சீடர்

நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
10. சாவக்க வக்க (சீடர்)
  Savakavagga (The Disciple) 
86. Matari pitari capi
yo samma patipajjati
tatagate va sambuddhe
athava tassa savake
bahun ca so pasavati
puññam etadiso naro.
தாய் தந்தையரிடம் பண்போடு
நடந்து கொள்ளும் ஒருவர்,
நந்நிலையுற்ற புத்தரிடமும், 
அவரது சீடர்களிடமும் 
முறையாக நடந்து கொள்வார்.
அப்படிப்பட்டவர் பெரும் புண்ணியம் சேர்க்கிறார்.
    If one behaves rightly
    toward his mother and his father,
    towards the Buddha well-attained,
    and the disciples of the Buddha,
    such a person generates
    an abundant store of good.
87. Bhikkhu ca silasampanno
bhikkuni ca bahussuta
upasako ca yo saddho
ya ca saddha upasika
ete kho sangham sobhenti
ete hi sanghasobhana.
நல்லொழுக்கம் உடைய ஆண் துறவி,
நன்கு கற்ற பெண் துறவி,
ஆழ்ந்த நம்பிக்கை உள்ள
ஆண் மற்றும் பெண் இல்லற சீடர்கள் -
அவர்களே சங்கத்திற்கு ஒளியூட்டுகின்றனர்,
"சங்கத்தின் ஒளி விளக்குகள்" எனப் போற்றப் படுகின்றனர். 
    The monk well-possessed of virtue,
    the nun who is widely learned,
    male and female lay disciples
    who are fully endowed with faith —
    it is they who illuminate the Sangha,
    "lights of the Sangha" they are called.
88. Yassa sabrahmacarisu
garavo n'upalabbhati
araka hoti saddhamma
nabham puthaviya yatha.
தன்னுடன் புனித வாழ்வை மேற்கொண்டவர்கள் மேல்
மரியாதை காட்டாத ஒருவர்,
தம்மத்திடமிருந்து மிகத் தொலைவில் விலகி நிற்கிறார்,
வானம் பூமிக்குத் தொலைவில் இருப்பது போல.
    One who has no respect for those
    who live the holy life with him,
    is as far from this good Dhamma
    as the sky is from the earth.
89. Yassa sabrahmacarisu
garavo upalabbhati
so viruhati saddhamme
khette bijam'va bhaddakam.
தன்னுடன் புனித வாழ்வை மேற்கொண்டவர்களுக்கு
மரியாதை கொடுப்பவர்,
இந்த நல் தம்மத்துள் வளர்கிறார்,
வயலில் விதைக்கப்பட்ட நல்ல விதையைப்போல.
    One who has respect for those
    who live the holy life with him,
    comes to growth in this good Dhamma
    like a healthy seed in the field.
90. Itthibhavo kim kayira
cittamhi susamahite
nanamhi vattamanamhi
sammadhammam vipassato.
ஒரு பெண்ணாக இருப்பது ஒரு தடை இல்லை  -
மனம் அமைதியாகவும், உறுதியாகவும் இருக்கும் போது,
அறிவு நாளுக்கு நாள் வளரும் போது,
அவள் தம்மத்தை அறிந்து கொள்ளும் போது.
    A woman's nature is unimportant
    when the mind is still and firm,
    when knowledge grows day by day,
    and she has insight into Dhamma.
91. Yassa nuna siya evam
itthaham puriso'ti va
kiñci va pana asmiti
tam maro vattum arahati.
"நான் ஒரு பெண்" அல்லது "நான் ஒரு ஆண்"
அல்லது "நான்.." என்பது போன்ற எண்ணங்கள்  
யாருக்கெல்லாம் தோன்றுகின்றனவோ
அப்படிப்பட்டவர்கள் மாரனின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.
    One who thinks such thoughts
    as "I am a woman" or "I am a man"
    or any other thought "I am — "
    Mara is able to address that one.
92. Dummedhehi pasamsa ca
viññuhi garaha ca ya
garaha'va seyyo viññuhi
yan ce balappasamsana.
முட்டாள் புகழ்ந்து பேசுவதையும்
அறிவாளி நிந்தித்துப் பேசுவதையும் ஒப்பிட்டால்:
உண்மையில் அறிவாளியின் நிந்தனை
முட்டாளின் புகழ்ச்சியைவிட மேன்மையானது.
