நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
6. வாச்சவக்க (மொழி)
Vacavagga (Speech)
46. Purisassa hi jatassa
kuthari jayate mukhe
yaya chindati attanam
balo dubbhasitam bhanam.
பிறக்கும் ஒவ்வொரு முட்டாளின்
வாயிலும், ஒரு கோடாரி கூடவே தோன்றுகிறது.
தீய பேச்சின் காரணமாக அதைக் கொண்டு அவன் தன்னைத் தானே
வெட்டிக் கொள்கின்றான்.
Every fool who is born
has an axe within his mouth
with which he cuts himself
when he uses wrong speech.
47. Tam eva vacam bhaseyya
yay'attanam na tapaye
pare ca na vihimseyya
sa ve vaca subhasita.
தனக்குத் தீங்கிழைக்காத வார்த்தைகளையும்,
பிறருக்குத் தீங்கிழைக்காத வார்த்தைகளையும்
மட்டுமே ஒருவன் பேச வேண்டும்:
அதுவே உண்மையில் அழகான பேச்சாகும்.
One should utter only words
which do no harm to oneself
and cause no harm for others:
that is truly beautiful speech.
48. Piyavacam eva bhaseyya
ya vaca patinandita
yam anadaya papani
paresam bhasate piyam.
அன்பான வார்த்தைகளைப் பேசுங்கள். மகிழ்ச்சியூட்டும்,
வரவேற்கப்படக்கூடிய வார்த்தைகளைப் பேசுங்கள்.
எவர் மீதும் வெறுக்கத்தக்க வார்த்தைகளைப் பேசாதீர்கள்;
எப்போதும் மற்றவரிடம் அன்பான வார்த்தைகளைப் பேசுங்கள்.
Speak kind words, words
rejoiced at and welcomed,
words that bear ill-will to none;
always speak kindly to others.
49. Tass'eva tena papiyo
yo kuddham patikujjhati
kuddham appatikujjhanto
sangamam jeti dujjayam.
நிந்திக்கப்படும் போது எதிர்ப்பவனே
இருவரில் மோசமானவன்.
எதிர்க்காதவன் வெல்வதற்குக்
கடினமான போரில் வெற்றி பெறுகிறான்.
The worse of the two is he
who, when abused, retaliates.
One who does not retaliate
wins a battle hard to win.
50. Jayam ve maññati balo
vacaya pharusam bhanam
jayañc'ev'assa tam hoti
ya titikkha vijanato.
கடுமையான பேச்சால் மற்றவரை அடக்கும்போது,
முட்டாள் வெற்றி கொண்டதாக நினைக்கின்றான்.
ஆனால் பொறுத்துக் கொள்ளத் தெரிந்தவன் மட்டுமே
வெற்றி பெற முடியும்.
The fool thinks he has won a battle
when he bullies with harsh speech,
but knowing how to be forbearing
alone makes one victorious.
51. Yam samano bahu bhasati
upetam atthasamhi tam
janam so dhammam deseti
janam so bahu bhasati.
துறவி நீண்ட நேரம் பேசும்போது
அது நோக்கத்தைப் பற்றிய பேச்சாக மட்டுமே இருக்கும்.
தெரிந்தே அவர் தம்மத்தைப் போதிக்கிறார்,
தெரிந்தே அவர் நீண்ட நேரம் பேசுகிறார்.
When the recluse speaks much
it is only to speak about the goal.
Knowingly he teaches the Dhamma,
knowingly he speaks much.
52. Yo ve na byadhati patva
parisam uggahavadinam
na ca hapeti vacanam
na ca chadeti sasanam.
கற்க விரும்புவோருக்குப் போதனையைக் கற்பிக்கும்போது
தயக்கமில்லாமல், அறிவோடு,
குழப்பாமல், தெளிவாகப்
பேச வேண்டும்.
If one addresses those who wish
to learn, without wavering, imparting
understanding, opening up and not
obscuring the teaching.
