மேகிய சூத்திரம்
மேகிய சூத்திரம்
மேகிய சூத்திரம்: மேகியரைப் பற்றி
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தனிசாரோ பிக்கு.
Meghiya Sutta: About Meghiya
translated from the Pali by Thanissaro Bhikkhu.
நல்ல நண்பர்களின் முக்கியத்துவம் பற்றி புத்தரின் அறிவுரை [1]
ஒரு சமயம் பகவர், சாளிக மலை அருகில் சாளிகர் மத்தியில் எழுந்தருளியிருந்ததாகக் கேள்வியுற்றேன். அச்சமயம்
போ.மேகியர் பகவரின் அணுக்கத் தொண்டராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார் [2]. அப்போது போற்றுதற்குரிய மேகியர் பகவரிடம் சென்று, மரியாதையுடன் தலைவணங்கிப் பின் ஒரு புறமாக நின்றார். பின் அவர் பகவரிடம், "நான் ஜந்து கிராமத்திற்கு உணவேற்கச் செல்ல விரும்புகின்றேன்," என்று கூறி அனுமதி கேட்டார்.
"அப்படியென்றால் மேகியரே, நீர் இப்போது செய்யவேண்டியதைச் செய்யுங்கள்," என்று பகவர் பதில் கூறி அனுமதி தந்தார்.
பின் அதி காலை போ. மேகியர் சீவர ஆடைகளைச் சரி செய்து மேல் ஆடையையும், பிச்சாபாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு ஜந்து கிராமத்திற்கு உணவேற்கச் சென்றார். உணவருந்திய பின்னர் திரும்பி வருகையில் கிமிகாளா (Kimikālā) ஆற்றின் கரையோரமாக நடந்து சென்றார். தம் கால்களுக்குப் பயிற்சி தரும் வகையில் மேலும் கீழும் ஆற்றங்கரையோரமாக நடந்து கொண்டிருக்கும்போது அருகில் ஒரு அழகான மாந்தோப்பு இருப்பதைக் கண்டார். அதைக் கண்டவுடன் இந்த எண்ணம் அவருக்குத் தோன்றியது: "எவ்வளவு அழகான மாந்தோப்பு! (தியானத்தில்) முயற்சி செய்யவிரும்பும் நல்ல குடும்பத்தில் பிறந்த இளைஞனுக்கு மிகவும் பொருத்தமான இடம் இது. பகவர் அனுமதித்தால் நான் இங்கு வந்து தியானம் செய்ய வேண்டும்."
பின் போ. மேகியர் பகவரிடம் சென்று அவரை வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார். அப்போது அவர் பகவரிடம் தான் கண்ட மாந்தோப்பை விவரித்து அங்கு சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.
பகவர் போ. மேகியரிடம், "நான் தனியாக இருக்கின்றேன், இன்னொரு துறவி வரும் வரை இங்கேயே இரு," என்று பதிலளித்தார்.
இரண்டாம் முறையாக போ. மேகியர் பகவரிடம், "அண்ணலே, பகவர் இனிமேல் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடித்து விட்டீர்கள். ஆனால் நானோ மேலும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. இதுவரை செய்ததைவிட மேலும் செய்யவேண்டியது உள்ளது. பகவர் அனுமதித்தால் நான் அந்த மாந்தோப்பிற்குச் சென்று (தியானம் செய்ய) பயிற்சி செய்ய விரும்புகிறேன்," என்று கேட்டுக் கொண்டார்.
இரண்டாம் முறையாக பகவர் போ. மேகியரிடம், "நான் தனியாக இருக்கின்றேன், இன்னொரு துறவி வரும் வரை இங்கேயே இரு," என்று பதிலளித்தார்.
மூன்றாம் முறையாக போ. மேகியர் பகவரிடம், "அண்ணலே, பகவர் இனிமேல் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. செய்ய வேண்டியதைச் செய்து முடித்து விட்டீர்கள். ஆனால் நானோ மேலும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. இதுவரை செய்ததைவிட மேலும் செய்யவேண்டியது உள்ளது. பகவர் அனுமதித்தால் நான் அந்த மாந்தோப்பிற்குச் சென்று (தியானம் செய்ய) பயிற்சி செய்ய விரும்புகிறேன்," என்று கேட்டுக் கொண்டார்.
"நீ முயற்சி பற்றிப் பேசுவதால் மேகியரே நான் மேலும் என்ன சொல்ல? செய்ய வேண்டியதைச் செய்," என்று அனுமதி வழங்கினார்.