    The fools offer praise and the wise
    offer blame. Truly the blame
    of the wise is much better
    than the praise of the fool.
93. Sagara anagara ca
ubho aññoññanissita
aradhayanti saddhammam
yogakkhemam anuttaram.
இல்லறத்தாரும், வீட்டைத் துறந்தவரும்,
ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதால்
நற் தம்மத்தை நன்கு அறிந்து கொள்கின்றனர்.
இதுவே கட்டிலிருந்து கிடைக்கும் முழுமையான விடுதலை.
    Home dwellers and the homeless both,
    by depending upon each other
    come to realize the good Dhamma,
    the utter freedom from bondage.
94. Anubandho pi ce assa
mahiccho va vighatava
ejanugo anejassa
nibbutassa anibbuto
giddho so vitagedhassa
passa yavañca araka.
அருகருகே (அருகர் அருகே) இருந்தாலும்,
பொருள் சேர்க்க ஆசைப்படுபவனாகவும், அமைதியில்லாதவனாகவும் உள்ள
அந்தக் கிளர்ச்சியுற்றவன் கிளர்ச்சியற்றவரிடமிருந்து,
எரிந்து கொண்டிருப்பவன் குளிர்ந்தவரிடமிருந்து,
அவா உள்ளவன் அவாவற்றவரிடமிருந்து
மிகத் தொலைவில் இருக்கின்றான்.
    Though physically close behind,
    if one is acquisitive and restless,
    how far is that turbulent one
    from one freed from turbulence,
    that burning one from one cooled,
    that hankering one from the greedless!
95. Sukha sanghassa samaggi
samagganan c'anuggaho
samaggarato dhammattho
yogakkhema na dhamsati.
சங்கத்தில் இணக்கம் இருப்பது எவ்வளவு  மகிழ்ச்சியான செய்தி!
இணக்கத்தை நிலைநாட்ட உதவி செய்பவர்,
இணக்கத்தையும், நேர்மையையும் விரும்புபவர்
விடுதலையைவிட்டு விலகிச் செல்வதில்லை.
    A happy thing is concord in the Sangha!
    One who assists in making harmony,
    loving concord and righteousness,
    does not fall away from freedom.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
*    *    *
11. சித்தவக்க (மனம்)
   Cittavagga (Mind) 
96. Cittena niyati loko
cittena parikissati
cittassa ekadhammassa
sabb'eva vasam anvagu.
உலகம் மனத்தினாலேயே இயக்கப் படுகிறது,
மனமே உலகில் துன்பத்தை உண்டாக்குகிறது.
எல்லாவற்றையும் தன் வசப்படுத்தக்கூடிய ஒன்று - 
அதுதான் மனம்.
    The world is led around by mind,
    by mind the world is plagued.
    Mind is itself the single thing
    which brings all else beneath its sway.
97. Manopubbangama dhamma
manosettha manomaya
Manasa ce pasannena
bhasati va karoti va
tato nam sukhamanveti
chaya va anapayini.
அனைத்துக்கும் முற்பட்டது மனமே.
எண்ணங்கள் மனத்திலிருந்தே தோன்றுகின்றன; மனத்தால் ஆளப்படுகின்றன,
ஒருவன் தூய மனத்தோடு பேசினாலும், 
செயற்பட்டாலும் அவற்றினால் உண்டாகும் நன்மைகள்,
எப்போதும் நீங்காத நிழல் போன்று
அவனைப் பின் தொடர்கின்றன.
    Mind precedes all things;
    mind is their chief, mind is their maker.
    If one speaks or does a deed
    with a mind that is pure within,
    happiness then follows along
    like a never departing shadow.
98. Sududdasam sunipunam
yatthakamanipatinam
cittam rakkhetha medhavi
cittam guttam sukhavaham.
அடக்கியாளக் கடினமானதும்,
நிலைத்து நிற்காமல் எப்போதும்
அலைந்து கொண்டே இருக்கும் மனத்தை,
அறிவாளிகள் கட்டுப் படுத்துவார்களாக; 
    காக்கப்பட்ட மனம் மகிழ்ச்சியைத் தருகிறது.
    Difficult to detect and very subtle,
    the mind seizes whatever it wants;
    so let a wise man guard his mind,
    for a guarded mind brings happiness.
