கள்ளுண்ணாமை
கள்ளுண்ணாமை
பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
The Fifth Precept
Adapted from a Dhamma talk by Ajahn Sona
English version follows the Tamil translation.
களைப்பாறுவதற்காக (ரிலாக்ஸ் to relax) எப்போதாவது குடிப்பது பொருத்தமான செயலா?
களைப்பாறுவதற்காகக் குடிப்பதாகக் கூறுகிறோம். ஆனால் உண்மையில் சொல்ல நினைப்பது நாம் சற்று முட்டாள்களாக விரும்புகிறோம் என்பது தான். நாம் சற்று முட்டாள்களாக இருக்கும் போது வாழ்க்கையில் தொல்லைகளைச் சமாளிப்பது நமக்கு எளிதாகத் தோன்றுகிறது. ஆனால் இது சரியான கருத்து அல்ல. ஐந்தாம் ஒழுக்கமானது குழப்பத்தைப் பற்றியது. மனத்தைக் கவனிக்காமல் விடுவது. போதைப் பொருட்கள் அறிநிலையைக் குறைக்கின்றன.
'நான் குடித்துவிட்ட பின் மற்ற நான்கு ஒழுக்கங்களை முறிப்பது எளிதாகுமா? வன்முறையில், களவில், தவறான உறவுகளில், பொய்ப் பேச்சில் ஈடுபட நான் நாட்டம் கொள்வேனா? இவற்றையெல்லாம் செய்ய எனக்குத் தோன்றுமா? நான் கவனக் குறைவுடன் இருப்பேனா?' என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். ஐந்தாவது ஒழுக்கம் மற்ற நான்கு ஒழுக்கங்களையும் சீராக வைத்திருப்பதற்காக என்று சொல்லப்படுகிறது.
இது சம்பந்தமாக ஒரு கதை பல பௌத்தக் கலாச்சாரங்களில் காணப்படுகிறது. ஒருவன் ஐந்து ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதாக உறுதி எடுத்துக் கொள்கின்றான். இல்லற மக்களுக்கான ஐந்து நெறிகள்: அவை கொல்லாமை, கள்ளாமை, தவறான பாலியல் உறவு கொள்ளாமை, பொய்யாமை மற்றும் கள்ளுண்ணாமை. அவன் முழுமையாகத் தன்னைப் பௌத்த நெறிக்கு அர்ப்பணம் செய்து கொண்டவன். மிகவும் பண்புள்ளவன் அவன்.
ஆனால் இதுபோன்ற ஒழுக்க நெறிகளை நீங்கள் கடைப் பிடிக்கும் போது உங்களைச் சோதிக்கப் பிரபஞ்சத்தில் ஒரு சக்தி உண்டு - அது தான் மாரன் (மன்மதன்) என்னும் சக்தி. இந்த இல்லறவாசி ஒருநாள் வனத்தில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு கொடியவன் அவன் முன் தோன்றுகிறான். மிகக் கொடூரமான தோற்றம் கொண்டிருந்த அவன் மூர்க்கத்தனமாக அவன் கழுத்தைப் பிடித்து, 'ஏய்! நீ ஐந்து ஒழுக்கப்படி நடப்பவனாமே? உண்மையா?' எனக் கேட்கின்றான்.
'ஆம், நான் ஐந்து ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பதென்று உறுதி எடுத்துள்ளேன்.'
'நீ உயிரே போனாலும் அவற்றில் ஒன்றையும் மீற மாட்டாயா? அப்படியா? அவற்றில் ஒன்றை நீ மீறாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன்.'
'ஓ ஓ சரி, மீறிவிடுகிறேன்.'
'எதை மீறப் போகிறாய்?'
இல்லறவாசி சற்று யோசித்து விட்டுக் கடைசி ஒழுக்கம் அதாவது கள்ளுண்ணாமை என்ற ஒழுக்கத்தை மீறுவதே குறைந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று முடிவெடுக்கிறான்.
'சரி நான் ஐந்தாம் ஒழுக்கத்தை மீறிவிடுகிறேன்.'
அந்தக் கொடியவன் மந்திர சக்தியால் ஒரு கோப்பைக் கள்ளை உண்டாக்கி அவனிடம் தருகிறான்.
'இதைக் குடி!'
அவன் கள்ளைக் குடித்ததும் அந்தக் கொடியவன் மறைந்து விடுகிறான்.
