சம்மாபரிப்பாஜனிய சூத்திரம் Sammāparibbājaniya Sutta
சுத்த நிபாதம் முகப்பு Sutta Nipata Home
Sn 2.13
சம்மாபரிப்பாஜனிய சூத்திரம் - பிழையற்ற நாடோடி வாழ்க்கை
Sammāparibbājaniya Sutta - Perfection in the Wandering Life
Translated from the Pali by: Laurence Khantipalo Mills
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: லாரண்ஸ் காந்திபாலோ மில்ஸ்
* * *
Question
Of the Sage of great wisdom, one gone across,
to the further shore gone, completely Cool, poised
who’s renounced a house,
sense-pleasures dispelled, I ask:
How would a bhikkhu rightly wander in the world?
கேள்வி
பெரும் மெய்ஞ்ஞானம் கொண்ட முனிவர், வெள்ளத்தைத் தாண்டியவர்
அக்கரை சேர்ந்தவர், அமைதியானவர், சமநிலையில் இருப்பவர்,
வீட்டைத் துறந்தவர்,
புலன் இன்பங்களை நீக்கியவர், அவரிடம் கேட்கிறேன்:
ஒரு பிக்கு உலகில் சரியான முறையில் எவ்வாறு வீட்டைத் துறந்து வாழ்வது?
Buddha
Who has destroyed (belief) in omens, in luck,
the occurrence of dreams and other signs such,
who is rid of the bane of what is auspicious,
such a one rightly would wander in the world.
புத்தர்:
சகுனங்கள், அதிர்ஷ்டம், கனவு, மற்றைய நிமித்தங்களில்
உள்ள நம்பிக்கையைத் துறந்தவர்களும்,
நல்ல காலம், நலம் தரும் செயல் என்பன போன்ற நச்சுக் கருத்துக்களைக்
கைவிட்டவர்களும்
உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
Who sensuality is able to divert—
both varieties, human and divine—such a bhikkhu
passed beyond being, knowing Dharma well,
such a one rightly would wander in the world.
புலன் இன்பங்களை - இவ்வுலகிலும்
தேவலோகத்திலும் – விரட்டக் கூடிய பிக்கு
தோற்றத்திற்கு (பவம் எடுப்பதற்கு) அப்பால் சென்றவர், அறத்தை நன்கு தெரிந்தவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
Anger and avarice by the bhikkhu abandoned,
his back having turned upon slander as well,
compliance, opposition, completely disappeared,
such a one rightly would wander in the world.
கோபத்தையும், பேராசையையும் கைவிட்ட ஒரு பிக்கு,
அவதூறு பேசாதவர்,
விருப்பு, வெறுப்பு இல்லாதவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
Letting go the pleasant, what’s unpleasant too,
ungrasping, unsupported by nothing at all,
from all the causes for the fetters—completely free,
such a one rightly would wander in the world.
இன்பத்தையும், துன்பத்தையும் கைவிட்டவர்
பற்றில்லாதவர், எதையும் சார்ந்து நில்லாதவர்,
தளைகளுக்கான காரணங்களிடமிருந்து முழுமையாக விடுபட்டவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
Seeing no essence in mental substrata,
dispelled passionate desire for what can be grasped,
not being dependent or led by another,
such a one rightly would wander in the world.
மனக் கிளர்ச்சியின் பயனற்ற தன்மையை அறிந்து
உணர்ச்சியைத் தூண்டும் வேட்கையை விலக்கி, யாதொருவர் ஆதரவில் வாழாமலும்,
பிறரால் வழிநடத்தப் படாமலும் இருப்பவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
In speech, mind and deed to others unopposed
and knowing very well the Dharma’s full extent,
and one who is aspiring to the state of Nirvāṇa,
such a one rightly would wander in the world.
பேச்சிலும், மனத்திலும், செயலிலும் மற்றவரை எதிர்க்காமல்
அறத்தின் முழுமையை நன்கு தெரிந்தவர்,
நிப்பாண நிலையை அடைய விரும்புபவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
The bhikkhu not conceited thinking, “Me he reveres”,
nor on being abused does he retaliate,
nor thrilled with others donations of food,
such a one rightly would wander in the world.
"அவன் என்னைப் போற்றுகிறான்," என்று அகந்தை கொள்ளாத பிக்கு,
தான் தூற்றப் பட்டாலும் எதிர்த்துத் தூற்றாதவர்,
மற்றவர் தரும் உணவைக் கண்டு குதூகலம் அடையாதவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
For greed and for being, the bhikkhu’s let go,
as for injury and bondage it’s not done by him
crossed over doubts, removed is the dart,
such a one rightly would wander in the world.