99. Dunniggahassa lahuno
yatthakamanipatino
cittassa damatho sadhu
cittam dantam sukhavaham.
அடக்கியாள்வதற்கு அருமையானதும்,
தன் போக்குப்படியே எதையும் பற்றிக் கொள்ளும் (புரிந்து கொள்ளும்)
மனத்தை அடக்குவது நல்லது;
ஏனென்றால் அடக்கப்பட்ட மனமானது மகிழ்ச்சியைத் தருகிறது.
    Wonderful it is to train the mind
    so swiftly moving, seizing whatever it wants.
    Good is it to have a well-trained mind,
    for a well-trained mind brings happiness.
100. Phandanam capalam cittam
durakkham dunnivarayam
ujum karoti medhavi
usukaro'va tejanam.
அடக்கியாள்வதற்கும், காப்பதற்கும் கடினமான, 
நிலையற்ற, உறுதியற்ற மனத்தை அறிவாளிகள், 
வளைந்த அம்புகளைக் கொல்லன் நேர்ப்படுத்துவது போலச்
செம்மைப் படுத்துகிறார்கள்.
    As a fletcher straightens an arrow,
    even so one who is wise
    will straighten out the fickle mind,
    so unsteady and hard to control.
101. Na tam mata pita kayira
aññe vapi ca nataka
sammapanihitam cittam
seyyaso nam tato kare
தாயோ, தந்தையோ, பிற சுற்றத்தாரோ,
செய்ய முடியாத நன்மையை,
நல்லவழியிற் செலுத்தப்படும் மனம்
ஒருவனுக்குச் செய்யும்.
    No mother nor father nor
    any other kin can do
    greater good for oneself
    than a mind directed well.
102. Anabhijjhalu vihareyya
avyapannena cetasa
sato ekaggacittassa
ajjhattam susamahito.
சொந்தம் கொண்டாடாத அன்பு,
இரக்க மனப்பான்மையை வளர்க்கிறது.
எனவே கடைப்பிடியுடன், ஒருமுகப்பட்டு,
உள்ளத்தில் நிலையான ஒருக்கத்துடன் இருக்கவும்.
    Love without covetous greed,
    fill your mind with benevolence.
    Be mindful and one-pointed,
    inwardly stable and concentrated.
103. Pañca kamaguna loke
manochattha pavedita
ettha chandam virejetva
evam dukkha pamuccati.
புலன் இன்பங்கள் ஐந்து இழைகளைக் கொண்டுள்ளவை.
மனத்தைச் சேர்த்தால் ஆறு;
இவற்றின் மேலுள்ள ஆசையைக் கைவிடுவோர்
துக்கத்திடமிருந்து விடுபடுகின்றனர்.
    There are five strands of sensual pleasure
    with the mind as the sixth;
    by overcoming desire for these
    one will be freed from suffering.
104. Mama selupamam cittam
thitam nanupakampati
virattam rajaniyesu
kuppaniye na kuppati
mam'evam bhavitam cittam
kuto mam dukkham essati.
என் மனம் பாறையைப்போல உறுதியானது,
புலன் ஆசை உண்டாக்கும் பொருட்களின் மேல்
பற்றில்லாமல் உள்ளது, 
நடுங்கும் இந்த உலகின் மத்தியில்
நடுக்கம் இல்லாமல் உள்ளது.
என் மனம் நன்றாக வளர்க்கப் பட்டுள்ளது,
பின் துக்கம் எங்கிருந்து என்னை அணுகும்?
    My mind is firm like a rock,
    unattached to sensual things,
    no shaking in the midst
    of a world where all is shaking.
    My mind has thus been well-developed,
    so how can suffering come to me?
105. Yo caram va yo tittham va
nisinno udava sayam
vitakkam samayitvana
vitakkopasame rato
bhabbo so tadiso bhikkhu
phutthum sambodhim uttamam.
துறவி ஒருவர் நடந்தாலும், நின்றாலும்,
உட்கார்ந்தாலும், படுத்தாலும்
தன் எண்ணங்களைக் கட்டுப்பாட்டில்
வைத்திருப்பதில் ஆனந்தப்பட வேண்டும்.
அப்படிப்பட்ட துறவி மேன்மையான
ஞானத்தைப் பெறத் தகுதியானவர்.
    Whether he walks or stands
    or sits or lies, a monk
    should take delight in
    controlling all thoughts.