இல்லறவாசி, 'உம்..பரவாயில்லை. அப்படியொன்றும் மோசமாகத் தெரியவில்லை. நினைத்த மாதிரி எந்தப் பாதிப்பும் நிகழவில்லை. சற்று களைப்பாறியதாகவும் தோன்றுகிறது. ஏன்? உடல் சற்று இதமான வெப்பத்தோடும் இருக்கிறது.' என்று நினைத்தபடி தன் வழியில் செல்கிறான்.
அவன் தன் பயணத்தைத் தொடர்ந்த போது வழியில் ஒரு மதுபானக்கடை தென்படுகிறது. அந்த கொடியவனிடம் நேர்ந்த அனுபவத்தினால் சற்று நிலை குலைந்திருந்த அவன் சரி, ஏற்கனவே கள்ளுண்ணாமை என்ற ஒழுக்கத்தை முறித்து விட்டபடியால் உள்ளே சென்று இன்னொரு முறை குடிக்கலாம் என்று முடிவுசெய்து மதுக் கடைக்குள் சென்று மீண்டும் குடிக்கிறான். அவனிடம் இருந்த கொஞ்சப் பணத்தையும் குடிப்பதில் செலவிட்டு விடுகிறான். இப்போது அவன் நடையில் சற்றுத் தடுமாற்றம். பார்வையும் தெளிவாகத் தெரியவில்லை. வீடு நோக்கி அவன் நடக்கின்றான். நேரம் செல்லச் செல்ல அவனுக்குப் பசி உண்டாகிறது. வழியில் ஒரு பழக்கடை தென்படுகிறது. உள்ளே செல்கிறான். ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து, 'இது பார்க்க நன்றாக இருக்கிறது, ஆனால் கையில் காசு ஏதும் இல்லையே!' என்று நினைத்தபடி அந்தப் பழத்தைத் தன் பையில் போட்டுக் கொண்டு கடையை விட்டு வெளியேறுகிறான். கடைக்காரர், 'ஏதாவது வாங்கப் போகின்றீர்களா?' என்று கேட்ட போது, 'இல்லை' என்று கூறியபடி வெளியே வருகிறான். இப்போது கள்ளாமை, பொய்யாமை ஆகிய மேலும் இரண்டு ஒழுக்கங்களையும் மீறி விட்டான்.
அந்த ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டே அவன் தன் வீடு நோக்கி நடக்கின்றான். ஆனால் காய்ந்த வயிற்றில் கள்ளுண்ட பிறகு வெறும் ஒரு ஆப்பிள் மட்டும் சாப்பிட்டது திருப்தி தரவில்லை. அவனுக்கு ஏதாவது மாமிச உணவு உண்ண வேண்டும் போலத் தோன்றுகிறது. வீடு சேர்ந்த அவன், பக்கத்து வீட்டுக்காரரின் கோழி அவன் வாசலில் சுற்றித் திரிவதைக் கவனிக்கின்றான். 'அதைப் பிடித்து, கொன்று பொசுக்கிச் சமைத்துச் சாப்பிட வேண்டும்,' என்று நினைக்கிறான். கோழியைப் பிடித்து அதன் கழுத்தைத் திருகிக் கொன்று அதை வெட்டிச் சமைக்கத் தொடங்குகிறான். அப்போது கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்கிறது. கதவைத் திறக்கின்றான். தன் கோழியைத் தேடி வந்த பக்கத்து வீட்டுக்காரனின் மனைவி அங்கு நின்று கொண்டிருக்கிறாள். 'ஆ வா! வா! நலமாக இருக்கிறாயா?' என்று தெளிவில்லாமல் குழறியபடி, 'உள்ளே வா! நாம் இதுவரை பழக வாய்ப்பே கிடைக்கவில்லை!' என்று கூறி அவளை வீட்டுக்குள் அழைக்கின்றான். பின் அவளிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறான். ஆக மீதமுள்ள நான்கு ஒழுக்கங்களும் இப்போது முறியடிக்கப் பட்டு விட்டன - கோழியைக் கொன்றது, பழத்தைத் திருடியது, கடைக்காரனிடம் பொய் சொன்னது, மற்றவன் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது. இதற்கெல்லாம் குறைந்த விளைவையே உண்டாக்கும் என்று எண்ணி ஐந்தாம் ஒழுக்கத்தை மீறிக் குடித்தது தான் காரணம்.
இன்று சமூதாயத்தில் குற்றவியல் சம்பந்தமான புள்ளி விபரங்களை ஆராயும் போது பெரும்பாலான குற்றங்கள் குடி அல்லது போதைப் பொருட்களின் காரணமாகவே நடக்கின்றன என்பதை அறியலாம். ஒன்று அந்தப் பழக்கத்திற்கு ஆதரவளிக்க இக்குற்றங்கள் செய்யப் படுகின்றன அல்லது அப்பழக்கங்களுக்குத் தேவைப்படும் பணத்திற்காக இக்குற்றங்கள் செய்யப் படுகின்றன. குடித்திருக்கும் போது நாம் செய்யும் காரியங்களைத் தெளிவாக இருக்கும் போது நாம் செய்யவே மாட்டோம். போதையில் திறமையற்ற காரியங்களைச் செய்கிறோம். உங்கள் விவேகமும், வெட்க உணர்ச்சியும், கட்டுப்பாடும் குறைந்து விடுகின்றன.
உங்கள் மனம் தெளிவடையத் தெளிவடைய அந்த தெளிந்த நிலையை மேன்மேலும் நாம் போற்றுகிறோம். அது வசதியான, அழகான அனுபவம். ஆனால் மனத்தில் துன்பம் வளர வளர அதற்கு மருந்தளிக்க விரும்புகிறோம். மேலும் மருந்தளிக்க, மருந்தளிக்க மனத்தின் துன்பமும் அதிகரிக்கிறது. ஏனென்றால் அடிப்படைப் பிரச்சனையை நாம் சமாளிக்கவில்லை. ஒருவர் தவறாமல் எல்லோரும் தங்கள் துன்பத்தைக் குறைக்கவே முயல்கின்றனர். ஆனால் திறமையற்ற வழியில் அதைத் தீர்க்கப் பார்க்கின்றனர். உங்கள் காதலி உங்களை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறாள். நீங்கள் மிகவும் சோகம் அடைகின்றீர்கள். நண்பனிடம் சென்று புலம்புகின்றீர்கள். அவனும், 'சரி வா. அவளை மறப்பதற்கு மதுக்கடைக்குச் சென்று குடிக்கலாம்,' என்கிறான். பின் மதுக் கடைக்குச் சென்று குடிக்கிறீர்கள். மறுநாள் காலையில் மிஞ்சுவது தலைவலிதான். பணத்தை வீணடித்தது மட்டுமின்றி உங்கள் காதலியும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. இது தானா பிரச்சனைக்குத் தீர்வு? இதில் விவேகம் எங்குள்ளது, கருணை எங்குள்ளது? உங்கள் நண்பன் உங்கள் துன்பத்தைக் குறைக்கக் கருணையோடு நடந்து கொண்டாலும், முட்டாள் தனமாகவும் நடந்து கொண்டுள்ளார். உங்கள் துன்பத்தைத் தவறான வழியில் தீர்க்க முயல்கின்றார். இது முட்டாள்தனமான கருணை.
கேள்வி (பெண்): சரி அவன் தன் காதலி திரும்ப வர வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் அவளோ வரப் போவதில்லை. பின் அவன் என்ன செய்வது?
ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். அவன் குடிக்கக் கூடாது. அது பிரச்சனையை மேலும் மோசமாக்கி விடும். நீங்கள் எதைப் பிரதிபலிக்கவேண்டுமென்றால், 'நான் ஏன் சோகமாக இருக்கின்றேன்?,' என்பதைத்தான். முழுமையாக உறுதியற்ற ஒன்றின் மீது, நிச்சயமற்ற ஒன்றின் மீது, கட்டுப்பாடற்ற ஒன்றின் மீது பற்றுக் கொள்வது ஆபத்தான விஷயம். அப்படிப் பட்ட ஒன்றின் மீது பற்றுக் கொண்டு நமது முழு மகிழ்ச்சியையும் அதை நம்பியிருக்கின்றோம். அதில் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டு பிடிக்க முடியாது. உங்கள் மகிழ்ச்சி முழுவதையும் அங்கு வைப்பது மிக ஆபத்தானது. நிலையற்றதை நிலையானதென நினைக்கின்றோம். திருப்தியற்றதைத் திருப்தியுள்ளதென நினைக்கின்றோம். சாரமற்றதைச் சாரமுள்ளதாக நினைக்கின்றோம். இதுதான் அறியாமை என்பது. இன்னொருவர் நிலையற்றவர், திருப்தியற்றவர், சாரமற்றவர். அது தான் உண்மை. அதனோடு பற்றுக் கொண்டால், எப்போதாவது துக்கம் உண்டாவது உறுதி. உங்கள் மகிழ்ச்சி இதை நம்பி இருக்குமானால் வாய்மையை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். இந்த உண்மையைப் புரிந்து கொண்டாலே மற்றவரோடு பழகுவதிலும், மிக நெறுங்கிய உறவு கொள்வதிலும், நட்புக் கொள்வதிலும் ஒரு பிரச்சனையும் எழாது. எந்த அளவு புரிந்து கொள்கிறோமோ அந்த அளவு பிரச்சனை குறையும், துக்கம் உண்டாகாது. நீங்கள் பழகுபவரின் நிலையற்ற தன்மையை, அவர்களை நாம் கட்டுப்படுத்த முடியாதென்பதை உணர்ந்துள்ளீர்கள் . அவர்கள் உங்களுக்குஉரியவர் என்று நினைக்காததால் நீங்கள் அமைதியாக இருக்கின்றீர்கள்.
துறவிகள் எல்லாவற்றையும் துறந்துவிட முயல்கின்றனர். துறவிகளாகிய நாங்கள் இல்லற மக்களும் அதே நிலையில் இருப்பதைத் தெளிவாக்க முற்படுகிறோம். நீங்களும் எதற்கும் சொந்தக்காரர்கள் இல்லை. சொந்தக்காரர்கள் என்று நினைப்பது தவறான கருத்து. ஏனென்றால் அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் அது உங்களது இல்லை. நீங்கள் அதற்குக் கட்டளை இட முடியாது. எந்த அளவு பொருட்கள் உங்களுடையது என்று நினைக்கின்றீர்களோ, அவை இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அவற்றை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அந்த அளவு நீங்கள் அறியாமையில் மூழ்கி இருக்கின்றீர்கள். அந்த அளவு துக்கம் அனுபவிப்பீர்கள். புத்தர் இதைத்தான் 'நான்' என்று நாம் நினைப்பதாகக் கூறுகிறார். நான் என்று நினைப்பது நான் அதன் சொந்தக்காரன் என்ற கருத்தே. ' இந்தச் சொந்தக்காரன் என்ற கருத்தை நீக்கி விட்டால் பாரத்தை இறக்கி விட்டு விடுதலை பெற்றது போலத் தோன்றும். ஏனென்றால் இப்போது நீங்கள் வாய்மையின் வழியில் சிந்திக்கின்றீர்கள். நீங்கள் எதையும் இழக்க முடியாது. ஏனென்றால் இழப்பதற்கு ஏதும் இல்லை. எதுவும் உங்களுக்குச் சொந்தம் இல்லை. இப்படி வாய்மை வழி நற்பார்வை இருக்கும் போது நீங்கள் எதையும் செய்யலாம், துணிமணி போடலாம், வாகனம் ஓட்டலாம், எதையும் செய்யலாம். இப்படி எதைச்செய்தாலும் அவற்றுக்கு நீங்கள் சொந்தக்காரர் இல்லை. நீங்கள் உண்மையில் அவற்றுக்குச் சொந்தக்காரர் இல்லை என்பதை அறியும் வரை பிரச்சனை ஏதும் இல்லை. உங்கள் உடம்பு கூட உங்களுக்குச் சொந்தம் இல்லை. அதற்கு நீங்கள் கட்டளை இட முடியாது. அதைக் கட்டுப் படுத்த முடியாது. அது அதன் இயற்கைக் குணத்திற்கு ஏற்பத்தான் நடந்து கொள்ளும்.
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
* * * * * *
Transcribed from an audio tape available at birken.ca
Q: is it okay to drink once in a while to relax?
We take them sometimes we say to relax but actually you meant to get slightly stupid. I like to make myself a little stupider because when I am stupid it is a little more easy to bear. But it is not a good idea. The fifth precept one is about confusion. Negligence of mind. Intoxicants reduce mindfulness.
You have to ask yourself, 'When taking these intoxicants will I be inclined to indulge in, to break any of the other precepts? Would I be inclined to violence or theft or trust transgression or deception of speech? Would I be inclined to any of those things. Would it make me negligent. They say the fifth precept is about keeping the other four straight.
There is a story that comes up in a number of different Buddhist cultures. A person takes the five precepts. These are the five basic precepts for lay people. not to kill, not to steal, not to commit sexual misconduct, not to lie, not to take intoxicants. He is a dedicated Buddhist layman. He is very virtuous. When you take these precepts sometimes there is an energy in the universe that wants to test you - called Mara. So he is walking through the forest and this demon appears. The demon is very fierce. Grabs him by the throat.
'Hey! So you took the five precepts eh?'
'Yes, I took the five precepts.'
'So you don't want to break them even for the sake of life? Sure? Because I am going to kill you if you don't break one of them.'
''O...O...Okay.'
'Which one do you want to break?'
He thinks the least harmful will be the fifth precept.
'Okay I will break the fifth precept.'
The demon conjures up a glass of whiskey. 'Drink this.'
He gulps it and the demon vanishes.
That was not so bad. you know that was not so bad. I kind of feel relaxed actually. I feel quite warm.
So he continues on his way and actually he comes immediately to a little pub. And he thinks that was quite an intense experience with the demon. I will go in there (to the pub). I have broken the precept already so I will have another drink. Just that it has shaken me up. So I will have another drink. Goes in there and has another drink. He only has a little money on him and he spends the rest of his money. Now he is feeling a little bit blurry. He continues on the way home and he builds up quite an appetite. Stops at a little shop along the way, a vegetables and fruit shop. And he goes in there and he is really quite hungry but he has spent his money on the drink. So he picks up an apple and he is thinking, 'This is a nice apple but I don't have any money now.' So he puts it in his pocket and he walks up. The shopkeeper says, 'Have you got anything to buy?' 'No' and he walks out. Now he has broken the precepts of theft and lying.
He continues on home and he is eating this apple. But you know an apple on an empty stomach with a little bit of whiskey in it is a very unsatisfactory thing. What you really want is something like meat. I am really hungry. I need some meat. The neighbour's chicken is running around in his yard. I am going to kill the chicken and I am going to eat it. He gets the chicken and wrings its neck. He cuts it up and he begins to cook it. And then he hears a knock at the door. It is the neighbour's wife looking for the chicken. 'Hello how are you,' he slurs you know. 'Come on in, we have not really got to know each other.' So he ends up seducing the neighbour's wife. So all four precepts have been broken- killed the chicken, steal the apple, he lied, sexual misconduct with the neghbour's wife. All because he broke the precept that is least problematic. So the fifth precept is very intimately related to the other precepts. When you look at crime statistics they are almost all tangled with drugs or alcohol. Most of the major crimes are committed either in the midst of either supporting a habit or getting money for a habit. While you are drunk you do things you would not do while you are sober. You will do things when you are high. Your inhibitions and judgements are distorted.
The more you have a clear mind the more you cherish it. it is a comfortable beautiful experience. But the more you have pain in the mind more you wish to medicate it. And the more you medicate it the more you have pain in the mind. Because you have not dealt with the problem. Everybody without exception is attempting to relieve their own suffering. They just do it unskillfully. You have a falling out with your girlfriend and you are all sad and then you talk to your friend for consolation. Your friend says, 'OK I'll tell you what. Lets go and get drunk.' OK we go to get drunk. Tomorrow then you have a head ache. You wasted the money and still your girl friends gone. You know like what solution is that? Where was the wisdom, where was the compassion? Your friend was exercising compassion with stupidity. And you were attempting to ease your pain the wrong way. Idiot compassion.
Question: So he desires his girlfriend. She is not coming back. So what should he do?
Well one thing is, don't get drunk. It makes the problem worse. What you have to reflect on is why am I so sad? The danger of the whole attachment to something that is completely unstable impermanent and out of control. And you are laying all of your happiness on it. That is not where you are going to find happiness. It is a dangerous place to put all your happiness. You perceive the impermanent as permanent. The unsatisfactory as satisfactory. The insubstantial as substantial. And that is called delusion. Another person is impermanent, unsatisfactory and insubstantial. That is the nature of reality. As long you attach to it, it is just a matter of time. If you are putting your happiness on this you have misunderstood reality. You have to complete yourself more. Just to the degree that you are complete is the degree that you will not suffer an inch in sharing company, intimacy, friendship with other beings because you can afford to. You have enough recognition of their transient nature, their out of your control nature . You are at ease with not owning it.
Monks try to renounce things. But we try to explain this to lay people you are all in the same boat as we are. You don't own anything either. You just think you do. Monks don't own anything and you don't own anything. It is just a matter of how much you think you do. Because it is not in you control, It is not really yours. You can't command things. You cannot. To the degree that you are under the impression that things are yours and that it should be this way and that way and you will get it under control,l my plan is .. that is just the degree that you are deluded and that you will suffer. Buddha says, 'This what I mean by self. The idea of self is the idea of ownership. Of possession and ownership.' When you get rid of that you feel very light and free. Because you are now in line with reality. You have nothing to lose because no one can have anything. Now you are in accord with reality. Now go ahead and put on whatever you want, some cloths, drive a car whatever you want. But you still don't own anything. But so long as you really realized that that you don't own anything. Even your body you don't own it. Cannot command it. Cannot control it. It goes its own way.
* * * * * *