53. Asanditthañ ca bhanati
pucchito na ca kuppati
sa ve tadisako bhikkhu
duteyyam gantum arahati.
தயக்கம் இல்லாமல் பேசும் துறவி,
கேள்வி கேட்கப்படும் போது
கோபப்படாமல் இருக்கும் துறவி
போதனையைப் பிரகடனஞ் செய்யத்
தகுந்தவர் ஆவார்.
Speaking without hesitation nor
getting angry when asked a question,
a monk like this is worthy
to proclaim the teachings.
54. Nabhasamanam jananti
missam balehi panditam
bhasamanañ ca jananti
desentam amatam padam
bhasaye jotaye dhammam
pagganhe isinam dhajam.
அவர் பேசவில்லையென்றால், மற்றவருக்கு அவரைப்பற்றித் தெரியவராது;
அவர் முட்டாள்கள் மத்தியில் உள்ள
அறிவாளியாகவே இருந்திருப்பார்.
ஆனால் அவர் மரணமற்ற நிலைபற்றிய போதனைகளை
விளக்கும் போது மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்கின்றனர்.
எனவே அவர் தம்மத்திற்கு ஒளியூட்டட்டும்;
முனிவரின் (புத்தரின்) அருட்கொடியை உயர்த்திப் பிடிக்கட்டும்.
If he does not speak up, others know
him not; he is just a wise man mixed
up with fools. But if he speaks about
and teaches the Deathless, others will
know him. So let him light up the Dhamma,
let him lift the sage's banner high.
55. Yam buddho bhasati vacam
khemam nibbanapattiya
dukkhass 'antakiriyaya
sa ve vacanam uttama.
புத்தர் பேசும் வார்த்தைகள்
பாதுகாப்புக்கு எடுத்துச் செல்கிறது,
துக்கத்தை முடித்து வைக்கிறது,
நிப்பாண நிலையை அடையச் செய்கிறது.
உண்மையில், இதுவே மேன்மையான மொழியாம்.
The Buddha speaks words that lead
to the winning of security, the ending
of sorrow and the attaining of Nibbana.
Truly, this is the speech supreme.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
7. போகவக்க (செல்வம்)
Bhogavagga (Wealth)
56. Jivatevapi sappañño
api vittaparikkhaya
paññaya ca alabhena
vittavapi na jivati.
செல்வத்தை இழக்க நேரிட்டாலும்
அறிவாளி தொடர்ந்து வாழ்கிறான்.
ஆனால் மெய்ஞ்ஞானம் இல்லாத
பணக்காரன் இப்போதும்கூட வாழ்விழந்தவனே.
The wise man continues to live
even if he should lose his wealth.
But the rich man without wisdom
is not alive even now.
57. Appakena pi medhavi
pabhatena vicakkhano
samutthapeti attanam
anum aggiva santhamam.
சிறு தொகையோடு துவங்கினாலும்
அறிவுடையார் திறமையாக அதனைப் பெருகச் செய்கின்றனர்,
தீடிரென்று அடிக்கும் காற்று
தீப்பொறியையும் பெருநெருப்பாகப் பற்றவைப்பது போல.
Starting off with little wealth,
the wise man skillfully increases it,
just as a sudden draft of wind
can make a spark of fire grow.
58. Susamvihitakammantam
kalutthayam atanditam
sabbe bhogabhivaddhanti
gavo sausabha-m-iva.
தனது செயற்பாடுகளை நன்கு திட்டமிட்டவன்
அதிகாலை எழுந்து கடுமையாக உழைக்கின்றான்.
அதனால் அவன் செல்வம் உயர்கிறது,
காளையோடு அடைக்கப்பட்ட பசுக்களைப்போல.
If he plans his project well,
rises early and works untiringly,
all his wealth will increase
like cows penned in with a bull.
59. Pandito silasampanno
jalam aggiva bhasati
bhoge samharamanassa
bhamarass'eva iriyato.
