மஹா ஸாரோபம சுத்தம் - உரை
யுத்ததம்மோ பிக்கு
மஹா ஸாரோபம சுத்தத்தின் இந்த உரை யுத்ததம்மோ பிக்கு அவர்களின் காணொளி போதனையை ஆதாரமாகக் கொண்டது. ஆதாரம் MN29 Commentary
ஆன்மீகப் பாதையில் ஐந்து அம்சங்கள் அடங்கும்.
1. சிற்றின்பத்தில் ஆர்வம் (சுகபோகங்களை அனுபவித்தல்):
உலகில் உள்ள பெரும்பான்மையோரின் வாழ்க்கையின் குறிக்கோள்களை ஆன்மீக நோக்கில் பார்க்கும் போது அவை மிக உயர்வானதாகத் தெரிவதில்லை. இந்தச் சூத்திரத்தில் (மஹா ஸாரோபம சூத்திரம்) புத்தர் துறவிகளைப் பற்றிப் பேசுகிறார். ஒருவர் வீட்டைத் துறந்து பின் துறவியாகிறார். ஒரு பிரபலமான ஆசிரியரிடம் சீடராகி, பின்னர் அவரும் பிரபலமானவராகிறார். மக்கள் அவரை மதிக்கின்றனர்; போற்று கின்றனர். அதன் காரணமாக அவர் ஆதாயமும், வெகுமதியும் புகழும் பெறுகிறார். அதனால் அவர் திருப்தி அடைகிறார். தான் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டாலும் ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுவதில்லை. உண்மையில் அவர் ஆன்மீக வாதியெனப் பாசங்கு செய்கின்றார். அவர் ஒரு போலி சாமியார். துறவிகளை ஒதுக்கிவிட்டு, மற்ற மக்களனைவரையும் பார்க்கும் போதும் உலகில் பெரும்பாலானோர் ஊதியம், புகழ்ச்சி, சிறப்பு, இன்பம் என்பனவற்றை நாடி அலைந்து அவற்றிற்குள்ளேயே சிக்கிக் கொள்கின்றனர். இங்கு சிற்றின்பத்தைப் பற்றிப் பேசுகிறோம். பெரும்பாலானோர் தேடுவது, நல்லதை, பயனுள்ளதை, பொருளுடையதை. ஆனால் அவர்கள் பொருளற்றவற்றிலேயே பொருளைத் தேடுகின்றனர். ஆகவே நாம் சிற்றின்பத்தை, அழகிய காட்சிகளை, நறுமணத்தை, இனிய ஓசைகளை, சுவைகளை, நுகர்ச்சிகளையே தேடுகிறோம். புலன்களைத் தூண்டுவனவற்றிற்காகவே போராடுகிறோம். இதுவே மதங்களுக்கான நுழைவாயில். ஏனென்றால் சிற்றின்பத்தை நாடுவது மனத்தைச் சீர் குலைக்கிறது. எதையும் தெளிவாகக் காண்பதைத் தடுக்கிறது.
சிற்றின்பத்தில் நாட்டம் கொள்வதை விட்டு அப்பால் செல்லாதவர், வீடு கட்ட வைரம் பாய்ந்த முற்றிய மரங்கள் தேவைப்படுபவன், மரத்தின் இலைகளையும் குச்சிகளையும் கொண்டு வீடு கட்ட முயற்சிப்பதற்குச் சமமாகும்.
There are five aspects to how we may look at the world religiously.
Sensuality:
Most of what we aim for in the world is not very advanced from a religious point of view. The Buddha is referring to monks. Someone leaves home becomes a religious person. They come under a famous teacher become famous themselves. People look up to them, respect them give them all sorts of support and esteem. They become content with that. Someone claims to be a religious individual but does not do anything religions. Pretend to be something they are not. He is a charlatan. Looking at the broader world not just monks, most of the world is caught up in things like praise and gain and fame. We are talking about sensuality here. Most people are seeking something good, something beneficial, something meaningful. But they find meaning in something that is meaningless. So our search is for sensuality. We strive for beautiful sights and smells and sounds and tastes and feelings. We strive for stimulation of the senses. This is an entry point for religion. Becuase engaging in sensuality messes up your mind. Prevents you from seeing clearly.
