பேச்சில் கவனம் இருக்க வேண்டும்

அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko

அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்

தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

தணிசாரோ பிக்கு

Compiled and Translated by

Thanissaro Bhikkhu

Mind What You Say

பேச்சில் கவனம் இருக்க வேண்டும்

§ Normally, Ajaan Fuang was a man of few words who spoke in response to circumstances: If the circumstances warranted it, he could give long, detailed explanations. If not, he'd say only a word or two — or sometimes nothing at all. He held by Ajaan Lee's dictum: "If you're going to teach the Dhamma to people, but they're not intent on listening, or not ready for what you have to say, then no matter how fantastic the Dhamma you're trying to teach, it still counts as idle chatter, because it doesn't serve any purpose."

பொதுவாக அஜான் ஃபுவாங் குறைவாகவே பேசுபவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தகுந்த வார்த்தைகளை மட்டுமே பேசுவார்: தேவைப்பட்டால் நீண்ட விரிவான விளக்கவுரையும் தருவார். இல்லையெனில் ஓரிரு வார்த்தைகளை மட்டுமே பேசுவார் - ஏன் சில சமயம் ஒன்றுமே பேசமாட்டார். அவரது ஆசிரியரான அஜான் லீ யின் பொன்மொழியைப் பின்பற்றி நடப்பவர்: "மக்களுக்கு அறத்தைக் கற்பிக்கும்போது, அவர்கள் அதைக் கேட்க விரும்பாவிட்டால், அல்லது நீங்கள் கூறப் போவதை ஏற்கத் தயாராக இல்லாவிட்டால், நீங்கள் எவ்வளவு தான் அற்புதமான போதனையைத் தந்தாலும் அது வெட்டிப் பேச்சுக்கு நிகரானது தான். ஏனென்றால் அதனால் ஒரு பயனும் இல்லை."

§ I was constantly amazed at his willingness — sometimes eagerness — to teach meditation even when he was ill. He explained to me once, "If people are really intent on listening, I find that I'm intent on teaching, and no matter how much I have to say, it doesn't tire me out. In fact, I usually end up with more energy than when I started. But if they're not intent on listening, then I get worn out after the second or third word."

அவர் உடல் நிலை சரியாக இல்லாதபோதும் தியானம் கற்றுத் தருவதில் அவருக்கிருந்த விருப்பம் - ஏன் சிலசமயம் அதீத ஆர்வம் - எனக்குத் தொடர்ந்து வியப்பளித்தது. அவர் ஒரு முறை என்னிடம் விளக்கினார், "மக்கள் கருத்தூன்றிக் கேட்டால் எனக்குக் கற்பிப்பதில் உற்சாகம் பிறக்கும். நான் எவ்வளவு நீண்ட சொற்பொழிவு நிகழ்த்த வேண்டியிருப்பினும் அது என்னைச் சோர்வடையச் செய்யாது. சொல்லப்போனால், ஆரம்பத்தில் இருந்ததைவிட அதை முடிக்கும் போது எனக்குச் சுறுசுறுப்பு அதிகமாகி இருப்பதாகவே உணர்வேன். ஆனால் கேட்பவர்களுக்கு ஆர்வம் இல்லையென்றால் இரண்டு மூன்று வார்தைகளைப் பேசுவதற்குள் நான் களைப்படைந்து விடுவேன்."

§ "Before you say anything, ask yourself whether it's necessary or not. If it's not, don't say it. This is the first step in training the mind — for if you can't have any control over your mouth, how can you expect to have any control over your mind?"

"எதையும் சொல்வதற்கு முன், அவசியம் அதைச் சொல்ல வேண்டுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அவசியம் இல்லையென்றால் அதைச் சொல்ல வேண்டாம். இதுவே மனத்தைப் பயில் விப்பதில் முதற் படி - ஏனென்றால் உங்கள் வாயைக் கட்டுப் படுத்த முடியாவிட்டால், மனத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று எப்படி நீங்கள் எதிர்பாக்க முடியும்?"