ஒழுக்கமும் அறிவும் உடையவன்
கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போலப் பிரகாசிக்கிறான்;
தேனி தேனைச் சேகரிப்பதுபோல்
எவருக்கும் தீங்கு விளைவிக்காமல் செல்வத்தைச் சேர்க்கிறான்.
One who is virtuous and wise
shines forth like a blazing fire;
like a bee collecting nectar
he acquires wealth by harming none.
60. Catudha vibhaje bhoge
sa ve mittani ganthati
ekena bhoge bhunjeyya
dvihi kammam payojaye
catutthañ ca nidhapeyya
apadasu bhavissati.
தன் செல்வத்தை நான்காகப் பிரித்து
ஒரு பாகத்தைத் தனது தேவைக்காகவும்,
இரண்டு பாகங்களைத் தன் தொழிலை விரிவு படுத்தவும்,
நான்காவது பங்கைத் தனது அவசர
காலத் தேவைக்காகவும் ஒதுக்கி வைக்கின்றான்.
எனவே அவன் தன் நட்பு வட்டத்தை வளர்த்துக் கொள்கிறான்.
He divides his wealth in four
and thus he wins friendship.
One portion he uses for his needs,
two portions for his business,
the fourth portion he saves
for times of emergency.
61. Susamvihitakammanta
sangahitaparijjana
bhattu manapam carati
sambhatam anurakkhati.
தனது பணியில் அறிவோடும்,
செயல்திறன் மிக்கவளாகவும்,
மற்றவரோடு இணக்கத்துடன் பழகுபவளாகவும்
தனது கணவனுக்கு இனியவளாகவும் இருக்கின்றாள் மனைவி.
அவள் அவனது செல்வத்தை அக்கறையுடன் பாதுகாக்கின்றாள்.
Deft and capable at her work,
in harmony with other people,
a wife is pleasing to her husband
and carefully looks after his wealth.
62. Saddhasilena sampanna
vadaññu vitamacchara
niccam maggam visodheti
sotthanam samparayikam.
நம்பிக்கையும் ஒழுக்கமும் நிறைந்து
மென்மையாகப் பேசும்
சுயநலமற்ற பெண் எதிர்கால மகிழ்ச்சிக்கான
மார்க்கத்தைத் தூய்மைப் படுத்துகின்றாள்.
Endowed with faith and virtue,
speaking gently, free from selfishness:
such a woman purifies the pathway
leading to a future happiness.
63. Saddhadhanam siladhanam
hiri ottappiyam dhanam
sutadhanañ ca cago ca
pañña ve sattamam dhanam.
நம்பிக்கை என்ற செல்வமும், ஒழுக்கம் என்ற செல்வமும்,
உணர்வு என்ற செல்வமும், குறைகூறப்படுவதற்கு அஞ்சும் செல்வமும்,
படிப்பறிவு என்ற செல்வமும், தானம் என்ற செல்வமும்,
ஞானம் என்ற செல்வமுமே வாழ்க்கைக்குத் தேவையான ஏழு செல்வங்களாகும்.
The wealth of faith and virtue's wealth,
the wealth of conscience and fear of blame,
the wealth of learning and giving too,
and as the seventh, wisdom's wealth.
64. Yassa ete dhana atthi
itthiya purisassa va
adaliddo'ti tam ahu
amogham tassa jivitam.
இந்த உண்மையான புதையலைத்
தன்னகத்தே கொண்டவர்கள்
பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும்
அவர்கள் ஏழையும் இல்லை, அநாதையும் இல்லை.
அவர்கள் வாழ்ந்த வாழ்வு என்றும் வீண்போவதில்லை.
Those who have these treasures true,
be they women or be they men,
are not poor or destitute,
nor have their lives been lived in vain.
65. Patirupakari dhurava
utthata vindate dhanam
saccena kittim pappoti
dadam mittani ganthati.
யாரெல்லாம் கடுமையாக முயன்று
செயல் புரிகின்றனரோ, அவர்கள்
செல்வத்தைச் சேர்ப்பார்கள்;
வாய்மையினால் ஒருவர் நற்பெயர் பெறுவார்,
தானத்தினால் ஒருவர் நட்பைச் சேர்ப்பார்.
