தராதது மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி தராது. அப்படியிருக்கும் போது நான் எப்படி அதை மற்றவருக்குச் சுமையாக்குவேன்?' இதனால் ஒருவர் மற்றவர் புகழைக் கெடுக்கிற கடுமையான பொருளற்ற வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்கிறார்; மற்றவரையும் அவ்வாறு நடக்கவிடாது ஊக்குவிக்கிறார். அப்படி பொருளற்ற வார்த்தைகளைப் பேசாதிருப்பதை பாராட்டுகிறார், புகழ்கிறார்.

What sort of Dhamma practice leads to great good for oneself? Concerning this, the noble disciple reflects: ‘Here am I, fond of life, not wishing to die, fond of pleasure and averse to pain. If someone killed me, I would not like it. Likewise, if I were to kill someone they would not like it. For what is unpleasant to me must be unpleasant to another, so how could I inflict unpleasantness on them?’ As a result of such reflection one abstains from killing, encourages others to abstain from it and speaks in praise of such abstaining.

Again, the noble disciple reflects: ‘If someone were to steal what was mine, I would not like it. Likewise, if I were to steal what belonged to someone else they would not like it. For what is unpleasant to me must be unpleasant to another and how could I inflict unpleasantness on them?’ As a result of such reflection one abstains from stealing, encourages others to abstain from it and speaks in praise of such abstaining.

Again, the noble disciple reflects: ‘If someone were to have intercourse with my spouse I would not like it. Likewise, if I were to have intercourse with another's spouse they would not like it. For what is unpleasant to me must be unpleasant to another and how could I inflict unpleasantness on them?’ As a result of such reflection one abstains from wrong sexual desire, encourages others to abstain from it and speaks in praise of such abstaining.

Once again, the noble disciple reflects: ‘If someone were to ruin my benefit by lying I would not like it. Likewise, if I were to ruin someone else’s benefit by lying they would not like it. For what is unpleasant to me must be unpleasant to another and how could I inflict unpleasantness on them?’ As a result of such reflection one abstains from lying, encourages others to abstain from it and speaks in praise of such abstaining.

A noble disciple reflects further: ‘If someone were to estrange me from my friends by slander, speak harshly to me, or distract me with pointless, frivolous chatter, I would not like it. Likewise, if I were to do this to another they would not like it. For what is unpleasant to me must be unpleasant to another and how could I inflict unpleasantness on them?’ As a result of such reflection one abstains from slander, harsh speech and pointless chatter, encourages others to abstain from it and speaks in praise of such abstaining.

S.V,353

16. பேராசையைச் சிறிது குறை சொல்ல வேண்டும். ஆனால், அது மெதுவாக மாறும்.

பகைமையை அதிகம் குறை கூறவேண்டும். ஆனால், அது விரைவாக மாறும்.

ஏமாற்றத்தையும் (மாயத்தையும்) நாம் அதிகம் குறை கூறவேண்டும். அது மெதுவாகத்தான் மாறும்.

Greed is to be slightly blamed but it is slow to change. Hatred is to be greatly blamed but it is quick to change. Delusion is to be greatly blamed and it is slow to change.

A.I,200

17. புலன் உணர்வுகளால், அவ்வப்போது மகிழ்ச்சியடையும் இல்வாழ்வோன் இந்த நான்கு விதமான மகிழ்ச்சிகளை அனுபவிக்கலாம். அந்த நான்கு எவை?

உரிமையாளன் என்ற மகிழ்ச்சி.

செல்வத்தால் ஏற்படும் மகிழ்ச்சி.

கடன்களிலிருந்து விடுதலை பெற்ற மகிழ்ச்சி.

பழியில்லா வாழ்க்கை நடத்தும் மகிழ்ச்சி.

உரிமையாளன் மகிழ்ச்சி என்றால் என்ன? ஓர் இல்வாழ்வோன் தன் சக்தியால் முயற்சித்துச் சேர்த்த செல்வம், தன் வியர்வையால் சேர்த்தது, நேர்மையாகச் சட்டபூர்வமாகச் சேர்த்த செல்வம், இவற்றை அவன் நினைக்கும் போது, மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுகின்றன. இதுவே உரிமையாளன் மகிழ்ச்சி என்பது.

செல்வத்தால் ஏற்படும் மகிழ்ச்சி என்றால் என்ன? ஒருவன் நேர்மையாகவும், சட்டபூர்வமாகவும் ஈட்டிய செல்வம், அச்செல்வத்தால் அவன் பல நற்காரியங்களைச் செய்கிறான். இதை நினைக்கும் போது அவனுக்கு மகிழ்சியும் திருப்தியும் ஏற்படுகின்றன.

