மகந்திய சூத்திரம் Magandiya Sutta
சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 4.9
மகந்திய சூத்திரம் – மகந்தியருக்கு
Magandiya Sutta: To Magandiya
Translated from the Pali by: Thanissaro Bhikkhu
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: தணிசாரோ பிக்கு
* * *
[மகந்தியர் தன் மகளை மணம் புரிந்து கொள்ளுமாறு
புத்தரை வேண்டுகிறார். புத்தரின் பதில்:]
(மாரனின் மூன்று புதல்விகளான) தன்ஹா, அராதி, ராகா ஆகியோரைப்
(திருப்தியின்மை, வேட்கை மற்றும் அவா)
பார்த்த பின்பும்
உடல் உறவு கொள்ளும் ஆசை தோன்ற வில்லை.
அப்படியிருக்க சிறுநீரும், மலமும் கொண்ட
இதனை நான் ஏன் விரும்பவேண்டும்?
இதனை என் கால்களால் தொடுவதற்கும்
எனக்கு விருப்பமில்லை.
[Magandiya offers his daughter to the Buddha, who replies:]
On seeing [the daughters of Mara]
— Discontent, Craving, and Passion —
there wasn't even the desire for sex.
So what would I want with this,
filled with urine and excrement?
I wouldn't want to touch it
even with my foot.
மகந்தியர்:
பல மன்னர்களும் மணக்க ஆசைப்படும்
இந்த இரத்தினக்கல் போன்ற பெண்ணை வேண்டாமென்றால்,
எந்த நோக்கத்திற்காக, ஒழுக்கத்திற்காக,
பயிற்சிக்காக, வாழ்க்கைக்காக,
எதை அடைய நீங்கள் பிரகடனம் செய்கின்றீர்கள்?
Magandiya:
If you don't want
this gem of a woman, coveted
by many kings,
then for what sort of viewpoint,
precept, practice, life,
attainment of [further] becoming
do you argue?
புத்தர்:
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்
என்ற கோட்பாடுகளுக்காக நான்
'இதனைப் பிரகடனம் செய்கின்றேன்'
என்று கூறவில்லை.
ஆனால் கோட்பாடுகளை ஆராய்ந்து,
அவற்றோடு பற்றில்லாமல் தேடுகையில்
மன அமைதியைக் காண்கின்றேன்.
The Buddha:
'I argue for this'
doesn't occur to one
when considering what's grasped
among doctrines.
Looking for what is ungrasped
with regard to views,
and detecting inner peace,
I saw.
மகந்தியர்:
முனிவரே, கற்பனைக் கருத்துக்களைப் பற்றி,
பற்றில்லாமல் பேசுகின்றீர்கள்.
இந்த 'மன அமைதி' :
அப்படியென்றால் என்ன?
அது ஒரு ஞானியால்
எவ்வாறு விளக்கப்படுகிறது?
Magandiya:
Sage, you speak
without grasping
at any preconceived judgments.
This 'inner peace':
what does it mean?
How is it,
by an enlightened person,
proclaimed?
புத்தர்:
ஒருவர் கொண்டுள்ள
கருத்து,
படிப்பு,
அறிவு,
பின்பற்றும் விதி அல்லது
செய்யும் பயிற்சியை வைத்து
அவர் தூய்மையைப் பற்றிக்
கூற முடியாது என்று
ஞானி கூறுகிறார்.
அதே சமயம் ஒருவர்
கருத்து இல்லாமல்,
படிப்பில்லாமல்,
அறிவில்லாமல்,
விதிகளைப் பின்பற்றாமல் அல்லது
பயிற்சி செய்யாமல்
தூய்மையைப் பெற முடியாது. [1]
இவற்றை விட்டு விட்டு,
பற்றில்லாமல், அமைதியாக,
தனியாக ஒருவர்
பிறப்பெடுக்க ஏங்குவதில்லை.
The Buddha:
He doesn't speak of purity
in connection with view,
learning,
knowledge,
precept or practice.
Nor is it found by a person
through lack of view,
of learning,
of knowledge,
of precept or practice.[1]
Letting these go, without grasping,
at peace,
independent,
one wouldn't long for becoming.
மகந்தியர்:
ஒருவர் கொண்டுள்ள
கருத்து,
படிப்பு,
அறிவு,
பின்பற்றும் விதி அல்லது
செய்யும் பயிற்சி ஆகியவை
அவர் தூய்மையைக் குறிப்பதில்லை
என்று ஞானி கூறுகிறார்.