Whoever acts, strives and toils
shall acquire wealth;
by truthfulness one gains good repute,
and by giving one binds friends.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
8. மித்தவக்க (நட்பு)
Mittatavagga (Friendship)
66. Asant'assa piya honti
sante na kurute piyam
asantam dhammam roceti
tam parabhavato mukham.
தீயவரோடு சேர்வதும்,
தீயவர் வழி நடப்பதும்,
நல்லவர்களை நண்பர்களாகக் கொள்ளாததும்,
துக்கத்திற்கு வழி வகுக்கும்.
To be in communion with the bad,
and choose the ways of the bad,
to have no friends among the good,
this is a source of suffering.
67. Sabbhir eva samasetha
sabbhi kubbetha santhavam
satam saddhammam aññaya
pañña labbhati nannato.
நல்லவர்களோடு மட்டுமே நட்புக் கொள்ளுங்கள்,
நல்லவரோடு இணைந்திருங்கள்.
நல்லவர் போதிப்பதைக் கற்றுக் கொள்வது
வேறெதுவும் தராத நுண்ணறிவைத் தரும்.
Consort only with the good,
come together with the good.
To learn the teaching of the good
gives wisdom like nothing else can.
68. Putimaccham kusaggena
yo naro upanayhati
kusa pi puti vayanti
evam balupasevana.
அழுகிய மீன் துண்டைத்
தருப்பைப் புல்லின் நாரில் கோர்க்கும் போது
அந்தப் புல்லும் நாற்றமடிக்கும்:
முட்டாளைத் தொடர்பவனும் அது போலவே முட்டாளாகி விடுவான்.
If one strings a piece of putrid fish
on a blade of kusa grass,
the grass will soon smell putrid too:
the same with one who follows a fool.
69. Tagarañca palasena
yo naro upanayhati
patta pi surabhi vayanti
evam dhirupasevana.
சாதரண இலை ஒன்றில்
சாம்பிராணியைக் கட்டி வைத்தால்
அந்த இலையும் விரைவில் நறுமணம் பெறும்:
அது போலவே அறிவுடையாரைத் தொடர்பவரும் அறிவு பெறுவர்.
If one wraps frankincense,
in any ordinary kind of leaf,
the leaf will soon smell sweet too:
the same with one who follows the wise.
70. Tasma palasaputass'eva
natva sampatam attano
asante nupaseveyya
sante seveyya pandito.
இலை உதாரணத்தை நினைவிற்கொண்டு,
அதன் விளைவை அறிந்தவராக,
ஒருவர் அறிவுடையவரோடு
தோழமை கொள்ள வேண்டும், தீயவரோடு அல்ல.
Remembering the example of the leaf,
and understanding the results,
one should seek companionship
with the wise, never with the bad.
71. Sattho pathavato mittam
mata mittam sake ghare
sahayo atthajatassa
hoti mittam punappunam
sayam katani puññani
tam mittam samparayikam.
ஒரு தோழன் பயணம் செய்வோரின் நண்பன்,
தாய், வீட்டில் உள்ள நண்பர்,
தேவைப் படும் நேரங்களில் உதவி செய்பவர்
நல்ல நிலையான நண்பர்.
நாம் செய்த நல்ல காரியங்களே
வருங்காலத்தில் நமது உண்மையான நண்பராம்.
A companion is a traveler's friend,
a mother is a friend at home,
one who helps in time of need
is a good and steady friend.
And the good deeds done by oneself
are one's true friends in time to come.
72. Upakaro ca yo mitto
yo ca mitto sukhe dukkhe
atth'akkhayi ca yo mitto
yo ca mittanukampako.
எப்போதும் உதவி புரியும் நண்பர்,
துன்பத்திலும் இன்பத்திலும் உள்ள நண்பர்,
நல்ல புத்திமதி கூறும் நண்பர்,
அனுதாபம் காட்டும் நண்பர்.
