அஜான் ஃபுவாங் முகப்பு

The teachings of Ajaan Fuang Jothiko
அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்


தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
தணிசாரோ பிக்கு
Compiled and Translated by
Thanissaro Bhikkhu

Merit 
புண்ணியம்


§ One of Ajaan Fuang's students reports that the first time she met him, he asked her, "Where do you usually go to make merit?" She answered that she had helped sponsor a Buddha image at that temple and contributed to a crematorium at this temple, etc. So he asked further: "Why haven't you made merit at your heart?"

    முதன் முதலில் தன்னைச் சந்திக்க வந்த மாணவி ஒருவரிடம் அஜான் ஃபுவாங், "பொதுவாக நீ புண்ணியம் செய்வதற்கு எங்கு போவாய்?" என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி, தான் ஒரு கோவிலில் புத்தர் சிலை அமைக்க உதவியதாகவும், மற்றொரு கோவிலில் உடல் தகனம் செய்யும் தகன மேடை கட்டுவதற்கு உதவியதாகவும் கூறினார். அதற்கு அஜான் ஃபுவாங் கேட்ட கேள்வி: "நீ ஏன் உன் உள்ளத்தில் புண்ணியம் செய்ய முற்பட வில்லை?"

§ Once Ajaan Fuang had one of his students cut away some of the grass and weeds that were threatening to overgrow the monastery. She didn't really want to do the work, though, and all the while as she was cutting away she kept asking herself, "What kind of karma did I do that I have to work so hard like this?" When she had finished, he told her,
"Well, you got some merit, but not very much."
"What? After all that work, I still didn't get very much?"
"If you want your full measure of merit, the merit has to go all the way to your heart."

    விகாரையில் அதிகமாக வளர்ந்துவிட்ட புற்களையும், செடி, கொடிகளையும் வெட்டிக் களையெடுக்க அஜான் ஃபுவாங் ஒரு மாணவியைப் பணித்தார். ஆனால் அந்த மாணவிக்குக் கொடுக்கப் பட்ட அந்த வேலையைச் செய்யப் பிடிக்கவே இல்லை. புற்களை வெட்டிக் கொண்டிருக்கும்போது அவர் இவ்வாறு நினைத்துக் கொண்டார், "நான் என்ன கன்மம் செய்தேனோ, இத்தகைய கடின வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது."

   
வேலையை முடித்தவுடன் அஜான் ஃபுவாங் மாணவியிடம், "சரி, நீ ஏதோ கொஞ்சம் புண்ணியம் சேர்த்திருக்கிறாய். ஆனால் அதிகம் இல்லை," என்றார்.

   
"என்ன!  இவ்வளவு வேலை செய்தும் எனக்கு அதிகப் புண்ணியம் கிடைக்க வில்லையா?"

   
"முழுமையான புண்ணியம் வேண்டுமானால், நீ உள்ளார்ந்த ஈடுபாட்டோடு அந்தப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்."

§ There's another story involving grass. One day Ajaan Fuang pointed out the overgrown grass near his hut and asked the same woman, "Don't you want the grass at the corral gate?"
"What do you mean, grass at the corral gate?"
"The opportunity to make merit right nearby that everyone else overlooks. That's called 'grass at the corral gate.'"

புல் பற்றிய மற்றொரு கதையிருக்கிறது. அதே பெண்ணை ஒரு நாள் அஜான் ஃபுவாங் தன் குடிலுக்கு அருகில் வளர்ந்திருந்த புல்லைச் சுட்டிக் காட்டி, "தொழுவத்தின் வாயிலில் உள்ள புல் உனக்கு வேண்டாமா?" என்று கேட்டார்.

"தொழுவத்தின் வாயிலில் உள்ள புல் என்றால் என்ன?"

"மற்றவர் கவனிக்காத, அருகிலேயே உள்ள புண்ணியம் செய்யும் வாய்ப்புத் தான் 'தொழுவத்தின் வாயிலில் உள்ள புல்'. "

(தொழுவத்தின் கதவு திறந்த உடன் உள்ளே  அடைபட்டிருந்த மாடுகள் திபு திபுவென்று   புல்லைத் தேடி ஓடிச்செல்லும்.   ஆனால் கதவின் அருகிளேயே உள்ள புல்லை கவனிப்பதில்லை.)

§ Another time, Ajaan Fuang took some of his Bangkok students up the hill to clean the area around the chedi. They found a large pile of trash that someone had thrown away up there, and one of the group complained, "How could anyone be so disrespectful as to do something like this?" But Ajaan Fuang told her, "Don't criticize whoever did it. If they hadn't thrown the trash here, we wouldn't have the opportunity to earn the merit that comes from cleaning it up."