2. சீலம் (பண்பு, ஒழுக்கம்):
புத்தர் காலத்திற்கு முன்பே வாழ்ந்த பல தத்துவ ஞானிகளும், அறிஞர்களும், சிந்தனையாளர்களும் அவாவில் உள்ள ஆபத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் அல்ல, கிரேக்க அறிஞர்களான அரிஸ்டாட்டலும் (Aristotle), சோக்கிரேட்டீஸும் (Socrates) மற்றவர்களும்கூட இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளனர். சிற்றின்பத்தை நாடுவது மனத்தைச் சீர்குலைக்கும்; அதிருப்தி உண்டாக்கும்; கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக்கும். இதன் காரணமாகத்தான் மதங்கள் ஒழுக்கத்திற்கும், பண்புக்கும் முக்கியத்துவம் தருகின்றன.
விரும்பியதையெல்லாம் பெற்றுவிட வேண்டும் என்று அவைகளைத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க வேண்டாம். எல்லோரும் தங்களுக்கு விருப்பமான அனைத்தையும் எடுத்துக் கொண்டால் மிஞ்சுவது தாறுமாறான குழப்ப நிலை தான். திருட்டு, கொலை, கற்பழிப்பு, போர் என்பவையே மிஞ்சும். ஆழமான பேராசையின் காரணமாக மனிதர்கள் எதை எதையோ செய்கின்றனர்! எனவே ஒழுக்கத்தைப் பயில்வது நமது நன்மைக்கே. சிற்றின்பத்தை நாடுவதை விட அது மேலானது. ஏனென்றால் அது, மனம் திருப்தியடைவது சம்பந்தப்பட்ட செயல். நம்முள் பெரும்பாலானோர் நன்னெறியைக் (Ethics) கடைப்பிடிப்பவர்கள் தான். மனிதனாகப் பிறப்பெடுத்தாலே ஓரளவுக்கேனும் பண்புள்ளவராகத்தான் இருக்க முடியும். ஒழுக்கத்துடன் வாழும் போது நாம் அளவுக்கு மீறிய ஆசைவெறி கொள்வதில்லை. தீய பழக்கங்களுக்கு அடிமையாவதும் குறைவே. நமக்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டாலும் அதை நாம் வெறியோடு தொடர்வதில்லை. நமது கெட்ட விருப்பங்களுக்கு நாம் இடம் தருவதில்லை. பண்புடன் நடந்து கொள்ளும் போது நமது மனமும் திருப்தியான நிலையில் இருக்கும். நிலையாகவும், தெளிவாகவும் இருக்கும். எனென்றால் நாம் கொலை செய்வதில்லை, திருடுவதில்லை, தகாத உறவுகளில் ஈடுபடுவதில்லை, பொய் பேசுவதில்லை. ஆனால் பண்போடு இருப்பது மட்டும் போதாது. ஒழுக்கத்தை மட்டுமே நம்பியிருந்தால் அது நம்மை மிகவும் அடக்கி வைத்திருப்பதாகத் (repressive) தோன்றும். இது வெள்ளத்தை வெறுங்கைகளைக் கொண்டு தடுத்துச் சாமாளிக்க முயல்வது போல. அதுவும் ஒரு நல்ல முயற்சி தான். தேவையான முயற்சியும் கூட. ஆனால் அடங்காத ஆசையிலும், விருப்பங்களிலும் கெட்ட பழக்கங்களிலும் மூழ்கிக் கொண்டிருக்கையில் தலையை மேலே தூக்கி நிற்க ஒழுக்கம் மட்டும் போதாது. இருந்தாலும் தெளிவாகப் பார்க்க வேண்டுமென்றால் முதலில் போதையை அகற்ற வேண்டும். விதிமுறைகளையும் சீலங்கலையும் பின்பற்றுவது தற்காலிகமான தீர்வு என்றாலும் அதிலும் சற்றுப் பயனுள்ளது.
ஒழுக்கமான வாழ்வை மீறி நடக்காதவர், வீடு கட்ட வைரம்பாய்ந்த முற்றிய மரங்கள் தேவைப்படுபவன், மரத்தின் வெளி மட்டைகளை மட்டுமே கொண்டு வீடு கட்ட முயற்சிப்பதற்குச் சமமாகும்.
