என் செய்கைக்கு நானே உரிமையாளன்
என் செய்கைக்கு நானே உரிமையாளன்
தணிசாரோ பிக்கு
I am the owner of my actions
Thanissaro Bhikkhu
English version follows the Tamil translation.
மெய்யறிவையும், நுண்புலனையும் வளர்ப்பதற்குக் கம்மக் கோட்பாட்டினைப் பிரதிபலிப்பது அடித்தலமாக உள்ளது. பகுத்துணர்வு பற்றிய போதனைகளுக்கு இவை பின்னணியாக உள்ளன. புத்தர் விழிப்புற்றதன் முக்கிய நுண்புலன் என்னவெனில், இன்பமும் துன்பமும் நமது செய்கையிலிருந்தே பிறக்கின்றன என்பதை உணர்ந்ததே. துன்பம் கொடுக்கும் செய்கைகள் உள்ளன, இன்பம் தரும் செய்கைகள் உள்ளன. இவ்விரண்டையும் தரும் செய்கைகளும் உள்ளன. இவையில்லாமல் மேலும் சிறந்த செய்கைகளும் உள்ளன. அவையே செயலை முடிக்கும் செய்கைகள். துக்கத்தை முடிக்கும் செய்கைகள். முழு மகிழ்ச்சியைத் தரும் செய்கைகள். இதுவே புத்தரின் போதனைகளின் சாரம்சம். ஆக இவை எல்லாம் மனதைத் தூண்டும் ஒரு கலவை: மன நிதானம், நம்பிக்கை, அக்கறையுடைமை, பகுத்துணர்வு. இவையனைத்தும் ஒன்று கூடிச் செல்கின்றன. இவை எல்லாம் ஒரே பிரதிபலிப்பைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.
"என் செய்கைக்கு நானே உரிமையாளன். எல்லா உயிரினங்களும் தங்கள் செய்கைக்கு அவர்களே உரிமையாளர்கள்."
இதையே வேறுவிதமாகச் சொல்வ தென்றால், எல்லா உயிர்களும் தாங்கள் செய்யும் காரியங்களுக்குத் தாங்களே பொறுப்பேற்றுக் கொள்கின்றன. அஜான் சுவாட் இதைப் பற்றி ஒரு தம்ம உரையாற்றினார். அதில் அனாத்மக் கோட்பாட்டிற்கும் இந்த ஒரு வரிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினார். உருவம் (உடல்), உணர்ச்சி (வேதனா), குறிப்பு (சஞ்ஞா), எண்ணத் தொழிற்பாடுகள் (சங்காரங்கள்), விஞ்ஞானம்: இவையேதும் ‘நாம்’ இல்லை என்கிறது அனாத்மக் கோட்பாடு. ஆனால் நம் செய்கைகளுக்கு நாமே உரிமையாளர்கள். "இதை எண்ணிப் பாருங்கள்," என்றார்.
அப்படியென்றால், வினைப்பயனோடு ஒட்டிக் கொள்ளாதீர்கள்; இப்போதும் எந்நேரமும் ஏதாவது ஒரு முடிவெடுத்துக் கொண்டே இருக்கின்றீர்கள். அதைக் கவனிக்க வேண்டும். முடிவெடுத்தபின் அது, நம் கட்டுப்பாடுக்கு அப்பால் காரண, காரியம் அடங்கிய ஒரு பெரிய வட்டத்தில் வைக்கப் படுகின்றது. அது நமது கட்டுப்பாட்டில் இல்லை; ஆனால் அடுத்த கணத்தில் நீங்கள் மேலும் ஒரு முடிவெடுக்கும் வாய்ப்புள்ளது. பின் அதன் அடுத்த கணம், அடுத்த, அடுத்த கணம் என்று தொடர்ந்து எடுக்கப்படும் முடிவுகள் உங்கள் கையில் தான் உள்ளது. அதன் மீது கவனம் செலுத்தவேண்டும். முந்தைய செய்கையின் பயன் மீது கவனம் செலுத்தி அதில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இப்போது என்ன செய்ய முடியும், இப்போது செய்வதை எப்படித் திறமையுடன் செய்வது என்பதில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். "நம் செய்கைகளுக்கு நாமே உரிமையாளர்கள்," என்பதன் பொருள் இதுவே.
"நம் செய்கைக்கு நாமே வாரிசு."
