துறவிக்கு ஒரு கேள்வி 3

துறவிக்கு ஒரு கேள்வி

Question for the monk

அஜான் சோணா

Ajahn Sona

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

21. விவேகமற்ற கவனம் Top

பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை – பகுதி I

விசுத்திமார்க்கம் என்பது ஒரு விளக்கவுரை நூல். புத்தரின் போதனைகளைப் பற்றிச் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக ஆசிரியர்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு நூல். சுமார் ஐந்தாம் நூற்றாண்டில் இது முடிக்கப் பட்டது. மார்க்கம் என்றால் பாதை, விசுத்தி என்றால் தூய்மை. அதாவது தூய்மையான பாதை. இன்றும் தேராவாத மரபில் இந்த நூல் பெரிதும் போற்றப் படுகிறது.

ஞானம் பெறாத ஒருவரிடம் இந்த மூன்று தீய இயல்புகளும் உள்ளன - அவை பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகியன. முழுமையாக ஞானம் பெறாதோர் அனைவரிடமும் வெவ்வேறு அளவுகளில் இந்தத் தீய இயல்புகளைக் காணலாம். இவை மூன்றும் பௌத்த விளக்கங்களில் ‘திறனற்ற நிலைகள்’ என்று குறிப்பிடப் படுகின்றன. எதிர் மறையான இவ்வியல்புகளுக்கு, நேர்மறையான இயல்புகள் - பேராசை இல்லாமை, வெறுப்பு இல்லாமை மற்றும் அறிவுடைமை என்பனவாகும்.

பேராசை உடையோரிடம் உள்ள பிரச்சனை என்னவெனில் அவர்கள் ஒரு பொருளின் அழகைப் பார்த்து அதன் மீது விவேகமற்ற கவனம் செலுத்துவார்கள். அதாவது ஒரு பொருளை முழுமையாகப் பார்க்காமல் அதன் கவர்ச்சித் தன்மையை மட்டுமே பார்ப்பது. அந்தப் பொருளின் அழகை மட்டும் கவனிப்பது; பின் அந்த அழகின் மீது மட்டுமே கவனம் செலுத்துவது.

அதே போலக் கோபத்தோடு இருக்கும் போதும், வெறுப்போடு இருக்கும் போதும் அந்தப் பொருளின் குறையை மட்டும் மிகைப் படுத்தி அதன் மீது திறனற்ற கவனம் செலுத்துவது.

இறுதியாக அறியாமை இயல்புகொண்டோர் எந்தப் பொருளின் மீதும் கவனம் செலுத்தவே முடிவ தில்லை. ஒரு பொருளின் சரியான நிலையை அவர்களால் நிர்ணயிக்க முடிவதில்லை.

நமது பயிற்சியில் இந்தத் திறனற்ற இயல்புகளைப் பலவீனப் படுத்த வேண்டும். அவற்றை மேலும் தூண்டிவிடக் கூடாது. மேலும் கிளர்ச்சியடையச் செய்யக் கூடாது. ஆகவே பேராசை இயல்பு கொண்ட ஒருவர், தன்னைச் சுற்றிலும் ஏராளமான பொருட்கள் உள்ள சுற்றுப் புறத்தில் இருக்கக் கூடாது. ஏனென்றால் அத்தகைய சூழ்நிலை அவருக்கு அப்பொருட்கள் மீது மோகம் கொள்ள வழி செய்யும். அவர்களின் பிரச்சனையான பேராசை கொள்ளும் இயல்பு மேலும் தூண்டப்படும். அழகானவற்றின் மீது திறனற்ற கவனம் ஏற்படும். சாதாரணமாக ஒரு துறவி தங்குவதற்கு ஒரு சிறிய அறை ஒதுக்கப்படும். ஆனால் பேராசை கொண்ட துறவிக்குத் தங்குவதற்கு இடம் ஒதுக்கும் போது சிலந்திகளும், எலிகளும் வாழும் ஒரு பாழடைந்த குடிசையைத் தர வேண்டும். அங்கு செல்லும் பாதையும் கரடுமுரடானதாகவும், குடிசையில் வேடிக்கை பார்க்க எதுவும் இல்லாமலும் இருக்க வேண்டும். (சிரிப்பு). அப்படிப்பட்ட இடம் ஒதுக்கப்படும் போது அந்தத் துறவியின் இயல்பான பேராசை மேலும் தூண்டப்பட மாட்டாது. மேலும் அங்குள்ளவற்றின் மீது பற்றுக் கொள்ளவும் வழியேதும் இல்லை.

கோபமான இயல்பு கொண்ட ஒரு துறவிக்கு அத்தகைய இருப்பிடத்தை ஒதுக்கக் கூடாது. அவருக்கு மிகவும் துப்புரவான, அழகான குடிசை ஒதுக்கப் பட வேண்டும். அங்கு செல்லும் பாதையும் அழகான நேர்பாதையாக அமைந்திருக்க வேண்டும். கதவருகில் பூக்கள் பூத்துக் குலுங்க வேண்டும். நல்ல வண்ணப் படுக்கை விரிப்புடன் கூடிய அழகான படுக்கை இருக்க வேண்டும். இந்தத் துறவிக்கு விரைவில் எரிச்சல் அடையும் இயல்பு உள்ளதால் அதனை மேலும் தூண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே அவருக்கு இனிமையான சூழ்நிலை அமைந்த இருப்பிடம் ஒதுக்கப்பட வேண்டும்.

Unwise attention - Greed, hatred and delusion - Part I

Visudhimagga on different kinds of people and how they should meditate

Visuddhimagga is a commentarial text. It is an accumulation of teachers thoughts on the teachings of the Buddha over a thousand year period coming to its final form around the 5th century AD. Magga means path and Visuddhi means purification. It is still revered in the Theravada tradition.

We have the basic 3 attributes of any unenlightened personality - greed, hatred and delusion. These three are functioning to some degree in everyone who is not fully enlightened. You basically have your greed, hatred and delusion as your classic Buddhist description of negative states. And then the positive states would be non-greed, non-hatred and non-delusion.

So the greedy temperaments problem is that it pays unwise attention to the characteristic of the beautiful. It unwisely pays attention to a very partial characteristic. It extracts the beautiful from an object - the sign of the beautiful, a sign of the appealing from the object and then it pays unwise attention to it. When you are angry, when you are hateful you extract the fault from the object and you give unwise attention. The deluded temperament cannot sustain attention on the object at all. Does not get a realistic perception of the object at all.

What you want to do in training is to weaken these tendencies. You don't want to arouse them. You don't want to provoke them. A person who is of greedy temperament should not be in an environment where there are lot of objects around because they tend to obsess with that. That pulls up their defilement. Obsessive unwise attention to the beautiful .So they suggest say for a monk who is given a kuti - a little cabin to stay in, a monk of greedy temperament should be given a dirty little broken down shack with a lot of little mice and spiders and stuff around. Bad path to it and no view. (laughter). His tendencies won't be brought up. There will be nothing there to be attached to. Nothing to be obsessive about.

Whereas one of angry temperament should not be given that kuti. He should be given a very nice kuti, very clean nice straight path maybe even some flowers growing near the door. Nice bed with nice coloured cover . This person's problem is irritability. Anger and so forth comes up. You don't want to feed it with anything. So you want to make pleasant environment for this.

22. படுக்கையும், படுப்பதும் Top

பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை – பகுதி II - அவர்கள் படுக்கையும், படுப்பதும்

இந்த மூன்று இயல்புகளைக் கொண்டவர்களை அவர்கள் படுக்கையைப் பயன்படுத்தும் விதத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்று விசுத்திமார்க்கத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

ஒரு பேராசையுள்ளவர் எப்படித் தனது படுக்கையை வைத்திருப்பார்? முதலில் அவர், படுக்கை மிகவும் நேர்த்தியானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். அழகான விரிப்புகளில் சுருக்க மில்லாமல் இருக்க வேண்டும். போர்வைக்குள் நுழையுமுன் போர்வையை அழகாக விலக்கி அதற்கடியில் காலை நீட்டிப் போர்வையை மெதுவாக இழுத்துத் தங்கள் மீது போர்த்துக் கொள்வார்கள். இவற்றை மெதுவாகவும், மென்மையாகவும் செய்வார்கள். மேலும் படுக்கும்போது உடுத்துக் கொள்ளும் ஆடையும் வசதியானதாக இருக்கும். உறங்கும் போதும் பார்க்க நன்றாக இருக்கவே விரும்புவார்கள். படுக்கப் போகும் முன் மிகவும் தூய்மையாகவே படுக்கைக்குப் வார்கள். தலையணையைத் தட்டி, அழகு படுத்திப் பின்னர் துயில் கொள்வார்கள்.

