நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
1. அயச்சன (வேண்டுகோள்)
Ayacana (Request)
1. Namo te purisajañña
namo te purisuttama
sadevakasmim lokasmim
natthi te patipuggalo.
மேன்மையாகப் பயிற்றுவிக்கப் பட்டவரே போற்றி!
மனிதருள் சிறந்தவரே போற்றி!
உலகில் தன்னிகரில்லாதவர் நீங்கள்.
எல்லா வழிபாடுகளும் உங்களுக்கே உரியதாகுமாக.
Homage to you so nobly bred.
Homage to you amongst men supreme.
Peerless are you in all the world.
May all worship be given to you.
2. Namo te buddha vir'atthu
vippamutto'si sabbadhi
sambadhapatippanno'smi
tassa me saranam bhava.
மெய்ஞ்ஞானம் பெற்ற வீரரே போற்றி!
முழுமையாகச் சுதந்திரமடைந்தவர் நீங்கள்.
நான் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளேன்.
எனக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் தருவீர்களாக.
Homage to you, Enlightened Hero,
you who are completely free.
I have fallen into great distress,
be my refuge and my shelter.
3. Passam'aham devamanussaloke
akiñcanam brahmanam iriyamanam
tam tam namassami samantacakkhu
pamunca mam Sakka kathamkathahi.
தேவரும் மனிதரும் வாழும் இவ்வுலகில்
இந்த உண்மையான அந்தணரை, எளிமையானவரைக் காண்கிறேன்.
எல்லாம் காண்பவரே, உம்மை வணங்குகிறேன்.
எனவே சக்கரே, [1] எனது சந்தேகங்களிலிருந்து என்னை விடுவியுங்கள்.
In the world of gods and men, I see
this brahman true, this simple man.
You I worship, All-seeing One,
so free me Sakka,[1] from my doubts.
4. Anusasa brahme karunayamano
vivekadhammam yam aham vijaññam
yathaham akaso'va avyapajjamano
idh'eva santo asito careyyam.
பிரம்மரே, [2] கருணையின் காரணமாக மேன்மையான தம்மத்தை
நான் புரிந்து கொள்ள எனக்குப் போதியுங்கள்.
பின் வேறு எதையும் சார்ந்திராமல்,
முகில் கூட்டம் இல்லாத வானத்தைப் போல தெளிவாக வாழ்வேன்.
O Brahma,[2] out of compassion teach me
the lofty Dhamma so I may understand,
and relying on nothing else,
may live unclouded like the sky.
5. Ye ca samkhatadhammase
ye ca sekha puthu idha
tesam me nipako iriyam
puttho pabruhi marisa.
தம்மத்தை அறிந்தவரும்
அதில் பயில்வோரும்:
ஓ! ஞானமும் உண்மையான அருளும் கொண்டவரே,
அவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதைப் பற்றிக் கூறவும்.
Those who have understood the Dhamma
and those who train themselves in it:
O wise and truly gracious one,
tell me how they live their lives.
Notes :
விளக்கம்:
1. Sakka (Sakya): the Buddha's clan name.
சக்க (சாக்கிய): புத்தரின் குலப் பெயர்.
2. Brahma: he addresses the Buddha by the name of a deity.
பிரம்ம: புத்தரை தெய்வப்பெயர்கொண்டு அழைக்கிறார்.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
2. தம்மவக்க (தம்மம்)
Dhammavagga (Dhamma)
6. Kittayissami te dhammam
ditthe dhamme anitiham
yam viditva sato caram
tare loke visattikam.
உங்களுக்கு ஒரு தம்மத்தைக் கற்பிக்கப் போகிறேன்,
எங்கோ கேள்விப்பட்டதல்ல இது, நேரடியாகக் காணக் கூடியது.
யாரெல்லாம் அதைக் கண்டு, அறிந்து,
கடைப்பிடியுடன் அதன் வழி நடக்கின்றனரோ
அவர்கள் இந்த உலகிற்கான வேட்கைக்கு அப்பால் செல்வார்கள்.
