உதகுபம சூத்திரம்

உதகுபம சூத்திரம் - நீர் உவமானம்

Udakupama Sutta — The Water Simile

பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண. தனிசாரோ பிக்கு

Translated from the Pali by Thanissaro Bhikkhu

AN 7.15 Source

உதகுபம சூத்திரம் - நீர் உவமானம். படிப்படியாக முன்னேறும் உவமானங்களைக் கொண்டு புத்தர் மக்கள் தாங்கள் தம்மத்தைப் புரிந்து கொண்டதை வைத்து எந்த அளவுக்கு முன்னேற விரும்புகின்றனர் என்பதைத் அழகாகத் தெளிவாக்குகின்றார். நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல விரும்புகின்றீர்கள்?

AN 7.15: Udakupama Sutta — The Water Simile {A iv 10} [Thanissaro]. In a beautiful progression of metaphors, the Buddha illustrates the various levels to which people allow their grasp of Dhamma to take them. How far are you willing to go?

பிக்குகளே, ஏழு வகையான மனிதர்களை நாம் இந்த உலகில் காணலாம். எந்த ஏழு வகை மனிதர்கள்?

"ஒருவர் நீரில் ஒரு முறை மூழ்கியபின்னர் தொடர்ந்து மூழ்கியே கிடக்கிறார்.

ஒருவர் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் மீண்டும் மூழ்கி விடுகிறார்.

ஒருவர் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் தொடர்ந்து மேலேயே இருக்கிறார்.

ஒருவர் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் தன் கண்களைத் திறந்து சுற்றிலும் கண்ணோட்டம் இடுகிறார்.

ஒருவர் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் கரை சேர நீந்துகிறார்.

ஒருவர் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் நிற்க இடம் பிடித்து விடுகிறார்.

ஒருவர் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் நீந்தி, வெகுதூரத்தில் உள்ள கரையை அடைந்து, உயரமான இடத்தில் ஒரு பிராமணராக நிற்கிறார்.

"There is the case where an individual sinks down once and stays sunk.

There is the case where an individual, on coming to the surface, sinks down again.

There is the case where an individual, on coming to the surface, stays there.

There is the case where an individual, on coming to the surface, opens his eyes and looks around.

There is the case where an individual, on coming to the surface, heads across.

There is the case where an individual, on coming to the surface, gains a foothold.

Then there is the case where an individual, on coming to the surface, crosses over, reaches the far shore, stands on high ground, a brahman.

"நீரில் ஒரு முறை மூழ்கியபின்னர் தொடர்ந்து எப்படி மூழ்கியே கிடப்பது?

ஒருவரிடத்தில் இருள் படிந்த, தீய, திறமையற்ற பண்புகள் மட்டுமே காணப்படுகின்றன. அப்படிப்பட்டவர் ஒரு முறை மூழ்கிய பின்னர் தொடர்ந்து மூழ்கியே கிடக்கிறார்.

"And how does an individual sink down once and stay sunk? There is the case where an individual is endowed with exclusively dark, unskillful qualities. That's how an individual sinks down once and stays sunk.

"நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் மீண்டும் எவ்வாறு மூழ்கி விடுகிறார்?

நீரின் மேற்பரப்புக்கு வந்த ஒருவர், [அறிந்திருப்பது]

'திறமையான இயல்புகளில் நம்பிக்கை கொண்டிருப்பது நல்லது (faith பாலியில் saddhā),

மனசாட்சி நல்லது (conscience பாலியில் hirī),

அக்கறை கொள்வது நல்லது (concern பாலியில் Ottappa),

திறமையான பண்புகளைப் பொருத்தவரை விடாப்பிடியாகப் பற்றுக் கொண்டிருப்பது நல்லது (persistence பாலியில் vīriyaṃ),

மெய்யறிவைப் பொருத்தவரை விவேகத்துடன் இருப்பது நல்லது (wisdom பாலியில் paññā).' [1]

ஆனால் இந்த நம்பிக்கை அவரிடத்தில் தொடர்வதும் இல்லை, வளர்வதும் இல்லை. மேலும் இந்த நம்பிக்கை குறைந்து, பின் மறைந்து விடுகிறது. அவர் மனசாட்சி, அவர் அக்கறை, அவர் விடாப்பற்று, அவர் விவேகம் தொடர்ந்து இருப்பதும் இல்லை, வளர்வதும் இல்லை. மேலும் அவை மறைந்து விடுகின்றன. அப்படித்தான் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் மீண்டும் மூழ்கி விடுகிறார்.

"And how does an individual, on coming to the surface, sink down again? There is the case where an individual comes to the surface, [seeing,] 'Conviction in skillful qualities is good, conscience is good, concern is good, persistence is good, discernment with regard to skillful qualities is good.' But his conviction neither remains nor grows, but simply wanes away. His conscience, his concern, his persistence, his discernment neither remain nor grow, but simply wane away. That's how an individual, on coming to the surface, sinks down again.

"நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் தொடர்ந்து மேலேயே எப்படி இருக்கிறார்?

