இது போலத்தான்
108 அற உவமானங்கள்
போற்றுதற்குரிய அஜான் சா
It’s Like This
1 0 8 D H A M M A S I M I L E S
Venerable Ajahn Chah
* * * * * *
13 முழுமையைக் காண்பது Top
நீங்கள் புண்ணியம் செய்யும் போது, புண்ணியம் என்றால் என்ன? புண்ணியம் என்றால் முறையாக வாழ்வது. மனத்தை அமைதி நிலைக்குக் கொண்டு வருவது. தீயவற்றை ஒதுக்குவது. இல்லற மக்களாகிய நீங்கள் அனைவரும் புண்ணியம் சேர்க்கக் கூடியிருக்கின்றீகள். ஆனால் புண்ணியத்தை தேடுவதென்றால், ஒவ்வொருவரும் உங்களையே கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கொண்டு வந்துள்ளதெல்லாம் பொருட்கள் - பலதரப்பட்ட பொருட்கள். இது உணவு உண்ணுவது போல. சுவையும், மணமும் கொண்ட பலவகைப் பண்டங்களை வயிறார உண்கிறீர்கள். வயிறு நிறைந்த பின் எங்கு உள்ளது அந்த முழுமை? உங்களுக்குத் தெரிவதில்லை.
முழுமைக்குப் பொருள் ஏதும் இல்லை, ஆனால் அனைவரும் தாங்கள் நிறைவாக உண்டு விட்டதை உணர்கின்றனர். சிலர் புண்ணியம் பார்ப்பதில்லை. புண்ணியத்தைப் பார்க்காதது நன்றாகச் சாப்பிட்டதை அறியாதது போல. நாம் அனைவரும் உணவு உண்கிறோம் என்று வைத்துக் கொளளுங்கள். காய்கறிகளை முடித்து விட்டோம், சாதத்தை முடித்து விட்டோம், இனிப்புப் பண்டங்களை முடித்துவிட்டோம். நமக்குக் கிடைத்த பயன் என்ன? நிறைவு தான். நிறைவு ஒரு பொருள் அல்ல, அது மனத்தில் எழுவது. அது தான் நமது இலாபம். எதிலிருந்து வந்தது? பொருட்களிலிருந்து வந்தது, பொருட்களை உண்ணும் நடவடிக்கையிலிருந்து வந்தது.
புண்ணியமும் இது போலத்தான். மக்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன், "நான் புண்ணியச் செயல்களைச் செய்திருக்கிறேன் ஆனால் புண்ணியம் கிடைத்ததைப் பார்க்கவில்லை." இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் நிறைவாகச் சாப்பிட்டு விட்டோம் என்பதை அறிவதில்லை போலும். நன்றாக உண்பதென்றால் என்னவென்று தெரியவில்லையா? உண்டதன் பயன் தான் முழுமை, நிறைவு.
நாம் இப்போது ஈடுபட்டிருப்பது தான் புண்ணியம் செய்யும் காரியம் என்பது. இது ஒரு வழக்கம். அதன் விளைவு மனத்தில் உள்ள நிதானமும் அமைதியும் தான்.
Seeing the Fullness
When you make merit, what is merit? It’s correctness. In other words, it’s bringing the mind to peace, away from all kinds of evil. All of you lay people have gathered to make merit, but when you look for the merit, each of you has to look for yourself. These things you’ve brought here are objects—lots of different objects. It’s like eating. You gain delicious tastes because of objects. But when you’re full, where is the fullness? You don’t know.
The fullness doesn’t have any substance, but everyone knows that you feel full. Some people don’t see merit. Not seeing merit is like not seeing the fullness from eating. Suppose that we all eat a meal. We use up the curry; we use up the rice; we use up the sweets. And what do we gain? Fullness. Fullness isn’t a thing, but it appears in the mind. That’s what we gain. What does it come from? It comes from objects, from the activity of eating the objects.
It’s the same with merit. I’ve heard people say, “I’ve made merit but I don’t see that I’ve gained any merit.” Apparently these people eat but without seeing any fullness. Don’t you know what fullness is? Fullness is the result that comes from eating.
The activity we’re doing now is called making merit. It’s a convention. The merit is in the mind’s being serene and at ease.