கடன்களிலிருந்து விடுதலை யென்றால் என்ன? கடன்களிலிருந்து விடுதலை யென்றால், ஓர் இல்வாழ்வோன், சிறிய தொகையோ, அல்லது பெருந்தொகையோ எவரிடமும் கடன்படாமல் வாழும் வாழ்க்கையே, கடனிலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கையாம், அதை அவன் நினைக்கும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுகின்றன.

பழியற்ற மகிழ்ச்சி என்றால் என்ன? பழியற்ற மகிழ்ச்சி என்றால், நற்பண்பு நிறைந்த மாணவனுக்கு உடலால் நிகழும் பழியற்ற செயல்களை, பழியற்ற வார்த்தைகளை, பழியற்ற எண்ணங்களை அவன் நினைக்கும்போது, அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சியும் திருப்தியுமே.

There are these four kinds of happiness to be enjoyed by a householder who enjoys sense pleasures from time to time and when occasion offers. What four? The happiness of ownership, the happiness of wealth, the happiness of freedom from debt and the happiness of blamelessness. And what is the happiness of ownership? Concerning this, a householder has wealth acquired by energetic striving, won by strength of arm and sweat of brow, justly and lawfully. When he thinks of this he feels happiness and satisfaction. And what is the happiness of wealth? Concerning this, a householder has wealth justly and lawfully acquired, and he does many good works with it. When he thinks of this he feels happiness and satisfaction. And what is the happiness of freedom from debt? Concerning this, a householder owes no debts large or small to anyone, and when he thinks of this he feels happiness and satisfaction. And what is the happiness of blamelessness? Concerning this, the noble disciple is blessed with blameless action of body, speech and mind, and when he thinks of this he feels happiness and satisfaction.

A.II,67

18. அறிவும் கட்டுப்பாடு முடையோர்,

என்றும் இரக்கமும் அறிவுக்கூர்மையு முடையோர்,

பெருமை யொழித்து எளிமை காத்தால்,

பெயரும் மதிப்பும் பெறுவார் இப்படிப்பட்டோர்.

வைகறை எழுந்து சோம்பலைத் துறந்து,

கலகத்திலும் அமைதியாக இருந்து,

பழியற்ற குணமும் பணியில் சிறப்பும்,

பெயரும் மதிப்பும் பெறுவார் இவரே.

நண்பரைப் பெருக்கி நலமாய்க் காத்துப்

பலரையு மேற்றுப் பண்புடன் பகிர்ந்து,

அன்பு வழி காட்டி அறிஞனாய்க் கேண்மையாய்ப்

பெயரும் மதிப்பும் பெறுவார் இவரே.

தாராளம் காத்து அன்பொடு பேசி

நன்மையே எவர்க்கும் என்றுமே புரிந்தால்

ஏராள மானோரையும் ஏகமாய்ப் பார்த்தால்

பெயரும் மதிப்பும் பெறுவார் இவரே.

இவ்வாறான செயல்களாலே

உலகம் தடங்கலில்லாமல் செயல்படுகிறது

இரதத்தின் சுழலும் சக்கரம் பறந்துவிடாமல்

அதனை அச்சோடு இணைக்கும் அச்சாணியைப் போல.

One who is wise and disciplined,

Always kindly and intelligent,

Humble and free from pride,

One like this will win respect.

Rising early and shunning laziness,

Remaining calm in times of strife,

Faultless in conduct and clever in actions,

One like this will win respect.

Being able to make friends and keep them,

Welcoming others and sharing with them,

Being a guide, a philosopher and a friend,

One like this will win respect.

Being generous and kindly in speech,

Doing favors for others

And treating all alike,

These are the things that

Make the world turn smoothly

The way the linch-pin holds firm

The chariot’s spinning wheel.

D.III,192

19. நான்கு வகையான மக்கள் உலகில் வாழ்கின்றனர். அவர்கள் யார்?

முதலாமவர், தனக்கும் நன்மை செய்துகொள்ள மாட்டார், பிறர்க்கும் நன்மை செய்யமாட்டார்.

இரண்டாமவர், பிறர்க்கே நன்மை செய்வார்; தனக்கு ஒன்றுமே செய்து கொள்ள மாட்டார்.

மூன்றாமவர், தன்னுடைய நன்மையை மட்டுமே நாடுவார்; பிறர் நன்மையைக் கருதவே மாட்டார்.

நான்காமவர், தனக்கும் நன்மை செய்துகொள்வார், பிறர்க்கும் நன்மையே செய்வார்.

சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் விறகு இரண்டு முனைகளிலும் எரியும். நடுப்பகுதியில் சாணத்தின் (வறட்டி) கறை படிந்திருக்கும். இப்படிப்பட்ட கட்டையைக் கிராமத்திலும் சரி, காட்டிலும் சரி விறகாகப் பயன்படுத்தமாட்டார்கள். இதனைத் தனக்கும் பிறர்க்கும் உதவாத மனிதனுடன் ஒப்பிடலாம். (இப்படிப்பட்டவன் இல்வாழ்வோனாக இருந்தாலும், துறவியாக இருந்தாலும் வாழ்கையில் சரியா யாருக்கும் பயன்படமாட்டான்)

பிறர்க்கு மட்டும் நன்மை செய்து தனக்கு நன்மை செய்துகொள்ளாதவனை இவனைவிடச் சிறந்தவனாகக் கூறலாம்.

தன்னலம் மட்டும் போற்றிப் பிறர் நலம் கருதாதவன் இரண்டாமவனை விடச் சிறந்தவன்.

தன்னலமும் போற்றிப் பிறர்நலமும் கருதுபவனே இந்நால்வருள் தலைவன்; மிக உயர்ந்தவன்; சிறந்தவன்; உச்ச நிலையிலிருப்பவன்.

பசுவிலிருந்து பாலும், பாலிலிருந்து பாலேடும், பாலேட்டிலிருந்து வெண்ணையும், வெண்ணையிலிருந்து நெய்யும், நெய்யிலிருந்து ஆடை முதலிய கிடைத்தாலும் நெய்யின் ஆடையே சிறந்ததெனக் கூறுவது போல, தன்னலமும் கருதிப் பிறர் நலமும் போற்றுபவனே இந்நால்வருள் தலைவன்; சிறந்தவன்; உயர்ந்தவன்; மிக உயர்ந்தவன்; உச்ச நிலையிலிருப்பவன்.

There are these four types of people found in the world. What four? Those who are concerned neither with their own good nor the good of others, those who are concerned with good of others but not their own, those concerned with their own good but not that of others, and those who are concerned with both their own good and the good of others. Just as a stick from a funeral pyre, burning at both ends and smeared with dung in the middle, serves no useful purpose as fuel in the village or as timber in the forest- using such a simile do I speak of those concerned neither with their own good nor the good of the others. Those concerned with the good of others but not their own are more excellent and higher than this. Those who are concerned with their own good but not that of others are more excellent and higher still. But those who are concerned with both their own good and the good of others - they are, of these four persons, the supreme, the highest the topmost and the best. Just as from a cow comes milk, from milk cream, from cream butter, from butter ghee, and from ghee the skimming of ghee, which is said to be the best, even so, those who are concerned with their own good and the good of others are, of these four persons, the supreme, the highest, the topmost and the best. A.II,95

20. விரும்புகிற, ஆசைப்படுகிற, மனங் கவரத்தக்க, உலகில் கிடைக்க அரிதான பத்துப் பொருள்களை, இவை பத்தும் வளர்க்கும், எந்தப் பத்து?

சக்தியும் முயற்சியும் செல்வத்தை வளர்க்கும்.

ஆடம்பரமான ஆபரணங்களும் அலங்கரிப்பும் அழகைக் கொடுக்கும்.

சரியான நேரத்தில் சரியான வேலைகளைச் செய்தல் உடல் நலத்தைக் கொடுக்கும்.

அழகான சிறந்த நட்பு ஒழுக்கத்தைக் கொடுக்கும்.

புலன்களைக் கட்டுப்படுத்துவது புனிதமான வாழ்க்கைக்கு உதவும்.

சண்டை இடாமை நட்பை வளர்க்கும்.

திரும்பத் திரும்பப் படித்தல் பேரறிவை வளர்க்கும்.

காது கொடுத்துக் கவனித்துப் பல கேள்விகள் கேட்டால் அறிவை வளர்க்கும்.

படிப்பும் பரிசோதனையும் அறத்தை வளர்க்கும்.

ஒழுக்கமான நல்வாழ்க்கை உயர்ந்த நிலையில் மறு பிறப்பைக் கொடுக்கும்.

