துன்பம் Suffering

Suffering

துன்பம்

109

There are two kinds of suffering: the suffering, which leads to more suffering, and the suffering, which leads to the end of suffering. The first is the pain of grasping after fleeting pleasures and aversion for the unpleasant, the continued struggle of most people day after day. The second is the suffering, which comes when you allow yourself to feel fully the constant change of experience - pleasure, pain, joy, and anger - without fear or withdrawal. The suffering of our experience leads to inner fearlessness and peace.

இரண்டு வகையான துன்பங்கள் உள்ளன: ஒன்று, துயரத்தை அதிகரிக்கச் செய்யும் வகை. மற்றது, துயரத்தை அழிக்க வழி காட்டும் வகை. முதலாவது கண நேரச் சிற்றின்பங்களில் பற்றுக் கொள்வதனாலும், பிடிக்காதவற்றின் மீது ஏற்படும் வெறுப்பினாலும் உண்டாகும் துன்பம். இதுவே பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் நிகழ்வதாகும். இரண்டாவது மாறிக்கொண்டே இருக்கும் நம் அனுபவங்களை முழுவதும் உணர்வதற்கு நாமே அனுமதிக்கும் போது ஏற்படும் துன்பம். அதாவது இன்பம், துன்பம், மகிழ்ச்சி, கோபம் போன்ற நமது அனுபவங்களை அச்சப்படாமலும் விலகிச் செல்லாமலும் உணரும்போது ஏற்படும் துன்பம். இந்தத் துன்பம் தான் உள்ளத்தின் துணிச்சலை அதிகரிக்கும், மன அமைதியையும் ஏற்படுத்தும்.

110

We want to take the easy way, but if there’s no suffering, there’s no wisdom. To be ripe for wisdom, you must really break down and cry in your practice at least three times.

நாம் எளிதான வழிகளையே நாடுகிறோம். ஆனால் துன்பப் படாமல் நுண்ணறிவு கிடைக்காது. நுண்ணறிவு முதிர்ச்சியுற நீங்கள் பயிற்சியின் போது மூன்று முறையாவது மனம் விட்டு அழ வேண்டும்.

111

We don’t become monks or nuns to eat well, sleep well, and be very comfortable, but to know suffering:

1. how to accept it…

2. how to get rid of it…

3. how not to cause it.

So don’t do that which causes suffering, like indulging in greed, or it will never leave you.

நாம் துறவறம் பூணுவது நன்கு உண்ணவோ, தூங்கவோ, மிக வசதியாக வாழவோ அல்ல. துன்பத்தைப் புரிந்து கொள்ளத்தான். அதை

1. எப்படி ஏற்றுக்கொள்வது...

2. எப்படி விலக்குவது...

3. எப்படி விளைவிக்காமல் தவிர்ப்பது...

எனவே பேராசை போன்ற துக்கத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். இல்லையேல் அது உங்களை விடவே விடாது.

112

In truth, happiness is suffering in disguise but in such a subtle form that you don’t see it. If you cling to happiness, it’s the same as clinging to suffering, but you don’t realize it. When you hold on to happiness, it is impossible to throw away the inherent suffering. They’re inseparable like that. Thus the Buddha taught us to know suffering, see it as the inherent harm in happiness, to see them as equal. So be careful! When happiness arises, don’t be overjoyed, and don’t get carried away. When suffering comes, don’t despair, don’t lose yourself in it. See that they have the same equal value.

உண்மையில், மகிழ்ச்சியென்பது வேடம் புணைந்த துக்கம் தான். மிக நுட்பமான வடிவில் உள்ளதால் நீங்கள் அதைக் காண்பதில்லை. மகிழ்ச்சியுடன் மிகவும் பிணைத்துக் கொண்டால் அது துக்கத்துடன் பிணைத்துக் கொள்வதற்குச் சமம். இதை நாம் புரிந்துகொள்வதில்லை. மிகிழ்ச்சியுடன் ஒட்டிக்கொண்டால் அதனால் விளையும் துக்கத்தை வெட்டிக் களைய இயலாது. இரண்டும் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதவாறு இணைந்தவை. எனவே புத்தர் துக்கத்தை அறிந்து கொள்ளச் சொன்னார். மகிழ்ச்சியினுள் மறைந்திருக்கும் துக்கத்தின் தீமையைக் கவனிக்கச் சொன்னார். இரண்டையும் சமமாகக் கருதச் சொன்னார். எனவே எச்சரிக்கையாக இருங்கள். மகிழ்ச்சி ஏற்படும் போது அளவுகடந்து பூரிப்படைந்து அதிலேயே மூழ்கிவிடாதீர்கள். துயரம் ஏற்படும்போது மனச்சஞ்சலம் கொண்டு அத் துயரத்திலேயே அமிழ்ந்து விடாதீர்கள். மகிழ்ச்சியும் துன்பமும் சம தகுதி கொண்டுள்ளதை உணருங்கள்.