14 தேனீர் கோப்பை Top
உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். வம்சத் தலைவரைப் பற்றியது (தாய்லாந்து நாட்டின் அதிகாரமுள்ள தலைமை பிக்கு). மற்றவரிடத்திலிருந்து கேள்விப்பட்டது. அவர் சீனா சென்றடைந்த போது சீனர்கள் அவருக்கு ஒரு தேனீர்க் கோப்பையைக் கொடுத்தார்கள். தாய்லாந்தில் அது போல எதுவும் இல்லை. அதைக் கையில் வாங்கியவுடன் அவர் துக்கம் அனுபவித்தார். அதை எங்கே வைப்பது? எப்படி எடுத்துச் செல்வது? அதை அவர் தன் தோல் பையில் வைத்தார். அவர் தோல்பையை யாராவது தொட்டால் அவர், “கவனம், கவனம். அந்தக் கோப்பையை உடைத்து விடாதீர்கள். அதில் உள்ளதை உடைத்து விடாதீர்கள்.” என்று சொல்வார். ஆக அவருக்குக் கோப்பையைப் பற்றிய கவலையாகவே இருந்தது, அதனால் துக்கம் அனுபவித்தார். பொருள் வைத்திருந்து அதனோடு பற்றுக் கொண்டதால் உண்டான துக்கம் அது. ஒரு நாள் இளைய துறவி ஒருவர் அவர் கையிலிருந்த அந்தத் தேனீர்க் கோப்பையை நழுவ விட்டதால் அது கீழே விழுந்து உடைந்துவிட்டது. ஆசிரியர் சொன்னார்: “ஆகா முடிந்தது. என் துயரம் முடிந்தது.” இதைத்தான் சம்பவங்களினால் ஏற்பட்ட அவருடைய துக்கத்திலிருந்து கிடைத்த விடுதலை என்பது. கோப்பை உடைந்திருக்கவில்லையென்றால் அவர் பசி பூதங்களின் உலகில் மறுபிறப்பெடுத்திருப்பாரோ என்னவோ? (பசி பூதங்களாக பிறப்பெடுத்தவர்களுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. அடங்கா ஆசைகொண்டவர் மறுபிறப்பெடுக்கும் உலகம்.)
இது உங்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் போல. வீட்டில் ஒன்றும் இல்லையென்றால் ஒன்றும் இல்லையே என்று கவலை இருப்பதால் துக்கம் இருக்கும். பொருட்கள் சேர்ந்தவுடன் வசதியாக இருக்கலாம் என்று நினைக்கின்றீர்கள். பொருட்கள் சேர்ந்த பின்பும் அவை தொலைந்துவிடுமோ என்ற அச்சத்தினால் துக்கத்தைத் தொடர்ந்து அனுபவிக்கின்றீர்கள். ஏற்கனவே தோன்றிவிட்ட துக்கத்தை அறிவதில்லை.
The Teacup
I’ll tell you a story about the Supreme Patriarch, something I’ve heard from other people. He went to China and, when he arrived, the Chinese gave him a teacup. It was really beautiful. There was nothing like it in Thailand. And as soon as he received the teacup, he suffered: Where was he going to put it? Where was he going to keep it? He put it in his shoulder bag. If anyone touched his shoulder bag, he’d say, “Watch out. Don’t break the teacup. Watch out for the thing that can break in there.” So he was always worried about it, suffering from it: suffering from having and then clinging. That’s what made him suffer. One day a novice let the teacup slip from his hand and it broke. The Supreme
Patriarch said, “At last. That’s the end of my suffering.” This is called events happening to free him from his suffering. If the teacup hadn’t broken, he would’ve probably been reborn as a hungry ghost right there.
It’s like the things in your house. If there’s nothing there, you suffer because you want to have things. You think that once you have things, you’ll be comfortable. But once you have them, you still suffer because you’re afraid they’ll get lost. You don’t understand the suffering that’s already arisen.
15. நெருப்பின் மீது குதிப்பது Top
நாம் உள்ளத்தைப் பயில்விக்க வேண்டும், மனத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மனம், பயில்விக்கப் படாவிட்டால், அது ஒன்றும் அறியாச் சிறு குழந்தையைப் போன்றது. அதன் வழியில் எது வந்தாலும் அந்தக் குழந்தை அதில் குதித்துவிடும். தண்ணிரின் அருகில் இருந்தால் தண்ணீரில் குதித்துவிடும். நெருப்பின் அருகில் சென்றால் நெருப்பின் மீது குதித்துவிடும். மீண்டும் மீண்டும் தனக்கே அது தீங்கு செய்து கொள்ளும்.
Pouncing on Fire
We should all train our heart, look after our mind. Our mind, when it’s not trained, is like a small, innocent child that doesn’t know anything. Whatever it comes across, it pounces. If it comes across water, it pounces on the water. If it comes across fire, it pounces on the fire. It keeps causing harm to itself.
16. நெருப்பைப் பற்றி அறிவது Top
உங்களுக்கே தீங்கு நிகழ்வதைக் கவனித்தால், தீங்கு செய்யும் அக்காரியத்தை நிறுத்திவிடலாம். நிறுத்தும் வரை, தீங்கு செய்வதை விடும் வரை தொடர்ந்து கவனிக்க வேண்டும். இது ஒரு லாந்தரை (விளக்கை) ஏற்றி விட்டு ஒரு குழந்தையை அதன் அருகில் தனியாக இருக்க விடுவதைப் போல. குழந்தைக்கு ஏதும் தெரியாது. தவழ்ந்து போய் விளக்கைத் தீண்டப் பார்க்கிறது. நெருப்பைத் தீண்டிய பின் குழந்தை அழத் தொடங்குகிறது. மறுநாள், அக்குழந்தையை நெருப்புச் சுடரருகில் எடுத்துச் சென்றால் அதைத் தொட முயற்சிக்காது, ஏனென்றால் முந்தைய நாள் தனக்கு அந்தச் சுடர் செய்த தீங்கை குழந்தை அறிந்துள்ளது. நெருப்பைத் தொடவேண்டும் என்று எண்ணுவதில்லை.
இதோ, இங்கேதான் உட்பார்வை நமக்கு உதவுகிறது. நாம் உண்மையிலேயே பார்க்கிறோம். நாம் பார்த்தபின், தயங்காமல் விட்டு விடலாம்.
குறிப்பு: அறிவு (knowledge), மெய்யறிவு (wisdom), உட்பார்வை (Insight நுண்ணிய அறிவு) ஆகிய மூன்றும் வேறுபட்டவை.
இணையதளத்தில் படித்த கீழ்காணும் உதாரணம் இங்கு பொருந்தும்.
ஒரு ரூபாய்க்கு நூறு பைசா என்பதைத் தெரிந்திருப்பது வரவு செலவு பற்றியது. இது அறிவு.
வாழ்க்கைத் தரத்தைப் பணம் எப்படிப் பாதிக்கிறது என்பதை, எதிர்காலத்தை எப்படிப் பாதிக்கும் என்பதைத் தெரிந்திருப்பது மெய்யறிவு.
பணம் ஒரு உலக வழக்கம் தான். உலகில் வாழ நாம் பயன்படுத்தும் ஒரு கருவி மட்டுமே. ஆன்மீக விடுதலைக்கு அது தேவை இல்லை என்பதைத் தெரிந்திருப்பது உட்பார்வை.
Learning about Fire
When you see the harm of what you’re doing, you can stop. You watch it until you can stop, until you can give it up. It’s like lighting a lantern and letting your child loose. The child doesn’t know anything. It crawls over and tries to catch hold of the flame. Then it’ll start crying. The next day, if you try to take the child to the flame, it won’t touch it, for it’s seen the harm from the day before. It’ll stop trying to catch it.
Right here is where insight helps us. We really see. Whatever we really see, we can really let go.
17. உச்சியிலிருந்து கற்பிப்பது Top
புத்தரின் போதனைகளைக் கற்பிக்கும் போது நாம் ஒழுக்கத்தை (சீலம்) முதலிலும், மன ஒருமைப்பாட்டை (சமாதி) மத்தியிலும், உன்னிப்பை (மெய்யறிவு, பஞ்ஞா) இறுதியிலும் வருவதாகக் கூறுவது வழக்கம். அப்படித்தான் நாம் மனனம் செய்துள்ளோம்.
ஆனால் சிலருக்கு முதலில் ஒழுக்கத்தைப் பற்றிக் கற்பிப்பது இல்லை. அவர்களை மனம் அமைதி பெறும் வரை அமைதியாக உட்காரச் சொல்கிறோம். அவர்களிடம் ஒன்று, ஒழுக்கம்; இரண்டு, மன ஒருமைப்பாடு; மூன்று, உன்னிப்பு என்று துவக்கத்தில் பேசுவதில்லை. மனம் அமைதியானபின், அவர்களே உணர்வார்கள். இது இங்கே ஒரு துணிக்கு அடியில் ஒரு நச்சுப் பாம்பு பதுங்கி இருப்பதைப் போல. நாம் துணி மீது நின்று கொண்டு பயம் இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் பாம்பு இருப்பது நமக்குத் தெரியாது. ஆனால் மனம் அமைதியுற்ற பின், காலுக்குக் கீழே ஏதோ சரியாக இல்லாததை நாமே உணர்ந்து கொள்ள முடியும்.
இது இங்கு இருக்கும் இந்த மரத்தைப் போல. மரத்தை விளக்கிக் கூறும் போது அடிமரத்திலிருந்து துவங்க வேண்டுமென நமக்கு சொல்லப்படிருக்கிறது. மாறாக நுனிக் கொம்பிலிருந்தும் கற்பிக்கத் தொடங்கலாம். மேலிருந்து துவங்கிப் படிப் படியாக அடி மரத்திற்கு வந்து சேரலாம். அடி மரத்தில் துவங்கினால் தொடர்ந்து மேல் பகுதிக்கு வந்து விடலாம். ஏனென்றால் அடி மரமும் மேல் பகுதியும் ஒரே மரத்தின் பகுதிகளே.
சிலருக்கு எப்படிக் கற்பிப்பது என்பதும் இதைபோலத்தான். மன ஒறுமைப் பாட்டுடன், மனம் அமைதியாக இருக்கும் போது, மனத்தில் கிலேசங்கள் இருப்பது அதற்கே தெரியும். பின் உன்னிப்பு மெதுவாகக் கனிந்து கனிந்து ஊடுருவும்போது மனத்துக்கு எது சரி எது தவறு என்பது தெரியவரும்.
Teaching from the Top
The way we teach when we follow the Buddha’s teachings is that virtue comes first, concentration comes in the middle, and discernment comes at the end. That’s how we memorize these things. But with some people, you don’t teach virtue first. You get them to sit until their minds are quiet. You don’t yet talk about, one, virtue; two, concentration; three, discernment. Have them sit until their minds are quiet. When they’re quiet, they’ll sense things on their own. It’s as if there were a poisonous snake under a piece of cloth right here. We can stand on the cloth and feel relaxed because we don’t know it’s there. But when the mind is quiet, we’ll sense that something is wrong.
It’s like this tree here. We’re told to teach it beginning from the base. But we can also teach people to grab hold of the top first. As they follow along the tree, they’ll get to the base. If you start with the base and follow along, you’ll get to the top—because the base and top are part of the same thing.
It’s the same when you try to figure out how to teach some people. With concentration, when the mind is quiet, it’ll sense that something is wrong. Discernment will gradually seep in, seep in, and the mind will gradually gain a sense of right and wrong.
18. சொட்டுச் சொட்டாக Top
ஒரு தியானப் பொருளைப் பிரதிபலிக்கும் போது, எந்தப் பொருள் உங்களுக்குச் சரியெனப் படுகின்றது என்பதைச் சரிபார்க்க வேண்டும். இது தட்டில் உள்ள உணவைப் போல. உங்கள் உடம்பின் நிலைமையைப் பொறுத்து எந்த உணவை உண்ணலாம் என்பதை யோசிக்க வேண்டும். அதே போல உங்களுக்குத் தகுந்த தியானப் பொருளைத் தேர்ந்தெடுங்கள். அது உள் மூச்சும் வெளி மூச்சுமாக இருக்கலாம். அல்லது உடலைப் பிரதிபலிக்கலாம்.
பயிற்சியின் போது படிப்படியாகவும் அதே சமயம் தொடர்ந்தும் செய்ய வேண்டும் - சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் பெரிய தொட்டியில் விழுவதைப் போல. தொட்டி ஈரமற்றுப் போவதில்லை; அதில் வாழும் உயிர்வாழ்வனவும் இறப்பதில்லை.
அறத்தில் வரும் செய்திகளான நிலையாமை, துக்கம், நமதின்மை ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வரை தொடர்ந்து பிரதிபலிப்பது, இறுக்கி இறுக்கும் தாழ்ப்பாளை இலேசாக்குவது போல. இலேசாக்கிய பின் அது இறுக்கமாக இல்லை - அதனால் அதை இறுக்கிப் பிடித்திருக்க வேண்டியதில்லை. அறிந்தபின் நிலையற்றதை, துக்கம் விளைவிப்பதை, நமதில்லாததை பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
Drop after Drop
When contemplating a meditation object, check to see which object is right for you. It’s like food on a tray. You have to contemplate for yourself to choose which foods are right for the conditions of your body. In the same way, you choose a meditation object right for you. The in-and-out breath. Or you can contemplate the body.
In practicing, you have to keep at it gradually but steadily—like water that falls in drops, steadily into a big water jar. The jar doesn’t dry out; the animals living in the jar don’t die. If you contemplate the Dhamma themes of inconstancy, stress, and not-self until you understand, it’s like loosening a bolt in a counterclockwise direction. It’s no longer so tight—so that you don’t grasp at what’s inconstant, stressful, and not-self.