These ten things nourish the ten things that are desirable, liked, charming and hard to win in the world. What ten? Energy and exertion nourish wealth. Finery and adornment nourish beauty. Doing things at the proper time nourishes health. Friendship with the beautiful nourishes virtue. Restraint of the senses nourishes the holy life. Not quarrelling nourishes friendship. Repetition nourishes great knowledge. Listening carefully and asking questions nourishes wisdom. Study and examination nourishes the Dhamma. And living rightly nourishes rebirth in the heaven realm. A.V,136

21. ஐந்து ஒழுக்கங்களை முறித்த ஒரு முட்டாள் ஒரு பேரவையிலோ, ஒரு முக்கியமான சாலையிலோ, அல்லது நான்கு சாலைகளின் சந்திப்பிலோ அமர்ந்திருந்தால், மக்கள் அவனைப் பற்றிப் பேசுவார்கள். அதை அவன் அறிந்தால், 'நாம் அத்தவறுகளைச் செய்ததால்தான் அவர்கள் நம்மைப் பற்றிப் பேசுகிறார்கள்!' என்று அவன் வருந்துவான். இதுதான் அவன் அடையும் முதல் வகையான வருத்தமும் தளர்வுமாகும். இதனை அவன் உடனே (இப்போதே இங்கேயே) அனுபவிக்கிறான்.

மறுபடியும் ஒரு முட்டாள், அரசனொருவன் ஒரு திருடனையோ அல்லது தவறு செய்தவனையோ கைது செய்து அவனுக்குத் தண்டனையளிப்பதைப் பார்க்க நேரிட்டால், 'தவறு செய்தவனை அரசன் தண்டிக்கிறான். இப்படிப்பட்ட தவறுகளை நானும் செய்திருக்கிறேன். அது அரசனுக்குத் தெரியவந்தால் என்னையும் அரசன் தண்டிக்கலாம்.' என்று அவன் எண்ணுவான். இது இரண்டாவது விதமான வருத்தம் ; தளர்வு. இதனையும் அவன் உடனே அனுபவிக்கிறான்.

மறுபடியும் ஒரு முட்டாள் ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்து இருக்கும்போதோ படுக்கையில் படுத்திருக்கும் போதோ, அல்லது தரையில் படுத்திருக்கும் போதோ அவன் முந்திய உடலாலும், சொல்லாலும் எண்ணத்தாலும் செய்த தீய செயல்கள் அவன் மீது ஓய்வெடுக்க வரும். மாலையில், மிக உயர்ந்த மாபெரும் மலைகளின் நிழல்கள் தரையில் வந்து படுத்து ஓய்வெடுப்பது போல அவன் செய்த முன்வினைகள் அவன் மீது படிய வரும்.

அப்படிபட்ட நேரத்தில் அம் முட்டாள் 'நல்லவற்றை நான் செய்யவில்லை. திறன் மிக்க செயல்களை நான் செய்யவில்லை; பயந்து வந்தவர்களுக்கு நான் அடைக்கலம் கொடுக்கவில்லை. நன்மை செய்யாதவர்களுக்குக் கெட்ட இடந்தானே கிடைக்கும். அங்குதான் நான் செல்வேன்!' என நினைப்பான். இப்படி அவன் கவலைப் படுவான், அழுவான், புலம்புவான், நெஞ்சில் அடித்துக்கொள்வான், கதறுவான், கடைசியாகத் மனசஞ்சலப் படுவான். இது அவன் அனுபவிக்கும் மூன்றாவது விதமான வருத்தமும், தளர்வுமாகும். இதனையும் அவன் உடனே அனுபவிக்கிறான்.

If a fool was sitting in an assembly hall, in the main street or at the crossroads and people were to talk about him, and if he were one who broke the Five Precepts, he would think: ‘These people are talking about me because I have done these things.’ This is the first kind of anguish and dejection that the fool experiences here and now. Again, a fool might see the king arrest a thief or a wrongdoer and punish him. Upon seeing this, the fool would think: ‘The king is punishing that wrongdoer. Now, I have done these things also, so if the king were to know about me, he might punish me too.’ This is the second kind of anguish and dejection that the fool experiences here and now. And further, while the fool is sitting in a chair, lying on a bed or on the ground, those evil deeds that he has previously done with body, speech or mind, come to rest on him, lie on him, settle on him, just as when at evening, the shadows of the great mountains come to rest, lie and settle on the ground. At such times, the fool thinks: ‘Oh indeed, what is beautiful and skillful has not been done by me. I have made no refuge against the fearful. There is a place for those who have not done good but only evil, and to there I will go.’ And so he grieves, mourns, laments, beats his breast, cries and falls into disillusionment. This is the third kind of anguish and dejection that the fool experiences here and now.

M.III,163-4

22. அறவழியில் செல்வோர், தான் குடிப்பதையும்

மற்றவரைக் குடிக்க ஊக்குவிப்பதையும்

அறவே அழித்தல் நன்று.