கோபமான மன இயல்பு கொண்டவரோ, போர்வையைச் சட்டென்று இழுத்துப் படுக்கையில் நுழைந்து, முட்டியைக் கட்டிலில் இடித்துக் கொண்டே படுத்துக் கொள்வார். (சிரிப்பு).

பேராசை இயல்பு கொண்டவர், நடக்கும் போது காலைத் தரையில் கவனமாக வைத்து நடப்பார்கள். கோப இயல்பு கொண்டவரோ, காலைத் தரையில் சத்தம் எழுமாறு தேய்த்துக் கொண்டு நடப்பார்கள்.

அறியாமை அல்லது ஏமாற்ற இயல்பு கொண்டவர்கள் எப்படிப் படுக்கப் போவார்கள்? போர்வையை அகற்றி அதற்கடியில் நுழைவதற்குள் எதற்காக அங்கு வந்தோம் என்பதையே மறந்து விடுவார்கள். அவர்கள் திரும்பிப் போகும் வழியில் தொள தொள வென்று அணிந்திருக்கும் கால் சொக்காய்களும் உடைகளும் கழன்று விடும். பின் மீண்டும் படுக்கைக்கு வந்து படுக்கையில் படுத்தவுடன் விளக்கை அணைக்க மறந்து விட்டதை உணர்வார்கள். சரி. விளக்கை அணைக்கலாம் என்று போகும் போது தூணில் மோதிக் கொள்வார்கள். மீண்டும் படுக்கைக்கு வந்து அதன் மீது தொப்பென்று விழுவார்கள். பின் ஏதோ அரைகுறையாகப் போர்த்துக் கொண்டு படுத்துக் கொள்வார்கள். இரவில் தூங்கும் போது படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டே படுக்கையின் மறு பகுதிக்குச் சென்றுவிடுவார்கள். ஏன், சில சமயம் படுக்கையிலிருந்து கீழே விழுந்தும் கிடப்பார்கள். காலையில் அவர்கள் படுக்கை தாறுமாறாகக் கலைந்து, ஒழுங்கற்றுக் கிடக்கும்.

பேராசை இயல்பு கொண்டவர்கள் மிகவும் நிதானமாகச் செயற்படுவார்கள். எல்லாம் அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும். கோப சுபாவம் கொண்டவர்கள் எல்லாவற்றையும் வீசி எறிவார்கள். 'அட! மிக மிகச் சூடாக இருக்கிறது! அட! மிக மிகக் குளிராக இருக்கிறது! என்று சத்தமிட்டு எரிச்சல் அடைவார்கள். (சிரிப்பு)

ஒருவரின் மனத்தைத் தெரிந்து கொள்ள முடியா விட்டால் இவற்றாலெல்லாம்தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியும். பேராசை இயல்பு உடையவர்கள் தரையைப் பெருக்கும் போது மிகவும் ஒழுங்காக ஒரு முனையில் துவங்கி மறுமுனைவரை சீராகப் பெருக்குவார்கள். அழகாகப் பெருக்கி, குப்பை கூலங்களை எல்லாம் ஒரு மையத்தில் சேர்த்து வைத்துப் பார்ப்பதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். கோப சுபாவம் கொண்டவரோ அழுத்தத்தோடு பெருக்குவார்கள். கரடு முரடாகத் தரையைத் தேய்த்துக் கொண்டு பெருக்குவார்கள். அறியாமை இயல்பு கொண்டவரோ ஒரு இடத்தில் பெருக்கத் துவங்கி, பின் அதை மறந்து விட்டு மீண்டும் மறு முனையில் பெருக்கத் துவங்குவார்கள். ஏற்கனவே இங்கும் அங்கும் சேர்த்த குப்பை குவியல் மீதே நடந்து கொண்டிருப்பர்கள். பின் குப்பை தாறுமாறாக கிடப்பதைப் பார்த்து மீண்டும் முதலிலிருந்து துவங்குவார்கள்.

How they make their beds

Greed, hatred and delusion - Part II From the Visuddhimagga

They describe the characteristics of some of these temperaments. How a greedy person makes their bed. How he gets into bed for instance. First of all they like a very neat bed. They like to make their bed in a very very pretty way. When they bring the covers back they bring it back in a nice way. They take their time. And they wear very comfortable clothing. Even when they are sleeping they like to look good. And they go to bed very clean. They climb in. They lift the covers very nicely, adjusting themselves. They fluff the pillow make it nice. And wiggle in.

The angry person rips back the covers, gets in while banging their knee. (laughter) When they walk, the greedy person walks carefully setting their feet down. The angry person scraps their feet across the floor making a sound as they do this.

The deluded temperament when they get into bed. They flip back the covers and they forget. They go across and then half way back their pants fall down and as they get into bed they realize they left the lights on. Get up go turn the light off and walk right into the wall. When they sleep they cast themselves onto the bed. They fall upon, they throw themselves upon the bed. And wrap anything over them and then at night when they sleep they move and they sometimes will end up down on the other side of the bed and even off thebed. In the morning the bed is a jumble of things.

The greedy person is very composed in that they like everything very orderly. They like everything arranged. The angry person also throws things . Too god-damned hot! Too god-damned cold! It is a very harsh kind of thing. (laughter)

If you don't have access to peoples minds, these are ways characteristics of identifiying them. When they sweep the floor, the greedy person does it in a very orderly pattern. Very nicely. They enjoy everything collected in the centre. The angry person sweeps very hard. Harshly scrapping and so forth. The deluded person starts here and then forgets and then starts over there steps back into the pile and then sweeps throught the pile and then starts again etc.

23. தீர்வு Top

பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை – பகுதி III

விசுத்திமார்க்கத்தில் குறிப்பிடப் பட்டது:

பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகிய தீமைகளை நாம் சரி செய்ய வேண்டும். கோபமான மனிதனின் எரிச்சலைத் தகர்த்தெறிய வேண்டும். அவர்களைச் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்ட இடத்தில் வாழவைக்க வேண்டும். அவர்கள் நடக்கும் போது கவனித்து எப்படி நடப்பது என்று நடக்கப் பயில்விக்க வேண்டும். காலைத் தேய்த்தபடி நடக்காமலும், தரையில் உதைத்தபடி சத்தம் ஏற்படுத்தாமல் நடக்கவும் பயில்விக்க வேண்டும். உடை அணியும் போது அழகாக அணிந்துகொள்ளப் பயிற்று விக்கப்பட வேண்டும்.

அவா உள்ளவருக்கு ஒட்டுப் போட்ட கிழிந்த துணிகளை அணியக் கொடுக்க வேண்டும். அறியாமையில், குழப்பத்தில் வாழ்பவருக்கும் ஒரு ஒழுக்கமான சூழ்நிலையில் வாழச் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். அவர்கள் தங்கள் இருப்பிடத்தில் தனியாக அமர்ந்து தியானிக்கும் போது கூட, உடைகளை முறைப்படி ஒழுங்காக அணிந்திருக்கப் பழக்கப் படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது அவர்கள் கவனத்தை அதிகரிக்கச் செய்யும், பின் அவர்கள் மனத்திலும் ஒரு ஒழுக்கநிலை தோன்றி நிலைக்கும்.

