மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 82-103 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே
அருஉரு என்பது அவ்வுணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப
வாயில் ஆறும் ஆயுங்காலை
உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும்
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுதல் என்ப
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் 30-090
வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை
பற்று எனப்படுவது பசைஇய அறிவே
பவம் எனப்படுவது கரும ஈட்டம்
தரும் முறை இது எனத் தாம்தாம் சார்தல்
பிறப்பு எனப்படுவது அக் கருமப் பெற்றியின்
உறப் புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய்
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல்
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் 30-100
தாக்கு நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்
சாக்காடு என்பது அருஉருத் தன்மை
யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல்
Consciousness is like the experience of one who is asleep
no perception, no action taken, just direct experience.
Mind and matter is said to be the mind and body
associated with that consciousness.
Upon investigation the six sense bases
they are the conduit for consciousness to experience external objects.
Contact is mind and senses organs
joining with sense objects.
Feelings are experiences of the sensory input.
Craving is the pursuit of pleasure unfulfilled.
Clinging is attachment to objects.
Becoming is the collection of kamma
that have consequences appropriate to the actions.
Birth is - depending on our acquired kamma -
consciousness which is related to its factors before and after, moving through states of existence
appearing in bodies according to cause and effect.
Disease related to the other factors means
the body in an unnatural state is not at ease.
Aging means until death
clashing with inconstancy the body weakening.
Death is this body which has name and form
disappearing like the setting sun in the western sea.
82. உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்
உணர்வெனப்படுவது - உணர்வு என்று சொல்லப்படும் நிதானமாவது;
உறங்குவோர் உணர்வின் - கண்ணுறங்கும் ஒருவர்பாலுள்ள உணர்வு போன்றது;
உணர்வு - Consciousness, Viññana
Consciousness is like the awareness of one who is asleep
Consciousness: Consciousness arises from mental formations. Literally, it means perceiving, comprehending, recognizing, differentiating, etc. Usually it is interpreted to be our mind.
83. புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே
புரிவு இன்றாகி - விளக்கமின்றி;
புலன் கொளாதது - செய்கையின்றி ஐம்புலனும் ஒடுங்கி இருப்பது
புரிவு – தெளிவு, Clearness; lucidity;.
உறங்குவோர்பால் உணர்விருந்தும் செயற் படாமல் தன்னில் தானே அடங்கியிருப்பது போன்றதொரு நிலையில் இருக்கும் உணர்வையே ஈண்டு உணர்வு என்னும் நிதானமாகக் கூறப்படுகின்றது. (from Alternate Commentary)
bare attention, no action taken, just direct experience
Like a robot recognizing an object. What it does next depends on other factors (such as what it is programmed to do).
கண்கூடாக – பிரத்தியட்சமாக, Actually, really, directly;
84,85. அருஉரு என்பது அவ்வுணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப
அருவுரு என்பது - அருவுரு எனப்படும் நிதானமாவது; அவ்வுணர்வு சார்ந்த உயிரும் உடம்பும் ஆகும் என்ப - அவ்வுணர்வொடு கூடிய உயிரும், உடம்புமாகும் என்று புலவர் சொல்லுவர்.
இங்ஙனம் இருக்கும் உணர்வு (consciousness) அறிவினும், உடம்பினும் பரவிக் காரியப்படுகின்ற நிலைமையில் அதனை அருவுரு என்னும் நிதானம் என்று குறியீடு செய்வர் என்றவாறு. இவ்வுணர்வு, உறங்கும் போது உள்ள அடங்கிய நிலையில், உணர்வு என்றும், அஃது உயிரினும் உடம்பினும் பரவிக் காரியப்படுமளவில் அருவுரு என்றும் பெயர் பெறுகின்றது என்றவாறு.
அறிவு அருவமும், உடம்பு உருவமும் ஆதலின் இவை இரண்டும் கூடும் கூட்டமே அருவுரு என்னும் நிதானம் ஆயிற்று என்க. (from Alternate Commentary)
அருஉரு Nama-rupa – Mind and matter/ or mentality and materiality/ or name and form
Mind and matter is said to be the mind and body associated with that consciousness
Name and form not the same as the Five Aggregates (i.e., form, feeling, perception, mental formations, and consciousness).
And what are name and form? Feeling, perception, intention, contact, and attention. This is called name. The four primary elements, and form derived from the four primary elements. This is called form. Such is name and such is form. These are called name and form. (SN12.1 Bhante Sujato)
86. வாயில் ஆறும் ஆயுங்காலை
வாயில் ஆறும் – இந்திரியம் ஐந்தும், மனமும் ஆகிய வாயில்கள் ஆறும்;
ஆயுங்காலை - ஆராயுமிடத்து
வாயில்கள் ஆறாவன : மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் என்பனவாம். இவ்வாறினாலும் உணரப்படும் பொருள்களும் அறுவகையாதலின், மெய் முதலியவற்றை அகவாயிலென்றும், மெய்யாலறியப்படும் பொருள், வாயாலறியப்படும் பொருள் முதலியவற்றைப் புறவாயிலென்றும் கூறப்படுவதால், "ஆயுங்காலை" யென்றார். வாயிலை வடநூலார் ஆயதனம் என்பராதலின், இது சடாயதனமென வட நூல்களுட் கூறப்படுகிறது.