§ Sometimes his way of being kind was to be cross — although he had his own way of doing it. He never raised his voice or used harsh language, but still his words could burn right into the heart. Once I commented on this fact, and asked him, "Why is it that when your words hurt, they go right to the heart?"

He answered, "That's so you'll remember. If words don't hit home with the person listening, they don't hit home with the person speaking, either."

அவருடைய தனிப்பட்ட முறையில் அவர் ஒருவர் மீது அன்பைக் காட்டச் சில சமயம் அவரைக் கண்டிப்பார். அவர் என்றும் தன் குரலை உயர்த்திப் பேசியதில்லை, கடுமையான வார்தைகளையும் பேசியதில்லை, ஆனாலும் சில சமயம் அவர் சொல்லும் வார்த்தைகள் உள்ளத்தில் சுறுக்கென்று தைக்கும். இதைப் பற்றி அவரிடம் ஒருமுறை கேட்டேன், "ஏன் உங்கள் வார்த்தைகள் புண்படுத்தும் போது, அவை நேராக உள்ளத்துக்குச் செல்கின்றன?"

அவர் பதில், "அப்போதுதான் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வீர்கள். ஒருவர் காது கொடுத்துக் கேட்கும் போது வார்த்தைகள் உள்ளத்தை அடையாவிட்டால், அவர் பேசிக்கொண்டிருக்கும் போது அது போகப் போவதில்லை."

§ In being cross with his students, he'd take his cue from how earnest the student was. The more earnest, the more critical he'd be, with the thought that this sort of student would use his words to best effect.

Once a lay student of his — who didn't understand this point — was helping to look after him when he was ill in Bangkok. Even though she tried her best to attend to his needs, he was constantly criticizing her, to the point where she was thinking of leaving him. It so happened, though, that another lay student came to visit, and Ajaan Fuang said in a passing remark to him, "When a teacher criticizes his students, it's for one of two reasons: either to make them stay or to make them go."

The first student, on overhearing this, suddenly understood, and so decided to stay.

தன் சீடர்களைக் கண்டிக்கும் போது மாணவர் எந்த அளவு ஆர்வமுள்ளவராக இருக்கிறார் என்பதைப் பொறுத்து அவர் கண்டனமும் கடுமையாக இருக்கும். அதிக ஆர்வமுள்ள மாணவரை அவர் அதிகம் கண்டிப்பார். ஏனென்றால் அப்படிப்பட்ட மாணவருக்கு அது பயன் தரும் என்று அவர் எண்ணினார்.

அஜான் ஃபுவாங் பாங்கோக்கில் உடல் நலமின்றி இருந்தபோது, அவரது இந்தத் தன்மையை உணர்ந்து கொள்ளாத ஒரு இல்லறப் பெண் சீடர் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். எவ்வளவு தான் அவர் தேவைகளை நிறைவு செய்தாலும், அவர் சீடரைத் தொடர்ந்து கண்டித்துக் கொண்டே இருந்தார். ஒரு நிலையில் அதைத் தாங்க முடியாத அந்தச் சீடர் அவரிடம் மாணவியாக இருப்பதை விட்டுப் போய்விடலாம் என நினைத்தார். தற்செயலாக மற்றொரு இல்லற சீடர் அஜான் ஃபூவாங்கைப் பார்க்க வந்தபோது அஜான் ஃபூவாங் அவரிடம் இவ்வாறு சொன்னார், "ஒரு ஆசிரியர் மாணவரைக் கண்டிப்பது இந்த இரண்டு காரணங்களுக்குள் ஒன்றுக்காகவே இருக்கும்: ஒன்று: அவர்களை அங்கேயே இருக்க வைக்க; இரண்டாவது: அவர்களை அங்கிருந்து போக வைக்க."

