கடைப்பிடி

நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு

14. சத்திவக்க (கடைப்பிடி)

Sativagga (Mindfulness)

126. Sambadhe vapi vindanti

dhammam nibbanapattiya

ye satim saccalatthamsu

samma te susamahita.

நற்கடைப்பிடியை நிலைநாட்டி

முழுமையான சம மனநிலையை எட்டியவர்களுக்குத்

தடங்கல்கள் குவிந்து வந்தாலும்,

நிப்பாணப் பாதையில் வெற்றி பெற முடியும்.

Even when obstacles crowd in,

the path to Nibbana can be won

by those who establish mindfulness

and bring to perfection equipoise.

127. Sace dhavati te cittam

kamesu ca bhavesu ca

khippam nigganha satiya

kitthadam viya duppasum.

புலன் இன்பங்களின் மீதும், மனத்தில் தோன்றுவனவற்றின் மீதும்

மனம் வேட்கை கொண்டு அலைந்தால்,

கதிர்களை நோக்கிப் பாயும் பசுவை தடுத்துப் பிடிப்பதுபோல,

கடைப்பிடியோடு உடனே அதைத் தடுத்து நிறுத்துங்கள்,

If your mind runs wild among

sensual pleasures and things that arise,

quickly restrain it with mindfulness

as one pulls the cow from the corn.

128. Ubhinnam attham carati

attano ca parassa ca

param sankupitam natva

yo sato upasammati.

பிறர் கோபத்தோடு இருப்பதை உணர்ந்து

கடைப்பிடியோடு, அமைதியாக உள்ள ஒருவர்

தனது நன்மைக்காக மட்டுமல்லாமல்

மற்றவரின் நன்மைக்கும் வழிவகுக்கிறார்.

Knowing that the other person is angry,

one who remains mindful and calm

acts for his own best interest

and for the other's interest, too.

129. Ubhinnam tikicchantanam

attano ca parassa ca

jana maññanti balo'ti

ye dhammassa akovida.

தன்னையும் சமாதானப்படுத்தி

மற்றவரையும் சமாதானப்படுத்துபவரைத்

தம்மத்தை அறியாத முட்டாள்

மட்டுமே குறைகூறுவான்.

He is a healer of both

himself and the other person;

only those think him a fool

who do not understand the Dhamma.

130. Yatam care yatam titthe

yatam acche yatam saye

yatam samminjaye bhikkhu

yathamenam pasaraye.

தான் நடந்தாலும், நின்றாலும், அமர்ந்தாலும்

படுத்தாலும், காலை நீட்டினாலும்

அல்லது அதை மடக்கினாலும், அதைச்

செய்யும் துறவி அமைதியாகச் செய்யட்டும்.

Whether he walks, stands, sits

or lies, stretches out his limbs

or draws them in again, let a

monk do so with composure.

131. Uddham tiriyam apacinam

yavata jagato gati

samavekkhita va dhammanam

khandhanam udayabbayam.

மேலே, எதிர்ப்புறம், பின்புறம்

அல்லது உலகில் எங்கு சென்றாலும்

அவர் அக்கறையுடன், கவனமாகத்

தோன்றும் பொருட்களின் தோற்றத்தையும், மறைவையும்

ஆராய்ந்து பார்ப்பாராக.

Above, across or back again,

wherever he goes in the world

let him carefully scrutinise

the rise and fall of compounded things.

132. Evam viharim atapim

santavuttim anuddhatam

cetosamathasamicim

sikkhamanam sada satam

satatam pahitatto'ti

ahu bhikkhum tathavidham.

தன்னுள் அமைதியுடன், அலைக்கழிப்பில்லாமல்

அல்லது மனச் சஞ்சலமில்லாமல்,

எப்போதும் கடைப்பிடியுடன் தன்னைப் பயிற்றுவித்து ஆர்வத்துடன் வாழும்

துறவியை மக்கள் "எப்போதும் திடமானவர்," என்பர்.

Living thus ardently,

at peace within, not restless

or mentally agitated,

training himself, always mindful:

people call such a monk

"one constantly resolute."

133. Na so rajjati dhammesu

dhammam natva patissato

virattacitto vedeti tan

ca n'ajjhosaya titthati.

எண்ண ஓட்டங்களால் கிளர்ச்சி அடையாமல்

அவற்றைக் கடைப்பிடியுடன் அறிந்து கொள்வதால்,

விலகிய மனத்துடன் புரிந்து கொண்டு

அவற்றின்மேல் பற்றுக் கொள்வதில்லை.

Not excited by mental phenomena,

one knows them through mindfulness;

thus with a mind well detached

one understands and does not cling.

134. Satipatthanakusala

bojjhangabhavanarata

vipassaka dhammadhara

dhammanagare vasantite.

கடைப்பிடியின் அடித்தலங்களில் திறமையானோர், [8]

(ஏழு) ஞான அங்கங்களுள் ஆனந்தப்பட்டு, [9]

தம்ம அறிவும் கூர்மையான நுண்ணறிவும் கொண்டு

தம்மம் என்ற நகரில் வாழ்கிறார்.

Those skilled in the foundations of mindfulness,

delighting in the enlightenment factors,

with knowledge of Dhamma and keen insight,

live in the city of Dhamma.

135. Sammappadhanasampanno

satipatthanagocaro

vimuttikusumasañchanno

parinibbaty anasavo.

பெருமுயற்சி செய்யும் சக்தியுள்ளவராய்,

கடைப்பிடியின் அடித்தலங்களில் பயிற்சி செய்து,

விடுதலை என்ற மலர்க்கோவையை அணிந்து

குளிர்ந்து, மாசற்றவராவீர்.

Possessed of persevering energy,

practicing the foundations of mindfulness,

bedecked with the blossoms of freedom,

you will be cooled and undefiled.

* * *

விளக்கம்:

Notes:

[8] 'பிக்குகளே, மக்கள் தூய்மை பெறவும், அவலக் கவலைகளை ஒழிப்பதற்கும், துக்கத்தையும், துன்பத்தையும் அழிப்பதற்கும், சரியான வழியை அடைவதற்கும், நிர்வாண சுகத்தை அடைவதற்கும் ஒரே வழி இதுவே. அதாவது சதிபட்டானம் நான்கு. இந்த நான்கு எவை?

a. இங்கே பிக்கு ஒருவர், ஆர்வத்துடன் பொருள்களைத் தெளிவாக அறிந்து, கடைப்பிடியோடு, உடலின் சேட்டைகளை, உடல்மீது விருப்போ வெறுப்போ இன்றி அவதானித்துக் கொண்டிருத்தல்.

b. வேதனை (உணர்ச்சி) உலகத்தில் விருப்போ வெறுப்போ இன்றி அவற்றை அவதானித்துக் கொண்டிருத்தல்.

c. மன உலகத்தில் விருப்போ வெறுப்போ இன்றி, சித்தவிருத்திகளை அவதானித்துக் கொண்டிருத்தல்,

d. மானசிகப் பொருள்கள் மீது விருப்போ வெறுப்போ இன்றி அவற்றை அவதானித்துக் கொண்டிருத்தல்.

சதிபட்டான சூத்திரம் - நவாலியூர் சோ. நடராசன் மொழிபெயர்ப்பு

[9] ஞான அங்கங்கள் ஏழு: கடைப்பிடி, தம்மவிஷயம் (மனவிஷயங்களை [விஷயம் – தம்மம்] ஆராய்ச்சி செய்தல்),

வீரியம், பிரீதி, மனத்துக்கும் காயத்துக்கும் ஓய்வு (பஸ்ஸத்தி), ஒருக்கம் (சமாதி), உபேக்கா (பற்றற்ற நடுநிலை)

சதிபட்டான சூத்திரம் - நவாலியூர் சோ. நடராசன் மொழிபெயர்ப்பு

The seven factors of enlightenment are: Source

Mindfulness (sati)

Keen investigation of the dhamma (dhammavicaya)

Energy (viriya)

Rapture or happiness (piti)

Calm (passaddhi)

Concentration (samadhi)

Equanimity (upekkha)

நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு

* * *

15. அத்தபராவக்க (நாமும் மற்றவரும்)

Attaparavagga (Oneself and Others)

136. Sabbe tasanti dandassa

sabbesam jivitam piyam

attanam upamam katva

na haneyya na ghataye.

தண்டனை என்றால் அனைவரும் நடுங்குவர்.

உயிர் அனைவருக்கும் விலைமதிப்பற்றது.

மற்றவர் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்.