வாயில் ஆறும் - Sadayatana – Six sense bases
Upon investigation the six sense bases
87. உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும்
உள்ளம் உறுவிக்க - உள்ளத்தின் கண் பொருளுணர்ச்சி எய்திப் பொருந்துதற்கு;
உறும் இடனாகு மென்ப - உரிய இடமாகுமென்று புலவர் கூறுவர்
உள்ளத்தின் கண் பொருளுணர்ச்சி எய்திப் பொருந்துதற்கு -
உறங்கும்போது ஆறு வாயில்கள் வழியே உணரப்படும் ஆறு உணர்வுகளும் அடங்கி இருக்கின்றன. அந்தந்த உணர்வுகளை அவை அறிவதில்லை. விழிப்பு நிலையில் இருக்கும் போதுதான் அவை அறிவோடு கலந்து புலன் சுவைகளைப் பகுத்துணர முடிகின்றது
உள்ளவறிவு, n. < உள்ளம் +. [M. uḷḷaṛivu.] (Buddh.) Consciousness, intellect, thought-faculty. See விஞ்ஞானம். உருவு ... உள்ளவறிவிவை யைங்கந்த மாவன (மணி. 30, 190).
உறுவி-த்தல் uṟuvi- , 11 v. tr. caus. of உறு-. To cause to experience, as pleasure or pain; அனுபவித்தல்.
இடன்¹ n. < இடம்.
உறும்- உறுவாகும்
they are the conduit for consciousness to experience external objects
The Six Senses: They are eye, ear, nose, tongue, body, and mind. Through these six organs contact with external objects is possible.
88. ஊறென உரைப்பது உள்ளமும் வாயிலும்
ஊறு என உரைப்பது - ஊறு எனக் கூறப்படும் நிதானமாவது; உள்ளமும் வாயிலும் - மனமும் இந்திரியங்களும்:
Phassa – Contact - ஊறு
contact is mind and senses organs
Contact: Contact arises from the six senses. It is the experience created by the six senses, sense objects, and consciousness. Therefore contact is the condition for feeling. Without contact, there is no feeling. Suffering is dependent upon contact because it gives rise to feeling.
89. வேறு புலன்களை மேவுதல் என்ப
வேறு புலன்களை மேவுதல் என்ப - தம்மின் புறமாகிய (வேறுபட்ட) பொருள்களைப் பொருந்துவதென்று புலவர் கூறுவர்.
joining with sense objects
மேவுதல் பொருந்துதல், இணைதல், To join ,To join together, unite;
பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்கள், Organs of five sense,
வேறு புலன்களை - கோடற்குரிய புலன்களை
கோடல் – கொள்ளுகை, கொள், Taking, receiving, buying;
புலன் - ஐம்புலன், any of the five senses;
90. நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்
நூகர்வே - நுகர்ச்சி யெனப்படும் நிதானமாவது; புலன்களை நுகர்தல் - புலன்களாகிய பொருளை உணர்ந்து அவற்றின் பயனை யடைதல்;
Feelings are experiences of the sensory input
Vedana – Feelings - நுகர்வு
உணர்வு – அறிவு, Consciousness, sense-perception;.
நுகர்தல் - experience;
Feeling: Feeling arises from contact. It is the affective tone. There are three kinds of feelings, namely: pleasant, unpleasant, and neutral. Feeling is the condition for craving.
91. வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை
வேட்கை - வேட்கையென்னும் நிதானமாவது; விரும்பி நுகர்ச்சி ஆராமை - அப் பயனை விரும்பி நுகர்ந்தவழி அதன்மேற் செல்லும் ஆசை அடங்காமையாம்;
Tanha – Craving - வேட்கை
Alt Comm: "யாதானும் ஒரு பொருளை நுகர விரும்பி அந்நுகர்ச்சி நிரம்பாமையாலே அமைதி கொள்ள மாட்டாமையாம்"
ஆராமை – நிரம்பாமை, தெவிட்டாமை,
Craving is the pursuit of pleasure unfulfilled
Craving: Craving arises from feeling. Craving is sensuous desire, the pursuit of pleasure, and the identification with attachment to gain and the fear of loss. Craving is the condition for clinging.
92. பற்றெனப்படுவது பசைஇய அறிவே
பற்று எனப்படுவது - பற்றெனப்படும் நிதானமாவது; பசைஇய அறிவு - அடங்கா தெழுந்த ஆசையால் அதனையே பற்றி நிற்பதாம்
Upadana – Clinging - பற்று
பசைஇய அறிவு
பசைஇய - ஒட்டிக் கொண்ட
பசை – பற்று, விருப்பம், ஒட்டும் பசை,
Stickiness, tenacity, adhesiveness;
Clinging is attachment to objects
Clinging: Clinging arises from craving. Clinging is an attachment to objects. We have the desire to keep something, to possess it permanently. However, all phenomena are impermanent. Therefore we are bound to suffer because of our ignorance. Clinging is the condition for becoming.