குடிப்பதால் போதை உண்டாகும் என்பதை அறிவர்.

போதையின் காரணமாக

முட்டாள் தீய செயல்களைச் செய்வான்

மற்றவரையும் அறிவிலி அசட்டையுள்ளவர்களாக ஆக்குவான்.

எனவே இத் தவறுகளின் ஆணிவேர் தவிர்ப்பாய்.

முட்டாளுக்கு மட்டும் பிடித்த தவறு இது.

Whoever follows the Dhamma

Should not drink or encourage others to drink,

Knowing that intoxication is the result.

Because of intoxication,

The fool commits evil deeds

And makes others negligent too.

So, avoid this root of wrong,

This folly liked only by fools.

Sn.398-399

23. ஒரு அறிஞன், புத்தி கூர்மையுள்ளவன், நம்பிக்கைக்குரியவன் நான்கு குணங்களைக் கொண்டு - உறுதியான அத்திவாரத்துடன், தடங்களில்லாமல், கண்டனத்துக்காளாகாமல், அறிஞர்களாலும் கண்டிக்கப்படாமல் - சுற்றி வருகிறான். எந்த நான்கு? உடலால், சொல்லால், எண்ணத்தால் நன்னடத்தை உள்ளவன். நன்றி உள்ளவன், நன்றியுணர்வுள்ளவன்.

With four qualities the wise, intelligent, worthy person proceeds through life with firm foundations, smoothly, irreproachably, not censured by the wise. What four? With good conduct of body, speech and mind, and with gratitude, with gratefulness.

A.II,229

24. தவறு செய்யாத ஒருவன்

தீயவனைத் தொடர்ந்தால்,

இவனே சந்தேகத்திற் குரியவ னாகி

இவன் புகழ் நலிந்து கெடும்.

நண்பர்களால் ஒருவன் உருவாகிறான்.

அவன் ஒருவனைத் தொடர்ந்தால்

தொடர்பவனைப் போல அவன் உருவாகிறான்.

கூடிப் பழகுவோர் போல நாமும் ஆகிறோம்.

பின்பற்றுபவரும் பின்பற்றுவதும்

தொடுபவரும் தொடப்பட்டதும் போன்றது.

நஞ்சால் கறைபடிந்த அம்பு

நஞ்சு பரப்பப்படாத அம்புகளி லும் கிருமியைப் பரப்புகிறது

அதனால் எல்லாம் கறைபடிகின்றன.

நேர்மையான மனிதன் கறை படிய விரும்புவதில்லை. அதனால்

முட்டாள்களுடன் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

அழுகிய மீனின் ஒரு துண்டைப்

புல்லின் ஓரிலையில் கட்டினாலும்

அந்தப் புல்லும் அழுகிய நாற்றத்தையே கொடுக்கும்.

முட்டாளைப் பின்பற்றுபவனின் நிலையும் இதுவே.

ஒரு வாசனைத் திரவியத்தை

ஒரு சாதாரண இலையில் சுற்றினால்,

அந்த இலையும் மணந்தர ஆரம்பிக்கும்

அறிஞனைப் பின்பற்றுபவனின் நிலையும் இதுதான்

இலையில் சுற்றியதைச் சான்றாகக் கொண்டு

விடைதனைத் தெரிந்து கொண்டால்,

அறிஞரையே நாடி நட்புக் கொள்வான்

அறிவிலிகளை நோக்கவே மாட்டான்.

If the one who does no wrong

Follows one who does,

He himself will be suspected of evil

And his reputation will decline.

According to the friends one makes,

According to who one follows,

So does one become.

Like one's associates one becomes.

Follower and following,

Contacter and contacted alike,

An arrow smeared with poison

Infects those arrows that are not poisoned,

So that all are fouled.

The upright person not wishing to be soiled

Should not keep company with the fool.

If one strings a piece of putrid fish

On a blade of kusa grass,

The grass will smell putrid too;

The same with one who follows the fool.

If one wraps tagara

In an ordinary leaf,

The leaf will soon smell sweet too;

The same with one who follows the wise.

Remembering the example of the leaf wrapping

And understanding the results,

One should seek companionship with the wise,

Never with the fool.

It.68

25. ஒரு நன்னெறியை நம்புபவனை மூன்று பொருள்களால் கண்டுகொள்ளலாம். அந்த மூன்று எவை?

