நந்தகோவாத சூத்திரம்

நந்தகோவாத சூத்திரம்: நந்தகரின் போதனை

Nandakovada Sutta: Nandaka's Exhortation

translated from the Pali by

Thanissaro Bhikkhu © 2002

MN 146

இவ்வாறு நான் கேள்வியுற்றேன்: ஒரு சமயம் புத்தபகவான் சாவத்தியிலுள்ள ஜேதவனத்தில், அநாத பிண்டிகர் ஆசிரமத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போது மகா பிரஜாபதி கோதமி, அவருடன் சுமார் ஐந்நூறு பிக்குணிகளுடன் பகவரிடம் சென்று, அவருக்கு மரியாதை செலுத்தி, பின்னர் ஒரு புறமாக நின்றார். அப்போது பகவரிடம் அவர், "பிக்குணிகளுக்கு அறிவுரை தரவும் அண்ணலே, அவர்களுக்குப் புத்திமதி கூறுங்கள் அன்ணலே, அவர்களுக்குத் தம்ம உரை தாருங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது துறவிகளுள் மூத்தோர் பிக்குணிகளுக்கு ஒவ்வொருவராகப் போதனை தந்து வந்தனர். அன்று போ. நந்தகரின் முறை. ஆனால் அவர் போதனை தருவதற்கு விரும்பவில்லை. எனவே பகவர் போ. ஆனந்தரிடம்: "ஆனந்தா, இன்று பிக்குணிகளுக்குப் போதனை தருவதற்கு யாருடைய முறை?" என்று வினவினார்.

"அண்ணலே, போ. நந்தகரைத் தவிர அனைவரும் பிக்குணிகளுக்குப் போதனை தந்து விட்டனர். இன்று அவர் முறை என்றாலும் அவர் போதனைதருவதற்கு விரும்பவில்லை."

பின் பகவர் போ. நந்தகரிடம்: "பிராமணரே, பிக்குணிகளுக்கு ஊக்கமளிக்கவும். அவர்களுக்குப் புத்திமதி தரவும். அவர்களுக்குத் தம்ம போதனை தரவும்." என்று கூறினார்.

"அப்படியே செய்கிறேன், அண்ணலே," என்று நந்தகர் பதிலளித்தார். பின் அதிகாலையில் சீவர ஆடையை உடுத்திய பின் அவர் பிச்சாபாத்திரத்தையும், மேலாடையையும் எடுத்துக் கொண்டு சாவத்திக்கு உணவு சஞ்சரிக்கச் சென்றார். உணவு அருந்தித் திரும்பி வந்த பின்னர் அவர் ஒரு தோழருடன் இராஜாக பூங்காவிற்குச் சென்றார். தூரத்திலிருந்து அவர் வருவதைக் கண்ட பிக்குணிகள் அவருக்கென்று ஒரு ஆசனத்தை அமைத்து அவர் கால்களைக் கழுவ நீர் எடுத்து வைத்தனர். போ. நந்தகர் அவருக்கான ஆசனத்தில் அமர்ந்து அவர் கால்களைக் கழுவிக் கொண்டார். பிக்குணிகள் அவருக்கு வணக்கம் செலுத்திய பின்னர் ஒரு புறமாக அமர்ந்தனர்.

அப்போது போ. நந்தகர் அவர்களிடம்: "சகோதரிகளே, இது கேள்வியும் பதிலும் அடங்கிய போதனையாக இருக்கும். நீங்கள் புரிந்து கொண்டால், 'நாங்கள் புரிந்து கொண்டோம்,' என்று கூறுங்கள். புரிந்து கொள்ளவில்லையென்றால், 'எங்களுக்குப் புரியவில்லை,' என்று கூறுங்கள். சந்தேகமோ குழப்பமோ இருந்தால், 'அது எப்படி போற்றுதற்குரிய ஐயா? அதற்குப் பொருள் என்ன?' என்று கேளுங்கள்."

"போற்றுதற்குரிய ஐயா, நீங்கள் இவ்வாறு எங்களுக்கு அழைப்பு விடுத்ததற்கு நாங்கள் நன்றியும், மகிழ்ச்சியும் கொள்கிறோம்."