நமது செய்கைகளின் விளைவுகளை நாம் பெறுவோம். எனவே விருப்பப்படும் விளைவுகளைப் பெறுமாறு நடந்து கொள்ள வேண்டும். இதைப்பற்றி அக்கறை கொள்ள வேண்டும்: பாலி மொழியில் ஒத்தப்பா என்ற வார்த்தைக்கு இதுவே பொருள். நமது செய்கைகளின் விளைவுக்குப் பயப்படுவது அல்லது நமது செய்கைகளின் விளைவுகளின்மீது அக்கறை கொள்வது என்று இவ்வார்த்தையினை மொழிபெயர்க்கலாம். எப்படி மொழி பெயர்த்தாலும் நாம் அக்கறையின்றி இருப்பதில்லை; நீங்கள் எதைச்செய்தாலும் அவற்றிற்கு விளைவுகள் உண்டு என்பதை அறிவோம்.
இங்கும், மறுபடியும் பகுத்துணர்வு என்ற இயல்பு தலை தூக்குகின்றது. நாம் விரும்பிச் செய்ய நினைக்கும் பல செயல்களும் தீய விளைவுகளை ஏற்படுத்துவன. நாம் செய்ய விரும்பாத பல செயல்களோ நல்வினைகளை உண்டாக்குகின்றன. நாம் மூடர்களா, அறிவாளிகளா என்பது இத்தகைய சூழ்நிலைகளை எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்தே உள்ளது என்று புத்தர் கூறினார். இங்கு தான் பகுத்துணர்வு என்ற பண்பு அதன் திறனைக் காட்டுகிறது. நாம் விவேகத்தைப் பற்றிப் பேசலாம்; மூன்று இயல்புகளை, ஐந்து கந்தங்களை, ஆறு புலன் -நிலைகளை, பிரதீத்திய சமுப்பாதம், சூன்யம் போன்ற அருமையான கோட்பாடுகளை விவரிக்கலாம்; அவற்றைப் பற்றிப் பேசலாம்; ஆனால் சங்கடமான சூழ்நிலையில் சரியான முடிவெடுக்க அவை உதவவில்லையென்றால், உங்கள் பகுத்துணர்வு பயனற்றதாகும். தீவினை உண்டாக்கும் செயல்களை, அவைகளைச் செய்வதற்கு நீங்கள் ஆர்வமாக இருந்தும், அதைச் செய்யாமல் உங்களையே தடுத்துக் கொள்வதும், நல் வினை உண்டாக்கும் செயல்களை அவைகளைச் செய்வதற்கு உங்களுக்கு விருப்பமில்லையென்றாலும் உங்களிடமே பேசி அவற்றைச் செய்ய வைப்பதுமே பயனுள்ள பகுத்துணர்வு என்பது. இங்கு தான் பகுத்துணர்வும், விவேகமும் அதன் பயனைத் தெரிவிக்கின்றன.
"நம் செய்கையினாலேயே நாம் பிறந்தோம்."
நமது அனுபவங்களின் மூலதாரம் எல்லாம் நமது செய்கையே. அனுபவம் நல்லதாக இருக்க வேண்டுமென்றால் மூல காரணத்தின் மீது கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் அனுபவிப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், திரும்ப மூல காரணத்தை நோக்குங்கள். அது தொடர்ந்து இங்கேயே, இப்பொழுதே இந்தக் கணத்திலேயே உள்ளது.
காலம் பற்றிய புத்தரின் போதனைகள் மனத்தைத் தூண்டுகின்றன. ஏனெனில் காலத்தைப் பற்றிப் பேசினாலும் காலம் தொடங்கின நேரத்தைப் பற்றி அவை குறிப்பிடுவதில்லை. உங்கள் அனுபவங்களின் ஆரம்ப காலம் இதோ இக்கணத்திலேயே உள்ளது. எல்லாம் இங்கேயே தோன்றுகின்றன; ஆகவே மூல காரணத்தைக் கடந்த காலத்தில் எங்கேயோ நடந்த காரணியைத் தேடாமல், புத்தர் உங்களை மூல காரணத்தை இங்கேயே இப்போழுதே தேடச் சொல்கிறார். மனத்தை ஆழமாக துழாவிப் பாருங்கள். நோக்கமும், கவனமும், குறிப்பும் ஒன்றோடு ஒன்று கூடுகின்ற இடத்தை மனத்தில் துழாவுங்கள். அங்கு தான் எல்லாம் பிறக்கின்றன.