இதைக் கேட்ட முதல் சீடர் அவர் கண்டிப்பதின் காரணத்தைப் புரிந்து கொண்டு, அவர் சீடராகத் தொடர்ந்து இருக்க முடிவு செய்து விட்டார்.

§ A story that Ajaan Fuang liked to tell — with his own twist — was the Jataka tale of the turtle and the swans.

Once there were two swans who liked to stop by a certain pond every day for a drink of water. As time passed, they struck up a friendship with a turtle who lived in the pond, and they started telling him about some of the many things they saw while flying around up in the air. The turtle was fascinated with their stories, but after a while began to feel very depressed, because he knew he'd never have a chance to see the great wide world the way the swans did. When he mentioned this to them, they said, "Why, that's no problem at all. We'll find a way to take you up with us." So they got a stick. The male swan took one end of the stick in his mouth, the female took the other end in hers, and they had the turtle hold on with its mouth to the middle. When everything was ready, they took off.

As they flew up into the sky, the turtle got to see many, many things he had never dreamed about on the earth below, and was having the time of his life. When they flew over a village, though, some children playing below saw them, and started shouting, "Look! Swans carrying a turtle! Swans carrying a turtle!" This spoiled everything for the turtle, until he thought of a smart retort: "No. The turtle's carrying the swans!" But as soon as he opened his mouth to say it, he fell straight to his death below.

The moral of the story: "Watch out for your mouth when you enter high places."

ஆமையும் அன்னப் பறவைகளும் என்ற ஜாதகக் கதையை அஜான் ஃபுவாங் - சற்று திரித்து - சொல்ல விரும்புவார்.

இரண்டு அன்னப்பறவைகள் தினந்தோரும் ஒரு குளத்தில் நீர் அருந்துவதற்காக வருவது வழக்கம். நாட்கள் செல்லச் செல்ல அவை அந்தக் குளத்தில் வாழ்ந்து வந்த ஒரு ஆமையுடன் நட்புக் கொண்டன. அதனிடம் வானத்தில் பறந்து போகும் போது காணும் காட்சிகளையெல்லாம் விவரித்துச் சொல்லச் சொல்ல அந்த ஆமையும் வியந்து கேட்டு வந்தது. சிறிது காலம் செல்ல அந்த ஆமைக்கு மனவருத்தம் உண்டாயிற்று. ஏனென்றால் அன்னப்பறவைகள் கூறும் அந்தப் பறந்த உலகை ஒரு நாளும் தன்னால் அனுபவிக்க முடியாதல்லவா? தனது இந்த வருத்தத்தை ஆமை அன்னப் பறவைகளிடம் சொல்ல அவை, "அதற்கென்ன உன்னை எங்களோடு அழைத்துச் செல்ல ஒரு வழிகண்டுபிடிப்போம்," என்று கூறின. பிறகு குச்சி ஒன்றைக் கொண்டு வந்து, ஆண் அன்னப்பறவை ஒருபுறத்தைப் பற்றிக் கொள்ள, பெண் அன்னப்பறவை மறுபுறத்தைப் பற்றிக் கொள்ள ஆமை நடுவில் தன் வாயால் குச்சையைக் கவ்விக் கொண்டது. அனைத்தும் தயாரான பிறகு, பறவைகள் பறக்க ஆரம்பித்தன.

வானத்தில் உயரப் பறக்கப் பறக்க ஆமை தரையில் வாழும் போது கனவில் கூட நினைக்க முடியாத காட்சிகளைக் கண்டு குதூகலமடைந்தது. ஒரு கிராமத்தின் மேல் பறந்து கொண்டிருந்த போது கீழே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மேல் நோக்கி, "அதோ பார்! அன்னப் பறவைகள் ஆமையைத் தூக்கிக் கொண்டு செல்கின்றன!" என்று கூச்சலிட்டனர். இதனால் எரிச்சலடைந்த ஆமை, சிறுவர்களுக்குத் தக்க பதில் கூற "இல்லை, இல்லை. ஆமைதான் அன்னப் பறவைகளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது," என்று சொல்ல நினைத்து வாயைத் திறந்தது. அந்தோ! தரையில் விழுந்து மாண்டது.

