குண்டலகேசி #16 இல் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பாடல்களின் உரை
“ .......பரல் வெங்கானத்துக்
கோல்வ லுளியமுங் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையு மான்கண மறலா
அரவுஞ் சூரு மிரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோற் றென்னவர் காக்கும் நாடு”
இளங்கோவடிகளார், சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம் 3. புறஞ்சேரியிறுத்த காதை Lines 4-9 Source உரை
எளிய நடை:
.. பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா
வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என
.. பரல் வெங் கானத்து - பருக்கைக் கற்களையுடைய கொடிய காட்டு வழியில்; The path through the harsh jungle had stones
பரல் - Gravel stone, pebble; பருக்கைக்கல்
வெங் - வெம்மை - Severity, harshness; cruelty; கடுமை.
கானம் - forest tract; காடு.
கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா - எதிர்ப் பட்டதனைக் கொள்ளுதல் வல்ல கரடியும் வளைந்த புற்றினைத் தோண்டா,
கோள் - Killing, murder; கொலை
வல் - Ability; திறமை
உளியம் - Bear; கரடி
அகழா - தோண்டாது
அகழ்தல் - தோண்டு-தல் - To dig, hollow, excavate
வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா - ஒளி பொருந்திய கோடுகள் பொருந்திய புலியும் மானினத்தொடு மாறுபடா,
வாள் - Lustre, light, splendour; ஒளி.
வேங்கை - Tiger புலிவகை
அரவும் சூரும் இரைதேர் முதலையும் உருமும் - பாம்பும் சூர்த் தெய்வமும் இரை தேடித் திரியும் முதலையும் இடியும் ஆய இக் கொடியவை,
சூரபதுமன் - A king of Asuras who was slain in battle by Skanda; முருகக்கடவுளாற் போரில் இரு கூறாக்கப்பட்ட அசுரவேந்தன்.
உரும் -Thunder; இடி.
சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா - தம்மை உற்றார்க்குத் துன்பம் செய்யா,
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என-செங்கோலையுடைய பாண்டியர் ஆளும் நாடென்று,
பாம்பு உறைதலான் கொடிய புற்று எனலுமாம். கரடி தான் அகழ்தற்குரிய புற்றினையும் அகழா எனவும், புலி தாம் மாறுபடுதற்குரிய மானினத்தோடும் மாறுபடா எனவும் கூறின மையின் அவை மக்கட்கு ஊறு செய்யா என்பது தானே போதரும். அரவு முதலியன உறுகண் செய்யத் தகுவனவாயினும் செய்யா என்றார். இவ்வாற்றால் இவனது நாட்டு இக் காலத்து வருத்துவது இவ் வெயிலொன்றுமே என்பதாயிற்று. நாடு அகழா மறலா செய்யா என இடத்து நிகழ் பொருளின் றொழில்கள் இடத்தின்மேல் நின்றன.
ஐவகை நிலங்களும் குறிப்பிடப்படுகின்றன என்று உரையாசிரியர் கூறுகிறார்.
முல்லை - Forest, pastoral tract, (கானம்)
குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த நிலமும் hilly tract; (சூர் கரடி)
பாலை - Arid, desert tract; (வேங்கை)
மருதம் - Agricultural tract, (உருமு)
நெய்தல் - Maritime tract; கடலும் கடல்சார்ந்த இடமும். (முதலை)
* * * * *
“அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேற் றிரையற் படர்குவி ராயின்
கேள்வன் நிலையே கெடுகநின் னவலம்
அத்தஞ் செல்வோர் அலறந் தாக்கிக்
கைப்பொருள் வௌவும் களவோர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்வுலம்
உருமும் உரறா தரவுந் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு
அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச்
சென்மோ இரவல!”
பெரும்பாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படையானும் (36 - 45) உணர்க, Source உரை Details
பெரும் பாண் - மன்னன் புகழ் பாடி பரிசு பெற்று பிழைக்கும் பாணர்கள் (பாட்டு பாடுபவர்கள்)
ஆற்றுப்படை - வழி நடத்தும், மன்னன் இருக்கும் இடம் செல்ல வழிகூறுதல்
ஆற்றுப்படை - A form of panegyric (praise of someone) poem generally in akaval
எளிய நடை:
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல், 36
பல் வேல் திரையற் படர்குவிர் ஆயின்
கேள், அவன் நிலையே; கெடுக நின் அவலம்! 38
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி,
கைப் பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக் 40
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது; அரவும் தப்பா; 42
காட்டு மாவும் உறுகண் செய்யா;வேட்டு, ஆங்கு,
அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி, 44
சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்!
36. அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்(36) - மறத்தைப்போக்கின அறத்தை விரும்பின செங்கோலினையுமுடைய,
அல்லது - Evil, sin; தீவினை
The righteous king who has given up evil and taken up good
37. பல் வேல் திரையற் படர்குவிர் ஆயின்
வேல் கொண்ட திரையன் என்ற அரசன் நினைப்பீராயின்
If you think of Thirayan who has many spears
திரையன் படர்குவிராயின்(37) நின் உள்ளம் சிறக்க(45) - திரையனை நினைப்பீராயின் அவனை நினைத்தலின் நின் நெஞ்சு சிறப்புக்களைப் பெறுக;
38.கேள், அவன் நிலையே; கெடுக நின் அவலம்!
நின் அவலம் கெடுக - அங்ஙனம் அவனை நினைத்துப் போகின்ற நீ அவன் தன்மையைக் கேட்பாயாக;
Listen to his good qualities get rid of your distress!
39-41.
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி,
கைப் பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக் 40
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்;
அவன் கடி உடை வியல் புலம் அத்தம் செல்வோர் அலற தாக்கி கைபொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை கொடியோர் இன்று
கடி Protection, safeguard, defence; காவல்
வியல்¹. vastness; அகலம்
அத்தம் - Jungle; காடு
புலம் - tract of country, இடம்
வௌவு-தல் - To seize, snatch; கைப்பற்றுதல்.
In his vast protected land those who walk in the jungle
will not scream and be attacked by cruel wayfarers
who seize the things they carry.
அவனுடைய காவலையுடைத்தாகிய அகலத்தையுடைய நிலம், வழிப்போவாரைக் கூப்பிடும்படி வெட்டி அவர்கள் கையிலுள்ள பொருள்களைக் கைக்கொள்ளும் களவே உழவுபோலும் இல்வாழ்க்கைப் பொருளாகவுடைய கொடுமையையுடையோரில்லை;
42-3. உருமும் உரறாது அரவும் தப்பா காடு மாவும் உறுகண் செய்யா - உருமேறும் இடியாது; பாம்புகளும் கொல்லுதலைச் செய்யா; காட்டிடத்துப் புலி முதலியனவும் வருத்தஞ்செய்யா ; ஆகலின்,
இஃது அவனாணை கூறிற்று. - இதுஅரசனின் ஆணை
No thunder strikes, no snakes bite
tigers don't torment in his land.
43-5. [வேட்டாங், கசைவுழி யசைஇ நசைவுழித் தங்கிச்சென்மோ:]
ஆங்கு அசைவுழி அசைஇ - அக்காட்டின்கண்இளைத்தவிடத்தே இளைப்பாறி,
in that forest you can rest where ever you are tired.
நசைவுழி வேட்டு தங்கி சென்மோ - எங்களிடத்தே நீ தங்கிப்போக வேண்டுமென்று நச்சினவிடத்தே நீயும் அதற்கு விரும்பித் தங்கிச் செல்வாயாக;
People will pester you you to stay in there abodes.
May you accept their requests.
45. இரவல - இரத்தற்றொழிலை வல்லோய்,
- இரந்து பிழைக்கும் வல்லவனே
You who lives by singing panegyrics.
* * * * *
“கருதலரும் பெருங்குணத்தோ ரிவர்முதலோர் கணக்கிறந்தோம்
திரிபுவன முழுதாண்டு சுடர்நேமி செலதின்றோர்
பொருதுறைசேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்
ஒருதுறையி னீருண்ண வுலகாண்டோ னுளனொருவன்”
இராமாவதாரம் (குலமுறை, 5) Source உரை 641
எளிய நடை:
641.
‘கருதல் அரும் பெருங் குணத்தோர்.
இவர் முதலோர் கணக்கு இறந்தோர்
திரி புவனம் முழுது ஆண்டு
சுடர் நேமி செல நின்றோர்;-
பொருது உறை சேர் வேலினாய்!-
புலிப் போத்தும் புல்வாயும்
ஒரு துறையில் நீர் உண்ண.
உலகு ஆண்டான் உளன் ஒருவன்.
பொருது உறை- போர்புரிந்த பின் உறையில்; சேர் வேலினாய் - செருகிய வேற்படையை உடைய சனகனே!;
சுடர்நேமி செல - ஒளியுடைய தமது ஆணைச் சக்கரம் (எங்கும் தடையில்லாமல்) செல்லுமாறு; திரிபுவனம் - மூன்று உலகங்களையும்; முழுது ஆண்டு நின்றோர் - முழுவதும் ஆட்சி புரிந்தவர்களும்;
கருதல் அரும்பெரும் - நினைக்கவும் முடியாத (இரக்கம் முதலிய) சிறந்த; குணத்தோர் - குணங்களையுடையவர்களும் ஆகிய;
இவர் முதலோர் - இக்குமாரர்களின் குலத்திலே தோன்றிய முந்தைய அரசர்கள்; கணக்கு இறந்தோர் - எண்ணற்றவர்கள் (இவர் குலத்துள்) ஒருவன்;
புலிப்போத்தும் - (இயல்பாகவே பகைமையுடைய) ஆண்புலிகளும்; புல்வாயும் - மான்களும்; ஒருதுறையில் - (அப் பகையுணர்ச்சியின்றி)
ஒரே நீர்த்துறையிலே; நீர் உண்ண - (இறங்கித்) தண்ணீர் குடிக்கும்படி; உலகு ஆண்டோன் - உலகத்தை அரசாண்டவன்;
ஒருவன் உளன் - (மாந்தாதா) இருந்தான்.
அரசனது ஆணையிடத்துத் தமக்குள்ள அச்சத்தால் எவையும் நலியத்தக்கனவும் நலியாமல் உள்ள நீதிமுறை கூறியது. இந்த அரசன் மாந்தாதா என்பவன். அவன் அரசாண்ட காலத்தில் நாடெங்கும் சத்துவ குணம் நிலவியிருந்ததால் மிருகங்கள் முதலியனவும் அன்பும் அருளும் பூண்டு வாழ்ந்தன. புல் வாய் - புல்லையுண்ணும் வாயையுடைய (மான்) - காரணப்பெயர். வேற்றுமைத் தொகையன்மொழி. 5
* * * * *
“கூற்ற மில்லையோர் குற்ற மிலாமையால்
சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செய்கையால்
ஆற்ற னல்லற மல்ல திலாமையால்
ஏற்ற மல்ல திழிதக வில்லையே” Source 70
இராமாவதாரம் (நாட்டுப், 39)
எளிய நடை:
70.
கூற்றம் இல்லை. ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை. தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்.
ஏற்றம் அல்லது. இழித்தகவு இல்லையே.
ஓர் குற்றம் இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும் இல்லாமையால்; கூற்றம் இல்லை- கூற்றுவனது கொடுமை அந்நாட்டில் இல்லை;
தம் சிந்தையின் செம்மையால்- அந்நாட்டு மக்களின் மனச் செம்மையால்; சீற்றம் இல்லை- சினம் அந்நாட்டில் இல்லை;
நல் அறம் அல்லது ஆற்றல் இல்லாமையால்- நல்ல அறச்செயல் செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்;
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லை- மேன்மையைத் தவிர எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.
கூற்றம் இல்லை யென்பதால் கோசல நாட்டில் சாவே இல்லை என்பது பொருளாகாது. இயற்கை மரணமின்றி இடையறவுபடுகின்ற அற்பாயுட் சாவு இல்லை என்பதே கருத்து. குற்றமே காக்க பொருளாக;
குற்றமே அற்றம் தரூஉம் பகை என்ற குறள் (434) இங்கு
நினைவுகூரத் தக்கது.
ஓர்- குறுக்கல் விகாரம். 39
* * * * *
“மன்னவன் செங்கோன் மறுத்தலஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க்
கூற்றம் ஆண்மையிற் றிரிந்து”
(5: 215 - 20) சிலப்பதிகாரம்,
எளிய நடை:
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்து
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி - அரசனது செங்கோலை மறுத்ததாகுமென்றஞ்சி, பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் - பல வுயிரையும் பருகும் திறந்த வாயையுடைய கூற்றம், ஆண்மையில் திரிந்து - ஆணியல்பு திரிந்து, Source
* * * * *
“மாறழிந்தோடி மறலியொளிப்ப முதுமக்கட் சாடிவகுத்த தராபதியும்”
எனவரும் விக்கிரம் சோழனுலாவாலும் (7 - 8),
மறலி - Yama; இயமன்
தராபதி = தாரகாபதி - Moon, as lord of the stars; King ??
"எமன் பகையை நீங்கிப் புறங்காட்டி ஓடியொளிக்கும்படி கிழவர்களுக்குச் சாடி வகுத்துக் கொடுத்த மன்னவனும், "
Lines 14-16 in Source
* * * * *
“மறனி னெருங்கி நெறிமையி னொரீஇக்
கூற்றுயிர் கோடலு மாற்றா தாக
வுட்குறு செங்கோ லூறின்று நடப்ப” (4. 2; 54 - 6) Source 54-56
பெருங்கதை
பெருங்கதை
கொங்கு நாட்டு விசய மங்கலத்தில் பிறந்த கொங்கு வேளிர் எழுதிய நூல், பெருங்கதை ஆகும். இது வடமொழி நூலைத் தழுவியது. குணாட்டியர் என்பவர் எழுதிய வடமொழி நூல் பிருகத் கதை. அந்த நூல் தமிழில் பெருங்கதை யாக உருவாயிற்று. கொங்கு வேளிர் சமணர். எனவே இந்த நூலில் சமண சமயக் கருத்துகளைக் காணலாம்.
எளிய நடை:
மறனில் நெருங்கி நெறிமையின் ஒரீஇக்
கூற்றுயிர் கோடலும் ஆற்றா தாக
உட்குறு செங்கோல் ஊறுஇன்று நடப்ப
மறன் - அறம் எதிர்
நெறிமை = நேர்மை
ஒரீ - தவிர்த்து
எமன் உயிர் எடுக்க முடியாத நிலை. ஏன்
அரசன் ஆட்சியில் செங்கோல்
* * * * *