மணிமேகலை காதை 30

மணிமேகலை முகப்பு Manimekalai Home

மணிமேகலை Manimekalai

காதை 30 Canto 30

வரிகள் 16-26 Lines

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை


ஈர் அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்ச்

சார்பின் தோன்றித் தத்தமில் மீட்டும்

இலக்கு அணத் தொடர்தலின்

மண்டில வகையாய் அறியக் காட்டி

எதிர் முறை ஒப்ப மீட்சியும் ஆகி 30-020

ஈங்கு இது இல்லாவழி இல்லாகி

ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகலின்

தக்க தக்க சார்பின் தோற்றம் எனச்

சொற்றகப் பட்டும் இலக்கு அணத் தொடர்பால்

கருதப் பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய்

மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்


The twelve links of dependent origination.

appear by cause, capable of release

well defined, they follow by cause and effect

and explained in a circular fashion.

Removal of cause removes the effect.

When this is not, that is not.

When this is, that is.

According to the causes they appear.

The truth of cause and effect is understood thus:

This teaching has four divisions

and it has three connections


விளக்கவுரை Commentary:

16. ஈர் அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்

புத்தன் மொழிந்த இக்கட்டுரைப் பொருள் பன்னிரண்டு பொருள்களாகக் கூறப்படும் நெறியை யுடையதாய்;

அவை: 1. பேதமை, 2. செய்கை, 3. உணர்வு, 4. அருவுரு, 5. வாயில், 6. ஊறு,

7. நுகர்வு, 8. வேட்கை, 9. பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன்

ஈரறு - இரண்டு x ஆறு = பன்னிரண்டு

ஈந்த – வழங்கிய, தந்த

நெறி - ஒழுங்கு, விதி, Precept, rule, principle;


17. சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும்

சார்பின் தோன்றி – ஒன்றிலிருந்து ஒன்று காரண காரியமாய்ச் சார்ந்து தோன்றி; தத்தமில் மீட்டும் - தம்மில் மீளத் தோன்றுதலான்;

தத்தமில் – தம் + தம்மில்; தம்மிலிருந்து மீளத் தோன்றுதலான்

மீள - To redeem, restore, rescue; இரட்சித்தல்

Appear by cause capable of release


18. இலக்கு அணத் தொடர்தலின்

காரண காரியமாய் இயைந்து தொடர்ந்து தோன்றுதலால்;

இலக்கு – குறிக்கோள், நாடிய பொருள்

அணத்தல் – கூடுதல், பொருந்துதல் 1. To be joined, united;

இலக்கு + அண : இலக்கண

இலக்கணம் ilakkaṇam , n. < lakṣaṇa. 1. Definition; accurate description; சிறப்பியல்பு.

இயை-த்தல் - பொருத்துதல், To join, connect, adapt;

well defined they follow by cause and effect


19. மண்டில வகையாய் அறியக் காட்டி

மண்டலிக்கும் முறையில் வைத்து விளங்கக் காட்டி

மண்டிலம் - மண்டலம் வட்டம், Circle, sphere, orbit; Coursing in a circle; வட்டமாயோடுகை மண்டிலம் போலக் காட்ட (மணி. 25, 137)


20. எதிர் முறை ஒப்ப மீட்சியும் ஆகி

எதிர்முறை ஒப்ப - இவ்வாறு எதிர் தோன்றுதற் கேதுவாகிய காரணத்தை நீக்கிய வழி; மீட்சியுமாகி - பேதைமை முதலியவற்றினின்று மீட்சியுண்டாம்;

எதிர்மறை – எதிர்மறுப்பு, Negative;

மீட்சி, மீள் - விடுதலை செய்கை, Releasing, redeeming;


21. ஈங்கு இது இல்லாவழி இல்லாகி

ஈங்கு இது இல்லா - இவ்வாறு காரணமில்லை யாகவே;

வழி இல்லாகி - காரியமாகிய வழிமுறைத் தோற்றம் இல்லையாதலாலும்;

இது இல்லையானல் அது இல்லை.

When this is not, that is not (Pali: Imasmim asati idam na hoti).


22. ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகலின்

ஈங்கு இது உள்ள - இவ்வாறே காரணத்தை விரும்பிய வழி; வழியுண்டாதலின் - காரியமாகிய தோற்ற முண்டாதலாலும்;

இது இருந்தால் அது இருக்கிறது.

When this is, that is (Pali: Imasmim sati idam hoti);



A. Imasmim sati idam hoti:

Imasuppada idam upajjati:

When there is this, that is.

With the arising of this, that arises.

B. Imasmim asati idam na hoti:

Imassa nirodha idam nirujjhati:

When this is not, neither is that.