அவா, வெறுப்பு மற்றும் அறியாமையில் வாழ்பவர்கள் உடுத்தும் உடைகளிலும், உண்ணும் முறையிலும் வாழும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இவையெல்லாம் கற்பிக்கும் முறைகள். ஆனால் இவ்வாறு கற்பிப்பது எப்போதும் சரியாக வேலை செய்யாது. இவை தெளிவாகக் கற்கும் முறையென்று சொல்வதற்கில்லை. முழுமையாக ஞானம் பெற்றவரால் தான் சரியாக மற்றவர் மனத்தைப் புரிந்து அவர்களுக்குத் தகுந்த கற்கும் முறையைக் கூறமுடியும். மற்றவர் மனத்தை நேரடியாகத் தெரிந்து கொள்ள முடியாதென்றால் அவர்கள் குணாதியங்களை எப்படித் தெரிந்து கொள்வது? அது அவர்கள் பேச்சிலிருந்தும் நடத்தையிலிருந்தும் தான் தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே அவா உள்ளவருக்கு அசூப தியானம் அதாவது ஒரு பொருளின் அழகற்ற தன்மை மீதான தியானம் (உடலின் 32 பாகங்கள் மீது தியானிப்பது போல) செய்யக் கூற வேண்டும். வெறுப்புள்ளவருக்கு அழகற்ற தன்மைமீது தியானம் செய்யச் சொல்வது சரியல்ல. அவர்கள் ‘அன்பு தியானம்’ செய்ய வேண்டும் (மெத்தா). அறியாமையில், குழப்பத்தில் உள்ளவர்கள் அவர்கள் கவனிப்புச் சக்தியை அதிகரிக்கும் தியானங்களைச் செய்ய வேண்டும். மிகவும் கூர்மையான அறிவுள்ளவர்களுக்கு உடலை நான்கு பூதங்களாகப் பிரித்துச் செய்யும் தியானம் செய்யச் சொல்ல வேண்டும். அதாவது உடலை வெறும் கெட்டித்தன்மை, திரவத்தன்மை, காற்று, வெப்பம் என்று ஆராயும் தியானம். இந்தத் தியானம் அறிவுக் கூர்மையுள்ளவர்களுக்குத் தகுந்ததெனக் கூறப் படுகிறது.

விசுத்திமார்க்கத்தில் 40 வகையான தியானங்கள் விளக்கப்பட்டிருகின்றன. ஒவ்வொருவரின் குணாதியசங்களுக்குத் தகுந்தார்ப்போலப் பொருத்தமான தியானங்களைச் செய்ய வேண்டும். பக்தியுள்ளவர்கள் புத்த, தம்ம, சங்கத்தின் இயல்புகளை நினைத்துத் தியானம் செய்யலாம். தாய்லாந்தில் கிராமவாசிக்கு தியானம் செய்ய ஒரே வார்த்தை மட்டும் கூறச் சொல்வார்கள்: 'புத்தா.' பாத்திரம் கழுவும் போதும், நடக்கும்போதும் 'புத்தா' என்று மட்டும் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அடி எடுக்கும் போதும் சொல்ல வேண்டியது, புத்தா... புத்தா... புத்தா… அல்லது 'புத்தோ'. இந்தக் கிராமவாசிகளுக்கு ஆழ்ந்த பக்தி இருப்பதால் அவர்களுக்கு இது தகுந்த தியானமாக இருக்கும்.

மேற்கத்திய நாட்டவர்களுக்கு இது தகுந்த தியானம் அல்ல. ஏனென்றால் அவர்களுக்குத் துவக்கத்தில் அதிக பக்தி அல்லது நம்பிக்கை இருக்காது. அவர்கள் இந்தச் சமயத்தை இப்போது தான் ஆராயத் துவங்கி இருக்கின்றனர். இன்னமும் அதிக நம்பிக்கை வரவில்லை. 'புத்தா' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அது அவர்களை மெய்சிலிர்க்க வைப்பதில்லை. அவர்களுக்கு ஏன் தியானம் செய்ய வேண்டும் என்று தெளிவான விளக்கம் தரவேண்டும். அதே சமயம் மேற்கத்தியர் மிகவும் சிந்தனையில் ஈடுபடும் குணாதிசயம் கொண்டவர்கள். நமது (மேற்கத்தியரின்) பிரச்சனை எந்நேரமும் சிந்தனையில் இருப்பது தான். ஆக மூச்சைக் கவனிக்கும் தியானம் மேற்கத்தியர்களுக்கு மிகவும் உகந்தது. இந்தத் தியானம் தொடர்ந்து சிந்திப்பதைச் சற்றுக் கட்டுப் படுத்துகிறது. மூச்சின் மீது மட்டும் கவனம் செலுத்தும் போது வேறு சிந்தனை அவசியம் இல்லை.

ஆக ஒரே மாதிரியான தியானம் அனைவருக்கும் பொருந்தாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தியானம் மிகப் பொருத்தமாக அமையும். ஆனால் அது என்ன தியானம் என்பதை ஒரு புத்தரால் தான் கூறமுடியும். ஆனால் ஒருவரை நன்கு புரிந்திருக்கும் ஒரு திறமையான ஆசிரியர் புத்தரே தரக்கூடியது போன்ற தியானத்தைத் தேர்ந்து சொல்ல முடியும். திறமையான ஆசிரியர் தரும் தியானப் பயிற்சி, நாமாகவே தேர்ந்தெடுப்பதை விடப் பொருத்தமானதாக இருக்கும். அதனால் தான் திரிபிடகம் மிகவும் நீண்டதாக உள்ளது அது பற்பல போதனைகளும், பயிற்சி முறைகளும் விளக்கங்களும் உள்ளடக்கியது. புத்தர் வேவ்வேறு மக்களுக்கும் பலதரப்பட்ட போதனைகளை உபதேசித்தார். எனென்றால் ஒரே பயிற்சி அனைவருக்கு பொருந்துவதில்லை.

பொதுவாக ஒருவரைப் புரிந்து கொள்வதற்கு நீண்ட காலம் ஆகும் என்று புத்தர் கூறினார். மேலும் அவர்களைப் பல சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் கவனித்த பின்னர்தான் அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

Remedies to overcome

Greed, hatred and delusion - Part III

So you want to remedy these things. Take away any irritability of the angry person. They should live in a very orderly environment. They should be trained to pay attention to how they walk. To not thump their feet, not scrap their feet. When they put their robes on put them on gently. The greedy person should be given bad robes with patches. The deluded person should also be taught to live in an very orderly environment. When they practice in their kuti even when they are alone they are encouraged to wear ther robes formally. And thus encourage them to increase sustained attention and order in the mind.

The greedy, hateful and deluded need some attention to specific clothing, specific ways of eating and specific ways of dwelling.

These are kind of teaching suggestions. However they admit it is not always the case. It is not so black and white and linear. And the commentaries state keeping in mind only 'one who has aquired penetration of minds can accurately recognize and name a temperament.' This is useful to choose a suitable meditation subject. If you cannot or don't have the unusual capacity to embrace mind with mind - where the person simply looks the persons mind knows their mind viz the temperament and then assigns them suitable practice meditation -then the thing is to see how they speak and how they act and by inference you can get their temperament.

So for the greedy person you want to assign them asuba meditation i.e. meditation on the unbeautiful aspect of things so that they focus on the unbeautiful (such as the 32 parts of the body). For the hateful it is not wise to be focusing on the negative sides or unbeautiful sides of things. They should practice loving kindness a lot. For the deluded they need simple and sustained attention practices to increase their attention. For the intelligent, such topics as the four elements, analysing inside and outside as mere liquid, solid, air element and fire element. This is said to be suitable for intelligent temperament.

So there are about 40 topics of meditation described in the Visudimagga. They have various ones are suitable for certain temperaments. Reflections on the Buddha, the Dhamma and the Sangha are good for the faith temperaments. In Thailand they will give a villager a single word to meditate on. Buddha. Just say Buddha when you are doing the dishes or when you are walking. Each step you say, 'buddha.. buddha.. buddha..' or they say 'buddho'. Because many of them have a whole lot of faith that is a very suitable topic for them. In the west that is not a suitable topic because lots of people don't have any faith to begin with. They are more exploring the whole notion. Far from having lot of confidence. The word 'buddha' does not send shivers up their spine. They need some kind of rational direction for why you would meditate. And at the same time what we (westerners) have a tendency to proliferate. We can't stop thinking and that is our problem and so such topics as breath meditation is good for the cutting of endless proliferations of thoughts because there is no need to think. By paying attention to just that breath you may be able to cut that off.