நீரின் மேற்பரப்புக்கு வந்த ஒருவர், [அறிந்திருப்பது] 'திறமையான இயல்புகளில் நம்பிக்கை கொண்டிருப்பது நல்லது, மனசாட்சி நல்லது, அக்கறை கொள்வது நல்லது, திறமையான பண்புகளைப் பொருத்தவரை விடாப்பிடியாகப் பற்றுக் கொண்டிருப்பது நல்லது, மெய்யறிவைப் பொருத்தவரை விவேகத்துடன் இருப்பது நல்லது.' இந்த நம்பிக்கை அவரிடத்தில் குறைவதில்லை. மேலும் அது வளர்ந்து நிலைத்திருக்கிறது. அவர் மனசாட்சி, அவர் அக்கறை, அவர் விடாப்பிடியாகப் பற்றுக்கொள்வது, அவர் விவேகம் ஆகியவை குறைவதில்லை. மேலும் அவை வளர்ந்து நிலைத்திருக்கின்றன. அப்படித்தான் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் தொடர்ந்து மேலேயே இருக்கிறார்.

"And how does an individual, on coming to the surface, stay there? There is the case where an individual comes to the surface, [seeing,] 'Conviction in skillful qualities is good, conscience is good, concern is good, persistence is good, discernment with regard to skillful qualities is good.' His conviction doesn't wane, but instead develops and remains. His conscience, his concern, his persistence, his discernment don't wane, but instead develop and remain. That's how an individual, on coming to the surface, stays there.

"நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் தன் கண்களைத் திறந்து எவ்வாறு சுற்றிலும் கண்ணோட்டம் இடுகிறார்?

நீரின் மேற்பரப்புக்கு வந்த ஒருவர், [அறிந்திருப்பது] 'திறமையான இயல்புகளில் நம்பிக்கை கொண்டிருப்பது நல்லது, மனசாட்சி நல்லது, அக்கறை கொள்வது நல்லது, திறமையான பண்புகளைப் பொருத்தவரை விடாப்பிடியாகப் பற்றுக் கொண்டிருப்பது நல்லது, மெய்யறிவைப் பொருத்தவரை விவேகத்துடன் இருப்பது நல்லது.' முதல் மூன்று தளைகளை அறுத்தவர் ஓடையில் நுழைந்தவராகி (stream-winner [2]), உறுதியுடன் இனி கீழ் பிறப்பற்றவராகச் சுய விழிப்பின் திசை நோக்கிச் செல்கிறார். அப்படித்தான் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் தன் கண்களைத் திறந்து சுற்றிலும் கண்ணோட்டம் இடுகிறார்.

"And how does an individual, on coming to the surface, open his eyes and look around? There is the case where an individual comes to the surface, [seeing,] 'Conviction in skillful qualities is good, conscience is good, concern is good, persistence is good, discernment with regard to skillful qualities is good.' With the total ending of [the first] three fetters, he becomes a stream-winner, steadfast, never again destined for states of woe, headed for self-awakening. That's how an individual, on coming to the surface, opens his eyes and looks around.

"நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் எப்படிக் கரை சேர நீந்துகிறார்?

நீரின் மேற்பரப்புக்கு வந்த ஒருவர், [அறிந்திருப்பது] 'திறமையான இயல்புகளில் நம்பிக்கை கொண்டிருப்பது நல்லது, மனசாட்சி நல்லது, அக்கறை கொள்வது நல்லது, திறமையான பண்புகளைப் பொருத்தவரை விடாப்பிடியாகப் பற்றுக் கொண்டிருப்பது நல்லது, மெய்யறிவைப் பொருத்தவரை விவேகத்துடன் இருப்பது நல்லது.' முதல் மூன்று தளைகளை அறுத்தவர் மேலும் காமம், வெறுப்பு, அறியாமை ஆகிய தளைகளின் சக்தியைக் குறைத்தவர் ஒரு முறை மட்டுமே இந்த உலகில் மறுபிறப்பெடுக்கும் நிலையை அடைந்து (once-returner [3]) - பின் துக்க முடிவை எட்டுவார். அப்படித்தான் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் கரை சேர நீந்துகிறார்.

"And how does an individual, on coming to the surface, head across? There is the case where an individual comes to the surface, [seeing,] 'Conviction in skillful qualities is good, conscience is good, concern is good, persistence is good, discernment with regard to skillful qualities is good.' With the total ending of [the first] three fetters, and with the attenuation of passion, aversion, and delusion, he becomes a once-returner, who - on returning only one more time to this world - will make an ending to stress. That's how an individual, on coming to the surface, heads across.

" நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் எப்படி நிற்க இடம் பிடித்து விடுகிறார்?