Morality:
Many philosophers even before the Buddha were talking about it. Not just in India. Socrates was talking about it. How desire for sensuality messes you up. It leads to dissatisfaction or addiction. This is why religion clings to morality. That is the entry point for religion. Don't just follow you whims. If everyone just takes what they want, it is chaos. Theft, murder, rape, war etc. The things we do as human beings with our intense greed. So morality i s a good thing. It is superior to sensuality. Because it involves contentment. Most of us are fairly ethical. To be born as humans you have to be fairly ethical in the first place. With morality we are less crazed and addicted. We want something, but we don't go for it. So we don't feed our addiction. Our minds are more contend because of morality. More stable, more clear. Because we don't kill and steal and cheat and lie. But it is not nearly enough.
Morality can be repressing if we just rely upon it. It is like stemming the tide with bare hands. It is a good attempt. It is necessary. We can't rise above the world if we are drowning in lust and desire and addiction. We have to sober up before we see clearly. This temporary solution can be useful. Keeping all the rules and precepts.
3. மன ஒருமைப்பாடு:
நற்பண்புகளும், அறநெறியைப் பின்பற்றுவதும் அமைதி வழிக்கு இட்டுச் செல்லும். சிற்றின்பத்தில் ஈடுபடாத மனம் அமைதியாகிறது. தெளிவாகிறது. பண்புள்ள நடத்தையின் உச்சநிலை எதுவென்றால், கொலை செய்யாமல் இருப்பது, களவாடாமல் இருப்பது, பொய் பேசாமல் இருப்பது போன்ற உடலின், சொல்லின் ஒழுக்கம் பற்றியது மட்டும் அல்ல, அது மனத்தைத் தூய்மையாக்குவதேயாகும். மனம் தீயவற்றைச் செய்வதிலிருந்து தடுக்கப்படும் போது அறநெறியைப் (உடல்/சொல் கட்டுப்பாடு) பின்பற்றுவதிலிருந்து, தியானத்திற்கு (மனத்தின் கட்டுப்பாடு) வருகிறோம். இது மெய், சொல் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. மனத்தில் கோபம் உண்டானால் நாம் அதை தடுக்கின்றோம். மனம் விரும்பியதைச் செய்ய முயல்வதை நாம் முனைப்புடன் தடுக்கிறோம். மனம் பழக்கப்பட்டதைச் செய்ய விழைவதிலிருந்து அதைத் தடுக்கிறோம். இது தான் மன ஒருமைப்பாட்டை வளர்க்கும் வழியாகும்.
மனக்கறைகளை நீக்குவது, மனத்தைப் பக்குவப் படுத்துவது - இவையெல்லாம் மனதை அமைதியாக்கும் வழிமுறைகளாகும். இது மனத்தை ஒரு கயிற்றினால் கட்டிவைப்பது போல. ஒரு எல்லைக்கு வெளியே அதைச் செல்ல விடாமல் தடுப்பது. இதுவே மனத்தை அமைதியாக்கும் பயிற்சி - சமதா தியானம். (மன ஒருமைப்பாட்டிற்கு எடுத்துச்செல்லும் தியானம்). மனத்தை அமைதியாக்க பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த பயிற்சி இது. கடவுளை மையமாகக் கொண்ட மதங்கள் பிரார்த்தனை செய்வது, பூசை செய்வது, பஜனை, பாடல், நடனம் என்று பல விதமாக இந்த மனத்தை அமைதிக்கு கொண்டு செல்லும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் தியானம் தான். மனத்தை ஒரு சமாதி நிலைக்குக் கொண்டு செல்வதால், அது தன் விருப்பப்படி ஓடித் திரிவதில்லை. உலகில் உள்ள தீய செயல்களை நோக்கி அது ஈர்க்கப் படுவதில்லை. இது அறநெறியை மட்டும் பின்பற்றுவதை விட மேலான வழியாகும். ஏனென்றால் இது மனம் சம்பத்தப் பட்டது. வலிமையான நிலை இது. இந்தப் பயிற்சியில் ஆழமாக ஈடுபட்டால் நாம் கடவுளோடு ஒன்றி விடலாம். சில இந்து தியானங்கள் கடவுளோடு ஒன்றி இணைவது சம்பந்தப் பட்டன. இதை ஞான சுகம் என்பார்கள். தியானத்தால் இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் ஞானியின் பேரின்பம். சரி, கடவுளோடு சேர்ந்து விட்டோம். ஆன்மீகப் பாதையின் உச்சத்தை நாம் அடைந்து விட்டோமா? இல்லை!