That is why there is no one silver bullet technique to give to everybody and which works for everybody. Not the case. There is a perfect meditation for each person. What that is only a Buddha can tell you. But a teacher who has experience and has some capacity might be able to give you the same topic as the Buddha would give you. But the topic they will give you will be at least be better than picking at random. Why is the Pali Canon so long if there is only one topic? It is full of many many varieties of things. And the Buddha gave various teachings to various people because everything doesn't work for every person at every stage.

The buddha in general says that to know another person you have to know them for a long time and you have to see them under a lot of different circumstances to get a full sense of who they really are.

24. நிலைகள் Top

பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை – பகுதி IV

யாரும் முழுமையாகப் பேராசை கொண்டவர்கள் அல்ல. யாரும் முழுமையாக வெறுப்புக் கொண்டவர்களும் அல்ல. யாரும் முழுமையாக அறியாமையில் மூழ்கியவர்களும் அல்ல. இம்மூன்றில் ஒன்று ஒருவரின் தனித்தமையில் (personality) சற்றுப் மேலோங்கித் தோன்றலாம். இம்மூன்றும் ஒவ்வொருவரிடத்திலும் கொஞ்சமாவது இருக்கும். இம்மூன்றையும் வரிசைப் படுத்தும் வகையில் புத்தர் வெறுப்பு பெரும் கறை என்கிறார். பேராசை சற்றுக் குறைவான கறை என்றும் அறியாமை பெரும் கறை என்றும் கூறுகிறார். ஆனால் வெறுப்பு ஒரு பெரும் கறையென்றாலும் அதைச் சுலபமாக விலக்கி விடலாம். மூன்றில் அது தான் விரைவில் நீக்கக் கூடியது. பேராசையில் அதிகக் கறை இல்லாவிட்டாலும் அதை நீக்குவது கடினம். அறியாமை பெரும் கறை மட்டுமல்லாமல் அதை நீக்குவதும் மிகக் கடினம்.

முதலில் எரிச்சல், கோபம் போன்ற குணாதிசயங்களை நீக்க முற்படலாம். அதில் வெற்றி காண்பது சற்றுச் சுலபம். பின் நமது விவேகத்தாலும் முன்னேற்றத்தைக் காணலாம். கோபத்தை வெளிக் காட்டுவதால் அதனை நீக்க முடியாது. கோபத்தை வெளிக் காட்டி அதை உள்ளத்திலிருந்து நீக்க முடியும் என்பது புத்தரின் போதனைகளுக்கு முற்றிலும் முரண்பாடானது. நாம் எதைச் செய்தாலும் திரும்பவும் அதையே செய்ய நமக்குத் தோன்றும். ஆகவே கோபத்தை வெளிக் கொண்டுவரும்போது (சத்தம் போடுவதும், பொருட்களைத் தூக்கி எறிவதும்) நம்மை அதனையே மீண்டும் செய்யத் தூண்டும். பின் அது போன்ற நடத்தைகள் அதிகரிக்குமே ஒழியக் குறையாது. கோபம் தோன்றுவதைத் தடுக்க வேண்டும். கோபம் உண்டாகக் கூடாது. அது தோன்றாத சமயத்தில் நாம் செய்யவேண்டியது அதற்கு நேர்மறையான நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வதுதான். ஏனென்றால் நல்லெண்ணம் மனத்திற்கு இன்பம் தருகிறது. வெறுப்பும், கோபமும் மனத்திற்குத் துன்பம் தருகின்றன. அதனால் தான் வெறுப்பைச் சுலமாக நீக்கமுடியும் என்கிறோம். இயல்பாகவே அது மனத்தில் துன்பம் உண்டாக்குவதால், அதை நீக்க நமக்கு ஆர்வம் உள்ளது. வெறுப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்று நமக்கு இயல்பாகவே தோன்றுகிறது. எனவே நல்லெண்ணத்தோடு இருக்கும்போது அது வெறுப்பிலிருந்து நாம் தொலைதூரத்தில் உள்ள ஒரு மனநிலையை ஏற்படுத்துகிறது. எனவே தொடர்ந்து நல்லெண்ணத்தோடு இருக்கப் பயிற்சி செய்வதால் மனத்தில் நல்லெண்ணம் இருக்கும் வரை அந்த நிலையிலிருந்து கோப நிலைக்குச் செல்வதற்கு ஒரு பெரும் மாற்றம் தேவைப் படும். ஆனால் நடுநிலையில் இருந்தால் கூட அதாவது கோபமும் இல்லாமல் நல்லெண்ணமும் இல்லாத நிலையிலும் கோப நிலைக்குச் செல்வது வெகு தூரத்தில் இல்லை. எனவே முடிந்த அளவு கோப நிலையிலிருந்து தூரத்தில் இருக்க முற்படுவது நல்லது. நல்லெண்ணத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும். அதே சமயம் நற்கடைப்பிடியும் அவசியம். மனக்கவனமும் அதிகரிக்க வேண்டும். கோபப் படும் பலரும் இதை அறிந்து கொள்வதில்லை. எப்போதுமே கோபமாக, எரிச்சலோடு இருப்பவர்கள் தாங்கள் ஒரு நோய் வாய்ப்பட்டிருப்பதை அறிவதே இல்லை. உங்களுக்குச் சரியில்லா நிலை இது. ஆனால் அது அசாதாரண நிலை என்பதை உணர்வதில்லை. எப்போதும் எரிச்சலோடும், கோபத்தோடும், அழுத்தத்தோடும் இருப்பதே சாதாரண நிலையாகி விடுகிறது. குறைகூறுவது.. குறைகண்டு பிடிப்பது.. இகழ்வது போன்று அவர்கள் வெறுப்பு உருவெடுக்கும். சமுதாயம் இதை மிகவும் பாராட்டுகிறது. 'அவன் அறிவாளி. சுலபமாகக் குறை கண்டு பிடித்து விடுகிறான். எப்படிக் கேலி செய்கிறான் பார்.' இது பாராட்ட வேண்டிய குணாதிசயம் அல்ல. குறை கண்டு பிடிப்பதற்குச் சற்று அறிவு தேவை என்றாலும் எப்போதும் இகழ்வதும் குறைகாண்பதும், மற்றவரைத் தரம் தாழ்த்தி இகழ்வதும் நல்லதல்ல.

ஒரு நல்ல பழமொழி உண்டு, "ஒரு தானியக் களஞ்சியத்தை (barn) கழுதைகூட உதைத்துச் சேதமாக்கி விடலாம். ஆனால் அதனைக் கட்டுவதற்கு ஒரு நல்ல தச்சன் தேவைப் படுகிறான்." ஆக இந்த இகழும் இயல்பைக் கட்டுப் படுத்த வேண்டும். அது திறமையான செயலே இல்லை. சேதம் செய்வது எளிது. ஒன்றை உருவாக்குவதோ மிகக் கடினம்.

Greed, hatred and delusion - Part IV - Ranking

No one is exclusively greedy. No one is exclusively hateful. No one is exclusively deluded. They could be dominant parts of the personality. Everybody will have a little elements of these. In order of rank, Ill will is said by the Buddha to be a great stain. And greed is a lesser stain and delusion is a great stain. Ill will though it is a great stain is easily got rid of. It is the easiest one to get rid of. Greed is a lesser stain but is very difficult to get rid of. And delusion is a great stain and very difficult to get rid of.