"நமது செய்கையினால் நாம் ஒருவரோடொருவர் இணைந்திருக்கிறோம்."
மக்களிடம் வாழ்க்கையில் உண்டாகும் தொடர்புகள் நமது செய்கையினால் உண்டாகின்றன: மற்றவருடன் சேர்ந்து செய்தவை அல்லது மற்றவருக்கு நாம் செய்தவை அல்லது மற்றவருக்காகச் செய்தவை. இவை நம்மைச் சுற்றி உள்ள மக்களிடம் தொடர்புகளை உண்டாக்குகின்றன.
எல்லாம் தொடர்புடையன என்ற போதனை பௌத்தத்தில், குறிப்பாக இக்காலத்தில், மிகவும் ஆதரவு பெற்றிருக்கிறது. ஆனால் மக்கள் இதைப் பற்றிப் பேசும் போது கன்மக் கோட்பாட்டினை விட்டுவிடுவது சற்று வேடிக்கையாகவே உள்ளது. அவர்கள் பிரதீத்திய சமுப்பாதம் என்ற கோட்பாட்டினை ஆதாரமாகக் கொண்டு பேசுகின்றனரே ஒழிய - இக்கோட்பாடு பல முன் குணாங்கங்கள் இல்லாமல் ஒரு குணாங்கம் இருக்க முடியாது என்கிறது. ஆனால் பிரதீத்திய சமுப்பாதம் அறியாமையும் துக்கமும் எப்படித் தொடர்புடையவை என்பதையும், அவாவும் துக்கமும் எப்படித் தொடர்புடையன என்பதையும் விளக்குகின்றது என்பதை மறந்துவிடுகின்றனர். இது போன்ற தொடர்பை நாம் அறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, இது இது கொண்டாடத் தக்க உறவு இல்லை.
கன்மம் மூலமாக உள்ள தொடர்பு இரு வழியிலும் போகலாம் - தொடர்புகள் நல்லனவாகவும் இருக்கலாம், அல்லது தீயனவாகவும் இருக்கலாம். எனவே நாம் நல்ல தொடர்புகளை உண்டாக்கவே செயற்பட வேண்டும்.
சரி, எங்கு கவனிப்பது? இங்கேயே இப்பொழுதே நாம் செய்வதைக் கவனிக்க வேண்டும். மற்றவருடன் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகின்றோம்? இச்செயல்கள் தான் உறவுகளை உண்டு செய்து அவற்றோடு மகிழ்வதா அல்லது துன்புறுவதா என்பதை இப்போதும், வருங்காலத்திலும் நிர்ணயிக்கும். எனவே செய்கையை அக்கறையுடன் தேர்ந்தெடுங்கள்.
"நமது செய்கைகள் நமக்குத் தீர்ப்புக் கூறுவனவாக இருக்கின்றன."
நமது செய்கைகள் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. ஆகாயத்தில் பெரிய அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதி நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. அப்படிப்பட்ட நீதிபதி யாரும் இல்லை. எவ்வாறான வாழ்க்கையை நாம் நடத்தப் போகிறோம் என்பது நாம் நடந்து கொள்வதை வைத்து நாமே தீர்ப்பளித்து நிச்சயித்துக் கொள்கிறோம் - இது நமக்குப் பெரும் சக்தியைக் கொடுத்தாலும், சற்று பயமுறுத்துவதாகவும் உள்ளது. திறமையற்ற நோக்கங்களின் காரணமாக நாம் எத்தனைமுறை முடிவெடுத்துள்ளோம் என்பதை நினைத்துப் பாருங்கள். இன்னமும் மனத்தில் ஒளிந்திருக்கும் திறனற்ற நோக்கங்கள் உள்ளதையும் அவை எதிர்காலத்தில் திறனற்ற செய்கைகளுக்குக் காரணமாக இருக்கப் போவதையும் நினைத்துப் பாருங்கள். கடுமையாக எண்ணிப் பாருங்கள். அப்படியென்றால் நாம் செய்ய வேண்டிய வேலை இன்னும் உள்ளது - திறனற்ற நோக்கங்களிடமிருந்து தப்பிப்பது மட்டும் அல்லாமல் திறமையான நோக்கங்களையும் வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
இங்கு தான் நம்பிக்கை பிறக்கின்றது. நாம் வாழ்க்கையில் துக்கம் அனுபவித்தாலும், அதனிடமிருந்து நமது செய்கையின் மூலமாகவே தப்பிக்க வாய்ப்பிருக்கின்றது. எதையும் செய்யாமல் உட்கார்ந்தவண்ணம் வேறு யாராவது நம்மைக் காப்பாற்ற வருவார் என்றில்லை. நாம் விதிக்கு கட்டுப்பட்டவர் இல்லை. தெரிவு செய்ய இன்னும் வாய்ப்பு உள்ளது. நமக்கு எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதைச் சீர்ப்படுத்தி, நமது எண்ணங்களாலும், வார்த்தைகளாலும், செய்கைகளாலும் நமது வாழ்க்கையை நேர்ப்படுத்திச் சரியான திசையில் திருப்ப நம்மால் முடியும்.
