பொறுமையும் சினமும்
பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
Patience and Anger
Adapted from a Dhamma talk by Ajahn Sona
English version follows the Tamil translation.
மனிதர்களிடம், நிகழ்ச்சிகளிடம், பொருட்களிடம், வாழ்க்கையில் பொறுமையில்லாமல் இருப்பதை எப்படித் தடுப்பது?
நேற்று இரவு 'ஓவாத பதிமோக்கா' என்ற வழிபாட்டினை ஓதினோம். அதில் பொறுமையே மேன்மையான தவம் என்று கூறப்படுகிறது. ஆன்மீகத்தின் உச்சக் கட்டப் பயிற்சி என்பது பொறுமையைப் பயிற்சி செய்வதேயாகும். ஆன்மீக வாழ்க்கையை ஒரே ஒரு பயிற்சியினால் நிறைவு செய்யக் கூடுமானால் அது பொறுமையைப் பயிற்சி செய்வதாகவே இருக்கும். பொறுமையின்மை என்பது ஒருவகை வெறுப்பாகும். பொறுமையின்மை பயனற்றது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் எவ்விதப் பயனும் இல்லை. பொறுமையின்மையினால் ஏற்படும் மனப்பாதிப்புக்களால் பலனேதும் உண்டாகப் போவதில்லை. மற்றவர்கள் ஒரு வேலையை வேகமாகச் செய்ய வேண்டுமென நாம் விரும்பினால், “வேலையைக் கொஞ்சம் விரைவு படுத்துகிறீர்களா?” எனச் சொல்கிறோம். அதைப் பற்றிய நமது உணர்வுகளுக்கும் அவர்கள் அந்த வேலையை வேகமாகவோ, மெதுவாகவோ செய்வதற்கும் தொடர்பேதும் இல்லை. "நான் இதை வேகமாகச் செய்ய வேண்டும். நான் இதை வேகமாகச் செய்யப் போகிறேன்," என்று நாம் நினைக்கும் போது பொறுமையற்றிருப்பதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. அப்போது பொறுமையில்லாமல் இருப்பது நீங்கள் விரைவாகச் செய்ய விரும்பிய வேலையைப் பாதிக்கவே செய்யும். வேகமாக எதையும் செய்யக் கூடாது என்றில்லை. நான், பேருந்தைப் பிடிக்க ஓடும் போது, “அவசரப்படாதே," என்று கூறுவது அவசரப் படும் உணர்ச்சியும் வேகமாகச் செய்யும் போது உள்ள உணர்ச்சியும் வேறுபட்டவை என்பதைக் குறிப்பிடுகிறேன். ஒரு இசைக்கருவியை வாசிக்கும் போது மிக வேகமாக வாசிக்கிறோம். ஆனால் அதை அவசரமாக வாசிக்க வேண்டியதில்லை. உங்கள் மனத்தில் தோன்றும் சிறந்த சிந்தனைகளெல்லாம் பொறுமையான, அழுத்தமற்ற நிலைகளிலேயே உருவாகின்றன. உங்கள் சிறந்த உடல் அசைவுகளும் - ஓட்டமோ, குதித்தலோ - ஒரு பொறுமையான சூழ்நிலையிலேயே வருகின்றன. அழுத்தமான சூழ்நிலைகளில் வருவதில்லை.
எனவே பொறுமையின்மை என்பது ஒரு மாபெரும் தனியான தலைப்பு. உங்கள் ஆன்மீகப் பயிற்சியைப் பொறுமையின்மையைச் சார்ந்து மட்டுமே செய்யலாம். 'நான் பொறுமை இல்லாமல் இருக்கமாட்டேன்,' என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தாலே போதும்; அது உங்கள் பயிற்சியை முழுமையாக்கும் . கெட்ட நோக்கம் எப்படிப் பட்டது என்பது புரியும். நல்லெண்ணத்துடன் பொறுமை எப்படிச் சம்பந்தப்பட்டுள்ளது என்பது புரியும். உபேக்கை, நுண்ணறிவு, சக்தி இவையெல்லாம் எப்படிப் பொறுமையுடன் பொருந்தி இருக்கின்றன என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
கேள்வி: பொறுமை எப்படிச் சக்தியுடன் தொடர்பு கொண்டுள்ளது?