    Such a monk is qualified
    to reach supreme enlightenment.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
*    *    *
12. சிக்கவக்க (பயிற்சி)
   Sikkhavagga (The Training)
106. Atisitam atiunham
atisayam idam ahu
iti vissatthakammante
attha accenti manave.
"மிகவும் குளிராக உள்ளது, மிகவும் வெப்பமாக உள்ளது, மிகவும் தாமதமாகிவிட்டது,"
என்று சாக்குப்போக்குச்
சொல்லிப் பயிற்சியைத் தவிர்ப்பவன்
தனது வாய்ப்புகளைத் தவற விடுகிறான்.
    "It's too cold, it's too hot,
    it's too late," with such excuses
    one who gives up the practice
    lets his opportunities slip.
107. Yo ca sitañ ca unhañ ca
tina bhiyyo na maññati
karam purisakiccani
so sukha na vihayati.
ஆனால் குளிரையும், வெப்பத்தையும்
வைக்கோலின் இடைஞ்சலுக்குச் சமமாக நினைத்துத் 
தொடர்ந்து பயிற்சி செய்பவரின்
மகிழ்ச்சி குறைவுபடுவதில்லை.
    But one who looks on cold and heat
    as no more obstructive than straw
    and continues with the practice
    does not fall short of happiness.
108. Alinacitto ca siya
na capi bahu cintaye
niramagandho asito
brahmacariyaparayano.
எனவே சோம்பலையும், சுறுசுறுப்பற்ற நிலையையும் மனத்திலிருந்து நீக்கி
கண்டதை நினைப்பதைக் கைவிடுங்கள்.
ஆரோக்கியமாக இருந்து இன்பத்தின் மேல் பற்றில்லாமல், 
புனித வாழ்விற்கு அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.
    So rid the mind of sloth and dullness,
    give up thinking of many things.
    Be healthy and unattached to pleasure,
    be devoted to the holy life.
109. Unudaro mitaharo
appich'assa alolupo
sa ve icchaya nicchato
aniccho hoti nibbuto.
மெலிந்த உடலுடன், மிதமிஞ்சி உண்ணாமல்
குறைந்தவற்றோடு திருப்தியடைந்து தொந்தரவுபடாமல்,
வீணான விருப்பங்களைக் களைந்து, வேட்கையைக் கட்டுப் படுத்தி,
இவ்வாறு விருப்பமில்லாதவர்கள் நிப்பாண நிலையை அடைகின்றனர்.
    Lean in body, frugal in food,
    content with little and undisturbed,
    vain wishes gone and craving stilled,
    thus the wantless attain Nibbana.
110. Sa jhanapasuto dhiro
vanante ramito siya
jhayetha rukkhamulasmim
attanam abhitosayam.
தியானத்தில் நிலையாக இருப்பவர்
சோலையின் எல்லையைக் கண்டு மகிழ்வார்,
மரத்தடியில் தியானம் செய்து
ஆனந்தத்தையும் திருப்தியையும் வென்றெடுப்பார்.
    One who is stable in meditation
    will delight at the woodland's edge,
    meditating at the foot of a tree
    until joy and contentment are won.
111. Kamacchando ca vyapado
thinamiddhañ ca bhikkhuno
uddhaccam vicikiccha ca
sabbaso va na vijjati.
பேராசை, கோபம், சுறுசுறுப்பின்மை,
சோம்பல், அலைக்கழிப்பு மற்றும் சந்தேகம்:
உண்மையான
சிறந்த துறவியிடம் இவற்றைக் காணமுடியாது.
    Sense desire, ill will,
    sloth, laziness, agitation,
    and doubt are not found
    in a true and worthy monk.
112. Na sabbato mano nivaraye
na mano sayatattam agatam
yato yato ca papakam
tato tato mano nivaraye.
மனத்தை எல்லாவற்றிடமிருந்தும் அடக்கி வைக்க வேண்டாம்.
ஏனென்றால் அது இன்னமும் உறங்க வைக்கப்படவில்லை.
ஆனால் தீய எண்ணங்கள் தோன்றுமானால்
அப்போது மனத்தை அடக்கி வைக்க வேண்டும்.
    Do not hold back the mind from all,
    for it is not yet put to sleep.
    But whenever evil things arise,
    then should the mind be held in check.
113. Viriyasataccasampanno
yuttayogo sada siya
na ca appatva dukkhantam
vissasam eyya pandito.
வீரியமும், விடாத்தன்மையும் கொண்டு
ஊக்கத்துடன் பயிற்சி செய்ய  வேண்டும்.
அறிவாளி துக்கத்தின் முடிவை எட்டும் வரை
மிகுந்த தன்னம்பிக்கையோடும் இருக்கக் கூடாது.
    Possessed of energy and perserverance,
    be always earnest in applying yourself.
    The wise one should not be confident
    until the end of suffering is reached.
114. Samadhiratanamalassa
kuvitakka na jayare
na ca vikkipate cittam
etam tumhe pilandhatha.
ஒருக்கம் என்ற இரத்தின மாலையை அணிந்தவரிடத்தில்
தவறான எண்ணங்கள் எழுவதில்லை,
மனமும் கலங்குவதில்லை.
எனவே இதுவே உங்கள் ஆபரணமாக இருக்கட்டும்.
    With the jewelled necklace of concentration,
    wrong thoughts cannot arise
    nor can the mind be distracted.
    So let this be your adornment.
115. Anapanasati yassa
paripunna subhavita
anupubbam paricita
yatha buddhena desita
so'mam lokam pabhaseti
abbha muto va candima.
உள் மூச்சு மற்றும் வெளி மூச்சுப் பயிற்சியைக்
கடைப்பிடிப்பதை ஞானம் பெற்றவர் (புத்தர்) சொற்படி படிப்படியாகப் பயின்று,
வளர்த்து, பிழையின்றிச் செய்பவர்,
உலகம் அனைத்தையும் பிரகாசிக்க வைக்கிறார்,
முகில் கூட்டத்திடமிருந்து விடுபட்ட நிலவைப்போல.
 
 
    One who has gradually practiced,
    developed and brought to perfection
    mindfulness of the in-and-out breath
    as taught by the Enlightened One,
    illuminates the entire world
    like the moon when freed from clouds.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
*    *    *
13. வயாமவக்க (முயற்சி)
   Vayamavagga (Effort) 
  
116. Pamado rajo pamada
pamadanupatito rajo
appamadena vijjaya
abbulhe sallam attano.
சோம்பேறித்தனம் என்பது குப்பை;
சோம்பலின் காரணமாகவே குப்பை உண்டாகிறது.
அறிவோடும், அக்கறையோடும்
தைத்திருக்கும் அம்பை நீக்குங்கள்.
    Indolence is dust;
    dust comes in the wake of indolence.
    With knowledge and vigilance
    draw out the arrow from yourself.
117. Niddasili sabhasili
anutthata ca yo naro
alaso kodhapannano
tam parabhavato mukham.
கூட்டத்தையும், தூக்கத்தையும் விரும்பி
தெளிவின்றியும், அக்கறையற்றும் இருக்கும் ஒருவன்,
கோபத்திற்கு அடி பணிகிறான்.
இவையே துக்கத்தின் ஆதாரம்.
    When one loves company and sleep,
    when one is lax and slack,
    when one is often given to anger —
    this is a source of suffering.
118. Samvaro ca pahanam ca
bhavana anurakkhana
ete padhana cattaro
desitadiccabandhuno.
கட்டுப்படுத்த, விட்டுவிட,
வளர்க்க, பாதுகாக்க:
இந்த நான்கு முயற்சிகளே
சூரிய வம்சத்தவன் (புத்தர்) கற்பித்தது.
    The effort to restrain, to abandon,
    to develop and to maintain:
    these are the four exertions
    taught by the Kinsman of the Sun.
119. Utthahatha nisidatha
no attho supitena vo?
aturanam hi ka nidda
sallaviddhana ruppatam?
 
எழுந்திரு! நிமிர்ந்து உட்கார்!
உனது கனவுகளால் என்ன பயன்?
துக்கம் என்ற அம்பினால் துளைக்கப்பட்டு,
ஒடுக்கப்பட்டிருக்கும் போது 
    உன்னால் எப்படித் தூங்கிக் கொண்டிருக்க முடிகிறது?
    Arise! Sit up! Of what use
    are your dreams? How can you
    continue to sleep when you are sick,
    pierced with the arrow of grief?
120. Amogham divasam kayira
appena bahukena va
yam yam vijahate rattim
tadunan tassa jivitam.
சிறிய அளவோ, பெரிய அளவோ
உங்கள் நாளைப் பயனுள்ளதாகச் செய்து கொள்ளுங்கள்.
கடக்கும் ஒவ்வொரு பகலும், இரவும்
உங்கள் வாழ்வை அந்த அளவு குறைத்து விடுகிறது.
    Make your day productive
    whether by little or by much.
    Every day and night that passes,
    your life is that much less.
121. Yo dandhakale dandheti
taraniye ca taraye
yoniso samvidhanena
sukham pappoti pandito.
விரைவாகப் போக வேண்டிய நேரத்தில் விரைவாகவும்,
மெதுவாகப் போக வேண்டிய நேரத்தில் மெதுவாகவும் போகும் 
அறிவாளி, மகிழ்ச்சியானவர். ஏனென்றால
அவர் எதற்கு முதன்மை தரவேண்டும் என்பதைச் சரியாகத் தெரிந்திருக்கிறார்.
    The wise one who hurries when
    hurrying is needed and who slows down
    when slowness is needed, is happy
    because his priorities are right.
122. Araddhaviriye pahitatte
niccam dalhaparakkame
samagge savake passa
esa budhana vandana.
உறுதியும், முயற்சியும் கொண்ட,
தங்கள் முன்னேற்றத்தில் திடமாக உள்ள,
முழுமையான இணக்கத்துடன் இருக்கும் சீடர்களைப் பாருங்கள் -
இதுவே புத்தருக்குத் தரும் மேன்மையான மறியாதை.
    See the disciples in perfect harmony,
    resolute and making effort,
    always firm in their progress —
    this is the best worship of the Buddha.
123. Niddam tandim vijambhikam
aratim bhattasammadam
viriyena nam panametva
ariyamaggo visujjhati.
சோம்பலும், மயக்கமும், தூக்கமும்,
சலிப்பும், உண்டபின் தோன்றும் உடல் பாரமும்-
முயன்று இவற்றை அகற்றுவதால்
மேன்மையான மார்க்கம் தூய்மை பெறுகிறது.
    Sloth, torpor and drowsiness,
    boredom and heaviness after meals —
    by expelling these with energy
    the noble path is purified.
124. Saddhaya tarati ogham
appamadena annavam
viriyena dukkham acceti
paññaya parisujjhati.
நம்பிக்கையோடு வெள்ளத்தைக் கடக்க வேண்டும்;  [6]
விடாமுயற்சியோடு கடலைக் கடக்க வேண்டும்;   [7]
நன்கு முயன்று துக்கத்தை முடிக்க வேண்டும்;
மெய்ஞ்ஞானத்தோடு ஒருவன் தூய்மைப் படுகிறான்;
    The flood is crossed by faith,
    by vigilance the sea is crossed,
    pain is overcome with vigor
    by wisdom one is purified.
125. Ujumaggamhi akkhate
gacchatha ma nivattatha
attana coday'attanam
nibbanam abhiharaye.
நேரான மார்க்கம் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளது:
முன் நோக்கி நட. திரும்பாதே.
உன்னை நீயே ஊக்குவித்துக் கொள்;
இவ்வழியில் நிப்பாணத்தை அடை.
    The straight path has been clearly shown:
    walk forward and don't turn back.
    Urge yourself onwards by yourself;
    in that way attain Nibbana.
விளக்கம்:
Notes:
[6]  "Flood or Current" stands for the Pali word 'ogha' which is fourfold — sense pleasures, becoming, wrong views and ignorance (kama-ogha, bhava-o., ditthi-o., avijja-o).  "வெள்ளம்" என்பது (பாலியில் 'ஓகா') நான்கு வகைப்படும் - புலன் இன்பங்கள், பவம் (தோன்றுகை), தவறான பார்வை மற்றும் அறியாமை.
[7]  "Sea or Ocean" stands for the Pali word 'annavam' which is metaphorically used to signify repeated existence, or samsara.
"கடல்" என்பது (பாலியில் 'அண்ணாவம்') சம்சாரச் சுழலைக் குறிக்கும். திரும்பத் திரும்பப் பிறப்பெடுத்து, மீண்டும் மீண்டும் துக்கம் அனுபவிப்பதைக் குறிக்கும்.
நற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் முகப்பு
*    *    *