மணிமேகலை முகப்பு Manimekalai Home
மணிமேகலை Manimekalai
காதை 30 Canto 30
வரிகள் 235-250 Lines
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
வினா விடை நான்கு உள
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
வினாவின் விடுத்தல் வாய்வா ளாமைஎனத்
"தோன்றியது கெடுமோ? கெடாதோ?" என்றால்
"கேடுண்டு" என்றல் துணிந்து சொலல்ஆகும்
"செத்தான் பிறப்பா னோபிற வானோ?" 240
என்று செப்பின்
"பற்றிறந் தானோ? அல்மக னோஎனல்
மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர்
வினாவின் விடுத்தல் "முட்டை முந்திற்றோ
பனை முந்திற்றோ? எனக்கட் டுரைசெய்"
என்றா திற்றோ வெனக்கட் டுரைசெய்
என்றால் "எம்முட்டைக்கு எப்பனை" என்றல்
வாய் வாளாமை "ஆகா யப்பூப்
பழைதோ, புதிதோ?" என்று புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் 250
There are these four ways of answering questions.
Categorical answer, analytic answer
By cross-questioning and by silence
For the question: "Will that which is created be destroyed or not?"
"It will be destroyed," is a categorical answer.
"Will one who has died be born again?"
More detail is acquired by asking: "Did he cut his attachments or not?"
This is an analytic answer according to the wise.
Answering with a counter question: To the question "Did the seed come first
or did the palm come first? Please explain."
Ask "Show me the seed that became the palm?"
Silent answer: if someone asks 'Is the flower in the sky
new or old', such a question
Should be answered with silence.
235. வினா விடை நான்கு உள
வினா விடை நான்குள - வினாக்கட்குரிய விடை நான்கு வகையாக உள்ளன ;
“There are these four ways of answering questions. Which four?
There are questions that should be answered categorically. There are questions that should be answered analytically. There are questions that should be answered with cross-questioning.
There are questions that should be put aside.
These are the four ways of answering questions.” — AN 4:42
236. துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
துணிந்து சொல்லல் - அவை ஒரு தலையாய்த் துணிந்து கூறலும் ; கூறிட்டு மொழிதல் - பல கூறு செய்து ஒவ்வொன்றாய்க் கூறலும் ;
categorical answer, analytic answer
துணிதல் – தைரியமடைதல், tuṇi- : (page 1963) 283). 5. To dare, venture; அவன் இப்போது துணிவுடன் பேசுகிறான்.--tr. 1. To resolve, determine, ascertain; to conclude; நிச்சயித்தல்.
237. வினாவின் விடுத்தல் வாய் வாளாமை எனத்
வினாவினை விடுத்தல் - வினா வெதிர் வினவுமாற்றால் விடை யிறுத்தலும்;
வாய் வாளாமை யென - வாய் பேசாமையும் என்பனவாகும்.
By cross-questioning and by silence
238. "தோன்றியது கெடுமோ? கெடாதோ?" என்றால் -
தோன்றிய ஒரு பொருள் கெடுமோ கெடாதோ என்று வினாவினால் ;
For the question: "Will that which is created be destroyed or not?"
239. "கேடு உண்டு" என்றல் துணிந்து சொலல் ஆகும்
கேடுண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் - விடை தோன்றியதற்குக் கேடுண்டு என ஒருதலையாய்த் துணிந்து கூறுதல் துணிந்து சொல்லுதலாம்.
"It will be destroyed," is a categorical answer.
240, 241. "செத்தான் பிறப்பானோ? பிறவானோ?"
என்று செப்பின்
செத்தான் பிறப்பானோ பிறவானோ என்று - செத்தவனைக் குறித்து ஒருவன் இவன் மீட்டும் பிறப்பானோ பிறக்கமாட்டானோ என்று கேட்ட வழி ; செப்பின் – அவருக்குச் சொல்லும் விடையில் ;
"Will one who has died be born again?"
242. "பற்று இறந்தானோ? அன் மகனோ?" எனல்
பற்றிறந்தானோ அன்மகனோ எனல் - அவன் பற்றறத் துறந்தவனோ அல்லனோ எனப் பகுத்து, துறந்தவனாயின் பிறவானென்றும், அல்லனாயின் பிறப்பானென்றும் கூறல் ;
More detail is acquired by asking: "Did he cut his attachements or not?"
and if it was one who had cut his attachments he would not be born again. Otherwise the answer would be,"Yes, he will be born again."
243. மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர்
கூறிட்டு மொழிதல் - கூறு செய்து விடுத்தலென; மிக விளம்புவர் - விளங்கச் சான்றோர் சொல்லுவார்கள்.
This is an analytic answer according to the wise.
244, 245, 246. வினாவின் விடுத்தல் "முட்டை முந்திற்றோ
பனை முந்திற்றோ? எனக் கட்டுரை செய்"
என்றால் "எம் முட்டைக்கு எப் பனை" என்றல்
வினாவின் விடுத்தல் - வினாவெதிர் வினாவி விடையிறுத்தலாவது;
முட்டை முந்திற்றோ பனை முந்திற்றோ எனக் கட்டுரை செய் என்றால் - முட்டையாகிய விதை முந்தியதோ பனை முந்தியதோ இன்னது முந்தியது என விடையிறுக்க என்று ஒருவன் வினாவினால்;
எம்முட்டைக்கு எப்பனை என்றல் - எந்த முட்டைக்கு எந்தப் பனை காட்டுக என விடையிறுத்தலாம்
Answering with a counter question: To the question "Did the seed come first
or did the palm come first? Please explain."
Ask "Show me the seed that became the palm?"
பனை - Palmyra-palm
247, 248, 249. வாய் வாளாமை "ஆகாயப் பூப்
பழைதோ, புதிதோ?" என்று புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்
வாய் வாளாமை - ஒன்றும் விடை கூறாதொழிதலாவது; ஆகாயப்பூ பழைதோ புதிதோ என்று புகல்வான் உரைக்கு - ஆகாயப் பூ பழமையானதோ, புதியதோ என்று கேட்க விரும்புவோன் வினாவிற்கு; மாற்றம் உரையாதிருத்தல் - விடையொன்றும் கூறாதொழிதலாம்
ஆகாயப் பூ – விண்ணில் பூத்த மலர், இல் பொருள், Flower in the sky.
Since there is no such thing as a 'Flower in the sky', if someone asks 'Is the flower in the sky new or old', such a question should be answered with silence.