ஏனென்றால் மனத்தை ஒருமுகப் படுத்துவதும் ஒரு வகையில் அடக்கிச் செய்யும் செயல் தான். ஒருவகையில் இதுவும் பிரச்சனையிலிருந்து தப்பிப் போவது தான். சான்றாக நாட்டில் பெரும் பிரச்சனைகள் பல இருக்கின்றன. ஆனால் நாம் விடுமுறை எடுத்துக்கொண்டு நாட்டை விட்டுச் சென்று விடுகிறோம். நாட்டைவிட்டுச் சென்று ஒரு அமைதியான தீவில் தங்கி இருக்கலாம். ஆனால் அது நாட்டில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கப் போவதில்லை. விடுமுறை முடிந்ததும் நாடு திரும்பியாக வேண்டும் அல்லவா? மீண்டும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டுமல்லவா? சமதா தியானத்தைப் பொருத்தவரை தியானம் முடிந்ததும் எல்லாப் பிரச்சனைகளும் திரும்பி வந்து விடுகின்றன. நாம் நேரத்தை வீணாக்கிவிட்டோம் என்று சொல்லவில்லை. ஆனால் பிரச்சனைகள் நாம் நினைத்ததுபோலத் தீர்க்கப்பட்டு விடவில்லை என்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
மனஒருமைப்பாட்டுப் பயிற்சியை மீறிச் செல்லாதவர், வீடு கட்ட வைரம்பாய்ந்த முற்றிய மரங்கள் தேவைப்படுபவன், மரத்தின் உள்மட்டைகளைக் கொண்டு வீடு கட்ட முயற்சிப்பதற்குச் சமம்.
Concentration:
Morality and ethics leads to calm. If we are not indulging in sensuality the mind starts to calm down and clear up. Morality when taken to the highest, it is not about not killing or stealing it is about purifying the mind. The shift from ethics to meditation comes about when you prevent the mind from doing bad things. Not just body and speech. Something comes that would anger you. you stop your mind. Forcing the mind not to do what it wants to do. What it is accustomed to do. That is building concentration.
It is about calming the mind, clearing the mind, training the mind in such a way that it calms down. Keep the mind tied to a rope so it can't go out. So this is the practice of calming of the mind - samatha meditation. This is a common religious practice to find a way to calm the mind . Theistic religions pray, read, sing, dance. It is all meditation. Putting the mind in a trance state so it does not wander. Does not get distracted or attracted by the evils of th world. It is better then ethics. It is dealing with the mind. It is powerful state. If you really get into it, you can become God. Some Hindu meditation are about becoming one with God. Is that it then? You become one with God? No.
Remember it is still some kind of repression, some kind of avoidance. Like saying there is problems with our country so let us take a vacation. Which is fine. You can go and live in a tropical island but does not fix the problems in your homeland. Eventually you got to go back. In terms of tranquility (Samatha) meditation when you stop meditating, all your problems come back. It is not a waste of time. But we have to accept that we do not get rid of everything we thought we got rid of.