A friend who always lends a hand,
a friend in both sorrow and joy,
a friend who offers good counsel,
a friend who sympathises too.
73. Ete pi mitte cattaro
iti viññaya pandito
sakkaccam payirupaseyya
mata puttam va orasam.
இவர்களே நான்கு வகையான உண்மை நண்பர்கள்:
அறிவுடையவர், அறிந்தவராக, இப்படிப்பட்ட
நண்பர்களைப் பேணி அவர்களுக்குப் பணி புரிவார்கள்,
தாய் தன் ஒரே குழந்தையைப் போற்றிப் பேணுவது போல.
These are the four kinds of true friends:
one who is wise, having understood,
will always cherish and serve such friends
just as a mother tends her only child.
74. Kalyanamitto yo bhikkhu
sappatisso sagaravo
karam mittanam vacanam
sampajano patissato
papune anupubbena
sabbasamyojanakkhayam.
நல்ல நண்பரைக் கொண்ட துறவி,
அவரிடம் மரியாதையோடும் பணிவுடனும் நடந்து கொள்பவர்,
நண்பர் கூறியது போல நடந்து கொள்பவர்,
கடைப்பிடியும் அறிவாற்றலும் தெளிவாக உள்ளவராக,
காலப்போக்கில் கட்டுகளிடமிருந்து விடுபடுவார்;
அவரது அனைத்துக் கட்டுகளும் அழிக்கப் பட்டுவிடும்.
The monk who has a lovely friend,
who pays respect and deference to him,
and acts as his friend advises,
with mindfulness and comprehension clear,
will in time be freed from bonds;
all his fetters will be destroyed.
75. Abbhatitasahayassa
atitagatasatthuno
n'atthi etadisam mittam
yatha kayagata sati.
நண்பரை இழந்த ஒருவருக்கு,
ஆசானை இழந்த ஒருவருக்கு,
உடல் மீது கடைப்பிடியுடன் இருப்பது போன்று
உலகில் வேறு எந்த நண்பரும் இல்லை.
For one whose friend has passed away,
for one whose teacher no more lives,
there is no other friend in this world
like mindfulness of the body.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
9. சுடவக்க (கற்பது)
Sutavagga (Learning)
76. Sussusa sutavaddhani
sutam paññaya vaddhanam
paññaya attham janati
nato attho sukhavaho.
கற்க விருப்பம் உள்ளபோது கற்பது வளர்கிறது.
கற்பது நுண்ணறிவை வளர்க்கிறது.
நுண்ணறிவால் நோக்கத்தைத்
தெரிந்து கொள்கிறோம்.
நோக்கத்தை அடைவதால்
மகிழ்ச்சியுறுகிறோம்.
Desire to learn increases learning;
learning makes wisdom increase.
By wisdom is the goal known;
knowing the goal brings happiness.
77. Bahussutam upaseyya
sutañ ca na vinasaye
tam mulam brahmacariyassa
tasma dhammadharo siya.
கற்றவரைத் தொடர வேண்டும்,
கற்பதற்கு அக்கறையின்றி இருக்கக் கூடாது,
ஏனென்றால் அதுவே புனித வாழ்வின் அடித்தலம்.
எனவே தம்மத்தைக் கசடறக் கற்றவராக இருக்க வேண்டும்.
One should follow the learned man,
and should not neglect learning,
for that is the foundation of the holy life.
Therefore be well versed in Dhamma.
78. Bahussutam dhammadharam
sappaññam buddhasavakam
nekkham jambonadass'eva
ko tam ninditum arahati
devapi nam pasamsanti
brahmunapi pasamsito.
கற்றவர், தம்மத்தை நன்கு தெரிந்தவர்,
உண்மையான அறிவாளி, புத்தரின் சீடர்.
அவர் மிகச் சிறந்த ஜம்பு பொன்னைப் போன்றவர்.
அவரில் குறையை யார் காணுவர்?