பொறுமையற்றிருப்பது சக்தியைத் தொடர்ந்து விரயம் செய்கிறது. நீங்கள் களைப்புற்றிருந்தால் நாம் பொறுமையில்லாமல் இருக்கின்றோமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பொறுமை என்றால் என்ன? பொறுமையை வேறு விதமாகச் சொல்வதென்றால், 'நான் நிம்மதியாக இருக்கின்றேன்,' எனலாம். நிம்மதியாக இருக்கும் போது உங்கள் சக்தி செலவாவதில்லை. தேவையில்லாமல் சக்தி வீணாக்கப் படுவதில்லை. அமைதியின் முழுப்பயனையும் தெரிந்து கொள்ளுங்கள். அமைதியில் தான் உங்கள் சக்தி உங்களுக்குத் திரும்பக் கிடைக்கிறது. முழுமையாக இளைப்பாறியிருக்கும் போது உங்கள் சக்தி நிரம்பி இருக்கும். அது நலம் பயக்கும் சக்தியும் கூட. ஆக்ரமிக்கும் சக்தி இல்லை. பொறுமையின்மை ஒரு எரி பொருளைப் போல. வாகனத்தை ஓட்ட எரிபொருள் தேவை. ஆனால் பொறுமையின்மை என்பது வாகனத்தையே எரித்துவிடும் எரிபொருளைப் போன்றது. அதில் ஓரளவு வெறுப்புக் கலந்திருக்கிறது.
பொறுமை என்பது முற்றுப் பெற வேண்டிய பௌத்த நெறிகளுள் ஒன்றாகும். பாலி மொழியில் அது கண்டி எனப்படும். நாம் விடுதலை பெறுவதற்கு முன் வளர்த்துக் கொள்ள வேண்டியதும், பூரணத்துவம் அடைய வேண்டியதுமான பத்து நெறிகளுள் இதுவும் ஒன்று.
கேள்வி: பொறுமையும் கட்டுப் படுத்தப்பட்ட கோபமும் ஒன்றா?
உண்மையான பொறுமை என்பது உங்கள் கோபத்தைப் நீங்கள் கட்டுப் படுத்திக் கொள்வது பற்றிய செயல் இல்லை. நீங்கள் 'பொறுமையுடன் காத்திருப்பது,' என்பது இயலாத காரியம். ஒன்று பொறுமையுடன் இருக்க வேண்டும் அல்லது காத்திருக்க வேண்டும். பொறுமையில் எந்த அழுத்தமோ, கொந்தளிப்போ இருப்பதில்லை. அதில் கோபமும் இருக்காது. நீங்கள் கோபத்தை அடக்குவதென்று சொல்வது அதைப் பேச்சிலோ நடத்தையிலோ காட்டாமல் இருப்பது பற்றித் தான். அது நல்லது தான். கோபம் இருந்தால் அப்போது பேச வேண்டாம். அதை வெளிக் காட்டவும் வேண்டாம். மனோதத்துவத்தில் 'கோபத்தைக் கட்டுப் படுத்தாதீர்கள்' என்று அறிவுறுத்துகின்றனர். ஆம், கோபத்தை அடக்காதீர்கள். அதை உண்டாக்காமல் இருந்தால் அதை அடக்கவும் தேவையில்லை அல்லவா! கோபத்தை விட்டு விடுங்கள். கோபத்தை அடக்காமல் சமூகத்தில் வாழவே முடியாது. கோபத்தை அடக்காவிட்டால் நீங்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவீர்கள். ஓர் இடத்திலிருந்து வெளியேற்றப் படுவீர்கள். அப்படி அடக்குவது நேர்மையில்லாதசெயல் என்று நினைக்க வேண்டாம். உங்களுக்குக் கோபம் உள்ளது ஆனால் அதை வெளிகாட்டப் போவதில்லை. இது