4. மெய்யறிவு:
இங்கு தான் பௌத்தம் தலைதூக்கி நிற்கிறது. புத்தரின் காலத்திலேயே மனத்தை அமைதியாக்கும் வழிமுறைகள் பயிற்சி செய்யப்பட்டு வந்தன. நம்பிக்கை உள்ளோர் அவரவர் தர்மப்படி பல வழிகளில் பயிற்சி செய்து வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் பயிற்சி மூலம் மன அமைதியும் கண்டனர். பௌத்தம் மெய்யறிவு கொண்டது, மற்ற தர்மங்களை விட உயர்வானது, அறிவால் உணரும் ஆற்றல் பற்றிய பல போதனைகளைக் கொண்டுள்ளது என்று பௌத்தர்கள் மத்தியில் சற்றுத் தற்பெருமையும் உண்டு. இங்கு விபாஸனா தியான முறையை பற்றிப் பேசுகிறோம். மனத்தை உள்நோக்கிக் காண வைக்க மனத்தைப் பக்குவமாக்கப் பயிற்சி செய்யும் தியான முறை இது. நம்மைப் பற்றிய பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்கிறோம். மனத்தை அமைதியாக்கும் வழிமுறையல்ல இது. மேலான மன சமநிலைகளையோ, அமைதியையோ நோக்கமாகக் கொள்வதில்லை. பிரச்சனைகளைவிட்டு விலகி ஓடாமல் பிரச்சனைகளை நேரில் எதிர்கொண்டு அவற்றைச் சீர்படுத்தும் முறையாகும் இது. (துக்கத்திடமிருந்து விலகி ஓட முயற்சிப்பது துக்கத்தை நோக்கியே ஓடுவதற்குச் சமம் என்றார் அஜான் சா.) போர்க்களத்திலேயே வாழக் கற்றுக் கொள்கிறோம். அதன் பலன் என்னவென்றால் போருக்கான பயிற்சியும், போரைப் புரிந்து கொள்வதும், போருடன் நெருங்கிய பழக்கமும் தான். போரைப் புரிந்து கொள்கிறோம் என்றால் என்ன போர்? அகத்தில் உள்ள போர். நமது பிரச்சனைகளோடு, பிடித்த பிடிக்காதவைகளோடு, ஆணவத்தோடு, கவலை, அச்சம், சந்தேகம் ஆகியவற்றோடு பழகி அவற்றைப் புரிந்து கொள்கிறோம். அப்படித்தான் ஆழமான மாற்றங்கள் எல்லாம் நடைபெறும். நாமே அந்த மாற்றத்தை உண்டாக்குகின்றோம். ஆசையை, பற்றினை புரிந்து கொள்கிறோம், தவறு என்று தெரிந்தும் ஒன்றை விரும்புவது பற்றிப் புரிந்து கொள்கிறோம். நமது கவலைகள் எவை, எதனோடு தற்பெருமைகொள்கிறோம், நமக்கு துக்கம் உண்டாக்குபவை எவை என்பதையும், நம்மைப் புண்படுத்துபவை எவை என்பதையும் புரிந்து கொள்கிறோம். (விபாஸனா தியானப் பயிற்சியில் இது போன்ற மனநிலைகள் எல்லாம் துக்கமுண்டாக்குபவை, சாரமற்றவை, நிச்சயமற்றவை என்பதை அறிந்து கொள்ளக் கற்றுக் கொள்கிறோம்). ஆக இப்படி மெய்யறிவை வளர்த்துக் கொண்டதால் மரவைரத்தைக் கண்டு விட்டோமா? பதில்: இல்லை. இது கூட புத்தரைப் பொருத்தவரை போதுமானது இல்லை.
மெய்யறிவை மீறிச் செல்லாதவர் வீடு கட்ட வைரம்பாய்ந்த முற்றிய மரங்கள் தேவைப்படுபவன், மரத்தின் மென்மையான புதிய மரத்தை (உல்மட்டைக்கும் மரவைரத்திற்கும் நடுவே உள்ளது ) மட்டுமே கொண்டு வீடு கட்ட முயற்சிப்பதற்குச் சமம்.
Wisdom:
Here is where Buddhism comes in. In the time of the Buddha people were clearly practicing to calm the mind down. People with faith practicing religious ways. And a lot of these people calm down. In Buddhism we have this conceit that we have some sort of wisdom or understanding that is higher than other paths have. This is where the practice of insight meditation comes (Vipassana) . We learn so much about ourselves. We are not really trying to calm the mind. You are not achieving higher states of equanimity or tranquility. Instead of running away, you are sorting things out. You are learning to exist in a war zone really. The benefit of that is the training, the familiarity, the understanding of war. The war inside. Suffering through your problems, your likes and dislikes, your ego, anxiety, fear, doubt all of this. Suffering through all of this. This is how, the real deep change comes about. We are doing it ourselves. Understanding desire, guilt of wanting things we know are wrong, our worries, conceit. It is understanding that which causes us suffering that which hurts us. Well then, have we found the heartwood? The answer is no. Even that is not good enough for the Buddha.