    இன்னொரு முறை, மலை முகட்டில் இருந்த ஒரு சேதியத்தின் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வதற்கு அஜான் ஃபுவாங் அவரது பாங்காக்  மாணவ மாணவிகள் சிலரை அங்கு அழைத்துச் சென்றார். அங்கு யாரோ குவித்து வைத்திருந்த மிகப் பெரிய குப்பைக் குவியலைக் கண்ட மாணவிகளில் ஒருவர் குறை கூறினார், "இப்படிப் பொறுப்பில்லாமல் யார் தான் இப்படிக் குப்பை கூலங்களைக் குவித்தார்களோ?" அஜான் ஃபுவாங் அந்தப் மாணவியிடம் கூறினார், "இதைச் செய்தவரைக் குறை கூற வேண்டாம். அவர் இந்தக் குப்பைக் குவியலை இங்கு போட்டிருக்கா விட்டால் இதைச் சுத்தப்படுத்துவதால் உங்களுக்குக் கிடைக்க இருக்கும் புண்ணியம் கிடைத்திருக்காது."

§ One day, after Ajaan Fuang's name had appeared in a magazine article, a group of three men from Bangkok took a day off from work to drive to Rayong and pay their respects to him. After bowing down and then chatting for a while, one of them said, "Our country still has monks who practice rightly and well so that we can ask to have a share of their paramis, isn't that true, Than Phaw?"
"It's true," he answered, "but if we keep asking for a share of their paramis without developing any of our own, they'll see that we're simply beggars and they won't want to share with us any more."

    ஒரு நாள் அஜான் ஃபுவாங்கின் பெயர் ஒரு பத்திரிகைக் கட்டுரையில் வெளியான போது, அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக அலுவலகத்திலிருந்து விடுமுறை பெற்றுப் பாங்காக் நகரிலிருந்து மூன்று ஆடவர்கள் ரயாங் வந்திருந்தனர். அவருக்கு வணக்கம் கூறியபின்  ஒருபுறம் அமர்ந்து அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவர்களுள் ஒருவர், "நமது நாட்டில் இன்னமும் சரியாகவும், சிறப்பாகவும் பயிற்சி செய்யும் துறவிகள் இருக்கின்றபடியால் அவர்களின் பாரமிதைகளைப் பகிர்ந்து கொள்ள அவர்களைக் கேட்கும் வாய்ப்பு இருக்கிறது, இல்லையா ஐயா?" என்று கேட்டார்.

    "உண்மைதான்," என்று பதிலளித்த அஜான் ஃபுவாங், "ஆனால் அவர்களின் பாரமிதைகளைப் பகிர்ந்து கொள்ளக் கேட்டுக் கொண்ட நாம் நமது பாரமிதைகள் எதையும் வளர்த்துக் கொள்ளாவிட்டால், நம்மை வெறும் பிச்சைக்காரர்கள் என்று நினைத்து அவர்கள் பகிர்ந்து கொள்வதை நிறுத்தி விடுவார்கள்," என்றார்.

    பாரமிதைகள்: பத்து முழு நிறைவான பண்புகள்.

§ A woman in the town of Samut Prakaan, just outside of Bangkok, sent word through one of Ajaan Fuang's students that she'd like to donate a large sum of money to help build the Buddha image at Wat Dhammasathit, but she wanted him to come to her home to give a blessing as she handed over the check. He refused to go, saying, "If people want merit, they have to go looking for it. They can't expect the merit to come looking for them."

    பாங்காக் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள சமுத் பிரகான் (Samut Prakaan) என்ற ஊரில் இருந்த பெண் ஒருவர் அஜான் ஃபுவாங்கின் மாணவர் ஒருவர் மூலம், தான் வாட் தம்மசாதிட் (Wat Dhammasathit) விகாரையில் ஒரு புத்தர் சிலை எழுப்புவதற்கு ஒரு பெருந்தொகை தானம் செய்ய விரும்புவதாகவும், ஆனால் அஜான் ஃபுவாங் தம் வீட்டுக்கு வந்து அவர் காசோலையைக் கொடுக்கும் போது தன்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று சேதி சொல்லி அனுப்பினார். அஜான் ஃபுவாங் போக மறுத்து, இவ்வாறு சொன்னார், "மக்களுக்குப் புண்ணியம் வேண்டுமென்றால் அவர்கள் தான் அதைத் தேடிச் செல்ல வேண்டும். புண்ணியம் தங்களைத் தேடி வர வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது."

§ Another woman once telephoned the main office at Wat Makut, saying that she was going to provide a meal for monks at her house and wanted to invite Ajaan Fuang to the meal because she had heard that he was a Noble Disciple. When the invitation was conveyed to him, he refused it, saying, "Is her rice so special that only Noble Disciples can get to eat it?"