I will teach you a Dhamma,
not hearsay but to be directly seen.
Whoever discovers it and knows it,
and lives by it with mindfulness,
will transcend craving for the world.
7. Suvijano bhavam hoti
suvijano parabhavo
Dhammakamo bhavam hoti
dhammadessi parabhavo.
வாழ்க்கையில் செழிப்பு தெளிவாகத் தெரிகிறது,
வாழ்க்கையில் சிதைவும் தெளிவாகத் தெரிகிறது:
தம்மத்தை நேசிப்பவன் செழிப்படைகிறான்,
தம்மத்தை வெறுப்பவன் சிதைவடைகிறான்.
Prosperity in life is plain,
decline in life is also plain:
one who loves the Dhamma prospers,
one who hates the Dhamma declines.
8. Yo ca dhammam abhiññaya
dhammam aññaya pandito
rahado va nivato ca
anejo vupasammati.
தம்மத்தை முழுமையாக அறிந்து
ஞானத்துடன், ஏக்கங்களிலிருந்து விடுபட்ட அறிவாளி
எல்லா ஆசைகளையும் கைவிட்டு அமைதி காண்கிறான்,
காற்றால் கிளர்ச்சியடையாத தெளிந்த குளத்தைப்போல.
Thoroughly understanding the Dhamma
and freed from longing through insight,
the wise one rid of all desire
is calm as a pool unstirred by wind.
9. Yesam dhamma asammuttha
paravadesu na niyare
te sambuddha sammadañña
caranti visame samam.
தம்மத்தைத் தெளிவாக அறிபவர்கள்
மற்ற கோட்பாடுகளைக் கேட்டு மனம் மாறுவதில்லை;
முழுமையான அறிவோடு முழு ஞானம் பெற்று
சமமற்றவர் மத்தியில் சமமாக நடக்கின்றனர்.
Those to whom the Dhamma is clear
are not led into other doctrines;
perfectly enlightened with perfect knowledge,
they walk evenly over the uneven.
10. Na udakena suci hoti
bahv ettha nhayati jano
yamhi saccañ ca dhammo ca
so suci so ca brahmano.
பலர் இங்கு நீராடினாலும், [3]
நீரினால் ஒருவர் தூய்மையடைவதில்லை,
ஆனால் வாய்மையும், தம்மமும் கொண்டவன்
தூய்மையானவன், அவனே பிராமணன்.
Not by water is one made pure
though many people may here bathe,[3]
but one in whom there is truth and Dhamma,
he is pure, he is a brahman.
11. Ujuko nama so maggo
abhaya nama sa disa
ratho akujano nama
dhammacakkehi samyuto.
மார்க்கம் "நேரானது" எனக் கூறப்படுகிறது,
செல்லும் இடம் "பயமற்றது";
வண்டி "சப்தமில்லாதது";
அதன் சக்கரங்கள் தான் நன்முயற்சி.
The path is called "straight,"
without fear" is the destination;
the carriage is called "silent"
and its wheels are right effort.
12. Hiri tassa apalambo
saty-assa parivaranam
dhammaham sarathim brumi
sammaditthipure javam.
உணர்வுதான் (அறி நிலை) தண்டவாளங்கள்
நற்கடைப்பிடியே ஆசன விரிப்பு,
தம்மம் தான் ஓட்டுனர்
நற் காட்சியே முன்னால் ஓடுவது.
Conscience is the rails and
mindfulness the upholstery,
Dhamma is the driver and
right view runs ahead of it.
13. Yassa etadisam yanam
itthiya purisassa va
sa ve etena yanena
nibbanassa'eva santike.
ஆணாக இருப்பினும் சரி,
பெண்ணாக இருப்பினும் சரி,
இந்த வண்டியில் பயணம் செய்வோர்
நிப்பாண நிலையை நிச்சயம் அணுகுவார்.
And whether it be a woman,
or whether it be a man,
whoever travels by this carriage
shall draw close to Nibbana.
14. Ye keci osadha loke
vijjanti vividha bahu
dhammosadhasamam na'tthi
etam pivatha bhikkhavo.
உலகில் உள்ள பல்வேறு விதமான
மருந்துகளுள்,
தம்மம் என்னும் மருந்தைப்போல்
வேறேதும் இல்லை:
எனவே துறவிகளே, இதனை அருந்துங்கள்.
Of all the medicines in the world,
manifold and various,
there is none like the medicine of Dhamma:
therefore, O monks, drink of this.
15. Dhammosadham pivitvana
ajaramarana siyum
bhavayitva ca passitva
nibbuta upadhikkhaye.
தம்மம் என்னும் இந்த மருந்தை அருந்தியபின்,
நீங்கள் காலத்தைக் கடந்து மரணத்திற்கு அப்பால் சென்று விடுவீர்கள்;
வாய்மையைக் கண்டும், அதனை வளர்த்தும்,
வேட்கையிடமிருந்து விடுபட்டு, தாகத்தைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
Having drunk this Dhamma medicine,
you will be ageless and beyond death;
having developed and seen the truth,
you will be quenched, free from craving.
Notes:
விளக்கம்:
3. The Buddha's contemporaries believed that people could be purified by bathing in sacred rivers.
புத்தர் வாழ்ந்த காலத்தில் இருந்த வேறு சில ஆசிரியர்கள், மக்கள் புனித ஆறுகளில் குளித்துத் தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பினர்.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
3. கிலேசவக்க (மாசுகள்/கிலேசங்கள்)
Kilesavagga (The Defilements)
16. Kamayogena samyutta
bhavayogena cubhayam
ditthiyogena samyutta
avijjaya purakkhata
satta gacchanti samsaram
jatimaranagamino.
அவாவென்ற கட்டு, பவம் என்ற முடிச்சு,
தவறான கருத்துக்கள் என்ற இடையூறு,
அறியாமை என்ற நுகத்தடி,
இவற்றால் சுழற்றப்படும் உயிரினங்கள் சம்சாரத்தில் உழன்று
அதன் விளைவாக இறந்த பின்பும் மறுபிறப்பெடுக்கின்றனர்.
Bound by desire, tied to becoming,
fettered tightly by false opinions,
yoked to ignorance, whirled around:
thus beings wander through samsara,
dying only to be born again.
17. Na hiraññasuvannena
parikkhiyanti asava
amitta vadhaka kama
sapatta sallabandhana.
தங்கமும், அச்சிட்ட நாணயமும்
கிலேசங்களை மறைக்கப் போவதில்லை.
புலன் இன்பங்களே எதிரிகள், கொலைகாரர்கள்,
தாக்கும் அம்புகள், இறுக்கமான கட்டுகள்.
Neither gold nor minted coins
can make the defilements disappear.
Sense desires are enemies and killers,
hostile darts, rigid bonds.
18. Ummadana ullapana
kama cittapamathino
sattanam samkilesaya
khippam marena odditam.
அவா அலைக்கழிக்கிறது, ஏமாற்றுகிறது,
மனச்சஞ்சலத்திற்குக் காரணமாகிறது.
உயிரினங்களைச் சிக்கவைக்க, அவர்கள் தூய்மையைக் கெடுக்க
மாரன் [4] வீசிய மாயவலை அது.
Desire is agitating and deceiving,
a source of mental pain,
a net cast out by Mara[4]
to entangle and defile beings.
19. Pabbatassa suvannassa
jatarupassa kevalo
dvitta va nalam ekassa
iti vidva samañ care.
தங்கத்தில் இழைத்த ஒரு மலையாக இருந்தாலும்,
அதை இரட்டிப்பாக்கினாலும்
ஒரு மனிதனைக்கூட திருப்திப் படுத்த அது போதுமானதாகாது:
இதை அறிந்து அதன்படி (அறிவோடு) வாழ்.
Were there a mountain all made of gold,
doubled that would not be enough
to satisfy a single man:
know this and live accordingly.
20. Kodhano dubbanno hoti
atho dukkham pi seti so
atho attham gahetvana
anattham adhipajjati
tato kayena vacaya
vadham katvana kodhano.
கோபமுள்ள மனிதன் எவ்வளவு அவலட்சனமானவன் என்பதைப் பார்!
அவன் தூக்கமும் நிறைவற்றதாக உள்ளது;
செல்வத்தில் செழித்தும், அவன் எப்போதும் ஏழ்மையிலேயே உள்ளான்.
கோபத்தால் நிறைக்கப்பட்ட அவன், தன்
உடலாலும் பேச்சாலும் பிறரைக் காயப்படுத்துகிறான்.
How ugly is the angry man!
His sleep is without comfort;
despite his wealth he is always poor.
Filled with anger as he is, he wounds
by acts of body and speech.
21. Hanta labhati hataram
jetaram labhati jayam
akkosako ca akkosam
rosetarañ ca rosako
atha kamma vivattena
so vilutto vilumpati.
உயிரெடுத்தவனுக்கு உயிர்பறிப்பவன் கிடைக்கிறான்,
வெற்றிகொண்டவனுக்கு வெற்றி கொள்பவன் கிடைக்கிறான்,
வெறுப்பவன் வெறுக்கப் படுகிறான்.
ஆக, தன் செய்கையின் காரணமாகக்
கெடுப்பவன் கெடுக்கப்படுகிறான்.
One who kills gets a killer,
one who conquers gets a conquerer,
one who reviles gets reviled.
Thus as a result of his own actions
the spoiler will in turn be spoiled.
22. Natth'añño ekadhammo pi
yeneva nivuta paja
samsaranti ahorattam
yatha mohena avuta.
அறியாமை:
இதுவே மனித இனத்தின் முதன்மையான
இடையூறு,
இதுவே இரவும் பகலும் அவனை அலைந்து திரிய வைக்கிறது.
There is no other single thing
by which the human race is hindered,
by which it wanders day and night,
so much as by this: delusion.
23. Imesu kira sajjanti
eke samanabrahmana
viggayha nam vivadanti
jana ekangadassino.
எப்படியெல்லாம் பற்றுக் கொள்கின்றனர்!
எப்படி எல்லாம் சச்சரவு செய்கின்றனர்!
எனினும் தாங்கள் துறவிகளென்றும், பிராமணரென்றும் கூறிக்கொள்கின்றனரே?
தங்கள் கருத்தோடு பற்றுக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு
அவர்கள் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கின்றனர்.
How they cling and how they wrangle,
yet claim to be recluses and brahmans.
Quarreling and clinging to their opinions,
they see only one side of things.
24. Ye ca rattim diva yutta
sammasambuddhasasane
te nibbapenti ragaggim
niccam asubhasaññino.
இரவு பகலாகப் புத்தரின் போதனைகளை
முயன்று கடைப்பிடிப்பவர்,
காமம் என்ற எரியும் நெருப்பை,
தூய்மையற்ற அதன் குறைப்பாட்டை
அறிந்து அணைக்கின்றனர்.
Those who apply themselves, day and night
to the teachings of the Buddha
will quench the burning fire of lust
by the perception of the impure.
25. Dosaggim pana mettaya
nibbapenti naruttama
mohaggim pana paññaya
yayam nibbedhagamini.
மேன்மையானோர், வெறுப்பு என்ற தீயை அன்பினாலும்,
மயக்கம் (பேதமை,அறியாமை) என்ற தீயை அறிவினாலும் அணைக்கின்றனர்.
அவர்கள் அறியாமையை வாய்மைக்கு எடுத்துச் செல்லும்
மெய்ஞ்ஞானத்தைக் கொண்டு முடிக்கின்றனர்.
By love they will quench the fire of hate,
by wisdom the fire of delusion.
Those supreme men extinguish delusion
with wisdom that breaks through to truth.