நல்லது என்பது தெள்ளத் தெளிவான விஷயம். பிரச்சனை என்னவென்றால் மனோதத்துவ நிபுணர்கள் 'கோபத்தை அடக்காதீர்கள்' என்று அறிவுறுத்துகிறார்கள். கோபத்தை அடக்க ஒரு அறைக்குள் சென்று உங்களைக் கூச்சல் போடச் சொல்கிறார்கள். ஒரு தலையணையைக் குத்தச் சொல்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் கோபத்தை வெளிக் கொணரச் செய்கின்றார்கள். பௌத்த நோக்கில் இப்படிச் செய்வதை ஆமோதிப்பதில்லை. ஏனென்றால் எதையெதையோ செய்து பொங்கி வந்த கோபத்தை வெளிக்கொண்டு வந்து விட்டாலும் கன்மம் என்று ஒன்று இருக்கிறது. கோபத்தினால் ஒரு விதை விதைத்து விட்டீர்கள். ஒவ்வொரு முறையும் கோபம் வரும்போதும் இப்படி ஒரு விதை விதைத்து விடுகிறீர்கள். அதன் பலனைப் பின் ஒரு நாள் அனுபவிக்க வேண்டி வரும். கோபம் முடிந்த பின்பும் அது முழுமையாக மறைந்து விடுவதில்லை. பிரச்சனை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. கோபம் இருக்கும் போது எதிர்கால விளைவுகளும் விதைக்கப்பட்டு விட்டன. மேலும் ஒவ்வொரு முறையும் கோபம் உண்டாகும் போது மீண்டும் கோபம் உண்டாவதை எளிதாக்கி விடுகின்றீர்கள்.
எதைச் செய்தாலும் அதை மறுமுறை செய்யும்போது எளிதாகி விடுகிறது.
ஒரு முறை நீங்கள் கோபம் கொள்ளாமல் இருக்கும் போது, அது ஆரம்பிக்கும் முன்னரே தடுத்துவிட்டால், அதை நுனியிலேயே வெட்டி விட்டால் மறுமுறையும் அவ்வாறே ஆரம்பிக்கும் முன்னரே தடுக்கத் தோன்றும். பொதுவாகக் கோபமில்லாதபோது சில பயிற்சிகள் செய்தால் கோபத்தின் வேர்களைக் களைந்து விடலாம். எனவே கோபம் இல்லாத போது - எல்லையற்ற அன்பு, பொறுமை, தயாள குணம், நமது நலன் மீது அக்கறை கொள்ளுதல் போன்ற பயிற்சிகளைச் செய்தல் வேண்டும். அப்படிச் செய்தால் கோபத்தின் தாக்கம் குறையும். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். கோபம் தோன்றும். ஆனால் முந்தையது போல அது நீடிக்காது. முந்தையது போல அதற்கு ஆழம் இருப்பதில்லை. ஆக அதன் தீவிரமும், நீடிக்கும் நேரமும் குறையும். இதுவே நல்ல விளைவு. இது உங்கள் எழுச்சியின் (will) விளைவு இல்லை என்பதை அறிந்தால் ஆச்சரியப் படுவீர்கள். கோபம் வரும்போது நீங்கள் கோபப்படக் கூடாது என்பதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனால் கோபம் முன் போலத் தீவிரமாக இல்லை என்றும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை என்பதையும் அறிவீர்கள். ஏன் இப்படி என்பது உங்களுக்கு விளங்காது.