ஒழுக்கமானவர்களையே அவன் காண விரும்புகிறான்;

நல்ல அறத்தையே அவன் கேட்க விரும்புகிறான்;

உள்ளத்தில் கஞ்சத்தனமின்றிக் குறுகிய எண்ணமில்லாமல், திறந்த உள்ளமுடையவனாக, சுத்தமான உள்ளமுடையவனாக, பங்கிட்டுக் கொள்வதில் மகிழ்ச்சியடைபவனாக, உதவி கேட்பதற்கு மற்றவர்கள் நாடத்தக்கவனாக, வந்தவர்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைபவனாக அவன் வாழ்கிறான்.

Believers can be recognized by three things. What three? They desire to see those who are virtuous, they desire to hear the good Dhamma, and with a heart free from stinginess, they live at home with the mind cleaned of meanness, open-handed, pure-handed, delighting in sharing, being one to ask a favour of, being one who rejoices in giving."

A.I,150

26. பலர் நலனுக்காகவும், பலர் மகிழ்ச்சிக்காகவும், கருணையுடன் உலகத்திற்காகவும்; கடவுளர், மனிதர் ஆகிய இருவரின் மகிழ்ச்சிக்காகவும், நலனுக்காகவும் அண்ணல் எவ்வழியில் சேவை செய்தார் என்று பார்த்தோமேயானால், இப்படிப்பட்ட ஓர் ஆசிரியரை ஆய்ந்து அளந்து இறந்த காலத்திலேயும் நிகழ் காலத்திலேயும் பார்த்தோமேயானால், நம் அண்ணலை மட்டுமே காணமுடியும்.

அண்ணலின் அறம் அழகாகப் போதிக்கப்பட்ட ஒன்று. உடனடியாகத் தெளிவாவது, காலவரையற்றது, ஒவ்வொருவர்க்கும் தனித்தனியாகக் கொடுத்த அழைப்பிதழைப் போன்றது. ஒவ்வோர் அறிஞனும் தெளிந்தறியக்கூடியது. இப்படிப்பட்ட முன்னேற்றகரமான போதனையை அண்ணலைத் தவிர வேறெவருமே போதித்ததாகக் கூறிக்கொள்ளமுடியாது. இறந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் முன்னேற்றகரமான போதனையைப் போதித்தவரை ஆய்ந்து அளந்து பார்த்தோமேயானால், அண்ணலைத் தவிர யாருமேயில்லை.

எது சரியானது, எது தவறானது என்பதை அண்ணல் நமக்கு தெளிவாகவே போதித்திருக்கிறார். பழிக்குரியவை எவை, பாராட்டுக்குரியவை எவை, எவற்றை பின்பற்ற வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும், எவை தாழ்மையானவை, எவை உயர்ந்தவை, எவை தூய்மையற்றவை, எவை தூய்மையானவை, எவை கலப்படமானவை என்பதை வேறெவருமே இவ்வளவு தெளிவாகப் போதித்ததே கிடையாது. கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் ஆய்ந்து அளந்து பார்த்தோமேயானால் அண்ணலைத் தவிர யாருமேயில்லை.

அண்ணல் தன் மாணவர்களுக்கு நிர்வாண நிலைக்குச் செல்லும் வழியினைச் சிறப்பாகப் போதித்திருக்கிறார்கள். கங்கையும் யமுனையும் ஒன்றிலொன்று ஓடிக் கலந்து விடுவதைப்போல, நிர்வாண நிலையும் அங்குச் செல்லும் வழியும், ஒன்றோடொன்று இணைந்துவிடுகின்றன. நிர்வாண நிலைக்குச் சரியான வழிகாட்டுவதற்கு அண்ணலைத் தவிர வேரு எந்த ஓர் ஆசிரியரையும் கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் ஆய்ந்து பார்த்தாலும் அளந்து பார்த்தாலும், எவருமே கிடையாது.

அண்ணல், படித்த நல்லறிஞர்களையும், குற்றங்களை ஒழித்தவர்களையும், நண்பர்களாகக் கொண்டிருக்கிறார். நம் அண்ணல் அவர்களுடன் வாழ்கிறார். அவர்களனைவரும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர். இப்படிப்பட்ட ஓராசியரை நாம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் காணவே முடியாது.

அண்ணலுக்குக் கொடுக்கும் பரிசுகளால் பெரும் நன்மைகளே விளைகின்றன. அவரது புகழ் சிறப்பாகத் தீர்மானிக்கப்பட்டதால், பிரபுக்களும், பெரும் பணக்காரர்களும் அண்ணலைத் தேடிவந்து பரிசளிக்கின்றனர். அச்செயலால் அண்ணல் பெருமை கொள்வதில்லை. இப்படி எந்தப் போதகரும் நடந்து கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஆய்ந்து பார்த்தோமேயானாலும் அன்ணலைத் தவிர இப்படிப்பட்டவர் எவரும் இலர்.