இதன் காரணமாகவே நாம் தியானம் பயில்கிறோம். ஏனென்றால் தியானம் நல்ல இயல்புகளை, திறமையான பண்புகளை மனத்தில் வளர்க்கின்றது: அறிந்த நிலையில் இருப்பது, கவனித்த வண்ணம் இருப்பது, விவேகம், தடங்கல்களைப் பொருட்படுத்தாமல் விடாப்பிடியாக வாய்மையோடு வெற்றி தாமதமானாலும் தொடர்ந்து முயற்சிப்பது போன்ற பண்புகளைத் தியானத்தின் மூலம் வளர்த்துக் கொள்கின்றோம். இப்பண்புகளோடு நாம் வேலைசெய்யச் செய்ய, அவற்றைச் செய்கையில் பயன்படுத்தப் படுத்த அவைகளின் சக்தி கூடி மேலும் மேலும் நம்மைப் பகுத்துணர்வோடு செயல்புரிய வைத்து, நமது வாழ்க்கையை நாம் விரும்பும் திசையில் செயற்படுத்த உதவுகின்றன.
பின் இறுதியான பிரதிபலிப்பு இப்பண்புகளை அடித்தலமாகக் கொண்டு வளர்கின்றது:
"நல்லதோ கெட்டதோ நம் செய்கைகளுக்கு நாமே வாரிசாகிறோம்."
கவனத்தோடு இருக்க இது நமக்கு நினைவூட்டுகிறது. நல்ல உத்வேகங்களையும், திறமையான நோக்கங்களையும் கொண்டு செயற் பட வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. திறமையான நோக்கங்களை தோற்றுவிக்க நமது மனப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவைதான் உண்மையாகவே மாற்றம் உண்டாக்கக்கூடியவை.
இந்தப் போதனைகள் மன நிதானத்தை உண்டாக்குகின்றன. கடந்த காலச் செய்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் சாந்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்கின்றன. ஏற்கனவே செய்யப்பட்டுவிட்ட சில விஷயங்களை நம்மால் மாற்ற முடியாது. கடந்துபோன காலத்தைத் திருப்பிக் கொணர முடியாது.
ஆனால் இப்போது இங்கே நாம் செய்யும் செயல்களில் நம்மால் மாற்றத்தை உண்டு செய்யமுடியும் என்பதால் இந்தப் போதனைகள் நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன. நமது வாழ்க்கையை மாற்ற, நல்ல திசையில் கொண்டு செலுத்த இது ஒரு வாய்ப்பு.
இந்த நிதானம், அக்கறை, நம்பிக்கை ஆகியவற்றின் மத்தியில் கன்மக் கோட்பாட்டினைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வது: இங்கு தான் விவேகம் முக்கிய இடம் பெறுகிறது.