பின் போ. மேகியர் தன் இருக்கையிலிருந்து எழுந்து பகவரைத் தலைகுணிந்து வணங்கி, வலம் சுற்றி வந்து மாந்தோப்பிற்குச் சென்றார். சென்றவர் தோப்பின் உள் பகுதிக்குச் சென்று தான் தேர்ந்தெடுத்த ஒரு மரத்தின் அடியில் அந்த நாளைக் கழிப்பதற்கென அமர்ந்தார்.
Now while Ven. Meghiya was staying in the mango grove, he was for the most part assailed by three kinds of unskillful thoughts: thoughts of sensuality, thoughts of ill will, and thoughts of doing harm. The thought occurred to him: "How amazing! How astounding! Even though it was through faith that I went forth from home to the homeless life, still I am overpowered by these three kinds of unskillful thoughts: thoughts of sensuality, thoughts of ill will, and thoughts of doing harm."
ஆனால் போ. மேகியர் அந்தத் தோப்பில் இருந்தபோது அவர் மனம் அழிவுக்கு இட்டுச் செல்லும் மூன்று எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டது: காம எண்ணங்கள், வெறுப்பூட்டும் எண்ணங்கள், கேடு விளைவிக்கும் எண்ணங்கள் ஆகியவை அவர் மனத்தில் தோன்றின. அவருக்கு இந்த எண்ணம் தோன்றியது: "என்ன ஆச்சரியம்! என்ன அதிசயம்! நான் ஆழமான நம்பிக்கையின் காரணமாக வீடு துறந்து இந்தத் துறவு வாழ்கையை மேற்கொண்டேன். அப்படியும் காம எண்ணங்கள், வெறுப்பூட்டும் எண்ணங்கள், கேடு விளைவிக்கும் எண்ணங்கள் என்ற இந்த மூன்று தீய எண்ணங்கள் என் மனத்தை ஆட்டிப் படைக்கின்றனவே?"
பின் மாலை நேரமாகத் தன் தனிமையிலிருந்து வெளிவந்து அவர் பகவரிடம் சென்று, அவரை வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார். பின் நடந்ததைப் பற்றிப் பகவரிடம் விவரித்தார்.
"Meghiya, in one whose awareness-release is still immature, five qualities bring it to maturity. Which five?
"மேகியரே, மன விடுதலை முழுமையாக முற்றாத நிலையில் இருக்கும் ஒருவருக்கு இந்த ஐந்து பண்புகள் அதனைப் பூரணமாக்கும். அவை எவை?
"There is the case where a monk has admirable people as friends, companions, and colleagues. In one whose awareness-release is still immature, this is the first quality that brings it to maturity.
"வீடு பெறாத ஒருவருக்கு நல்ல நண்பர்கள், துணைவர்கள், தோழர்கள் இருப்பார்களானால், அவர் வீடு பெறுவதற்கு உதவும் முதல் இயல்பு இதுவே."
"Furthermore, the monk is virtuous. He dwells restrained in accordance with the Pāṭimokkha, consummate in his behavior and range of activity. He trains himself, having undertaken the training rules, seeing danger in the slightest faults. In one whose awareness-release is still immature, this is the second quality that brings it to maturity.
"மேலும் ஒருவர் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிக்கின்றார். அவர் நடத்தைகளும், நடவடிக்கைகளும் பாத்திமோக்க (Pāṭimokkha) துறவிகளுக்கான விதிமுறைகளின் வரையறைக்குள் அடங்கும். விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு பயிற்சிசெய்பவர் சிற்சிறு அத்து மீரல்களில் உள்ள ஆபத்தையும் காண்கின்றார். வீடு பெறாத ஒருவர் வீடு பெறுவதற்கு உதவும் இரண்டாம் இயல்பு இதுவே."
"Furthermore, he gets to hear at will, easily and without difficulty, talk that is truly sobering and conducive to the opening of awareness, i.e., talk on modesty, contentment, seclusion, non-entanglement, arousing persistence, virtue, concentration, discernment, release, and the knowledge and vision of release. In one whose awareness-release is still immature, this is the third quality that brings it to maturity.
மேலும் தன் விழிப்புணர்வைத் தூண்டும், மனக்கிளர்ச்சிகளை அடக்கும், பேச்சுக்களை விரும்பும் போதெல்லாம், சுலபமாகக் கேட்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கும். அதாவது கண்ணியம், திருப்தி, ஏகாந்தம், சிக்கலற்றிருப்பது, விடாமுயற்சி, ஒழுக்கம், மன ஒருக்கம், விவேகம், வீடுபேறு, வீடுபேறு பற்றிய அறிவாற்றல் ஆகியவை பற்றிய போதனைகள் மற்றும் பேச்சுக்கள் அவை. வீடு பெறாத ஒருவர் வீடு பெறுவதற்கு உதவும் மூன்றாம் இயல்பு இதுவே."
"Furthermore, he keeps his persistence aroused for abandoning unskillful [mental] qualities and for taking on skillful qualities. He is steadfast, solid in his effort, not shirking his duties with regard to skillful qualities. In one whose awareness-release is still immature, this is the fourth quality that brings it to maturity.
மேலும் அவர் திறமையற்ற இயல்புகளைக் கைவிடவும், திறமையான இயல்புகளைப் பெறவும் தொடர்ந்து ஊக்கத்துடன் முயல்கிறார். வீடு பெறாத ஒருவர் வீடு பெறுவதற்கு உதவும் நான்காம் இயல்பு இதுவே."
"Furthermore, he is discerning, endowed with the discernment related to arising and passing away - noble, penetrating, leading to the right ending of stress. In one whose awareness-release is still immature, this is the fifth quality that brings it to maturity.
"மேலும் அவர் தோன்றுவன அனைத்தும் மறையும் தன்மை கொண்டிருப்பதை உணரும் விவேகம் கொண்டிருக்கின்றார். இந்த மேன்மையான அறிவாற்றல் அவரைத் துக்கத்திலிருந்து விடுபட வைக்கும். வீடு பெறாத ஒருவர் வீடு பெறுவதற்கு உதவும் ஐந்தாம் இயல்பு இதுவே."
"Meghiya, in one whose awareness-release is still immature, these are the five qualities that bring it to maturity.
மேகியரே விழிப்படையாத ஒருவர் இந்த ஐந்து இயல்புகளையும் வளர்த்துக் கொள்வாரெனில் அவர் விழிப்பு அடையும் நிலையை அடைவார்.
"Meghiya, when a monk has admirable people as friends, companions, and colleagues, it is to be expected that he will be virtuous, will dwell restrained in accordance with the Pāṭimokkha, consummate in his behavior and range of activity, and will train himself, having undertaken the training rules, seeing danger in the slightest faults.
"மேகியரே, ஒருவருக்கு நல்ல நண்பர்கள், துணைவர்கள், தோழர்கள் இருப்பார்களானால், அவர் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அவரது நடத்தையும் நடவடிக்கைகளும் பதிமோக வரையரைக்குள் அடங்கும். விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு பயிற்சிசெய்பவர் சிற்சிறு அத்து மீறல்களில் உள்ள ஆபத்தைக் காண்கின்றார்.
"When a monk has admirable people as friends and colleagues, it is to be expected that he will get to hear at will, easily and without difficulty, talk that is truly sobering and conducive to the opening of awareness, i.e. talk on modesty, contentment, seclusion, non-entanglement, arousing persistence, virtue, concentration, discernment, release, and the knowledge and vision of release.
"மேகியரே, ஒருவருக்கு நல்ல நண்பர்கள், தோழர்கள் இருப்பார்களானால், அவர் விழிப்புணர்வைத் தூண்டும், மனக்கிளர்ச்சிகளை அடக்கும் பேச்சுக்களை விரும்பும் போதெல்லாம், சுலபமாகக் கேட்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கும். அதாவது கண்ணியம், திருப்தி, ஏகாந்தம், சிக்கலற்றிருப்பது, விடாமுயற்சி, ஒழுக்கம், மன ஒருக்கம், விவேகம், வீடுபேறு, வீடுபேறு பற்றிய அறிவாற்றல் ஆகியவை பற்றிய போதனைகள் மற்றும் பேச்சுக்களைக் கேட்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கும்."
"When a monk has admirable people as friends, companions, and colleagues, it is to be expected that he will keep his persistence aroused for abandoning unskillful qualities and for taking on skillful qualities - steadfast, solid in his effort, not shirking his duties with regard to skillful qualities.
"மேகியரே, ஒருவருக்கு நல்ல நண்பர்கள், துணைவர்கள், தோழர்கள் இருப்பார்களானால், அவர் திறமையற்ற இயல்புகளைக் கைவிடவும், திறமையான இயல்புகளைப் பெறவும் தொடர்ந்து ஊக்கத்துடன் முயல்வார்.
"When a monk has admirable people as friends, companions, and colleagues, it is to be expected that he will be discerning, endowed with the discernment relating to arising and passing away - noble, penetrating, leading to the right ending of stress.
