மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 27-36 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய்
தோன்றுதற்கு ஏற்ற காலம் மூன்று உடையதாய்
குற்றமும் வினையும் பயனும் விளைந்து
நிலையில வறிய துன்பம் என நோக்க 30-030
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி
நால்வகை வாய்மைக்குச் சார்பு இடன் ஆகி
ஐந்து வகைக் கந்தத்து அமைதி ஆகி
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி
இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய்
Birth is possible in three realms
which happen in three periods (past, present and future).
The defilements, volitional activities and resultants arise.
They are inconstant, insubstantial and cause suffering. Seeing them as such
Leads to the deathless state of liberation
Helps to see the Four noble truths
created from the union of the Five aggregates
to realize Truth it is capable of being argued in the six forms
The four methods and benefits thereof
The four types of questions and answers related to these principles
27. தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய்
பார்க்கின் - ஆராயுமிடத்து; தோற்றம் மூன்று வகையாய்- பிறப்பு மூன்று வகையாயும்;
பிறப்பு - (ஆகுதல், Becoming) மூன்றாவன: அருவம் (formless), உருவம் (form), காமம் (sensual) என்பன.
Birth is possible in three realms - the realms of formless, form and sensuality, Also see 30,153-158 and Angutara Nikayam 3.76
28. தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய்
அம்மூவகைப் பிறப்பும் தோன்றுவதற்கேற்ற காலம் மூன்றுடையதாயும் நிலவும்
காலம் மூன்று: இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பன.
The three periods being past, present and future.
29. குற்றமும் வினையும் பயனும் விளைந்து
குற்றமும் - வேட்கையும், பற்றும் பேதைமையுமாகிய குற்றங்களும்;
வினையும் – பவமும், செய்கையுமாகிய வினைகளும்;
பயனும் - இவையொழிந்த ஏழுமாகிய பயனுமாக;
விளைந்து - இப்பன்னிரண்டும் நிலவுதலால்;
The defilements, volitional activities and resultants are in the 12 factors of dependent co-arising. The defilements cause volitional activities which has resultants which causes further defilements. An endless cycle.
defilements (குற்றம்) - Avijja (பேதைமை, Ignorance), Tanha (வேட்கை, Craving), Upadana (பற்று, clinging)
volitional activities (வினை) - Sankhara (செய்கை, Kammic formations), Kamma bhava (volitional process கன்ம பவம் )
round of resultants - Viññana (உணர்வு, Rebirth consciousness), nama-rupa (அருவுரு, Mind and matter), salayatana (வாயில் Six sense bases), Phassa (ஊறு Contact), vedana (நுகர்வு Feelings), Upapatti bhava (rebirth process மறுபிறப்பு செயற்றொடர் ) Jati (தோற்றம் Birth), Jara-marana (வினைப்பயன் Decay, suffering and death)
30. நிலையில வறிய துன்பம் என நோக்க
நிலையில - நிலையில்லாதனவென்றும்;
வறிய - பயனில்லாதனவென்றும்;
துன்பம் என - துன்பமென்றும்;
நோக்க- இவற்றைக் கண்டு நீக்க;
பிறப்புகள் நிலைத்தல் இல்லாதனவும் இன்பமில்லாதனவும் பெருகிய துன்பமே உடையனவும் ஆம் என்று மெய்யுணர்ந்த பொழுது; - Alt. Comm.
The endless cycle (of defilements leading to volitional activities leading to resultants leading to further defilements) is inconstant, selfless and is suffering. See it as such.
31. உலையா வீட்டிற்கு உறுதி ஆகி
அழியாத வீடுபேற்றிற்கு உறுதியாகிய நன்ஞானமுண்டாகும்
(This teaching) leads to the deathless state of liberation
உலைத்தல் – கெடுத்தல், 1. To ruin, injure; காரியத்தை உலைத்து விடாதே,
உலையா – கெடுதலில்லாத
அது தானே எஞ்ஞான்றும் அழியாத வீட்டின்பத்திற்கு உறுதி தருவதாகவும் ஆகி; - Alt. Comm.
32. நால்வகை வாய்மைக்குச் சார்பு இடன் ஆகி
நான்கு வகையாகிய வாய்மைகட்கும் அடைக்கலம் தரும் இடமாகியும்;
நால்வகை வாய்மை - The four noble truths
1. துக்கம், 2. துக்கத் தோற்றம், 3. துக்க நீக்கம், 4. துக்க நீக்க நெறி/மார்க்கம்.
1. Dukkha, 2. Samudaya, the arising or origin of dukkha, 3. Nirodha, the cessation of dukkha 4. Magga, the way leading to the cessation of dukkha
சார்பு இடன் ஆகி – அடைக்கலம் தரும் இடமாகி,
சார்பு – அடைக்கலம்
33. ஐந்து வகைக் கந்தத்து அமைதி ஆகி
ஐவகைக் கந்தங்களுக்கும் அமைவுடையதாயும்;
ஐவகைக் கந்தங்கள் - உருவம், நுகர்ச்சி, குறிப்பு, பாவனை, உள்ள அறிவு (உணர்வு/விஞ்ஞானம்)
Five aggregates (Khandhas) - Form, Feelings, Perception, Volitional activities, Consciousness
Volitional activities பாவனை refers to physical, verbal, and mental activities done with intention.
Also referred as (mental) fabrications (கட்டுமாணங்கள்) - because we fabricate these activities knowingly.
