பண்பு
பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
Virtue
Adapted from a Dhamma talk by Ajahn Sona
English version follows the Tamil translation.
பிறரைச் சந்தித்துப் பேசும் போது கூச்சப்படாமல் (தன்னுணர்வில்லாமல்- self conscious) இருப்பது எப்படி?
உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டுமானால், அசைக்க முடியாத தன்னம்பிக்கை வேண்டுமானால் புத்தர் இவ்வாறு பிரதிபலிக்கச் சொன்னார்: எந்தச் சூழ்நிலையானாலும் சரி.. நீங்கள் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் மன்னரையோ, பிரபுக்களையோ, மேன்மையானவர்களையோ, புகழ் பெற்றவர்களையோ சந்திக்க நேரிடுமானால் அவர்கள் மத்தியில் நிலைகுலையாமல் இருப்பது எப்படி?
உங்கள் பண்பு சிறப்பானதாக இருந்தால் யார் மத்தியிலும் நீங்கள் தைரியமாக இருக்கலாம்.
வேறு எந்தக் கணக்கும் போட வேண்டியதில்லை. 'எனது பண்பு எப்படிப் பட்டது?' என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அது தான் உங்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும். நான் பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பவனா? மற்றவர் பொருளைக் களவாடுபவனா? மற்றவர் உறவுகளைப் பொருத்தவரை நேர்மையாக நடந்து கொள்பவனா? எனது பேச்சில் வாய்மை உள்ளதா? மனம் தெளிவாக இருப்பதில் நான் அக்கறை கொண்டுள்ளவனா? போதைப் பொருட்களினால் மனம் குழம்பியிருக்கிறேனா?
மற்ற உயிர்களுக்கு தீங்கு இழைக்காதவராகவும், மற்ற உயிரினங்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளாதவராகவும், அல்லது மற்ற உயிரினங்களுக்கு வசதி ஏற்படுத்திப் பாதுகாப்பளிப்பவராகவும், உங்கள் பேச்சு அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தால், அவர்கள் பொருட்களை உங்களிடம் நம்பி விட்டுச் செல்ல முடியுமானால், அவர்கள் உறவுகளில் உங்களை நம்பமுடியுமானால், நீங்கள் தெளிவுடனும், பொறுப்புடனும் இருப்பீர்கள் என்று மற்றவர்கள் நம்பினார்களென்றால் உங்களுக்கு ஒரு அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கும்.
ஆனால் நீங்கள் வேறு வழிகளில் உங்களை எடை போடுவீர்களானால், அதாவது, 'நான் மேலும் அறிவாளியாக இருக்க வேண்டும், நான் எப்போதும் தவறே செய்யாதவனாக இருக்க வேண்டும், நான் மேலும் திறமையானவனாக இருக்க வேண்டும், நான் இதைச் செய்திருக்க வேண்டும், அதைச் செய்திருக்க வேண்டும்....' என்று எண்ணத் துவங்குவீர்களென்றால், இவையெல்லாம் உங்களை மதிப்பிடும் தவறான வழிகளாகும். இவ்வகைகளில் உங்களை மதிப்பிடாதீர்கள். உங்கள் பண்பை வைத்துத்தான் உங்களை நீங்கள் மதிப்பிட வேண்டும். அது மட்டுமே பொருத்தமானது.
சுய அன்புக்கும் சுய மதிப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. சுய மதிப்பென்றால் என்ன? உங்களைப் பற்றி நீங்களே ஒரு மதிப்புப் போடுவது. உங்களையே மதிப்பிடுகின்றீர்கள். எப்போதும் அளவு பார்க்கின்றீர்கள். உங்களுக்கு அதிக சுய மதிப்பு வேண்டாம். அப்படி இருந்தால் உங்களுக்கு நீங்களே அதிக சுய எடை போட்டுக் கொண்டீர்கள் என்று தான் அர்த்தம். எடையே போட வேண்டாம். உங்களுக்குத் தேவை எல்லையில்லா நட்புணர்வு தான். 'நான் யார்? நான் என்ன செய்திருக்கின்றேன்? நான் என்ன செய்யப் போகிறேன்?' என்றெல்லாம் உங்களையே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டாம். 'நான் நலமாக இருக்க வேண்டும்.' என்று மட்டுமே சொல்லுங்கள். உங்கள் சுய மதிப்பை அதிகரிப்பது நல்லதென்று நினைத்தீர்களென்றால் அது சரியான கருத்து இல்லை. இப்படி மதிப்பிடுவதை முழுமையாக ஒதுக்கி விடுவது நல்லது. நல்லெண்ணத்தை மட்டும் பிரகாசியுங்கள். ஒன்றே ஒன்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுக்கு மிகத் தேவையானது, முக்கியமானது அதுதான். உங்கள் எதிர்காலம் அதை நம்பித்தான் உள்ளது. அதுதான் உங்கள் பண்பு.
உங்கள் பண்பு இவற்றைக் கொண்டிருக்க வேண்டும்: உயிரினங்களைக் கொல்லாதிருத்தல், அவற்றைக் காயப் படுத்தாதிருத்தல், மற்றவர் பொருளைத் திருடாதிருத்தல், மற்றவர் கணவரை, மனைவியரை, துணையைக் கவராதிருத்தல், பொய் பேசாதிருத்தல், மதுவையோ போதைப் பொருட்களையோ பயன்படுத்தாதிருத்தல். இதுவே உங்கள் நற்பண்பு.
இவற்றுக்கு நேர்மறையான செயல்கள் மற்றவருக்குக் கொடுக்கும் ஐந்து பரிசுகளைப் போன்றதாகும். பாதுகாப்பு என்ற பரிசு. மற்றவர் உங்களால் எந்தத் தீங்கும் நேராது என்பதைப் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் பொருட்கள் உங்களிடம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் அவற்றைக் களவாடாமல் இருப்பது மட்டுமின்றி அவர்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டால் அவர்கள் பொருட்களைப் பாதுகாக்கவும் செய்வீர்கள். அவற்றை அவர்கள் இழக்கவோ, தொலைக்கவோ, சீரழிக்கவோ விடமாட்டீர்கள். அவர்களின் உறவுகளுக்கிடையே எப்போதும் பிளவு உண்டாக்க மாட்டீர்கள். நீங்கள் பொய் பேசாதவராதலால் உங்கள் பேச்சில் அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பார்கள். மேலும் உங்கள் மனம் தெளிவாக இருக்கும். மனத் தெளிவையும், விவேகத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்கள். இது ஒரு பரிசு.
ஒரு குடிகாரனுடனோ போதையில் உழல்பவனுடனோ சேர்ந்து இருப்பது எப்படி இருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்களும் அதே போதை நிலையில் இருந்தால் தவிர அவர்களுடன் இருப்பதை உங்களால் சகித்துக் கொள்ள முடியாது. ஒரு பொய் பேசுபவருடன் பழகுவது எப்படி இருக்கும்? ஒவ்வொரு முறை அவர் பேசும் போதும், 'இந்தமுறை உண்மை பேசுகின்றாரா இல்லையா என்று தெரியவில்லையே? ஏதோ சதி தந்திரம் செய்கிறாரோ? என்னை மோசடி செய்யப் பார்க்கின்றாரோ?' என்றெல்லாம் நினைக்கத் தோன்றும். அவரை நெருங்க விடுவதே ஆபத்து. உங்கள் உறவுகளுடன் அவர்களை நம்ப முடியாது. அறையை விட்டுச் சென்றவுடன் கணவரிடமோ அல்லது மனைவியிடமோ தகாத பேச்சில் ஈடுபடுகின்றான். உங்கள் பொருட்களை அவர்களிடம் நம்பி விடமுடியாது. இது ஒரு திருட்டுக் கூட்டத்துடன் வாழ்வது போலத்தான். அவர்கள் கழிவரைக்குச் சென்றாலும், 'அவன் எங்கே போகிறான்? படுக்கை அறைக்குச் சென்று அலமாரியைத் திறந்து பார்ப்பானோ? அவன் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும்,' என்று நினைக்கத் தோன்றும். உங்கள் பணப்பையை அடிக்கடி தொட்டு பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட ஒருவருடன் இருப்பது மிகக் கசப்பான உணர்ச்சியை ஏற்படுத்துகிறது இல்லையா? அல்லது ஒரு வன்முறையில் ஈடுபடுபவரோடு வாழ்வது எப்படி இருக்கும்? ஒரு வன்முறையாளர், உங்களிடமும்வன்முறையாக நடந்து கொள்பவர். திரும்பினால் என்ன ஆகும் என்று தெரியாது.மிகவும் அழுத்தமான, சிக்கலான சூழ்நிலை.