93. பவம் எனப்படுவது கரும ஈட்டம்
பவம் எனப்படுவது - பவமென்று சொல்லப்படும் நிதானமாவது ; கரும ஈட்டம் - கருமங்களின் தொகுதி ;
பவம் = Bhava – Becoming - கருமங்களின் தொகுதி
ஈட்டம் – பொருளீட்டுகை, சம்பாதிக்கை, Acquiring, earning;
Becoming: Becoming arises from clinging/grasping. Becoming means to cause birth, create, and exist. Because of attachment to phenomena we assume that there is a self. However, this ‘self’ is conditioned and impermanent. Becoming is the condition for birth.
Becoming is the collection of intentional actions
94. தரும் முறை இது எனத் தாம்தாம் சார்தல்
தரும் முறை இது என - தன் பயனை விளைவித்துக் கொடுக்கும் முறைமை இதுவாகு மென்று கருதி ; தாம்தாம் சார்தலை - கருமத்தைச் செய்தோர் அப்பயனை உடன்பட்டு ஏற்றுக்கொண்டமைவதாம்.
that have consequences appropriate to the actions
95. பிறப்பு எனப்படுவது அக் கருமப் பெற்றியின்
பிறப்பெனப்படுவது-பிறப்பென்னும் நிதானமாவது; கருமப் பெற்றியின் - செய்த வினைகளின் தன்மைக் கேற்ப;
பிறப்பு : தோற்றம், Jati – Birth;
பெற்று – பெருக்கம், அடுக்கு, Pile;
Birth is depending on our acquired intentional actions (kamma)
Birth: Birth arises from becoming. Birth refers to either physical birth or the moment-to-moment arising of renewed consciousness. Birth is the condition for old age and death.
96. உறப் புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
உறப்புணர் உள்ளம் - ஏனையவற்றோடு நெருங்கிச் சேர்ந்திருக்கும் விஞ்ஞானமானது;
சார்பொடு - முன்னும் பின்னுமாய்ச் சாரும் நிதானங்களுடன்; கதிகளில் - பலவகைப் பிறப்புகளிலும்;
consciousness - that which is related to its factors before and after - moving through states of existence
உறப்புணர் – நெருங்கிச் சேர்ந்திருத்தல்
புணர்தல் – சேர்தல், கூடுதல்
கதி – உயிர் எடுக்கும் பிறப்பு, தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி, நரககதி;
97. காரண காரிய வுருக்களில் தோன்றல்
காரண காரிய உருக்களில் தோன்றல் - காரண காரியமாய் இயையும் உடம்புகளில் தோன்றுவதாம்
appearing in bodies according to cause and effect
98. பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய்
பிணியெனப்படுவது - நோய் என்று சொல்லப்படுவது ; பிறிது சார்பாய் - பேதைமை முதலாகக் கூறியவற்றின் வேறான சார்பாய்,
பிணி : dis-ease
Dis-ease related to the other factors
99. இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல்
உடம்பு இயற்கையின் திரிந்து - உடம்பு தன் இயல்பான தன்மையிலிருந்து வேறுபட்டு; இடும்பை புரிதல் - அதற்குத் துன்பத்தை உண்டு பண்ணுவதாம்;
the body in an unnatural state is not at ease
100. மூப்பென மொழிவது அந்தத்து அளவும் 30-100
மூப்பு என மொழிவது – முதுமையென்று சொல்லப்படுவது; அந்தத்து அளவும் - சாகும் வரையில்;
மூப்பு: முதுமை, Aging
aging means until death
அந்தம் – முடிவு, Termination, end, close;
101. தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்
தாக்கும் நிலையாமையின் - வந்து மோதுகின்ற நிலையாமையால்; தளர்ந்திடுதல் - உடம்பு தளர்ச்சி எய்துவதாம்;
clashing with inconstancy the body weakens
102. சாக்காடென்பது அருஉருத் தன்மை
சாக்காடு என்பது – இறத்தல் என்று சொல்லப் படுவது;
அருவுருத்தன்மை: யாக்கை-அருவாதலும் உருவாதலு மாகிய தன்மையினையுடைய உடம்பானது;
சாக்காடு – இறப்பு, death
Death is this body which has qualities of name and form disappearing like the setting sun in the western sea
Old Age and Death: Old age and death arise out of birth. Death is one of the greatest afflictions and fears of the untrained, undisciplined worldling. Aging and death are the conditions for ignorance. (Basics of Buddhism - Satipañña Insight Meditation Toronto (satipanna.com)
103. யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல்
வீழ்கதிரென யாக்கை மறைந்திடுதல் - மேலைக் கடலில் விழும் ஞாயிறு போல யாக்கை மறைவதாம்
It is like the setting sun disappearing in the western sea.
மேலை – மேற்குக்கரை, Western bank or coast;
யாக்கை – உடம்பு, Body, as compacted together. யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு (குறள், 79).