கன்மக் கோட்பாட்டைக் குழப்பி விட்ட படியால், அற்பக் கேலிச் சித்திரமாக்கி விட்ட படியால் அதற்குக் கெட்ட பெயர் உண்டாகி விட்டது. அது மாற்றமுடியா விதி என்றும் அல்லது பழிக்குப் பழி என்ற கோட்பாடு எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கன்மக் கோட்பாட்டின் காரணத்தையும், அதில் பொதிந்துள்ள ஆழ்ந்த நுண்ணிய கருத்துக்களையும் புரிந்து கொண்டால், அது நாம் நினைத்தபடியான செயற்பாடுகளைக் கொண்டதல்ல என்பதை உணர்வீர்கள். சிலர் அவதிப்படுவதை விளக்கவும், நாம் அதைப் பற்றி ஏதும் செய்யாமலிருப்பதற்கும் இந்தக் கோட்பாட்டைக் காரணமாகக் காட்டக் கூடாது. கன்மக் கோட்பாட்டினைச் சரியாகப் புரிந்து கொண்டால் மற்றவரின் துன்பங்களைக் கண்டு அவர்களுக்கு உதவும் ஓர் அரிய வாய்ப்பாகக் கொள்வோம். அவர்களுக்குத் துக்கம் உண்டாக்கும் கன்மம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் உங்கள் உதவியால் அவர்கள் துன்பம் நீங்கினால் அது ஒரு நல்ல காரியம் தானே? அவர்கள் இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துப் பாருங்கள்: உங்களுக்குத் துன்பம் நேரும்போது யாராவது உதவ முன்வருவதை நீங்கள் விரும்புவீர்கள் அல்லவா? ஏன்? ஒரு நாள் நீங்களும் அதே நிலையில் இருக்கக் கூடும். அந்த நிலையில் ஏற்கனவே நீங்கள் இருந்ததாகவும், இந்தப் பிறப்பு, மறுபிறப்பு என்ற சம்சார சாகரத்திலிருந்து தப்பிக்கவில்லை யென்றால் அதே நிலையில் மீண்டும் நீங்கள் இருக்கக் கூடும் என்றும் புத்தர் கூறுகிறார். கன்மக் கோட்பாடு மற்றவரை விட நாம் மேலோங்கியவர் என்று கருதுவதற்காகச் சொல்லித்தரப்பட வில்லை. நமக்குத் தெரியாது: அவர்களின் முந்தைய தீவினைப் பயன், நமது முந்தைய தீவினைப் பயனை விட விரைவாக வந்து விட்டதோ என்னவோ? நீங்களும் அதே நிலையில் ஒரு நாள் இருக்கக் கூடும் – ஏன்? அவர்களைவிட மோசமான நிலையிலும் கூட நீங்கள் இருக்க வேண்டியிருக்கலாம்.
ஆகவே நாம் அக்கறையின்றி இருந்துவிட முடியாது. கன்மக் கோட்பாடு உங்களை அக்கறையற்று இருப்பதற்காகக் கற்பிக்கப் படவில்லை (அதாவது "எல்லாம் என் தலைவிதி, நான் என்ன செய்ய," என்று நினைப்பது தவறு). சொல்லப்போனால் அதன் எதிர்க் கருத்தே சரி: இக்கோட்பாடு உங்களை அக்கறையுடன் இருக்க ஊக்குவிக்கிறது. செப்டம்பர் 11 (அமெரிக்காவில் 11-09-2001 அன்று நடந்த பயங்கரவாதச் சம்பவம்) தன்னுடைய பௌத்த அக்கறையில்லா (திருப்தியடைந்ததாகத் தவறாகக் கருதிய) குமிழி நிலையை வெடித்துவிட்டதாக ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் "அக்கறையில்லாப் பௌத்தன்," என்பது பொருந்தாத வார்த்தை - முரண்தொடை. அறத்தைப் பின்பற்றுவதற்கான காரணமே அது உங்களை அக்கறையில்லா நிலையில் இருக்கக் கூடாதென்று கற்பிப்பதால் தான். உள்ளத்தில் திருப்தியில்லா நிலை இருக்கும் வரை, நாம் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் இருக்கின்றன.
ஒரு பக்கத்தில் கன்மக்கோட்பாடு உங்களை அக்கறை உள்ளவராகவும், செய்யவேண்டிய வேலை இருக்கிறதென்று நினைவூட்டிக் கொண்டும் இருக்கிறது. அதே சமயம் துக்கத்தோடு எப்படி வேலைசெய்வது என்பது பற்றியும், அதன் மூலம் துக்கத்துக்கு அப்பால் செல்வது பற்றியும் கற்பிக்கிறது: நம்பிக்கை பிறக்குமிடம் அது தான்.