Get rid of irritability and anger so forth. They can start there. It is likely they will have success with that. And they will have much more better judgment. You don't get anger out by expressing it. The teaching of he Buddha is absolutely against that - the notion that you can get rid of anger by expressing it. Whatever you do, you tend to do it again. If you inflame these tendencies you will tend to do it again. You will increase them. You don't want to begin to get angry. You want to prevent anger before it comes up. You don't want to be angry. And in the meantime you spend the time cultivating the opposite ie. good will. Because good will feels good. ill will feels bad. That is why it is easy to get rid of. It is a intrinsically bad feeling so you are highly motivated (to get rid of it). It is very easy to want to get rid of that ill will. And if you are in a state of good will it is a long way to anger. So if you keep yourself in good will there is whole transition to get to anger but if you are in a state even if a state of neutrality anger is not that far away. So you keep yourself as far away as you can from it. Keep reinforcing good will.. And of course mindfulness has to increase. Lot of people who are angry don't know it. If you are used to living with it all the time you don't realize you are sick all the time. You are not feeling well. You forget that that is not normal. It becomes normality for you - irritability, anger, tension. It takes the form of criticism and fault finding. This is often applauded in society. 'Oh! he is very sharp, very critical sarcastic.' etc. This is not to be praised. There is intelligent assessment of things but this obsession with faults and seeing all the problems just tearing things down (is not good). There is a nice saying, "A jackass can kick down a barn, but it takes a carpenter to build one." You have to disparage the critical faculty to some degree. You have to realize it is not so smart. Negative destructive stuff is very easy but constructive stuff not so easy.

25. தொழில் துவங்க விரும்புபவருக்குத் தந்த அறிவுரை Top

புத்தர் இல்லறமக்களுக்குப் பல அறிவுரைகள் தந்தார். ஒரு சமயம் புத்தரைப் பார்க்க வந்த ஒருவர் அவரிடம், 'ஐயா, நான் ஒரு தொழில் துவங்க விரும்புகிறேன். அதைத் துவங்க ராசி பலனெல்லாம் பார்த்து ஒரு நல்ல நாளைக் கூறுங்கள்," என்று கேட்டார்.

புத்தர் இவ்வாறு கூறினார்: "அது இருக்கட்டும். முதலில் உனக்கு அந்தத் தொழில் நன்றாகத் தெரியுமா?"

"ஓ, நான் அதை நன்றாக ஆராய்ந்திருக்கிறேன். மற்றொருவரிடம் சேர்ந்து வேலையைக் கற்றுக் கொண்டு விட்டேன்."

"உன்னால் தினசரி பன்னிரெண்டு மணி நேரம் வேலை செய்ய முடியுமா?"

"அதில் பிரச்சனையே இல்லை. நான் தினசரி பன்னிரெண்டு மணி நேரம் வேலை செய்யத் தயாராக இருக்கிறேன்."

"அப்படியென்றால் இன்றே நல்ல நாள். ராசி பலனுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டார் புத்தர்.

புத்தர் சொந்த முயற்சியாலும், தகுதியினாலும், பொறுமை, ஆர்வம், மன உறுதியினாலும், பொது அறிவினாலும், எப்போது பணம் சேமிக்க வேண்டும், எப்படி வீணாக்கக் கூடாது என்பதையெல்லாம் வைத்துத்தான் இல்லற மனிதர் தங்கள் வாழ்வை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இவையெல்லாம் 'இல்லறத்தாருக்குத் தந்த அறிவுரை' என்ற சூத்திரத்திலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதில் புத்தர், "உனது அடிப்படைச் செலவுகளை யெல்லாம் (தொழில் செலவு, குடும்பச் செலவு) சரிபார்த்த பின்னர், மீதமுள்ள பணத்தை நான்காகப் பிரித்துக் கொண்டு, ஒரு பாகத்தைத் தொழில் வளர்ச்சிக்காகவும், ஒரு பாகத்தைச் சேமிப்புக்காகவும் ஒரு பாகத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கவும், கடைசிப் பாகத்தைத் தானத்துக்காகவும் பயன்படுத்து." என்று இல்லறத்தாருக்கு அறிவுரை கூறுகின்றார்.

புத்தர் கூறும் மிகவும் காரிய சாத்தியமான (practical) பயனுள்ள அறிவுரை இது. கடினமாக உழைக்க வேண்டும். எதைச் சம்பாதித்தாலும், அது உடல் உழைப்பாலும், அறிவாலும் சம்பாதித்ததாக இருக்க வேண்டும். ஒருபோதும் யாரையும் ஏமாற்றக் கூடாது. எடைகளில், அளவுகளில் ஏமாற்றுவது தவறு என்றும் கூறினார். ஆக நற் தொழில் என்ற அட்டாங்க மார்க்கத்தின் கருத்துப்படி தொழில் புரிய வேண்டும். ஆயுதங்கள், நச்சுப் பொருள் சம்பந்தப்பட்ட வணிகம் புரிவது, அடிமைகளை வாங்கி விற்பது, மிருகங்களை இறைச்சிக்காகக் கொல்வது போன்ற தொழில்களைச் செய்யக் கூடாது என்றார். இவை தவிர்த்த பிற தொழில்கள் செய்வதில் பிரச்சனையேதும் இல்லை.

Advice to an entrepreneur

The Buddha has a lot of advice for lay people, householders. Somebody came to the Buddha at one time and said, 'Can you give me an auspicious day like when the stars are all lined up for opening this business.'

The Buddha said. 'First though, how well do you know the business?'

'Oh, yeah. I have studied it. I was apprenticed in it. '

'Are you willing to work 12 hour days?'

'I am willing to work 12 hour days. No problem.'

The Buddha said, 'Today is the auspicious day. What do the stars got to do with it?'

He was very insistent that by personal effort, personal competence by these qualities of patience and energy and determination and common sense and knowing when to save your money when not to blow it foolishly and so forth that comprise the properly lived lay life. So we have a whole sutta on this called the 'Advice to the layman' and he talks about everything from, 'After you have taken care of the basic (business and family) expenses divide the remaining portion of your money into four parts. One part is to be invested in business for future. One part is strictly a saving. One part is for pleasure. Enjoy it. The last part is for charity.'

Very practical, useful advice. You should work hard. Whatever you gain should be won by strength of arm and intelligence. You should never cheat. So we have a concept of Right Livelihood. Don't get into a livelihood selling weapons, selling poisons, trafficking in humans, slaughtering animals, cheating with weights and measures. Avoid those kinds of things. But anything else is alright.

26 இல்லற வாழ்க்கையும் விடுதலையும் Top

இல்லற வாழ்க்கை வாழும் போது அதனைச் சரியாக நடத்த வேண்டும். இல்வாழ்வில் கவனக் குறைவாக இருக்கக் கூடாது. அதிலிருந்து வெளியே வர முடியவில்லை யென்றால் (துறவு நிலைக்கு) அதில் முழுமனத்தோடு ஈடுபட வேண்டும்.

கேள்வி: இல்லற மனிதராக இருக்கும் போது விடுதலை அடைய முடியுமா? எப்படி? உலக வாழ்க்கையில் உள்ள தேவைகளும், நோக்கங்களும் நம்மைக் கட்டிப் போட்டு விடாதா?

கண்டிப்பாக முடியும். மனபாவனை செய்யும் போது நீங்கள் உலக வாழ்க்கையில் கொண்டுள்ள நோக்கங்கள் (ambition) சற்று மாறு படலாம். சில முட்டாள் தனமான, பயனற்ற நோக்கங்கள் வேறோடு அகற்றப்படும். அதாவது, 'நான் 29 வயதுக்குள் 100 கோடி சம்பாதிப்பேன்,' என்பது போன்ற குறிக்கோள்கள்.

சற்றே நுண்ணறிவு இருந்தால் அப்படிப்பட்ட கோடீஸ்வரனாவதில் பல பிரச்சனைகள் அடங்கியிருப்பதை அறியலாம். நான் ஏன் அவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்? என்னிடம் இருக்கும் பணமே எனது வாழ்க்கைக்குப் போதுமானது. இப்படி நினைப்பது நல்லது. அப்படிப்பட்ட எட்ட முடியாத பேராசைகள் தேவை தானா? அதைவிட நான் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறேன். அதை எப்படி நிறைவேற்றுவது? நாம் அதிக நேரம் உழைத்துப் பொருள் சேர்த்துச் சிங்கப்பூருக்கு உல்லாசப் பயணம் செல்வதற்குப் பதிலாகத் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யலாமே! இதுதான் சிறந்த தேர்வு.