113

When suffering arises, understand that there is no one to accept it. If you think suffering is yours, happiness is yours, you will not be able to find peace.

துக்கம் ஏற்படும் போது, அதை ஏற்றுக் கொள்ள யாரும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். துக்கமும், மகிழ்ச்சியும் உங்களுடையது என்று நினைத்தீர்களென்றால் உங்களால் மன அமைதியைக் காண முடியாது.

114

People who suffer will accordingly gain wisdom. If we don’t suffer, we don’t contemplate. If we don’t contemplate, no wisdom is born. Without wisdom, we don’t know. Not knowing, we can’t get free of suffering - that’s just the way it is. Therefore we must train and endure in our practice. When we then reflect on the world, we won’t be afraid like before. It isn’t that the Buddha was enlightened outside of the world but within the world itself.

துயருறும் மக்கள் அதற்கேற்றார்ப் போல நுண்ணறிவு பெறுவார்கள். துயரம் அனுபவிக்க வில்லையெனில் நாம் ஆழ்ந்து தியானிக்கமாட்டோம். ஆழ்ந்து தியானிக்க வில்லை யெனில் நுண்ணறிவு பிறக்காது. நுண்ணறிவு இல்லையெனில் நமக்கு ஏதும் தெரியாது. ஏதும் தெரியாததால் நாம் துன்பத்திலிருந்து விடுதலை பெற முடியாது. இதுவே நடைமுறை. ஆகவே நாம் சகித்துக் கொண்டு பயிற்சி செய்யவேண்டும். அதன் பிறகு உலக நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது முன்னர் போலஅச்சப்பட மாட்டோம். புத்தர் அடைந்த ஞானம் உலகத்திற்குப் புறத்தே இல்லை. இந்த உலகினுள் தான் இருக்கிறது.

115

Sensual indulgence and self-mortification are two paths the Buddha discouraged. This is just happiness and suffering. We imagine we have freed ourselves from suffering, but we haven’t. If we just cling to happiness, we will suffer again. That’s the way it is, people think contrarily.

உணர்ச்சி விருப்பத்திற்கு அளவு கடந்து இடமளித்தலையும் உணர்ச்சிகளுக்கு இடமே தராமல் உடலை வாட்டி எடுப்பதையும் புத்தர் தவிர்க்கச் சொன்னார். இவை வெறும் மகிழ்ச்சியும், துன்பமும் தான். நாம் துயரத்திலிருந்து விடுபட்டு விட்டதாகத் தவறாக எண்ணுகிறோம். மகிழ்ச்சியோடு மட்டும் பிணைந்திருந்தால் நாம் மீண்டும் துன்பம் அனுபவிப்போம். உலக நடைமுறை அதுதான். மக்கள் முரண்பாடாக நினைக்கிறார்கள்.

116

People have suffering in one place, so they go somewhere else. When suffering arises there, they run off again. They think they’re running away from suffering, but they’re not. Suffering goes with them. They carry suffering around without knowing it. If we don’t know suffering, then we can’t know the cause of suffering. If we don’t know the cause of suffering, then we can’t know the cessation of suffering. There’s no way we can escape it.