அண்ணல் சொல்வதைச் செய்கிறார். செய்வதைச் சொல்கிறார். இப்படி முரண்பாடற்ற உறுதியான ஆசிரியரை இறந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் ஆய்ந்தாலும் அளந்தாலும் காணமுடியாது.

அண்ணல் தம் குறிக்கோளை நிறைவேற்றுவதில் சந்தேகங்களையெல்லாம், தயக்கங்களையெல்லாம் கடந்து சென்று தன் புனித வாழ்வை நிலை நிறுத்திக் கொண்டார்கள். இப்படித் தெளிவடைந்த ஆசிரியரொருவரைக் கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் அளந்து பார்த்தாலும், ஆய்ந்து பார்த்தாலும் காண இயலாது.

As regards the way in which the Lord has worked for the welfare of the many, for the happiness of the many, out of compassion for the world, for the welfare and happiness of both gods and humans, except for the Lord we find no teacher like this whether we survey either the past or the present.

Beautifully taught is the Lord’s Dhamma, immediately apparent, timeless, of the nature of a personal invitation, progressive, to be attained by the wise, each for himself. Except for the Lord we find no one who could proclaim such a progressive teaching, whether we survey the past or the present.

The Lord has clearly explained what is right and what is wrong, what is blameworthy and what is praiseworthy, what is to be followed and what avoided, what is low and what is high, what is impure, what is pure and what is mixed. Except for the Lord, we find no one who could so clearly explain such things, whether we survey the past or the present.

The Lord has well taught to his disciples the Way leading to Nirvana and they merge into each other, Nirvana and the Way, just as the Ganges and Yamuna flow into each other and go on united. Except for the Lord, we find no teacher of the Way leading to Nirvana, whether we survey the past or the present.

The Lord has gained many companions, both learners and those who have destroyed the defilements, and the Lord lives together with them, all of them rejoicing in unity. Except for the Lord, we find no teacher such as this, whether we survey the past or the present.

Gifts given to the Lord result in great good, his reputation is well established so that nobles seek him out to give him gifts. And yet because of this, he does not feel proud. Except for the Lord, we find no teacher who acts thus, whether we survey the past or the present.

The Lord acts as he speaks, and he speaks as he acts. Except for the Lord, we find no teacher as consistent as this, whether we survey the past or the present.

The Lord has crossed over doubt, transcended all hesitation; in regard to the goal of the holy life, he has accomplished his aim. Except for the Lord we find no teacher who has done this, whether we survey the past or the present.

D.II,222*

27. வானம் மழை பெய்யும்போது விழும் நீர்த்தாரைகள் அகழிகள், தரையிலிருக்கும் பிளவுகளையெல்லாம் நிரப்பிவிட்டுச் சிறிய குட்டைகள், பெரிய குட்டைகளையெல்லாம் நிரப்பும். பிறகு குளங்களை நிரப்பும், நிரம்பிய குளம் ஓடைகளை நிரப்பும்.. ஓடைகள் ஆறுகளை நிரப்பும். பெரிய ஆறுகள் கடலை நிரப்பும்.

இதைப்போலவே புத்த பெருமான் மீதும், அவரறத்தின்மீதும், சங்கத்தின் மீதும், சபலமேயின்றி நன்னம்பிக்கை வைத்திருக்கும் நல்ல மாணவனிடம், அறிஞர்களுக்குப் பிடித்தமான ஒழுக்கமுடையவனிடம், இந்த (நல்ல காரணிகள் உள்ள) நிலை மென்மேலும் தொடர்ந்து பாய்ந்து மறுகரையை அடைகிறது. மாசுக்கள் அழிந்தொழிகின்றன.

When the sky pours down big rain drops, that water flows down and fills the gullies, clefts and valleys, and then fills the ponds, then the big pools, then the lakes. The filling of the lakes fills the streams, the streams fill the rivers and the great rivers eventually fill the ocean.

In the same way, for the noble disciple who has unwavering faith in the Buddha, the Dhamma and the Sangha, and who has virtues dear to the Noble Ones, these conditions flow onward and reach the further shore and lead to the destruction of the defilements.