5. விடுதலை, கட்டவிழ்ப்பு
தியானத்தால் நமது புரிந்து கொள்ளும் ஆற்றல் - மெய்யறிவு - வளர்கிறது என்றாலும் அது மட்டும் போதாது. கற்றதை மறந்து விடலாம். வழி தவறி விடலாம். பலமுறையும் ஒன்று தவறு என்று தெரிந்தும் அதையே தொடர்ந்து செல்கிறோமே! நமது தோற்றத்தின் சாரம் மெய்யறிவு கூட இல்லை. மெய்யறிவு ஒரு கருவி. போதுமான மெய்ஞ்ஞானம் பெற்றால் ஒருவகையான நிலச்சரிவு உண்டாகிறது. மனம் 'ஆம், இதனோடு பற்றுக் கொள்வதில் பயனில்லை.. அதனோடு பற்றுக் கொள்வதில் பயனில்லை...எதனோடும் பற்றுக் கொள்வதில் பயனில்லை..' என்று திரும்பத் திரும்பத் திரும்ப எதனோடும் பற்றுக் கொள்வதில் பயனில்லை என்பதை உணர்கிறது. மனதில் ஆழமான அறிவு தோன்றுகிறது. எதனோடும் பற்றுக் கொள்வதில் பயனில்லை. நாம் துன்பம் அனுபவிப்பது பற்றுக் கொள்வதில் பயனற்றதுடன் பற்றுக் கொள்வதனால் தான். பொதுவாக நாம் விஷயங்களைக் கட்டுப் படுத்த முயல்கிறோம். நடந்தவற்றுக்கு எதிர்ச்செயல் செய்ய விரும்புகிறோம். ஆனால் இப்போது திரும்பத் திரும்பத் திரும்ப ஒன்று தெளிவாக விளங்குகிறது: எதனோடும் பற்றுக் கொள்வதில் பயனில்லை. இதுதான் விடுதலைக்கு (கட்டிலிருந்து விடுபடுவதற்கு) இட்டுச் செல்கிறது. நிப்பாண நிலையை உணர்த்துகிறது. நாம் கைவிடுகிறோம். இந்த விட்டுவிடும் அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாகும். இது அமைதியை மகிழ்ச்சியைத் தருகிறது. ‘இந்த அனுபவம் தோற்கடிக்க முடியாதது, அசைக்க முடியாதது’ என்று புத்தர் கூறினார். இதுவும் அதுவும் மற்றதும் தான் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்று கூறினீர்களானால் உங்கள் மகிழ்ச்சியைக் குலைக்க இதுவும் அதுவும் மற்றதும் மறைந்தாலே போதும். உங்கள் மகிழ்ச்சியும் மறைந்துவிடும் அல்லவா? ஆனால் பற்றற்ற நிலையில் மனம் எதன் மீதும் பற்றுக் கொள்ள விரும்புவதில்லை. எனவே எது மறைந்தாலும் தோன்றினாலும் உங்களைப் பாதிப்பதில்லை. இதில் பெரும் வலிமையுள்ளது. முழுமையான அமைதி இங்கிருந்து தோன்றுகிறது. வாழ்க்கையை மாற்றும் சக்திகொண்டது. இதுவே மரவைரம்.
ஆன்மீக பாதையின் உச்சமான விடுதலை அடைந்தவர் வீடு கட்ட மரவைரம் தேவைப்படுபவன், மரத்தின் வைரத்தை வெட்டிச் சென்று உறுதியான, திடமான அசைக்க முடியாத வீட்டைக் கட்டுவதற்குச் சமம்.
Unbinding:
Even the understanding that we are gaining through meditation is not enough. We can still forget it. We can loose our way. Often we know something is wrong but we still go after it. The real essence of existence isn't even what we normally think of as wisdom. But wisdom is the tool. If you gain enough wisdom, there is this kind of landslide. The mind creates this feedback loop 'Yes, that this is not worth clinging to .. that is not worth clinging to .. that is not worth clinging to..' again and again and again until nothing is worth cling to . Until there comes this moment, this landslide, this explosion of light .. mind comes to deep and profound complete perception of nothing being worth cling to. That is the point. I am suffering because I am clinging to what is not worth clinging to. I am trying to control things, I am trying to react to things. You see that again and again and again.. until it overwhelms you.. you have this complete perception that nothing is worth cling to. That is what leads to freedom. experience of Nibbanna, unbinding. You let go. This experience of cessation, that is categorically different. It is peaceful, it is happiness. It is something the Buddha says is unassailable, unshakable. If you say x, y or z is going to cause you happiness, all that has to be happen for you not to be happy is to not get x, y or z. But by definition the state of not clinging to anything, of having the state of mind of not wanting to cling to anything - that is where the power is. Perfect peace comes from that. That is life changing. That is the heartwood.
* * *