விளக்கம்:
Notes:
4. Mara: the Tempter, the Evil One.
மாரன்: பொல்லாதவன். புலன் இன்பங்களைத் தூண்டுபவன்.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
4. தானவக்க (கொடை)
Danavagga (Giving)
26. Na samane na brahmane
na kapaniddhike na vanibbake
labbhana samvibhajeti
annam panañca bhojanam
tam ve avutthikasamo'ti
ahu nam purisadhamam.
ஒரு இழிகுணத்தான் துறவிகளிடமும், பிராமணர்களிடமும்,
ஏழைகளிடமும் அல்லது தேவைப்படுவோரிடமும்
தனது உணவைப் பகிர்ந்து கொள்வதில்லை.
அவர்களுக்குப் பானங்களும் வாழ்வுக்குத் தேவையானவைகளையும் கொடுப்பதில்லை.
அத்தகைய சுயநலவாதி
ஒரு பஞ்சத்தைப்போல, மழையில்லா வானத்தை போல என்று மக்கள் கூறுவர்.
Not with recluses or brahmans,
neither with the poor and needy
does the base man share his food
or give any drink or sustenance.
People say that selfish man
is like a drought, a rainless sky.
27. Ekaccanam na dadati
Ekaccanam pavecchati
tam ve padesavassiti
ahu medhavino jana.
தனது செல்வத்தைச் சிலரோடு பகிர்ந்து கொண்டு
ஆனால் பிறருக்கு மகிழ்ச்சியோடு பகிர்ந்தளிக்காதவன்,
ஓரிடத்தில் மட்டுமே பெய்யும் மழையைப்போல
என்று சான்றோர் கூறுவர்.
One who shares his wealth with some,
but does not gladly give to others,
is only like a local shower:
in such a way the wise describe him.
28. Subhikkhavaco puriso
sabbabhutanuhampako
amodamano pakireti
detha detha ti bhasati.
ஆனால் மற்றவர் மேல் உள்ள கருணையின் காரணமாகத்
தாராளமான பரிசுகளை, எப்போதும் "கொடு, கொடு"
என்று கேட்பவர்களுக்கு இங்கேயும் அங்கேயும்
மகிழ்ச்சியோடு அள்ளிக் கொடுப்பவன் -
But one who rains down bountiful gifts,
gladly giving here and there
out of compassion for all beings,
and who always says "Give, give" —
29. Yathapi megho thanayitva
gajjayitva pavassati
thalam ninnañca pureti
abhisandanto varina
evam eva idh'ekacco
puggalo hoti tadiso.
இப்படிப் பட்டவன்
மழை நிரம்பிய பெருமேகம்
இடியுடன் கொட்டும் மழையின்
புத்துயிர் தரும் தண்ணீர்
மேடு பள்ளங்களையெல்லாம்
நனைத்துக் குளிர்விப்பது போலப்
பாகுபாடு பாராத தயாளன் ஆவான்.
This type of person is like
a giant cloud filled with rain,
thundering and pouring down
refreshing water everywhere,
drenching the highlands and lowlands too,
generous without distinctions.
30. Dhammena samharitvana
utthanadhigatam dhanam
tappeti annapanena
samma satte vanibakke.
நேர்மையாகச் சேர்த்த செல்வத்தை,
தனது சொந்த முயற்சியினால் பெற்ற செல்வத்தைக் கொண்டு,
தேவைப்படுவோரோடு
உணவையும் பானங்களையும்
பகிர்ந்து கொள்கிறான்.
With his wealth collected justly,
won through his own efforts,
he shares both food and drink
with beings who are in need.
31. Yathapi kumbho sampunno
yassa kassaci adhokato
vamate udakam nissesam
na tattha parirakkhati.
நிறைகுடம்
யார் அதைக் கவிழ்த்தாலும்
அதில் உள்ள நீர் முழுவதையும் கொட்டி விடுகிறது,
எதையும் மீதி வைத்துக் கொள்வதில்லை.
Just as a pot filled with water
if overturned by anyone,
pours out all its water
and does not hold any back.
32. Tath'eva yacke disva
hinamukkatthamajjhime
dadahi danam nissesam
kumbho viya adhokato.
அதே போலத் தேவைப்படுவோரைக் கண்டால்
அவர்கள் கீழானவர், நடுத்தரமானவர் அல்லது மேலானவர் -
எவராக இருந்தாலும், எதையும் பின் வைத்துக் கொள்ளாமல்
கவிழ்க்கப்பட்ட குடத்தைப்போல அனைத்தையும் அள்ளிக் கொடுங்கள்.
Even so, when you see those in need,
whether low, middle or high,
then give like the overturned pot,
holding nothing back.
33. Danañ ca peyyavajjañ ca
atthacariya ca ya idha
samanattata dhammesu
tattha tattha yatharaham
ete kho sangaha loke
rathass'ani va yayato.
தானம், அன்பான வார்த்தைகள்,
மற்றவருக்கு நன்மை செய்வது,
எல்லோரையும் சமமாக நடத்துவது:
இவை தேர்ச்சக்கரத்திற்கு அச்சாணி போல
உலகிற்கான அனுதாபக் கட்டுகளாகும்.
Generosity, kind words,
doing a good turn for others,
and treating all people alike:
these bonds of sympathy are to the world
what the lynch-pin is to the chariot wheel.
34. Annado balado hoti
vatthado hoti vannado
yanado sukhado hoti
dipado hoti cakkhudo.
உணவு கொடுத்தால் ஒருவருக்கு வலிமை தருகிறார்,
உடை கொடுத்தால் ஒருவருக்கு அழகு தருகிறார்,
விளக்குக் கொடுத்தால் ஒருவருக்குப் பார்வை தருகிறார்,
வாகனம் கொடுத்தால் ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்.
Giving food one gives strength,
giving clothes one gives beauty,
giving lamps one gives sight,
giving transport one gives delight.
35. So ca sabbadado hoti
yo dadati upassayam
amatam dado ca so hoti
yo dhammam anusasati.
தங்க இடம் கொடுப்பவர் அனைத்தும் தருகிறார்;
ஆனால் தம்மத்தை -
புத்தரின் அருமையான போதனைகளைக் கற்பிப்பவர் -
அப்படிப்பட்டவர் தருவது அமிர்தத்தை.
Giving shelter one gives all;
but one who instructs in the Dhamma,
the excellent teaching of the Buddha,
such a person gives ambrosia.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
5. சீல வக்க (ஒழுக்கம்)
Silavagga (Virtue)
36. Silam ev'idha sikkhetha
asmim loke susikkhitam
silam hi sabbasampattim
upanameti sevitam.
இவ்வுலகில் ஒருவர் ஒழுக்கத்தைத் தூய்மைப் படுத்த
அக்கறையோடு பயிற்சி செய்ய வேண்டும்;
ஒழுக்கத்தை நன்கு விளையச் செய்தால்
எல்லா வெற்றிகளும் கைக்கு எட்டும்.
Here in the world one should train
carefully to purify virtue;
for virtue when well cultivated
brings all success to hand.
37. Yo panam natipateti
musavadam na bhasati
loke adinnam nadiyati
paradaram na gacchati.
உயிரினங்களுக்குத் தீமை செய்யாதிருத்தல்,
பொய் பேசாதிருத்தல்,
கேட்காமல் எதையும் எடுக்காதிருத்தல்,
பிறர் மனை நயவாதிருத்தல் -
Not harming living beings,
not speaking lies, taking nothing
in all the world unasked, nor
going to the wives of other men.
38. Suramerayapanam ca
yo naro nanuyunjati
pahaya pañca verani
silava iti vuccati.
ஒரு போதும் போதை தரும் பானங்கள் அருந்தாதிருத்தல்:
இந்த ஐந்து தீங்கு பயக்கும் செயல்களைக் கைவிடுபவன்,
அவற்றில் ஈடுபடாதவன்
உண்மையிலேயே ஒழுக்கமுடையவனாவான்.
And never drinking intoxicants:
One who gives up these five harmful acts
and does not engage in them
is truly called a virtuous man.
39. Adi silam patittha ca
kalyananañ ca matukam
pamukham sabbadhammanam
tasma silam visodhaye.
ஒழுக்கமே அடித்தலம்,
நல்லதற்கும் அழகானதற்கும்
முன்னோடி, ஆரம்பம்;
எனவே ஒருவர் ஒழுக்கத்தைத் தூய்மைப்
படுத்திக் கொள்ள வேண்டும்.
Virtue is the foundation,
the forerunner and origin
of all that is good and beautiful;
therefore one should purify virtue.
40. Silam balam appatimam
silam avudham uttamam
silam abharanam settham
silam kavacam abbhutam.
ஒழுக்கம் பெரும் சக்தி,
ஒழுக்கம் பெரும் ஆயுதம்,
ஒழுக்கம் சிறந்த ஆபரணம்,
ஒழுக்கம் அருமையான கவசம்.
Virtue is a mighty power,
Virtue is a mighty weapon,
Virtue is the supreme adornment,
Virtue is a wonderful armour.
41. Na jacca vasalo hoti
na jacca hoti brahmano
kammana vasalo hoti
kammana hoti brahmano.
பிறப்பினால் ஒருவர் தாழ்ந்தவர் ஆவதில்லை.
பிறப்பினால் ஒருவர் புனிதமடைவதில்லை.
செய்கையே ஒருவரைத் தாழ்ந்தவராக்குகிறது.
செய்கையே ஒருவரைப் புனிதமானவராக்குகிறது.
One is not low because of birth
nor does birth make one holy.
Deeds alone make one low,
deeds alone make one holy.
42. Ananganassa posassa
niccam sucigavesino
valaggamattam papassa
abbhamattam va khayati.
தீமை இல்லாதவனுக்கு,
எப்போதும் தூய்மையை வளர்ப்பவனுக்கு,
முடியின் நுனிஅளவு செய்த தவறும்
மழை மேகம் போலப் பெரிதாகத் தோன்றும்.
To one who is without evil,
always striving for purity,
a wrong the size of a hair tip
seems as big as a rain cloud.
43. Puññam eva so sikkheyya
ayataggam sukhundrayam
danañca samacariyañca
mettacittañca bhavaye.
நிலைத்து நீடிக்கும், மகிழ்ச்சி தரும்
நல்லதைச் செய்யப் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.
தயாள குணத்தை, அமைதியான வாழ்வை,
எல்லையற்ற அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Train yourself in doing good
that lasts and brings happiness.
Cultivate generosity, the life of peace,
and a mind of boundless love.
44. Silam ajarasa sadhu
saddha sadhu adhitthita
pañña naranam ratanam
puññam corehyahariyam.
ஒழுக்கம் தரும் நல்லதிர்ஷ்டம் மறைவதில்லை,
நம்பிக்கையும், பெரும் நன்மையும் கொண்டுவரும்.
மெய்ஞ்ஞானமே ஒரு மனிதனின் மதிப்புள்ள இரத்தினக்கல்,
சேர்த்த புண்ணியத்தைத் திருடனால் ஒருபோதும் திருட முடியாது.
The good luck of virtue never fades,
faith also brings great good.
Wisdom is man's most precious gem,
merit no thief can ever steal.
45. Sabbada silasampanno
paññva susamahito
ajjhattacinti satima
ogham tarati duttaram.
எல்லா ஒழுக்கங்களிலும் முழுமையானவராக,
நிறைந்த மெய்ஞ்ஞானத்தோடும்,
நிதானமான மனத்தோடும்
அகத்தில் பார்த்தவாறு
எப்போதும் நற்கடைப்பிடியுடன் -
ஒருவர் பொங்கும் வெள்ளத்தைக் கடக்கிறார்.
In every virtue all-accomplished,
with wisdom full and mind composed,
looking within and ever mindful -
thus one crosses the raging flood.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *