நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
18. Sukhavagga (Happiness)
சுகவக்க (மகிழ்ச்சி)
166. Yo pubbe karaniyani
paccha so katum icchati
sukha so dhamsate thana
paccha ca m-anutappati.
முன்னரே செய்திருக்க வேண்டியதைப்
பின்னர் செய்யலாம் என்று ஒத்திப் போடுபவன்,
மகிழ்ச்சியிலிருந்து விலகிச் செல்கிறான்.
பின் நெடுங்காலம் அதற்காக வருந்துவான்.
One who later wishes to do
the things he should have done before
falls away from happiness
and long afterwards repents.
167. Kodham chetva sukham seti
kodham chetva na socati
kodhassa visamulassa
madhuraggassa brahmana
vadham ariya pasamsanti
tam hi chetva na socati.
கோபத்தை வீழ்த்தினால் மகிழ்ச்சி காண்பீர்கள்,
கோபத்தை வீழ்த்தினால் துயர்ப்பட மாட்டீர்கள்,
ஏனென்றால் பல முகங்கொண்ட கோபத்தை
அதன் விஷ வேருடனும், கொடிய கொடுக்குடனும் வீழ்த்துவதை -
சான்றோர் புகழ்கின்றனர்;
கோபத்தை வீழ்த்திய ஒருவர்
மேலும் அழுவதில்லை.
Slay anger and you will be happy,
slay anger and you will not sorrow.
For the slaying of anger in all its forms
with its poisoned root and sweet sting —
that is the slaying the nobles praise;
with anger slain one weeps no more.
168. Yam pare sukhato ahu
tad ariya ahu dukkhato
yam pare dukkhato ahu
tad ariya sukhato vidu
passa dhammam durajanam
sammulh'ettha aviddasu.
மற்றவர் மகிழ்ச்சி எனக் குறிப்பிடுவதைச்
சான்றோர் துன்பம் என்கின்றனர்;
மற்றவர் துன்பம் எனக் குறிப்பிடுவதைச்
சான்றோர் மகிழ்ச்சி என்கின்றனர்;
புரிந்து கொள்ளக் கடினமான இந்தத் தம்மத்தைப் பாருங்கள்!
மூடர்களை முழுமையாகக் குழப்பி விடுகிறது.
What others call happiness,
the noble call pain;
what others call pain,
the noble call happiness.
Behold this Dhamma hard to comprehend
by which the dull are utterly baffled.
169. Sabbada va sukham seti
brahmano parinibbuto
yo na limpati kamesu
sitibhuto nirupadhi.
புனிதமான மனிதர்,
அகத்தில் விடுதலையோடு வாழ்பவர்,
புலன் இன்பங்களால் மாசுபடாதவர்,
எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார் -
பற்றிலிருந்து விடுபட்ட சஞ்சலமற்றவர் அவர்.
Always happy is the holy man
who is wholly free within,
who is not stained by sense desires —
cooled is he and free from clinging.
170. Yam ca kamasukham loke
yam c'idam diviyam sukham
tanhakkhayasukhassa te
kalam n'agghanti solasim.
புலன் ஆசையிலிருந்து வரும் இன்பம்,
சுவர்க்க வாழ்வின் இன்பம்,
இவை வேட்கையிலிருந்து விடுபட்ட பின் அடையும்
இன்பத்துக்குப் பதினாறில் ஒரு பங்குக்கும் ஈடாகாது.
The happiness of sensual lust
and the happiness of heavenly bliss
are not equal to a sixteenth part
of the happiness of craving's end.
171. Sabba asattiyo chetva
vineyya hadaye daram
upasanto sukham seti
santim pappuyya cetasa.
பற்றுகளைத் துண்டித்தவர்,
உள்ளத்து ஏக்கங்களை அடக்கியவர்,
அமைதியும் சாந்தமும் தவழ மகிழ்வோடு இருக்கின்றார்,
ஏனென்றால் அவர் மன நிதானத்தை
எட்டி விட்டவர்.
With all his attachments cut,
with the heart's pinings subdued,
calm and serene and happy is he,
for he has attained peace of mind.
172. Pamujjabahulo bhikkhu
dhamme buddhappavedite
adhigacche padam santam
sankharupasamam sukham.
புத்தரின் தம்மத்தில் மிகுந்த
ஆனந்தத்தைக் காணும் துறவி
சங்காரங்களை (எண்ணக் கட்டுமானங்கள்) அடக்கி
அமைதியையும், மகிழ்ச்சியையும் அடைவார்.
