தற்கொலை

தற்கொலை

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Suicide

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

கேள்வி: தற்கொலை பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

நாம் அறியாமையை, துக்கத்தை நிச்சயமாக கொன்று விடவேண்டும், ஆனால் உடம்பை அல்ல. பொதுவாக உடம்பைக் குறைகூற முடியாது. நமது உடம்பை 'நாம்' என்று நினைப்பது தவறான கருத்து. நம்மை ஆட்கொண்டு துன்புறுத்துவது இந்த 'நான்' என்ற கருத்தினை விட்டு விட முடியாததால் தான். இந்த 'நான்' என்பதை அறிவினால் மட்டுமே கொல்ல முடியும். மெய்யறிவு மட்டுமே 'நான்' என்று துன்புறுத்தும் கருத்தினை முடிவுக்கு கொண்டு வரும். எனவே 'நான்' என்ற கருத்தோடு பற்று விடுவது அறிவார்ந்த செயல்.

நீங்கள் இறந்தபின் முழு அழிவு பெறுவோம் என்ற கருத்தினை ஏற்பவரா என்று புத்தரைக் கேட்டனர். ஒருவிதத்தில் அந்தக் கருத்தினை ஏற்றுக் கொள்வதாகப் புத்தர் கூறினார். "பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகியவற்றை முழு அழிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்." என்று புத்தர் கூறினார். பொதுவாகத் தற்கொலை செய்வது ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. துறவிகளுக்கும் இல்லறத்தாருக்கும் தெளிவான ஒரு விதி கூறப்பட்டுள்ளது. இதுவே முதல் நல்லொழுக்கம். பஞ்சசீலங்களில் முதல் ஒழுக்கம்: ‘கொல்லாமை.’ எந்த உயிரையும் கொல்லுதலைத் தவிர்ப்போம் என்பது. இதில் நம்மையும் கொல்லக் கூடாது என்பதும் சேர்ந்துள்ளது எனச் சொல்ல வேண்டியதில்லை. தற்கொலை செய்யக் கூடாது. மற்ற உயிர்களையும் கொல்லக் கூடாது.

இதனை ஒட்டிப் பிற கேள்விகளும் எழுகின்றன. 'மிகுந்த வலியுடன் உயிருக்குப் போராடும் ஒருவரைக் கொல்வது சரியான செயலா?' அந்தக் கேள்விக்கு நம்முடைய பதில், 'இல்லை. அந்த நிலையிலும் ஒருவரைக் கொல்வது சரியில்லை. ஓர் உயிரை எடுக்க வேண்டும் என்று நினைத்து, பின் அந்தத் தீர்மானத்தின் படி செயல்படுவது சரியில்லை.' என்பதுதான். அதற்குப் பின் அவர்கள் கேட்கும் கேள்வி, 'பௌத்த மதம் துக்கத்தை நிவர்த்திக்கும் மதம் என்றல்லவா கூறுகின்றனர்? அதாவது வலியில் துடிக்கும் ஒருவரைக் கொல்வது அவரது துயரத்தை நீக்குவதாகாதா?’ என்பதாகும். அதற்கு நமது பதில், 'அப்படிப்பட்ட முடிவுக்கு எப்படி வர முடிந்தது? மரணம் துக்கத்தை முடித்து விடும் என்று ஏன் நினைக்கின்றீர்கள்?'

மரணத்தோடு துக்கம் முடிந்துவிடும் என்று நினைப்பது ஒரு தீவிர ஊகம். இப்படி நினைப்பது இந்த உயிர் முடிவோடு முழு அழிவு பெறுவோம் என்ற கோட்பாட்டினை ஏற்றுக் கொள்வதாகும். அதாவது மரணம் என்பது முழு அழிவு. அதன் பின் நமது துக்கம் முடிவுபெரும் என்று நினைப்பது. ஆனால் ஏன் இப்படி நம்ப வேண்டும்? இது ஒரு துணிச்சலான சூதாட்டம். (மரணத்தின் பின் முழு அழிவு என்பது உண்மையென்றால் உங்களுக்கு அது தெரியப் போவதில்லை. மரணத்தின் பின் ஒரு தொடர்ச்சி இருந்து அதன்படி வாழ்க்கையில் நடந்து கொள்ளவில்லையென்றால் தீவினை உண்டாகலாம்.) பௌத்த எண்ணப் போக்கின்படி மரணத்தின் பின் துக்கம் முடிவடையும் என்று நினைப்பதில்லை. இங்கு நடந்து கொண்டிருக்கும் வினைப்பயன் ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது. அடுத்த பிறவியில் இது தொடரும். ஏன், தற்கொலை செய்வதன் காரணமாக அதன் வினைப்பயன் மேலும் துன்பத்தைக் கொடுக்கலாம். ஓர் உயிரைக் கொல்லும் எண்ணம் அறிந்தே உருவாகும் போது அது எப்போதும் சற்று வெறுப்புக் கலந்ததாகவே இருக்கும். நாம் இப்படி நினைக்கலாம், 'எனது நாயோ பூனையோ மிகுந்த வலியில் துடிக்கிறது. அதன் துயரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.' ஆனால் உண்மையில் நாம் துயரடைந்திருக்கிறோம். அந்த நாய் துன்புறுவதைப் பார்த்து நாம் துன்புறுகிறோம். இதை நாம் அறிவது இல்லை. நமது துயரத்தை முடிக்கப் பார்க்கிறோம். அந்த நாயைக் கொல்வதினால் அதன் துயரத்தின் அருகில் இருப்பதால் நமக்கு உண்டாகும் துயரத்தை முடிவுக்கு கொண்டுவரப் பார்க்கிறோம்.