எனவே எவரையும் கொல்லவும் வேண்டாம்,

மற்றவரைக் கொலைசெய்ய வைக்கவும் வேண்டாம்.

All tremble at punishment.

Life is dear to all.

Put yourself in the place of others;

kill none nor have another killed.

137. Attana'va katam papam

attana sankilissati

attana akatam papam

attana'va visujjhati

suddhi asuddhi paccattam

nañño aññam visodhaye.

தீங்கு செய்வதால் ஒருவர் தன்னைத்தானே மாசு படுத்திக் கொள்கிறார்;

தீமையைத் தவிர்த்து, ஒருவர் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

தூய்மையும், அசுத்தமும் நம்மைப் பொருத்தே உள்ளது:

ஒருவர் மற்றவரைத் தூய்மைப்படுத்த முடியாது.

By doing evil, one defiles oneself;

by avoiding evil, one purifies oneself.

Purity and impurity depend on oneself:

no one can purify another.

138. Attadattham paratthena

bahuna 'pi na hapaye

attadattham abhiññaya

sadatthapasuto siya.

எவ்வளவுதான் பிறருக்கு நன்மை செய்தாலும்

நமது நலனை நாம் அக்கறையின்றி விட்டுவிடக் கூடாது.

நமது நன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு,

நமது நலனுக்காகப் பாடுபட வேண்டும்.

Let no one neglect his own welfare

for the welfare of others however much.

Clearly understanding one's own welfare

strive always for one's own true good.

139. Attanameva pathamam

patirupe nivesaye

ath'aññam anusaseyya

na kilisseyya pandito.

முதலில் சரியானவற்றை நிலைநாட்டிய பின்னர்

மற்றவருக்குக் கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் அறிவாளி

நிந்திக்கப்பட மாட்டார்.

One should first establish onself

in what is proper and only then

try to instruct others. Doing this,

the wise one will not be criticized.

140. Attana ce tatha kayira

yath'aññam anusasati

sudanto vata dammetha

atta hi kira duddamo.

மற்றவருக்குப் போதிப்பதை நாமும் கடைப்பிடிப்போமானால்,

பின் நாம் அடங்கியிருப்பதனால்

மற்றவரையும் அடக்க முடியும்.

உண்மையில் சுயக் கட்டுப்பாடு மிகக் கடினமானது.

If only you would do what you teach others

then being yourself controlled

you could control others well.

Truly self-control is difficult.

141. Yo c'attanam samukkamse

parañ ca-m-avajanati

nihino sena manena

tam jañña vasalo'iti.

தற்பெருமையினாலும், அகங்காரத்தினாலும்

கெட்டுப் போனவன்,

தன்னை உயர்த்தி மற்றவரைக் குறைகூறுபவன்;

அவனை இழிகுலத்தான் என்று அறிந்து கொள்.

One who exalts himself

and disparages others

because of smugness and conceit;

know him as an outcaste man.

142. Na paresam vilomani

na paresam katakatam

attano va avekkheyya

katani akatani ca.

மற்றவரின் தவறுகளைத் தேடவேண்டாம்.

அவர்கள் செய்யாததையும், செய்ததையும் குறைகூற வேண்டாம்.

ஆனால் உங்கள் செய்கைகளையே கவனியுங்கள்,

நீங்கள் செய்தது என்ன, செய்யாதது என்ன என்பதைக் கவனியுங்கள்.

Look not to the faults of others,

nor to their omissions and commissions.

But rather look to your own acts,

to what you have done and left undone.

143. Paravajjanupassissa

niccam ujjhanasaññino

asava tassa vaddhanti

ara so asavakkhaya.

மற்றவர் குறைகளைப் பார்ப்பவர்,

எப்போதும் பொறாமைப் படுபவர் -

அவரது மாசுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன;

மாசுகளின் முடிவு வெகு தூரத்தில் இருக்கின்றது.

When one looks down at others' faults

and is always full of envy,

one's defilements continually grow;

far is one from their destruction.

144. Sudassam vajjam aññesam

attano pana duddasam

paresam hi so vajjani

opunati yathabhusam

attano pana chadeti

kalim'va kitava satho.

பிறருடைய குற்றத்தை எளிதில் காண முடிகிறது.

ஆனால், தன்னுடைய குற்றத்தைக் காண்பது கடினமாக இருக்கிறது.