அதே சமயம் ஒருவர்
கருத்து இல்லாமல்,
படிப்பில்லாமல்,
அறிவில்லாமல்,
விதிகளைப் பின்பற்றாமல் அல்லது
பயிற்சி செய்யாமல்
தூய்மையைப் பெற முடியாது
என்றும் ஞானி கூறுகிறார்.
அப்படியானால் இந்தப் போதனை குழப்பமாகத் தோன்றுகிறதே? [1b]
ஏனென்றால் கருத்தைக் கொண்டு
- கருத்தின் வழியாக -
ஒருவர் தூய்மை பெறுவதாகச் சிலர் கூறுகின்றனரே?
Magandiya:
If he doesn't speak of purity
in connection with view,
learning,
knowledge,
precept or practice.
and it isn't found by a person
through lack of view,
of learning,
of knowledge,
of precept or practice,
it seems to me that this teaching's
confused,
for some assume a purity
in terms of
— by means of —
a view.
புத்தர்:
ஏதோ ஒரு கருத்தை மனத்தில்
நினைத்துக் கொண்டு
கேள்விகள் கேட்கின்றீர்.
குழப்பம் நீர் புரிந்து கொண்டதில் தான்
உள்ளது.
[நான் சொல்வதன்] சாரத்தை
நீர் சிறிதும் புரிந்து கொள்ளவில்லை.
எனவே போதனை குழப்பமானதென
நினைக்கின்றீர்.
The Buddha:
Asking questions
dependent on view,
you're confused
by what you have grasped.
And so you don't glimpse
even
the slightest
notion
[of what I am saying].
That's why you think
it's confused.
Whoever supposes himself to be equal, superior or inferior
Would contend with others because of it.
But for one who is untroubled by these three modes of thought
There is nobody equal, superior or inferior.
ஒருவர் மற்றவருக்குத் தான் சமமானவர்,
அல்லது மேன்மையானவர், அல்லது தாழ்ந்தவர்
என்ற கருதிக் கொண்டால் அந்தக் கருத்தின் காரணமாக
மற்றவரோடு அவருக்குச் சிக்கல் உண்டாகும்.
ஆனால் இதுபோன்ற எண்ணங்களால் பாதிக்கப் படாதவர்
சமமானவர், மேன்மையானவர், தாழ்ந்தவர்
என்று யாரையும் கருதுவதில்லை.
Whoever construes
'equal,'
'superior,' or
'inferior,'
by that he'd dispute;
whereas to one unaffected
by these three,
'equal,'
'superior,'
do not occur.
எந்தக் கருத்தை ஒரு பிராமணன்
"இது உண்மை" அல்லது "இது பொய்மை" என்பார்?
யாருடன் வாதிடுவார்?
மற்றவரோடு ஒப்பிடுகையில் தான் 'சமம்' அல்லது 'சமமற்றவன்'
என்று கருதாத ஒருவர் யாரோடு சர்ச்சைக்குச் செல்வார்?
Of what would the brahman say 'true'
or 'false,'
disputing with whom:
he in whom 'equal,' 'unequal' are not.
வீடு துறந்து சுதந்திரமாகச்
சமூகத்தில் வாழும் முனிவர்
கிராமங்களில் யாருடனும்
நெருங்கிப் பழகுவதில்லை.
புலன் ஆசைகளைக் கைவிட்டவர்,
ஏக்கங்களைக் கைவிட்டவர்
மக்களோடு கலகம் விளைவிக்கும்
விவாதங்கள் நடத்த மாட்டார்.
Having abandoned home,
living free from society,
the sage
in villages
creates no intimacies.
Rid of sensual passions, free
from yearning,
he wouldn't engage with people
in quarrelsome debate.[2]
தவிர்க்க வேண்டிய செயல்களை
ஒதுக்கி வாழும் ஒரு மாமனிதர்,
அவற்றை எடுக்கவும் கூடாது;
அவற்றுக்காக வாதிடவும் கூடாது.
Those things
aloof from which
he should go about in the world:
the great one
wouldn't take them up
and argue for them.
சேற்றிலும், நீரிலும் இருக்கும் தாமரை
கறைபடியாமல் இருப்பது போல
முனிவர்,
- அமைதியை விளக்குபவர் -
பேராசை இல்லாமல்,
புலன் இன்பங்களாலும்,
உலக நிகழ்ச்சிகளாலும்
கறைபடியாதவர்.
As the prickly lotus
is unsmeared by water and mud,
so the sage,
an exponent of peace,
without greed,
is unsmeared by sensuality and
the world.
வாய்மையைக் கண்டவர்
தனது கருத்துக்களாலும் எண்ணங்களாலும்
அகம்பாவம் கொள்வதில்லை.
ஏனென்றால் அவற்றைத் தனது என்று
அவர் நினைப்பதில்லை.
அப்படிப்பட்டவரை அவர் ஒழுகும்
விதிகளையும், பயிற்சியினையும்
மதம் சார்ந்த அறிவோடு
வைத்து மதிக்கக் கூடாது.
அவர் வேட்கையினால்
ஈர்க்கப் படுவதில்லை.
An attainer-of-wisdom isn't measured
made proud[3]
by views or what's thought,
for he isn't fashioned of them.
He wouldn't be led
by action,[4] learning;
doesn't reach a conclusion
in any entrenchments.
மனக்குறிப்புகளோடு பற்றில்லாதவருக்கு
எந்தக் கட்டும் இல்லை;
விவேகத்தினால் விடுவிக்கப்பட்டவருக்கு
மயக்கம் இல்லை.
மனக்குறிப்புகளோடும், கருத்துக்களோடும்
பற்றுக் கொண்டோர்
உலகில் போகும் இடமெல்லாம்
சண்டையிட்டுக் கொண்டே வாழ்கின்றனர்.
For one dispassionate toward perception
there are no ties;
for one released by discernment,
no delusions.
Those who grasp at perceptions and views
go about butting their heads
in the world.
For one unattached to the notion ‘I am’
There are no bonds.
For one liberated through wisdom
There are no illusions.
Those attached to the notion “I am” and to views
Roam the world offending people.
* * *
விளக்கம்
Notes
1. இதன் கருத்து இதுவே:
ஒருவர் நற் காட்சியினை (நற் கருத்தினை), படிப்பை, அறிவை, ஒழுக்கங்களை, பயிற்சியை, மார்க்கமாக, கருவிகளாகப் பயன்படுத்தி (இவற்றோடு விவேகத்தையும் சேர்த்து) தூய்மை பெற வேண்டும். ஆனால் தூய்மை பெற்றபின் இந்தக் கருவிகளைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆழமான மன அமைதி, அங்கு எடுத்துச் செல்ல உதவிய மார்க்கத்தையும் கடந்துள்ளது.
புத்தர் இதற்கு ஒரு உவமை தருகிறார். இக்கரையில் ஆபத்து உள்ளது. அக்கரையோ பாதுகாப்பான இடம். அக்கரைக்குச் செல்ல ஒரு ஓடமோ, கட்டுமரமோ பயன்படுகிறது. ஓடத்தைப் பயன்படுத்தி நமது முயற்சியையும் சேர்த்து எப்படியோ அக்கரை சேர்ந்து விட்டோம். அக்கரை சென்றபின் அந்த ஓடம் நமக்குத் தேவைப் படுவதில்லை. எனவே அதனைத் தலையில் சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.
மற்றொரு விளக்கம்:
ஒரு எல்லை: துறவற வாழ்க்கை அதாவது வீடு துறந்து, ஒழுக்க விதிகளைப் பின்பற்றி, பிரமச்சரிய வாழ்க்கை மற்றும் சேவை செய்வது தான் பயிற்சியின் சாரம் என்று நினைப்பது.
மறு எல்லை: சிற்றின்ப வாழ்க்கையில் (எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல்) ஈடுபடுவதில் தவறேதும் இல்லை என்று நினைப்பது.
இந்த இரண்டு கருத்துகளோடும் பற்றுக் கொள்வது பிரச்சனையான செயல் என்றும் இவ்விரண்டையும் முழுமையாகப் புரிந்து கொண்டு அவற்றைக் கைவிடுபவர்கள் (பற்றுக் கொள்ளாமல் இருப்பவர்கள்) சம்சாரச் சுழத்திலிருந்து தப்புகின்றனர் என்றும் புத்தர் கூறுகிறார் (Ud.71-2).
The Pali of the first sentence puts the words for "view, learning, knowledge, precept, and practice" in the instrumental case. This case stands for the relationship "by means of" or "because of" but it also has an idiomatic meaning: "in terms of." (To keep the translation neutral on this point, I have translated with the idiom, "in connection with," which can carry both possibilities.) The second sentence puts the words for lack of view, etc., in the ablative case, which carries the meaning "because of" or "from."
If we assume that the instrumental case in the first sentence is meant in the sense of "by means of," then we are dealing — as Magandiya asserts — with plain nonsense: the first sentence would say that a person cannot achieve purity by means of views, etc., while the second sentence would be saying that he cannot achieve purity by means of no view, etc. The fact that the two sentences place the relevant terms in different grammatical cases, though, suggests that they are talking about two different kinds of relationships. If we take the instrumental in the first sentence in the sense of "in terms of," then the stanza not only makes sense but also fits in with teachings of the rest of the Pali discourses: a person cannot be said to be pure simply because he/she holds to a particular view, body of learning, etc. Purity is not defined in those terms. The second sentence goes on to say that a person doesn't arrive at purity from a lack of view, etc. Putting the two sentences together with the third, the message is this: One uses right views, learning, knowledge, precepts, and practices as a path, a means for arriving at purity. Once one arrives, one lets go of the path, for the purity of inner peace, in its ultimate sense, is something transcending the means by which it is reached.
In the stanza immediately following this one, it's obvious that Magandiya has not caught this distinction.
For further illustrations of the role of Right View in taking one to a dimension beyond all views, see AN 10.93, AN 10.96, and MN 24. (The analogy of the relay coaches in MN 24 actually seems more tailored to the issues raised by the Buddha's remarks in this discourse than it does to the question it addresses in that discourse.) See also sections III/H and III/H/i in The Wings to Awakening.
[1b]. மகந்தியர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். அவர் புரிந்துகொண்டது: மேற்கூறியவற்றால் (கருத்து, படிப்பு, அறிவு..) தூய்மை பெற முடியாது. இவை இல்லாமலும் தூய்மை பெற முடியாது. எனவே போதனை குழப்பமாக உள்ளதுபோல் அவருக்குத் தோன்றுகிறது.
புத்தர் நோக்கம் மார்க்கத்தோடு பிணைக்கப் படாதது என்று விளக்குகிறார். இது மகந்தியரைக் குழப்புகிறது. புத்தர் தூய்மை என்றால் என்ன என்ற விளக்கத்தைக் கூறுகிறார். ஆனால் மகந்தியர் தனிப்பட்ட மனிதர் தூய்மை அடைவதைப் பற்றிக் கேட்கிறார். [பாந்தே வரதா குறிப்பு]
The Buddha defines the goal as being untethered to the path. This confuses Magandiya to the extent that, whereas the Buddha gave him the definition of purity, his complaint concerns the attainment of purity. And whereas the Buddha describes the abstract quality of purity; Magandiya asks about purity as a personal attainment.
[Bhante Varada]
கோஸித விஹாரையில் தங்கியிருந்த போற்றுதற்குரிய ஆனந்தரை ஒருவர் பார்க்கச் சென்றார். ஆனந்தர் அவரிடம் புனித வாழ்வின் நோக்கம் ஆசையைத் துறப்பது என்றும், ஆசையைத் துறக்க ஆசைப்பட வேண்டும் என்கிறார். நோக்கத்தை அடைந்தபின் (நோக்கத்தை அடைய வேண்டும் என்ற) ஆசை முடிவு பெறுகிறது. அருகர் ஆக வேண்டும் என்ற ஆசை அருகர் ஆன பிறகு முடிவுறுகிறது. இந்தக் கருத்தை விளக்க ஆனந்தர் அவரைக் காண வந்தவரிடம், அவருக்கு விஹாரை வர வேண்டும் என்ற ஆசை இருந்ததா என்று கேட்டார். அந்த மனிதர், ‘ஆம்’ என்றார். விஹாரை வந்த பின் அந்த ஆசை மறைந்ததா என்று மேலும் கேட்டார் ஆனந்தர். மறுபடியும் அந்த மனிதர் ஆம் என்றே பதிலளித்தார். [பாந்தே வரதா குறிப்பு]
It is like the man who visited Venerable Ananda in Ghosita’s monastery (S.5.272). Venerable Ananda told him that the goal of the holy life is to abandon desire; and to abandon desire, one must desire to do so. Having achieved the goal, the desire ceases. The desire for arahantship ceases at arahantship (arahatte patte yo tajjo chando so paṭippassaddho). To illustrate this, he asked his visitor if he had earlier had the desire to visit the monastery. Of course, the man said yes. Then, when arrived, did the desire subside? Again the man said yes. [Bhante Varada]
2. An explanation of this stanza, attributed to Ven. Maha Kaccana, is contained in SN 22.3.
3. "Measured... made proud" — two meanings of the Pali word manameti.
4. "Action" here can mean either kamma in its general sense — i.e., the attainer-of-wisdom has gone beyond creating kamma — or in a more restricted sense, as ritual action. According to Nd.I, it refers to the factor of "fabrication" (sankhara) in the analysis of dependent co-arising (see SN 12.2).
* * *
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
©1994 Thanissaro Bhikkhu. See details English Source
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.