புத்தரின் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் (இல்லறத்தார்) ஞானம் பெற்றனர். முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, ஏன் அறவண அடிகளாகக் கடைசி ஞான நிலையையும் அடைந்தனர்.

Laylife and liberation

If you are living the lay life do it right. You can't be negligent. If you can't get out of it, get Into it (put your heart into it).

Q: Can you as a lay person aspire towards liberation? How? If you have aspirations and needs and goals that tie you up?

Exactly. You have to meditate and it is going to undercut some of your ambitions. It really is going to undercut some of your foolish ambitions, wasteful ambitions. 'I am going to be a millionaire before I am 29.' This kind of stuff.

With a little bit of wisdom you realize it is too much trouble to be a millonaire. Why do I want to be a millionaire. I have got enough money. It is alright. It is wise. Undercut some of those sheer worldy ambitions and I would rather be a happy person. How am I going to be that? Instead of working overtime so I can go to Las Vegas for that rip I think I will spend an hour meditating. Very good choice.

In the time of the Buddha there were thousands and thousands of lay people who attained enlightenment. First stage, second stage, third stage and even Arahantship.

27. சீலமும் வாழ்க்கையில் சுவையும் Top

சீலத்தைக் கடைப் பிடியுங்கள். அது வாழ்க்கையைச் சுவையுள்ளதாக்கும். சில சமயம் நீங்கள் சீலங்களைக் கடைப் பிடிப்பதால் உங்களது ஒரு கை முதுகோடு சேர்த்துக் கட்டப் பட்டுள்ளதாகவும், கடைபிடிக்காதோர் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருப்பதாகவும் தெரியலாம். ஆனால் இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாகவே வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது. ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை 'வலை' இல்லாமல் விளையாடும் டென்னிஸ் விளையாட்டுப் போல. அதில் பயன் ஒன்றும் இல்லை. ஒரு எல்லை மீறாமல் வரையறையுடன் வாழ்க்கை நடத்துவதனால் வாழ்க்கை என்னும் விளையாட்டில் சுவாரஸ்யம் ஏற்படுகிறது.

ஒழுக்கங்களை மீறாமல் இருக்கத் திறமையான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். வேகமாகச் செயற்பட வேண்டும். சரியான தீர்ப்பை விரைவாக எப்படித் தயாரிப்பது? பேச்சு வேகமாக நடைபெறுகிறது அல்லவா? முன்கூட்டியே பல பதில்களை நினைத்துக் கொண்டு சூழ்நிலைக்குத் தகுந்தார்ப்போல் ஒன்றைச் சொல்வதா? ஒரு அளவு தான் இப்படிச் செய்ய முடியும். ஆனால் எல்லாச் சமயமும் இப்படி முன்கூட்டியே தயராக இருப்பது மிகக்கடினம். பின் எப்படி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சூழ்நிலைகளைச் சமாளிப்பது? உள்ளத்தைத் தயார் நிலையில் வைத்துத் தான் செய்ய முடியும். உள்ளம் நல்லெண்ணத்தோடும், வாய்மைக்கு மரியாதை தரும் நிலையிலும் இருந்தால் பேச வேண்டிய நேரத்தில் சரியான பேச்சு தானாக வரும். சொல்ல வேண்டிய வார்த்தைகளெல்லாம் நமக்கு முன்கூட்டியே தெரியும். சொல்லப் போகும் வாக்கியங்களும் நமக்குத் தெரிந்தனவே. அவற்றைச் சரியான வரிசையில் சொல்வதென்பது நமது உள்ளம் நல்லெண்ணத் துடனும், வாய்மைக்கு மரியாதை கொடுக்கும் நிலையிலும் இருப்பது தான்.

மற்றவரிடத்திலும் நாம் கற்றுக் கொள்ளலாம். கோபத்தைக் கோபத்தால் சந்திக்கக் கூடாது. நாம் இங்கு பயிற்சி பற்றிப் பேசுகிறோம். ஆயிரக்கணக்கான மணி நேரம் பயிற்சி தேவைப் படுகிறது. மற்ற திறமைகளை வளர்ப்பதற்குத் தேவையான நேரத்தைப் போலவே இதற்கும் தேவைப் படுகிறது. இதுவும் வீணை வாசிக்கக் கற்பது போலத்தான்.

Morality makes life interesting

So Practice morality. It will make life interesting. Sometimes you will feel like you have one hand tied behind your back when everyone else is playing fast and loose and you can't. It does make it interesting. Living without morality is like playing tennis without a net. There is no gain to it. When you play within the rules within the boundaries it makes it an excellent game.

Lot of strategies got to happen very quick. How are you going to manufacture the right solution fast. Speech happens fast. You are going to prepare various speeches etc. Have various sentences worked carefully out? You can to some degree. ut how are you going to respond spontaneously quickly in all moments? You are going to do this by preparing your heart. Your heart must be in the right place with goodwill, respect for truth. You will spontaneously say the right thing. You don't have to prepare. You already know all the words you need. You know all the sentences they are all there. What's got to be there in order for them to order themselves in the right way is a sense of good will and real honouring of truth.

You can also learn from others. Not meeting anger with anger. We are talking about practice. We are talking about putting thousands of hours into it. Like any thing else. Piano, violin any of these kinds of things.

28. ஆச்சரியத் தியானம் Top

தன்னடக்கம், கட்டுப்பாடு போன்ற திறமைகளைப் பயிலாவிட்டால், ஒரு நாள் கோபத்தால், எரிமலை போல வெடித்தபின்னர் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். எங்கிருந்து வந்தது இத்தகைய கோபம்? ஏன்? ஆனால் நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது. எனென்றால் கட்டுப்பாடில்லாமல் இருக்கவும் தன்னடக்கம் இல்லாமல் நடக்கவும் தானே இதுவரை நீங்கள் பயிற்சி செய்து வந்தீர்கள். வெடித்தபின் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்?

ஆனால் பொறுமையைப் பயிற்சி செய்தால், திறமையற்ற எதிர்ச்செயல் செய்யாமல் இருக்கப் பயிற்சி செய்தால், விசாலமான பரந்த மனப்பான்மையையும், நற்கடைப்பிடியையும் பயிற்சி செய்திருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் கோபம் கொள்ளாததைக் கண்டு ஆச்சரியப் படுவீர்கள்.

ஆகவே எரிமலை போல வெடிப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதும், கோபமில்லாத நடத்தையைக் கண்டு ஆச்சரியப் படுவதும் உங்கள் கையில் தான் உள்ளது.

ஒரு நாடகத்தில் நடிக்குமுன்னே உரையாடல்களை நன்கு மனப்பாடம் செய்து பயிற்சி செய்திருந்தால் மேடைக்குச் சென்று தடங்களில்லாமல் பேசி நன்றாக நடிக்கும் போது, அது ஒரு இனிமையான ஆச்சரியமாகிறது. ஆனால் பொதுவாக நாம் நாடகத்தில் தவறான பாத்திரத்தையே பயிற்சி செய்கிறோம். அந்த முரட்டுத்தனம் கொண்ட பாத்திரத்தையும், பழிதீர்க்கும் எண்ணம் கொண்டுள்ள பாத்திரத்தையும், ஏமாற்றும், வஞ்சகமுமுள்ள பாத்திரத்தையுமே பயிற்சி செய்கிறோம். இப்படிப் பலமுறை பயிற்சி செய்திருப்பதால், நேரம் வரும் போது பயிற்சி செய்ததற்கு ஏற்றாற்போலவே மிகவும் நன்றாகச் செயற்படுகிறோம். இல்லையா?