இந்தக் கதையிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது: "உயர் இடங்களில் நுழையும் போது வாயின் மீது கவனம் இருக்க வேண்டும்." ("சான்றோர் மத்தியில் அளந்து பேசு")

§ "Litter" is Thai slang for idle chatter, and once Ajaan Fuang used the term to dramatic effect.

It happened one evening when he was teaching in Bangkok. Three young women who were long-time friends happened to show up together at the building where he was teaching, but instead of joining the group that was already meditating, they found themselves an out-of-the-way corner to catch up on the latest gossip. As they were busy talking, they didn't notice that Ajaan Fuang had gotten up to stretch his legs and was walking right past them, with an unlit cigarette in his mouth and a box of matches in his hand. He stopped for a second, lit a match, and instead of lighting his cigarette, tossed the lit match into the middle of their group. Immediately they jumped up, and one of them said, "Than Phaw! Why did you do that? You just barely missed me!"

"I saw a pile of litter there," he answered, "and felt I should set fire to it."

"குப்பை" என்ற வார்த்தைக்கு தாய் (தாய்லாந்து நாட்டு) மொழியில் வெட்டிப் பேச்சு என்றும் பொருள் உண்டு. அஜான் ஃபுவாங் ஒருமுறை அற்புதமான முறையில் அதைப் பயன்படுத்தினார்.

ஒரு மாலைப்பொழுதில் அஜான் ஃபுவாங் பாங்காக் நகரில் கற்பித்துக் கொண்டிருந்தார். நீண்ட நாள் நண்பர்களாக இருந்த மூன்று இளம் பெண்கள் தற்செயலாக அந்த இடத்திற்கு வந்தனர். ஆனால் ஏற்கனவே தியானம் செய்து கொண்டிருந்த மற்றவர்களோடு சேர்ந்து கொள்ளாமல் மண்டபத்தின் ஓர் ஓரமாக அமர்ந்து அவர்கள் தேவையில்லாத வெட்டிப் பேச்சில் ஈடுபட்டிருந்தனர். நீண்ட நேரம் போதித்துக் கொண்டிருந்த அஜான் ஃபுவாங் சிறிது கால்களுக்கு ஓய்வளிப்பதற்காக உலாவச் செல்லும் போது வாயில் பற்ற வைக்கப்படாத ஒரு சிகரெட்டுடனும் கையில் ஒரு தீப்பெட்டியுடனும் அப்பெண்களின் அருகில் நடந்து சென்றார். அப்போது அஜான் ஃபுவாங் அப்பெண்களின் அருகில் ஒரு நொடி நின்று, ஒரு தீக்குச்சியை உரசி அதை அப்பெண்களுக்கு மத்தியில் எறிந்தார். துள்ளி எழுந்த அப்பெண்களில் ஒருவர், "ஐயா! என்ன செய்தீர்கள்? அந்தத் தீக்குச்சி என் மேல் பட்டிருக்குமே!" என்றாள்.

அப்போது அஜான் ஃபுவாங் "நான் ஒரு குப்பைக் குவியலைக் கண்டேன், அதைக் கொளுத்த வேண்டும் என்று தோன்றியது அதனால் தான்” என்று பதிலிறுத்தார்.

§ One day Ajaan Fuang overheard two students talking, one of them asking a question and the other starting his answer with, "Well, it seems to me..." Immediately Ajaan Fuang cut him off: "If you don't really know, say you don't know, and leave it at that. Why go spreading your ignorance around?"

ஒரு நாள் அஜான் ஃபுவாங் இரு மாணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டார். ஒருவர் கேள்வியொன்றைக் கேட்க மற்றவர் அதற்கான பதிலை இவ்வாறு துவங்கினார்: "எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் ..." பதில் கூறுபவரை இடைமறித்த அஜான் ஃபுவாங், "உனக்குத் தெரியவில்லை யென்றால் தெரியவில்லை என்று சொல்லி விடு. அத்தோடு நிறுத்திக் கொள். ஏன் உனது அறியாமையை மற்றவர்களிடத்திலும் பரப்ப வேண்டும்?"

§ "We each have two ears and one mouth — which shows that we should give more time to listening, and less to speaking."

"நமக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் இருக்கிறது - இது எதைத் தெளிவு படுத்துகிறது என்றால் நாம் செவிமடுப்பதற்கு அதிக நேரமும், பேசுவதற்குக் குறைந்த நேரமும் செலவிடவேண்டும் என்பதைத்தான்."

§ "Whatever happens in the course of your meditation, don't tell it to anyone except your teacher. If you go telling other people, it's bragging. And isn't that a defilement?"

"தியானம் செய்யும் போது மனத்தில் என்ன நடந்தாலும் அதை ஆசிரியரிடம் தவிர வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம். மற்றவரிடத்தில் அதைச் சொன்னால் அது தற்பெருமையடித்துக் கொள்வதாக அமையும். அது மனத்தின் மாசு அல்லவா?"

§ "When people advertise how good they are, they're really advertising how stupid they are."

"மக்கள் தாங்கள் எவ்வளவு சிறப்புடையவர்கள் என்று பெருமை பேசிக் கொள்ளும் போது, உண்மையில் அவர்கள் தாங்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதையே விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர்."

§ "If something's really good, you don't have to advertise."

"உண்மையிலேயே சிறப்பான ஒன்று இருக்குமானால் அதை விளம்பரப்படுத்த வேண்டியதில்லை."

§ Thailand has a number of monk magazines, somewhat like movie-star magazines, which print the life stories and teachings of famous and not-so-famous monks, nuns, and lay meditation teachers. The life stories tend to be so heavily embellished with supernatural and miraculous events, though, that they are hard to take seriously. From the occasional contact he had with the editors and reporters responsible for these magazines, Ajaan Fuang felt that, by and large, their primary aims were mercenary. As he put it, "The great meditation teachers went into the wilds and put their lives on the line in order to find the Dhamma. When they found it, they offered it free of charge on their return. But these people sit in their air-conditioned offices, write down whatever comes into their heads, and then put it up for sale." As a result, he never cooperated with them when they tried to put him in their magazines.

Once a group of reporters from a magazine named People Beyond the World came to visit him, armed with cameras and tape recorders. After paying their respects, they asked for his prawat, or personal history. Now it so happens that the Thai word prawat can also mean police record, so Ajaan Fuang responded that he didn't have one, as he had never done anything wrong. But the reporters were not easily discouraged. If he didn't want to give his life story, they said, could he please at least teach them some Dhamma. This is a request no monk can refuse, so Ajaan Fuang told them to close their eyes and meditate on the word buddho — awake. They turned on their tape recorders and then sat in meditation, waiting for a Dhamma talk, and this was what they heard:

"That's today's Dhamma: two words — bud- and dho. Now if you can't keep these two words in mind, it would be a waste of time to teach you anything else."

End of sermon. When they realized that that was all, the reporters — looking very exasperated — gathered their cameras and tape recorders and left, never to bother him again.