மக்கள் துன்பம் நிகழும் இடத்தை விட்டு வேறு இடம் செல்கிறார்கள். புதிய இடத்திலும் துன்பம் தொடர்ந்தால் மறுபடியும் ஓடுகிறார்கள். துன்பத்திலிருந்து விலகி ஓடுவதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் நிலைமை அது அல்ல. எங்கு சென்றாலும் துன்பம் அவர்களைத் தொடர்கிறது. தாங்கள் அறியாமலேயே துன்பத்தைச் சுமந்து செல்கிறார்கள். துன்பத்தைத் தெரிந்து கொள்ள வில்லையென்றால் துன்பத்திற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியாது. காரணம் தெரியவில்லை என்றால் துன்பத்தைப் போக்கும் வழியும் தெரியாது. பிறகு துன்பதிலிருந்து தப்பிக்கவே முடியாது.

117

Students today have much more knowledge than students of previous times. They have all the things they need; everything is more convenient. But they also have a lot more suffering and confusion than before. Why is this?

இன்றைய மாணவர்கள் அன்றைய மாணவர்களை விட அதிக அறிவாளிகளாக இருக்கிறார்கள். வேண்டியதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கிறது; எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் முந்தையவர்களைவிட அதிகத் துயரமும், குழப்பமும் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இது எதனால்?

118

Do not be a bodhisatta; do not be an arahant; do not be anything at all. If you are a bodhisatta, you will suffer; if you are an arahant, you will suffer; if you are anything at all, you will suffer.

போதிசத்தராக இருக்க வேண்டாம்; அரஹந்தராக இருக்க வேண்டாம்; வேறு எதுவாகவும் இருக்க வேண்டாம். போதிசத்தராக இருந்தால் துன்பம் அடைவீர்கள்; அரஹந்தராக இருந்தால் துன்பம் அடைவீர்கள்; வேறு ஏதாக இருந்தாலும் துன்பம் அடைவீர்கள்.

119

Love and hate are both suffering because of desire. Wanting is suffering; wanting not to have is suffering. Even if you get what you want, it’s still suffering because once you have it, you then live in the fear of losing it. How are you going to live happily with fear?

ஆசையின் காரணமாக எழும் அன்பும், வெறுப்பும் இரண்டுமே துக்கம் தான். தேவை என்று எண்ணுவது துக்கம்; வேண்டாமென்று எண்ணுவதும் துக்கமே. வேண்டியது கிடைத்தாலும் அது துக்கம் தான், ஏனெனில் கிடைத்த பிறகு அது தொலைந்துவிடுமே என்ற அச்சத்தோடு வாழ வேண்டியுள்ளது. அச்சத்தோடு எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?

120

When you’re angry, does it feel good or bad? If it feels so bad, then why don’t you throw it away? Why bother to keep it? How can you say that you are wise and intelligent if you hold on to such things? Some days the mind can even cause the whole family to quarrel or cause you to cry all night. And, yet, we still continue to get angry and suffer. If you see the suffering of anger, then just throw it away. If you don’t throw it away, it’ll go on causing suffering indefinitely, with no chance of respite. The world of unsatisfactory existence is like this. If we know the way it is, we can solve the problem.

கோபப்படும்போது மனம் உற்சாகமாக உள்ளதா அல்லது உற்சாகமற்ற நிலையில் உள்ளதா? உற்சாகமற்ற நிலையில் இருந்தால் ஏன் கோபத்தை நீங்கள் தூக்கி எறியக் கூடாது? அதை ஏன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? கோபத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எப்படி அறிவாளி என்றோ புத்திசாலி என்றோ கூறிக் கொள்ள முடியும்? என்றைக்காவது ஒருநாள் மனம், தனது கோபத்தின் காரணமாகக் குடும்பதில் சச்சரவை ஏற்படுத்தும்; அல்லது இரவு முழுவதும் உங்களை அழ வைக்கும். இருந்தும் நாம் தொடர்ந்து கோபிக்கிறோம்; துயர் அடைகிறோம். கோபத்தினுள் உள்ள துயரம் தெரிந்தால் அதை வீசி எறியுங்கள், அப்படிச் செய்யாவிட்டால் என்றென்றும் உங்களை அத்துயரம் இடைவிடாது தொடரும். உலகில் திருப்தியில்லாமல் உயிர் வாழ்வது இப்படித்தான். சரியான வழி தெரிந்தால் பிரச்சனையைத் தீர்த்து விடலாம.