A monk who has abundant joy
in the Dhamma taught by the Buddha,
will attain peace and happiness,
with the calming of the constructs.
173. Sukho viveko tutthassa
sutadhammassa passato
avyapajjham sukham loke
panabhutesu samyamo.
தனிமை என்பது திருப்தியடைந்தவருக்கு,
தம்மத்தைக் கேட்டவருக்கு, தெளிவாகக் காண்பவருக்கான மகிழ்ச்சி.
துன்பமின்மையே உலகில் மகிழ்ச்சி -
எல்லா உயிரினங்களுக்கும் தீமை செய்யாதிருத்தல்.
Solitude is happiness for one who is content,
who has heard the Dhamma and clearly sees.
Non-affliction is happiness in the world —
harmlessness towards all living beings.
174. Sukha viragata loke
kamanam samatikkamo
asmimanassa yo vinayo
etam ve paramam sukham.
எல்லாப் புலன் இன்பங்களுக்கும் அப்பாற் சென்று, காமத்திலிருந்து விடுபடுவது
உலகில் மகிழ்ச்சி காண்பதாகும்.
ஆனால் அகம்பாவத்தை நொறுக்கி விடுவது - "நான்" என்ற கருத்திலிருந்து விடுபடுவது -
இதுவே மேன்மையான மகிழ்ச்சியின் உச்சம்.
Freedom from lust is happiness in the world,
the going beyond all sensual desires.
But the crushing out of the conceit "I am" —
this is the highest happiness.
175. Susukham vata nibbanam
sammasambuddhadesitam
asokam virajam khemam
yattha dukkham nirujjhati.
முழுமையான புத்தர்
நிப்பாணமே மேன்மையான மகிழ்ச்சி என்று போதித்தார் -
துயரம் இல்லாமல், களங்கமற்று, பாதுகாப்பாக,
எல்லாத் துக்கமும் முடிவுறும் நிலை அது.
The fully perfected Buddha has taught
Nibbana as the highest happiness —
without grief, immaculate, secure,
the state where all suffering ceases.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
19. துன்ஹிவக்க (அமைதி)
Tunhivagga (Silence)
176. Samanabhavam kubbetha
game akutthavanditam
manopadosam rakkheyya
santo anunnato care.
சமநிலையான மனத்தோடு இருக்கப் பழகுங்கள்,
புகழ்பவர் சிலர், இகழ்பவர் சிலர் எங்கும் இருப்பார்கள்.
அதனால் மனதில் வெறுப்போ, விருப்போ ஏற்பட்டால் அதை உதறித் தள்ளி விட்டு,
அமைதியாகவும், இறுமாப்பில்லாமலும் உங்கள் வழியில் செல்லுங்கள்.
Develop the quiet even state of mind,
when praised by some, condemned by others,
free the mind from hate and pride
and gently go your way in peace.
177. Tan nadihi vijanatha
sobbhesu padaresu ca
sananta yanti kussubbha
tunhi yati mahodadhi.
நீரில் இருந்து அறிந்து கொள்வீர்:
மலையின் பிளவுகளிலும்,
வெடிப்புகளிலும் மோதுண்டு
மிகுந்த இரைச்சலுடன் புரண்டோடும் சிற்றோடைகள் உண்டு.
ஆனால் மாபெரும் நதிகளோ
அமைதியாகவே தவழ்ந்து செல்கின்றன.
Learn this from the waters:
in mountain clefts and chasms,
loud gush the streamlets,
but great rivers flow silently.
178. Yad unakam tam sanati
yam puram santam eva tam
addhakumbhupamo balo
2rahado puro'va pandito.
வெறுமைக் கலமே ஒலி செய்யும்,
நிறை குடம் தளும்பாது.
அறிவிலி அரை நிறை குடம்,
அறிஞனோ ஆழமான அமைதியான குளம்.
Things that are empty make a noise,
the full is always quiet.
The fool is like a half-filled pot,
the wise man like a deep still pool.
179. Kayamunim vacamunim
manomunim anasavam
muni moneyyasampannam
ahu nihatapapakam.
உடலில் அமைதி, பேச்சில் அமைதி,
மனத்தில் அமைதி, மாசற்றிருத்தல்,
முனிவர் அமைதி என்ற ஆசியுடையவர்.
அவர் உண்மையில் தீமையிலிருந்து விலகியவர்.
Silent in body, silent in speech,
silent in mind, without defilement,
blessed with silence is the sage.