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன 30,189-190
அமைதி ஆகி – அடங்குவதாகவும்,
அமைவுடையதாயும்;
அமைதி – அடக்கம்;
34. மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி
மெய்ம்மை யுணர்வுக்குரிய அறுவகையான வழக்குகளையுடையதாகியும் இந்நிதானம் நிலவும்
வழக்கு ஆறாவன: உண்மை வழக்கு, இன்மை வழக்கு, உள்ளது சார்ந்த உண்மை வழக்கு, உள்ளது சார்ந்த இன்மை வழக்கு, இல்லது சார்ந்த உண்மை வழக்கு, இல்லது சார்ந்த இன்மை வழக்கு என்பன. இவற்றைப் பிறாண்டும் கூறுப.
பிறாண்டு - பிற இடங்களிலும், Elsewhere;
See 30,191-198 for more details.
"It is capable of being argued in the six forms." This translation is taken from "Manimekalai in historical setting" - Aiyangar
35. நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி - நால்வகை நயங்களாலும் நால்வகைப் பயன்களை அடைந்து;
நயங்கள் நான்காவன; ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை, இயல்பு என்பன.
The four methods
ஒற்றுமை நயம், வேற்றுமை நயம், புரிவின்மை நயம், இயல்பு நயம் எனக் காரணகாரிய சம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை. (மணி. 30, 218.)
நான்கு நயம்எனத் தோன்றப் படுவன -
ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை, இயல்பு என்க. (மணி. 30, 217-218.)
புரிவு 1. Love, attachment; அன்பு, ஆசை, புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து (பு. வெ. ஒழிபு, 12). 2. Desire; விருப்பம்.
"The four kinds of causal relation" This translation is taken from "Madras University - Tamil Lexicon"
Further explained in 30,217-228
36. இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய்
இயன்ற - இவற்றோடு ஒப்பவியலும்; நால்வகை வினாவிடை யுடைத்தாய் - நான்கு வகையான வினாவிடையுமுடையதாய் இந்நிதானம் இயலும்.
வினாவிடை நான்காவன; "வினாவிடை நான்குள்ளன. அவை: துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல், வினாவின் விடுத்தல், வாய்வாளாமை என்பனவாகும்." (30. 285--37)
The Buddha classified questions into four types depending on the response-strategy they deserved: a categorical answer, an analytical answer, cross-questioning, and being put aside. AN 4:42 (Anguttara Nikaya)
* * * * * *
Notes:
3 types of becoming ( adapted from 'The Paradox of Becoming' by Thanissaro Bhikku).
The terms “sensuality,” “form,” and “formless” each have a precise range of meanings. “Sensuality” (kama) denotes sensual pleasures. However, the Buddha also gave it a different and more specific meaning. It means passion for sensual thoughts and desires — the mind’s tendency to be more addicted to sensual desire per se than to specific sensual pleasures.
For ex: If you prepared a feast for friends, the feast itself would be a sensual pleasure. But the excitement while planning and preparing the feast (which lasts a lot longer than the actual eating) would be desire for sensual pleasure.
Most of the time we indulge in sensual becoming. We replace one sensual becoming with another but they are all unsatisfactory.
The word “form”(rupa) similarly carries two meanings. In some contexts it denotes visual forms - those visible to the eye of the flesh or to the inner eye of the mind. Form becoming usually happens when meditating and we get a sense of the body sitting and meditating.
As for “formless” (arupa), it is used primarily to denote the fourth jhana - a deep meditative state where we experience formlessness - no sense of the body.
Notes for Line 27
The cycle of Dependent Origination is also known as the Wheel of Becoming (bhavacakka), or Wheel of Samsara. This model covers three lifetimes -- ignorance and volitional impulses are in one lifetime, consciousness to becoming are in a second lifetime, while birth and aging and death (with sorrow, lamentation and so on) occur in a third. Taking the middle life-span as the present one, we can divide the three life periods, with the entire twelve links of the Dependent Origination cycle, into three time periods, thus:
1. Past life -- Ignorance, volitional impulses:
2. Present life -- Consciousness, body and mind, sense bases, contact, feeling, craving, clinging, becoming:
3. Future life -- Birth, aging and death (sorrow, lamentation, pain, grief and despair).
Among these three periods, the middle period, the present, is our base. From this perspective, we see the relationship of the past section as purely a causal one, that is, results in the present are derived from causes in the past (past cause => present result), whereas the future section specifically shows results, that is extending from causes in the present to results in the future (present cause => future result). Thus the middle section, the present, contains both causal and resultant conditions. We can now represent the whole cycle in four sections:
1. Past cause = Ignorance, volitional impulses:
2. Present result = Consciousness, body and mind, sense bases, contact, feeling.
3. Present cause = Craving, clinging, becoming:
4. Future result = Birth, aging and death (sorrow, lamentation, etc.).
Notes for Line 29:
Because of the relationship between the twelve links of the Dependent Origination cycle, they can be divided into three groups, called the vatta[11], or cycles.
1. Ignorance-craving-clinging (avijja-tanha-upadana) -- These are kilesa (defilements), the instigating forces for the various kinds of deluded thought and action. This section is accordingly called the kilesavatta.
2. Volitional impulses (sankhara, and rebirth conditioning actions ([kamma-] bhava) -- These are kamma, the process of action based on kilesa which conditions life. This segment is called the kammavatta.
3. Consciousness, body and mind, six sense bases, contact, feeling (viññana, namarupa, salayatana, phassa, vedana) -- These are vipaka, the events of life resulting from the effects of kamma. These then become food for kilesa, which then become the causes for the creation of more kamma. This segment is thus called the vipakavatta.
These three vatta are continuously propelling each other around in the cycle of life.