121

A woman wanted to know how to deal with anger. I asked her when anger arose whose anger it was. She said it was hers. Well, if it really was her anger, then she should be able to tell it to go away, shouldn’t she? But it really isn’t hers to command. Holding on to anger, as a personal possession will cause suffering. If anger really belonged to us, it would have to obey us. If it doesn’t obey us, that means that it’s only a deception. Don’t fall for it. Whether the mind is happy or sad, don’t fall for it. It’s all a deception.

ஒரு பெண்மணி கோபத்தை எப்படிச் சமாளிப்பது என்று கேட்டார். நான் "கோபம் எழும் போது அது யாருக்கு சொந்தம்?" என்று அவரைக் கேட்டேன். "தனக்குச் சொந்தம்" என்று அவர் சொன்னார். உண்மையில் கோபம் அவருடையது என்றால் கோபத்தை போய்விடச் சொல்லிக் கட்டளையிட அவரால் முடிய வேண்டும். இல்லையா? ஆனால் கோபத்திற்கு ஆணையிட அது அவருக்குச் சொந்தமானதல்ல. தனக்குச் சொந்தம் என நினைத்து அதைப் பிடித்துக் கொண்டிருப்பது துக்கத்தைத்தான் விளைவிக்கும். உண்மையில் கோபம் நமக்குச் சொந்தம் என்றால் நம் ஆணைக்கு அது கீழ்ப்படிய வேண்டும். அப்படி நம் கட்டளையை ஏற்காவிட்டால் அது நம்முடையது எனக் கூறிக்கொள்வது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வதாகும். ஏமாறாதீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும் வருத்தமாக இருந்தாலும் (நமது மகிழ்ச்சி நமது வருத்தம் என்று) தவறாகக் கருதிக் கொண்டு ஏமறாதீர்கள். எல்லாமே ஒரு ஏமாற்று வித்தை தான்.

122

If you see certainty in that which is uncertain, you are bound to suffer.

நிலையற்றவற்றை நிலையானது என்று கருதுவீர்களென்றால் நீங்கள் துக்கத்திற்கு ஆளாவீர்கள்.

123

The Buddha is always here teaching. See for yourself. Here is happiness and there is unhappiness. There is pleasure and there is pain. And they’re always here. When you understand the nature of pleasure and pain, there you see the Buddha, there you see the Dhamma. The Buddha is not apart from them.

புத்தர் எப்போதும் அருகிலிருந்து நமக்குப் போதித்துக் கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள். இங்கு மகிழ்ச்சி இருக்கிறது, அங்கு துயரம் இருக்கிறது. அங்கு இன்பம் இருக்கிறது, வேதனையும் இருக்கிறது. எல்லாமே எப்போதுமே இங்கு இருக்கின்றன. இன்பம், வேதனை ஆகியவற்றின் இயல்புகளைப் புரிந்து கொண்டால் அங்கே நீங்கள் புத்தரைக் காணலாம், தருமத்தைக் காணலாம். புத்தர் அவைகளை விட்டு விலகி இருப்பதில்லை.

124

Contemplating them together, we see that happiness and suffering are equal, just as hot and cold are. The heat from a fire can burn us to death, while the coldness from ice can freeze us to death. Neither is greater. It’s the same with happiness and suffering. In the world, everyone desires happiness and no one desires suffering. Nibbana has no desire. There is only tranquility.

மகிழ்ச்சியையும், துயரத்தையும் ஒருசேர ஆழ்ந்து சிந்திக்கும்போது இரண்டும் வெப்பமும், குளிரையும் போலச் சமமானவையே எனப் புரிகிறது. நெருப்பின் சூடு நம்மை எரித்துக் கொல்லக்கூடும். அதேபோல் பனிக்கட்டியின் குளிர்ச்சி நம்மை உறைய வைத்துக் கொல்லக்கூடும். இரண்டில் எதுவும் மேலானது அல்ல. மகிழ்ச்சியும், துயரமும் அதே போலத்தான். உலகில் எல்லோரும் மகிழ்ச்சியை விரும்புகிறார்கள். யாரும் துயரத்தை விரும்புவதில்லை. நிர்வாண மோட்சத்தில் ஆசை இல்லை. அங்கு அமைதி மட்டுமே உள்ளது.