கன்மக் கோட்பாட்டினை எப்படிப் பயன் படுத்துவதென்று புரிந்து கொண்டால், அது எப்படிப் பயனுள்ளதாக இருக்கின்றது என்பதையும், நாம் இப்போது செய்யும் தியானத்திற்கு எப்படிச் சம்பந்தப்பட்டுள்ளது என்பதையும் உணரலாம். உங்கள் தியானத்தில் நீங்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது இது தான்: கன்மம், நோக்கம். அது எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அதை எப்படிப் பிழையற்றுச் செய்வது என்பதை அறிந்து இனிமையான காலத்துக்கும், இடத்துக்கும் அது கொண்டுசெல்வதைக் கவனிக்கலாம். மேலும் மிகவும் திறமைசாலியான பிறகு - அது காலத்துக்கும், இடத்துக்கும் அப்பால் எடுத்துச் சென்று, கன்மத்தின் முடிவுக்கே கொண்டுசெல்வதையும், பின் செய்ய வேண்டிய வேலை ஏதும் இல்லாத இடத்திற்கு எடுத்துச் செல்வதையும் அறியலாம்.
இதுவே அரஹந்தரின் ஒரு விளக்கம்: 'கதம் காரணியம்,' வேலையை முடித்துவிட்ட ஒருவர், செய்யவேண்டியதைச் செய்துவிட்ட ஒருவர் பாரத்தை இறக்கி விட்டவர். இந்நிலையை அடையக் கன்மக் கோட்பாட்டினைப் புரிந்து கொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
* * * * * *
The reflections on karma are also used as a basis for developing wisdom and insight. They form the background for all the teachings on discernment. The central insight of the Buddha's Awakening was that pain and pleasure come from your actions. There are actions that bring pain, actions that bring pleasure, actions that bring both, and then special actions, that put an end to action, an end to suffering, and bring total happiness. That's the essence of the Buddha's discernment. So it's an interesting combination: equanimity, hope, heedfulness, discernment. These things all go together. They hover around that same reflection:
"I am the owner of my actions. All beings are the owners of their actions."
In other words, all beings are responsible for what they do. Ajaan Suwat once gave a Dhamma talk on this reflection, focusing on the difference between the anatta teaching and this one statement. Form, feeling, perceptions, thought-constructs, consciousness: These are not self. But we are the owners of our actions. "Think about that," he said.
In other words, don't latch on to the results of your actions; latch on to the fact that you're making the decisions right now, all the time. Once a decision has been made, it's been put into a larger circle of cause and effect beyond your control; but you do have a chance to make a decision again the next moment, and the next moment, and then the next. Focus on that. Don't get caught up in the results of past actions. Focus on what you can do now to make the present actions skillful. That's the focus of the teaching, "We're the owners of our actions."
"We're the heir to our actions"
We're going to be receiving the results of these actions. So act in a way whose results you'd like to receive. Be concerned about that: That's what's meant by the Pali word, ottappa. It can be translated either as fear of the results of your actions or concern for the results of your actions. However you translate it, it means that you're not apathetic; you know that whatever you do is going to bear results.
Here again the quality of discernment comes in. There are lots of things we like to do that will give bad results and things we don't like to do that will give good results. The Buddha said the measure of whether we're a fool or a wise person lies in how we handle situations like that. In other words this is where the quality of discernment really shows its worth. You can talk about discernment, you can describe the three characteristics, the five khandhas, the six sense-spheres, dependent co-arising, emptiness, all these wonderful concepts; you can talk about them, but if they can't help you make the right decision when you're faced with a hard decision, your discernment's useless. Useful discernment is the type that enables you to talk yourself out of doing things you would like to do but that you know would give bad results, or to talk yourself into doing things you don't like to do but would give good results. That's where discernment shows its stuff.
"We're born of our actions."
Our actions are the source of everything we experience. If you want experiences to be good, focus on the source. If you don't like the kind of experiences you're having, turn back and focus again on the source. It's constantly right here, right here in the present moment.
The Buddha's teachings on time are interesting in that even though they do talk about time, they don't talk about a beginning point in time. The beginning point for your experience is right here in the present moment. It all comes springing out of right here; so instead of trying to trace things back to first causes someplace way back in the past, the Buddha has you look for first causes right here and right now. Dig down deep inside into the area of the mind where intention and attention and perception play against each other, for that's the point from which all things are born.
"We're related through our actions"
The connections we have in life with different people are created by our actions: things that we've done together with other people or to other people or for other people. These create the connections that we have with the people around us.
Interconnectedness is a very popular teaching in Buddhism, especially nowadays, but it's funny that people like to talk about interconnectedness without the teaching on karma. They turn to dependent co-arising as a model for interconnectedness, this web of connections where one factor can't exist without a whole lot of other factors, but they neglect to realize that dependent co-arising is a teaching on how ignorance is connected with suffering, how craving is connected with suffering. It's the kind of connectedness you want to cut, not the kind you want to celebrate.