முன்பு இரண்டு நாட்களுக்கு நீடித்த கோபம் இப்போது ஆறு மணி நேரம் மட்டுமே நிடிக்கிறது. மேலும் நான் சத்தம் போட்டும் பேசவில்லை. கோபத்தை உணர்ந்தேன் ஆனால் முன் போல தீவிரமாக இல்லை. ஆச்சரியம். ஏன்? ஏனென்றால் இது நீங்கள் கோபப்படாமல் இருக்க எடுத்த நடவடிக்கைகளின் விளைவு. கோபப்படாமல் இருப்பதற்கான காரணிகளை உண்டாக்கினீர்கள். இப்போது இவ்வாறு மனப்பாவனை (தியானம்) செய்து பயிற்சி செய்யும் போது எதிர்காலத்தில் கோபம் இல்லாமல் இருக்க வேண்டிய காரணிகளை விதைக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் கோபம் வராமல் இருக்க வேண்டிய காரணிகளை உண்டுசெய்யாமல், கோபம் உண்டான பின் அதைச் சமாளிக்க ஒரு திட்டம் வகுத்து, கோபம் வந்த பின் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் அது பயன் தராது. மேலும் நீங்கள் அறிநிலையில் இல்லாமல் இருப்பதன் விளைவால் தான் கோபம் உண்டாகிறது. கோபத்தின் மீது மனம் தவறானமுறையில் பார்வையைச் செலுத்துகிறது. இதனைப் பெரும்பாலானோர் அறிவதில்லை. அதை அறிவதற்கு முன் கோபம் உண்டாகி விடுகிறது. இங்கு உட்கார்ந்து மூச்சைக் கவனித்தல், மனத்தின் சேட்டைகளைக் கவனித்தல், அதில் நடக்கும் கோமாளித்தனமான நடவடிக்கைகளைக் கவனித்தல் போன்ற பாவனைகளை எல்லாம் செய்கின்றீர்கள். இந்த நடவடிக்கைகளை அறியும் போது, கோபத்தின் அடித்தலம் எல்லாம் ஒரு நாடகம் என்பதை உணர்ந்து, 'முன்பு அதனை ஒரு தரமான நாடகம் என்று நினைத்திருந்தோம். ஆனால் அதைக் கவனிக்கக் கவனிக்க எல்லாம் ஒரு பித்தலாட்டம்,' என்று உணர்வீர்கள். தெளிவான பார்வையுடன் கவனிக்கும் போது எல்லாம் கீழ்த்தரமான நாடகம் என்பதை உணர்வீர்கள். அதற்கு மிகவும் முக்கியத்துவம் தரக் கூடாது. இப்படி நினைத்தாலே கோபத்தின் தீவிரம் குறையும். நாடகம் தம்மமாகிவிடும்.
கோபத்தை சமாளிக்கச் சில வழிகள்: முன்யோசனையுடன் அதைத் தடுக்க வேண்டும். பிரச்சனை துவங்குமுன்பே அதை நிறுத்திவிட வேண்டும். காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக இதனைச் சொல்லிக் கொள்ளுங்கள்: 'இன்று நான் கோபப்படப் போகிறேனா இல்லையா?.' உட்கார்ந்து தியானம் செய்யத் துவங்கும் முன்பே இவ்வாறு சொல்லிக் கொள்ளுங்கள், 'இன்று நான் கோபப்படப் போவதில்லை.' கோபப்படாமல் இருப்பதென்றால் அது எப்படி இருக்கும்? யாரும் உங்களைச் சினம் மூட்ட முடியாத உலகில் நீங்கள் வாழ்வது போல இருக்கும். நல்ல உலகம். உலகத்தை மாற்றிவிட்டீர்கள். இப்போது உள்ள உலகில் யாரும் உங்களுக்கு தொந்தரவு தருவதில்லை. டோஸ்டோவயஸ்கி என்ற ரஸ்ய எழுத்தாளர் ' ஒரு மூடன்' என்ற ஒரு புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்தில் வரும் மூடன் அப்படிப்பட்டவன் தான். அவன் நடந்து கொள்ளும் விதம் உலக வழக்கங்களுக்கு மாறுபட்டதாக இருக்கும். அவனைக் காண்போர் அவனை மூடன் என்று நினைக்கலாம். ஆனால் ஒரு சிறந்த அறிவாளியும்கூட சாதாரணமக்களுக்குச் சற்று மூடத்தனமாக நடந்து கொள்வதாகத் தான் தெரியும். உலக வழக்கங்களுக்கு அடிமையான பெரும்பாலான மனிதர்களோ நுண்ணறிவுள்ளவனுக்கு மூடர்களாகத்தான் தெரியும். நமது பதில் இது போலத்தான், 'உன்னை அவன் இகழ்ந்தும் நீ ஏதும் பதிலுக்குச் சொல்லாமல் புன்னகை மட்டும் செய்தாயா? நீ என்ன மடையனா?' ஏதோ நடந்ததைக் கண்டு, பொரிந்து சத்தம் போட்டு நம்மை நாமே நாசமாக்கிக் கொண்டால் அதுதானே மடத்தனமான செயல்? கோப நிலையில் இருப்பது மடமை. யார் துன்பப்படுவது? நீங்கள் தான். உங்களுக்குக் கிடைப்பதென்ன? ஏதும் இல்லை. ஆகவே ஏன் கோபப்பட வேண்டும்? கோபப்பட எந்த நேரமும் சரியில்லை. கோபப்பட்டு ஒரு பிரச்சனையைத் தீர்த்து விடலாம் என்ற கருத்து நிலவவே கூடாது. உலகைச் சமாளிக்கக் கோபத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