19. மிகச் சரியானது Top
உட்கார்திருக்கும் புத்தரின் உருவத்தைக் கவனித் திருக்கின்றீர்களா? அவர் தலை பின் சாய்ந்திருக்கிறதா? அல்லது முன் பக்கமாகத் தாழ்ந்திருக்கிறதா? அவர் மிகச் சரியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அதுபோலவே இச்சமயத்தில் நமது உடலைச் சரியாக்குவோம், மனத்தைச் சரியாக்குவோம். இவை இரண்டும் சரியாக இல்லாவிட்டால் மனத்தில் அசைவில்லாத நிலை உண்டாகாது. பொருட்களில் உள்ள நன்மை சரியானதாக இல்லாவிட்டால் அங்கு நன்மை இல்லை என்பதைக் கவனித்தீர்களா? பொருட்கள் நன்மை விளைவித்தால் அதிலுள்ள நன்மை எல்லாவிதத்திலும் பக்குவமானதாக இருக்கும். இதை வெகுதூரம் பார்க்க வேண்டியதில்லை. நாம் உண்ணும் பதார்த்தங்களைப் போல. அதில் உப்பு அதிகமாக இருந்தால் அது நன்றாக இருக்குமா? உப்பே இல்லாவிட்டால் சுவையாக இருக்குமா? சமையற்காரர் எல்லாவற்றையும் மிகச் சரியான அளவில் போடுகிறார். அவர் "சரியாக" இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்கிறார். எனவே இன்று நாம் நம் உடலையும் மனத்தையும் சரியாக வைக்க முற்படுவோம்.
Just Right
Ever notice how the Buddha image is sitting? Is his head bent back? Is it hanging down in front? He’s sitting there just right. So right now, let’s make our bodies just right, our minds just right. If the mind and body aren’t just right, there won’t be any stillness. Have you ever noticed that things whose goodness isn’t just right aren’t really good? When things are good, it’s because their goodness is just right in every way. You don’t have to look far away. It’s like the curry we eat. If it’s too salty, is it good? If it’s too bland, is it good? When a cook fixes curry, she puts everything together just right. She aims at “just right.” So today let’s make our bodies just right, our minds just right.
20. எல்லாம் கடலில் கலக்கிறது Top
கடலில் உள்ள நீர் சிறு நதிகளிலிருந்து வருகிறது. அவை பல திசைகளிலிருந்தும் வந்து கடலில் கலக்கின்றன. ஆனால் எல்லாம் கடலில் ஒன்று சேருகின்றன.
நாம் தியானம் செய்வதும் அது போலத்தான். மனத்தை அசைவில்லாமல் ஒருமுகப்படுத்துகிறோம். அதன் பின் பற்றின்மையைக் கடைப் பிடிக்கிறோம். பெரிய ஆறும் சிறிய ஆறும் அதே கடலில் கலக்கின்றன. எங்கிருந்து வந்தது என்பது முக்கியமில்லை, ஆனால் கடலில் ஒன்று சேர்கின்றன. நாம் தியானம் செய்வது மனத்தை அமைதியாக்கி ஐந்து கந்தங்களோடு (அதாவது உடலோடும் மனத்தோடும்) உள்ள பற்றை நிறுத்துவதற்கே. அவை (தியான முறை) எல்லாம் ஒன்றே தான். எனவே அதைப்பற்றிக் கவலைப் பட வேண்டாம். உங்களுக்கு ஒரு தியான முறை சுலபமாகப் பட்டால் அதைக் கடைப் பிடிக்கலாம். அல்லது வேறு தியானமுறை சுலபமாகப் பட்டால் அதைப் பின்பற்றுங்கள். உங்களுக்கு எதன் மீது சார்புள்ளதோ அதைக் கடைப் பிடியுங்கள்.
Everything Gathers in the Ocean
The water in the ocean comes from little rivers. They flow into the ocean from different directions, but they all come together there. It’s the same when we meditate. We all bring the mind to stillness, and then we practice not clinging. Big rivers, small rivers, all gather in the same ocean. It doesn’t matter where they come from, they all gather in the ocean. We practice meditation to make the mind quiet and to stop clinging to the five aggregates. It’s all the same, so you don’t have to worry about it. If you see that this method is easier than that one, you can take this one. If you see that another method is easier, you can take that one. It’s just a matter of what’s right for your propensities.