With the cessation of this, that ceases. [S.II.28,65]

Source

Ven. Prayudh Payutto (Ven. Phra Brahmagunabhorn)- Dependent Origination : The Buddhist Law of Conditionality (dhammatalks.net)


23. தக்க தக்க சார்பின் தோற்றம் எனச்

காரணங்களை உள்ளுதலும், தள்ளுதலுமாகிய தகுதிக் கேற்பச் சார்பில் தோன்றும் காரியத் தோற்றம் உண்டாதலும், இல்லையாதலும் என்று;

உள்ளுதலும், தள்ளுதலுமாகிய தகுதி – காரணங்களை ஏற்றுக் கொள்வதற்கும், காரணங்களை ஒதுக்கி விடுவதற்கும் ஏற்ப காரியங்கள் உண்டாவதும், நீங்குவதும் நிகழும்


24/25. சொற்றகப்பட்டும் இலக்கு அணத் தொடர்பால் கருதப்பட்டும்

சொற்றகப்பட்டும் - சொல்லப்பட்டும்;

இலக்கணத் தொடர்பால் கருதப்பட்டும் - காரண காரியங்களின் உண்மையின்மைகள் இவ்வியைபால் உணரப்பட்டும் வரும்


25. கண்டம் நான்கு உடைத்தாய்

நான்கு வகையான கண்டங்களை யுடையதாய்;

கண்டம் – துண்டம், 1. Piece, fragment


26. மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்

மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் - அக் கண்டங்கள் தம்மிற்புணரும் புணர்ச்சி மூன்று வகை உடையதாய் இந்நிதானம் இயலும்

சந்தி – கூடுகை, இசைப்பு, 1. Joining, joint;. (பிங்.) 2. Meeting, union, combination;.

* * * * * *

Notes:

நான்கு கண்டங்களாவன:

இறந்த காலக் காரணங்கள்,

நிகழ் கால விளைவுகள்,

நிகழ் காலக் காரணங்கள்,

எதிர் கால விளைவுகள்


கடந்த காலம்: பேதமை, செய்கை.

நிகழ் காலப் பாதிப்புகள்: உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு ஆகியவையாகும்.

நிகழ் காலக் காரணங்கள்: வேட்கை, பற்று, பவம் ஆகியவை.

எதிர்காலம்: தோற்றமும், வினைப்பயனும்


மூன்று சந்திகளாவன: Three Connections

கடந்தகாலக் காரணங்கள் Past causes ----> நிகழ்காலப் பாதிப்புகள் Present effects

நிகழ்காலப் பாதிப்புகள் Present effects ----> நிகழ்காலக் காரணங்கள் Present causes

நிகழ்காலக் காரணங்கள் Present causes ----> எதிர்காலப் பாதிப்புகள் Future effects

முதல் சந்தி

செய்கைக்கும் உணர்வுக்கும் உள்ள சந்தி தான் கடந்தகாலக் காரணங்களுக்கும் நிகழ் காலப் பாதிப்புகளுக்கும் உள்ள சந்தி.

இரண்டாம் சந்தி

நுகர்வுக்கும் வேட்கைக்கும் உள்ள சந்தி தான் நிகழ் காலப் பாதிப்புகளுக்கும் நிகழ்காலக் காரணங்களுக்கும் உள்ள சந்தி.

மூன்றாம் சந்தி

பவத்திற்கும் தோற்றத்திற்கும் உள்ள சந்தி தான் நிகழ் காலக் காரணங்களுக்கும், வருங்காலப் பாதிப்புகளுக்கும் உள்ள சந்தி.


Visuddhimagga (xvii, 288)

288. Again, it should be understood thus: --> 'it' here refers to to the law of Dependent Origination

(1) It has three links with cause, fruit, cause, As first parts; and

(2) four different sections;

(3) Its spokes are twenty qualities;

(4) With triple round it spins forever.


289. 1. Herein, between formations and rebirth-linking consciousness there is one link consisting of cause-fruit. Between feeling and craving there is one link consisting of fruit-cause. And between becoming and birth there is one link consisting of cause-fruit. This is how it should be understood that it has three links with cause, fruit, cause, as first parts


290. 2. But there are four sections, which are determined by the beginnings and ends of the links, that is to say, ignorance/ formations is one section; consciousness/mentality-materiality/ sixfold base/contact/feeling is the second; craving/clinging/ becoming is the third; and birth/ageing-and-death is the fourth. This is how it should be understood to have four different sections


298. 4. With triple round it spins forever (§288): here formations and becoming are the round of kamma. Ignorance, craving and clinging are the round of defilements. Consciousness, mentality-materiality, the sixfold base, contact and feeling are the round of result. So this Wheel of Becoming, having a triple round with these three rounds, should be understood to spin, revolving again and again, forever, for the conditions are not cut off as long as the round of defilements is not cut off.