* * * * * *
Transcribed from an audio tape available at birken.ca
How to handle being impatient with people, events, things, life.?
Last night we recited the Ovada Patimokkha (a recitation in Pali) which said patience is the highest austerity. The highest of the spiritual practices, the ultimate austerity. If you want to reduce Spiritual practice to one thing - it is patience. Impatience is a type of aversion. We have to make a radical realization that impatience is useless. It has no effect. The psychological experiences of impatience doesn't do anything. If you want somebody to do something faster you can ask them, 'Can you do that faster?' and how you feel about it has nothing to do with whether they do it faster or not. If you ask yourself, 'Let me do this faster. I want to do this faster,' impatience has nothing to do with it, it actually interferes. Doesn't mean that you cannot move quickly or do things quickly, so I say, 'When running to catch a bus, don't rush.' See the difference between the feeling of rushing and actually doing things quickly. If you are a musician you learn to play your scales and your passages in a very rapid fashion but while you are playing it there is (should not be) no sense of rush. Even the best ideas come to you without impatience. They come to you in a relaxed way rather than by an aggravated way. Your best physical motions come to you in a relaxed way as well, instead of in a tense way.
So impatience is a great single subject. You can just make your practice around impatience. If you just chose that - I no longer would be impatience. You can have a whole practice around that. It will reveal everything. You will see ill-will, see how patience is connected to good-will, how patience is connected to equanimity, how patience is connected to wisdom, how patience is connected to energy.
Q: How is it connected to energy?
Well, impatience is a drain on energy. If you find yourself tired, ask yourself if you are being impatient. What is patience again? Patience is another way of saying, 'I am at ease.' When you are ease you are not draining your batteries. You are not squandering any excess energy. Understand the true value of peace. That's where your energy comes back to you. When you are totally relaxed you have lots of energy, it is the right kind of energy too. Not aggressive energy. Impatience is a fuel. But it is a fuel that burns the engine out. It has a level of ill-will to it.
Patience is one of the paramis (perfections). In Pali it is Khanti. One of the ten things we must cultivate and bring to perfection before we can be liberated.
Q: Is patience same as suppressed anger?