21. தேங்காய்த் தண்ணீர் Top
ஆரம்பத்தில் பயிற்சி செய்தபோது அந்தப் பயிற்சி கரடுமுரடான தன்மையுடன், தொடர்வதற்குக் கடினமாக இருந்தது. ஆனால் நுட்பமான ஒழுக்கம், மன ஒறுமைப்பாடு மற்றும் உன்னிப்பு ஆகியவை அந்த ஆரம்பப் பயிற்சியிலிருந்து தான் வந்தது. நுட்பமான நிலைகளெல்லாம் ஆரம்பப் பயிற்சியிலிருந்து வடித்தெடுத்தது போல. எளிமையாகச் சொல்லப் போனால் இது ஒரு தென்னை மரத்தைப் போல. தென்னைமரம் சாதாரண நீரைத் தன் அடிமரத்தின் மூலமாக உறிஞ்சித் தேங்காயை அடையும்போது சுத்தமாகவும் இனிப்பாகவும் மாற்றிவிடுகிறது. இது மண்ணிலிருந்த சாதாரணத் தண்ணீர், மரக் கட்டை வழியாக வந்தது. ஆனால் அந்தச் சாதாரண மண் கலந்த நீர் மரத்தினுள் ஈர்க்கபடும் போது வடிகட்டப்படுகிறது. அதே நீர் தான் தேங்காயை வந்தடையும்போது முன்பிருந்ததைவிடத் தூய்மையாக ஆய்விட்டது. இனிப்பாகவும் ஆகிவிட்டது. அதே போல உங்கள் ஒழுக்கமும், மன ஒறுமைப்பாடும் உன்னிப்பும் கரடுமுரடாக இருக்கின்றன. ஆனால் மனம் இவற்றைப் பிரதிபலிக்கும் போது அவை மேலும் மேலும் நுட்பமாகி அவற்றின் கடினத்தன்மை மறைந்துவிடுகிறது. அவை நுட்பமாக ஆகஆக மனத்தில் அவை எடுக்கும் இடமும் குறைந்து கொண்டே போகிறது. பின் சுலபமாகிவிடுகிறது.
Coconut Water
The crude, beginning level of the practice is a little hard to maintain, but the refined levels of virtue, concentration, and discernment all come out of this. It’s as if they’re distilled from this same thing. To put it in simple terms, it’s like a coconut tree. A coconut tree absorbs ordinary water up through its trunk, but when the water reaches the coconuts, it’s sweet and clean. It comes from ordinary water, the trunk, the crude dirt. But as the water gets absorbed up the tree, it gets distilled. It’s the same water but when it reaches the coconuts it’s cleaner than before. And sweet. In the same way, the virtue, concentration, and discernment of your path are crude, but if the mind contemplates these things until they’re more and more refined, their crudeness will disappear. They get more and more refined, so that the area you have to maintain grows smaller and smaller, into the mind. Then it’s easy.
22. பொறுமை Top
பேராசை மனத்திலேயே தெரியக்கூடியது. நாம் வலையை வீசச் செல்லும் மீனவரைப் போல. வலையில் மீன் சிக்கியவுடன் அவர்கள் தாவிக் குதித்து மீனை அள்ளத் துடிக்கின்றனர். மீன் தப்பிவிடுமோ என்று அஞ்சுகின்றனர். அப்படி இருக்க மீனும் குழப்பத்தில் பிடிபடாமல் வலையிலிருந்து தப்பிவிடுகிறது.
எனவே தான் நமக்கு முன் வந்த பெரியோர்கள் எதைச் செய்தாலும் படிப்படியாகத் தொடர்ந்து செய்யச் சொன்னார்கள். சோம்பலாக இருக்கும் போதும் செய்ய வேண்டும்; சுறுசுறுப்பாக இருக்கும் போதும் செய்ய வேண்டும். அதிகம் செய்யச் செய்ய, அமைதியான பாதை கண்டெடுக்கும் போது மனம் சாந்தப் படும். பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கற்பிக்கப் படுகிறது. விடாமல் கடைப்பிடியுங்கள். சுறுசுறுப்பாக இருக்கும் போதும் செய்ய வேண்டும; சோம்பலாக இருக்கும் போதும் செய்ய வேண்டும் - ஆனால் தீப்பந்தத்தைச் சுழற்றும் ஒருவனைப் போலச் செய்ய வேண்டும் (தீ வட்ட வடிவில் தெரியவேண்டுமென்றால் அதை வேகமாகத் தொடர்ந்து சுழற்றவேண்டும்). பொறுமையற்றுத் துவக்கி, பின் நிறுத்தி, மீண்டும் துவக்கி, நிறுத்தி மீண்டும் துவக்கினால் முன்னேற்றம் அடைய முடியாது - ஏனென்றால் நீங்கள் பொறுமையற்றவராக இருக்கின்றீர்கள்.