ஆனால் முன்கூட்டியே நாடகக் காட்சியில் நாம் ஒரு ஞானி கதாபாத்திரத்தில் நடிப்பதாக நினைத்துத் திரும்பத் திரும்ப ஒத்திக்கை பார்த்திருப்போமானால் நேரம் வரும் போது அதே மன நிலையோடு தான் நாம் புற உலகிலும் செயற்படுவோம். இது தான் மற்றவரைப் பார்த்து நாம் கற்பதுமாகும். காந்தியடிகள் உங்களுக்குப் பிடித்தவரானால், அவரை நீங்கள் போற்றுபவரானால், அவரைப் பற்றிப் படித்திருந்தால், கற்றிருந்தால் பின் அவரைப் போலவே நாமும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் நடந்து கொள்வதைக் கவனித்து ஆச்சரியப் படலாம். ஆனால் எந்நேரமும் துப்பறியும் நாவலும் இன்றைய தொலைக்காட்சியில் வரும் நாடகங்களையும் பார்த்துக் கொண்டிருந்தால் நீங்கள் சந்திக்கும் சூழ்நிலைகள் உங்களைச் சிக்கலில் நிருத்தி ஆச்சரியப்படவே வைக்கும். (சிரிப்பு).

இதுவரை ஞானம் பெறவில்லையென்றால் குறைந்தது ஞானம் பெற்றது போல நடிக்கலாம். ஞானம் பெறும் வரை அப்படிச் செய்யலாம். இது ஒரு ஏமாற்று வேலை என்று நினைக்காதீர்கள். யாரையும் நீங்கள் ஞானம் பெற்றவர் என்று ஏமாற்ற முற்பட வில்லை. ஞானம் பெற்றவர் போல நடிக்கின்றீர்கள். அது நல்லதே. யாரிடமும், 'நான் ஞானம் பெற்றவன்,' என்று சொல்வதில்லை. ஞானம் பெற்றது போல நடக்கின்றோம். அப்படி நடப்பது நல்லதே. ஞானிகளுடைய நற்குணங்களை நாம் பயிற்சி செய்வோமானால் காலப்போக்கில் அந்த நற்குணங்கள் நமதாகிவிடும். பின் அப்படி நடிக்க வேண்டியதில்லை.

Surprise Meditation

If you don't practice self control and restraint and all these things you will be surprised one day you will blow up and you will be surprised. Why? You should not be surprised because you practiced it (no selfcontrol no restraint).

But if you practice patience, if you practice non reaction. if you practice a sense of spaciousness mindfulness you will be surprised your spontaneous reaction will be devoid of anger. So it is a nice surprise. You can either practice for a nasty surprise or a pleasant surprise.

You will end up being pleasantly surprised if you practice rehearse the right lines in a play you will perform them. But we are rehearsing all the time the wrong character in the play. We are playing the tough guy or the vengeful or the deceptive or the seductive this and that. We practice it again and again and by gosh we sure pull it off well don't we?

But if we sit down and systematically practice and rehearse the scene and imagine yourself walking through it like a saint, play the role of a saint in your mind again and again when the time comes that is what you will play. This is what in a sense learning by example does. If you were a great admirer of Gandhiji and you read about him and so forth you will be surprised that you will tend to emulate his behaviour. If you are always reading tough guy detective novels or something like that you might just be surprised what you get yourself into! ( laughter)

If you are not enlightened at least act enlightened. Until you make it. It is not deception. You are not fooling anybody that you are enlightened. You are acting like an enlightened person which is a very good thing to do. You are no telling anybody, ' I am enlightened' I am just acting like I am. It is good to act.

'This is how I feel.' Who cares how you feel. Feel someway else. If you can't do anything about it feel like that but some other way. Act one way but feel another way. Start with the good actions and bad motivations. Eventually you maybe you will get the good motivations. Don't think I had bad motivations so I should act badly too!

29. நல்லெண்ணம் ஒரு மிதியடியல்ல. Top

கேள்வி: நான் சமூகத்தில் நல்லவனாக வாழ்ந்தால் மற்றவர் என்மீது ஏறி உட்கார்ந்து கொள்வார்களோ என்ற அச்சம் என்னிடம் உள்ளது.

அப்படியும் நடக்கலாம். அதனால் தான் புத்தர் நல்லவனாக இந்த உலகில் வாழ்வது கடினம் என்றார். சிலர் உங்களைத் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். ஆனாலும் மேன்மையாக வாழ்வது நல்லதே. அதே சமயம் நல்லெண்ணத்தோடு வாழ்வது என்பது மிதியடி போல் இருக்க வேண்டும் என்றில்லை. (மிதியடி மீது எல்லோரும் நடப்பது போல உங்கள் மீதும் நடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம்.) சில சமயம் கண்டிப்புடன் பேச வேண்டியிருக்கும். ஆனால் காரணமில்லாமல் அப்படிப் பேச வேண்டாம். தெளிவாகப் பேசுங்கள். அதுதான் நல்லெண்ணம் என்பது.

புத்தரை யாரும் தாழ்வாக எண்ணிவிடக் கூடாது. முட்டாள்களை அவர் பொருட்படுத்துவதில்லை. நாம் இங்கு நல்லெண்ணம், நட்புணர்வைப் பற்றிப் பேசுகிறோம். உங்களிடமும் நீங்கள் அதே நல்லெண்ணத்தைச் செலுத்தவேண்டும். மற்றவர்களிடம் மட்டுமே செலுத்துவதென்பது தவறு. உங்கள் நண்பனை எவராவது ஏமாற்றினால் அதை நீங்கள் பொருத்துக் கொள்ள மாட்டீர்கள் அல்லவா? நண்பர்களை நாம் பாதுகாக்க முற்படும் அதே வேளையில் நம்மையே நாம் பாதுகாக்கத் தயங்குகிறோம். மற்றவர் ஏமாற்றப்படும் போது அவர்கள் சார்பில் உறுதியாகப் பேசுகிறோம் ஆனால் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளத் தயங்குகிறோம். அப்படி இருப்பது உங்களிடமே நீங்கள் நல்லெண்ணம் கொள்வது இல்லை என்றே பொருள்படும்.

Loving kindness is not being a door mat.

Question: I have this perception that if I behave this way in this society I will be taken advantage of.

It is possible that you will. That is why the Buddha says that it is not easy to live in the world being a nice person. Some people will take advantage of you. However it is worth it. On the second level however loving kindness is not being a doormat. (You should be able to be assertive at certain points. Don't do that without a reason. Be clear.) That is loving kindness.

The Buddha was not to be trifled with. He didn't suffer fools lightly. The word love in loving kindness gets us all mixed up. We are talking about goodwill, friendship. And equal towards yourself as to others. You should have goodwill towards yourself. You wouldn't let anybody else walk over your friend or manipulate your friend. We can very easily do that (protect others) with others but we can't do that with ourselves. We are very interested in somebody not getting walked over. We can be very assertive, very clear. Somehow with ourselves .. That is not truly friendly to yourself.

30. உபேட்சையும் (பாலியில் உபேக்கா) பொறுமையும் Top

கேள்வி: நடுநிலையான உணர்ச்சிகளும், அதாவது இன்பமும் அல்லாத துன்பமும் அல்லாத உணர்ச்சிகளும் உபேட்சையும் ஒன்று என்று படித்தேன். ஆனால் இது தவறென எனக்குத் தோன்றுகிறது. இதனைத் தெளிவு படுத்த முடியுமா?

பதில்: வேதனா என்றால் உணர்ச்சிகள். நடுநிலையான உணர்ச்சிகளில் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை. ஆனால் அது உபேட்சை ஆகாது.

உபேட்சை என்பது ஒரு மனோநிலை, உணர்ச்சி அல்ல. அமைதியான நிதானமான மனநிலை. அதாவது சமமான மனநிலை. நல்ல செய்தி கேட்டால் மகிழ்ச்சியில் அடித்துச் செல்லப்படுவதில்லை. கெட்ட செய்தி கேட்டால் துக்கத்தில் ஆழ்ந்து விடுவதில்லை. எல்லாச் சூழ்நிலைகளிலும் சமநிலையில் உள்ளவர் நீங்கள். எல்லாக் காலத்திற்கும் ஏற்ற பெண் அல்லது ஆண் நீங்கள். கோடை காலத்துக்கு மட்டும் அல்ல. குளிர் காலத்துக்கு

மட்டும் அல்ல. மாறிக் கொண்டிருக்கும் உலகில் சமநிலையில் உள்ளவர்.

விளக்கவுரைகளில் உபேட்சைக்குக் கொடுக்கப்படும் உவமானம்: இந்த மாபெரும் பூமி தன் மீது தூய்மையானவற்றையோ, தூய்மையற்றவற்றையோ எதைக் கொட்டினாலும் ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொள்வதைப் போல, சமநிலையில் உள்ளவர். நன்மையோ அல்லது தீமையோ எது நிகழ்ந்தாலும், எல்லையற்ற மகிழ்ச்சியோ அளவற்ற எதிர்ப்போ காட்டாமல் எப்போதும் சீரான அமைதியுடன் இருப்பவர்.

பொறுமைக்குத் தரப்படும் உவமானமும் இது போன்றது தான்: எப்படி இந்த மாபெரும் பூமி, எத்தகைய அருவருக்கத் தக்க பொருட்களையும் பொறுமையாக ஏற்றுக் கொள்கிறதோ அதே போல நம்மை யார் எத்தகைய அவதூறு பேசினாலும், அவமதித்தாலும் அவற்றை எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டு, மறந்து விடுவதே பொறுமையின் முழுமை.

ஆகப் பொறுமையென்பது கஷ்டமான சூழ்நிலைகளைச் சமாளிப்பது. மகிழ்ச்சியான சூநிலைகளில் அல்ல. உங்கள் மீது பன்னீர் தெளிக்கப்படும் போதும், ரோஜா மலரின் இதழ்கள் தூவப்படும் போதும் பொறுமையாக இருப்பது எளிது, இல்லையா? அப்போது பொறுமை சோதிக்கப் படுவதில்லை. உங்கள் முகத்தில் ஒருவர் எச்சிலை உமிழ்ந்தால் அல்லது அருவருப்பான பொருள் உங்கள் மீது வீசப்பட்டால் அப்போது தான் உங்கள் பொறுமை சோதிக்கப்படுகிறது.

பயிற்சியின் போது பொறுமையாக இருக்கக்கூடிய ஒருவர், நற்செய்தி வரும்போது அந்த மகிழ்ச்சியில் நிலை குலைந்து விடலாம். உபேக்கை உள்ளவர் நற்செய்தி வந்தாலும் அல்லது தீய செய்தி வந்தாலும் சமநிலையில் இருப்பவராவார். இரண்டு எல்லைகளிலும் பாதிக்கப் படுவதில்லை. உடனே புரிந்து கொண்டு எதிர்ச் செயலில் ஈடு படுவதில்லை. எதிர்ச்செயல் செய்யாத நிலைக்கு வருவதற்கு நீண்ட காலம் பிரதிபலிக்க வேண்டும். அப்போது தான் எதிர்ச்செயல் செய்வதற்கான உந்துதலைக் கட்டுப் படுத்த முடியும். யாராவது உங்களைப் பார்த்துக் கூச்சலிடுகிறார் என்றால் உடனே நமக்குக் கோபமோ அல்லது பயமோ உண்டாகிறது. அப்படி எதிர்ச்செயல் உண்டாவதை நாம் வேண்டுமென்றே செய்வதில்லை. பழக்க தோசத்தினாலும், மனக்குறிப்பின் காரணமாகவும் அந்தச் சூழ்நிலைகளில் நாம் கோபமோ, பயமோ கொள்கிறோம்.

பயிற்சி செய்வது பலனளிக்கும். உலகம் சில சமயம் ரோஜா இதழ்களையும் மற்ற சமயம் இனிமையற்ற பொருட்களையும் நம்மீது எறியும் என்பதை எதிர்பார்த்த வண்ணம் பயிற்சி செய்யவேண்டும். அதன் மீது தியானிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எப்படித் திறமையுடன் வாழ்வது? எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவருக்கும் நன்மை உண்டாகும் திறமையான வழி எது?

உபேக்கை இல்லாத கருணை துக்கத்திற்கு அழைத்துச் செல்லும். ஆக மற்றவரின் கஷ்டங்களைக் கண்டு துக்கப்படாமல் நம்மைச் சாந்தமாக, சமநிலையில் வைத்திருப்பது உபேக்கைதான். மற்றவர் கஷடங்களை நம்மால் நிவர்த்திக்க முடியுமானால் அதைச் செய்யலாம். முடியா விட்டால், 'நீ வாழ்க!' என்ற வாழ்த்தோடு ஒதுங்கிக் கொள்வதே நல்லது. அவர்கள் துன்பத்தைக் கண்டு நாமும் துக்கப்படக் கூடாது. ஏற்கனவே குவிந்திருக்கும் துக்கத்தை நாமும் அதிகரிக்கச் செய்யக் கூடாது. துக்கக் குவியலிலிருந்து நாம் ஒதுங்கியே இருக்க வேண்டும். ஏனென்றால் உலகில் எல்லோரும் துக்கப் படுவதைவிட ஒருவராவது மகிழ்ச்சியானவராக இருப்பது நல்லது. ஆகவே யாராவது ஒருவர் துக்கம் அனுபவித்தால், அவர்கள் மீது உள்ள இரக்கத்தின் காரணமாக நாமும் துக்கப்பட்டுத் துக்கத்தை அதிகரிக்கக் கூடாது. அனுதாபத்தின் காரணமாக அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏனென்றால் மகிழ்ச்சியாக இருப்பதே நல்லதே. துக்கத்திற்கு மறுபெயர் சோகம். சோகத்தோடு இருப்பது நல்ல செயல் அல்ல. ஒருவிதத்தில் உலகில் துன்பப் படுவோர் அதிகமாக இருக்கும் போது, நாம் மேன்மேலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது நமது கடமை.

Equanimity and Patience

Q: Someone has translated that neutral feelings in vedana as equanimity but I don't think this is right. Can you clarify please?

No. Vedana means feelings. Neutral feelings are neither pleasant nor unpleasant feelings. They are not equanimity. Equanimity is an attitude not a feeling. Equanimous attitude. Meaning balanced. Equal. You are not swept away by good news. You are not swept away by bad news. You are the person that is stable in all situations. You are a woman for all seasons. A man for all seasons. Not just for the summer, not just for the winter. A person who is stable balanced in endless shifting.

The simile is given in the commentaries is - As the great Earth does not react whatever is thrown upon it so a equanimous person does not react whatever situations come to them. The simile for patience is very similar - As the great Earth does not react when loathsome things are thrown upon it. Patience is particularly a virtue in trying circumstances. Not when you are having fun when everything is good. When you have perfume thrown on you or rose petals thrown upon you, it is easy to be patient in that case, isn't it? Patience is not tested. It is when somebody spits in your face or some loathsome stuff is thrown upon you then your patience is tested.

Equanimity is that perhaps a person may be patient in the path but perhaps they get swept away when good things come to them. So the equanimous person has got this sense of balance. They are not moved either way in those circumstances. They understand immediately but not react. Non reactive. To get to a state of non-reaction you have to do a lot of reflection which undercuts the instinct to be reactive. Somebody shouts at you and you get angry or you get afraid. That was just my reaction I didn't try to do it. But why do you get angry in those circumstances because of your whole conditioning and your perceptions.

Training helps. So what we have to do is actually begin to train ourselves that the whole world is potentially swinging back and forth it is sometimes showering rose petals upon us and sometimes showering other things upon us that are not so pleasant. So we have to meditate upon this. What would be the effective type of mode to be in the midst of these things. What would do me well and also the people around that I am dealing with well.

Compassion without equanimity leads to grief. So instead of grieving over other peoples suffering equanimity makes you cool, balanced and if you can do something about somebody suffering then do it, if not you wish 'may you be well' but you yourself not become a sufferer as well. You do not add yourself to the pile of suffering in the world. You decide to remain aloof from the pile of suffering. Because it would be much better to have a happy person in the world then everybody grieving. So when people are suffering don't by sympathy add your grief to it. By sympathy add your well wishes to it and remain happy. Because happy is a good thing to be. Sad another word for grief is not a good thing to be. And in a sense the worse unhappy people there are the more your obligations to remain happy.

Top Next