ஆகவே மனிதசமுதாயத்திற்கு நீங்கள் ஒரு பரிசு தர விரும்புகின்றீர்கள். நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்பதில்லை. நீங்கள் மற்றவர்களுக்கு எந்த அபாயத்தையும் விளைவிக்க மாட்டீர்கள் என்பதுதான் உலகிற்கு நீங்கள் தரும் பரிசு. இது ஒரு அற்புதமான பரிசு. உங்கள் எல்லைகளை மீறாமல் வாழும் நம்பகத் தன்மையுள்ளவர்கள் மத்தியில் இருப்பது உங்களுக்குக் கிடைத்த ஒரு பரிசு போலத்தான். இப்படித்தான் உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை உருவாக்க வேண்டும். யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். கவலைப் படாதீர்கள். ஆனால் பண்பின் அடித்தலம் என்ன? குறைந்த ஆசையும், குறைவான வெறுப்பும் தான். அளவிறந்த கோபமும், ஆசையையும் கொண்டு பண்புடன் இருப்பது முடியாத காரியம். ஏனென்றால் கோபமும், பேராசையும் உங்களைத் தகாத எல்லையைக் கடக்கச் செய்யும். விவேகமில்லாமல் நீங்கள் பண்பாளனாக இருக்க முடியாது.
புத்தரிடம் இந்தக் கேள்வி கேட்கப் பட்டது, "கொலைசெய்யாதவர், திருடாதவர், உறவுகளின் எல்லையை மீறி நடக்காதவர், பொய் பேசாதவர் மற்றும் போதைப் பொருட்களைத் தீண்டாதவர் ஒருவர் இருந்தால் அவர் பண்புள்ளவர் தான், இல்லையா?"
"இல்லை," என்று பதில் அளித்தார் புத்தர்.
கேள்வி கேட்டவருக்கு ஆச்சரியம். "நீங்கள் ஐந்து ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்போர் பண்புள்ளவர் என்று கூறியதாக நினைத்தேனே!"
"இல்லை, இல்லை, இல்லை. தவழக்கூட முடியாத மூன்று மாத குழந்தைகூட இந்த ஐந்து ஒழுக்கங்களை மீறுவதில்லை. அதனால் அது பண்புள்ளதென்று கூறமுடியுமா?" ஏனென்றால் அது புரிந்து அந்த ஒழுக்கங்களைக் கடைப் பிடிக்கவில்லை. அதனால் எதையும் மீறமுடியாது. ஆகவே அக்குழந்தை பண்புள்ளது என்று சொல்வதற்கில்லை.
இந்த ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்போர் காரணத்தோடு கடைபிடிக்கின்றனர். அதனை ஏன் கடைப்பிடிக்கின்றோம் என்பதை உணர்ந்து கடைப்பிடிக்கின்றனர். அமைதிக்காகவும் திருப்தியுடன் வாழ்வதற்காகக் கடைப்பிடிக்கின்றனர். ஆசையும் கோபமும் உங்களை ஆட்கொள்ளாததால் அவை ஒழுக்க எல்லையைத் தாண்ட வைப்பதில்லை.
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
* * * * * *
Transcribed from an audio tape available at birken.ca
How do you not be self conscious when meeting with people?
If you want confidence, unshakeable confidence, this is what the Buddha says. No matter what.. if you come from a poor class and you have to meet royalty and aristocracy and great people, famous people so forth how is it you can feel un self conscious in their presence? If your virtue is good you will not feel over self conscious in any company. It is not about any other level. Ask yourself, 'How is my virtue?' That is the thing that gives you self confidence. Am I one who does harm to other living beings? Am I one who takes by theft from others? Do I honour the integrity of relationships? Am I honest in my speech? Do I cherish clarity of mind? Am I befuddled by intoxicants?
If you can say that you are harmless to other beings, you do not present a threat to other beings or you give comfort and safety to other beings, they can trust your word, they can trust you with their possessions, trust you with their relationships and they can trust that you have clarity and responsibility then you have a sense of unshakeable confidence. But if you evaluate yourself by other means. if you think, 'OK I should be smarter, I should never make a mistake, I should be more talented or I should have done this and that .. 'these things are the wrong ways to evaluate yourselves. Not the criteria by which you evaluate yourself. You must come back to evaluate yourself on the basis of your virtue. That's really all that matters.
There is a difference between self-love and self-esteem. You know what self-esteem means? It means estimate. You are estimating your self. Always measuring your self. And you do not want high self esteem. That is just a high self estimate. You do not want any estimate at all. What you want is unconditional good will. You are not asking, 'Who am I? What have I done? What will I do?' You are saying, 'May I be well.' I am not asking what I did or what am I doing. I am saying, 'May I be well.' If you think it is a good idea to raise your self esteem it is not a good idea. It is a good idea to get rid of esteem all together. Do not estimate your self. Just practice good will. And make only one thing important. The critical thing that is important to you. Because your future happiness depends on this. Your virtue.
Your virtue consists of not killing living beings, not injuring them either, not stealing from other beings, not stealing other peoples husbands or wives or partners and not lying and not being drunk or stoned. This is your virtue.
In other words the opposite of that is you are giving five gifts to other beings. The gift of safety. You will notice they entirely understand you will not harm them. Their possessions are entirely safe with you. You will not only not take them but if they are negligent you will guard them. You won't let them dribble away, fall away, get lost. Any body they have established relationships with you will never separate between them. When you speak they trust what you say because you won't lie. And then your clarity of mind. You appreciate clarity and judgment of mind. And this is a gift.
All you have to think is what is it like to be in the company of somebody who is drunk or stoned. Unless you are drunk or stoned you can hardly stand it. What is like to be with somebody who lies. You think, 'I wonder if they are telling the truth this time or not. May be it a trick or a trap. They are trying to manipulate me.' Terrible thing to be around. Can't trust them with your relationships. The moment you are out of the room somebody is hitting on your husband or your wife or partner. Terrible. Or you can't trust them with your property. Its like being with a den of thieves. Somebody goes out to the washroom and you think, 'Where is he going? Is he going to the bed room to.. I should keep him under watch'. You keep checking your wallet. It is a horrible feeling to be with someone like that. Or somebody who is violent, who does violence to you. You turn around and anything could happen. Tension in the world.
So you want to make a gift to humanity. It is not that you are not doing anything. Your contribution to the world is you are one of the beings who is not a threat. That is an incredible gift. You be in the presence of anybody who is really trust worthy, is never going to step across your boundaries, that is a gift. That is what you should establish in yourself - a sense of confidence. No matter what anybody says . But what is at the root of virtue? Some reduced anger and reduced desire. You cannot have strong anger and desire and stay in the bounds. Because anger and desire will push you across the boundaries. You couldn't be virtuous and not have wisdom.
The Buddha was asked, 'So somebody who does not kill, does not steal, does not transgress relationship boundaries, does not lie, does not take intoxicants - they are virtuous right?'.
The Buddha answered. 'No'.
'What! But I thought you said the five precepts are what constitutes virtue.'
'No, no no. A three month old baby lying on its back is not violating any of the precepts. They are not virtuos.' Because it is not out of intention. They just can't do anything. So they are not virtuous.
You don't do these things for a reason. You have some understanding why I shouldn't do these things. It is out of a sense of peace, contentment. You are not full of things that will drive you over those boundaries i.e. desire and anger. And confusion.
* * * * * *