Connectedness through karma can go either way — the connections can be good, or they can be bad. So you want to foster the good ones.
And again, where do you look? You look at what you're doing right here and right now. How are you behaving with other people? How are you treating them? These create the relationships you're going to be able to enjoy or you're going to be stuck with, now and on into the future. So choose your actions carefully.
"We have actions as our arbitrator."
Our actions decide our lives. In other words there's no judge up there someplace in the sky sitting on a big throne passing judgment on us. We're passing judgment on what kind of life we want to have by the way we act — which is both empowering and also a little scary. Think of how many times you've acted on unskillful motives. Think of the unskillful motives you still have lurking around in your mind that could form the basis for future unskillful actions. Think hard about that. It means there's work to be done — not just to escape unskillful actions but also to foster skillful ones.
This is where the hope comes in. Even though we may be suffering in our lives, there's a way out through our own actions. We don't have to sit around waiting for somebody else to come and save us. We're not victims of fate. We can make the choices, we can order our priorities so that we can reshape our lives in a positive direction through our thoughts, words, and deeds.
This is why we meditate, because meditation creates good qualities, skillful qualities in the mind: mindfulness, alertness, concentration, discernment, persistence, truthfulness, perseverance. As we work at these qualities, as we put them into action, they get strengthened and become more and more the wise arbitrators of our lives, pointing our lives in the direction we really want to go.
Then the final reflection builds on that:
"Whatever we do for good or for evil, to that will we fall heir."
This is a reminder to be heedful, that we really want to act on our good impulses, our skillful intentions. We want to develop the qualities in our minds that will foster these skillful intentions, because these are the things that really make a difference.
These teachings foster equanimity in reminding us to be equanimous toward our past actions, toward the results from past actions. Certain things we can't change because they've already been done. We can't turn back the clock.
But the teachings foster hope in that we can make a difference in what we're doing right here and right now. There's that opening for us to design our lives, to point them in a better direction.
In that balance among equanimity, heedfulness, and hope, learning how to make proper use of this principle of karma: That's where the discernment comes in.
The teachings on karma have gotten a bad rap, largely because they've been mangled, turned into a simplistic caricature: either fatalistic or tit for tat. But if you understand the complexity and also the purpose of the teaching, you begin to realize that it's not what we thought it was. It's not an excuse to justify the suffering that people are going through or for our being indifferent to that suffering. When you really understand the workings of karma, you see other people's suffering as an opportunity to help them. You don't know how much longer their karma for suffering is going to last. Wouldn't it be a good thing if you could be the agent to help bring their suffering to an end? Put yourself in their place: Wouldn't you like to have somebody come and help? And someday you may actually be in their place too. After all, as the Buddha said, you've already been there before and if you don't get out of the cycle of rebirth, you'll probably be there again. Karma is not a teaching meant to make us feel superior to other people. You never know: Maybe the results of their past bad karma are simply coming faster than the results of your past bad karma, and you may someday be in a similar place to where they are — or even worse.
So you can't be complacent. And the teaching on karma is not designed to make you complacent. If anything, just the opposite: It's meant to make you uncomplacent. I once read someone saying that September 11th burst his complacent Buddhist bubble. Well, that's an oxymoron: "complacent Buddhist." The whole purpose in following the Dhamma is that it teaches you not to be complacent. As long as there's suffering in your heart, there's work to be done.
So, on the one hand, the principle of karma makes you heedful, reminding you that you've got work to do. But it also means that there's a way to work with suffering so that you can go beyond it: That's where the hope lies.
If you understand how to use the teaching on karma, you see how really useful it is, how relevant it is to the meditation we're doing right now. The prime factor you want to dig down and find in your meditation is just that: the karma, the factor of intention. Watch to see how it moves. See how you can make it more skillful. See how you can perfect that factor so that it takes you not only into more pleasant places in space and time, but also — when you get really skillful — outside of space and time, to the end of karma, to the point where there's no more work to be done.
That's one of the descriptions of an arahant: katam karaniyam, someone who's done the task, done what had to be done. The burden is laid down. Understanding the principle of karma, and using it the right way, is what makes all that possible.
* * * * * *
©2006 Thanissaro Bhikkhu. "Meditations 2: Dhamma Talks", by Thanissaro Bhikkhu. Access to Insight (Legacy Edition), 30 November 2013, http://www.accesstoinsight.org/lib/authors/thanissaro/meditations2.html .