    மற்றொரு பெண் ஒரு முறை வாட் மாகுட் (Wat Makut) விகாரையின் தலைமை அலுவலகத்தைத்  தொலைபேசியில் அழைத்துத் தான் துறவிகளுக்கு தனது வீட்டில் உணவு தானம் அளிக்க விரும்புவதாகவும், அஜான் ஃபுவாங் ஒரு மேன்மையான சீடர் என்று கேள்விப்பட்டதால்   அவரை அழைக்க விரும்புவதாகவும் கூறினார். அந்தச் செய்தியை அஜான் ஃபுவாங்கிடம் தெரிவித்த போது அவர் அந்த அழைப்பை மறுத்துச் சொன்னது, "மேன்மையான சீடர் மட்டுமே சாப்பிடக்கூடிய வகையில் அவர் சாதத்தில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது?"

§ One of Ajaan Fuang's students told him that she'd like to do something special to make merit on her birthday. He replied, "Why does it have to be on your birthday? Do you get less merit if you do it any other day? If you want to make merit, go ahead and do it on the day the thought occurs to you. Don't wait for your birthday, because your deathday may get to you first."

    தனது பிறந்த நாள் அன்று புண்ணியம் சேர்க்க எதேனும் சிறப்பாகச் செய்யவிரும்புவதாக ஒரு மாணவி அஜான் ஃபுவாங்கிடம் கூறினார். அதற்கு அவர், "ஏன் பிறந்த நாள் அன்று செய்ய விரும்ப வேண்டும்? மற்ற நாட்களில் செய்தால் கிடைக்கும் புண்ணியம் குறைந்து விடுமா? புண்ணியம் செய்ய வேண்டுமானால் அதைச் செய்ய நினைத்த அன்றே செய்து விடுங்கள். பிறந்த நாளுக்காகக் காத்திருக்க வேண்டாம், ஏனென்றால் நீங்கள் இறக்கும் நாள் அதற்கு முன்னரே வந்து விடலாம்."

§ Referring to people who didn't like to meditate but were happy to help with the construction work at the wat, Ajaan Fuang once said, "Light merit doesn't register with them, so you have to find some really heavy merit for them to make. That's the only way to keep them satisfied."

    தியானம் செய்ய விரும்பாத ஆனால் விகாரையில் கட்டிட வேலை செய்வதற்கு மனமுவந்து வருபவர்களைப் பற்றி அஜான் ஃபுவாங் இவ்வாறு கூறினார்: "இலேசான புண்ணியம் அவர்களுக்கு விளங்குவதில்லை, ஆகவே அவர்கள் செய்யப் பாரமான புண்ணியம் எதையாவது தேட வேண்டியிருக்கிறது. அப்போது தான் அவர்கள் திருப்தி அடைகிறார்கள்."

§ Shortly after the chedi was finished, a group of Ajaan Fuang's students were sitting and admiring it, taking joy in all the merit in store for them because they had had a hand in building it. Ajaan Fuang happened to walk by and overhear what they were saying, and so he commented, as if to no one in particular, "Don't get attached to material things. When you make merit, don't get attached to the merit. If you let yourself get carried away, thinking 'I built this chedi with my own hands,' watch out. If you happened to die right now, all you'd be able to think would be, 'This chedi is mine, it's mine.' Instead of being reborn in heaven with everyone else, you'd be reborn as a hungry ghost to guard over the chedi for a week or so because your heart was fixated on material things."

    சேதியம் கட்டப்பட்ட சிறிது காலத்திற்குப் பின், அஜான் ஃபுவாங்கின் மாணவர்கள் சிலர், அதன் அருகில் அமர்ந்து கட்டிடத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர். அதைக் கட்ட உதவியதனால் அவர்களுக்குக் கிடைக்கப் போகும் புண்ணியத்தை நினைத்து மகிழ்ச்சிப் பட்டுக் கொண்டிருந்தனர். தற்செயலாக அங்கு நடந்து கொண்டிருந்த அஜான் ஃபூவாங் அவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டு யாரொருவரையும் குறிப்பாக பார்த்துப் பேசாமல், "பொருட்களோடு பற்றுக் கொள்ள வேண்டாம். புண்ணியம் செய்தால் அந்தப் புண்ணியத்தோடும் பற்றுக் கொள்ள வேண்டாம். 'நான் என் கைகளால் இந்தச் சேதியத்தைக் கட்டினேன்,' என்று நினைத்துக் கொண்டே இருந்தீர்களென்றால், ஜாக்கிரதை! இதோ இந்த நொடியில் மரணத்தைச் சந்திக்க வேண்டியிருந்தால் உங்களால், 'இந்தச் சேதியம் என்னுடையது, என்னுடையது,' என்று மட்டுமே நினைக்கத் தோன்றும். பின் மற்றவர்களோடு மேலுலகில் மறுபிறப்பெடுக்காமல், இந்தச் சேதியத்துக்குக் காவலாகப் பசி ஒடுங்காப் பூதமாகப் பிறந்து ஒரு வாரம் அலைய வேண்டியிருக்கும். ஏனென்றால் பொருட்களோடு உங்கள் உள்ளம் பற்று கொண்டு விட்டது."