பிறருடைய குற்றங்களை உமியைத் தூற்றுவது போன்று தூற்றுகிறவர்,

மிருகங்களின் தோலைக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்ளும்

வேட்டைக்காரனைப் போலத் தன் சொந்தக் குற்றத்தை மறைத்துக் கொள்கிறார்.

Easily seen are the faults of others,

one's own are difficult to see.

By winnowing the chaff of others' faults,

one's own are obscured, like a crafty

fowler hidden behind the branches.

145. Attana coday' attanam

patimase attam attana

so attagutto satima

sukham bhikkhu vihahisi.

உங்களை நீங்களே கவனிக்க வேண்டும்,

உங்களை நீங்களே ஆராய வேண்டும்,

பின் உங்களை நீங்களே பாதுகாப்பவராக, கடைப்பிடியோடு,

ஓ துறவியே, நீங்கள் மகிழ்ச்சியில் வாழ்வீர்கள்.

You yourself must watch yourself,

you yourself must examine yourself,

and so self-guarded and mindful,

O monk, you will live in happiness.

நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு

* * *

16. மெத்தவக்க I (அன்பு I)

Mettavagga I (Love I)

146. Anatthajanano doso

doso cittappakopano

bhayam antarato jatam

tam jano navabujjhati.

வெறுப்பு பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது.

வெறுப்பு மனத்தைக் கிளர்ச்சி செய்து அதைப் பாதிப்படையச் செய்கிறது;

மனதில் ஆழமாகப் பதிந்துள்ள இந்த அஞ்சத்தக்க ஆபத்தைப்

பெரும்பாலோர் புரிந்து கொள்வதில்லை.

Hate brings great misfortune,

hate churns up and harms the mind;

this fearful danger deep within

most people do not understand.

147. Duttho attham na janati.

duttho dhammam na passati

andham tamam tada hoti

yam doso sahate naram.

இவ்விதம் பாதிக்கப்பட்ட ஒருவரால் நன்மையைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை,

உள்ளதை உள்ளபடி பார்க்கவும் முடிவதில்லை.

வெறுப்பால் பாதிக்கப்பட்ட அவருக்கு

அஞ்ஞானமும் மன வேதனையும் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

Thus spoilt one cannot know the good,

cannot see things as they are.

Only blindness and gloom prevail

when one is overwhelmed by hate.

148. Yo na hanti na ghateti

na jinati na japaye

mettam so sabbabhutesu

veram tassa na kenaci.

தாக்காத ஒருவன், மற்றவரைத் தாக்க வைக்காத ஒருவன்,

திருடாத ஒருவன், மற்றவரைத் திருட வைக்காத ஒருவன்,

உயிரினங்கள் அனைத்திடமும் அன்பைப் பொழிபவன்

எவரிடமும் எதிர்ப்பைச் சந்திப்பதில்லை.

He who does not strike nor makes

others strike, who robs not nor makes

others rob, sharing love with all that live,

finds enmity with none.

149. Satimato sada bhaddam

satima sukham edhati

satimato su ve seyyo

vera na parimuccati.

கடைப்பிடி உள்ளவருக்கு எப்போதும் நன்மையே நடக்கிறது;

கடைப்பிடி உள்ளவருக்கு மகிழ்ச்சி அதிகரிக்கிறது;

கடைப்பிடி உள்ளவருக்கு விரும்பியவாறு காரியங்கள் நிகழ்கின்றன.

ஆனாலும் அவர் எதிரிகளிடமிருந்து விடுபடுவதில்லை.

For the mindful one there is always good;

for the mindful one happiness increases;

for the mindful one things go better

yet he is not freed from enemies.

150. Yassa sabbam ahorattam

ahimsaya rato mano

mettam so sabbabhutesu

veram tassa na kenaci.

ஆனால் எவர் ஒருவர் பகலும் இரவும்

பிறருக்குக் கேடிழைக்காமல் உயிரினங்கள் அனைத்திடமும்

அன்பு செலுத்தி மகிழ்கின்றாரோ, அவர்

யாரிடமும் விரோதத்தைச் சம்பாதிப்பதில்லை.

But he who both day and night

takes delight in harmlessness

sharing love with all that live,

finds enmity with none.

151. Yo ve mettena cittena

sabbalok'anukampati

uddham adho ca tiriyañ ca

appamanena sabbaso.

