மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 37-44 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றிப்
பின்போக்கு அல்லது பொன்றக் கெடாதாய்
பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய்
யானும் இன்றி என்னதும் இன்றி 30-040
போனதும் இன்றி வந்ததும் இன்றி
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன எல்லாம் தானே ஆகிய
No-origination, No-cessation
Nothing but succession, No annihilation
No doer No doing
No me Not mine
Neither gone nor is it coming
No finishing by others No ending by itself
Doing and its results, Birth and Liberation
Source for all are these links of dependent origination
37. நின்மிதி இன்றி ஊழ்பாடு இன்றி
நின்மிதி இன்றி – நிருமிக்கப் படுதலின்றி; ஊழ்பாடின்றி - கெடுவதுமின்றி;
நிருமிதம் 1. That which is created or formed; உண்டாக்கப் பட்டது. "பெரியவரை உபசரித்து அழைப்பதற்காக நிருமிக்கப்பட்ட சபை"
ஊழ்பாடு Coming to an end; முடிவு படுகை.
no-origination (the first cause is not by a creator), no-cessation
38. பின்போக்கு அல்லது பொன்றக் கெடாதாய்
பின் போக்கல்லது - ஒன்றன் வழியொன்று தொடர்வதல்லது. பொன்றக் கெடாதாய் - முற்றும் கெடுவதில்லையாய்;
பின்போக்கு 1. Uninterrupted succession, chain; தொடர்ச்சி.
பொன்றக் கெடுதல் - To be absolutely ruined; முற்றாக அழிதல். பொன்றக் கெடாப் பொருள் (மணி. 30, 223).
Nothing but succession, No annihilation
"It is a series of continuous becoming without ever reaching final destruction" - Aiyangar.
39. பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய்
செய்பவர் இன்றித் தானே செய்யப் படுவதில்லையாய்;
No doer No doing
"It neither does nor can be described as being done." - Aiyangar.
40. யானும் இன்றி என்னதும் இன்றி
யான் எனது என்னும் பற்றுக்கோடாவதின்றி;
பற்றுக்கோடாவதின்றி – பற்றுக் கொள்வதின்றி
No me Not mine
"It is neither self nor is it possessed by another self." - Aiyangar.
41. போனதும் இன்றி வந்ததும் இன்றி-
போக்கு வரவு இல்லாததாய்
Neither gone nor is it coming
"It is nothing that is gone, nothing that is to come." - Aiyangar.
42. முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
பிறர் முடிக்க முடிவதும், தானே முடிதலும் இல்லாததாய்;
No finishing by others No ending by itself
"It cannot be brought to an end, nor is it to end itself." - Aiyangar.
43, 44.
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன எல்லாம் தானே ஆகிய
வினையாயும், வினையால் தோன்றும் பயனாயும், பிறப்புக்கும், வீடுபேற்றுக்கும் காரணமாகியும் இவை போன்ற பிறவற்றிற்கெல்லாம் தானே முதலாகியுமுள்ளன இந்நிதானங்கள்
The real nature of everything is seen by realizing that everything is dependently arisen.
Doing and its results, Birth and Liberation
Source for all are these links of dependent origination
"It is itself the result of the deed, birth and cessation. Such is the nature of the twelve causes and conditions." - Aiyangar
* * * * * *
Notes:
The Tamil commentary says these lines containing opposite words are similar to what Nagarjuna said in his The Middle way teachings (Madyamika) .
மூலமாத்தியமிக காரிகையில் நாகார்ச்சுனர் எட்டு வகையாகக் கூறுகின்றார்.
"No destruction. no production; no discontinuity, no permanence; no unity; no diversity: no coming (appearance), no going (disappearance)"
From a commentary by Bimal Krishna Matilal on Prajnaparamita (Sanskrit: Prajna - wisdom, paramita - highest)
Nagarjuna describes it by eight Negatives (cancelling one another)
No cessation, no origination; no destruction, no permanence; no unity; no diversity: no coming (appearance), no going (disappearance)
It is said to the state of perfect equilibrium, where all mutual forces are at rest. It is the state of perfect freedom, joy and bliss.