தெய்வங்களும் அவர் புகழைப் பாடுகின்றனர்;
பிரம்மனே அவரைப் போற்றுகின்றார். [5]
Learned, knowing the Dhamma,
truly wise, the Buddha's disciple
is like the finest gold of Jambu.
Who can find any blame in him?
Even the gods sing his praise;
Brahma himself sings his praise.[5]
79. Appassuto pi ce hoti
silesu susamahito
silato nam pasamsanti
nassa sampajjate sutam.
சிறிதே கற்றவர்,
ஆனால் ஒழுக்கத்தில் உறுதியுள்ளவர்.
பிறர் அவரது ஒழுக்கத்தை மட்டுமே போற்றுவார்கள்,
ஏனென்றால் அவர் கல்வி முழுமையற்றது.
If one who has little learning
is strong in virtue, others
will praise his virtue only,
because his learning is incomplete.
80. Bahusuto pi ce hoti
silesu samahito
silato nam garahanti
tassa sampajjate sutam.
பெருமளவு கற்றவர்,
ஆனால் ஒழுக்கத்தில் குறைபாடுள்ளவர்.
அவரது கல்வி முழுமையானதென்றாலும்
பிறர் அவர் நடத்தையைக் குறைகூறுவார்கள்.
If one who has much learning
is weak in virtue, others
will blame him for his conduct
though his learning is complete.
81. Bahussuto pe ce hoti
silesu susamahito
ubhayena nam pasamsanti
silato ca sutena ca.
பெருமளவு கற்றவர்,
ஒழுக்கத்திலும் உறுதியானவர்,
கல்வி மற்றும் ஒழுக்கம் இரண்டின்
காரணமாகவும் போற்றப் படுவார்.
But if one has much learning
and is also strong in virtue,
he will be praised for both
his virtue and his learning.
82. Bahussuto appasutam
yo sutenatimaññati
andho padipadharo'va
tath'eva patibhati mam.
கல்வியறிவு உள்ள ஒருவர் அவர் கற்ற கல்வியின் காரணமாகச்
சிறிதே படித்தவரை இழிவுபடுத்தினால்,
அவர் கையில் விளக்கை ஏந்தித் திரியும்
ஒரு முழுக்குருடரைப் போன்றவரே.
A learned man who, because of his learning,
despises one with little learning,
seems to me like a stone-blind man
walking around with a lamp in hand.
83. Tasma hi attahamena
mahantam abhikankhata
saddhammo garukatabbo
saram buddhana sasanam.
தனது உண்மையான முன்னேற்றத்தை விரும்புபவர்,
தனக்கு நன்மை உண்டாக வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்,
தம்மத்தைப் போற்ற வேண்டும்;
எப்போதும் புத்தரின் வார்த்தைகளை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.
One who loves his own true welfare,
who is concerned with his own good,
should pay homage to the Dhamma
and always remember the Buddha's words.
84. Samma manam panidhaya
samma vacam abhasiya
samma kammani katvana
kayena idha puggalo.
சரியாகச் செலுத்தப்பட்ட மனமும்,
சரியாகப் பேசப்பட்ட மொழியும் கொண்டவர்,
இங்கே உடலால் செய்வது
சரியான நல்ல செய்கைகளாம்.
Having a rightly directed mind,
speaking rightly spoken speech,
doing here with the body
only deeds that are right and good.
85. Bahussuto puññakaro
apasmim idha jivite
kayassa bheda sappañño
saggam so upapajjati.
குறைந்த வாழ்நாள் வாழ்ந்தாலும்
ஒருவர் கற்று, செய்யத் தக்கதைச் செய்பவர்,
அப்படிப்பட்ட அறிவாளி
நல்ல இடத்தில் மறுபிறப்பெடுப்பார்.
Learned, doing much that is worthy
even in a life that is short —
a wise person such as this
will be reborn in a happy place.
* * *
Notes:
[5] Brahma: A high divinity in the ancient Indian pantheon.
பிரம்மன்: பழங்கால இந்திய தெய்வங்களுள் ஒரு முக்கியமான தெய்வம்.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *