மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 45-50 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈராறும்
பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர்
அறியார்ஆயின் ஆழ் நரகு அறிகுவர் 30-050
Ignorance, kammic formations, consciousness, Mind and matter,
Six sense bases, Contact, Feelings, Craving,
Clinging, Becoming, Birth, Decay suffering death -
the twelve links of Dependent origination have this nature.
Upon realizing this humans get that which is highly worth obtaining (final liberation).
If they don't, they will experience hell.
45-48. பேதைமை...ஈராறும்
பேதையையும், செய்கையும், உணர்வும், அருவுருவும், வாயிலும், ஊறும், நுகர்வும், வேட்கையும், பற்றும், பவமும், தோற்றமும், வினைப்பயனுமென இத்தன்மையாக வகுக்கப் பட்ட நிதானங்களின் இயல்பு பன்னிரண்டினையும்;
வாயில் 2. The five organs of sense, as avenues to the self; ஐம்பொறி. (பிங்.) 3. The five objects of sense; ஐம்புலன்.
Even though the dictionary says five organs, line 86 of Manimekalai chapter 30, starts with வாயில் ஆறும் meaning the six sense objects. So Saathanar uses வாயில் to include mind.
இற்று - இத்தன்மையானது, Form of a verb, meaning, (It) is of such a nature;.
49. பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர்
பிறந்தோர் அறியின் - மண்ணில் மக்களாகப் பிறந்தவர்கள் ஆராய்ந்தறிந்து கொள்வார்களாயின்; பெரும்பேறு அறிகுவர் - பெரிய பேறாகிய வீடு பேற்றினை எய்துவர்;
அறிகுவர் – வீடு பேற்றினை அடைந்து, அங்குள்ள இன்பங்களை அறிவார்கள்.
பேறு: பெறத் தக்கது, அடையத்தக்கது, Anything worth obtaining;
எய்துதல் - அடைதல், To obtain, acquire, attain;
50. அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர்
அறியாராயின் - அறியாதிருப்பார்களாயின்; ஆழ்நரகறிகுவர் - கரையேறமுடியாத ஆழ்ந்த நரகத்தில் வீழ்ந்து ஆண்டுள்ள துன்பத்தைத் தான் அறிவார்கள்.
கரையேற்றுதல் – நற்கதிசேர்த்தல், நற்கதியடைதல், To save, redeem, emancipate, as from karma;. To be saved, rescued, as from the sea of transmigration; to gain heavenly bliss;.
ஆண்டுள்ள - அங்குள்ள
* * * * * *
Notes:
As defined by Nyanatiloka Mahathera:
Kammic formations - the rebirth-producing volitions
Mind and matter - the mental and physical phenomena (which make up our so-called individual existence)
Six sense bases - the six bases (of mental life, i.e. the five physical sense-organs and consciousness as the sixth)
Contact - (sensory and mental) impression.