"மேகியரே, ஒருவருக்கு நல்ல நண்பர்கள், துணைவர்கள், தோழர்கள் இருப்பார்களானால், தோன்றுவன அனைத்தும் மறையும் தன்மை கொண்டிருப்பதை அறியும் விவேகம் கொண்டிருப்பார். துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச்செல்லும் விவேகம் இது.
"And furthermore, when the monk is established in these five qualities, there are four additional qualities he should develop: He should develop [contemplation of] the unattractive so as to abandon passion. He should develop good will so as to abandon ill will. He should develop mindfulness of in - and - out breathing so as to cut off thinking. He should develop the perception of inconstancy so as to uproot the conceit, 'I am.' [1] For a monk perceiving inconstancy, the perception of not-self is made steady. One perceiving not-self attains the uprooting of the conceit, 'I am'- unbinding right in the here- and -now."
"ஒருவர் இந்த ஐந்து பண்புகளையும் நிலைநாட்டிய பின்னர் மேலும் இந்த நான்கு இயல்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவை: அசூப பாவனை செய்து காம எண்ணங்களை அடக்குதல், நல்லெண்ணங்களை வளர்த்து வெறுப்பினைத் தணித்தல், உள்-வெளி மூச்சினைக் கவனித்து மனத்தின் எண்ணங்களை அறுத்தல், 'நான்' என்ற அகம்பாவ எண்ணத்தைக் கைவிட, அநித்திய பாவனை செய்தல் ஆகியவை. அநித்தியத்தைப் பிரதிபலிப்பவர் தானின்மை என்ற குறிப்பினை நிலை நாட்டுகிறார். தானின்மையை அறிந்தவர் அகம்பாவத்தை வேரோடு பிடுங்கி இப்போதே இங்கேயே வீடு பேறு அடைகிறார்.
Then, on realizing the significance of that, the Blessed One on that occasion exclaimed:
Little thoughts, subtle thoughts,
when followed, stir up the heart.
Not comprehending the thoughts of the heart,
one runs here and there,
the mind out of control.
But comprehending the thoughts of the heart,
one who is ardent, mindful,
restrains them.
When, followed, they stir up the heart,
one awakened
lets them go without trace.
இதன் முக்கியத்துவத்தை அறிந்து, அச்சமயம் பகவர் கூறியது:
சிறிய எண்ணங்கள், நுட்பமான எண்ணங்கள்,
ஆகியவற்றைத் தொடர்ந்தால் அவை
உள்ளத்தில் கிளர்ச்சிகளை உண்டாக்கும்.
உள்ளத்தின் கிளர்ச்சிகளை அறியாதோர்
அடங்கா மனத்துடன்
இங்கும் அங்கும் அலைகின்றனர்.
ஆனால் ஆர்வமிக்கவர்,
விழிப்புடன் இருப்பவர்
உள்ளத்தின் எண்ணங்களை அறிந்து
அவற்றை அமைதிப் படுத்துகிறார்.
கிளர்ச்சிகள் தோன்றாதவாறு
விழிப்புடன் இருக்கின்றார் .
அடையாளம் இல்லாதவாறு
அவற்றைக் கைவிடுகிறார்.
* * *
விளக்கம்
[1]
ஒருமுறை ஆனந்தர் அண்ணலிடம் வந்து கூறினார்: "புனிதமான வாழ்க்கையின் பாதிப் பகுதி அழகான நட்பும், அழகான சம்பந்தமும், அழகான உறவும் தான்."
அண்ணல் பதிலிறுத்தார்: "அப்படிச் சொல்லாதே, ஆனந்தா! அப்படிச் சொல்லாதே! புனிதமான வாழ்க்கையின் முழுப்பகுதியும் இந்த அழகான நட்பும், இந்த அழகான சம்பந்தமும், இந்த அழகான உறவும் தான்."
Then Ananda came to the Lord and said: “Half of the holy life is beautiful friendship, beautiful association and beautiful intimacy.”
The Lord replied: “Say not so, Ananda, say not so! It is the whole of the holy life, not half, this beautiful friendship, this beautiful association, this beautiful intimacy.” [translation Bhante S. Dhammika]
ஆதாரம்/Source: https://www.accesstoinsight.org/tipitaka/sn/sn45/sn45.002.than.html
[2] பெரும்பாலான சூத்திரங்களில் ஆனந்தர் அணுக்கத் தொண்டராக இருப்பார். அவ்வப்போது மேகியர் போலவே வேறு சிலரும் பகவருக்கு அணுக்கத் தொண்டர்களாக இருந்திருக்கின்றனர்.
* * *