He is truly washed of evil.
180. Upasanto uparato
mantabhani anuddhato
dhunati papake dhamme
dumapattam va maluto.
அமைதியாக, சப்தமில்லாமல், அடக்கத்தோடு,
சிறிதே பேசி, அகம்பாவம் இல்லாமல் இருப்பவர் -
அப்படிப்பட்டவர் தீமைகள் அனைத்தையும் களைந்து விடுகிறார்,
காற்றடிக்கும் போது மரத்தின் இலைகள் உதிர்வது போல.
Peaceful, quiet and restrained,
speaking little, without conceit —
such a one shakes off all evil
as wind shakes leaves off a tree.
181. Cakkhumassa yatha andho,
sotava badhiro yatha
paññav'assa yatha mugo
balava dubbalor iva.
கண் தெரிந்தவர் குருடரைப் போலவும்,
காது கேட்பவர் செவிடரைப் போலவும்,
நாக்குள்ளவர் ஊமையைப்போலவும்,
வலிமையானவர் பலவீனமானவராகவும் தோன்றட்டும்.
Let one with sight be as though blind,
and one who hears be as though deaf,
let one with tongue be as though dumb,
let one who is strong be as though weak.
182. Avitakkam samapanno
sammasambuddhasavako
ariyena tunhibhavena
upeto hoti tavade.
தியான நிலையை அடைந்து
எல்லா எண்ணங்களையும் நிறுத்திய,
முழுமையான புத்தரின் சீடர்
மேன்மையான அமைதியைக் கொண்டவர்.
Having attained the meditative state
where all thoughts come to a stop,
the disciple of the perfected Buddha
thereby possesses the noble silence.
183. Yatha jalo ca mugo ca
attanam dassaye tatha
nativelam pabhaseyya
sanghamajjhamhi pandito.
கூட்டத்தின் மத்தியில் அறிவாளி
அதிக நேரம் பேசக்கூடாது.
இன்றேல் அவர் ஒரு முட்டளாகவோ,
மந்தமானவராகவோ தோன்றக்கூடும்.
The wise one in the midst of an assembly
should not speak excessively long.
He should let himself appear
like a simpleton or a dullard.
184. Etam nagassa nagena
isadantassa hatthino
sameti cittam cittena
yam eko ramati vane.
பெரும் ஜீவன்களான ஞானம் பெற்ற முனிவர்,
ஏர்முனையைப் போன்ற தந்தங்கள் கொண்ட யானை,
இருவரும் ஏற்றுக் கொள்ளும் பொதுக் கருத்து -
இருவரும் வனத்தின் தனிமையை விரும்புபவர்கள்.
In this both mighty beings agree,
the enlightened sage and the elephant
with tusks resembling the poles of plows:
both love the solitude of the forest.
185. Vihavihabhinadite
sippikabhirutehi ca
na me tam phandati cittam
ekattaniratam hi me
வனத்தில் பறவைகளின் சளசளப்புச் சத்தங்களுக்கு மத்தியில்
எனது மனம் தடுமாறுவதில்லை,
ஏனென்றால்
நான் என்னைத் தனிமைக்கு அர்ப்பணித்தவன்.
Amidst the chirping and twittering
of the birds in the woods
this mind of mine does not waver
for I am devoted to solitude.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
20. விபாஸணவக்க (நுண்ணறிவு)
Vipassanavagga (Insight)
186. Pañcangikena turiyena
na rati hoti tadisi
yatha ekaggacittassa
samma dhammam vipassato.
ஒருமுகப் படுத்தப்பட்ட மனத்தின் பொருட்களின் இயல்பை
உள்ளது உள்ளபடி அறியும்
நுண்ணறிவு தரும் மகிழ்ச்சிக்கு,
ஐந்து கருவி வாத்தியக் கச்சேரியின் இசையும் ஈடாகாது.
Music from a five-piece ensemble
cannot produce as much delight
as that of a one-pointed mind
with perfect insight into things.
187. Ye ca santacitta nipaka
satimanto ca jhayino
samma dhammam vipassanti
kamesu anapekkhino.
மனதில் அமைதியுடையோர், விவேகமானோர்,
கடைப்பிடியுடையோர், தியானிப்போர்,
பொருட்களின் இயல்பை உள்ளது உள்ளபடி தெரிந்துள்ளவர்கள்,
புலன் இன்பங்கள் பற்றி அக்கறை இல்லாதவர்கள்,
Those peaceful in mind, discerning,
mindful and meditative,
having perfect insight into things,
unconcerned with sense desires,
188. Appamadarata santa
pamade bhayadassino
abhabba parihanaya
nibbanass'eva santike.