தியானம் செய்யும் போது நீங்கள் எதை எதையோ யோசிக்கத் தேவையில்லை. உங்களையே உற்றுணர்ந்தால் போதும். வேறு எங்கும் ஆராய வேண்டியதில்லை. உங்களைக் கவனித்தால் மற்றவரையும் கவனித்தது போல. ஆஸ்பிரின் மற்றும் டைலனால் மருந்துகளைப் போல: ஒன்றைத் தெரிந்து கொண்டால் மற்றதையும் தெரிந்து கொள்ளலாம், ஏனென்றால் இரண்டுமே ஒரே நோயைக் குணப்படுத்துபவைதான். இரண்டுமே உடல் வலியைக் குறைக்கும் மாத்திரைகள் தான்.
தியானப் பயிற்சி செய்பவரும் புத்தரின் போதனைகளைப் படித்து மட்டும் அறிந்தவரும் ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொள்வர். ஆனால் இது உள்ளங்கையை மேல் நோக்கி வைப்பதும், கீழ் நோக்கி வைப்பதும் போல. கீழ் நோக்கி உள்ள போது, உள்ளங்கை எங்கேயும் போகவில்லை. இங்கேயே தான் இருக்கிறது, நாம் அதைப் பார்க்க முடிவதில்லை, அவ்வளவு தான். போதனைகளைப் படித்து ஆனால் பயிற்சி செய்யாதவர் உள்ளதை உள்ளவாறு பார்ப்பதில்லை - அதனால் மாயையினால் ஏமாற்றம் அடைகிறார்.
Patience
Desire is something known right at the mind. We’re like fishermen who go out to cast their nets. As soon as they catch a fish, they rush to pounce on it, which scares the fish away. The fishermen are afraid that the fish will escape from the net. When that’s the case, the fish are confused and hard to control, and so they quickly escape from the net.
This is why people in the past taught us to gradually feel our way along, to keep at it gradually and steadily. When you feel lazy, you do it. When you feel diligent, you do it. If you keep doing it a lot, then as soon as you find the quiet path, the mind will calm down. When you practice, you’re taught to keep at it. Don’t give up. When you feel diligent, you do it. When you feel lazy, you do it— but you have to practice like a person spinning a fire stick. If you start and stop, start and stop and start again because you’re impatient, you won’t get anywhere —because of your impatience.
When you practice, you don’t need to think about a lot of things. Just survey right at yourself. You don’t have to survey anywhere else. If you see yourself, you see other people. It’s like aspirin and Tylenol: If you know one, you know the other, because they’re both meant to cure the same illness. They’re both painkillers.
People who practice and those who study like to criticize each other, but it’s like putting your hand palm-up and palm-down. When it’s palm-down, the palm hasn’t gone away anywhere. It’s right there, just that we don’t see it. If you study without practicing, you don’t see things for what they are—and that can make you deluded.
23. பானையில் உள்ள அறம் Top
பொங்கின சாதம் பாத்திரத்தில் மட்டுமே இருந்தால், அதனால் என்ன பயன்? அதைப் பயன்படுத்த வில்லையென்றால் - அதைக் கரண்டியில் எடுத்துத் தட்டில் போட்டு, கொஞ்சம் குழம்பையும் சேர்த்துச் சாப்பிடாவிட்டால் - அதனால் என்ன பயன்? சாதம் நல்ல சாதம் தான், ஆனாலும் பயன் இல்லை. புத்தரின் போதனைகள், பாத்திரத்தில் இருக்கும் சாதத்தைப் போல. போதனைகளைப் பாத்திரத்திலேயே விட்டு வைத்தால் அதனால் என்ன பயன்? பாத்திரத்தில் மட்டுமே அது இருக்கும். நல்ல மல்லிகைப்பூ அரிசியைச் (தாய்லாந்தில் விளையும் மனம் உள்ள ஒரு வகை அரிசி) சமைத்து அதை மேசைமீது உயர்வான இடத்தில் வைத்துவிட்டால் அது உங்களுக்குச் சுவை தருமா? உங்கள் பசியைத் தீர்க்குமா?
புத்தரின் போதனைகளை எடுத்து அதைப் பயிற்சி செய்யாமல் நாம் உலகில் மிகவும் உயர்வானதாக வைத்து விடுகிறோம். அடிக்கடி வணங்கவும் செய்கிறோம். உண்மையிலேயே வணங்கினால் அவற்றை நாம் வாய்மையென நினைப்பதாகப் பொருள். நாம் அவற்றை நம்புகிறோம். அப்படியென்றால் அவற்றின் வழியில் நாம் பயிற்சி செய்ய வேண்டும். அப்போது தான் புத்தரின் போதனைகள் பயன் படும். அவை நாம் ஒவ்வொருவரும் பயிற்சி செய்வோம் என்று நம்பி இருக்கின்றன.