அன்பு நிறைந்த மனத்தோடு

அனைத்து உலகிற்கும் கருணை காட்டும்போது -

மேல், கீழ், எதிரில்,

எல்லையற்று எங்கும்,

When one with a mind of love

feels compassion for all the world —

above, below and across,

unlimited everywhere.

152. Appamanam hitam cittam

paripunnam subhavitam

yam pamanakatam kammam

na tam tatravasissati.

முழுமையாக நன்கு பயிற்சி செய்யப்பட்ட

அன்பால் நிரம்பி இருக்கும் போது -

நாம் ஏதாவது சிறு தவறு செய்திருந்தால்

அவை மனசஞ்சலம் ஏற்படுத்தும் வகையில் நிலைத்திருப்பதில்லை.

Filled with infinite kindness,

complete and well-developed —

any limited actions one may have done

do not remain lingering in one's mind.

153. Mettacitta karunika

hotha silesu samvuta

araddhaviriya pahitatta

niccam dalhaparakkama.

அன்பு நிறைந்த மனத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்;

கருணையும் அடக்கமும் கூடிய ஒழுக்கத்தோடு வாழுங்கள்;

உற்சாகத்தைத் தூண்டித் திடமாக நிலைத்திருங்கள்,

முன்னேறும் நோக்கத்தில் எப்போதும் உறுதியோடு இருங்கள்.

Develop a mind full of love;

be compassionate and restrained in virtue;

arouse your energy, be resolute,

always firm in making progress.

154. Yathapi ekaputtasmim

piyasmim kusali siya

evam sabbesu panesu

sabbattha kusalo siya.

அன்புக்குரிய தன் ஒரே குழந்தையைப்

பாசம் மிகுந்த தாய் பாதுகாப்பது போல,

உலகெங்கிலும் உள்ள உயிரினங்கள்

அனைத்தின் நலனை விரும்பிப் பாதுகாக்க வேண்டும்.

Just as a loving mother would guard

her only dearly beloved child,

so towards creatures everywhere

one should always wish for their good.

155. Cittam ca susamahitam

vippasannam anavilam

akhilam sabbabhutesu

so maggo brahmapattiya.

நிலையான மனம், ஒருமுகப்படுத்தப்பட்ட நல்ல மனம்,

தூய்மையான, மாசற்ற மனம்,

எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டும் மனம் -

இதுவே பிரம்மனிடம் எடுத்துச் செல்வதற்குச் சரியான பாதையாகும்.

A mind composed, well-concentrated,

purified and undefiled,

full of kindness towards all beings —

this is the way that leads to Brahma.

நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு

* * *

17. மெத்தவக்க II (அன்பு II)

Mettavagga II (Love II)

156. Yathapi udakam nama

kalyane papake jane

samam pharati sitena

pavaheti rajomalam.

நல்லதையும் கெட்டதையும் (பாகுபாடு பாராமல்)

குளிர்வித்து

அசுத்தையும், குப்பையையும்

நீர் நீக்கி விடுவது போல,

Just as water cools

both good and bad

and washes away all

impurity and dust.

157. Tath'eva tvam pi ahitahite

samam mettaya bhavaya

mettaparamitam gantva

sambodhim papunissasi.

அதே போல அன்பு பூண்ட எண்ணங்களை

நண்பருக்கும் பகைவருக்கும் பரப்ப வேண்டும்,

இவ்வாறு அன்பில் முழுமையை அடைந்தவர்,

மெய்ஞ்ஞானம் பெறுகிறார்.

In the same way you should develop thoughts

of love to friend and foe alike,

and having reached perfection in love,

you will attain enlightenment.

158. "Yatha aham tatha ete

yatha ete tatha aham"

attanam upamam katva

na haneyya na ghataye.

'நான் எப்படியோ, மற்றவர்களும் அப்படியே;

அவர்கள் இருப்பது போலவே, நானும்.

இப்படி அவர்கள் நிலையை உன்னிடத்திலும் பார்த்து,

உயிர்க் கொலை செய்யாதே, மற்றவரை

உயிர் வதை செய்வதற்கும் தூண்டாதே.

"As I am, so are others;

as others are, so am I."

Having thus identified self and others,

harm no one nor have them harmed.