அவாவும், தோற்றமும் (பவமும்) விட்டுவிட்ட பிக்கு,
மற்றவரைத் துன்புறுத்துவதையும் அடிமைப் படுத்துவதையும் தவிர்ப்பவர்,
ஐயங்களைக் கடந்தவர், (பேராசை என்ற) அம்பை நீக்கியவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
A bhikkhu who knows what he himself enjoys
would not be one who harms others in the world;
realizing the Dharma as it really is,
such a one rightly would wander in the world.
தனக்கு ஏற்றது எது என்பதை அறிந்த பிக்கு,
உலகில் எவருக்கும் தீமை செய்யாதவர்,
உள்ளது உள்ளபடி அறத்தை அறிந்தவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
in whom are no hidden tendencies at all—
the roots of evil completely removed,
for them no longings left, no yearnings come anew
such a one rightly would wander in the world.
மறைந்திருக்கும் தீயமனப்போக்குகள் யாதும் இல்லாதவர்,
தீமையின் வேர்களை முழுமையாகப் பிடுங்கியெறிந்தவர்,
ஆசைகளைக் களைந்ததால் அவற்றிலிருந்து விடுபட்டவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
Inflows eradicated and conceit let go
and transcended the path of sexual desire,
one tamed, completely Cool and imperturbable,
such a one rightly would wander in the world.
மாசுகளை அழித்து அகந்தையைக் கைவிட்டவர்
காம இச்சைகளைக் கடந்தவர், அடக்கமானவர்,
கரையேறியவர் (நற்கதி சேர்ந்தவர்), இடுக்கணழியாதவர் (சமநிலையான மனம் கொண்டவர்) -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
Confident and learned, one who Sees the Way,
one Wise who among sects is no sectarian;
who greed has diverted, hatred, ill-will too,
such a one rightly would wander in the world.
தன்னம்பிக்கையுடையவர், கற்றவர், (நிப்பாணத்துக்கு எடுத்துச் செல்லும்) மார்க்கத்தைக் கண்டவர்,
மெய்ஞ்ஞானம் உடையவர், பிரிவுகளுக்கு மத்தியில் எப்பிரிவையும் சாராமல் விலகி நிற்பவர்,
ஆசையையும், வெறுப்பையும், கெட்ட எண்ணங்களையும் கைவிட்டவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
A conqueror—purity perfected, remover of the veil,
with majesty of dharmas, far-shorer, inturbulent,
skilful with knowledge of conditioned things’ cessation,
such a one rightly would wander in the world.
வெற்றி கொண்டவர் - தூய்மையானவர், தீமையின் திரையை அகற்றியவர்,
அறத்தில் நன்கு ஒழுகியவர், அக்கரையை அடைந்தவர், உறுதியானவர்
காரணகாரியத் தொடர்பில் உண்டாவனவற்றின் (அதாவது கன்மச் செயல்களின்) முடிவை அறிந்தவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
Of wisdom purified surmounting both
past and the future, gone beyond time,
and in every way free from sense-bases,
such a one rightly would wander in the world.
மெய்ஞ்ஞானத்தைத் தூய்மைப் படுத்தி,
கடந்த காலம் வருங்காலம் பற்றிய ஆணவ எண்ணங்களை விட்டவர்,
புலன் ஆசைகளிலிருந்து முழுமையாக விடுபட்டவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
Final Knowledge of the State, having realized the Dharma,
having seen openly the letting-go of inflows,
with all the substrata completely dissolved,
such a one rightly would wander in the world.
வாய்மையை அறிந்தவர், அறத்தை
முழுதும் உள்வாங்கியவர்,
மாசுகளின் அழிவைத் தெளிவாக அறிந்தவர், அனைத்துப் பற்றுகளையும் விட்டவர் -
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
Questioner:
Indeed, O Blessed One, certainly it is thus,
for that bhikkhu tamed, living like this—
one who beyond all the fetters has passed,
such a one rightly would wander in the world.
கேள்வி கேட்டவர்:
ஆம், பகவரே, நீங்கள் சொல்வதுபோல
இவ்வாறு வாழும் பிக்கு அடக்கமானவராகி
எல்லாத் தளைகளையும் உடைத்தவராகிறார்.
அப்படிப்பட்டவர் உலகில் சரியான முறையில் வீட்டைத் துறந்து வாழ்பவராவார்.
* * *
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
© Details from English Source With gratitude to https://suttacentral.net for English source.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.