தாய்லாந்தில் பல துறவிகளைப் பற்றிய பத்திரிக்கைகள் உள்ளன. திரைப்பட நட்சத்திரங்களின் பத்திரிக்கைகளைப் போலப் புகழ் பெற்ற, மற்றும் அவ்வளவு புகழ் பெறாத துறவிகளின் வாழ்க்கைச் சரிதத்தைச் சில சமயம் கற்பனை கலந்து அதிசய சம்பவங்களையும் நம்ப முடியாத சம்பவங்களை யெல்லாம் சேர்த்து வெளியிடுவார்கள். விவேகம் உள்ளவர்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். இது போன்ற பத்திரக்கைகளின் ஆசிரியர்களையும் நிருபர்களையும் சில முறை சந்திக்க நேர்ந்த பின் அஜான் ஃபுவாங் அவர்களின் நோக்கம் பத்திரிக்கைகளை விற்றுப் பணம் சம்பாதிப்பதே என்று புரிந்து கொண்டார். அவர் சொல்வதாவது, "மேன்மையான தியான ஆசிரியர்களெல்லாம் காடுகளுக்குச் சென்று தங்கள் உயிரையே பணயம் வைத்து அறத்தைத் தேடினார்கள். அதை அறிந்து கொண்டபின் இலவசமாக அதனை அனைவரோடும் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இவர்களோ, தங்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கொண்டு கண்டபடி நினைவில் தோன்றுவதையெல்லாம் எழுதிப் பணம் பண்ணுகின்றனர்”. இவ்வாறு அவர் கருதியதால் அவரைப் பற்றி இதுபோன்ற பத்திரிக்கைகளில் எழுத அனுமதித்ததே இல்லை.

ஒரு முறை 'உலகுக்கு அப்பால் உள்ள மனிதர்' என்ற பத்திரிக்கையிலிருந்து ஒரு நிருபர் கூட்டம் அவரைச் சந்திக்கக் கேமராக்களுடனும் பதிவுக் கருவிகளுடனும் வந்தனர். அவருக்கு மரியாதை செலுத்தியபின் அவரது 'பிரவாட்' அதாவது வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கேட்டனர். ஆனால் ‘பிரவாட்’ என்றால் தாய் மொழியில் 'போலீஸ் ரிகார்டு' அதாவது தவறு செய்தவர்களைப் பற்றிக் காவல் துறையினர் வைத்துள்ள குற்றக் குறிப்பேடு என்றும் பொருள். ஆகவே அஜான் ஃபுவாங் தான் தவறு ஏதும் செய்யாததால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார். வந்தவர்கள் அவ்வளவு எளிதாக அவரை விட்டுப் போவதாகத் தெரியவில்லை. "சரி உங்கள் வாழ்க்கை வரலாற்றினைக் கூற விருப்பம் இல்லையென்றால் எங்களுக்குச் சற்று அறத்தை உபதேசிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்கள். இந்த வேண்டுகோளைத் துறவிகள் மறுக்க முடியாது என்பதால் அஜான் ஃபுவாங் அவர்களைக் கண்களை மூடிக் கொண்டு புத்தோ - 'விழிப்போடு இருத்தல்' - என்ற வார்த்தையின் மீது தியானம் செய்யுமாறு கூறினார். அவர்களும் ஒரு நீண்ட அற போதனையை எதிர்பார்த்துத் தங்கள் பதிவுப் பெட்டிகளை 'ஆன்' செய்து தியானத்தில் அமர்ந்தார்கள். அவர்கள் கேட்டது:

"இதுவே இன்றைய போதனை: இரண்டே வார்த்தைகள் - புத்- மற்றும் தோ. இந்த இரண்டு வார்த்தைகளை மனத்தில் வைத்திருக்க முடியா விட்டால், உங்களுக்கு வேறு எதைப் பற்றியும் கற்பிப்பதில் பயன் இல்லை."

போதனை முடிவுற்றது. வந்த பத்திரிக்கை நிருபர்கள் இதை அறிந்ததும் - வேறு என்ன செய்வதென்று புரியாமல் சலிப்புடன் - கொண்டுவந்த கேமரா, பதிவுக் கருவிகளையெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு திரும்பிச் சென்றனர். சென்றவர்கள் பின்னர் எப்போதும் திரும்ப அவரைத் தொந்தரவு செய்ய வில்லை.

* * * * * *