159. Apadakehi me mettam

mettam dipadakehi me

catuppadehi me mettam

mettam bahuppadehi me.

காலற்ற ஜீவன்களிடத்தும் எனக்கு அன்பு உள்ளது,

இரண்டு காலுடைய ஜீவன்களிடத்தும் எனக்கு அன்பு உள்ளது,

நான்கு காலுடைய ஜீவன்களிடத்தும் எனக்கு அன்பு உள்ளது,

பல கால்களையுடைய ஜீவன்களிடத்தும் எனக்கு அன்பு உள்ளது.

I have love for the footless,

for the bipeds too I have love;

I have love for those with four feet,

for the many-footed I have love.

160. Ma mam apadako himsi

ma mam himsi dipadako

ma mam catuppado himsi

ma mam himsi bahuppado.

காலில்லா ஜீவன்கள் எனக்குத் தீங்கு செய்யாமல் இருக்குமாக,

இரண்டு காலுடைய ஜீவன்கள் எனக்குத் தீங்குசெய்யாமல் இருக்குமாக,

நான்கு காலுடைய ஜீவன்கள் எனக்குத் தீங்கு செய்யாமல் இருக்குமாக,

பல கால்களையுடைய ஜீவன்கள் எனக்குத் தீங்கு செய்யாமல் இருக்குமாக.

May the footless harm me not,

may the bipeds harm me not,

may those with four feet harm me not,

may those with many feet harm me not.

161. Sabbe satta sabbe pana

sabbe bhuta ca kevala

sabbe bhadrani passantu

ma kañci papamagama.

எல்லாப் பிராணிகளும், எல்லா உயிரினங்களும்,

ஒவ்வொரு ஜீவனும்,

நல்லதிர்ஷ்டமே அனுபவிக்குமாக.

அவைகளுக்குத் துன்பம் நேராமல் இருக்குமாக.

May all creatures, all living things,

all beings one and all,

experience good fortune only.

May they not fall into harm.

162. Sabbamitto sabbasakho

sabbabhutanukampako

mettam cittañ ca bhavemi

abyapajjharato sada.

நான் எல்லோருக்கும் நண்பன், உதவியாளன்;

எல்லா உயிரினங்களிடமும் அனுதாபம் காட்டுகிறேன்.

அன்பு நிறைந்த மனத்தை வளர்க்கிறேன்.

தீமை செய்யாமல் இருப்பதில் மகிழ்ச்சியுறுகிறேன்.

I am a friend and helper to all,

I am sympathetic to all living beings.

I develop a mind full of love

and always delight in harmlessness.

163. Asamhiram asamkuppam

cittam amodayam'aham

brahmaviharam bhavemi

akapurisasevitam.

மனத்தை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சியால் நிரப்புகிறேன்,

அப்புறப்படுத்த முடியாத, அசைக்க முடியாததாக ஆகிறது மனம்.

உன்னதமான மன நிலைகளை (பிரம்ம விகாரங்களை) வளர்க்கிறேன் [10]

இவற்றைத் தீயவர் வளர்க்க முயல்வதில்லை.

I gladden my mind, fill it with joy,

make it immovable and unshakable.

I develop the divine states of mind

not cultivated by evil men.

164. Tasma sakam paresam pi

katabba mettabhavana

mettacittena pharitabbam

etam buddhana sasanam.

எனவே அன்பின் மீதான தியானத்தை

நமக்காகவும், மற்றவருக்காகவும் செய்ய வேண்டும்.

அனைவரிடத்திலும் அன்பை நிரப்ப வேண்டும்:

இதுவே புத்தரின் போதனை.

Therefore the meditation on love

should be done for oneself and others.

All should be suffused with love:

this is the teaching of the Buddha.

165. Yo ca mettam bhavayati

appamanam patissato

tanu samyojana honti

passato upadhikkhayam.

அன்பை வளர்த்து எல்லையற்றதாக்கி

மனம் பிறப்பறுத்தலைக் காண

முடிவு செய்பவன்:

அவனது கட்டுகள் தேய்ந்து விடுகின்றன.

Whoever makes love grow

boundless, and sets his mind

for seeing the end of birth:

his fetters are worn thin.

* * *

விளக்கம்:

Notes:

[10] அன்பு, கருணை, முதிதை, உபேக்கை என்ற நான்கு உன்னத மன நிலைகள்.

நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு

* * *