தனிமை

தனிமை

Solitude

இரண்டு வகைத் தனிமைகள் உண்டு.

ஒன்று உடல் தனிமை. மற்றது மனத்தின் தனிமை.

உடல் தனிமையில் சில அணுகூலங்கள் உண்டு. கூட்டத்தோடு இல்லாதபோது புலன்கள் தூண்டப்படுவது குறையும். புலன்கள் தூண்டப்படாத வகையில் உள்ள உடல் தனிமை நல்லதே. உடலின், மனத்தின் நடவடிக்கைகளைப் பிரதிபலிக்க வாய்ப்புக் கிடைக்கிறது.

பிரஞ்சு மொழியில் சற்று புத்தி பேதலித்துள்ளவரைப் பற்றிக் கூறும் போது, 'அவன் தனியாக இல்லை,' என்பார்களாம். ஏனென்றால் அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குத்தானே பேசிக் கொள்கின்றனர் அல்லவா? ஆனால் அவர்களுக்கும் நமக்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஏன்? புத்தி பேதலித்தவர் மற்றவர் கேட்கும்படி சத்தமாகப் பேசுவார்கள். நாம் மற்றவர்களுக்குக் கேட்காதபடி மனதுக்குள்ளேயே பேசிக்கொள்கிறோம்.

என்ன விசயமாக நமக்கு நாமே பேசிக் கொள்கிறோம்? பழைய சமாச்சாரங்களை நினைத்துச் சஞ்சலப்பட்டுக் கொண்டும், வரப்போவதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டும் மனம் மனத்தோடேயே உரையாடல் நடத்திக் கொண்டிருக்கிறது. 'நான் அதைச் செய்திருக்க வேண்டும். இல்லை. இல்லை. இதைச் செய்திருக்க வேண்டும். அவளிடம் அதைச் சொல்லியிருக்க வேண்டும். அவன் என்னிடம் அப்படிப் பேசி விட்டானே?' என்றெல்லாம் நமக்கு நாமே பேசிக் கொள்கிறோம். ஆக உடல் தனிமை இருந்தாலும் மனம் தனிமையில் இருப்பதில்லை.

சிறப்பான தனிமை என்பது மனத்தின் தனிமையே என்று புத்தர் கூறுகிறார்.

தனித்து வாழச் சிறந்த வழி 1 - தேரானாமோ சூத்திரம்

தனித்து வாழச் சிறந்த வழி 2 - பத்தேகாரட்ட சூத்திரம்

"இந்த அறம் தனிமை விரும்பிகளுக்குத்தான். கூட்டத்தை விரும்புவோருக்கல்ல."

புத்தரின் இவ்வார்த்தைகளுக்குச் சோணா பிக்கு விளக்கம்.