மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 64-81 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
தீவினை என்பது யாது என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று 30-070
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப்
பத்து வகையால் பயன் தெரி புலவர்
இத் திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்
"நல்வினை என்பது யாது?" என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி 30-080
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
Should you ask, "What is a bad deed?"
you lady who wears a beautiful bracelet! Listen to me:
Killing, stealing, sexual misconduct
are the three kinds of wrongs appearing in a pure body.
Lies, malicious speech, harsh speech, frivolous speech
are the four types of wrong speech.
Greed, hatred and delusion
are the three kinds of wrong deeds that appear in the mind.
The wise who know these ten kinds of actions and the results
will not think about them even in their hearts. If they did
animal, ghost and hell births await
minds agitated with much suffering.
Should you ask, "What is a good deed?"
Not doing the collection of ten evils mentioned above,
undertaking virtue, establishing generosity.
That which the wise have said are three good results follow
taking birth as devas, humans or brahmas
experiencing the joy from the results of their good deeds.
64. "தீவினை என்பது யாது?" என வினவின்
தீவினையென்று சொல்லப் படுவது யாதென்று கேட்பாயாயின்;
65. "ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்"
ஆய்தொடி நல்லாய் - அழகிய வளையணிந்த நங்கையே;
ஆய் - Beauty; அழகு.
தொடி - Bracelet; கைவளை
அது கேளாய் - யான் சொல்லும் அதனைக் கேட்பாயாக;
நல்லாய் - பெண்ணிற் சிறந்தவள், Lady, woman of quality or distinction;
66. "கொலையே களவே காமத் தீவிழைவு"
கொலையும், களவும், காமமுமாகிய தீய வேட்கைகள்;
காமம் - விருப் பம், kāmam, 1. Desire;.
தீவிழைவு – தீய வேட்கை,
The three kinds of wrong bodily action: killing, stealing, sexual misconduct
67. "உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்"
இம்மூன்றும் கெடுதலில்லா உடம்பால் உண்டாகும் தீவினைகள்;
உலைத்தல் – கெடுத்தல், To ruin, injure;. காரியத்தை உலைத்து விடாதே
உலையா – உலைத்தல் இல்லாத, கெடுத்தல் இல்லாத, கெடாத;
68, 69 "பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்
எனச்" சொல்லில் தோன்றுவ நான்கும்
பொய்யுரையும், புறங்கூறலும், கடுஞ்சொல்லும், பயனில்லாத சொல் சொல்லுதலும் என்று
வாக்கினால் உண்டாகும் தீவினைகள் நான்கும்;
குறளை - கோள் சொல்லல், Calumny, aspersion, backbiting;
The four kinds of wrong speech: Lies, malicious speech, harsh speech, frivolous speech.
70. வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
பிறர் பொருளை கவரக் கருதலும், சினம் கொள்ளலும், குற்றம்படவுணர்தலு மென்று
These three are hinderances of the mind - Greed, hatred and delusion.
வெஃகல் – மிகுந்த விருப்பம், பேராசை, Excessive desire;. 2. Avarice, greed; To seize, grasp with eagerness;
வெகுளல் – சினம் கொள்ளுதல், To be angry with, to show signs of anger;
பொல்லாக் காட்சி - Opposite of right view
பொல்லாக் காட்சி – மயக்க அறிவு, Confused knowledge, bewilderment;
71. உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என
மனத்தில் தோன்றுவனவாகிய தீவினை மூன்றும் என;
உருப்பன - தோன்றுவன
72. பத்து வகையால் பயன் தெரி புலவர்
பத்து வகையால் – பத்து வகைப்படுதலால்; பயன்தெரி புலவர்-வினைவகையும், அவற்றால் விளையும் பயனும் ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்;
வினைவகை – செயல் முறை, type of actions பயனும் – விளைவும், results
73. இத்திறம் படரார் படர்குவர் ஆயின்
இத்திறம் படரார் – இப்பத்துவகைக் குற்றங்களையும் ஒருநாளும் நெஞ்சாலும் நினைக்க மாட்டார்கள்;
படர்குவராயின் - அப்படி நினைவாராயின் ;
திறம் – குணம், தன்மை,
படர் – நினைப்பு, Thought, reflection;
நினையார் – நினைக்க மாட்டார்கள்.
இப்பத்துக் குணங்களையும் மனதாலும் நினைக்க மாட்டார்கள்.
74. விலங்கும் பேயும் நரகரும் ஆகி
விலங்கும், பேயும், நரகருமாகிய பிறப்பாகப் பிறந்து;
75. கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்
கலக்கமுற்ற மனத்தோடு கூடிய துன்ப உடல் பெற்று வருந்துவர்
76. "நல்வினை என்பது யாது?" என வினவின்
நல்வினை யென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்;
77. சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
முன்பு சொல்லப்பட்ட பத்துவகைத் தீவினைத் தொகுதிகளைச் செய்யாது நீங்கி;
தீவினை – கொடுஞ்செயல், Sinful deed;
தொகுதி – வரிசை, Series, class, as of persons or things;.
78. சீலம் தாங்கித் தானம் தலைநின்று
சீலம் தாங்கி - சீலத்தை மேற்கொண்டு;
தானம் தலைநின்று - தானங்கள் பலவற்றையும் செய்து;
Undertaking virtue, establishing generosity See line 30-1
79. மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத்
மேற்கதி யென்று சான்றோரால் வகுத்துரைக்கப் பட்ட மூன்று கதிகளில்;
That which the wise have said are three good results
மேற்கதி – நற்கதி, Supreme Bliss
வகுத்தல் - வகைப்படுத்திச் சொல்லுதல், To narrate categorically;
80 தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
தேவரென்றும், மக்களென்றும், பிரம ரென்றுமுள்ள கதிகளிற் பிறந்து;
To be born in the deva, human or brahma world is a good result. Devas and Brahmas live in heavenly realms but are subject to aging and death just like humans.
81. மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
தாம் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை நுகர்வர்
உண்குதல் – அனுபவித்தல், நுகர்தல், Enjoy, experience of pleasure or pain, as from former deeds;
மேவிய - மேவல், ஆசை, Desire;
experience the joy from the results of their good deeds