சாந்தமானோர், விடாமுயற்சி செய்வதில் மகிழ்வோர்,
அக்கறையின்றி இருப்பதில் உள்ள ஆபத்தைத் தெரிந்துள்ளவர்கள் -
அவர்கள் வழியில் விழுந்து விடுவதோ தோல்வியடைவதோ இல்லை,
ஏனென்றால் அவர்கள் நிப்பாண நிலைக்கு அருகில் உள்ளனர்.
calm, delighting in diligence,
seeing fear in negligence,
can never fall away or fail,
for they are close to Nibbana.
189. Atitam nanusocanti
nappajappanti nagatam
paccuppannena yapenti
tena vanno pasidati.
நடந்ததை நினைத்துப் புலம்புவதும் இல்லை,
வருவதை நினைத்து ஏங்குவதும் இல்லை,
நிகழ் காலத்தை நிலைநாட்டியவர்களாக இருப்பதால்,
அவர்கள் தோற்றம் பிரகாசிக்கிறது.
They do not lament over the past,
they yearn not for what is to come,
they maintain themselves in the present,
thus their complexion is serene.
190. Atitam nanvagameyya
nappatikankhe anagatam
yad atitam pahinan tam
appattañ ca anagatam.
கடந்த கால நிகழ்வுகளைத் தொடரக் கூடாது,
எதிர் காலத்திற்கு ஏங்குவதும் கூடாது;
கடந்த காலம் இறந்து போய் விட்டது
எதிர்காலம் இன்னும் வரவில்லை.
The past should not be followed after
and the future not desired;
what is past is dead and gone
and the future is yet to come.
191. Paccuppannañ ca yo dhammam
tattha tattha vipassati
asamhiram asamkuppam
tam vidva m-anubruhaye.
ஆனால் நிகழ் காலத்தில் நிகழ்வன பற்றி
நுண்ணறிவுடன் உள்ளதை உள்ளபடி பார்ப்போர்,
அவற்றைத் தெரிந்தவராக, அசையாமல், நடுங்காமல்
அந்த நுண்ணறிவை வளர்க்க வேண்டும்.
But whoever gains insight into things
presently arisen in the here and now,
knowing them, unmoved, unshaken,
let him cultivate that insight.
192. Cittam upatthapetvana
ekaggam susamahitam
paccavekkhatha sankhare
parato no ca attato.
மனத்தை நிலைநாட்டுங்கள், அதனை
ஒருமுகப்படுத்துங்கள்;
மனத்தில் தோன்றுவன எல்லாம்
புறம் சம்பந்தப்பட்டது என்றும், அவை ‘நமது’ இல்லை என்றும் உணருங்கள்.
Establish the mind, set it up
in one-pointed stability;
look upon all formations
as alien and as not self.
193. Phenapindupamam rupam
vedana bubbulupama
maricikupama sañña
sankhara kadalupama
mayupamañca viññanam.
இந்த உடல் நுரைப் பந்தைப்போல,
நுகர்ச்சிகள் நீர்க்குமிழிகள் போல,
மனக்குறிப்பென்பது ஒரு கானல் நீர் (போலித் தோற்றம்) போல,
மனத்தில் தோன்றுவன வைரமில்லா மரத்தைப்போல (உதாரணம்: வாழை),
உணர்வு ஒரு மந்திர வித்தையைப் போல.
The body is like a ball of foam,
feelings are like bubbles,
perception is like a mirage,
mental constituents like a pithy tree,
and consciousness like a magic trick.
194. Sabbalokam abhiññaya
sabbaloke yathatatham
sabbalokavisamyutto
sabbaloke anupayo.
நேரடியாக உலகை முழுமையாகத் தெரிந்து கொண்டதால்,
முழு உலகமும் உள்ளது உள்ளபடி தெரிந்ததால்,
முழு உலகிடமிருந்து அவர் விடுபடுகிறார்;
பின் எதன்மேலும் பற்றுக் கொள்வதில்லை.
Knowing the world in full directly,
the whole world just as it is,
from the whole world he is freed;
he clings to naught in all the world.
195. Sabbe sabbabhibhu dhiro
sabbaganthappamocano
phutthassa parama santi
nibbanam akutobhayam.
இந்த முழுமையான வெற்றி பெற்றவர்
எல்லாக் கட்டுகளிடமிருந்தும் விடுபட்டவர்
முழுமையான அமைதியை எட்டி விட்டார்:
அதுவே பயமற்ற நிப்பாண நிலை.
This sage all-victorious
with all bonds loosened,
has reached perfect peace:
Nibbana that is void of fear.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
21. புத்தவக்க (புத்தர்)
Buddhavagga (The Buddha)
196. Yathapi udake jatam
pundarikam pavaddhati
nopalippati toyena
sucigandham manoramam.
தாமரை, நீரில் பிறந்தும்,
நீரில் வளர்ந்தும்,
நீரினால் கறைபடியாமல்
நறுமணமும் அழகும் கொண்டுள்ளது.
As the lotus is born in the water
and grows up beneath the water,
yet remains undefiled by the water,
fragrant and beautiful.
197. Tath'eva ca loke jato
buddho loke viharati
nopalippati lokena
toyena padumam yatha.
அதேபோல புத்தர் ஒருவர் உலகில் தோன்றுகிறார்,
உலகில் வளர்ந்து வாழ்கிறார்,
ஆனால் நீரினால் கறைபடியாத தாமரையைப்போல
அவர் உலக நிகழ்ச்சிகளால் கறைபடிவதில்லை.
Just so the Buddha is born in the world,
grows up and dwells in the world,
but like the lotus unstained by water
he is not defiled by the world.
198. Mahasamuddo pathavi
pabbato anilo pi ca
upamaya na yujjanti
satthu varavimuttiya.
மாபெரும் சமுத்திரம், பறந்த பூமி,
மலை முகடு அல்லது காற்று
இவை எவற்றையும் ஆசானின் (புத்தரின்) அருமையான சுதந்திரத்திற்கு
போதுமான உவமானங்களாகத் தரமுடியாது.
The mighty ocean, the earth so broad,
the mountain peak or the wind
are not adequate similes to describe
the awesome freedom of the Teacher.
199. Appameyyam paminanto
ko'dha vidva vikappaye
appameyyam pamayinam
nivutam maññe akissavam.
அளக்க முடியாதவரை யார் அளப்பது?
யார் அவரை ஆழம் பார்த்து உறுதிப்படுத்துவது?
அளக்க முடியாதவரை அளக்க முயல்வது
ஞானம் இல்லாத மனத்தை காட்டிக் கொடுக்கிறது.
Who can measure the immeasurable one?
Who can fathom and determine him?
To try to measure the immeasurable one
betrays a mind devoid of wisdom.
200. Araññe rukkhamule va
suññagare va bhikkhavo
anussaretha sambuddham
bhayam tumhakam no siya.
காட்டில் மரவேர்களுக்கு மத்தியில் அமர்ந்து இருந்தாலும்
அல்லது ஒரு காலியான இடத்தில் ஓய்வெடுக்கச் சென்றாலும்
புத்தரை நினைவுக்குக் கொண்டு வந்தால்
பயமோ, நடுக்கமோ ஏற்படாது.
When in the forest, amongst the roots of trees,
or when retired to an empty place,
just call to mind the Buddha and
no fear or trembling will arise.
201. Hitanukampi sambuddho
yad aññam anusasati
anurodhavirodhehi
vippamutto tathagato.
புத்தர் மற்றவருக்குக் கற்பிக்கும் போது
அவர் கருணையினால் தான்
அதைச் செய்கிறார்,
ஏனென்றால் ததாகதர் பாரபட்சத்திலிருந்தும் வெறுப்பிலிருந்தும் முழுமையாக விடுபட்டவர்.
When the Buddha teaches others
he does so out of compassion,
because the Tathagata is wholly freed
from both favor and aversion.
202. Yatha rattikkhaye patte
suriyass'uggamanam dhuvam
tath'eva buddhasetthanam
vacanam dhuvasassatam.
இரவின் இருள் மறையும் போது
கதிரவன் உதிப்பது உறுதி;
அதேபோல உறுதியும், நம்பகத் தன்மையும்
கொண்டது மேன்மையான புத்தரின் வார்த்தைகள்.
It is certain that the sun will rise
when the darkness of night fades away;
so too the words of the supreme Buddha
are always certain and reliable.
203. Satthugaru dhammagaru
sanghe ca tibbagaravo
appamadagaru bhikkhu
patisantharagaravo
abhabbo parihanaya
nibbanass'eva santike.
ஆசிரியரை ஆழ்ந்து போற்றியும்,
தம்மத்தையும், சங்கத்தையும் போற்றியும்,
எச்சரிக்கையாக இருத்தலைப் போற்றியும்,
அன்பும், நல்லெண்ணமும் கொண்டுள்ள
துறவி தோல்வியுறுவதில்லை,
ஏனென்றால் அவர் நிப்பாண நிலைக்கு
அருகில் உள்ளவர்.
Deeply reverent towards the Teacher,
reverent towards the Dhamma and Sangha,
reverent towards vigilance,
having kindness and good will:
a monk like this cannot fail,
for he is close to Nibbana.
204. Tena h'atappam karohi
idh'eva nipako sato
ito sutvana nigghosam
sikkhe nibbanam attano.
நான் சொல்வதைக் கேட்ட பின்,
உனது சக்தியைக் கிளர்ந்தெழச் செய்து
நுண்ணறிவோடும், கடைப்பிடியோடும்,
ஆர்வத்துடன் உனது விடுதலைக்காகப் பயிற்சி செய்.
So stir up your energy now,
be skillful and be ever mindful.
When you have heard my voice
train yourself to attain Nibbana.
205. Ye pavutte satthipade
anusikkhanti jhayino
kale te appamajjanta
na macuvasaga siyum.
நான் போதித்தவற்றை முடிந்த அளவு
முயன்று பயிற்சி செய்து, அக்கறையோடு
தியானம் செய்வோர், காலப்போக்கில்
மரணத்தின் பிடிக்கு அப்பால் செல்வர்.
Those who do their best and train
in all the teachings that I have taught,
alert and meditative, shall in time
go beyond the power of death.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *
22. கிட்டிசத்தா (புகழ்ச்சி)
Kittisadda (Praise)
206. Esa sutva pasidami
vaco te isisattama
amogham kira me phuttham
na mam vañcesi brahmano.
உங்கள் குரல் கேட்டு,
ஓ! ஒப்புயர்வற்ற முனிவரே,
என் உள்ளம் குதுகலப்படுகிறது.
எனது கேள்விகள் வீண் போகவில்லை,
பிராமணர் (புத்தர்) என்னை ஏமாற்றவில்லை.
Hearing your voice, O sage supreme,
my heart is filled with joy.
My questions truly were not in vain,
the brahman did not deceive me.
207. Anusasi mam ariyavata
anukampi anuggahi
amogho tuyham ovado
antevasi'mhi sikkhito.
மேன்மையான மார்க்கத்தை எனக்குக் கற்பித்தீர்கள்,
எனக்குக் கருணையோடு உதவி செய்தீர்கள்.
என்னை உற்சாகப்படுத்தியது வீண் போகவில்லை
ஏனென்றால் இப்போது நான் உங்கள் பயில்விக்கப்பட்ட சீடன்.
You have taught me the noble practice,
you were compassionate and helpful to me.
Your exhortation was not in vain
for I am now your trained disciple.
208. Upemi buddham saranam
dhammam sanghañ ca tadinam
samadiyami silani
tam me atthaya hehiti.
நான் புத்தரிடம், தம்மத்திடம், சங்கத்திடம்
அடைக்கலம் செல்கின்றேன்.
எனது நன்மைக்காகப்
பயிற்சி விதிகளை மேற்கொள்வேன்.
I go for refuge to the Buddha,
to the Dhamma and to the Sangha.
I undertake the rules of conduct
which will be for my true welfare.
209. Asokam virajam khemam
ariyatthangikam ujum
tam maggam anugacchami
yena tinna mahesino.
நான் அட்டாங்க மார்க்கத்தைத் தொடர்வேன்,
அது துயரமில்லாத, களங்கமில்லாத, பாதுகாப்பான நேரான பாதை.
அதைத் தொடர்ந்தே சிறந்த முனிவர்களும்
வெள்ளத்தைத் தாண்டினார்கள்.
I shall follow that eightfold path,
griefless, immaculate, secure,
the straight way by following which
the great sages have crossed the flood.
210. So aham vicarissami
gama gamam pura puram
namassamano sambuddham
dhammassa ca sudhammatam.
கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக
நான் இனி நடமாடி மேன்மையான புத்தரைப்
போற்றுவேன். அத்தோடு
சிறப்பாக மொழியப்பட்டுள்ள தம்மத்தையும் போற்றுவேன்.
I will now go from town to town,
I will go from city to city,
praising the Buddha and the Dhamma
so excellently taught by him.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
* * *