§ "If, when you do good, you get stuck on your goodness, you'll never get free. Wherever you're stuck, that's where there's becoming and birth."

    "நீங்கள் நல்லது செய்த பின்னர், அதனோடு பற்றுக் கொண்டு விட்டால், உங்களால் சுதந்திரமாக இருக்க முடியாது. பற்று கொள்வதால் வருவதே ஆகுதலும், பிறப்பும்."

§ There is an old tradition in Buddhism — based on the Apadana tales — that whenever you make a gift to the religion or perform some other meritorious deed, you should dedicate the merit of the deed to a particular goal. There were times when Ajaan Fuang would tell his students to make similar dedications every time they meditated, although the dedication he'd recommend would depend on the individual. Sometimes he'd recommend the dedication King Asoka made at the end of his life: "In my future lives may I have sovereignty over the mind."
Other times he'd say, "There's no need to make any long, drawn-out dedications. Tell yourself: If I have to be reborn, may I always encounter the Buddha's teachings."
But it wasn't always the case that he would recommend such dedications. Once a woman told him that when she made merit she couldn't think of any particular goal to dedicate the merit towards. He told her, "If the mind is full, there's no need to make any dedication if you don't want to. It's like eating. Whether or not you express a wish to get full, if you keep on eating, there's no way you can help but get full."

    பௌத்தத்தில் ஒரு பழைய மரபு உள்ளது - அபதானா கதைகளிலிருந்து தோன்றிய மரபு அது -  பௌத்தத்திற்காக ஒரு நன்கொடை வழங்கினாலோ அல்லது புண்ணியச் செயலைச் செய்தாலோ, அந்தச் செயலினால் உண்டான புண்ணியத்தை ஒரு நல்ல நோக்கத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதாகும். அஜான் ஃபுவாங் இப்படித் தனது மாணவர்களிடம்  அவர்கள் ஒவ்வொரு முறையும் தியானம் செய்து முடிக்கும் போது அதனால் உண்டான புண்ணியத்தை  அர்ப்பணஞ் செய்யச் சொல்வார். ஆனால் எந்த நோக்கத்திற்காக அர்ப்பணஞ்செய்ய வேண்டுமென்பது  அந்தந்த மாணவரைப் பொருத்து இருக்கும். சில சமயம் அசோக சக்கரவர்த்தி தமது வாழ்நாள் முடிவில் அர்ப்பணஞ்செய்தது போலச் செய்து கொள்ளச் சொல்வார், "எனது எதிர்கால வாழ்வுகளில் நான் எனது மனத்தின் சக்கரவர்த்தியாக இருப்பேனாக."
மற்ற சமயங்களில் அவர், "பெரிதாக எதற்காகவும் அர்ப்பணஞ்செய்ய வேண்டுமென்பதில்லை. உங்களுக்கே சொல்லிக் கொள்ளுங்கள்: நான் மறுபிறப்பெடுக்க நேர்ந்தால், எனக்கு எப்போதும் புத்தரின் போதனைகளை அறியும் வாய்ப்புக் கிடைக்குமாக."

    ஆனால் இப்படி எப்போதுமே அர்ப்பணஞ்செய்து கொள்ளச் சொல்ல மாட்டார். ஒரு முறை ஒரு பெண் அவர் புண்ணியச் செயல் செய்த பின் அதனை அர்ப்பணஞ்செய்யக் குறிக்கோள் எதையும் யோசிக்க முடியவில்லை என்றார். அதற்கு அவர், "மனம் நிறைந்து இருந்தால் உங்களுக்கு விருப்பமில்லை யென்றால் அர்ப்பணஞ் செய்யத் தேவையில்லை.  இது உணவு உண்பது போல. வயிறு நிரம்பட்டும் என்று நீங்கள் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும், சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் வயிறு நிரம்புவதைத் தவிர வேறு வழியில்லை."

அபதானா கதைகள்:  புத்தரின், அரகந்த நிலையை அடைந்த பிக்குணிகள், பிக்குகளின் சுயசரிதை கொண்ட கதைகள். இவை பிற்காலத்தில் திரிபிடகத்தில் சேர்க்கப்பட்டவை என்று கருதப்படுகின்றன.

*    *    *    *    *    *