S.V,396

28. மற்றவர்க்கு அறிவுரை கூற விரும்பும் ஒருவர் முதலில் தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்; 'உடலாலும், சொல்லாலும் முழுத் தூய்மையை மட்டுமே நான் கடைப்பிடிக்கிறேனா அல்லவா? இந்தப் பண்புகளை நான் கொண்டிருக்கிறேனா அல்லவா?' அப்படியில்லையென்றால், சந்தேகமின்றி மக்கள்: 'சொல்லாலும், உடலாலும் சரியான நன்னடத்தையைக் முதலில் நீங்கள் கடைபிடியுங்கள்' என்று கூறுவார்கள்.. இதைச் சொல்வதற்கு மக்களிருக்கின்றனர்.

மறுபடியும் மற்றவர்க்கு அறிவுரை கூறவிரும்பும் ஒருவர் முதலில் தன்னைத் தானே சோதித்துக் கொள்ளவேண்டும். 'தீமையைத் தவிர்த்து மற்றவரிடத்தில் அன்பை வளர்த்துக் கொண்டுள்ளேனா? இக்குணம் என்னுள் நிலைநாட்டப்பட்டதா அல்லவா?' அப்படி நிலை நாட்டப் படவில்லையென்றால், மக்கள் சிலர்: 'உன்னிடம் முதலில் அன்பை வளர்த்துக்கொள்!' என்பார்கள். இதைச் சொல்வதற்கு மக்களிருக்கின்றனர்.

One who wants to admonish another should first investigate: ‘Am I or am I not one who practices complete purity in body and speech? Am I or am I not possessed of complete purity in body and speech, flawless and untainted? Are these qualities present in me or not?’ If they are not, there are undoubtedly people who will say: ‘Come now, practice correct bodily and verbal conduct yourself.’ There are people who would say this. One who wants to admonish another should first further investigate: ‘Have I developed a mind of love, free from malice, towards my fellows in the holy life? Is this quality established in me or not?’ If he has not, there are undoubtedly people who will say: ‘Come now, develop a mind of love yourself.’ There are people who would say this. A.V,79

29. திறமையான இல்லறத்தாராக இருப்பது நன்று. உணவைப் பகிர்ந்து கொள்வது நன்று. சேர்த்த செல்வத்தைப்பற்றித் தன்னடக்கமாக இருப்பது நன்று. அந்தச் செல்வம் குறைந்தாலும் மனம் தளராமல் இருப்பதும் நன்று.

It is good to be an able householder, to share one’s food, to be modest about one’s wealth and not be downcast if it declines.

Ja.III,466

30. மூன்று பொருள்களால் ஓரறிஞனைத் தெரிந்து கொள்ளலாம். எந்த மூன்றால்?

ஒரு குறைபாட்டை அதன் தோற்றத்திலேயே அறிந்து கொள்பவர்.

அதைப் பார்க்கும் பொழுது அதைத் திருத்த முயற்சிப்பவர்.

ஒருவர் தன் குறைபாட்டை ஒத்துக் கொண்டாரேயானால் உரிய முறைப்படி அவரைப் பொறுத்தருள்பவர்.

By three things the wise person may be known. What three? Seeing a shortcoming as it is. On seeing a shortcoming trying to correct it. And when another acknowledges a shortcoming, forgiving it as should be done. A.I,103

31. தீமையைத் தவிர், நன்மை செய்யப்பழகு,

மனத்தைத் தூய்மையாக்கு -

இவையே புத்தர்களின் போதனையாம்.

எவரையும் வெறுக்காதே, யார்க்கும் தீங்கிழைக்காதே,

துறவிகளுக்குரிய சட்டங்களுக்குட்பட்டு,

மிதமான உணவு, தனியான வாழ்வு,

தியானத்தில் பற்று -

இவையே புத்தர்களின் போதனையாம்.

பிணக்கு ஆபத்தையும்,

இணக்கம் அமைதியையும் தருவதையுணர்.

எல்லாரிடமும் ஒற்றுமையையும்அன்பையும் பரப்பு.

இவையே புத்தர்களின் போதனையாம்.

அன்பு தியானத்தைச் செய்ய வேண்டும்.

தனக்காகவும் மற்றவர்க்காகவும் செய்யவேண்டும்.

எல்லாரிடமும் அன்பைப் பரப்ப வேண்டும்

இவையே புத்தர்களின் போதனையாம்.

Cease to do evil, learn to do good,

Purify the mind -

This is the teaching of the Buddhas.

Despising none, harming none,

Being restrained by the monastic rules,

Moderation in food, living in solitude

And devotion to mediation -

This is the teaching of the Buddhas.

Seeing conflict as a danger

And harmony as peace,

Abide in unity and kind-heatedness

This is the teachings of the Buddhas

The mediation on love should be done

For oneself and others also.

All should be suffused with love -

This is the teaching of the Buddhas.

Dhp.183; 185; Cp.3,15,13; Mil.394