நீரின் மேற்பரப்புக்கு வந்த ஒருவர், [அறிந்திருப்பது] 'திறமையான இயல்புகளில் நம்பிக்கை கொண்டிருப்பது நல்லது, மனசாட்சி நல்லது, அக்கறை கொள்வது நல்லது, திறமையான பண்புகளைப் பொருத்தவரை விடாப்பிடியாகப் பற்றுக் கொண்டிருப்பது நல்லது, மெய்யறிவைப் பொருத்தவரை விவேகத்துடன் இருப்பது நல்லது.' முதல் ஐந்து தளைகளை அறுத்தவர் [தூய லோகங்களில்] மறுபிறப்பெடுக்கும் நிலையை அடைந்து - அங்கேயே வீடுபேறு அடைவார் (non-returner [4]). அப்படித்தான் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் நிற்க இடம் பிடித்து விடுகிறார்.

"And how does an individual, on coming to the surface, gain a foothold? There is the case where an individual comes to the surface, [seeing,] 'Conviction in skillful qualities is good, conscience is good, concern is good, persistence is good, discernment with regard to skillful qualities is good.' With the total ending of the five lower fetters, he is due to be reborn [in the Pure Abodes], there to be totally unbound, never again to return from that world. That's how an individual, on coming to the surface, gains a foothold.

"நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் நீந்தி, வெகுதூரத்தில் உள்ள கரையை அடைந்து, உயரமான இடத்தில் ஒரு பிராமணராக எப்படி நிற்கிறார்?

நீரின் மேற்பரப்புக்கு வந்த ஒருவர், [அறிந்திருப்பது] 'திறமையான இயல்புகளில் நம்பிக்கை கொண்டிருப்பது நல்லது, மனசாட்சி நல்லது, அக்கறை கொள்வது நல்லது, திறமையான பண்புகளைப் பொருத்தவரை விடாப்பிடியாகப் பற்றுக் கொண்டிருப்பது நல்லது, மெய்யறிவைப் பொருத்தவரை விவேகத்துடன் இருப்பது நல்லது.' தளைகள் அனைத்தையும் அறுத்தவர் தம் தூய உள்ளத்தை அறிந்தவராக, விவேகத்தால் பெற்ற விடுதலையை அறிந்தவராக இந்த வாழ்விலேயே வீடுபேறு அடைகிறார் (Arahant [5]). தம் மனமாசுகளை அழித்தமையால் இந்த விடுதலையைத் தாமாகவே அறிந்து வாழ்கின்றார். அப்படித்தான் நீரின் மேற்பரப்புக்கு வந்தவர் நீந்தி, வெகுதூரத்தில் உள்ள கரையை அடைந்து, உயரமான இடத்தில் ஒரு பிராமணராக நிற்கிறார். [6]

"And how does an individual, on coming to the surface, cross over, reach the far shore, stand on high ground, a brahman? There is the case where an individual comes to the surface, [seeing,] 'Conviction in skillful qualities is good, conscience is good, concern is good, persistence is good, discernment with regard to skillful qualities is good.' With the ending of the mental fermentations, he enters and remains in the fermentation-free awareness-release and discernment-release, having directly known and realized them for himself right in the here and now. That's how an individual, on coming to the surface, crosses over, reaches the far shore, stands on high ground, a brahman.

"இவர்களே இந்த உலகில் காணப்படும் ஏழு வகையான மனிதர்கள்."

* * *

விளக்கம்

Notes

[1] சத்தா saddhā - நம்பிக்கை faith/Conviction

ஹிரி hirī - தவறு செய்வதற்கு வெட்கப்படுதல் moral shame, conscience

ஒத்தப்ப Ottappa - செய்யும் காரியத்தின் வினைப்பயனை நினைத்து அக்கறை கொள்வது, Concern over the results of actions/prudence.

வீரிய vīriyaṃ - வீரியம், உறுதி கொள்ளுதல். persistence/energy

பஞ்ஞா paññā - விவேகம், மெய்யறிவு discernment/wisdom

[2] ஓடையில் நுழைந்தவர் stream-winner or stream enterer. First stage of enlightenment. வீடு பேற்றின் முதல் நிலை.

[3] ஒரு முறை மட்டுமே இந்த உலகில் மறுபிறப்பெடுக்கும் நிலை once-returner. Second stage of enlightenment. வீடு பேற்றின் இரண்டாம் நிலை.

[4] [தூய லோகங்களில்] மறுபிறப்பெடுக்கும் நிலையை அடைந்து அங்கேயே வீடுபேறு அடைபவர் non-returner Third stage of enlightenment. வீடு பேற்றின் மூன்றாம் நிலை.

[5] அருகர் Arahant - Final stage of enlightenment. வீடு பேற்றின் இறுதி நிலை.

[6] 7th type: translation from Bhante Sujato https://suttacentral.net/an7.15/en/sujato

And what kind of person has risen up, crossed over, and gone beyond, a brahmin who stands on the shore? It’s the kind of person who, rising up, thinks: ‘It’s good to have faith, conscience, prudence, energy, and wisdom regarding skillful qualities.’ They realize the undefiled freedom of heart and freedom by wisdom in this very life. And they live having realized it with their own insight due to the ending of defilements. This kind of person has risen up, crossed over, and gone beyond, a brahmin who stands on the shore.

* * *