The Dhamma in a Pot
When cooked rice is just sitting in the pot, what purpose does it serve? If we don’t practice with it—if we don’t spoon it onto a plate, add a little curry and pepper sauce, and then eat it—what purpose will it serve? Even though the rice is good. The Buddha’s teachings are the cooked rice in a pot. If we just keep the teachings there in the pot, what purpose will they serve? They just stay there in the pot. If you cook good jasmine rice and then just set it high on the table, will it give you any flavor? Will it make you full?
We take the Buddha’s teachings and simply set them high in the world without practicing them. We keep on bowing down to them. If we really bow down, it means we believe them. We trust them. If we believe and trust them, we have to practice in line with them. That’s when the Buddha’s teachings will serve a purpose. They depend on each and every one of us to practice them.
24. விகாரைக்கு வந்த கோழிகள் Top
விகாரைக்கு வரும் மக்கள் சிலர் தியானக் கூடத்திற்கு அறத்தைக் கேட்க வருவதில்லை. தொலைவில் அமர்ந்து, தங்கள் மக்களோடும், பேரக் குழந்தைகளோடும் அரட்டை அடித்துக்கொண்டு எதையும் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர். இது விகாரைக்கு மனிதர் வருவது போல அல்ல. அவர்கள் கோழிகள் வருவதைப் போலத்தான் வருகின்றார்கள். கோழிகள் தான் அவற்றின் குஞ்சுகளோடு விகாரைக்குள் வந்து, வளாகத்தில் நாய்க் கழிவுகளையும், பன்றிக் கழிவுகளையும் பிறாண்டிக் கொண்டு இருக்கும். அவை வேறு எதற்காகவும் விகாரைக்குள் வருவதில்லை. விகாரைக்கு இப்படி வருவது சரியல்ல. இது விகாரைக்கு வந்தும் விகாரையைக் காணாதது போல. விகாரைக்கு வந்து துறவிகளைப் பார்க்காதது போல. நீரில் வாழும் மீன் நீரைக் காணாதது போல, மண்ணில் வாழும் மண்புழு, மண்ணைத் தின்றாலும் மண்ணைக் காணாதது போல.
நாமும் அப்படித்தான். நாம் விகாரைக்கு வருகிறோம், ஆனால் விகாரையில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து கொள்வதில்லை. விகாரைக்குள் வந்தும் விகாரையை அடைவதில்லை. இது நமக்கு மட்டும் இல்லாமல், நமது மக்களுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் பிரச்சினையை எழுப்புகிறது. நாம் விகாரைக்கு வந்தால் புண்ணியம் கிடைக்கும் என்கிறோம், ஆனால் அந்தப் புண்ணியம் மனிதரால் செய்யவேண்டியது. நமது பெற்றோர் விகாரைக்கு வருவதைப் பார்த்து அவர்களை நாமும் தொடர்கிறோம். ஆகவே நமக்கு நாற்பது அல்லது ஐம்பது வயது முடிகின்ற போது யாராவது அறத்தைப் போதித்தால், பயிற்சியைப் பற்றிப் பேசினால், புத்தர், தம்மம், சங்கத்தைப் பற்றிப் பேசினால் நமக்கு எதுவுமே விளங்குவதில்லை. நமக்கு எதுவும் தெரிவதில்லை.
Chickens Coming to the Monastery
Some people come to the monastery but never come to the meditation hall to hear the Dhamma. They sit way out there, chatting with their children and grandchildren, and don’t understand anything. This isn’t coming into the monastery like people. This is coming into the monastery like chickens. Chickens bring their baby chicks into the monastery, scratching around for dog shit and pig shit. They’re not looking for anything else. This is not the right way to come to a monastery. It’s coming into the monastery without seeing the monastery, coming into the monastery without seeing monks. It’s like a fish living in water without seeing water, or an earthworm living in the dirt, eating the dirt, but not seeing the dirt.
It’s the same with us. We come into the monastery but we’re not acquainted with the monastery. We come into the monastery without reaching the monastery. This gives rise to problems not only for us but also for our children and grandchildren. We say that coming to the monastery gives rise to merit, and it’s something that human beings have to do. We see our parents coming to the monastery and we simply follow along. As a result, when we’re in our forties or fifties and someone teaches the Dhamma, speaks about the practice, about the Buddha, Dhamma, or Sangha, we don’t understand anything. We don’t know anything at all.