ஒரு உயிரைக் கொல்வதினால் பிரச்சனைகள் ஒரு நாளும் தீர்க்கப்பட மாட்டாது.

ஒரு உயிரைக் கொல்வதனால் உண்டாகும் கன்ம வினைப் பயன் நமது வாழ்நாளைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது. எப்போதாவது, இந்தப் பிறவியில் இல்லாவிட்டாலும் இனிவரும் பிறவிகளில் அப்படி நடக்கும். தற்கொலை செய்வதனால் உண்டாகும் வினைப்பயன் என்ன? தற்கொலையில் மற்றவருக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. அப்போது என்ன பயனை எதிர்பார்க்கலாம்? நாம் நமக்கே தீங்கிழைத்ததால் இனி வரும் பிறவிகளில் யாராவது நமக்குத் தீங்கிழைப் பார்களா? இந்த விஷயத்தில் உண்டாகும் வினைப்பயன் இதையே மறுபடியும் செய்யவைக்கும் கட்டாயம் உருவாவதே ஆகும். பிரச்சனைகளைத் தீர்க்க நமக்கு நாமே தீங்கு விளைவிக்கும் போது எதிர்காலத்திலும் தற்கொலை செய்தே பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற மனப்போக்கு உண்டாகிவிடுகிறது. மறுபடியும் தற்கொலை செய்து கொள்வதில் மனம் ஈடு படுகிறது. தற்கொலை செய்ய முயற்சித்தோர்களைக் கவனித்தால் அவர்கள் ஒருமுறை மட்டுமே அந்த முயற்சியைச் செய்வதில்லை. பல முறை முயற்சித் திருப்பதைக் கவனிக்கலாம். அவர்களால் இந்த முயற்சிகளைத் தவிர்க்க முடிவதில்லை. உங்களுக்கே தீங்கு விளைவிக்கும் போது திரும்பவும் அப்படி செய்யத் தோன்றுகிறது. இப்படி நமக்கு நாமே தீங்கு விளைவிப்பதைத் தொடங்கக் கூடாது.

நாம் எதைச் செய்தாலும் அதையே மீண்டும் செய்யத்தோன்றும். ஒன்றைச் செய்வது என்று முடிவு செய்தபின் அதற்கு ஊக்கமும் சக்தியும் கொடுக்கும் போது அந்தச் செயலை மீண்டும் செய்ய வேண்டும் என்ற மனப்போக்கு உண்டாகி விடுகிறது. அது திறனற்ற காரியமாக இருந்தாலும் சரி, நல்ல காரியமாக இருந்தாலும் சரி. ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துப் பாருங்கள். இதன் கன்மப் பயனை நேரடியாகப் பார்க்கலாம். இந்த ஒரு நல்லெண்ணத்தின் காரணமாக மீண்டும் நல்லெண்ணத்தை உண்டாக்குவது அல்லது நற்செயலைச் செய்வது சுலபமாகி விடுகிறது. மீண்டும் நற்செயலைச் செய்யும் மனப் போக்கு உண்டாகி விடுகிறது. ஆக ஒரு முறை கோபத்தைத் தவிர்த்தால் மீண்டும் அதனைத் தடுக்கத் தோன்றும். கோபத்தைத் தடுப்பதென்பது மிகவும் கடினமான காரியம் என்று நினைத்தாலும் ஒரு முறையேனும் தடுத்து விட்டால் மீண்டும் தடுப்பது எளிதாகி விடுகிறது. திறனற்ற காரியங்களைச் செய்வதை நிறுத்துவதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஒருமுறை நிறுத்தி விட்டால் அடுத்த முறையும் நிறுத்தும் மனப்போக்கு உண்டாகிவிடுகிறது. நன்னெறி சம்பந்தமாகப் புத்தர் தெளிவாகக் கூறுகிறார் - தனக்கும் தீங்கு விளைவிக்காதே, மற்றவருக்கும் தீங்கு விளைவிக்காதே. ஆக வலியில் இருந்து மரணத்தின் விளிம்பில் இருக்கும் - மனிதராக இருந்தாலும் சரி, ஒரு விலங்காக இருந்தாலும் சரி - நாம் என்ன செய்வது? அவர்களுக்குக் கருணை காட்டலாம். அவர்கள் வலியைக் குறைக்கத் தேவையான மருந்தளிக்கலாம். ஆனால் அவர்களின் வாழ்க்கையை முடித்து விட்டால் அவர்கள் வலியை மறந்துவிடலாம், கஷ்டங்களை மறந்து விடலாம் என்று நினைக்க வேண்டாம். அப்படி நினைப்பது இந்த வாழ்க்கையின் முடிவில் முழு அழிவே காத்திருக்கின்றது என்ற நம்பிக்கை கொள்வதாகும். மரணத்தோடு துக்கமும் முடிந்துவிடும் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் இவ்வாறு நினைப்பது தவறு.

* * * * * *

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

Transcribed from an audio tape available at birken.ca

Q. What is your view on suicide?

Definitely you want to kill off your ignorance, your suffering but not your body. It is usually blameless. You mistake your self for your body, kill your body and you don't let go of this self that is torturing you. So you can't kill off your self except by wisdom. Wisdom can put an end to your troubling self, that's all. So the wise thing is to let your (attachment to self go). The Buddha was asked if he was an an-nihilist. He said, 'In one sense I am an an-nihilist. I say that what should be annihilated is greed, hatred and delusion. That can go to cessation.' Generally suicide is not recommended. For monks and lay people there is a definite clear rule that is the first precept - not to kill. Including yourself. You wouldn't think we would have to say that. Don't kill your self. And don't kill other living beings.

There are other questions roaring around this like, 'What about euthanasia?' And we would say 'No. There is no possibility of active Euthanasia . You do not formulate the intention to kill and then go ahead '. And then people would say, 'I thought Buddhism was for the end of suffering.' So when we kill somebody we put them out of their suffering. So then we say, 'What makes you think that? What makes you think that death is the end of suffering?' That is a radical assumption, that death ends suffering. The presumption is an-nihilism. That death ends everything and then your suffering is over. But why would you think that? Pretty bold gamble. From a Buddhist point of view we definitely don't think that death ends suffering. What ever was playing out there is just postponed or transferred to another continuation and it may even be worse. One thing is that formulating the intention to kill is always accompanied by a little bit of ill-will. Sometimes we may think that, 'My cat or dog is suffering. I want to put it out of its suffering. But often in that case it is we who are suffering. We are uncomfortable with its suffering and we are suffering. And in someways we are not quite aware of it. We want to put an end to our suffering. By terminating the dog's life or cat's life we want to put an end to the discomfort of being around that suffering.

We don't resolve things by terminating a body.

So what is the karma of killing another being? It is often said to be that you yourself may shorten your own life by that. At some point. Maybe not in this life, maybe in future lives. But what would be the karma for suicide where you injure yourself. You are not injuring any other being. So what would happen? Does somebody else injure you in the future because you did it to yourself? In that case all that happens apparently is that one has a compulsion to do it again. One is starting to build up a tendency to solve problems by infliction of pain or the belief that you can relieve your self of suffering by terminating your life. Which may lead you with a strong tendency to try that again. You notice that often with people who have attempted suicide, that it is not just once. That can be a number of times. It can be compulsive. When you injure yourself there is kind of a strong compulsion to do it again. Self injury can be compulsive. It feeds back on itself a little bit. We don't want to begin a small series of self injuries.

What ever we do, we have a tendency to do it again. Whenever we make tendency by formulating things and putting energy into it we have a tendency to do it again. Both in the negative, unwholesome, unwise direction and also in the other. If you can just formulate one good wholesome moment. One of the karma's we can see directly is that you have just given yourself a tendency and advantage. It is that much easier to do it again. So if you let go of anger once, we just set up good conditions for doing it again. So even if we think it is too big to even start, if we just start the next one will be easier. It is also a good reason for stopping negative things. When you just stop it, you just have given yourself a tendency to stop it again. So on an ethical stand point the Buddha is very clear not to harm - not to injure oneself nor another. So for people and animals that are dying and in pain what should we do? We should attempt to relieve the pain by medications so forth and be compassionately there for them. But not to imagine that somehow you can make pain evaporate, difficulties evaporate - by terminating life. There is a radical assumption behind that which is based on an an-nihilist belief that death ends pain. It ain't necessarily so.

* * * * * *

euthanasia வேதனையற்ற மரணம்

the act of killing someone painlessly (especially someone suffering from an incurable illness)

annihialtion முழு அழிவு