True patience is not about enduring your own anger. We talked about it before. You are never patiently waiting. You are either patient or you are waiting. Patience means there is no tension involved. There is not anger involved. What you are talking about is, in suppression of anger you are not going to let it out in speech or action. And that is right. If you angry don't speak. Don't show it. In psychology they say, 'don't suppress anger'. Yes, don't suppress anger. Well don't have it to begin with and you won't to suppress it. Get rid of it. There is no way to function in society and not suppress it. You will soon end up in a fight. You will soon end up thrown out, kicked out. Don't think it is dishonest. You are angry and you are not going to show it. Perfectly lucid. Problem is in psychology they say don't suppress anger. They get you in a room and get your anger out by punching a pillow or screaming. From a Buddhist point of view we wouldn't encourage that, because every time you experience anger even if it goes away at the end of these processes - screaming and hitting the pillow, we have this karma. We have just planted a seed. Anger is seeds that are planted and have resultants later on. It doesn't just vanish.
Problem is when you get over your anger it has not solved the problem all together. In the meantime you have planted some seeds of future repercussions. In fact every time you get anger you make it easier to get angry. Whatever you do, you have a tendency to do again. Every time you don't get angry, every time you cut it off, head it off, stop it before it starts, you have a tendency to do that again. But usually by doing the preliminaries when you are not angry you can cut down the roots of anger. So when you are not angry - the practice of loving kindness, patience and generosity and all these things, concern for our own well being sets up the precondition, waters down the potency of anger. You will be surprised. Yes you will get angry but you didn't get angry for as long or as intensely. So intensity and duration decrease. That is a classic resultant. You may be surprised it won't be a result of will. At the time you are angry you won't be willing yourself to be not angry. You will just find that your anger does not last as long and won't be as intense. You will be mystified.
I used to feel it for 2 days before, it only lasted six hours and I never shouted either. I didn't quite feel it. I felt the anger but only had half its strength. Interesting. Why? Because it is the resultant. You have put in the causes for non-anger. So when you are here and you are doing the meditation breathing etc. you are sowing the seeds, putting in the causes of non-anger in the future. But if you have a strategy where you try to deal with it on the spot without putting in the causes then it doesn't work. Also anger is a result of lack of mindfulness. Recognize that your mind is focusing in a partial way on a fault. So unwise attention to the fault. Most people don't recognize it. Happens before they are aware of it. Sitting here watching your breath, watching the antics of the mind and the circuses going on, watching this is making you much more conscious of the contents of the mind. This it self, this increased mindfulness will begin to recognize the foundations of your anger as a melodrama, it used to think it as a high quality drama, now it seems rather melo dramatic, the whole thing seems very stagy and then you have a new level of taste, your sophistication has gone up because you have seen this play too many times . You are looking at it with a very clear eye and now it seems pretty slapstick, low melodrama. You can't take it very seriously. Even that will undercut some of the drama. Drama becoming dharma.
Strategies for anger: Head it off at the past, stop trouble before it starts. That is the first thing you should say in the morning, 'Am I going to be angry today or not'. Before you sit down and try to watch your breath and all these things, 'Look, I am not going to be angry today.' What would it be like not to be angry? It would be like being in a world where nobody makes you angry. Nice world . You suddenly changed the world. Now you are in a world where nothing bothers you. There is a book by Dostoyevsky called 'The Idiot'. And this idiot is kind of like that. The way he behaves he does not have a normal conventional reactions to things. He appears in a sense as an idiot but the wise person appears to the world like an idiot. An the worldly people appear a bit like idiots to the wise person. Your response is like, 'So and so insulted you and you didn't say anything and you just smiled. Are you an idiot?' If you react and everything and burn your own system that should be the idiot right? Being angry is foolish. Just who suffers? You. And what do you get out of it? Nothing. So why ever get angry? There is no good time for it. And we have these arguments - Well but that is suppressing ..No no. What I am saying is don't suppress your anger. Just don't be angry at all. You can't go there anymore. Not part of your strategies. Not part of your way of dealing with the world. But now we have taken away some of your energy. You get energy from anger. So you have to find energy from a different place. You can deal with injustice and so forth. ??Excuse me sir I have a feeling you over charge me without being angry. You have to practice that.Once you get rid of your anger as a strategy you have to find some other skillfull way to dealing with events in your life. If you don't have an alternative strategy you are going to feel very inadequate.
* * * * * *