As they were sitting there, Ven. Nandaka said to them: "This will be a question-response talk, sisters. Where you understand, you should say, 'We understand.' Where you don't, you should say, 'We don't understand.' Where you are doubtful or perplexed, you should question me in response: 'How is this, venerable sir? What is the meaning of this?'

"Venerable sir, we are gratified and delighted that you invite us in this way."

"சரி சகோதரிகளே, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்: கண் நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"நிலையற்றது ஆறுதலானதா, வேதனையானதா?"

"வேதனையானது, ஐயா."

"நிலையற்றதை, வேதனைக்குரியதை, மாற்றத்துக்குட்பட்டதை: 'இது எனது. இதுவே நான். இதுதான் எனது இயல்பு' என்று நினைப்பது சரியா?"

"இல்லை ஐயா."

"So then, sisters, what do you think: Is the eye constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"And is that which is inconstant easeful or stressful?"

"Stressful, venerable sir."

"And is it fitting to regard what is inconstant, stressful, subject to change as: 'This is mine. This is my self. This is what I am'?"

"No, venerable sir."

"காது நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Is the ear constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"மூக்கு நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Is the nose constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"நாக்கு நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Is the tongue constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"உடல் நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Is the body constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"சகோதரிகளே நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்: சித்தம் நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"நிலையற்றது ஆறுதலானதா, வேதனையானதா?"

"வேதனையானது, ஐயா."

"நிலையற்றதை, வேதனைக்குரியதை, மாற்றத்துக்குட்பட்டதை: 'இது எனது. இதுவே நான். இதுதான் எனது இயல்பு' என்று நினைப்பது சரியா?"

"இல்லை ஐயா.

ஏன் அப்படி?

ஏனென்றால் நாங்கள் சரியான விவேகத்தின் காரணமாக உள்ளதை உள்ளவாறு கண்டு, இந்த ஆறு உட்புலன்களும் நிலையற்றவை என்பதை அறிவோம்."

"அருமை, அருமை, சகோதரிகளே. சரியான விவேகத்தின் காரணமாக உள்ளதை உள்ளவாறு கண்ட மேன்மையானோரின் சீடர்களும் இவ்வாறே அறிவார்கள்."

"What do you think, sisters: Is the intellect constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"And is that which is inconstant, easeful or stressful?"

"Stressful, venerable sir."

"And is it fitting to regard what is inconstant, stressful, subject to change as: 'This is mine. This is my self. This is what I am'?"

"No, venerable sir.

Why is that?

Because we have already seen it well as it actually is, with right discernment, that these six internal media are inconstant."

"Good, good, sisters. That's how it is for a disciple of the noble ones who has seen it as it actually is with right discernment.

"சரி, சகோதரிகளே நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்: உருவங்கள் நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"நிலையற்றது ஆறுதலானதா, வேதனையானதா?"

"வேதனையானது, ஐயா."

"நிலையற்றதை, வேதனைக்குரியதை, மாற்றத்துக்குட்பட்டதை: 'இது எனது. இதுவே நான். இதுதான் எனது இயல்பு' என்று நினைப்பது சரியா?"

"இல்லை ஐயா."

"Now what do you think, sisters: Are forms constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"And is that which is inconstant, easeful or stressful?"

"Stressful, venerable sir."

"And is it fitting to regard what is inconstant, stressful, subject to change as: 'This is mine. This is my self. This is what I am'?"

"No, venerable sir."

"ஒலி நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Are sounds constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"நறுமணம் நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Are aromas constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"சுவைகள் நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Are flavors constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"பரிசங்கள் நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Are tactile sensations constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"சரி சகோதரிகளே, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்: கருத்துக்கள் நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"நிலையற்றது ஆறுதலானதா, வேதனையானதா?"

"வேதனையானது, ஐயா."

"நிலையற்றதை, வேதனைக்குரியதை, மாற்றத்துக்குட்பட்டதை: 'இது எனது. இதுவே நான். இதுதான் எனது இயல்பு' என்று நினைப்பது சரியா?"

"இல்லை ஐயா.

ஏன் அப்படி?

ஏனென்றால் நாங்கள் சரியான விவேகத்தின் காரணமாக உள்ளதை உள்ளவாறு கண்டு, இந்த ஆறு புறப்புலன்களும் நிலையற்றவை என்பதை அறிவோம்."

"அருமை, அருமை, சகோதரிகளே. சரியான விவேகத்தின் காரணமாக உள்ளதை உள்ளவாறு கண்ட மேன்மையானோரின் சீடர்களும் இவ்வாறே அறிவார்கள்."

"What do you think, sisters: Are ideas constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"And is that which is inconstant easeful or stressful?"

"Stressful, venerable sir."

"And is it fitting to regard what is inconstant, stressful, subject to change as: 'This is mine. This is my self. This is what I am'?"

"No, venerable sir.

Why is that?

Because we have already seen it well as it actually is, with right discernment, that these six external media are also inconstant."

"Good, good, sisters. That's how it is for a disciple of the noble ones who has seen it as it actually is with right discernment.

"சரி சகோதரிகளே நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்: கண்-உணர்வு நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"நிலையற்றது ஆறுதலானதா, வேதனையானதா?"

"வேதனையானது, ஐயா."

"நிலையற்றதை, வேதனைக்குரியதை, மாற்றத்துக்குட்பட்டதை: 'இது எனது. இதுவே நான். இதுதான் எனது இயல்பு' என்று நினைப்பது சரியா?"

"இல்லை ஐயா."

"Now what do you think, sisters: Is eye-consciousness constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"And is that which is inconstant easeful or stressful?"

"Stressful, venerable sir."

"And is it fitting to regard what is inconstant, stressful, subject to change as: 'This is mine. This is my self. This is what I am'?"

"No, venerable sir."

"செவி உணர்வு நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Is ear-consciousness constant or inconstant?" "Inconstant, venerable sir."

"மூக்குணர்வு நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Is nose-consciousness constant or inconstant?" "Inconstant, venerable sir."

"நாக்குணர்வு நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Is tongue-consciousness constant or inconstant?" "Inconstant, venerable sir."

"உடலுணர்வு நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"Is body-consciousness constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"சரி சகோதரிகளே நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்: சித்த உணர்வு நிலையானதா, நிலையற்றதா?"

"நிலையற்றது ஐயா."

"நிலையற்றது ஆறுதலானதா, வேதனையானதா?"

"வேதனையானது, ஐயா."

"நிலையற்றதை, வேதனைக்குரியதை, மாற்றத்துக்குட்பட்டதை: 'இது எனது. இதுவே நான். இதுதான் எனது இயல்பு' என்று நினைப்பது சரியா?"

"இல்லை ஐயா.

ஏன் அப்படி?

ஏனென்றால் நாங்கள் சரியான விவேகத்தின் காரணமாக உள்ளதை உள்ளவாறு கண்டு, இந்த ஆறு உணர்வுப் பிரிவுகளும் நிலையற்றவை என்பதை அறிவோம்."

"அருமை, அருமை, சகோதரிகளே. சரியான விவேகத்தின் காரணமாக உள்ளதை உள்ளவாறு கண்ட மேன்மையானோரின் சீடர்களும் இவ்வாறே அறிவார்கள்."

"What do you think, sisters: Is intellect-consciousness constant or inconstant?"

"Inconstant, venerable sir."

"And is that which is inconstant, easeful or stressful?"

"Stressful, venerable sir."

"And is it fitting to regard what is inconstant, stressful, subject to change as: 'This is mine. This is my self. This is what I am'?"

"No, venerable sir.

Why is that?

Because we have already seen it well as it actually is, with right discernment, that these six consciousness-groups, too, are inconstant."

"Good, good, sisters. That's how it is for a disciple of the noble ones who has seen it as it actually is with right discernment.

* * *

"எரியும் எண்ணெய் விளக்கில் உள்ள எண்ணெய் நிலையற்றது மற்றும் மாற்றத்துக்குட்பட்டது என்பதால், அதன் திரி நிலையற்றது மாற்றத்துக்குட்பட்டது என்பதால், அதன் நெருப்புச் சுடர் நிலையற்றது மாற்றத்துக்குட்பட்டது என்பதால் - அதன் ஒளியும் நிலையற்றது மாற்றத்துக்குட்பட்டது என்பதை அறிவோம். யாதொருவர் இவ்வாறு கூறினால். 'எரியும் எண்ணெய் விளக்கில் உள்ள எண்ணெய் நிலையற்றது மாற்றத்துக்குட்பட்டது, அதன் திரி நிலையற்றது மாற்றத்துக்குட்பட்டது, அதன் நெருப்புச் சுடர் நிலையற்றது மாற்றத்துக்குட்பட்டது. ஆனால் அதன் ஒளியைப்பொருத்தவரை அது நிலையானது, என்றென்றும் நீடிக்கும், நித்தியமானது மாற்றத்துக்குட்படாதது' என்று கூறினால் அவர் சரியாகப் பேசுபவராவாரா?"

"இல்லை ஐயா.

ஏன் அப்படி?

ஏனென்றால் எரியும் எண்ணெய் விளக்கில் உள்ள எண்ணெயும், திரியும், நெருப்புச்சுடரும் நிலையற்றது மற்றும் மாற்றத்துக்குட்பட்டது என்பதால் அதன் ஒளியும் நிலையற்றதாகவும் மாற்றத்துக்குட்பட்டதாகவும் தான் இருக்க வேண்டும்."

"அதுபோலவே சகோதரிகளே, ஒருவர் இவ்வாறு கூறுவாரெனில்: 'எனது ஆறு உட் புலன்கள் நிலையற்றவை ஆனால் அந்த ஆறு உட் புலன்களின் காரணமாக அனுபவிக்கும் நுகர்ச்சிகள் - இன்பம், துன்பம், இன்பமும் துன்பமுமற்ற நொதுமலான நுகர்ச்சிகள் - அவை நிலையானவை, என்றென்றும் நீடிப்பவை, நித்தியமானவை மாற்றத்துக்குட்படாதவை' என்று கூறினால் அவர் சரியாகப் பேசுபவராவாரா?"

"இல்லை ஐயா.

ஏன் அப்படி?

ஏனென்றால் ஒவ்வொரு நுகர்ச்சியும் அவற்றுக்கு ஒத்திருக்கிற நிலைமையைச் சார்ந்திருக்கின்றன. அந்த நிலைமை மாறும் போது அந்த நுகர்ச்சியும் முடிவுறும்."

"அருமை, அருமை, சகோதரிகளே. சரியான விவேகத்தின் காரணமாக உள்ளதை உள்ளவாறு கண்ட மேன்மையானோரின் சீடர்களும் இவ்வாறே அறிவார்கள்."

"Just as when the oil in a burning oil lamp is inconstant and subject to change, its wick is inconstant and subject to change, its flame is inconstant and subject to change, its light is inconstant and subject to change. If someone were to say, 'The oil in that burning oil lamp is inconstant and subject to change, its wick is inconstant and subject to change, its flame is inconstant and subject to change, but as for its light, that is constant, everlasting, eternal and not subject to change': would he be speaking rightly?"

"No, venerable sir.

Why is that?

Because the oil in that burning oil lamp is inconstant and subject to change, its wick is inconstant and subject to change, its flame is inconstant and subject to change, so how much more should its light be inconstant and subject to change."

"In the same way, sisters, if someone were to say, 'My six internal media are inconstant, but what I experience based on the six internal media - pleasure, pain, or neither pleasure nor pain - that is constant, everlasting, eternal and not subject to change': would he be speaking rightly?"

"No, venerable sir.

Why is that?

Because each feeling arises dependent on its corresponding condition. With the cessation of its corresponding condition, it ceases."

"Good, good, sisters. That's how it is for a disciple of the noble ones who has seen it as it actually is with right discernment.

* * *

"மரவைரம் கொண்ட ஒரு நிற்கும் மாபெரும் மரத்தின் வேர் நிலையற்றதாகவும், மாற்றத்துக்குட்பட்டதாகவும் உள்ள போது, அதன் தண்டு நிலையற்றதாகவும், மாற்றத்துக்குட்பட்டதாகவும் உள்ள போது, அதன் கிளைகளும், இலைகளும் நிலையற்றதாகவும், மாற்றத்துக் குட்பட்டதாகவும் உள்ள போது, அதன் நிழலும் நிலையற்றதாகவும், மாற்றத்துக் குட்பட்டதாகவும் தான் இருக்கும். ஒருவர் இவ்வாறு கூறுவாரெனில், 'அந்த மரவைரம் கொண்ட நிற்கும் மாபெரும் மரத்தின் வேர் நிலையற்றதாகவும் மாற்றத்துக் குட்பட்டதாகவும் உள்ளது. அதன் தண்டு நிலையற்றதாகவும், மாற்றத்துக் குட்பட்டதாகவும் உள்ளது. அதன் கிளைகளும் இலைகளும் நிலையற்றதாகவும் மாற்றத்துக்குட்பட்டதாகவும் உள்ளன. ஆனால் அதன் நிழலைப் பொருத்தவரை அது நிலையானது, என்றென்றும் நீடிக்கும் நித்தியமானது, மாற்றத்துக்குட்படாதது' என்று கூறினால் அவர் சரியாகப் பேசுபவராவாரா?"

"இல்லை ஐயா.

ஏன் அப்படி?

ஏனென்றால் மரவைரம் கொண்ட ஒரு மாபெரும் நிற்கும் மரத்தின் வேர் நிலையற்றதாகவும், மாற்றத்துக் குட்பட்டதாகவும் உள்ள போது, அதன் தண்டு நிலையற்றதாகவும் மாற்றத்துக் குட்பட்டதாகவும் உள்ள போது, அதன் கிளைகளும் இலைகளும் நிலையற்றதாகவும் மாற்றத்துக்குட்பட்டதாகவும் உள்ள போது அதன் நிழலைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அது கண்டிப்பாக நிலையற்றதாகவும் மாற்றத்துக் குட்பட்டதாகவும் தான் இருக்க வேண்டும்."

"அதுபோலவே சகோதரிகளே ஒருவர் இவ்வாறு கூறுவாரெனில்: 'எனது ஆறு புறப்புலன்களும் நிலையற்றவை ஆனால் அந்த ஆறு புறப்புலன்களின் காரணமாக அனுபவிக்கும் நுகர்ச்சிகள் - இன்பம், துன்பம், இன்பமும் துன்பமுமற்ற நொதுமலான நுகர்ச்சிகள் - அவை நிலையானவை, என்றென்றும் நீடிப்பவை, நித்தியமானவை, மாற்றத்துக் குட்படாதவை' என்று கூறினால் அவர் சரியாகப் பேசுபவராவாரா?"

"இல்லை ஐயா.

ஏன் அப்படி?

ஏனென்றால் ஒவ்வொரு நுகர்ச்சியும் அவற்றுக்கு ஒத்திருக்கிற நிலைமையைச் சார்ந்திருக்கின்றன. அந்த நிலைமை மாறும் போது அந்த நுகர்ச்சியும் முடிவுறும்."

"அருமை, அருமை, சகோதரிகளே. சரியான விவேகத்தின் காரணமாக உள்ளதை உள்ளவாறு கண்ட மேன்மையானோரின் சீடர்களும் இவ்வாறே அறிவார்கள்."

"Just as when the root of a great, standing tree - possessed of heartwood - is inconstant and subject to change, its trunk is inconstant and subject to change, its branches and foliage are inconstant and subject to change, its shadow is inconstant and subject to change. If someone were to say, 'The root of that great, standing tree - possessed of heartwood - is inconstant and subject to change, its trunk is inconstant and subject to change, its branches and foliage are inconstant and subject to change, but as for its shadow, that is constant, everlasting, eternal, and not subject to change': would he be speaking rightly?"

"No, venerable sir.

Why is that?

Because the root of that great, standing tree - possessed of heartwood - is inconstant and subject to change, its trunk is inconstant and subject to change, its branches and foliage are inconstant and subject to change, so how much more should its shadow be inconstant and subject to change."

"In the same way, sisters, if someone were to say, 'My six external media are inconstant, but what I experience based on the six external media - pleasure, pain, or neither pleasure nor pain - that is constant, everlasting, and eternal and not subject to change': would he be speaking rightly?"

"No, venerable sir.

Why is that?

Because each feeling arises dependent on its corresponding condition. With the cessation of its corresponding condition, it ceases."

"Good, good, sisters. That's how it is for a disciple of the noble ones who has seen it as it actually is with right discernment.

* * *

ஒரு திறமையான கசாப்புக்கடைக்காரனோ அல்லது அவனிடம் வேலை பயில்பவனோ, ஒரு மாட்டைக் கொன்ற பின்னர், அதனை ஒரு கூர்மையான கத்தியின் உதவியோடு - உள் சதையைச் சேதப்படுத்தாமலும், வெளித்தோலையும் சேதப்படுத்தாமலும் - தோலுடன் ஒட்டியுள்ள தசையை, தோலுக்கடியிலுள்ள தசையோடு இணைக்கும் சவ்வினை மட்டும் அறுத்துத் தோலை மட்டும் பிரித்தெடுக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வெளித்தோலை அறுத்துப் பிரித்தவன் பின் மீண்டும் அந்த மாட்டினை அதே தோலால் மூடிவிட்டு 'இப்போது தோலால் மூடப்பட்ட மாடு முன் போலவே ஆகிவிட்டது,' என்று கூறினானென்றால் அவன் சரியாகப் பேசுபவனாவானா?"

"இல்லை ஐயா.

ஏன் அப்படி?

ஏனென்றால் ஒரு திறமையான கசாப்புக்கடைகாரனோ அல்லது அவனிடம் வேலைப் பயில்பவனோ, ஒரு மாட்டைக் கொன்ற பின்னர், தோலுடன் ஒட்டியுள்ள தசையை, தோலுக்கடியிலுள்ள தசையோடு இணைக்கும் சவ்வினை மட்டும் அறுத்துத் தோலை மட்டும் பிரித்தவன் மீண்டும் அந்த மாட்டை அதே தோலால் மூடிய பின்னர் அவன் எவ்வளவு தான் முன் போலவே மாடு ஒன்றாகிவிட்டது என்றாலும் அந்த மாடும் அதன் தோலும் பிரிக்கப்பட்டு விட்டதாகத்தான் கருதப்பட வேண்டும்."

"சகோதரிகளே, இந்த உவமானம் உங்களிடம் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காகவே கூறினேன். அந்தச் செய்தி இதுவே: உள் சதை என்பது ஆறு உட்புலன்களைக் குறிக்கும்; வெளித்தோல் என்பது ஆறு புறப்புலன்களைக் குறிக்கும். தோலோடு ஒட்டியுள்ள சதையும், தோலையும் உள் தசைகளையும் இணைக்கும் சவ்வுகளும் மற்ற பிணைப்புகளும், ஆசையையும், இன்பத்தையும் குறிக்கும். கூர்மையான கத்தியே மேன்மையான விவேகம் - இந்த மேன்மையான விவேகம் தான் மத்தியுள்ள மாசுகளையும் பிணைப்புகளையும், தளைகளையும் அறுத்துப் பிரித்து விளக்கி விடுகிறது.

"Just as if a skilled butcher or butcher's apprentice, having killed a cow, were to carve it up with a sharp carving knife so that - without damaging the substance of the inner flesh, without damaging the substance of the outer hide - he would cut, sever, and detach only the skin muscles, connective tissues and attachments in between. Having cut, severed and detached the outer skin, and then covering the cow again with that very skin, if he were to say that the cow was joined to the skin just as it had been: would he be speaking rightly?"

"No, venerable sir.

Why is that?

Because if the skilled butcher or butcher's apprentice, having killed a cow, were to ... cut, sever, and detach only the skin muscles, connective tissues and attachments in between; having covered the cow again with that very skin, then no matter how and much he might say that the cow was joined to the skin just as it had been, the cow would still be disjoined from the skin."

"This simile, sisters, I have given to convey a message. The message is this: The substance of the inner flesh stands for the six internal media; the substance of the outer hide, for the six external media. The skin muscles, connective tissues and attachments in between stand for passion and delight. And the sharp knife stands for noble discernment - the noble discernment that cuts, severs and detaches the defilements, fetters and bonds in between.

* * *

"சகோதரிகளே, ஏழு ஞான அங்கங்கள் உள்ளன. [1] அவற்றைப் பேணி, தொடர்ந்து வளர்த்து ஒரு பிக்கு இங்கேயே இப்போதே (இந்த வாழ்விலேயே) விவேகத்தின் காரணமாக மாசற்ற உள்ளத்தின் விடுதலையை அறிகிறார். தளைகளை அறுத்துத் தன் அறிவால் இதனை உணர்ந்தவராக வாழ்கிறார்.

எந்த ஏழு?

சதி (கடைப்பிடி), தம்மவிஷயம் ஆராய்ச்சி செய்தல், வீரியம் (ஊக்கம், விடா முயற்சி), பிரீதி (உவப்பு, மகிழ்ச்சி), சாந்தம் (பஸ்ஸத்தி) , சமாதி (மன ஒருக்கம்), உபேக்கா (பற்றற்ற நடுநிலை/ இடுக்கணழியாமை) என்ற போதி அங்கங்கள் - இவை தனிமையை, இச்சையின்மையை, முடிவைச் சார்ந்துள்ளன. இவை விடுத்தலினால் முதிர்ச்சி அடைகின்றன.

Sisters, by developing and cultivating these seven awakening factors, a mendicant realizes the undefiled freedom of heart and freedom by wisdom in this very life. And they live having realized it with their own insight due to the ending of defilements. What seven? It’s when a mendicant develops the awakening factors of mindfulness, investigation of principles, energy, rapture, tranquility, immersion, and equanimity, which rely on seclusion, fading away, and cessation and ripen as letting go. (Bhante Sujata translation)

* * *

பிக்குணிகளுக்குப் போதித்த பின்னர் அவர்களிடம், "சரி சகோதரிகளே, நேரமாகிவிட்டது நீங்கள் புறப்படுங்கள்." என்று கூறி அவர்களை வழி அனுப்பினார் போ. நந்தகர். பிக்குணிகள் போ. நந்தகரின் போதனையைப் போற்றி மகிழ்ச்சியோடு அவர்கள் ஆசனங்களிலிருந்து எழுந்து, அவரை வணங்கி வலம் சுற்றி வந்து பகவரிடம் சென்றனர். சென்றபின் பகவரை வணங்கி ஒரு புறமாக நின்றனர். அவ்வாறு நிற்கையில் பகவர் அவர்களிடம், "பிக்குணிகளே, நேரமாகி விட்டது நீங்கள் புறப்படுங்கள்." என்று கூறினார்." எனவே பிக்குணிகள் பகவரை வணங்கி வலம் சுற்றி வந்து அங்கிருந்து புறப்பட்டனர்.

பின் பிக்குணிகள் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் பகவர் பிக்குகளிடம்: "பிக்குகளே, பதினான்காம் நாளன்று [2] வரும் உபோசதை தினத்தன்று (தேய்பிறையின் முடிவில்) பௌர்ணமியா அமாவாசையா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாதது போல - ஏனென்றால் அது அமாவாசை தினம் - அது போலப் பிக்குணிகள் நந்தகரின் போதனையைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி கொண்டாலும் அவர்கள் நோக்கத்தை இன்னமும் அடையவில்லை." பின் அவர் போ. நந்தகரிடம்: "எனவே நந்தகரே, இதே போதனையை மீண்டும் பிக்குணிகளுக்கு நாளையும் தரவும்," என்று கேட்டுக் கொண்டார்.

Then not long after the nuns' departure the Blessed One addressed the monks: "Monks, just as on the uposatha day of the fourteenth, people at large are not doubtful or perplexed as to whether the moon is lacking or full, for it is clearly lacking; [4] in the same way, even though the nuns are gratified with Nandaka's Dhamma-teaching, their resolves have not yet been fulfilled." So he addressed Ven. Nandaka: "In that case, Nandaka, exhort the nuns again tomorrow with the exact same exhortation."

"அப்படியே செய்கிறேன், அண்ணலே," என்று நந்தகர் பதிலளித்தார். பின் அதிகாலையில் சீவர ஆடையை உடுத்திய பின் அவர் பிச்சாபாத்திரத்தையும் மேலாடையையும் எடுத்துக்கொண்டு சாவத்திக்கு உணவு சஞ்சரிக்கச் சென்றார். ....[முன் விவரித்தப்படியே பகவர் முதலாவதாக போ. நந்தகரிடம் போதனை தருமாறு கேட்டுக்கொண்டதிலிருந்து அடுத்த பத்தி வரை:]

பின் பிக்குணிகள் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் பகவர் பிக்குகளிடம்: "பிக்குகளே, பதினைந்தாம் நாளன்று வரும் உபோசதை தினத்தன்று (வளர்பிறையின் முடிவில்) பௌர்ணமியா அமாவாசையா என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லாதது போல - ஏனென்றால் அது பௌர்ணமி தினம் - அது போல, பிக்குணிகள் நந்தகரின் போதனையைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி கொண்டது மட்டுமின்றி அவர்கள் நோக்கத்தையும் அடைந்து விட்டனர். ஐந்நூறு பிக்குணிகளுள் மிகவும் பின் தங்கியவரும் கூட ஓடையில் நுழைந்தவராகி விட்டார் (முதல் ஞான நிலை). இனி அவர் கீழுலங்களில் பிறப்பெடுக்க மாட்டார். ஞானம் பெறுவது உறுதி."

Then not long after the nuns' departure the Blessed One addressed the monks: "Monks, just as on the uposatha day of the fifteenth, people at large are not doubtful or perplexed as to whether the moon is lacking or full, for it is clearly full; in the same way, the nuns are gratified with Nandaka's Dhamma-teaching, and their resolves have been fulfilled. Of these 500 nuns, the most backward is a stream-winner, not destined for the planes of deprivation, headed to self-awakening for sure."

இவ்வாறு பகவர் கூறியதைக் கேட்ட பிக்குகள் பகவரின் வார்த்தைகளைக் கேட்டுப் பெருமிதம் கொண்டனர்.

That is what the Blessed One said. Gratified, the monks delighted in the Blessed One's words.

* * *

விளக்கம்

Notes

1. The commentary explains that Ven. Nandaka introduces the topic of the seven factors of awakening here to indicate where the nuns have more work to do in their practice. From the questions and answers, it is obvious that they have developed the second factor of awakening - analysis of qualities (or dhammas) - which is the factor associated with insight and discernment. However, for their resolves to be fulfilled, they need to focus on developing the factors associated with tranquillity and concentration.

உரைகளின் படி போ. நந்தகர் ஏழு போதி அங்கங்களை இங்கு அறிமுகப்படுத்துவது பிக்குணிகள் மேலும் பயிற்சி செய்ய வேண்டியதன் காரணமாகத்தான். கேள்வி பதில்களிலிருந்து அவர்கள் இரண்டாம் போதி அங்கமான தம்ம விஷயங்களை ஆராய்ச்சி செய்வதை வளர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது - விவேகம் மற்றும் அகப்பார்வை சம்பந்தப்பட்ட அங்கம் இது. இவ்விரண்டையும் அவர்கள் வளர்த்துக் கொண்டிருந்தாலும் மேலும் நோக்கத்தை அடைய மற்ற அங்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாகச் சாந்தம் மற்றும் மன ஒருக்கம் சம்பந்தப்பட்ட போதி அங்கங்களை அவர்கள் வளர்க்க வேண்டியிருந்தது.

2. Apparently, in the Buddha's time, the 29-day lunar month was divided so that the half ending in the new moon uposatha had fourteen days, and the half ending in the full moon uposatha, fifteen days. How they compensated for the fact that the lunar month is not exactly 29 days is not known.

புத்தர் காலத்தில் சந்திரமாதத்தின் (lunar month) 29 நாட்கள் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தன என்று கூறப்படுகிறது. முதல் பகுதி பதினான்கு நாட்கள் கொண்டது – இது தேய்பிறை அமாவாசையில் முடிவுறுகிறது. அடுத்த பாதி பதினைந்து நாட்கள் கொண்டது - இது வளர்பிறை, பௌர்ணமியில் முடிவுறுகிறது.

* * *