மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 250-264 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
கட்டும் வீடும் அதன் காரணத்தது 250
ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை
யாம்மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசியென
தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்
மைத்திரி கருணா முதிதையென் றறிந்து
திருந்துநல் உணர்வாற் செற்றம் அற்றிடுக!
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக
இந்நால் வகையான் மனத்திருள் நீங்கென்று 260
முன்பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீபம் நன்கனம் காட்டத்
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப்
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றனள்என் 264
The cause for the chains that bind us and liberation
is not any external body
For all the sufferings that I have mentioned before
greed, hatred and delusion are the reason.
Inconstancy, suffering, not-self, impurity
can be separately analyzed and greed cut-off.
Love, compassion, sympathetic joy:
From the merits of these actions remove hatred.
Listening to the Dhamma, reflect on what you heard, act accordingly,
realize the truth. Thus remove delusion.
With these four kinds of activities remove darkness from your mind!'
Thus from the Dhamma that has no contradictions
liberation was explained clearly.
Manimekalai took the vows of a renunciate, studied the Dhamma
and undertook to 'Cut the defilements that cause birth!'
250. கட்டும் வீடும் அதன் காரணத்தது
கட்டும் வீடும் – கட்டும், வீடுமாகிய இரண்டினையும் ; அதன் காரணத்ததும் - ஒவ்வொன்றன் காரணத்தினையும்;
கட்டு என்பது துக்கமும் அதற் கேதுவு மென்ற இவற்றோடு பிணிப்புண்டிருத்தல்.
வீடு, இன்பமும், அதற்குரிய ஏதுவுமாம். கட்டும், வீடும் எய்துதற்குப் பிறர் காரணரல்லர்; அவரவரே காரணரென்பது கருத்து. கட்டும் அதனைப் பயக்கும் ஏதுவுமாகிய இரண்டிற்கும் அடிப்படையான காரணம் காமம் வெகுளி மயக்கம் ஆகியவையே.
கட்டு - பிறப்பினிற் கட்டுண்டு மண்டில வகையாற் சுழலுதல். வீடு - பிறப்பின் சுழற்சியினின்றும் விடுதலை யடைதல். ஒருவனைப் பிறப்புச் சுழலிற்படுமாறு கட்டி வைத்தற்குரியாரும், அதனினின்றும் வீடு செய்தற்குரியாரும் பிறர் இல்லை என்றவாறு. எனவே அவ்விரண்டிற்கும் உரியவன் அவனே என்றவாறாயிற்று. Alt Comm. is better
கட்டுதல் – பிணித்தல், To tie, bind, fasten, shackle;
ties to the circular chain of dependent origination.
வீடு Liberation - escape from the circular chain of dependent origination.
ஏது – காரணம், etu, n. < hētu. 1. Cause, origin, ultimate cause;
The cause for the chains that bind us and liberation
is not any external body.
251. ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை -
கூடியிருந்து பெறுவித்தற்குரியவர் பிறர் யாருமில்லை;
252. யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் - யாம் முன்னே சொல்லியுள்ள துக்கங்கள் எல்லாவற்றிற்கும்;
For all the sufferings that we have mentioned before
greed, hatred and delusion are the reason.
253. காமம் வெகுளி மயக்கம் காரணம் -
காமமும் வெகுளியும் மயக்கமும் என்ற மூன்றுங் காரணமாம்.
வெகுளி - முக்குற்றங் களுள் ஒன்றான கோபம், Anger, wrath.
திருவள்ளுவரும்,
“காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.” (குறள் – 360) என்றார்.
254, 255. அநித்தம் துக்கம் அநான்மா அசுசி எனத்
தனித்துப் பார்த்துப் பற்று அறுத்திடுதல்
அநித்தம், துக்கம், அநான்மா, அசுசியெனத் தனித்துப் பார்த்து - பொருள்கள் நிலையில்லாதன வென்றும், துன்பந் தருவன வென்றும், அநான்மா வென்றும், அருவருப் புடையன வென்றும் தனித்தனியாக ஆராய்ந்து கண்டு; பற்று அறுத்திடுதல் - பற்றினை நீக்குமுகத்தால் காமமாகிய காரணத்தைக் கெடுப்பாயாக
inconstant, suffering, not-self, impure
can be separately analyzed and grasping cut-off with
அசுசி – அசுத்தம், acuci, n. < a-šuci. Impurity, uncleanness;
256, 257. மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக!
Love compassion sympathetic joy. Realize that
From the merits of these actions remove hatred.
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து - மைத்திரி பாவனை, கருணைப் பாவனை, முதிதைப் பாவனை யென்று சொல்லப் படுகின்ற பாவனைகளை யறிந்து; திருந்தும் நல்லுணர்வால் - அவற்றால் திருந்தப் பெறும் நல்லுணர்வு கொண்டு; செற்றம் அற்றிடுக- வெகுளியைப் போக்குவாயாக.
258, 259. சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக!
சுருதி சிந்தனா பாவனை தரிசனை கருதி உய்த்து – சுருதியும், சிந்தனையும், பாவனையும், தரிசனையும் ஆகிய நான்கையும் ஆராய்ந்துணர்ந்து; மயக்கம் கடிக - மயக்கத்தைப் போக்குவாயாக.
சுருதியாவது அறவுரைகேட்டல், சிந்தனையாவது கேட்டவற்றைச் சிந்தித்தல். பாவனையாவது கேட்டவாறு ஒழுகுதல். தரிசனையாவது உண்மை தெளிதல். இச்சுருதி முதலிய நான்கினையும் உபேக்ஷா பாவனை யென்றும் கூறுப.
Listening to the Dhamma, reflect on what you heard, act accordingly, realize the truth. Thus remove delusion.
260. இந்நால் வகையான் மனத்திருள் நீங்கு!' என்று
இந்நால்வகையால் - இக் கூறிய சுருதி முதலிய நான்கு நெறியால்; மனத்திருள் நீங்கு என்று - மனமயக்கம் கெடுவாயாக என்று;
With these four kinds of activities remove darkness from your mind!'
261. முன் பின் மலையா மங்கல மொழியின்
முன்பின் மலையா - முன்னுக்குப் பின் முரணுதல் இல்லாத; மங்கல மொழியின் - அறமாகிய சொற்களால்;
The dhamma that has no contradictions
262. ஞான தீபம் நன்கனம் காட்டத் -
ஞானமாகிய விளக்கத்தைத் தெளியக் காட்டினாராக;
Thus liberation was explained clearly.
263, 264. தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப்
'பவத் திறம் அறுக!' எனப் பாவை நோற்றனள் என் 264
பாவை - பாவைபோலும் மணிமேகலை; தவத்திறம் பூண்டு - உண்மை ஞானத்துக்குரிய தவத்தின் கூறுகளை மேற்கொண்டு; தருமம் கேட்டு - பல்வகை அறநெறிகளையும் தெளிவுறக் கேட்டு; பவத்திறம் அறுக என நோற்றனள் – பிறப்புக்கேதுவாகிய குற்றங்களிலிருந்து நீங்குவேனென நோற்கலுற்றாள்.
Manimekalai took the vows of a renunciate, studied the dhamma and undertook to 'Cut the defilements that cause birth!'